05/01/2019

மறந்த சரித்திரம்... மறைத்த தந்திரம்...


சுமார் ஐயாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு...

தமிழ் மன்னர்கள் தங்களின் பராக்ரமங்களை உலகம்தோறும் விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம்..

மழை என்றால் என்ன?

செழுமை எப்படி இருக்கும் என்று தன வாழ்நாளிலே காணாமல் தவித்த மக்கள் கூட்டம் .. இந்தியா தவிர மற்ற நிறைய நாடுகள்ல இருந்துச்சு.. 

இவிங்க எல்லாத்துக்கும் இந்தியா மேல் ஒரு கண்ணு..

நம்மளுக்குன்னு ஒரு சமயம் கிடைக்கும்.. அப்போ இந்தியாவ நாம கைப்பற்றி ஆளலாம்..ன்னு தினம் தினம் கனவு கண்டுட்டே இருந்தாங்க..

அதுல ஒருத்தன்தான் இந்த சரித்திர சாகச நாயகன்-ன்னு விஜய் மாதிரி காசு கொடுத்து பட்டப் பெயர் வாங்கின ஹீரோ. அலெக்ஸாண்டர்..

எத்தனையோ வம்சங்களாக கிரேக்கர்கள் அடிபட்டு அவர்கள் இந்தியாவை பழி வாங்குவதற்காக பல வழிகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்...

அவர்களின் வம்சாவளி வந்த அலெக்ஸாண்டர் அரிஸ்டாட்டிலடம் சூளுரைத்தான்... [in the year 336 B.C.E]
நான் ஒரு நாள் இந்தியாவை என் காலடியில் கொண்டு வருவேன்...

பாவம், பயபுள்ள, கஷ்டப்பட்டு வந்து போரஸ் என்ற பஞ்சாப் மன்னர்ட்டே தர்ம அடி வாங்கி ,  இந்திய மண்ணில் விளைந்த ஒரு புண்ணிய அம்பினால் அடிவயிற்றில் தைக்கப்பட்டு, உசரு உனக்காச்சு கொசுரு எனக்காச்சு-ன்னு ஓடினான்..

ஓடுனவன் செத்தான்-ன்னும் தெரியல, பொலைசான்-ன்னும் தெரியல..

ஆனா, அதப்போயி நம்ம வரலாற்று ஆசிரியர்கள் அவனை ஒரு மாவீரனா சித்தரிச்சு பிரபலப் படுத்திட்டாங்க...

இந்தியா எவ்ளோ பெருசு-ன்னு யாருக்குமே தெரியாது..

சமீப காலத்துல (ஒரு அம்பது அறுவது வருசத்துக்கு) பாகிஸ்தான் பிரிஞ்ச மாதிரி நிறைய அண்டை நாடுகளின் தொகுப்பே இந்தியா.. (குமரிகண்டம்).

வெறும் வாயில சொன்னா நம்ப மாட்டோம்.. எனக்கு ஆதாரம் வேணும்-ன்னு நீ கேட்டீன்னா,  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி..

Prof. Dinesh Agrawal
Address: 156 Aberdeen lane, State College, PA 16801 USA
Tel: (814)-234-3558 (Home), (814)-863-8034 (Office)

Who had written the post "Alexander, The Ordinary"

போனத பேசி புண்ணியமில்ல,
பொறாம புடிச்சா கண்ணியம் இல்ல..

ஆனால் மக்களே..

நம் பண்டைய மன்னர்களின் வரலாறு மறுக்கப் படுகிறது.. மறைக்கப் பட்டிருக்கிறது.

எங்கே இவனுங்களோட முன்னோர்களைப் பாத்து இவனுங்களுக்கும் வீரம் வந்துட்டா,
நாம அவ்ளோதான்-ன்னு பயந்து,
வரலாற்றை மாத்தி எழுத முடியாது, அதனால, புறக்கணிச்சுட்டாங்க..

பள்ளிப் புத்தகங்கள், ஒரு பாடத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டு இருக்கும். அந்தப் பாடத்திட்டத்தில், ஒரு தமிழ் மன்னரைக் கூட நான் படித்ததாக ஞாபகம் இல்லை. ஏன் என்று ஆராய்ந்தால், பாடத் திட்டம் ஆங்கிலேயர்களால் வகுக்கப் பட்டது, அதை யாரும் இன்னும் மாற்ற முன்வரவில்லை..

விடிய விடிய தமிழ், தமிழ்-ன்னு கூவி என்ன புண்ணியம்... தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் இல்லையே?

ஒரு சின்ன உதாரணம்..

சோழர் கொடி பறக்காத போர்க் கப்பல் இல்லை, அவை போகாத தீவும் இல்லை...

இராசேந்திர சோழர் உலகத்தையே ஆட்டிப் படிச்சவர்.. அவருக்கு இல்லாத வீரமும் கௌரவமும், அலெக்ஸாண்டருக்கு வழங்கப் பட்டு இருக்கு.

இதுக்கு காரணம் யாரு-ன்னா, நமது பெயரும் புகழும் வாய்ந்த, பொறுப்பில்லாத, கல்வி கேள்வி இல்லாத, ஒரு தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசியல்வியாதிகளே..

தஞ்சை-ல இராஜராஜ சோழர் ஒரு கோயில் கட்டாம விட்டிருந்தா, சோழர்-ன்னு ஒரு வம்சம் இருந்ததையே மறைச்சு இருப்பாங்க..

வடக்கில் ஹர்ஷவர்த்தனர் என்ற பெயரைக் கேட்டாலே கதி கலங்க வைத்த வீரர் பிறந்த புண்ணிய பூமி இது..

சத்ரபதி சிவாஜி வர்றார்-ன்னு சொன்னாலே ஒன்னுக்கு போற மன்னர்கள் ஏராளம்..

அடுத்தவன் நாட்டை கெடுக்கரதுல கை தேர்ந்த ஆங்கிலேயர்கள்.. இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது, சும்மா போகல, இவனுங்க காலத்துக்கும் அடிசுகிட்டே இருக்கட்டும்-ன்னு ரெண்டு நாடா பிரிவினைய  உண்டு பணிட்டு போயிட்டானுங்க..

அப்போ அவனுங்க பத்த வச்ச கொல்லி இன்னும் கொழுந்து விட்டு எரிஞ்சுட்டு தான் இருக்கு..

அவனுங்க அன்னைக்கு போட்ட விதைதான் இன்னைக்கு வெறுப்பு-ன்னு ஒரு பெரிய மரமா வளந்து காய் காத்து, கணியல, ஆனா ஊருபட்ட குட்டி போட்டு அங்கங்கே வெடிச்சு கிட்டே இருக்கு..

நீங்களும் ஆடுங்கடா, அதை வைத்து நாங்க அரசியல் பண்ணிக்கறோம்-ன்னு சாமர்த்தியமா, ஆட்சிக்கு வர்ற எல்லா கட்சிகளுமே.. டாஸ்மாக் மாதிரி உறுதியா இருக்காங்க..

இல்ல-ன்னு சொன்னா, மத நல்லிணக்கத்துக்காக, எந்த அரசாவது,  ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்து இருக்குதா?

எங்கே, எந்த ஒரு பிரச்னை நடந்தாலும், அதுல கட்சிக்கு என்ன லாபம், எனக்கு என்ன லாபம், என் சின்ன வீட்டுக்கு என்ன லாபம்-ன்னு நினைக்கும் ஆட்கள் இருக்கும்வரை, இந்தியாவ, இன்னும் 2000 சுபாஸ் சந்திர போஸ் வந்தாலும் காப்பாத்த முடியாது..

என் கருத்து...

தமிழ் மற்றும் குமரிகண்டம்  சரித்திர நாயகர்களின் பராக்ரமங்கள், பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும்.

பொய்யான, வரலாறு பதிவுகள் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு மதம் சார்ந்த பிரார்த்தனை திணிக்கப் படக் கூடாது...

டூபாக்கூர் திமுக...


இசைக்கருவி புல்லாங்குழல்...


புல்லாங்குழல் மிகவும் இனிமையான இசைக்கருவி. இது இயற்கைக் கருவி என்றும் கூறலாம்.

இதில் சுரத்தான பேதங்களைக் காட்டுவதற்கு ஆறு துளைகள் உள்ளன. எல்லாத் துவாரங்களையும் திறந்தும் பிறகு அவை ஒவ்வொன்றையும் முறையே விரலினால் மூடியும் வாசித்து வரும் போது ஏழு- இசைகளும் (ஸ, ரி, க, ம, ப, த, நி) முறையே ஆரோசையாக ஒலிக்கின்றன.

இவை ஒரு தானத்தை (ஸ்தாயியை) மட்டும் குறிப்பனவல்ல, மெலிவு, சமன், வலிவு, ஆகிய மூன்று தானத்தின் நிலைகளையும் குறிக்கின்றன.

அதாவது மூன்று தானங்களிலுள்ள அந்தந்தச் சுர ஒலிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துவாரமும் கொடுக்கின்றது.

மாயவனாகிய கிருட்டிண பரமாத்மா இந்த புல்லாங்குழல் கருவியை இசைத்து சகல சீவன்களையும் பரவசமடையச் செய்தார் என்று நூல்கள் கூறினும், அதை வாசிப்பது எளிதன்று. அதில் சுருதி தவறுதல் இன்றி இனிமையான சுரம் பொருந்தி வருவது கடினமாகும். புல்லாங்குழலை இலக்கியமாக எடுத்துக்கொண்டு, சிலப்பதிகாரத்துள் பொதிந்துள்ள இசை முழுவதையும் நாம் நன்கு அறியலாம். புல்லாங்குழலில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் அதிகமாகப் போட்டுக் கொள்வதுண்டு. அவை சுரங்கள் சுத்தமாய் ஒலிப்பதற்கு உதவுகின்றன என்பர்.

வீணை, பிடில் முதலிய கருவிகளில் அந்தந்த தானங்கள் வெவ்வேறு இடங்களில் பொருந்தி இருத்தல் இங்குக் குறிக்கத்தக்கது. ஒரே துவாரத்தில் ஒரே தான நிலை உள்ள இடத்தில் மூன்று தான நிலைகளும், ஒரே இடத்தில் ரி-யின் ஈரினங்களும் அதுபோல க-ஈரினங்களும், ம-ஈரினங்களும், த-ஈரினங்களும், நி-ஈரினங்களும் ஒலித்து வெளிப்படுவதே புல்லாங்குழலின் சிறப்பான இனிமைக்கு மூலகாரணம்.

மேலும் தானம் (ஸ்தாயி) என்பது வட்ட வடிவமானது என்பதைப் புல்லாங்குழல் விளக்கும். வீணை, பிடில் முதலிய கருவிகள் முதல் தானத்தின் பாதி அளவில் மூன்றாம் தானம் வருவது போலவும் காண்பிக்கும் போது, அந்த எல்லா தானங்களும் ஒரே அளவில் வட்ட வடிவமான உருவில் வருகின்றன என்பதைப் புல்லாங்குழல் எடுத்துக் கூறுகிறது...

விழித்துக்கொள் தமிழா...


ஒரே ஒரு மாணவி.. ஆசிரியைக்காக இயங்கும் பள்ளி.. தனியார் போட்டியால் மூடப்படும் அபாயம்...


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெரிய ஜோகிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1956-ல் கட்டப்பட்ட இப்பள்ளியில், ஜோகிப்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.

கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால் நடப்பாண்டில் இப்பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே படித்து வருகிறார். 4-ம் வகுப்பு படிக்கும் அவருக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் யாரும் கிடையாது.

ஒரு மாணவிக்காக தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். அதேபோல் சத்துணவு ஊழியர் ஒருவரும் உள்ளார். தற்போதைய நிலையில், இந்த 3 பேருக்காகவே பள்ளி இயங்கி வருகிறது.

இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை ரேகா கூறுகையில் தனியார் பள்ளி மோகத்தால் கிராமத்தில் உள்ள மாணவர்களும் அங்கு சென்று விட்டனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தியும் பெற்றோர் புறக்கணித்து விட்டனர் என்று கூறியுள்ளார்...

சிப் இருக்குன்னு கப்சா விட்ட எஸ்.வி சேகர் வகையறா... 2000 ஓவாக்கு மொரட்டு முட்டு குடுத்த சங்கி சப்போர்ட்டஸ்லாம் எங்கய்யா போய்ட்டானுங்க...


டாஸ்மாக் கடைக்கு 5 வயது மகனை அழைத்து சென்ற குடிகார தந்தை.. பின்னர் நடந்த விபரீதம்...


காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்களம் பகுதியைச் சேர்ந்த குமாராபிரசாத், டாஸ்மாக் கடைக்கு தனது 5 வயது மகன் குமரகுருவை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

மகனை அருகில் வைத்துக்கொண்டு சாராயத்தை வாங்கி சாலையிலேயே நின்று குமாரபிரசாத் குடித்துள்ளார். அதிகம் குடித்ததால் தலைசுற்றி சாலையிலேயே விழுந்து படுத்துள்ளார். இந்த கேப்பில் அவருடைய 5 வயது மகனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தியுள்ளனர்.

மகனை அழைத்துக்கொண்டு சென்ற குமாரபிரசாத் வெகுநேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்த குமாரபிரசாத்தின் மனைவி, தேடிவந்த போது கணவர் சாலையில் விழுந்து கடந்ததை பார்த்ததும் அவரை எழுப்பி மகன் எங்கே என கோபமாக கேட்டுள்ளார்.

அப்போது அதிர்ச்சி அடைந்த் குமாரபிரசாத்தை திட்டிவிட்டு, மனைவி மற்றும் கணவர் இருவரும் மகனை தேடி கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுவனை கடத்திச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, வழக்கு பதிவு செய்து, கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்...

பெண்களுக்கான அழகு குறிப்புகள்...


உணவை மென்று சாப்பிடுவது நல்லது...


இயற்கை உணவானாலும் சரி, வெந்த உணவாக இருந்தாலும் சரி, மிகக்குறைவாக எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கூழாக சாப்பிடுவது நம் வயிற்றுக்கு நல்லது.

இதனால் எளிதில் செரிமானமாகி பசியை அதிகமாக தூண்டுகிறது.

நம் உடலானது அணுக்களின் கூட்டம் என்று நமக்குத் தெரியும். மனித உடலில் சராசரி 60 லட்சம் கோடி செல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு செல்லும் ஓர் உயிர் என்று சொல்லலாம். அத்தனைக்கும் உணவு சென்றடைய வேண்டும். செல் என்பதே கண்ணுக்குத் தெரியாதது.

இவ்வாறு இருக்க அதன் உணவின் அளவு அதையும் விட சிறிதாகத் தானே இருக்க முடியும்.

எனவே நாம் எடுக்கும் உணவு வயிற்றுக்குள் சென்றடைந்து செரிமானமாகி, இரத்தமாகி இதயத்திற்குச் சென்று அங்கிருந்து தமனிகள் மூலம் உடலின் பல பாகங்களுக்குச் சென்று இறுதியில் நீராவி போன்று பல இடங்களிலும் பரவி செல்களை அடைகிறது.

எனவே நாம் உட்கொள்ளும் உணவை நன்கு மென்று சாப்பிட்டால் அப்புறம் என்ன 100 வயது தான்...

கிரிக்கெட் வீரர்(விராட் கோலி), நடிகர்(பிரபு)களை மருத்துவர் ஆக்கிய பெருமை கார்ப்பரேடையே சாரும்......


எத்தனை நாடுகளில் தடை இருந்தாலும் இங்கு சர்வ சாதாரணமாய் விற்கலாம் ஏன்னென்றால் இந்தியா ஒரு வணிக சந்தை, மக்களும் வெளிநாட்டு பொருள் என்றால்  அமோக ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை..

விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினால் பகிருங்கள்...

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை...


1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,

இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.

இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.

இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.

இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.

தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்.

இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.

இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர்  நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.
கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.

ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.

அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,

வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.

மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்.

இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது. இதுவே சரியான வரையறையாகும்.

குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.

மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.

நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.

புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.

அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.

தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.

புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.

புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.

கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.

ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.

எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்...

வாழ்வதே வாழ்வின் குறிக்கோள்...


நீங்கள் எந்த அர்த்தத்தையும் வாழ்க்கைக்கு கொடுக்க முயற்சிக்காதீர்கள்.

அந்த அர்த்தங்கள் கவலையின்
உற்பத்தி ஸ்தானமாகிவிடும்..

பூக்கள் மகிழ்ச்சியில் பூக்கின்றன.
வேறெந்தக் காரணமும் கிடையாது.

நதிகள் கடலை நோக்கி ஓடுவதில்
வேறெந்தக் காரணமும் கிடையாது.
பாய்வதில் பரவசம்..

அது போன்றே வாழ்வதே வாழ்வின் குறிக்கோள்.

வேறெதுவும் அதற்கு தேவை இல்லை..

வாழ்வின் மதிப்பு அதனுள் இருக்கிறது.

வேறெதிலும் இருந்து அது பெறுவதில்லை...

உங்கள் நாடு உங்களுக்கானது இல்லை...


ஓம் எனும் மந்திரத்தின் மகிமை...


ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்.

இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடு தான்.

உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப் புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புத் தான் அதற்கான மாமருந்து என்று  சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் தரும் நலன்கள்...

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனத்தின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் டிரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ் (wavelet transforms, time-frequency analysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில் மாறுதல் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.

ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது.

மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் அவர்கள்.

அகார உகார மகாரங்கள்..

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோர் செய்வதை இந்து மதம் கூறுவதையும் ஓமில் உள்ள அகார உகார மகாரங்கள் பிரம்மா விஷ்ணு சிவனைக் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும் போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.

வாயின் பின் புறம் உதிக்கும் ‘அ’ சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.

வாயின் நடுவில் பிறக்கும் ’உ’ மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குவிந்த உதடுகளின் வழியே வரும் ‘ம்’ தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழு சுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.

ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அனில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம்.

1999 மே மாதம் 29ம் தேதி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று அவரது தாயாருக்கு பேசும் சக்தி போய்விட்டது.

மூளையில் இரத்தம் கட்டி விட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.

அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.

இப்போதோ அவருக்கு 90 சதவிகிதம் பழைய ஆற்றல் வந்து விட்டது.

அவருக்கு ஸ்பீச் தெராபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர்டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே எனத் தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.

மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிடல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய முந்தைய ஆராய்ச்சிகள்...

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லார்ட் ராலே  மனித உடல் அமைப்பில் இசையின் தாக்கம் பற்றி ஆராய்ந்தார்.

ஆனால் இப்போது தான் மனித உடல் மீது மந்திரத்தின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது ஆராயப்படுகிறது.

1993ல் டெல்லஸ் எட் அல் 14 ஆண்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஓம் மந்திரத்தை உச்சரிக்க வைத்து அதன் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இதே ஆய்வுகளை 1996 வரை வெவ்வேறு குழுக்களை வைத்து மேற்கொண்டு ஆய்வின் முடிவில் குறிப்பிடத்தக்க அளவில் சுவாசம் மெதுவாக ஆவதோடு இதயத் துடிப்பு மிக மெதுவாக இருப்பதையும் கண்டறிந்தார்.

தகாஷி எடல் என்பவர் 1999ல் மேற்கொண்டஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்.

இதை அடுத்து 2003ல் ஹெய்ஸ்னம் ஜினா தேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இரு பகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு ஓ என்று  ஆரம்பித்து ம் என்று முடிக்கும் போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.

இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது..

குர்ஜரின் ஆராய்ச்சி...

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாகக் கொண்ட அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண்-பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறு வருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.

அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் உடல் நரம்பு மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில்..

1) ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.

2) எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.

3) ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம், உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸம் மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸம் அனாகதத்தில் (இதயம்) 341.3 ஹெர்ட்ஸம் விசுத்தாவில் (தொண்டை) 384 ஹெர்ட்ஸம் ஆஞ்ஜாவில் (மூன்றாம் கண்) 426.7 ஹெர்ட்ஸம் சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.

நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.

இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறு குடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புகளையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.

அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.

அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.

இந்த ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றிய  இன்னொருவர் அஜய் பி.தாக்கரே ஆவார்.

இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.

மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன...

உலகில் எங்கும் காணாத கொத்தடிமைகள் தான் திமுக உபிஸ்...


தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம்...


எந்தத் தனி நபரையும் மட்டும் நம்பி தமிழ்தேசியம் இல்லை..

அது தனக்கான ஈட்டிமுனையாக தனக்குள்ளிருந்து தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்..

தேவையின் போது பிரபாகரன் போன்ற எதற்கும் விலைபோகாத விட்டுக் கொடுக்காத ஆளுமையே அதற்குத் தலைமை தாங்கும்...

விவசாயிகளை அலட்சியம் செய்யும் நாடு நாசமாகத் தான் போகும்....


ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)...


மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்...

இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்..

தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும்.. நெல்லூரில் ஒரு துண்டையும்..

தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன...

ஆன்மீகம் உண்மைகள்...


அடைக்கலம் தேடி வந்த குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய பெண் போலீஸ்.. குவியும் பாராட்டு...


ஹைதராபாத்தின் ஒஸ்மேனியா மருத்துவமனைக்கு முன்னாள் நின்றுகொண்டிருந்த, தனக்கு முன்பின் தெரியாத இளைஞர் இர்பானிடம், துப்புரவு வேலையை செய்யும் ஷபனா பேகம் என்கிற பெண், தனது குழந்தையை கொடுத்ததோடு, சிறிது தூரம் சென்று குடிதண்ணீர் பிடித்து வருவதாகச் சொல்லி நகர்ந்துள்ளார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் குழந்தையின் தாய் ஷபனா பேகம் வரவில்லை. இர்பான் மேலும் பதற்றமாக, அந்த சமயத்தில் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.  செய்வதறியாமல் பரிதவித்த இர்பான், கைகுழந்தையுடன் அருகில் இருந்த அப்துல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்று தகவல் அளித்துள்ளார்.

அதற்குள் இரவாகிவிட்டது. அந்த காவல் நிலையத்தில் இரவுநேர பணியில் இருந்த காவலர் ரவீந்திரனும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்தபோது, அவர் தனது மனைவி பிரியங்காவுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார்.


சற்றும் தாமதிக்காத பிரியங்கா உடனே காரை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு வந்து குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி குழந்தையின் அழுகையை போக்கியுள்ளார். பெண் காவலரான பிரியங்காவுக்கும், காவலர் ரவீந்திரனுக்கும் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. பேறு கால விடுமுறையில் பிரியங்கா, வீட்டில் இருந்துள்ளார்.

 இந்த நிலையத்தில் அவர், தாய்மை போற்றும் இப்படி ஒரு செயலைச் செய்ததற்காக கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகளால் பாராட்டினை பெற்றார்.  அதன் பொருட்டு நடந்த பாராட்டு விழாவில் அந்த குழந்தையும் இருந்தது.  இதில் பேசிய பிரியங்கா, ‘தனக்கு அதைத் தவிர வேறேதும் தோன்றவில்லை.. எந்த ஒரு தாயும் இதைத் தான் செய்திருப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

ஒரு வழியாக குழந்தையின் தாய் ஷபனா பேகம் கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு, தான் இர்பானிடம் குழந்தையை கொடுத்த பின்பு, அந்த இடத்தை மறந்துவிட்டதாகவும், தானும் தன் குழந்தையைத் தேடி அலைந்ததாகவும் ஷபனா பேகம் கூறியுள்ளார்.  எனினும்  காவலராக இருந்தால் என்ன? தாய்மையுள்ளத்துக்கு எதுவும் தடையில்லை என்பதை பிரியங்கா நிரூபித்துள்ளார்...

அதிமுக எம்.பி. எல்லாம் உயிரோடவா இருக்காங்க...


தும்பைப் பூ....


தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் தடிமன் பறந்தோடி விடும்.

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் தடிமன் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு...

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு தேக்கரண்டி தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும்...

கால் தேக்கரண்டி அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் காய்ச்சல், கீழ்வாத காய்ச்சல் (Rheumatic fever) குணமடையும்.

பாம்பு கடி குணமடையும்...

பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

கண்கோளறுகளுக்கு மருந்து...

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு குவளை வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள்  குணமடையும்...

வைகோ நாயூடு vs தமிழிசை கலாட்டா...


மவுனம்...


காற்றில் கரைந்து காற்றின் மொழி கேளுங்கள்...

மொழிகளும் இங்கே மெளனத்தில் கரைந்து விடும்..

மவுனமே ஓர் மொழி தான்...

இன்றைய பறக்கும் தட்டு சம்பவம்...


இந்தியாவில், 1968 ஆம் ஆண்டில் இமாலயா மலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார மீதான இடங்களில் நிகழ்ந்தவை. மர்மமான மற்றும் வேகமாக நகரும் விளக்குகள் பற்றி நேபாளம், பூட்டான் மற்றும் சிக்கிம் என இந்தியாவில் பல பகுதிகளில் சிஐஏ வால் அறிக்கை அளிக்கப்பட்டன.

பிப்ரவரி 19 அன்று இரவு 9 மணிக்கு, வெளிப்படையாக சூப்பர்சோனிக், நீட்டிக்கப்பட்ட பொருள் வடக்கில் நேபாளத்தில் வானத்தை கடந்து, இந்தியாவின் சிக்கிம் என்ற இடத்திற்கு சென்றது. அது சென்ற போது பச்சை மற்றும் சிவப்பு விளக்கு கதிர்களை உமிழ்ந்தது.

நேபாளம், சிக்கிம் மற்றும் பூட்டானில் காணப்பட்ட பிரகாசமான பொருள்களின் "குறிப்புகள்" என்று கூறப்படும் பாரிய பறக்கும் தட்டு C.I.A அறிக்கையானது, அவர்கள் ஒரு குழுக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது.

அது சரி என்றால், அந்த பகுதியில் ஒரு மறைக்கப்பட்ட தளத்திலிருந்து, அவர்கள் குழு செயல்பட முடியும் என்றனர். ஒரு பிரபலமான யுஎஃப்ஒ கோட்பாட்டின் படி, அத்தகைய தளம் சீனா மற்றும் இந்தியாவிற்கும் இடையே நிலவுகின்ற எல்லைக்குட்பட்ட ஒரு உயர்ந்த மலைப்பாங்கான #கொங்கா_லா வின் அருகே உள்ளது. இப்பகுதியில் உள்ள பல மடாலயங்களிலிருந்து வரும் புத்த பிக்குகள், நீண்ட காலமாக அந்த மர்மமான விளக்குகளை காண்பதாகவும் அவற்றை "அறிவார்ந்தவை" என்றும் விவரிக்கின்றனர்.

காரணம் செல்வ செழிப்பு மற்றும் கலாச்சாரத்தின் வடிவில் இமயமலை உயரமாக நிற்கிறது., ஹிட்லரும் தங்கள் மறைந்து உயர்ந்த இனத்தை தேடி, இமயத்திற்க்கே வந்தார். மறைந்த சக்திகளுடன் பண்டைய கலைஞர்களை தேடி நாசிப்படைகளுக்கு உத்தரவிட்டார். கலாச்சார ரீதியாக பேசும் போது, அவர்கள் அவ்வாறு செய்வதற்க்கு காரணம் இருந்தது.

இந்திய புராணங்களின் நம்பத்தகுந்த சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் விண்மீன்களைக் கொண்ட பறக்கும் இயந்திரங்கள். விளக்கங்களுடன் விமான சாத்திரங்களில் விவரிக்கப்படுகிறது. இமாலய பகுதியானது கடந்த காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்ட சமுதாயம் ஆண்டதாக இருந்தது. அந்த சூழலில், ஒரு மறைமுக UFO தளம் இன்னமும் சர்ச்சைக்குரிய கைவினைக் கூடத்தில் வசிக்கும் ஒரு வேற்றுகிரகவாசிகளின் கைவசம் இருக்க வேண்டும். சீன-இந்திய எல்லையின் குறிப்பிட்ட நீளத்திற்கு அருகில் இந்த தளம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

மேலும் சி.ஐ.ஏ. வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு, 1968 மார்ச் 25 அன்று வடகிழக்கு நேபாளத்தின் காஸ்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பறக்கும் தட்டு சம்பவம் நடந்தது. ஆறு அடி மற்றும் நான்கு அடி உயரம் கொண்ட ஒரு பெரிய உலோக தட்டு வடிவ பொருளை போக்ஹார்ராவில் உள்ள ஒரு பள்ளம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. நேபாளத்தின் மற்ற பகுதிகளான துருபசலே மற்றும் டாலகோட்டில் இதேபோன்ற பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, முந்தைய சிதைவுகளை பற்றியது என்று CIA அறிந்திருந்தது.

வினோதமான இந்த சம்பவத்தின், கேள்விகள் அடுக்கடுக்காக மனதில் விழுகிறது. இந்த பறக்கும் தட்டுகளுக்கு என்ன நடந்தது? இப்போது அவைகள் எங்கே? அவர்கள் மனிதர்களாக அல்லது  வேற்றுகிரகத்தவர்களா? விளைவுகளைத் தெரிவிக்காத UFOs இன் மீட்பு என்ன ஆனது!?

இந்த குழப்பமான புதினத்தில், இரண்டு விஷயங்கள் உறுதியாக உள்ளன:

1. இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் உள்ளன.

2. ஆனால் அந்த பதில்களை, இதை பதிவிட்ட, படிக்கின்ற வெகுசன மக்களால் விரைவில் பெற முடியாது என்பதே உண்மை...