22/08/2017
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - திமுக ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை...
தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் பெருபான்மையை உடனடியாக நியமிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டும்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து ஆளுகின்ற அரசை கலைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். எனவே ஆளுநர் வித்தியாசாகர ராவ் உடனடியாக சட்டப்பேரவை கூட்டுவதற்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், ஊழல் அணிகளை ஆட்சியில் அமர பிரதமர் மோடி துணை புரிந்துள்ளார். இவர் எப்படி நாட்டின் ஊழலை ஒழிக்க முயற்சி செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்...
அடுத்து கருணாநிதியை சந்திக்கிறார் வைகோ நாயூடு.. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு...
தமிழக அரசியல் தற்போது மீண்டும் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்தன. ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். அமைச்சரவையில் மா.பா பாண்டியராஜன் மீண்டும் பொறுப்பேற்று கொண்டார்.
சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவாளர்கள் இன்று கவர்னரை சந்திக்கின்றனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலளார் வைகோ இன்று கருணாநிதியை சந்திக்க உள்ளார். இன்று மாலை கோபாலபுரம் இல்லத்திற்கு செல்லும் அவர் கருணாநிதியிடம் நலம் விசாரிக்கிறார். அவருடன் திருப்பூர் துரைசாமி செல்கிறார்.
அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் வைகோவும் கருணாநிதியை சந்திப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரு இணைப்புக்காக அச்சாரமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு அருள்நிதி திருமண விழாவில்தான் கருணாநிதியை வைகோ சந்தித்து இருந்தார். சுமார் 3 வருடங்களுக்கு பிறகு கருணாநிதியை வைகோ சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது...
இன்று (22.08.2017) நடைபெறவிருந்த உச்ச நீதிமன்ற வழக்குப் பட்டியலிலிருந்து காரணம் ஏதுமின்றி காவிரி வழக்கு நீக்கம்...
இன்று (22.08.2017), உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்றம் 2இல், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காவிரி வழக்கு, திடீரென்று காரணம் ஏதுமின்றி விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு - தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்காமல் விலை போய்விட்ட நிலையில், காவிரி வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கோரி, காவிரி உரிமை மீட்புக் குழு உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்பி வரும் நிலையில், காவிரி வழக்கு இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி வழக்கு விசாரணையை உடனே நிறுத்தக் கோரி, கீழ்க்காணும் பக்கத்தின் வழியே ஆர்வலர்களும், உணர்வாளர்களும் உச்ச நீதிமன்றத்துக்கு தொடர்ந்து வேண்டுகொள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.
https://www.change.org/p/supreme-court-of-india-stop-temporarily-all-proceedings-on-the-cases-related-to-cauvery-river-water-disputes
தமிழ் மக்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு, பிறரையும் கையெழுத்திட வலியுறுத்திட வலியுறுத்தி, நம் உணர்வை உச்ச நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்த இவ்வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் என அன்புரிமையுடன் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்..
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு...
எவ்வளவு பெரிய சாதனை சென்னையில் மறைக்கப்பட்டு உள்ளது...
சென்னை மாநகராட்சியின் இலட்சினை சேர சோழ பாண்டியர்களின் சின்னங்கள் ஆகும். இதுவே மாநகராட்சியின் கொடியும் ஆகும்...
சென்னை மாநகராட்சிக்கு ஒரு கொடி இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அந்த கொடியில் தமிழ் மூவேந்தர்களின் சின்னங்கள் மீன், புலி, மற்றும் வில் அம்பும் உள்ளது.
மேலும் தமிழர்கள் கடல் கடந்து வாணிகம் செய்த கடலோடிகள் என்பதை குறிப்பிட கடலும் கப்பலும் உள்ளது.
இந்த இலட்சினையை உருவாக்கியது சென்னையை மீட்ட மா.பொ. சி அவர்கள் தான்.
ஆனால் சென்னை மாநகராட்சியின் கொடியை, இலட்சினையை சென்னை நகரில் ரிப்பன் மாளிகை தவிர்த்து வேறு எங்கும் காண முடியாது.
சென்னை நகரம் முழுவதும் பறக்க வேண்டிய இக்கொடி மாநகரில் வேறு எங்கும் பறக்கவிடப்படவில்லை.
குறைந்த பட்சம் சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இந்த இலட்சினை இடம் பெற்று இருந்தால் கூட அது தமிழரின் பெருமையை உலகிற்கு பறை சாற்றி இருக்கும்.
இணையத்தில் கூட இந்த கொடி அல்லது இலட்சினை தெளிவான படமாக வெளியிடப்படவில்லை.
இது தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு மறைக்கும் செயலாகும்.
சென்னை நாளை கொண்டாடும் இவ்வேளையில் இனியாவது தமிழர்கள் இந்த மூவேந்தர் இலட்சினையை பரவலாக்கும் வேலையை செய்வோம்.
சென்னை மாநகர கொடி சென்னையின் மையப்பகுதியில் பறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம்..
அதுவே சென்னையை மீட்ட மா.பொ. சி ஐயாவிற்கு தமிழர்கள் செய்யும் மரியாதை ஆகும்..
இணையத்தில் இந்த இலட்சியைனை தெளிவான படமாக வெளியிட தொழில் நுட்ப தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்...
ஆவிகள் உலகம்...
ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர்.
ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர்.
இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர்.
இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது.
கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே..
வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே..
இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர்.
ஆவிகள் என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்.
ஆவிகள் - மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.
ஆவிகள் உலகம் - கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.
அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது.
ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.
ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பிடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர்.
இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்...
புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்குகள்...
நாகரிக வாழ்வின் புதிய அடையாளமாகி வருகிறது டீ பேக்குகள்..
தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.
இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று உணவியல் நிபுணர் சாந்தி காவேரியிடம் கேட்டோம்.
டீ பேக்குகள்(Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்(NIOSH) தெரிவித்துள்ளது.
இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரக
பிரச்னைகள் உண்டாகிறது.
இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது’’ என்கிறார் சாந்தி காவேரி. டீ பேக் தயாரிப்பு, அதில் உள்ள வேதிப்பொருட்கள் பற்றி முதுகலை வேதியியல் ஆசிரியர் ரவி சுந்தரபாரதியிடம் கேட்டோம்.
டீ பேக்குகளை காட்டன் துணிகளில் தயார் செய்யும் பட்சத்தில் அதனால் பாதிப்பில்லை. ஆனால், தற்போது டீ பேக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்
களுக்கு இடையே உள்ள போட்டி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்திச் செலவைக் குறைத்து விற்பனையை அதிகரிப்பதற்காக செயற்கை தொகுப்பு துணிகளால்(Synthetic Fabrics) செய்யப்பட்ட டீ பேக்குகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
Polyethylene Terephthalate (PET) என்ற வேதிப்பொருளை டீபேக்கு கள் உறுதியாக, பளபளப்பாக இருப்பதற்காக சேர்க்கிறார்கள். இந்த டீபேக்குகளை, டீ தயார் செய்யும் போது சூடான நீர் அல்லது பாலில் மூழ்கும்படி வைக்கும்போது PET வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது ஒரு புற்று நோய் காரணியாக உள்ளது. சாதாரண தேயிலை காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மையுடையது. இப்படி ஈரமாவதால் அந்த தேயிலையில் பூஞ்சை, காளான் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.
இதைத் தடுப்பதற்காக Synthetic fluoride மற்றும் பூச்சிக்கொல்லி களை டீ பேக்குகளில் சேர்க்கின்றனர். இவை புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளாக உள்ளது. பார்க்க அழகாக, பயன்படுத்த சுலபமாக இருப்பதாலோ, கண்ணைக் கவரும் விளம்பரங்களைப் பார்த்தோ இதுபோன்ற பொருட்களை வாங்கக்கூடாது. எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் ரவிசுந்தரபாரதி...
முன்னாள் முதல்வர் செயலலிதா தொடுத்த வழக்கிற்கு முரணாக எடப்பாடி பழனிச்சாமி மேக்கேத்தாட்டு அணை பற்றி சமரசம் பேச ஒப்புதல்...
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை..
காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு, எடப்பாடி பழனிச்சாமி அரசு மறைமுகமாக ஒப்புதல் கொடுத்துவிட்டது என்பதற்கான வெளிப்பாடே, கடந்த 17.08.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தந்துவிட்டால் கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்டுவதைத் தமிழ்நாடு அரசு எதிர்க்காது என்று உறுதி கூறியதாகும் என்று அன்று மாலையே காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நான் அறிக்கை கொடுத்தேன். அன்று அது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பார்க்கப்பட்டது.
மறுநாள் (18.08.2017) முக்கிய நாளேடுகளில் என்னுடைய அறிக்கை வெளிவந்தது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசின் இந்தத் துரோகச் செயலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டன. இவற்றுக்கெல்லாம் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மறுப்பு அறிக்கையோ அல்லது விளக்க அறிக்கையோ தரவில்லை.
திருவாரூர் நகருக்கு அரசு விழாவில் கலந்து கொள்ள 19.08.2017 அன்று வந்த முதலமைச்சர் பழனிச்சாமிக்கு, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தினோம். அதன் பிறகு திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்து, மேக்கேத்தாட்டு அணை தொடர்பாக எழுதப்பட்ட அறிக்கை ஒன்றைப் படித்தார். அது ஏடுகளில் வந்துள்ளது.
அதன் முக்கியமான பகுதி வருமாறு...
தமிழகத்துக்கு நீர் தருவதற்கு ஏற்ற இடத்தில் ஒரு அணையைக் கட்டி அதை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் தீபக் மிஸ்ரா, இது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது, இது குறித்து தனியே வாதிடப்பட வேண்டும் என தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் பதில் அளித்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மேக்கேத்தாட்டில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லையெனத் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவையாகும்.
புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு, அதன் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கும்போது தமிழகத்தின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காதவாறு வலுவான வாதங்கள் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படும்.
முதல்வரின் மேற்படி அறிக்கையில் புதிய அணை தொடர்பாக நீதிபதி கருத்து வழங்கியபோது, அதை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் மறுத்தார் என்ற செய்தியில்லை! அந்த வாதத்தை தனியே வைத்துக் கொள்வோம் என்றுதான் கூறியிருக்கிறார்.
அடுத்து, முதலமைச்சர் தன் கூற்றாகக் கூறும்போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்போது, தமிழ்நாட்டின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் செல்வி செயலலிதா அவர்கள், மேக்கேத்தாட்டு மற்றும் இராசிமணல் பகுதிகளில் கர்நாடகம் புதிதாக அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அம்மா ஆட்சி நடத்துவதாக மூச்சுக்கு மூச்சு முழங்கும் எடப்பாடியார், இந்த அறிக்கையில் மட்டும் “அம்மா” பெயரைத் தவிர்த்தது ஏன்? அம்மா போட்ட வழக்கின்படி நாங்கள் நடந்து கொள்வோம், மேக்கேத்தாட்டு அணையை எதிர்ப்போம் என்று நேரடியாக ஏன் முதலமைச்சர் கூறவில்லை? அங்கேதான் அவர் மறைப்பதற்கு பல உண்மைகள் இருக்கின்றன என்று விவரம் தெரிந்த மக்கள் ஐயுறுகிறார்கள்.
எடப்பாடியாரின் மேற்கண்ட அறிக்கை, மேக்கேத்தாட்டு அணை பற்றிய சாதக பாதகங்களை பேசப் போவதாக குறிப்பிடுகிறதே தவிர, அந்த அணை முயற்சியைத் தடுப்போம் என்று உறுதி கூறவில்லை. பாம்புக்குத் தலையைக் காட்டு, மீனுக்கு வாலைக் காட்டு. என்பது போல் எடப்பாடியாரின் அறிக்கை இருக்கிறது.
மத்திய அரசு மேக்கேத்தாட்டு அணை பற்றி கருத்து வைக்கும்போது, தமிழ்நாட்டு உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதம் செய்வோம் என்கிறார் முதல்வர்.
மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்திற்குத் தடை கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் செயலலிதா போட்ட வழக்கு பற்றி தங்கள் நிலைபாடு என்ன என்று முதலமைச்சர் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
ஏற்கெனவே நடுவண் அரசின் ஏற்பாட்டில் நடந்த ரகசியப் பேச்சில், மேக்கேத்தாட்டு அணைக்கு ஆதரவு தெரிவித்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார் என்ற தமிழ் மக்களின் ஐயத்தை மேலும் வலுப்படுத்தவதாகவும், அதற்கான அவரது ஒப்புதல் வாக்குமூலமாகவும் எடப்பாடியார் அறிக்கை இருக்கிறது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்...
உபி முசாபர்நகர் அருகில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் இஸ்லாமியர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். எங்கள் உயிரை காப்பாற்றிய இஸ்லாமியர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என சாமியார்கள் தெரிவித்து இருக்கிறார்கள்...
என்னுடைய தலை சீட்டின் முன்பகுதியில் அடித்து இரண்டடி தூக்கி வீசப்பட்டு கிடந்தேன். நான் கடுமையான வலியில் இருந்தேன். எல்லா திசையிலும் அழு குரலும், கூக்குரலும் கேட்டது. உண்மையாய் சொல்கிறேன். முஸ்லிம்கள் அந்த விபத்து பகுதிக்கு வந்து எங்களை அந்த ரயிலிலிருந்து மீட்காதிருந்திருந்தால் நாங்கள் மரணித்திருப்போம்.
- சாமியார் பகவான் தாஸ் மஹாராஜ்..
விபத்துக்குள்ளான உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சாமியார்களில் ஒருவர்...
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா....?
அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால், நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது...
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.
தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது. உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்...
மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என்ன?
இந்திய கடற்படையோ அல்லது கடலோர ரோந்து படையினரோ, ஏன் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறி வருகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ஒட்டுமொத்த பிரச்னையின் மையமாக இருக்கும் சர்ச்சைக்குரிய, இந்திய – இலங்கை அதிகாரிகளுக்கு இடையில், 2008ல் போடப்பட்ட ஒப்பந்தமே காரணம் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாதவரை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும்.
மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. படகுகளை பிடுங்குவது, அவற்றை உடைப்பது, வலைகளை அறுப்பது, மீனவர்களை தாக்குவது போன்ற காரியங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
தொடர்ந்து மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கான காரணமும், அதை தடுத்து நிறுத்த முடியாத அவலத்துக்கும் காரணம் என்ன என்பது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மீனவர்களின் தாக்குதலுக்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்தது தான் என்றும், அதை திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. 1974ல், இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையில் போடப்பட்ட ஒப்பந்தம் அது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தாலும் கூட, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்த ஒப்பந்தம் தான்.ராமநாதபுரம் மகாராஜாவுக்கு சொந்தமாக, இந்த கச்சத்தீவு இருந்ததற்கான அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் இருக்கின்றன.
தவிர, பூகோள அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாத முக்கிய இடம் கச்சத்தீவு. இப்படியிருந்தும், கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தது.
அந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்கு என, சில உரிமைகள் அளிக்கப்பட்டன. மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்துவதற்கு உரிமை அளிக்கப்பட்டது.
இது தவிர, கச்சத்தீவு அந்தோணியார் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வருவதற்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன. வலைகளை உலர்த்துவதற்கு உரிமை உள்ளது என்றாலே, அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கும் உரிமை உள்ளது என்பது தான் அர்த்தம்.
அந்த காலத்தில் நைலான் வலைகளை மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது மாறிவிட்டதால், வலைகளை உலர்த்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லாமல் போய் இருக்கலாம். அதுகூட, 34 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் தான் இருந்து வந்தது. அவ்வப்போது சிறிய அளவில் பிரச்னைகள் வருமே தவிர, பெரிய அளவில் எந்த சிக்கலும் எழாமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி நடைபெற்ற 2008ல், திடீரென ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையில், இந்த ஒப்பந்தம் போடவில்லை.
விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசு முனைப்பாக இருந்த சமயம் அது.
அப்போது இருநாட்டு அதிகாரிகள் கூடி ஆலோசித்து, அவர்கள் மட்டத்திலேயே போட்டுக் கொண்ட ஒப்பந்தம் அது. அந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சென்சிடிவ் பகுதிகள் எது எது என கண்டறிந்து, அப்பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என, இலங்கை தரப்பு அரசு அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்டது.
அப்பகுதிகளுக்குள் மீன்பிடிக்க வந்தால், நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு, இந்திய அதிகாரிகள் அப்படியே ஒப்புதல் அளித்தனர்.
அப்படி, இலங்கை அதிகாரிகள் கேட்ட கோரிக்கைகளுக்கு, இந்திய அரசு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் அது. அந்த ஒப்பந்தம் தான் இப்போதும் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தமிழக மீனவர்கள் மீறுகின்றனர் எனக் கூறி, இந்திய கடற்படையினரோ, கப்பல் ரோந்து படையினரோ பாதுகாப்பு தர முடியாத சூழ்நிலை உள்ளது.
நடைமுறையில் உள்ள உண்மை இது என்றாலும், இது பெரிய அளவில் வெளியில் தெரியாமல் உள்ளது.
இரு நாட்டு அரசுகள் கூட போடாமல், வெறும் இரு தரப்பு அதிகாரிகளே போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தத்தை காரணம் காட்டி, மீனவர்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகளோ, போராடும் பிற அமைப்புகளோ முன் வைப்பதில்லை.
இந்த ஒப்பந்தம் தான், தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு வழி வகுக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், பல காரணங்களுக்காக போடப்பட்டது அந்த ஒப்பந்தம்.
ஆனால், இப்போது புலிகள் அமைப்பே இங்கையில் இல்லை என்றாகிவிட்ட பிறகும், அந்த ஒப்பந்தம் ஏன் நீடிக்கிறது என்பது குறித்தும், அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் தீவிரமாக எழாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறினர்...
நெஞ்சை பதற வைத்த ஒரு புத்தகம்...
பாவையர் மலர் தீயில் தன் உயிரை உருக்கிக் கொண்ட முத்துக்குமார் நினைவாக என்று தொடங்குகிறது புத்தகம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையை மனசாட்சி கொண்ட பெரிய வி.ஐ.பி.க்கள் முதல் சாதாரண மக்கள் வரை குமுறலாக வெளியிட்ட கருத்துகளை அங்கு நடந்த கொடூரம் மறையாக புகைப்படங்களுடன் வேதனையுடன் தொகுத்து தந்துள்ளார் ஆசிரியர் ஊடகச்செம்மல் பவா சமத்துவன்.
தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கொஞ்சமாவது சொரணையுடன் நடந்து கொள்வோமானால் அது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி...
புத்தகம் கிடைக்கும் இடம்...
புதுயுகம்
72/40, ஓ.வி.எம்.தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600005.
91-044-28515051...
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன..?
திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.
இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.
பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.
அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.
ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..?
போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே..
இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..
1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது..
என்று அண்ணா அறிவித்து விட்டார்...
சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர்.
இந்தி திணிக்கப் படமாட்டாது என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்...
Subscribe to:
Posts (Atom)