15/01/2018

அய்யனார் பற்றிய உண்மைகள்...


அய்யனார் என்பது சாத்துவணிகனின் காவல் தெய்வம் என சொன்ன போது. இல்லை இல்லை இது தமிழர்களின் வழிபாடு தான் என பலர் முட்டு கொடுத்தார்கள்....

அதே போல் இந்த புத்தர் என்பதே ஒரு போலியான உருவகம் தான்...

வணிகர்களின் சாதியில் துறவறம் போவது என்பது இயல்பான ஒன்று...

அந்த துறவறம் என்பது ஏதோ எல்லாவற்றையும் துறந்து விட்டு போவது என அர்த்தம் இல்லை....

பூமியின் இரகசியங்களை தேடி.... தனது அடுத்த தலைமுறையை உலகத்தை ஆள செய்ய தேடித்திரியும் ஒருவித வாழ்க்கை முறை தான்...

இந்த வாழ்க்கை முறையை இந்த வணிகக்கூட்டத்திற்கு பழக்கப்படுத்தியது.... அரச குடும்பம்....

அந்த வணிகக்கூட்டத்தில் இருந்து துறவறம் போனவனை வைத்து உருவாக்கப்பட்டது தான் பெளத்தம்...

உடனே பெளத்ததில் இல்லாத நல்ல கருத்துகளா என கேட்ப்பார்கள்....

புத்தர் யார் என்பதற்கே ஆதாரங்கள் கிடையாது.... இந்த கருத்துகள் புத்தர் தான் சொன்னாரா என ஆராய எந்த மூகாந்திரமும் இல்லாத போது.... எந்த அடிப்படையில் இது புத்தர் சொன்னது என சொல்கிறார்கள்....

நல்ல கருத்துகளின் குவியலை சேகரித்து அனைத்தும் இவர் சொன்னது தான் என சொன்னால் உடனே அவரை கடவுளாக பார்ப்பது தான் முட்டாள் தனம்.....

அந்த புத்தன் எனும் சாத்து வணிகனுக்கு காவல் காத்த பூதம்.... அப்படியே ஐப்பானிலும்.... தமிழ்நாட்டிலும் மட்டும் 100% ஒத்து போகிறது எனில் அந்த வணிகக்கூட்ட தலைமை யார் என நீங்களே பார்க்க வேண்டும்.....

இப்போது இருக்கும் நகரத்தார் வணிகர்கள் போலிகள்....

உண்மையான அந்த தலைமை அரச குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மறுக்க முடியாத பிணைப்பு ஒன்று உள்ளது. அதன் ஆழத்தை தேடி செல்லும் போது நமக்கே அதிர்ச்சிகள் தான் மிஞ்சும்....

கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் வெளியிடலாம்......

அய்யனாரை குலதெய்வ என சொல்லுபவர்கள் வருத்தப்பட வேண்டும்....

அதே கோவிலில் யாருக்கு பலி கொடுக்கிறீர்களோ அது தான் குலதெய்வம்.....

அய்யணாருக்கு பலி கிடையாது ஒருவேலை இருந்தாலும் முன்னோர்களிடம் நன்கு கேளுங்கள்...

அருகில் இருக்கும் வேறு ஒன்றுக்கு தான் பலி என சொல்லுவார்கள்...

இலுமினாட்டி கள் ஏன் தமிழகத்தை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்..?


தமிழா எதிர்த்துக் கொண்ட இரு.. ஒரு நாள் அவர்களின் எதிர்ப்பு குறையும் நமது வெற்றியின் பயணம் தொடரும்..

இலுமினாட்டி (வணிகர்கள்) தான் அனைத்தையும் தீர்மானிக்கின்றனர்...

தமிழா அரசியலை புரிந்துக்கொள்...


இந்திய பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றம்...


இனி வழங்கப்படும் புதிய பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாஸ்போர்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும் தாயார் பெயர், கணவன்/மனைவி பெயர், முகவரி இனி இருக்காது. கடைசி பக்கம் எதுவும் அச்சிடப்படாது என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது...

தமிழ் நாட்டில் இந்தி ஆட்சி செய்யாமல் தடுக்க உயிர்விட்ட முதல் மொழிப்போர் வீரர் இவர்..


ஆண்டு 1939. இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்னரே இந்தி திணிக்க முயன்று தோற்றது வரலாறு...

கன்னடன் புரபுதேவா வின் குலேபாகவலி review பார்த்தவன் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கூட போக மாட்டான்...


ஆனா சில மீம் பேஜஸ் ஆகா ஓகானு புரோமோசன் பன்னுறாங்க.. அதுவும் ஸ்கெட்ச் TSK விட இது சூப்பரான்.. அடப்பாவிகளா மீம்ஸ் பேஜ்க்கு உள்ள மரியாதையே உங்களால போகுது டா..

படம் புரோமோசன் பன்ன வேணானு சொல்லல நல்ல படத்துக்கு பன்னுங்கனு தான் சொல்லுறோம்...

தமிழகத்தில் பாஜக காலூன்ற தமிழக மக்கள் விடக்கூடாது - குஜராத் மாநில ஜிக்னேஷ் எம்.எல்.ஏ பேட்டி...


கொந்தளிக்கும் வேதாரண்யம் மக்கள்.. கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம்...


அகல ரயில்பாதை திட்டத்துக்காக 12 ஆண்டுகளுக்கு முன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அது மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கிறார்கள் வேதாரண்யம்வாசிகள். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரைப் பகுதி உப்பு உற்பத்திக்கும், கடல் தொழிலுக்கும் பெயர் பெற்றதாகும். கோடியக்கரை-வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் குறுகிய ரயில்பாதையில் இயங்கி வந்த ரயில்வே போக்குவரத்து தொழிலுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் மூலம் உப்பு, மீன், கருவாடு மற்றும் சவுக்கு மரம் போன்றவை அதிகளவில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.  இதன் மூலம் வியாபாரிகள் பயனடைந்ததோடு, ரயில்வே நிர்வாகமும் ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது.

இந்நிலையில், இந்தியாவிலுள்ள குறுகிய ரயில்பாதைகள் அனைத்தும் அகலப் பாதைகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி இந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ரயில் சேவை 12 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு, அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அத்துடன் அகஸ்தியம்பள்ளியில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. இவை யாவுமே ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், அவ்வப்போது கிடப்பில் போடப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து, கோடியக்கரை வரையில் 42 பாலங்கள் கட்டும் பணியும் இன்னும் நிறைவடையவில்லை.  வேதாரண்யம் சந்நிதியிலிருந்து கடலுக்குச் செல்லும் சாலை நடுவே மேம்பாலம் அமைக்கும் பணியும் பாதியிலேயே நிற்கிறது.  இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

எனவே, நின்றுபோன அகல ரயில்பாதை திட்டத்தை மீண்டும் தொடங்கி, விரைவுபடுத்தி இந்தப் பகுதியில் ரயில் சேவையை மீண்டும் தொடங்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

ஜல்லிக்கட்டு நாயகன் முடக்கத்தான் மணி.. சூப்பர் நண்பா...


உடல் பருமனாவதும் இளைப்பதும் உணவால் அல்ல – நாம் சுவாசிக்கும் குணத்தால் தான்...


நம் வாழ்க்கையில் எல்லோரும் நல்லதையே தான் எண்ணுகின்றோம். நல்லதாக நடக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.

ஆனால் பிறருடைய தவறான செய்கைகளைப் பார்க்கும் போது வேதனையான உணர்வுகள் வந்து நம் நல்ல உணர்வுகள் எல்லாம் விளையாமல் போகின்றது. இது தீய வினையாக நமக்குள் சேர்த்து நோயாக விளைகின்றது.

இப்படி வினைக்கு நாயகனாக எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடம்பை நலியச் செய்கின்றது.

சந்தோஷமாக இருந்தால் உடலை மகிழ்ச்சியுறச் செய்யும்.

சில பேரைப் பாருங்கள்...

1.அவர்கள் சாப்பாடு கொஞ்சம் தான் சாப்பிடுவார்கள்.

2.ஓரளவுக்கு கொஞ்சம் செல்வாக்கோடு இருந்தார்கள் என்றால் அந்த உடல் நன்றாக வரும்.

ஆனால் சிலரைப் பார்த்தால் இயல்புக்கு மாறாக நிறையவே சாப்பிடுவார்கள்.. அவர்கள் உடலைப் பார்த்தோம் என்றால் மெலிந்து கொண்டே போகும்..

1.சாப்பிடும் சாப்பாட்டால் உடல் வருவது அல்ல.

2.மகிழ்ச்சியினால் தான் உடல் பூரிப்பாகவும்.

3.கவலையும் வேதனையும் இருந்தால் உடலை மெலியச் செய்கின்றது.

ஒருவர் கோபமாகவே இருப்பார். அவர்களுக்கு மகிழ்ச்சி அதிலே தான் இருக்கும். அவன் அப்படி இவன் இப்படி என்று சொல்லிவிட்டு அவர்களும் நன்றாகத் தான் இருப்பார்கள்.

ஆனால் கோப உணர்ச்சியால் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை எதிர்ப்பதற்கு யாராவது வந்தார்கள் என்றால் அடுத்து வேதனை என்ற நிலைகள் கண்டிப்பாக வரும்.

அப்புறம் இவர் உடலில் சிறுகச் சிறுக..

1.இப்படிச் செய்கிறானே... என்னையே எதிர்க்கிறானே... என்று குரோத மனம் தான் வரும்.

2.அவனை விடக்கூடாது அழித்தே ஆகவேண்டும் அழிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருப்பான்.

3.இந்த உணர்வு இவன் உடலுக்குள் இருக்கின்ற நல்ல உணர்வையெல்லாம் அழிக்கும்.

இந்த உணர்வுகள் இப்படிச் சேர்த்துச் சேர்த்து கோப உணர்வுகள் தன்மை எல்லை கடந்தாலும் அதே சமயத்தில் அது எதிர் நிலையான நிலை வரும் போது இந்த வேதனை கூடியவுடனே உடலும் குறையத் தான் செய்யும்.

இப்படித்தான் நமக்குள் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப சிறுகச் சிறுக அந்தந்த குணத்தின் வினைகளாகச் சேர்ந்து அதற்குத்தக்க உடல் செழிப்பாவதும் உடல் நலிவதும் மாற்றங்கள் ஆகிக் கொண்டே வரும்.

அதனால் தான் முச்சந்தியிலே வைத்து வினைக்கு நாயகன் “விநாயகன்” என்று காட்டுகிறார்கள்.. நீ சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப உன் உடலை நாயகனாகப் பெற்றிருக்கிறாய் என்று எல்லோரையும் அறியும்படி ஞானிகள் வைத்துள்ளார்கள்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகா ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து விண் செல்லப் போகிறாயா...?

அல்லது மீண்டும் உடல் பெறும் உணர்வுகளை உனக்குள் வினையாகச் சேர்த்து மீண்டும் மண்ணுலகில் வாழப் போகிறாயா..?

நீயே சிந்தித்துப் பார்... என்று கேள்விக் குறி போட்டு ஞானிகள் காண்பித்துள்ளார்கள். ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் தப்பல்ல. அதை அறிந்து கொண்டால் நாம் போக வேண்டிய பாதை தெளிவாகும்...

கன்னடனுக்கு மின்சாரம்.. நிலக்கரி மட்டும் தமிழன் கொடுக்க வேண்டுமா...?


பரிசல் போக்குவரத்தை மட்டுமே நம்பி கோவையில் ஒரு கிராமம் - பூச்சமரத்தூர்...


உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிறது. 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவன். பள்ளிக்கு சைக்கிளில் செல்ல விரும்புகிறான். என்ன செய்வீர்கள்? அதட்டுவீர்கள். 'வேண்டாம். பயங்கர டிராபிக். ஏதாவது வண்டி மோதுனா என்ன பண்றது. ஸ்கூல் வேன்ல போ. இல்லைனா அப்பா வேணும்னா கொண்டு வந்து விடவா' என செல்லம் கொஞ்சுவோம் அப்படித்தானே. அப்படி வேனிலோ, இரு சக்கர வாகனத்திலேயோ மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதே நமக்கு பெரிய டென்ஷன். 'லேட் ஆயிடுச்சு. அப்புறம் கேட்டுக்கு வெளியேதான் நிக்கணும்'னு மாணவர்களுக்கும் டென்ஷன். குழந்தைகள் பள்ளி செல்வது என்பது நமக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய டென்ஷன் தான்.

ஸ்மார்ட் ஸ்கூல், ஏசி பஸ், நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என நமக்கு எல்லாம் கிடைக்கிறது. பெரிய தொலைவு இல்லாமல் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று படிக்க முடிகிறது. ஆனால் இப்படி போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாத ஊர்களில் மாணவர்களின் நிலை என்ன? அப்படி ஒரு கிராமம் தான் கோவை காரமடை அருகே வனப்பகுதில் அமைந்துள்ள பூச்சமரத்தூர் கிராமம். இங்கு  25 குடும்பங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்த கிராமம் அமைந்துள்ளது. ஆனால் வெளி உலகுக்கான தொடர்பை அற்று தனித்தீவாகத்தான் காட்சியளிக்கிறது இந்த கிராமம். சுற்றிலும் காடு, நகரத்துடனான தொடர்பை துண்டிக்கும் ஆறு இவைதான் இந்த ஊரின் அடையாளங்கள்.

ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டும் என்றால் கூட இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். பாலங்கள் இல்லை. ஆற்றில் பெரு வெள்ளம் வந்தால் பல கிலோ மீட்டர் சுற்றித்தான் நகரத்தை அடைய முடியும். இந்த கிராமத்தில் இருந்து சில மாணவர்கள் தினமும் பள்ளி சென்று வருகிறார்கள். வீட்டில் இருந்து சிறுதூரம் நடந்து, அங்கிருந்து பரிசல் பயணம், பின்னர் மீண்டும் சிறு நடை, அங்கிருந்து பேருந்து என விரிகிறது இவர்களின் பள்ளியை நோக்கிய பயணம். இத்தனை கஷ்டமா என்கிறீர்களா? இன்னும் இருக்கிறது பரிசலை இயக்குபவர்களே இவர்கள்தான்.

நாம் அந்த கிராமத்துக்குச் சென்றிருந்த போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. நகரத்தின் பேரிரைச்சலில் இருந்து அமைதியான அந்த கிராமத்தை அடைந்திருந்தோம். பில்லூர் அணை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ் வந்து நின்றது. பஸ்சில் இருந்து ஒரு மாணவி உட்பட 4 அரசு பள்ளி மாணவர்கள் இறங்கினர். கற்கள் நிறைந்த சாலையில் பயணிக்கத்துவங்கினார்கள். பள்ளியில் அன்று நடந்ததை பேசி சிரித்தபடியே மேடு-பள்ளம் நிறைந்த அந்த சாலையில் மிக கவனமாக பயணித்தனர்.

ஒரு பெரிய ஆலமரத்தை கடந்து பள்ளத்தில் இறங்க... அங்கு ஆறு. ஆற்றை பார்த்ததும் நமக்கு இருந்த அச்சமும், ஆச்சரியமும் அவர்களுக்கு சுத்தமாக இல்லை. மாணவர்களுள் ஒருவன் ஒரு மரத்தின் பின்னால் இருந்த ஃபைபர் பரிசல், துடுப்பை எடுத்து வந்தார். மிக சாதாரணமாக படகை ஆற்றின் கரையில் வைத்து மற்ற மாணவர்கள் ஏறச்சொல்லி, அந்த மாணவனும் பரிசலில் ஏறினார். இடது வலதாக துடுப்பை இயக்க, படகு மறுகரையை நோக்கிச் சென்றது.

'நாங்க 6 பேர் சார். இப்படித்தான் தினமும் பரிசல்ல போவோம். அதெல்லாம் பயமில்லை. ரொம்ப வெள்ளம் வந்தா ஸ்கூலுக்கு போக மாட்டோம்' என நாம் கேட்ட அத்தனை கேள்விக்கு ஒற்றை ஒற்றை வார்த்தையாகவே பதில் சொன்னார்கள் மாணவர்கள்.

அங்கிருந்த மக்களிடம் பேசினோம். 'தினமும் இந்த பசங்க ஸ்கூலுக்கு இப்படித்தான் போறாங்க. வீட்டுல இருந்து ஆற்றங்கரைக்குப்போய் பரிசல்ல துடுப்பு போட்டு அந்த கரைக்கு போகணும். அங்கிருந்து கவர்மென்ட் பஸ்சை புடிச்சு மறுகரைக்கு போய் அங்கிருந்து பஸ்ல ஸ்கூலுக்கு போவாங்க. சாய்ந்திரமும் இது தான்' என்றார்கள்.மறுபுறம் இதே ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்கிறார்கள் சுற்றுலா பயணிகள். அச்சத்தோடு, 'லைஃப் ஜாக்கெட்' உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு பயணிக்கிறார்கள். மாணவர்களிடம் ஆறு மீதான அச்சமும் இல்லை. அவர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை.

குழந்தைகளை எப்படியெல்லாம் நடந்து கொள்வது, சிறப்பான குழந்தை வளர்ப்பு ஆகியவை குறித்து நாம் தேடி தேடி அறிந்து குழந்தைகளை மிக கவனமாய் பாதுகாத்துக்கொண்டிருக்கிற இதே காலத்தில், பள்ளி செல்ல இத்தனை சிரமங்களை சந்திப்பது என்பது மனதை பிசையத்தான் செய்கிறது.

நாம் கல்வி கற்பது என்பதே மிகப்பெரிய பிரச்னையாக பார்க்க பழகி இருக்கிறோம். ஆனால் பள்ளிக்கு செல்வது என்பதே இவ்வளவு பிரச்னையா என்பது அதிர்ச்சியளிக்கவே செய்கிறது. ஆனால் இதை சாதாரண பயணமாகவே கருதுகிறார்கள் அவர்கள். நமக்குதான் இது பெரிய சாதனையாக மலைக்க வைக்கிறது. ஆனால் நாம் நினைப்பதுபோல் இது சாதனை அல்ல... சாபம். அடிப்படை உரிமையான கல்வியை கற்க இந்த குழந்தைகளை இத்தனை சிரமங்களை எதிர்கொள்ள வைப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல...

- காரிடிவி

இந்தியாவை நம்பி நாசமா போன தமிழனுக்கு.. இனியாவது புத்தி வரட்டும்...


வனத்தை அழிக்கக்கூடிய உன்னிச்செடியில் பர்னிச்சர் தயாரிக்கும் கோவை, சீங்கப்பதி மலைக்கிராம மக்கள்...


வனத்தை ஆக்கிரமித்து அழிக்கக் கூடியது லாண்டனா எனப்படும் உன்னிச்செடி. அதை எப்படி அழிப்பது, காடுகளை அதன் பிடியில் இருந்து எப்படி மீட்பது என்பதே சூழல் ஆர்வலர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. அதற்கு விடையளிக்கும் விதமாக கோவையில் தயாராகிறது லாண்டனா பர்னிச்சர் பொருட்கள். அழிக்கப்பட வேண்டிய ஒரு தாவரத்தை அழகான பர்னிச்சர் பொருட்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பழங்குடி மக்கள். பார்வைக்கு மூங்கிலைப் போல காட்சியளிக்கின்றன அந்த பர்னிச்சர் பொருட்கள். விலை மட்டும் சற்று குறைகிறது. தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை.

புதர் போல படர்ந்து மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கும். நீராதாரத்தை வற்றச் செய்துவிடும் என்ற குற்றச்சாட்டு இந்த லாண்டனா எனப்படும் உன்னிச்செடி மீது உண்டு. தமிழக வனங்களை ஆக்கிரமித்துள்ள இச்செடியை அழிப்பது வனத்துறைக்கு பெரிய சவாலாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தான் கோவை சீங்கப்பதி மலைக்கிராம மக்கள் இந்த செடிக்கு வேறொரு அடையாளம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தாங்கள் உள்ள வனப்பகுதியில் ஆக்கிரமித்திருக்கும் லாண்டனா செடிகளை வெட்டி வந்து பர்னிச்சர் பொருட்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சீங்கப்பதி மக்கள். ஒருபுறம் வனத்தின் சூழல் காப்பாற்றப்படுகிறது. கலைப் பொருளாக பழங்குடி மக்களின் பொருளாதாரத் தேவையை ஈடு செய்து வருகிறது. எதற்கும் பயன்படாது என ஒதுக்கப்பட்ட உன்னிச்செடி அனைவராலும் விரும்பக்கூடியதாக அடையாளம் பெற்றிருக்கிறது.

பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட இந்த பர்னிச்சர் பொருட்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. முதல் முறையாக லாண்டனா செடியில் இருந்து தயாரான சோபா, மேசை, டீபாய், இருக்கை, புத்தக அலமாரி, சிறிய அளவிலான குப்பைத் தொட்டி, பொம்மை பொருட்கள் என சுமார் 10 விதமான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.

மிக வேகமாக பரவக்கூடியது லாண்டனா செடி. வெட்டி வீசுவதைத் தவிர இதை கட்டுப்படுத்த வேறெந்த வழிமுறையும் நம்மிடம் இல்லை. அப்படியான சூழலில் பழங்குடிகளின் இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது...

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்...


சென்னை ஜெயின் கல்லூரி பெண்கள் வெட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாட்டம்...


தமிழ்நாடு-தமிழினத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு...

தமிழ்நாட்டிற்கு வருகிற வேறு மாநிலத்துக்காரனுங்க எல்லாருமே நானும் தமிழன் தான் என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுவது பிழைப்பு வாதத்தை தவிர்த்து பார்த்தல் தமிழன் என்று சொல்லுவதில் இருக்கும் பெருமை வேற எந்த இனத்திற்கும் கிடையாது...

தமிழன்-தமிழ் என்றாலே ஒரு கர்வம் தான்...

கரூர் மாவட்ட காவல் துறை எஸ்.பி. அவர்களே பதில் சொல்லுங்கள்...


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தல் என்ற இடத்தில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிச் திருவாரூர் சென்ற தனியார் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து...


7க்கும் மேற்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்...

தமிழினமே விழித்தெழு...


உங்கள் ஆரோக்கியதிற்கான மேஜிக்...


உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்.

நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மன உளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்.

உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.

உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....

மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.

நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...

நன்றி ஆரோக்கியமே..
நன்றி உடலே..
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி..
என்னை குணமாக்கியதற்கு நன்றி..
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.

இதன் மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு.. உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.

1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் "ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது" என்பதை மனதிற்குள் சொல்லி கொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...

2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..

3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்.

4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.. அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்... எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ.. அவ்வளவு மனபாரம் குறையும்...

5. காலை வேலையில் நியூஸ் பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....

6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்.

7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்.. இதன் மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்.

தினமும் இதை செய்து பாருங்கள்.. தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்...

தமிழர்களின் பொங்கல் வரலாறு...


தும்மலை எப்போதுமே அடக்கக்கூடாது ஏன் தெரியுமா ?


தும்மல் என்பது நம் உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக்களுக்கு எதிரான இயற்கையின் தற்பாதுகாப்பாகும்.

நாம் தும்மும் போது நம் உடலுக்குள் நுழைய முயலும் பாக்டீரியா அல்லது ஏதேனும் தீமையான துகள்கள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேற்றப்படும். இந்த வழியில், ஆபத்தான தொற்றுக்கள் நம்மை அண்டாமல் தும்மல் நம்மை பாதுகாக்கும்.

பொது இடத்தில் தும்மும் போது, தும்முபவர் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படலாம். அதனால் நாம் தும்மும் போது, நம் அருகில் உள்ளவர்களிடம் 'எக்ஸ்க்யூஸ் மீ' என கூறுவது வழக்கம். இருப்பினும், நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் 'கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்' அல்லது 'நீண்ட ஆயுளை பெறுங்கள்' என நம்மை ஏன் வாழ்த்துகிறார்கள் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

அதற்கு காரணம், தும்மலை தடுக்க முயற்சி செய்தால், அது நம் உயிருக்கே ஆபாத்தாய் போய் முடியலாம். ஆம், இது உண்மை தான்.

தும்மலை ஒரு போதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை உண்டாக்கி விடலாம். தும்மலால் எழும் காற்று அழுத்தம் காதுகள், மூளை, கழுத்து போன்ற ஏதேனும் உறுப்பிடம் திசை திரும்பி விடலாம். இதனால் அவைகளுக்கு பாதிப்பு உண்டாகும். தும்மலை நிறுத்த முயற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்தான உடல்நல தாக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அடுத்த முறை தும்மல் வரும் போது, அதை ஒருபோதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள்.

தும்மலை நிறுத்துவது ஏன் ஆபத்தில் முடிகிறது?

தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும். நீங்கள் தும்மலை நிறுத்தினால், இந்த காற்று அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும். ஒரு வேளை காதுகள் என்றால், செவிப்பறைகளில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போகலாம். தும்மலை நிறுத்துவதால் உடல்நலத்தின் மீந்தும் கூட தீமையான தாக்கங்கள் ஏற்படலாம். தும்முவதால் நம் உடலுக்குள் நுழைய முயலும் தீமையான பாக்டீரியாக்கள் பலவற்றை வெளியேற்றும். தும்மலை நிறுத்துவதால், இத்தகைய ஆபத்தான கிருமிகள் நம் உடலிலேயே தங்கி, நோய்களை உண்டாக்கும்.

தும்மலை நிறுத்துவதால் ஏற்படும் பிற தீமையான தாக்கங்கள்...

தும்மலை நிறுத்தினால் காற்றின் அழுத்தம் உள்ளே அடைபட்டு விடும். அதிகரித்த காற்று அழுத்தத்தினால், உங்கள் கண்களின் இரத்த தந்துகிகள் பாதிப்படைவதால் கண்கள் பாதிப்படையலாம் மற்றும் காதுகள் கேட்காமலும் போகலாம்.

வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது...

கழுத்து காயங்கள் மற்றும் இடைத்தடுப்பில் பாதிப்பு போன்றவைகளும் உண்டாகலாம். சில அரிய நேரங்களில், மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் முறிவுகளால் வாதமும் ஏற்படலாம்.

நாம் ஏன் தும்மலை நிறுத்துகிறோம்?

பொது இடத்தில் இருக்கும் போதோ அல்லது தும்மல் என்பது தர்மசங்கடமாக கருதப்படும் சில இடங்களில் இருக்கும் போதோ, நாம் தும்மலை நிறுத்த முயற்சி செய்வோம். பிறருக்கு தொந்தரவை அளிக்கலாம் என்ற காரணத்தினால், தும்மலை நிறுத்துவது நல்லதாகவும் ஒழுக்கமான ஒன்றாகவும் கருதப்படும். இருப்பினும், கண்டிப்பாக இது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல. உயிருக்கே ஆபத்தானதாக இருப்பதால், எப்போதும் தும்மலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம்.

தும்மல் வருவது வெட்கமாக இருந்தால், உங்கள் மூக்கில் கைக்குட்டையை வைத்து தும்மவும். இதனால் குறைந்த சத்தத்துடன் தும்முவது என தும்மும் முறைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் மூக்கையும் வாயையும் கைகளால் மூடிக்கொண்டும் தும்மலாம். அப்படி செய்யும் போது, தும்முவது முறையற்றது என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள்...

இப்போது கூறுங்கள் அமெரிக்கா வல்லரசு நாடா..? இல்லை மற்ற நாட்டின் வளங்களை கொல்ல துடிக்கும் வன்மம் நிறைந்த நாடா..?


பென்னிகுக் குடும்பத்தினர் தேனி வருகை...


தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமனத்திலேயே பாஜக மோடி - அமித்ஷா வின் கைவரிசை இருக்கிறது...


அதாவது மிக அனுபவம் குறைந்த தீபக் மிஸ்ராவை பல மூத்த நீதிபதிகளையும் தாண்டி தலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்...

அவர் வந்ததில் இருந்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய வழக்குகளை  வயதில்-அனுபவத்தில் குறைந்த மோடி-அமித் ஷா வின் பினாமி  ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கி மறைமுகமாக மத்திய அரசிற்கும்-மோடி-அமித் ஷா அரசியல் சதுரங்க வெட்டிக்களுக்கு உதவியுள்ளார் தீபக் மிஸ்ரா..

இது தான் இப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

அப்படியே சில வழக்குகள் மூத்த நீதிபதிகளான மேலே உள்ளவர்களுக்கு சென்றாலும் அதை நிராகரிக்கும் அளவுக்கு சில வழக்குகளை முடித்து மோடி-அமித் ஷா கூட்டணிக்கு உதவியுள்ளார் இந்த காவி தீபக் மிஸ்ரா...

முக்கியமாக...

அமித் ஷா கொலை வழக்கை விசாரித்து தண்டனை கொடுத்த ஒரு நீதிபதி சமீபத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார்... அது சம்மந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது அதை மிக வயது குறைந்த அருண் மிஸ்ரா என்ற மோடி-அமித் ஷா பினாமி நீதிபதி அமர்வுக்கு அனுப்பியுள்ளார்...

அதை பார்த்த மனுதாரர் அருண் மிஸ்ரா விடம் சென்றால் உண்மை வரத்து என்று சொல்லி  அந்த வழக்கை திரும்பப்பெற்று சென்று விட்டார்....

இப்படித்தான் இந்தியாவின் நீதி மோடி-அமித் ஷாவால் மிகவும் படுகுழிக்கு தள்ளப்பட்டுள்ளது தீபக் மிஸ்ரா மூலம்...