14/03/2019

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பரதக்கலை...


மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் எவ்வளவோ விசயங்களை தமிழகம் தமிழிற்கும், இந்த உலகிற்கும் அளித்துள்ளது. அதில் மிகவும் போற்றப்படக்கூடியதும், தனிச்சிறப்பு வாய்ந்ததும் ஒன்று உண்டு என்றால், அது பரதநாட்டியம்தான்.

எந்த மொழியை பேசும் மனிதர்களானாலும் ரசிக்கச் செய்யும் ஆற்றல் பரதநாட்டியத்திற்கு உண்டு. பரதநாட்டியம் தோன்றி சுமார் 3000 ஆண்டுகள் ஆகின்றன. இது தோன்றியது தமிழ்நாட்டில் தான்.

பத்தாம் நூற்றாண்டில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இந்த பரதக்கலை செழுமைபடுத்தப்பட்டது. புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.

அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது . இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும், இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம்.

வரலாற்று நோக்கில், தென்னிந்தியாவின் திருக்கோவில்களில், இசைக்கலைஞர்களும், தேவதாசிகள் எனப்படும் நடனமாடும் மாதரும் இணைந்து இந்த அற்புதக்கலையை உருவாக்கினர் என கூறுவர்.

பாவம் எனப்படும் உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தும் தன்மையும், ராகமும், லயமும், அங்கங்களை வில்லென வளைக்கும் நடனமும் இணைந்தது தான் பரதநாட்டியம்.

ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை நீடிக்கும். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு விநாயக பெருமானுக்கு பாராட்டும் நன்றியும்தெரிவிக்கும் இறைவாழ்த்து பாடப்படும். இது மேலப்பிராப்தி என்று அழைக்கப்படுகிறது.

பரதநாட்டியம் ஆடும் கலைஞருக்கு இடப்புறத்தில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை ஆகியவற்றை இசைக்கும் கலைஞர்கள் அமர்ந்திருப்பர்.

நாட்டிய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக தொடய மங்கலமும், பின்னர் மலர்தூவி வணக்கம் (புஷ்பாஞ்சலி)யும் நிகழ்த்தப்படும் . அதன் பிறகு (சுஸ்)வரங்களும், ச(ஜ)தியும் பின்தொடரும். ஒவ்வொன்றும் சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும்.

நிகழ்ச்சியின் மத்தியபகுதியில் முக்கியமானவர்ணம் எனப்படும் நடன வகை இடம் பெறுகிறது. உணர்ச்சிகளின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் இதன்உடல் அசைவுகளை ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.

நடனமாடுபவரின் பயிற்சி, தயாரிப்பு நிலை ஆகியவை இந்த வர்ணத்தில் தெளிவாக வெளிப்படும். இதில் மற்றொரு முக்கிய கட்டம், இறைவன் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் சி(ஸ்)ருங்கார பக்தியாகும். வாழ்க்கையின் பல்வேறுமனோபாவங்களை வெளிப்படுத்தும் சிறப்பு பரதநாட்டியத்திற்கு உண்டு.

பல தத்துவ கோட்பாடுகளையும் , சிந்தனை போக்குகளையும், பரதத்தில் நடனமாடுபவர்கள் காட்டும் ஓர் உடலசைவும், முகபாவமும் தத்ரூபமாக நமக்கு எடுத்துக்காட்டும்.

நடனத்தில் கடைசி அசைவு தில்லானா. இதில் நடனம் ஆடுபவர் இசையின் லயத்திற்கு தன்னை முழுவதும் அற்பணித்து நம்மை மதிமயங்க செய்வார். நடனத்தின் முடிவில் மங்களம் எனப்படும் முடிவைக் குறிக்கும் அசைவு இடம்பெறும்.

தமிழ்நாடு சிறப்புமிக்க பல கலை படைப்புகளை, இசைவடிவங்களை உலகிற்கு அளித்திருந்தாலும் பரதத்திற்கு இணையாக ஒன்றை கூறமுடியாது என்று வெளிநாட்டு அறிஞர்களும் கூறுகின்றனர்...

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி... தமாக.. அதிரடி அறிவிப்பு...


https://youtu.be/wLVH6SF9lMY

Subscribe The Channel For More News...

மணத்தக்காளி கீரை ஒன்றே போதும் பல நோய்களை விரட்டியடிக்க...


கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும். இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.

மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், சோ(ஸோ)லனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.

காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.

இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணித்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை பலவிருத்தி (Tonic) மணித்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பி விடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும்.

எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?

மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும். இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!

இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?

மணத்தக்காளிப் பழம்பலவிருத்தி(Tonic) போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது. வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும். இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.

நீர்க்கோவை குணமாகும்!

நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!

ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருதினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலுக்கும் மருந்து..

எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும். மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?

மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப் படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம் (Phosphorus), நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?

மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை! இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அரைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்...

தமிழகத்தில் காவல்துறை அராஜகம் தொடர்கிறது...


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டப் பாதுகாப்பு...


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் நீதி பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி களமிறங்குகிறது. கயவர்களால் வஞ்சிக்கப்பட்ட இன்னும் முகம் தெரியாத அத்தனை பெண்களுக்கும் அறைக்கூவல் விடுக்கிறோம். குற்றவாளிகளுக்கு எதிராக வழக்காடவும், சட்டரீதியாக தண்டனைப் பெற்றுத்தரவும் எங்கள் கட்சி வழக்கறிஞர்கள் தயாராக உள்ளனர். இந்தப் போராட்டத்தில் இறுதிவரை நாம் தமிழ் கட்சியின் அத்தனை உறவுகளும் துணை நிற்போம். எங்களை அணுகும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் காக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறோம்.

The Naam Thamizhar Katchi would like to call out to the women affected by the Pollachi rapists in the Pollachi sexual harassment issue. Naam Thamizhar Katchi requests the women who had undergone harassment in the hands of the sexual predators of the Pollachi sexual harassment case to come forward and file their cases through our lawyers. We assure that we will provide you necessary protection, complete anonymity and file the case for you. We will stand with you until we see the end of this nightmare.

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

நாம் தமிழர் கட்சி – தலைமையகம்,
இராவணன் குடில்,
எண் 08, மருத்துவமனைச் சாலை,
செந்தில்நகர், சின்னப் போரூர்,
சென்னை – 600116.
தொலைபேசி: +044-43804084
ravanankudil@gmail.com

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி...

அடர்ந்த குப்பைத்தொட்டியில், எப்படி பேச வேண்டுமென சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்ட, மக்கும் குப்பைகளை இங்கு இருக்கும் கட்சி தலைவன்கள்...


தேர்தல் புறக்கணிப்பு...


இங்கு வாழும் பல சமூக போராளிக்கும் எங்கள் போராட்டம் கண்படாமல் போயிற்று..

44 நாட்கள் தொடர் போராட்டம்..
முகநூல் பதிவுகள்,நேரலைகள்..

ஏன் என்று கேட்க ஒரு நாதி இல்லை..

உடன் அமர்ந்து போராட கேட்கவில்லை.. திருவாரூர் மாவட்ட மக்கள் எத்தனை பேர் முகநூலில் இருந்தீர்கள் .. ஒருவன் ஏன் என்று எதற்கு உங்கள் போராட்டம் என்று கேட்டீர்களா?

நாளை உங்களுக்கும் இந்நிலைமை வரலாம்..அப்போது தான் உங்களுக்கு புரியும் எங்கள் துயரம்...

உங்கள் கவனம் எங்கள் பக்கம் வரும் .. ஆனால், அதற்குள் எங்கள் நிலம் உரிமை, உயிர் இதில் ஏதேனும் ஒன்று பறிப்போகியிருக்கும்..

கண்ணீருடன் ,
கிராம மக்கள்...

விவசாயிகளிடம் பேரம் பேச நினைக்கும் முன் சிந்தியுங்கள்...


இந்தியாவை ஆள்வது ஆரியம்... அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம்...


இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான்.

இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான்.

காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும்.

முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான்.

தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான்.

நம் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்.

தமிழராய் ஒன்று இணைவோம்...

தாமரை சின்னத்தில் தமிழிசை போட்டியிட்டால் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் - திமுக கணக்கு...


https://youtu.be/B-F-jtiluKA

Subscribe The Channel For More News...

மறக்க முடியுமா குறிஞ்சாக்குளம் மாகாபாதகம்... வைகோ நாயுடு அவர்களே...


1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ந் தேதி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகாவிலுள்ள கரிசல் பூமியான குறிஞ்சாக்குளத்தில் அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் முறையே சுப்பையா (44), 3 குழந்தைகள், சக்கரைபாண்டி (21), ஒரு குழந்தை, அன்பு (21) மணமாகவில்லை, அம்பிகாபதி (17) மணமாகவில்லை.

ஏன் கொலை செய்யப்பட்டார்கள் ?

தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக..

கொலை செய்தது யார்?

மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பியும் கலிங்கப்பட்டி ஏகபோக பஞ்சாயத்து தலைவருமான திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின்
மாமா சங்கு வெட்டி மோகன்தாசு நாயக்கர் என குற்றஞ்சாட்டியது திருவேங்கடம் காவல்துறை. இதில் முதல்குற்றவாளி ரவிச்சந்திரன்.

ஏதற்காக நடந்தது ?

கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக ஒரு கொலையா? தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கரிசக்காட்டு பூமியில் தமிழ்ச்சாதி பறையனுக்கு கோவிலா? என்ற வெறுப்பில் கொலை நடந்தது. கொலை நடந்த குறிஞ்சாக்குளம் கலிங்கப்பட்டியிலிருந்து கூப்பிடும் தொலைவிலிருந்தது. வைகோ வின் அசைக்கமுடியாத செல்வாக்கு வழக்கை அடித்து நொறுக்கியது.

மகாபாதகம்...

ஒருவருடைய ஆணுறுப்பு கொலை செய்யப்பட்டுக்கிடக்கும் இன்னொருவருடைய வாயிலும்.. குடலை வெட்டி மாறி மாறி.. பொருத்தி வக்கிரம் கொண்ட அந்த மாபாதக வழக்கில் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் மேலாக வெண்மணி வழக்கில் கார் வைத்திருக்கும் பண்ணை முதலாளி ஒருவர் தப்பு செய்வாரா என்று கேட்ட ஒரு நீதியரசரின் கொடுந்தீர்ப்பை போல இங்கும் ஒரு ஆர்.டி.ஓ கேட்டார்.

கொலைக்கான காரணம்...

கொலை நடப்பதற்கு இரு மாதத்திற்கு முன்னால் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நாயக்கர்களுக்கும் தமிழ்சாதி பறையர்களுக்குமிடையே ஒரு சமாதானக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தை வழி நடத்திய ஆர்.டி.ஓ ஒரு அதிசயமான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

நாயக்கர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும், பறையர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும் புழங்கிக் கொள்ளலாம். ஒருவர் பட்டா நிலத்தில் மற்றவர் நடக்கக் கூடாதென்றார். அய்யோ பாவம் கரிசல்காட்டில் 90 விழுக்காட்டை கையில் வைத்திருக்கும் நாயக்கர்களிடம் குடியிருக்க வீடற்ற பறையரால் மோதி செயிக்க முடியுமா என்ன?

தங்கள் குடிசைகளுக்குள் முடக்கப்பட்ட தமிழ்ச்சாதி பறையர்கள் நடமாடமுடியாத
நிலை ஏற்பட்டது. அரசு நிர்வாகம் அத்தனையும் வைகோ என்ற ஒரு மனிதனின் அசுர பலத்துக்குப்பின் கைகட்டி நின்றது. வழக்கம் போல் வழக்கு குப்பைக்கூடைக்கு போனது. கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அநியாயமாய் பறிக்கப்பட்ட குறிஞ்சாக்குளம் தமிழ்ப் போராளிகளின் நினைவு தினம் வரும் மார்ச்-14.

இந்தக் கொடூரத்துக்காக வைகோ ஒரு வருத்தம் தெரிவித்தால் கூட அவரை நாம் மதித்திருக்க முடியும். அது நடக்கவில்லை.

கொலையாளிகளை கைது செய்ய கோரி மள்ளர் சமூக தலைவர்களான..

திரு.ஜான் பாண்டியன்
திரு.பசுபதி பாண்டியன்
ஆகியோர் குறிஞ்சாக்குளத்தை முற்றுகையிடச்சென்று கைதாயினர்.

தமிழ்ச்சாதிகளின் மானம் கப்பல் ஏறிய நாள் மார்ச் 14..

இந்துக்களை காப்பதாக கதை விடும் RSS குறிஞ்சாக்குளத்தில் காந்தாரிக்கு கோயில் கட்ட முயற்சியெடுத்து தோற்றது. தமிழ்சாதிகளுக்கான பாடம் புதைந்து கிடக்கிறது குறிஞ்சாகுளத்தில். 

தமிழர்களை கொலை செய்துவிட்டு தமிழர்களுக்கு நாடகம்...

அண்ணன் ஒரு எம்.பி எனும்போதே நாலு கொலைகளை பண்ண முடியுமென்றால் அதே அண்ணன் முதலுவரானால் ரவிச்சந்திரன் எத்தனை கொலைகளை பண்ணியிருப்பான். இதே ரவிச்சந்திரன் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் பொடா வில் வேறு கைது செய்யப்பட்டான். உள்ளூர் தமிழனை கொலை செய்து விட்டு அந்தப்பாவத்தை மறைக்க பக்கத்து ஊர் தமிழனை ஆதரித்த இந்த வடுகத்தின் சூழ்ச்சிகளை உணருங்கள் தமிழர்களே...

அன்பான தமிழர்களே ராமதாஸ் கிருஷ்ண சாமி மற்றும் தேவர் அமைப்பு தலைவர்கள் இவர்கள் எல்லாம் சாதி கட்சி சாதிய ஆட்கள் என்ற சொல்லாடலை உடைப்போம்..

என்றுமே மோதலில் வரும் சண்டைகள் ஒருவரை ஒருவர் சாதி வெறியரா சித்தரிக்கும் பின்னாளில் அந்த சித்தரிப்பே நிஜமாகும் அந்த நிஜத்திற்காக சாதி வெறியர்களா இல்லாதவர்கள் கூட சாதி வெறியர்களா மாற நேரிடும்..

இனி உண்மையான பரம்பரை சாதி வெறியர்  வை கோபால் சாமி நாயுடு போன்ற சாதி வெறியர்களை அடையாளம் காணுவோம்..

பறையனை தொட்டா தீட்டு நாடானை பார்தாலே தீட்டு என்ற பழமொழிய உருவாக்கி இரு தமிழ் சாதிகளையும் தாழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடித்து இருக்கிறார்கள் வடுகர்கள் இது போன்று..

கள்ள பய
பற பய
பள்ளி பய
பள்ள பய
எட பய
பாப்பார பய

இப்படி தமிழ் சாதிகளை இழிவு படுத்தி அதையே தமிழ் சாதிக்குள் ஒரு வித பகமையை நிறுவி தமிழர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்..

ரெட்டி நாயுடு இன்னும் பிற தெலுங்கு சாதிகளில்  இது போன்ற பழமொழி உண்டா ?

பொள்ளாச்சி குற்றவாளிகளை காக்கும் காவல்துறை...


பாசிப்பயறு...


பாசிப்பயறு அல்லது பயறு அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது ஒருவகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது.

தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை, மோதகம் ஆகியவை இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன.

முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் “பாசிப்பருப்பு பாயசம்” மிகவும் புகழ் பெற்றது.

பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும்.

லெக்யூம் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி விதைகளே பயறுகள் ஆகும். ஆங்கிலத்தில் கடினமான மேற்புறத் தோல் அல்லது மேல் பரப்பைக் கொண்ட விதைகளை பல்ஸ் என குறிப்பிடுகின்றனர்.

இவற்றில் புரதசத்து மிகுந்துள்ளது. இவை ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிக புரதம் கிடைத்திடச் செய்யும்.

தொன்றுத் தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன.

எனவே, இவற்றை எளிதாக பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை.

ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளிலேயே அதிக சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல.

முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின் மற்றும் மாவுச்சத்து அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28% புரதச்சத்தும் 60% கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன.

அதிலும் சோயா பயறில் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகின்றது. இது பயறு வகைகளிலேயே அதிகம். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்களும், தியாமின், நியாசின் போன்ற வைட்டமின்களும் இவற்றில் கூடுதலாகும்.

100 கிராம் பயறில் 24.5 கிராம் புரதம், 140 மிகி. கால்சியம், 30 மி.கி. பாஸ்பரஸ், 8.3 மி.கி. இரும்புச்சத்து, 0.5மி.கி. தயாமின், 0.3மி.கி. ரிபோபிளேவின், 2.0மி.கி. நியாசின் போன்றவை உள்ளது. சராசரியாக பயறு வகைகளில் 345 கிலோ எரி சக்தியும் உள்ளன.

பயறுகளும், தானியங்களும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றது. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன.

பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையை தவிர்த்திடும். பச்சை பயறு மற்றும் தட்டைப்பயரில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.

அதை அப்படியே பயன்படுத்துவதை விட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும்.

முளைக்கட்டிய பயறில் வாயுத்தன்மை என்னும் குறைபாடுகளை உண்டுச்செய்யும் தன்மைக்கிடையாது. எளிதில் செரிமாணமும் ஆகும்.

பயறுகள் முளைவிடும் தருவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன.

இவை முளை வளர வளர கூடிக் கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிறை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம்/சர்க்கரை இட்டும் சாப்பிடலாம்.

வெந்த பயறை கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.

மருத்துவக் குணங்கள்:

புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும்.

இது சீக்கிரம் ஜீரணமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறுமாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.

கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது.

நீர்த்த கஞ்சி, குழைந்த கஞ்சி, பாயசம், வேகவைத்த பருப்பு, துவையல், ஊறவைத்து வறுத்து உப்பு, காரமிட்ட பயறு, சுண்டல், கறிகாய்களுடன் சேர்த்து அரைகுறையாக வெந்த கோசுமலி, பொங்கல் எனப் பலவகைகளில் உணவுப் பொருளாக இது சேர்கிறது.

பயறு பல வகைப்படும். பாசிப் பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு என்று. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது.

தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்ற பெயரில் குறிப்பிடப் படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப் பயிறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய். பச்சைப் பயறு இரண்டுவிதமாகப் பயிரிடப்படுகின்றன.

புஞ்சை தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாட்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சை தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும்.

மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றே குறைய ஒரே குணமுள்ளவை தான். பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது.

பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். ரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும்.

ஆகவே ரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.

பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்ற பின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.

உபவாசமிருப்பவர்கள் ஏதேனும் ஒரு வேளை லகுவாக உணவேற்பதாயின் பயற்றங் கஞ்சித் தெளிவுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து உண்பர். சீக்கிரம் ஜீரணமாவதுடன் உபவாச நிலையில் அதிகரித்துள்ள பித்தத்தின் சீர் கேட்டைத் தணிக்க இது பெரிதும் உதவும்.

பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம்.

இது மிகவும் சத்தானது. தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்க இதன் தூள் மிகச் சிறந்தது. தலைக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி தரும். சிகைக்காய் போன்றவை ஒத்துக் கொள்ளாத போது இது அதிகம் உதவுகின்றது.

இதன் மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி தாய்ப்பால் தரும் மாதரின் மார்பில் பற்றிட பால்க்கட்டு குறைந்து வீக்கம் குறையும். மார்பின் நெறிக் கட்டிகளும் குறையும்.

பச்சைப் பயறை ஈரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பச்சைப் பயறின் தன்மை ஈரலின் ‌பிர‌ச்‌சினையை அ‌திகமா‌க்கு‌ம்.

எனவே ஈரலில் கல் இருப்பவர்களோ, பிரச்சினை உள்ளவர்களோ பச்சைப் பயறை குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் பச்சைப் பயறை வேக வைத்து அ‌ந்த நீரை வடித்துவிட்டுச் சாப்பிடுவது மிகவும் நல்லது. ப‌ச்சை‌ப் பயறை அ‌திக‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உட‌ல் அ‌திக கு‌ளி‌ர்‌ந்த த‌ன்மையை அடை‌ந்து‌விடு‌ம்.

எனவே ஆ‌ஸ்துமா, சைன‌ஸ் போ‌ன்ற நோயு‌ள்ளவ‌ர்க‌ள் கவனமாக கையாள வே‌ண்டு‌ம்...

உடையுமா திமுக கூட்டணி.. பச்சமுத்து கோபத்தில்... ஸ்டாலின் பதட்டத்தில்...


https://youtu.be/QOVUa1SruJA

Subscribe The Channel For More News...

உங்களுக்கு தைராய்டு தொல்லையா? இதோ சில ஆலோசனைகள...


ஆம்பிளைங்களை விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவர்களுக்கு ஒமொன்கள் (hormones) அதிகமாக சுரப்பதல்தான்.

நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்களில் நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாவது.

இதுனால மாதவிடாய் தாமதமாவதற்கும் கூட இது ஒரு முக்கிய காரணம். இதையெல்லாம் நம்ம கை வைத்தியத்தால் நிவர்த்தி செய்துவிடலாம் பயப்படத் தேவையே இல்ல...

இப்போது பின்வருவனவற்றைக் கவனமாக கவனித்தால் அனைவரினதும் உடல் நலத்திற்கு பெருந்துணையாக உதவும்.

துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4, இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கசாயம் செய்து  தொடர்ந்து சாப்பிட்டு வர எல்லாம் சரியாப்போகும் என்றாள் பாட்டி.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக எடை கூடுகிறது,

மிகச் சோர்வா இருத்தல், அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட இறுக்கமான (TENSION), எரிச்சல் வந்து படப்படப்பா இருப்பது , என்னை பார்த்தால் எனக்கே பிடிக்கவில்லை..

இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு சோதனை (TEST) எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:

தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஒமோனின் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஓமோனை கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும்.

மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.

தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம்.

இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறைவதையோ தடுக்கலாம். உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது.

அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும். பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம்.

தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, இறுக்கம், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும். உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம்.

நடைப்பயிற்ச்சி (WALKING) செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது.

இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம். உணவு (DIET) உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 சோதனை மூலம் ஓமோன் அளவைக் கண்டறியலாம்.

தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் மேலிவாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும்.

அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்பக்கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னையை பொறுத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கலவையை (READY MIX), முட்டைக் கோசு, முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது.

ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்' . பாட்டி வைத்தியம் தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்...

நியூசிலாந்து அருகே புதிய கண்டம் கண்டுபிடிப்பு...


https://youtu.be/GMBLoIqCL8I

Subscribe The Channel For More News...

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்....


இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.

இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது. வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்! பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.

பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண்பார்வை தெளிவடைய:வைட்டமின் 'ஏ' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.

மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு...

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.

இறுதி மாதவிடாய் (MENOPAUSE) அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும்.

மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு...

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க...

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.

இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சம் பழத்தின் இன்னும் சில நன்மைகள்...

இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

எலும்புகளை பலப்படுத்தும்.

இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது...

நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை...


சர்க்கரை நோய்....


1. இன்று உலகைப் பயமுறுத்தி கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக மனிதர்களை பாதிப்பது, தீவிரவாதமோ, அணுகுண்டோ அல்ல.! சர்க்கரை நோய் என்ற கொடிய பிரச்சினை தான். இதை நோய் என்று குறிப்பிட்டாலும், ரத்தத்தில் அதிக சர்க்கரை அல்லது குளுக்கோசு  என்பது ஒரு இயல்பான மாற்றம் தான் அதாவது குறைபாடு. வரப்போகும் மூளை, இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கவிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அறிகுறி. உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆராய்ச்சி தகவல்களின் படி, இந்தியா தான் சர்க்கரை நோயாளிகளின் சனத்தொகையில் முதலாவது இடத்தில்.

2. எய்ட்சு(ஸ்) (Aids), ஆந்த்ராக்சு(ஸ்)(Anthrax), காசநோய்., புற்றுநோய் போன்ற பல பயங்கரமான வியாதிகள் இருந்தபோதும், நடைமுறையில், வெகுசன பாதிப்பு சர்க்கரை நோயினால் தான்.

3. வயிற்றில் உள்ள கணையத்தில் (பான்க்ரியாஸ்) தொடங்கும் பிரச்சினை உடலெங்கும் தொடர்வது, ஒரு மருத்துவ விந்தை. கணையம் சுரக்கும் "இன்சுலின்" என்ற கோ(ஹா)ர்மோன் குறைபாடு தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரனமாக அறியப்பட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகள், பான்க்ரியாட்டிக் பீட்டா செல்களின் குளுகோசு ஈர்ப்புத் தன்மை குறைபாடு ( சென்சிட்டிவிடி & ரெசிஸ்டன்சுஸ்) போன்றவை வலுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முன்னேற்றங்கள்.

4. இந்த இன்சுலினை நேரடியாக உடம்பில் செலுத்த ஊசிகளும், பீட்டா செல் குறைபாடுகளை களைய, பல புதிய, மேம்படுத்தப்பட்ட, சுலமாக எடுத்துக்கொள்ளும் வகையில் மாத்திரைகளும் வந்து கொண்டே இருக்கிறது. (அவை பற்றி தொடர்ச்சியாக காண்போம்).

5. இந்தியாவில் இயங்கும் மருத்துவமனைகளில் 4ல் ஒரு பங்கு, சர்க்கரை நோய் குறைபாடுகள் சம்பந்தமாக உள்ள்து...சர்க்கரை நோய் மருத்துவமனை & வைத்தியசாலை என்பது இன்னொரு முக்கிய தகவல்.!

6. வரும் காலத்தில், இந்த இன்சுலினை கணையம் தவிர, உடலின் வேறு ஏதாவது பகுதியில் சுரக்க வைக்க இயலுமா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. கண்டு பிடிப்பவர்களுக்கு நிச்சயம் நோபல் தான். அதன் பின்னர் ஒரு பொற்காலம் மக்களுக்காக காத்திருப்பது திண்ணம்.

7. இதயம், கல்லீரல் போல பல மாற்று அறுவை சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ள போதும், "கணைய மாற்று சிகிச்சை"... கைக்கு எட்டாத ஒரு மந்திரம் போல் உள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கணைய மாற்று சிகிச்சை சுலபமாயின்... வாயில் கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போடலாம்...

பொள்ளாச்சி பாலியல் பயங்கரமும்... சட்டத்தின் ஏமாற்று வேலையும்...


பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?


இன்று , ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் பணத்தை வைத்தே அளவிடப்படுகின்றன.

பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம். பண்ட மாற்றுமுறையில் ஓரளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட பண்டம் மற்றும் உற்பத்தி செய்தால் போதும். அதை வைத்து மற்ற பொருட்களை வாங்கி விடலாம்.

ஆனால், அதற்காக அந்த குறிப்பிட்ட பண்டத்தை மட்டுமே அவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்க வில்லை, பதுக்கவில்லை. இன்று பணம் என்ற ஒன்றை வைத்துதான் நாம் எல்லாவற்றையும் வாங்குகிறோம்.

இந்தப் பணத்தை நாம் பெற கடுமையாக உழைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட பண்டத்தை விளைவித்தாலோ, உருவாக்கினாலோ அதை விற்று பணமாக மாற்றி தான் நாம் வேறு பொருள் வாங்க முடியும். பண்டத்தை அதிக நாள் சேர்த்து வைக்காத நாம் பணத்தை மட்டும் அதிகளவு, அதிகநாள் சேர்த்து வைப்பது எதற்காக? பணம் எல்லோருக்கும் தேவை தான்.

தேவையில்லை என்று சொல்ல முடியாது. இன்று, நாம் எந்த காரணத்திற்காக அதிகமான பணத்தைச் செலவு செய்கிறோம், ஒன்று மருத்துவம் சார்ந்த செலவு, இன்னொன்று கல்விக்கான செலவு.

சரியான உணவு பழக்கம் மற்றும் சரியான புரிதல் இருந்தால் மருத்துவத்துக்கும் கல்விக்கும் ஆகும் செலவை குறைக்க முடியும். உயிர் வாழத்தேவையான உணவுக்காக கூட நாம் அதிக பணம் செலவழிப்பதில்லை. இதையெல்லாம் விட இன்று வீண் ஆடம்பரங்களுக்குத் தான் அதிகம் செலவு செய்கிறோம்.

நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை , நம்மை சுற்றி பலவேறு விதங்களில் சுற்றி வரும் விளம்பரங்கள் எளிதாக கொள்ளை அடிக்கின்றன. விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதற்காக மடாகவோ, கழுதையாகவோ உழைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

அடுத்தடுத்து நம் கண்ணில் படும் விளம்பரங்கள் நம்மை மாடகவே மாற்றி விடுகின்றன . மனிதனாக பிறந்து , மாடாக வாழ ஆரம்பித்து விட்டோம் .

நமது உண்மையான, நிலையான மகிழ்ச்சிக்கு வீண் ஆடம்பரங்கள் என்றுமே துணை புரிந்ததில்லை. நம் மனதை இளகுவாக்குவதும், வாழ்க்கை என்பதே கொண்டாடபடுவதற்குத் தான் என்று உணர்த்துவதும் பயணங்கள் தான். ஆனால், நம் வாழ் நாளில் பயணத்துக்காக என்று எவ்வளவு செலவழிக்கிறோம்?.

மிகவும் குறைந்த அளவு தான். நம்மைப் பொருத்தவரை பயணங்களுக்கு ஆகும் செலவு வெட்டிச் செலவு. ஆனால், பயணங்கள் அற்புதமானவை. பல்வேறு விதமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள், இயற்கையின் அற்புதங்கள், நினைவுச் சின்னங்கள் என்று நாம் பயணங்களின் மூலம் அறிந்து கொள்வது ஏராளம்.

ஆக மொத்தம் நாம் வாழ அளவான பணம் இருந்தால் போதும். அளவான பணம் மட்டும் இருந்தால் கவலைகள் குறையும், நிம்மதி பெருகும். அதே சமயம், அளவான பணம் மட்டுமாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் பயணங்களுக்காக பயன்படட்டும்.

அதிகமாக சம்பாதிக்கும் பணத்தை பயணங்களுக்காகச் செலவழியுங்கள். ஒருவன், எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், எவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால் இவை அனைத்தும் மறைந்து கொள்கின்றன.

அவன், நம் சமூகத்தின் உயர்ந்த மனிதனாக கருதப்படுகிறான்.
பணம் பந்தியிலே..
குணம் குப்பையிலே...

பணமில்லாதவன் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பதுக்காமல் செலவழிக்கவும் தெரியவேண்டும். வாழ்க்கையில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களை பணத்தைச் சேர்ப்பதிலேயே தொலைத்து விடுகிறோம்.

நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது.. எவ்வளவு வாழ்ந்தோம் என்று தான் இருக்க வேண்டும்.. வாழ்க்கை கொண்டாடுவதற்கே...

திராவிடம் எனும் திமுக வின் சாதி அரசியல்...


எழுபது வருட அரசியல் அனுபவம் கொண்ட, ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவரின் மகளுக்கு, தன் தந்தை செய்த சாதனைகளைச்சொல்லி ஓட்டுக்கேட்க முடியவில்லை...

தந்தை பிறந்த தொகுதியிலோ அல்லது தான் பிறந்து வளர்ந்த சென்னையின் ஏதாவது ஒரு தொகுதியிலோ போட்டியிடவும் தைரியமில்லை...

தனக்கு சம்பந்தமேயில்லாத தொகுதிக்குப்போய், "என் தாய் உங்கள் ஜாதி.. எனவே நானும் உங்கள் ஜாதி தான்.. எனவே எனக்கு ஓட்டுப் போடுங்கள்.. என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்...

இதில் திராவிட இயக்கம் தான் சாதியை ஒழித்தது என்ற சலம்பலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை...

ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் நீங்கள் மறுபக்கத்தை ஏன் பார்க்கவில்லை?


பண்டைய தமிழனின் காலநீட்டிப்பு கணிதம்...


பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்...

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்.

பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும்.

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.

“சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி“

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக(பகல்=30, இரவு =30) இருக்கும் ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும் ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை, மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி " விடுபூ முடி" மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்.

பகல் நீட்டிப்பை காண வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்

வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி

இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பத ¾ நாழிகை
பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்.

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது.

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கயவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.. - பாமக அன்புமணி இராமதாஸ் அறிக்கை...


படியளந்தார் பண்டைத் தமிழர்.. நாம் எப்படி இருக்கிறோம்..?


நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக்கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை உனக்கென்னப்பா முதலாளி படியளக்கிறார்...

என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'விரைவு உணவு' (Fast Food) கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விசயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விசயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.

நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விசயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது ஆர்வமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விசயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு, மூணு, நாலு, ஐந்து, ஆறு , ஏழு.. என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும் போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விசயத்தைக் கருத்தில் கொண்டு தான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக் கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது.

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்...

சிறந்த வாக்காளர்களையும் கொண்ட நாடு... அதற்கு ஏற்றாற்போல் சிறந்த அரசியல்வாதிகளையும் கொண்ட நாடு...


ஏழைநாடுகளின் மேல்.. (இலுமினாட்டி) கார்ப்பரேட்களின் பெருங்கனவு...


சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் கழிந்துவிடும் தொடைநடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்.

தமிழகமே அழியப் போகிறது.

இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.

அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலைபோட்டு.. அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்.. அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.

இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் தீவிரவாதிகளையும் அழிப்பது.

இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது.
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்.
இதற்காகத்தான் மீனவன் கொலை.
இதற்காகத்தான் கெயில் திட்டம்.
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு.
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது.

இதற்காகத்தான் பூமிக்கடியில் வெடி வெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு.

இதற்காகத்தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு.

இதற்காகத்தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்).

இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது.. (இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது).

இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம். அதாவது முற்றிலும் அழியவுள்ளது.

ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனர்.

பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய் விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திட்டம் நன்றாக வேலைசெய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்துவிட்டன. அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).

இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர்.

பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்து கொண்டது.

இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு. திட்டத்தைப் போட்டுக் கொடுத்ததே அவர்கள் தானே.

பின்னே! ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5 பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?

இதனால் மக்களுக்கென்ன லாபம்?

உண்டே கடுகளவு லாபம்.

விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான். அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.

பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான். அதற்கான தொழிற்சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.

கடலையும் விற்றுவிடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.

கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள். அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.

அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான்.
அதில் கூலிவேலை கிடைக்கலாம்

அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (சாகர் மாலா திட்டம்). அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.

இது கற்பனை இல்லை நிஜம்.

இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)..

இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.
வேறுவழியே இல்லை. போராட்டம் நடத்திக் கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.

அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.

சிறுசிறு தாக்குதல்கள் நடத்த வேண்டும்.

என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராட வேண்டும்.

ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.

இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.

அவர்களைப்போல பசி பட்டினி வந்தபிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.

தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு..

இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே...

சீனா வின் விஷன் 2020 பற்றி உங்களுக்கு தெரியுமா..?


https://youtu.be/ty4LgmwqiPA

Subscribe The Channel For More News...

தியானம்...


தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போட்டு தான் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தீய சக்திகள் தொல்லை செயயும்.. திசை திருப்பும் என்று சொல்கின்றனர் உண்மையா எஜ்று கேள்வி கேட்டுள்ள நண்பரே...

தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போடுவது என்பது உண்மை தான் அதில் சந்தேகம் வேண்டாம்..

இந்த சூட்சும கட்டில் பல வகைகள் உண்டு...

மந்திர கட்டு, எந்திர கட்டு, பிரணவ கட்டு, பிராண கட்டு, குரு கட்டு என்று சொல்ல கூடிய தீட்சை இப்படி பல உண்டு.

இவைகளெல்லாம் அனைவராலும் செய்ய முடியாது.

ஆனால் பிராண கட்டு, பிரணவ கட்டு, இவைகள் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவராலும் கூடும்.

குரு கட்டு என்பது தியானத்தில் நல்ல தேர்ச்சி அடைந்த குருவிடம் தீட்சை வாங்கி கொண்டால் அந்த ஆற்றல் உங்களுக்கு பாதுகாத்து கட்டு போல் செயல்படும்.

அதற்காக யாரும் கட்டணம் கட்டி தீட்சை பெற கிளம்பி விடாதீர்கள்.

பிராண கட்டு என்பது சுவாச பயிற்சி செய்து விட்டு தியானம் செய்வது.

பிரணவ கட்டு என்பது பிரணவ மந்திரத்தை சத்தமாக நீளமாக அதாவது ஓ................ம் என்று பத்து முறை உச்சரித்து விட்டு தியானிப்பது.

இவைகள் அனைத்தையும் விட தீட்சை மற்றும் விளக்கு ஏற்றி வைத்து தியானிப்பது நல்ல பாதுகாப்பையும் வெற்றியையும் தரும்.

இது நான் கண்ட அனுபவமும் கூட திருச்சிற்றம்பலம்...

இந்திய இராணுவத்தில் இஸ்ரேலியர்கள்...


https://reseauinternational.net/pakistan-un-pilote-israelien-capture/?fbclid=IwAR1xclXaFB1WVvMB_FR31oh16Jt7vNWY9XGKSpN0bWuJ5Va6BB4PBzj20dg

எங்கே செல்லும் இந்தப் பாதை...


தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலக்கரிச்சுரங்கள்கள், பெட்ரோலிய மண்டலங்கள், மீத்தேன் திட்டத்தால் பெருவாரியான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட உள்ளீர்கள்.

பொருளாதார வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பசப்பு வார்த்தைகளால் உங்களுக்கு எந்த நம்மையும் விளையப் போவதில்லை.

மாறாக தமிழர்களுக்கு சொந்த மண்ணில் எவ்வித அரசு வேலையும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இந்திய அரசு அதிதீவிரம் காட்டுகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து இனி வரும்காலத்தில் உங்களுக்கு நீர் என்பது கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி.

நீரும், நிலமும் இல்லாத இந்த மண்ணை விட்டு எங்கு போகப் போகிறீர்கள்.

அண்டை மாநிலங்கள் உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு உஙகளை அடையாளம் காண்டு அடித்து விரட்டும்.

எந்த நாடும் உங்களை அகதியாக ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

கிடைக்கும் அடுமட்ட வேலைகளைச் செய்து அதன் பக்கவிளைவுகளால் நோய்யுற்று நடைபிணமாய் வாழப்போகிறீர்கள்.

இனி தமிழகத்தில் வேளாண்மை என்ற ஒன்று இல்லாமல் போகப்போகிறது.

அண்டை மாநிலங்களை மட்டுமே உணவுக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்ப்படப் போகிறது.

கிடைக்கவிருக்கும் அடிமட்ட வேலையை சொற்ப சம்பளத்துக்கு செய்துவிட்டு சோத்துக்கே வழியின்றி நோயோடு வாழுங்கள்.

உங்களுக்காகவே இந்திய அரசு கருணைக்கொலையை பல்லாண்டு விவாதத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்த இருக்கிறது.

கருணைக் கொலையில் உங்களுக்கே முன்னுரிமை அதில் போட்டிக்கு எவனும் வரப்போவதில்லை.

அநீதிக்கு எதிராகப் போராடத தமிழினமே...

உங்கள் அழிவை எதிர்கேள்வி இன்றி நீங்களே தேடிக் கொண்டீர்கள்.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாமாய்
போகப் போகிறோம்...

ஊடகம் தான் மக்களின் முதல் எதிரி...


தமிழர் & யூதர்... (இலுமினாட்டி)...


அப்போது தமிழர், இப்போது யூதர்...

யூதர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேர்களுமே வஞ்சிக்கப்பட்ட ஒர் இனம். யூதர்களை இலுமினாட்டிகள் என எல்லோரும் முகநூலில் எழுதி வருகிறார்கள். எழுதுபவர்கள் ஒன்றை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

முன்னோரு காலத்தில் தமிழ் மொழியை உபயோகப்படுத்தி கொண்டு உலகம் எங்கும் ஒரு குழு வணிகம் என்ற பெயரில் பல கொடுமைகளை செய்தது. அப்போது பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அவர்களை இதே போல வெறுத்தனர். இப்போது எப்படி "இலுமினாட்டி" என்ற வார்த்தையோ அப்போது "சாத்தன்" (வணிகம் செய்த தமிழ் மொழி பேசியவன்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (சாத்தன் தான் சாத்தான் என்றானது).

அந்த தீயவர்களை குறித்த அந்த வார்த்தை தான் உலகம் எங்கும் தற்போது பரவி கிடக்கிறது.

- English Language: Satan
- Afrikaans Language : Satan
- Albanian Language : Satani
- Arabic Language : Shaitan
- Armenian Language Satana
- Azerbaijani Language : Şeytan
- Belarusian Language : Satana
- Bulgaria Language : Satanata
- Catalan Language : Satanàs
- Chinese (Simplified) Language : Sā dàn
- Croatian Language : Sotona
- Czech Language : Satan
- Danish Language : Satan
- Dutch Language : Satan
- Estonian Language : Saatan
- Filipino Language : Satanas
- Finnish Language : Saatana
- French Language : Satan
- Galician Language : Satanás
- German Language : Satan
- Greek Language : Satanás
- Haitian Creole Language : Satan
- Hausa Language : Shaidan
- Hebrew Language: Şeytan
- Hindi Language : Shaitaan
- Hungarian Language : Sátán
- Icelandic Language : Satan
- Irish Language : Satan
- Indonesian Language : Setan
- Italian Language : Satana
- Latin Language : Satan
- Japanese Language : Satan
- Korean Language : Satan
- Latvian Language : Sātans
- Lithuanian Language : Šėtonas
- Malay Language : Syaitan
- Maltese Language : Satana
- Mangolian Language : Satan
- Norwegian Language : Satan
- Polish Language : Szatan
- Portugese Language : Satan
- Romanian Language : Satana
- Russian Language : Satana
- Sinhala Language : Sātan
- Slovak Language : Satan
- Slovenian Language : Satan
- Somali Language : Shaydaan
- Spanish Language : Satán
- Swahili Language : Shetani
- Swedish Language : Satan
- Turkish Language : Şeytan
- Uzbek Language : Shayton
- Vietnamese Language : Satan
- Welsh Language : Satan

அதனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த மொழியை பேசிய அனைவரையுமே இப்படி நினைத்து இருந்தால் நமது நிலைமை என்ன என்பதை யோசித்து பாருங்கள்.

ஒரு குறிப்பிட்ட கலப்பு ஏற்படாத ஒரு குடும்ப வாரிசு இனம் இந்த உலகத்தை ஆளுகிறது. அவர்கள் செய்யும் அத்தனை தீமைகளையும் வேறு ஒரு இனத்தின் மீது போட்டு அதை கடந்து செல்வதால் தான் இத்தனை நூற்றாண்டு கழித்தும் அவர்களை அடையாளப் காணமுடியவில்லை.

ஒரு விடயத்தை நினைவில் வைப்போம். அவர்கள் உருவாக்கிய இந்த ஊடகம் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் இல்லை. எதிரி பலசாலி என்பதை நினைவில் நிறுத்துவோம். நமது பலத்தை ஆராய்வோம் அதற்கான நேரம் இது.

அடுத்த பதிவில் தொடரும்..

மக்கள் விரோத தினத்தந்தி & தினமலர் பத்திரிகையை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்...


https://youtu.be/lcpvczRpXLo

Subscribe The Channel For More News...

பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்...


பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும்...