16/04/2019

துலாபாரத்தின் போது தராசு உடைந்ததில் திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் படுகாயம் அடைந்தார்...


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் சசி தரூர். இவர், அங்கு தம்பானூரில் உள்ல கந்தாரி அம்மன் கோயிலில் இன்று எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பதற்காக வந்தார். அப்போது துலாபாரத் தராசின் ஒரு பக்கத்தில் வாழைப்பழங்களும் மறுபக்கம் அவரும் உட்கார்ந்தனர். அப்போது அவர் அமர்ந்திருந்த தராசு அறுந்து விழுந்தது. இதில் சசிதரூரின் தலையின் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது காலிலும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்...

வடநாட்டரை தமிழகத்தில் பணியமர்த்த பாஜக வின் சதி...


கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி...


கோயில் நகரமான பழனிக்கு தென்மேற்கே உள்ள பொருந்தல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வின்போது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சவஅடக்கம் செய்யும் தாழிகள்  கண்டுடெடுக்கப் பட்டுள்ளன.

இந்த அகழ்வாயினால், தமிழ் பிராமி எழுத்தின் காலம் எதுவாக இருக்கலாம்  என்பது பற்றிய ஆர்வம் தரும் சில  உண்மைகள் வெளி வந்துள்ளன. புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் முனைவர் கே.ராஜன் அவர்கள் மேற்பார்வையில் இந்த அகழாய்வு 2009, 2010 ஆம் ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்டது.

கண் டெடுக்கப்பட்டுள்ள இந்த சமஅடக்கம் செய்யப்பட்ட  தாழிகள் பல அரிய பொருள்களைத் தந்துள்ளன. இரண்டு கிலோ நெல் உள்ளே வைக்கப்பட்டிருந்த நான்கு கால் கொண்ட ஜாடி ஒன்றும், வா-அய்-ரா என்ற தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு மோதிர தாங்கிகள் ஆகியவை இதில் அடக்கம். அமெரிக்காவின் பிடா பகுத் தாய்வு நிறுவனத்தால் இந்த நெல் கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என அக்சலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி   முறையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த சவஅடக்கம் செய்யப்பட்ட தாழியில் இருந்த மொத்த பொருள்களும் இந்தத் தாழி புதைக்கப்பட்டபோது ஒரே முறை யில் வைத்ததாகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அந்த நெல்லிக் காலமும், தாழியில் காணப்பட்ட தமிழ் பிராமி எழுத் துகளின் காலமும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதை ஊகித்தறிய முடிகிறது. அந்தத் தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் சொந்தக்காரரின் பெயராக வா-அய்-ரா என்ற அந்த தமிழ் பிராமி எழுத்துகள் இருக்கக்கூடும்.

திருநெல்வேலி நகரத்துக்குக் கிழக்கே 24 கி.மீ. தொலைவில் உள்ள ஆதிச்ச நல்லூரில்  கண்டு பிடிக்கப்பட்ட பெருங் கற்காலத்தைச் சேர்ந்த  இடுகாட்டில் நெல்லும் உமியும் கண்டெடுக்கப்பட்டன.  அங்கு அகழாய்வை மேற்கொள்ள  100 ஆண்டுகள் கழித்து 2004 பிப்ரவரியில் இந்திய அகழ்வாய்வுத் துறை பரிந் துரைத்தது. அதன்பின் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் 157 தாழிகள் கண்டெ டுக்கப்பட்டன. எலும்புகள் வைக்கப்பட் டிருந்த பெரிய தாழிகளின் உள்ளே வைக்கப்பட்ட சிறிய மண்பானைகளில் நெல்லும் உமியும் வைக்கப்பட்டிருந்தன.

ஒரு உயரமான கம்பீரமான பெண்நின்று கொண்டிருப்பது போன்றதும், அவர் அருகில் வளர்ந்து நிற்கும் நெற்கற்றை வைக்கப்பட்டிருந்தது போன்றதுமான ஓவியம் வரையப்பட்ட மண்பாண்டத்தின் உடைந்த துண்டுகள் ஒரு பெரிய தாழியில் உள்ளே வைக்கப் பட்டிருந்தன. மற்றொரு தாழியினுள் எழுதப்பட்ட ஒரு துண்டு காணப்பட்டது. அது தமிழ் பிராமி எழுத்தின் ஒரு கூறாக இருக்கலாம் என்று பழங்கால எழுத்தாய்வாளர் ஒருவர் கூறினார். கா-ரி-அய-ர-வா(நா)-டா என்ற ஏழு எழுத்துக்கள் அதில் காணப்பட்டன. இந்த வழக்கிலும், இந்த எழுத்துகள் அந்த தாழியில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளின் உரிமையாளரின் பெயராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

பொருந்தை அகழாய்வில், தாழியில் வைக்கப்பட்டு இருந்த நெல்லின் காலத்துடன் தொடர்புபடுத்தி அதில் காணப்பட்ட எழுத்துக்களின் காலத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது,  அந்த எழுத்து கி.மு.490 காலத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழாய் வில், ‘Preliminary thermo-luminescence  dating’ முறையில் தாழிகளில் காணப்பட்ட பானைகள் கி.மு. 500 காலத்தைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுக் குழு வந்தது. (தி இந்து 17.2.2005) அந்தத் தாழி யில் இருந்த பொருள்களின் காலத்தை கார்பன் 14 முறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாலும், அது போன்றதொரு சோதனையின் முடிவு வெளியிடப்படவில்லை.  தமிழ் பிராமி எழுத்துகளில் இருந்த பதிவை களத்தில் உள்ள மற்ற அதிகாரம் பெற்ற கல்வியாளர்கள் பரிசீலனை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று கருதலாம்.

சிறிய இடுகாட்டுப் பானைகளில் காணப்பட்ட நெல் அங்கு காணப்பட்ட எழுத்துகளின் காலத்துடன் ஒரு தொடர்புடையது. எழுத்துகளின் காலம் பற்றிய ஒரு முடிவை மேற்கொள்வதற்காக நெல்லின் காலம் பற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்று ஏதுமில்லை. பொருந்தல் அகழாய் வின்போது எட்டப்பட்ட இறுதியான முடிவும், ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்பு களும்  கீழ்க்குறிப்பிடப்பட்டதை மெய்ப் பிக்கின்றன.

1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

2. கி.மு. 500 காலத்தில் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.

கே. ரவீந்திரன்
உதவி பொதுக் கணக்காய்வர் (ஓய்வு)
திருவனந்தபுரம்...

இந்தியா வை அமைதியாகவே இருக்க விட மாட்டீங்களா.. இந்து இஸ்லாமிய அமைப்புகளை வச்சு செஞ்ச உச்சநீதிமன்றம்...


https://youtu.be/-0w9df3bO2k

Subscribe The Channel For More News...

சுதந்திரம்...


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்.

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல.

சுதந்திரம் என்பது எதனிடமிருந்தோ அல்லது எதற்காகவோஅல்ல.

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல.

சுதந்திரம் என்பது கடந்து செல்வது. உடன்பாடு, எதிர்மமறை இரண்டையும் கடந்து செல்வது. சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை.

அங்கு உடன்பாடு எதிர்மறை எங்கிருக்கிறது.....?

எதனுடன் சம்பந்தப்படுவது....?

எதை எதிர்ப்பது........?

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல. எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டது தான்.

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......?

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர.

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்.

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு முடிவு இல்லை.

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல.

அறிதல் மட்டுமே சுதந்திரம்...

திமுக ஸ்டாலினை கிழி கிழி என கிழித்து தொங்க விட்ட பாமக அன்புமணி இராமதாஸ்...


https://youtu.be/k0vFx9RPYTc

Please Subscribe The Channel For More News...

தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழகமே ஒரு நிமிடம்...


இதோ சாவின் மடியில் ஓர் கிராமம்...

 எதிர்காலத்தை முழுவதுமாய் தொலைத்து நிற்கிற குழந்தைகளை பாரீர்..

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் இருக்கிற கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.

போராட்ட நோக்கம் தங்களுக்கு கேன்சரையும், தோல் நோயையும், மலட்டுத் தன்மையையும் தரும் bio medical waste எரிப்பு ஆலையை இழுத்து மூட வேண்டும் என்பதுதான்.

ஓட்டுக்காக தமிழகமெங்கும் தெருத்தெருவாக அலையும் நம் அரசியல்வாதிகள் யாரும் அந்த கிராமத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறையை தாண்டி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது...

அந்த ஆலை ஏற்படுத்தும் கொடூரத்தின் சாட்சியாய் ஓர் இரண்டு வயது குழந்தையை அக்கிராம மக்கள் காட்டுகிறார்கள். குழந்தையின் உடல் முழுக்க தோல் உரிந்து பரிதாப நிலையில் தவிக்கிறது அந்த குழந்தை. "காலேஜ் கட்டப் போறோம் ன்னு சொல்லி ஏமாத்தி எங்க நிலத்தை பிடுங்கி இப்படி எங்கள் அழிக்கிறாங்களே" என கதறுகிறார் அக்குழந்தையின் தாத்தா..

ஊரில் உள்ள வீடுகள் தோறும் கேன்சர் நோயாளிகள் இருக்கிறார்கள்..

எனவே தங்கள் நிலத்தை மீட்க,பெரு நோய்களிடம் இருந்து தன் எதிர்கால தலைமுறையை காக்க... பெண்கள் களமிறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்... இந்த மகத்தான போராட்டத்தில் அவர்களோடு நாமும் இருப்போம்...

திண்டுக்கல்லில் பரபரப்பு.. மதிமுக வைகோ வை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள்...


 https://youtu.be/EL8EZPdT0wc

Subscribe The Channel For More News...

கத்தாழையை பத்தி தெரிஞ்ச்சிக்கலாமா?


இளமையா இருக்க ஆசையா?

‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம்.

குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.

‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..

கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.

கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.

என்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்...

சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.

தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.

கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.

வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.

கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.

இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.

மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.

தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...

திமுக, காங்கிரஸ்சின் இந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாண்டுகிட்டு தொங்கலாம்...


மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்ட 2 பேர் கைது...


செங்குன்றத்தை அடுத்த தீயம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சரண்குமார் (வயது 20), மணிகண்டன் என்ற மதி (19). நண்பர்களான இருவரும் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தங்களிடம் இருந்த கத்தியை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டு, கூச்சலிட்டபடி சென்றனர்.

இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தகவல் வந்தது. உடனடியாக அவர், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று சரண்குமார், மணிகண்டன் இருவரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள், ‘டிக்-டாக்’ செயலியில் வீடியோ எடுப்பதற்காக இதுபோல் கத்தியை தரையில் உரசி தீப்பொறி பறக்கவிட்டபடி சென்றதாக தெரிவித்தனர்.

இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நடந்து கொள்ளும் வாலிபர்களை பெற்றோர் கண்டிக்க வேண்டும் என மாதவரம் துணை கமிஷனர் ரவளிபிரியா அறிவுறுத்தினார்...

மோடியின் பலே திட்டம்... பெரும்பான்மை கிடைக்கலையா.. அமல்படுத்து பாஜக வின் பிளான் B...


https://youtu.be/zXQXas5yKu0

Subscribe The Channel For More News...

அலையின் தொடர்பு...


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அது போலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்து விட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும் பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

ஆங்கிலப் பத்திரிகை தகவல்.. தேர்தலுக்கு பின் திமுக பாஜக கூட்டணி உறுதி...


 https://youtu.be/PO-amPZumWs

Subscribe The Channel For More News...

எண்ணெய் பாக்கெட்டின் பின்புறம் உள்ள " ingredients " பாருங்கள்.. பாமாயில் - 80%.. சூரியகாந்தி எண்ணெய் - 20%...


ஆனால் முன்புறம் கவரில் இது சூரியகாந்தி எண்ணெய் என்று உள்ளது...

அதே போல் External use only (வெளி உபயோகத்திற்கு மட்டும்) என்று உள்ளது.

அப்படி என்றால் இது சமையல் எண்ணெய் இல்லை என்று தானே அர்த்தம்.

ஆனால் இதை சமையல் எண்ணெய் என்று விற்பனை செய்வதுதான் பெரிய கொடுமை.

பாமாயில் எனும் பெயரில் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலிய கழிவுகளும் எண்ணெயில் கலக்க இறக்குமதி செய்யப்படுவதையும் கவனத்தில் கொள்ளவும்.

மக்களும் பார்க்காமல் வாங்குறார்கள்.

அரசும் கேட்பாரற்று கிடக்கிறது.

என் மக்கள்.. கடல் மலை மேகம் தான் எங்கள் கூட்டம்...

அதிர்ச்சியில் ஸ்டாலின்.. முக்கிய துடுப்பு சீட்டை கையில் எடுத்த இபிஎஸ், ஓபிஎஸ்.. திமுக பின்னடைவு...


https://youtu.be/k1GTDhSfRGs

Subscribe The Channel For More News...

தமிழா விழித்தெழு...


யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுஉடமை சிந்தனை மலர்ந்த இந்த மண்ணின் மைந்தர்கள் மறைக்கபட்டும், மறக்கப்பட்டும் வரலாற்றிலிருந்து தொலைகபட்டும் வருகின்றனர்..

உலகிற்கே வானியல் அறிவியலையும் , வள்ளுவத்தையும், நாகரிகத்தையும் தந்தவர்கள் இன பற்று நீங்கி சாதியால் மதத்தால் பிளவு பட்டு கிடப்பது யாரால்?

பிராமணியத்தை எதிர்ப்பதாக கூறிக் கொண்டு திராவிடத்தை திணித்துவிட்டு தமிழினத்தின் உடமைகளையும் உரிமைகளையும் தமக்குள் பங்கு போட்டு கொண்டவர்கள் தமிழர் அல்லாதவர்களே...

இனி தான் தொடங்கப் போகுது இந்த காளி வாழ்க்கை.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பஞ்ச்...


https://youtu.be/erRJjFIxy-A

Subscribe The Channel For More News...

உங்களை நம்புங்கள்.. நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே     இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.  அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொள்ளாதிர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

உங்களை நம்புங்கள்.. நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...

அதிமுக கட்டுப்பாட்டில் சாதிக் பாட்ஷா மனைவி.. தேர்தலுக்கு முதல் நாள் வைக்கப் போகும் அணுகுண்டு...


https://youtu.be/_C595_VB6Bo

Subscribe The Channel For More News...

ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல்...


ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டு பிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர். அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர். அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது...

தியானம் : நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க இந்த காணொளியை முழுமையாய் கேளுங்கள்...


https://youtu.be/GmVrsufuOB0

Please Subscribe The Channel For More Tips...

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்...


விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்..

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்..

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக் குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்..

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்..

சிந்திப்போம் தமிழர்களே...

தமிழால் ஒன்றுபடுவோம்..
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்..

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்...

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்..

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்..

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்...

பாஜக என்றுமே கார்ப்ரேட் கைகூலி தான்.. தமிழினத்திற்கு எதிரானதே...


சேலம் உருக்காலை தனியார்மயமாக்கல்னு இன்னும் எவ்வளவோ இருக்கு...

ஆனா இந்த முட்டாள் மக்கள் வாழ்வாதாரத்த நினைக்காம தலைவன் பின்னாடியே ஓடுனா ஒருநாள் அழிவு நிச்சயம்...

1881 வரை இல்லை மெரினா கடற்கரை-நம்ப முடிகிறதா...


உலகமக்கள் அனைவருக்கும் சென்னை என்றவுடன் நினைவிற்கு வருவது மெரினா தான்.சென்ற சனவரிக்கு 2017 முன்னர் எப்படியோ தெரியவில்லை! ஆனால் சனவரியில் நடந்த ஏறுதழுவலுக்கான போராட்டத்தின் பிறகு மெரினா என்றால் அறிந்திறாத உலக வாசிகள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம்.

ஆம். மெரினா என்பது இயற்கை நமக்கு தந்த சூழல் என்று கூறுவதைவிட நம் இளைய சமுதாயம் நமக்கு தந்த மன நிறைவை முன்னிறுத்திய ஒரு வரலாற்றுச் சின்னமாகவே தோன்றுகிறது.

இந்த மெரினா என்று பெயர் சூட்டப்பட்ட ஆசியாவின் இரண்டாவது நீளமான அழகான கடற்கரை 1880ம் ஆண்டுகளில் இருந்திருக்கவில்லை என்றால் நம்புவீர்களா.

நீங்கள் நம்புவதற்கான சான்றுகள் இதோ படியுங்கள்...

மெரினா கடற்கரை 1881 ம் ஆண்டு வரை இல்லை, அதற்கு முன் இது எல்லா கடற்கரைகளை போலவே இருந்துள்ளது. அதாவது சென்னை முதல் இராமேஸ்வரம் வரை கடற்கரை இருந்தாலும் சுற்றுலா தளமாக மக்கள் வந்து போக ஏதுவான இடமாக ஒரு சில கடற்கரைகளே உள்ளது அல்லவா! அப்படியே மெரினாவும் வெறும் கடலும் கடல் சார்ந்த காடுகளாகவும் மட்டும், 1881 வரை இருந்துள்ளது. ஆனால் சுமார் 150 ஆண்டுகளாக மெரினா கடற்கரை ஒட்டியுள்ள துறைமுகம் இருந்துள்ளது.

இன்று நாம் காணும் மெரினா என்கிற 13.கி.மீ. நீண்ட நெடும் கடற்கரை உருவாக காரணமாக இருந்தவர் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 1881ல் மதராசு கவர்னராக அதிகாரத்தில் இருந்த சர்.மவுண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் கிரான் டஃப். இந்த கடற்கரைக்கு மெரினா என்ற பெயரை சூடியவரும் இவர் தான்.

வெறும் கடலும் காடுமாக இருந்த மெரினா கடற்கரை 13கி.மீ. நீண்டு விரிந்து கொள்ள தேவைப்பட்ட காலம் வெறும் ஒரு ஆண்டு தான். காடுகளை திருத்தி, மணல்திட்டுகளை சமன் செய்து, மணலை சலித்து குழிகளை நிரப்பி ஒரு வருட காலம் கடின உழைப்பால் உருவானது தான் இந்த மெரினா கடற்கரை. இதே மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர்கள் சிலை அமைந்தது ஒரு வரலாற்று பொருத்தம் என்றே எண்ண வைக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரியில் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங் வெறும் செங்கல் மணல் மட்டும் இல்லை எங்களோட இரத்தம் கூட சேர்ந்திருக்குடா என்ற பாடப்பட்டு இருக்கும். இனி அந்த வரிகளில் நாம் மெரினா கடற்கரையும் எங்கள் முன்னோர்களின் இரத்தத்தில் தான் உருவானது என்று தான் சொல்ல வேண்டும்...

திமுக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த லட்சணம் எங்களுக்கு தெரியும்.. ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி...


https://youtu.be/GygPEhRpkFU

Subscribe The Channel For More News...

தேரையர் கூறும் வைகைநதியின் சிறப்பு...


தமிழ் மரபின் தொன்மையான அடையாளங்களில் வைகை நதிக்கு சிறப்பிடம் உண்டு.

தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பொய்யா குலக்கொடியாக இருந்தவள் வைகை நதி என்றால் மிகையில்லை.

வைகையை கடலில் புகாத நதி  என்பார்கள்.

இதனை புகழேந்தி புலவரின் பழந்தமிழ் பாடல் ஒன்றும் உறுதி செய்கிறது.

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை எனும் பகுதியில் வைகை நதி உருவாகி வனத்தினூடே இறங்கி வருகிறது.

வரும் வழியில் மேல் மணலாறு, இரவங்கலாறு, மூங்கிலாறு, கலிக்கவையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு என்கிற தேனியாறு உட்பட மேலும் சில சிற்றோடைகள் வைகை நதியில் கலக்கின்றன.

இவை தவிர பழனி மலைக்கு மேற்கே உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன.

இதுவரை மலைப்பகுதியில் பயணிக்கும் வைகைநதி சமவெளியில் இறங்குமிடத்தே அதனுடன் மஞ்சளாறு, மருதா நதி  போன்ற ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.

சமவெளியில் மதுரைக்கு அருகே சாத்தையாறு என்கிற ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகை நதியில் கலக்கின்றன.

இத்தனை நதிகளின் சங்கமமான வைகை பொங்கிப் பெருகி பாண்டியநாட்டின் வளத்திற்கும் செழிப்பிற்கும் காரணமாய் அமைந்திருந்தது.

பாண்டிய மன்னர்களின் சிறப்பான நீர்மேலாண்மையின் காரணமாக நதிவெள்ளத்தை வீணாக்கிடாமல் முறையாக எல்லா பகுதிகளுக்கு பிரித்து ஏரிகள், குளங்கள், ஊருணிகள் என நிரம்பச் செய்யப்பட்டன.

இதன் காரணமாகவே வைகை கடல் புகா நதியாயிற்று.

வைகையாற்றின் மொத்த நீளம் 258 கிலோமீட்டர். இதில் பெரும்பகுதி மலையிலும், வனப்பகுதிகளிலும் பயணித்து வருகிறது.

இதனால் வைகை நீரில் மூலிகை குணங்கள் நிறைந்திருந்தன. இதனை தேரையரின் ஒரு பாடலும் உறுதி செய்கிறது.

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் உள்ள ஒரு பாடல் வைகை நதியின் சிறப்பினை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டோடுமெஉச்
செய்கைதவிக் குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு
தாகநடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும்
ஏகுமிந்த வையம் விடுத்தே.

வைகை நதியின் நீரானது வாதநீர், குஷ்டம், சோபை, கரப்பான், உடல் எரிவு, தாகம், நடுக்குவாதம், தாது நஷ்டங்கள் நீங்குவதுடன் சில வைகையான விஷ முறிவிற்க்கும் பயன்படும் என்கிறார் தேரையர்.

இத்தனை சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்த வைகை நதி இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் ஒரு நதியாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கது...

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய விடாமல் மக்கள் வரட்டியடிப்பு...


https://youtu.be/hg0LIK8g9R8

Subscribe The Channel For More News...

நோயறிதலும், சோதிடமும்...


எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அதன் அடிப்படை நோயறிதல் (diagnosis) ஆகும்.

நோயின் தன்மை, அதன் தீவிரம் போன்றவைகளை அறிந்தால் மட்டுமே முறையான சிகிச்சை என்பது சாத்தியமாகும்.

ஒவ்வொரு வகை மருத்துவமும் தனக்கே உரித்தான சில பிரத்யேக நோயறியும் முறைகளை கடைபிடிக்கிறது.

இவற்றில் எது சிறந்தது, எது சரியானது என்பதெல்லாம் விவாதங்களுக்கு உரியது. இந்தப் பதிவு அதைப் பற்றியதுமில்லை.

சித்த மருத்துவத்தில் மனித உடலானது வாத, பித்த, சிலேத்தும என மூன்று வகையாக கூறப்படுகிறது.

வாத, பித்த, சிலேத்தும சமநிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது அவை தொடர்பான நோய்கள் தலையெடுக்கிறது.

சித்த மருத்துவத்தில் வாத நோய்கள் என என்பதும், பித்த நோய்களென நாற்பதும், சிலேத்தும நோய்கள் என தொண்ணூறும் கூறப்பட்டிருக்கின்றன.

சித்த மருத்துவத்தில் நோயறிய சோதிடத்தையும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திருக்காத செய்தி.

அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய புலிப்பாணி வைத்திய காவியம் என்னும் நூலில் காணக்கிடைக்கும் ஒரு நோயறியும் முறை பற்றியதே இந்தப் பதிவு.

பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர்தனுங் குருசனியும் வாதநாடி
சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்
சிறப்பான பாம்புகளும் பித்தநாடி
நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும்
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருட கடாட்சத்தாலே
விவரமெலாம் புலிப்பாணி விளம்பக்கேளு.

- புலிப்பாணி.

ஒருவருடைய ஜாதகத்தை ஆராயும் போதே ஜாதகனுக்கு வரப்போகிற அல்லது வந்திருக்கின்ற நோயைப் பற்றி தெளிவாக அறியலாம் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.

புதன், குரு மற்றும் சனி 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் வாத நோய் பீடிக்கும் என்றும், சூரியன், செவ்வாய், 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் பித்த நோய் பீடிக்கும் என்றும், 6-ஆம் வீட்டில் இராகு, கேது நின்றாலும் பித்த நாடி நோய்ப் பாதிக்குமாம்.

சந்திரன், சுக்கிரன் 6-ஆம் வீட்டு அதிபதியானால் சிலேத்தும நோய் உண்டாகுமாம்.

மேலும், 6-ஆம் வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் நின்று குரு பார்வை இன்றி இருப்பின் நோய் தாக்கம் (6-ஆம் வீட்டில் அதிபதியின் நாடியைப் பொறுத்து) அந்த நாடியை பொறுத்து அதிகரித்துக் காணப்படும் என்கிறார்.

வாதநாடி: குரு, புதன், சனி
பித்த நாடி: சூரியன், செவ்வாய், இராகு, கேது
சிலேத்தும நாடி: சந்திரன், சுக்கிரன்

இரத்த அழுத்தம், இருதய நோய், நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு போன்றவை வாத நோய்கள்.

சீரணம் தொடர்பான பிரச்சினைகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் பித்த நோய்கள்.

மூச்சுவிடுதல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை சிலோத்தும நோய்கள்...

ஆலந்தூரை அதிர வைத்த தேர்தல் பிரச்சாரம்.. திமுக வுக்கு ஸ்டாலின் கையாலே முடிவு...


https://youtu.be/Ha0d0x9qqfo

Subscribe The Channel For More News...

ஓகக் கலை (யோகா) தமிழர்களின் கலை...


தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்... தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை அறிவோம்...

ஓகம் (யோகம்).
ஓகக் (யோக) கலை.
ஓக இருக்கை (யோகாசனம்).

5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில் ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

ஓகம் என்ற சொல் தமிழ்ச் சொல் ஆகும்.

ஓகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக்கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக்கலை, நமது தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரச் சொத்து என்று நிறுவுகிறார் அசித்தர்

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாக கையகப்படுத்திக் கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக் கொண்டது.

ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

ஓக வழிபாடு...

உலகு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும். ஒன்றித்தல் – ஒன்றுதல், ஒருக்குதல் எனபதுதான் அதன் கருத்து மூலம்.

உகு > ஒகு > ஒக்கு.
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல். ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.

உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.

ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு > யோகு எனவும் சொல்லப்படும். வடவர் நூள்களில் இந்த செந்தமிழ்ச் சொல்லை யோகம் > யோகா எனத் திரித்துக் கூறுவர்.

ஓகப்பயிற்சியை இருந்து செய்யும் இருப்பு நிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை, ஆதனம் (அ) ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை ஓகாசனம் (யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வுமுறைகளைக் கொண்டது. ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க யோகம் எனப்படும்.

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.

அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள்.

தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர். ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர்.

இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம். இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்...

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்...

1. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE
4. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் – PLANTS
6. தாமரை இருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / – பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE
விலங்கு – CREATURES
நீர் உயிரிகள் – AQUATICS
12. தவளை இருக்கை – பெக்காசனம் – FROG POSTURE
13. மீன் இருக்கை – மச்சாசனம் – FISH POSTURE
14. சுறவம் இருக்கை – மகராசனம் – SHARK POSTURE
15. முதலை இருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE
17. ஆமை இருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன – REPTILES
19. தேள் இருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE
நடப்பன – VERTEBRATE
21. ஆமுகவாய் இருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE
22. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE
23. பூனை இருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை – அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE
27. அரிமா இருக்கை – சிம்மாசனம் – LION POSTURE
28. மிடுக்கான குதிரை இருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29. முயல் இருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE
30. நரி இருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE
பறப்பன – AVES & INSECTS
31. வெட்டுக்கிளி இருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE
32. அரை வெட்டுக்கிளி இருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE
34. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE
35. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE
37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன் இருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE
39. சேவல் இருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE
நடனம் – DANCE
42. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA
43. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE
1முத்திரை – GESTURE
46. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE
47. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE
48. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE
கருவிகள் – TOOLS
51. நாற்காலி இருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE
52. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE
53. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE
54. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE
55. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE
56. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE
57. படகிருக்கை / நாவாய் இருக்கை – நவாசனம் – BOAT POSTURE
58. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE
59. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE
தொழில் – ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE
62. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE
64. அம்மி அரைக்கும் இருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / – சானுசீராசனம் – HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் – ORGANS OF HUMAN BODY
68. இணை காலடி இருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE
71. விலாப்பக்க கோண இருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE
73. மழலை இருக்கை – பாலாசனம் – CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று அமர் இருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி இருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை – பீடாசனம் – STAGE POSTURE
85. பகுதலை இருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED
86. தலை இருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE
தூய்மை – CLEANSING
87. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் – ORDER OF BREATH
91. தலை தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH
93. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING
94. நீர்த் தூய்மை – சலநேதி – WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE
96. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி – பிராமரி – HONEY BEE HISSING
99. கண் தூய்மை – திராடகா – EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH
101. உள் மூச்சு – அனுலோமம் – INHALING
102. வெளி மூச்சு – விலோமம் – EXHALING
103. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX
நிறைவு நிலை – PACIFICATION
104. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE
105. அமைதி இருக்கை – சவாசனம், – LYING RELAX POSTURE...