இன்று (22.08.2017), உச்ச நீதிமன்றத்தின் நீதிமன்றம் 2இல், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த காவிரி வழக்கு, திடீரென்று காரணம் ஏதுமின்றி விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு - தமிழர்களின் உணர்வைப் பிரதிபலிக்காமல் விலை போய்விட்ட நிலையில், காவிரி வழக்கு விசாரணையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கோரி, காவிரி உரிமை மீட்புக் குழு உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை மின்னஞ்சல் அனுப்பி வரும் நிலையில், காவிரி வழக்கு இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காவிரி வழக்கு விசாரணையை உடனே நிறுத்தக் கோரி, கீழ்க்காணும் பக்கத்தின் வழியே ஆர்வலர்களும், உணர்வாளர்களும் உச்ச நீதிமன்றத்துக்கு தொடர்ந்து வேண்டுகொள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர்.
https://www.change.org/p/supreme-court-of-india-stop-temporarily-all-proceedings-on-the-cases-related-to-cauvery-river-water-disputes
தமிழ் மக்கள் அனைவரும் இதில் கையெழுத்திட்டு, பிறரையும் கையெழுத்திட வலியுறுத்திட வலியுறுத்தி, நம் உணர்வை உச்ச நீதிமன்றத்துக்கு வெளிப்படுத்த இவ்வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் என அன்புரிமையுடன் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்..
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.