31/08/2018

தமிழ்மொழி - தமிழ்மண் மீட்புப் போராளி மங்கலங்கிழார் நினைவு நாள் 31.8.1953...


1911ஆம் ஆண்டிற்கு முன்னர் வடவேங்கடம், திருக்காளத்தி உட்பட பல்வேறு பகுதிகள் தமிழ்நாட்டின் வடவெல்லையாக இருந்து வந்தது. அப்போது பிரித்தானிய அரசு நிர்வாக வசதிக்காக  புதிய மாவட்டங்களை உருவாக்கியது. 1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாளன்று வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தமிழர் பகுதிகளான திருத்தணிகை, புத்தூர், திருக்காளத்தி, சந்திரகிரி, சிற்றூர், பலமேனரி, புங்கனூர் ஆகிய வட்டங்களைப் பிரித்தும், கடப்பை மாவட்டத்தில் உள்ள தெலுங்கர் பகுதிகளான மதனப்பள்ளி, வாயல்பாடு ஆகிய இரண்டு வட்டங்களைப் பிரித்தும் புதிதாக சித்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் காரணமாக சிறுபான்மை இனத்தவராகிய தெலுங்கர்கள் பெரும்பான்மையாக மாற்றப்பட்டனர். பனகல் அரசர், பொல்லினி முனிசாமி நாயுடு போன்றோர் சென்னை மாகாண முதல்வராக இருந்த காரணத்தால் சித்தூர் மாவட்ட அதிகார மையங்களில் தெலுங்கர்களே ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பான்மை தமிழர்கள் மீது தெலுங்குமொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் தெலுங்கர் மாவட்டமென்று பொய்யான பரப்புரை செய்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

சித்தூர் மாவட்டத்தில் ஆந்திரர்கள் தந்த நெருக்கடி காரணமாக தமிழ்மொழி மீது தமிழர்களே பற்று கொள்ளாமல் தடுத்து நிறுத்துப்பட்டதோடு,  தமிழ்பாடசாலை கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக  ஆந்திரர்களின் தெலுங்கு தேசிய உணர்வு அங்குள்ள தமிழர்களை தெலுங்கு மொழியை பேச வைத்தது. அத்தகையச் சூழ்நிலையில்,  வளரும் தலைமுறை மாணாக்கர்களுக்கு தமிழ் மொழிக் கல்வியை அளித்து இலட்சக்கணக்கான தமிழர்களை தெலுங்கராக மாறிப் போகாமல் தடுத்து நிறுத்தினார்  ஒரு தமிழர். அவர் தான் 'மாத்தமிழர்'  மங்கலங்கிழார்.

வட ஆற்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்து ஒரு கல் தொலைவில் உள்ள புளியமங்கலம் எனும் சிற்றூரில் 1897ஆம் ஆண்டு ஐயாசாமி- பொன்னுரங்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஐயாசாமி அவ்வூரில் மணியம் (ஊர்த் தலைவர்) வேலை பார்த்து வந்தார். அவர் தம் மகனுக்கு குப்பன் என்று பெயரிட்ட போதிலும், மற்றவர் அவரை குப்புச்சாமி என்றே அழைத்து வந்தனர்.

குப்புச்சாமி தனது தொடக்கக்கல்வியை புளியமங்கலத்தில் கற்று வந்தார்.   
அவரின் தமக்கையாருக்கு குழந்தைப்பேறு இல்லாத நிலையில் பத்துவயது நிரம்பிய குப்புச்சாமியை வளர்க்க விரும்பினார். அவர் விரும்பிய படி குப்புச்சாமி தமக்கையார் வசித்த சென்னை புரசைவாக்கத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

1908இல் குப்புச்சாமி அங்குள்ள பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்ததோடு,  தேர்வுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்றார்.

இதைக் கண்டு இன்புற்ற அவரின் தமக்கையார் எதிர்காலத்தில் குப்புச்சாமி பெரிய வழக்கறிஞராக வரவேண்டும் என்று விருப்பப்பட்டார். அவரின் கனவோ நிறைவேறவில்லை.  கணவர் எதிர்பாராமல் இறந்துவிட, குடும்பம் வறுமையில் மூழ்கத் தொடங்கியது. இதன் காரணமாக குப்புச்சாமி படிப்பைக் கைவிட்டு தச்சுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.

1914இல் இளமையில் கல்வி கற்க முடியாத  நிலையை  எண்ணி வருந்திய  குப்புச்சாமிக்கு  இரவுப் பள்ளி  ஒன்றில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த இரவுப் பள்ளியை டி.என்.சேஷாசலம் ஐயர் என்பவர் கல்வி இடை நிற்றல் மாணவர்களுக்காக நடத்தி வந்தார். அப்பள்ளியில் குப்புச்சாமி சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  டி.என்.சேஷாசலம் ஐயர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; சிறந்த தமிழுணர்வாளர்;  ஆங்கிலம், தமிழ், வடமொழியில் புலமை மிக்கவர். இவரின் தமிழுணர்வும் குப்புச்சாமியின் தமிழார்வமும் இரவுப்பள்ளியில் ஒன்றாய்க் கலந்தது.

 தமிழ்மொழி மேம்பாட்டுக்காக ஐயர்  "கலாநிலையம்" எனும் இலக்கிய ஏட்டை நடத்தி வந்தார். அவர் அவ்வேட்டின் பொறுப்பு முழுவதையும்  குப்புச்சாமியிடம் ஒப்படைத்தார். அவ்வேடு தொடர்ந்து வெளிக்கொணர நிதி தேவைப்பட்டதால்
மாணவர்கள் மத்தியில் "கலாநிலையம்" பெயரிலே நாடகம் தயாரிக்கப்பட்டு சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டது.

 இந்நாடகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு " தமிழ் நாடகக் கலைத் தந்தை" சங்கர தாஸ் சுவாமிகள் பயிற்சியளித்தார்.  இந்த நாடகத்தில் பெண் வேடமிட்டு குப்புச்சாமி சிறப்பாக  நடித்தார். இவரின் நடிப்பைக் கண்டு பிரபல நாடக நடிகர் கிட்டப்பா வியந்து பாராட்டினார். நாடகம் மூலம் கலாநிலையப் பணிகள் பலரின் பாராட்டைப் பெற்றபோதிலும், நிதியுதவி  கிடைக்கப் பெறாததால் நின்று போனது.

இதற்கிடையில், 1922-இல்  தமது இருபத்தைந்தாம் வயதில் கமலாம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும்  தமிழ் மீதான ஈடுபாடு கூடியதே தவிர குறையவில்லை.
தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களை பிழையறக் கற்றுக் கொள்ளவும்,  இலக்கண, உரை விளக்க நூல்களில் சிறப்பெய்திடவும் விரும்பினார். அதன் பொருட்டு "இலக்கணப்புலி" என்று அறியப்பட்ட தமிழறிஞர்  கா.ரா.கோவிந்த சாமி முதலியார் என்பவரிடம் போய்ச் சேர்ந்தார்.  இவரோடு  தமிழறிஞர் சிந்தாமணி மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை என்பவரும் இணைந்து படித்து  வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தச்சுத் தொழிலாளி மிகுந்த ஆர்வத்தோடு இலக்கணம் கற்பதில் சிறந்து விளங்குவதைக் கண்டு வியப்புற்ற கா.ர. கோவிந்தசாமி முதலியார் அவர்கள் பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமனம் செய்யப் பரிந்துரைத்தார். அங்கு பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து வந்த குப்புச்சாமிக்கு இரத்த அழுத்த நோய் கூடி, பற்கள் கொட்டி விடவே ஆசிரியப் பணியை கைவிட்டார்.

இந்நிலையில், தந்தையார் இறந்து விடவே,  அவரின் உறவினர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி "மணியம்" வேலையை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று குப்புச்சாமியும் சென்னையிலிருந்து  தம் பிறந்த ஊரான புளிய மங்கலத்திற்கு இடம் பெயர்ந்தார்.

1934இல் ஊர்த்தலைவர் பொறுப்பை ஏற்று திறம்பட பணியாற்றியதால், அவ்வூர் மக்கள் "மங்கலங் கிழார்" என்று அழைக்கலாயினர். இப்பெயரே நாளடைவில் எல்லோரும் அழைக்கும் பொதுப் பெயராக நிலைத்து நின்றது.

மங்கலங்கிழார் தனக்கு கல்வி புகட்டிய டி.என். சேஷாசல ஐயர் வழியில் புளியங்குளத்தில் இரவுநேரப்பள்ளியைத் தொடங்கி தமிழ் கற்பிக்கும் பணியில்  ஈடுபட்டார்.  அப்போது இராணிப்பேட்டை சின்மயானந்தா அடிகளோடு தொடர்பு கிடைத்ததால் துறவு நிலைக்கு மாறினார். அதுமுதல்  வெண்மையான வேட்டியும், காவி ஜிப்பாவும், கதர் சால்வையும் அணியத் தொடங்கினார். அவரின் புறத் தோற்றம் மாறினாலும் உளத் தோற்றம் மாறவில்லை. சித்தூர் மாவட்டம் முழுவதும் தெலுங்கு மொழி ஆதிக்கத்தால் தமிழ்மொழி  அழியும் நிலைகண்டு அவரின் உள்ளம் குமுறியது. உடனடியாக அங்குள்ள  தமிழர்களுக்கு தமிழ் விழிப்புணர்ச்சியூட்டிட "அறநெறித் தமிழ்ச்சங்கம்" என்னும் அமைப்பை நிறுவினார்.

1939-இல் வளர்புரத்தில் முதல் அறநெறி தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அது படிப்படியாக விரிவடைந்து குருவராயப்பேட்டை, அம்மையார் குப்பம் , மின்னல், நரசிங்க புரம், கீழ்ப்புத்தூர், மேல் புத்தூர், நாராயணவனம், சத்திரவாடி, சிந்தலப்பட்டடை, பொதட்டூர் பேட்டை, அத்தி மாஞ்சேரிப் பேட்டை, புதுப்பேட்டை, சுரைக்காய்ப் பேட்டை, மத்தூர், மத்தேரி முதலிய 16 கிராமங்களுக்கு கிளை பரப்பியது.

மங்கலங்கிழார் முயற்சியால் மேற்கண்ட ஊர்களில் தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டு நான்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. அவைகள் ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என அழைக்கப்பட்டன. முதலிரண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலக்கியம் கற்கும்  மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினர்.

அறநெறிக் கழகம் மூலம் தமிழுணர்வு பெற்ற மாணவர்களைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஊரிலும் "மாணவர் மாநாடு" பெயரில் விழா நடத்தப்பட்டது.  அந்நிகழ்வில்  தமிழறிஞர்கள் தொ.ப.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் பங்கு பெற்று தமிழ் எழுச்சியூட்டினர்.

அது போல், தமிழ் தழைக்கப் பாடுபட்ட சமயச் சான்றோர்களான திருஞான சம்பந்தர், அப்பரடிகள், சுந்தரருக்கும்  "திருநாள்" பெயரில் விழா கொண்டாடப் பட்டது. அந்நிகழ்வுகளில் 'தமிழ்த்தென்றல்" திரு.வி.க., ச.சச்சிதானந்தம், " சைவப் பெரியார்" சச்சிதானந்தம் , தமிழ் அகராதி தந்த பாலூர் கண்ணப்ப முதலியார், முனைவர் மா.இராசமாணிக்கனார், தென்னிந்திய சீவரட்சகத் தலைவர் ஶ்ரீபால், மறைமலையடிகள் மகள் நீலாவதி அம்மையார் ஆகியோர் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தினர். பல்வேறு கூட்டங்களில்  பங்கேற்ற திரு.வி.க. மங்கலங் கிழாரை "வித்தியானந்தர்" என்றே விளிப்பது வழக்கம்.

பல்வேறு விழாக்கள் நடத்தி மங்கலங்கிழார் செய்த தமிழ்த்தொண்டிற்கு நல்ல பலன் கிடைத்தது. சித்தூர் பகுதியில் தமிழ் படித்த பல்லாயிரக்கான மாணவர்கள் உருவானார்கள்.  பலநூறு மாணவர்கள்  தமிழ்ப்புலவர் பட்டம் பெற்று ஆசியர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அடுத்த கட்டமாக திருத்தணிகையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், பொதட்டூரில் தமிழாசிரியர் பயிற்சிப் பள்ளி என்று மங்கலங்கிழாரின் தமிழ்ப்பணி விரிவடைந்தது.

மங்கலங் கிழாருக்கு தமிழ்ப்பணி ஒரு கண்ணென்றால், 'தமிழ்மண் மீட்புப் பணி' மறு கண்ணாகும்.

சித்தூர் மாவட்டத் தோற்றத்திற்கு முன்பு இருந்த மக்கள் தொகை  விவரம், வரைபடங்கள், கல்வெட்டு, இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றை சேகரித்தார். சித்தூர் குறித்து பல்வேறு செய்திகளை திரு.வி.க. மூலம் உறுதி செய்து கொண்டார். இதற்கிடையில், ம.பொ.சி.யின்  "தமிழ்முரசு" ஏடு தமிழ் மாகாண உரிமை  பற்றி எழுதி வந்ததையும் கண்ணுற்றார்.

1947ஆம் ஆண்டு  வடக்கெல்லை கிளர்ச்சிக்காக  ம.பொ.சி. உள்ளிட்ட தோழர்கள்  திருவாலங்காடு வந்தபோது வரவேற்பு அளித்ததோடு உடன் சென்று தமிழர்களின் வடக்கெல்லைப் பகுதிகளை அடையாளங் காட்டினார்.

1949இல் திருத்தணிகையில் "தமிழ் வளர்ச்சிக் கழகம்" தொடங்கப்பட்ட போது அங்கு வந்திருந்த மங்கலங்கிழாருக்கு எல்லை மீட்புப் போராளிகள் தளபதி கே.  விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், சித்தூர் அரங்க நாத முதலியார் ஆகியோரின் நட்பும் கிடைத்தது.

அதே ஆண்டில் "ஆந்திர கேசரி" என்று அழைக்கப்பட்ட டி.பிரகாசம் என்பவர் சென்னை ஆந்திரருக்கு உரியது என்று பேசி வந்தார். அப்போது ம.பொ.சி. ஒருங்கிணைப்பில் சென்னையில்  "தமிழர் மாநாடு" கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்கு ஆர்.கே. சண்முகம் செட்டியார் தலைமை தாங்கினார்.  அதில் வடக்கெல்லை சார்பில் மங்கலங்கிழார் கலந்து கொண்டு சென்னை தமிழருக்கே என்று முழங்கினார்.

அத்தோடு நின்று விடாது, சித்தூர் ஜில்லா அறநெறித் தமிழ்ச் சங்கம் சார்பில், "தமிழ்ப் பெரு மக்களுக்கொரு வேண்டுகோள் " (சங்க வெளியீடு 1) என்ற பெயரில் வட ஆர்க்காடு தமிழ்ப்பகுதி பறிபோன வரலாற்றைக் குறிப்பிட்டு  அறிக்கை வெளியிட்டார்.

மற்றொன்றில், "தமிழ்நாட்டின் வடக்கு" என்று தலைப்பிட்டு (சங்க வெளீயிடு 2 ) விரிவாக வெளியிட்டார்.  அதில், சங்க இலக்கிய, இலக்கண, செய்யுள், புராண நூல்களிலும், கல்வெட்டுகளிலும் திருப்பதி வரை தமிழக எல்லை குறிப்பிட்டு இருப்பதை  விளக்கினார்.

மேலும், தமிழகத்தில்  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆந்திரருக்கு தெலுங்கு மொழி கற்கும் வசதியும், காரமான உணவு சாப்பிடுவதற்கு தனி விடுதி வசதியும் அளிக்கப்படும் போது,  விசாகப் பட்டினத்தில் உள்ள ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் மட்டும்  தமிழுக்கும், தமிழருக்கும் இடமில்லையே? ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்மண் மீட்புப் போராட்டத்தின் போது பின்வரும் முழக்கங்களை தானே கைப்பட எழுதி வெளியிட்டார். அது வருமாறு:
1. வேங்கடத்தை விட மாட்டோம். 2. சென்னை ராஜ்ஜியத்தின் வடவெல்லை திருப்பதி மலை 3. நகரி பிர்க்காவை சென்னையோடு சேர். 4. புத்தூர் பிர்க்காவை சென்னையோடு சேர் . 5. சித்தூர் தமிழ்ப் பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்க்காதே! 6. முன்னே எல்லையைப் பிரி- பின்னே நாட்டைப் பிரி 7. நமது ராஜ்ஜியம் சென்னை ராஜ்ஜியம் 8. நமது தலைநகரம்- சென்னை நகரம் 9. சென்னையோடு சேர்ந்து வாழ்வோம் 10. சென்னை நகரம் சமீபமானது 11. விஜயவாடா- வெகுதூரம் 12. ஐதராபாத்து- அதிக தூரம் 13. சென்னையை விட்டால் - பின்னால் கஷ்டம்.

1952 திசம்பர் இறுதியில் பிரதமர் நேரு ஆந்திரம் தனிமாநிலமாக பிரிக்கப்படும் என்றும், அதில் தமிழ் மாவட்டமான சித்தூரும் உள்ளடங்கும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து  ம.பொ.சி. முயற்சியில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. அதில் மங்கலங்கிழார் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டார். 25.6.1953இல்  144  தடையை மீறி மறியல் நடத்தியதால் மங்கலங்கிழார் கைது செய்யப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டார்.

வடக்கெல்லை பாதுகாப்புக் குழு கூட்டம் மீண்டும்  10.7.1953இல் சென்னையில் கூடி சித்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கு பாதுகாப்பு வழங்கங் கோரி பிரதமர் நேருவை சந்திக்க முடிவெடுத்தது. இக் கூட்டத்தில் ம.பொ.சி., தளபதி விநாயகம், கோல்டன் ந.சுப்பிரமணியம், டி.எம்.திருமலைப் பிள்ளை, வேலூர் அண்ணல் தங்கோ ஆகியோரோடு மங்கலங்கிழாரும் பங்கேற்றார். இதுவே மங்கலங்கிழார் இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வாகும்.

பொதட்டூரில் தமிழாசிரிரியர் பயிற்சிப் பள்ளி கட்டட வேலையில் தீவிரம் காட்டி வந்த நிலையில்,  மங்கலங்கிழாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால்  பள்ளிப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி 31.8.1953இல் காலமானார்.

மங்கலங் கிழார் எழுதிய நூல்கள் பத்துக்கும் மேற்பட்டவை. அவற்றுள் வடவெல்லை, தமிழ்நாடும் வடவெல்லையும், தமிழ்ப் பொழில், நளவெண்பா விளக்க உரை, இலக்கண விளக்கம், இலக்கண வினா விடை , நன்னூல் உரை ஆகியவை முதன்மையான நூல்களாகும்.

குறிப்புதவி...

1. தமிழக வரலாற்றில் மாத்தமிழர் மங்கலங்கிழார் - முனைவர் செ.உலகநாதன்
2. தமிழக வடக்கெல்லைப் போராட்டமும்- தணிகை மீட்சியும் -கோல்டன் ந.சுப்பிரமணியம்
3. தமிழ் வளர்த்த மாமுனிவர் மங்கலச் கிழார் - முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன்...

Orbit உண்மைகள்...


அசாமில் வெளியார் கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் வேண்டும்... தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்...


அசாமில் வெளியாரை அடையாளம் கண்டு வெளியேற்றும் நடவடிக்கைக்காக அணியப்படுத்தப்பட்ட “தேசிய குடிமக்கள் பதிவேடு” (National Rigister of Citizens) இறுதி வரைவு நேற்று (30.07.2018) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவின்படி, ஏறத்தாழ 40 இலட்சம் பேர் “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் தவறு இருப்பதாகவோ, தவறாக விடுபட்டுள்ளதாகவோ கருதுபவர்கள் உரிய ஆவணங்களுடன் 2018 செப்டம்பர் 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா “சுதந்திரம்” அடைந்தபோது, 1948 சூலை 19 அன்றும், அதற்கு முன்பும் இந்தியாவில் இருந்தவர்கள் “இந்தியக் குடிமக்கள்” (Citizens of India) என வரையறுக்கப்பட்டு, 1951ஆம் ஆண்டு முதல் “தேசிய குடிமக்கள் பதிவேடு” வெளியிடப்பட்டது.

ஆயினும், அசாமில் மண்ணின் மக்களான அசாமியர்களைவிட வெளி மாநிலத்தவர் மற்றும் வங்காளதேச மக்கள் குறிப்பாக வங்காளிகள் மிகை எண்ணிக்கையினராக மாறிவிடும் ஆபத்து நேர்ந்தபோது, அசாம் மாணவர்களின் வெளியார் எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் முன்முயற்சியில், 1979ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம் மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சியாக வளர்ந்தது. இந்திய அரசு படை கொண்டு தாக்கியும், இடைவிடாத அடக்குமுறைகளை ஏவியும்கூட அப்போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை.

வேறு வழியின்றி, அன்றைய இராசீவ்காந்தி அரசாங்கம் போராடிய மாணவர் அமைப்பினருடன் 1985 ஆகத்து 15 அன்று உடன்பாடு கண்டது. இந்த “அசாம் உடன்பாடு” 1971 மார்ச் 24 – நள்ளிரவுக்குப் பிறகு அசாமுக்குள் குடியேறியோர் “வெளியார்” என வரையறுத்தது.

இந்த “வெளியாரை” அடையாளம் காண அசாம் முழுவதும் 100 “வெளியார் தீர்ப்பாயங்கள்” (Foreigners Tribunal) நிறுவப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. ஆனால், விரைவிலேயே இந்திய அரசு அப்பணிகளை கிடப்பில் போட்டது. காரணம் – வங்காளிகள் காங்கிரசுக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்கு வங்கிகளாக இருந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன்பேரில் மார்ச் 2015இல் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இப்பணிகள் தொடர்ந்தன. பல்வேறு கால நீட்டிப்புகளுக்குப் பிறகு 2018 சூலை 30 – என்பதை இறுதிக் கெடுவாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த இறுதிக் கெடு நாளான சூலை 30இல்தான், இந்த இறுதி வரைவு அளிக்கப்பட்டுள்ளது.

“வெளியார்” என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மோடி அரசும், அசாம் மாநில பா.ச.க. அரசும் “வெளியார்” என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களை “அசாமியர்களாக” சட்ட விரோதமாக அடையாளப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை!

அதேநேரம், “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ள 40 இலட்சம் பேரை அவர்களது சொந்தப் பகுதியான வங்காளதேசத்திற்கோ, மேற்கு வங்காளத்திற்கோ உரிய முறையில் அனுப்பி வைப்பது இந்திய அரசின் கடமையாகும்!

அசாம் ஒப்பந்தம் நடந்து, அதனை உடனே நிறைவேற்றாமல் 43 ஆண்டுகள் கடத்தியது இந்திய அரசின் குற்றம்! 40 ஆண்டுகளாக இருந்துவிட்டார்கள், இப்போது அவர்களை வெளியேற்றச் சொல்வது ஞாயமா என்று கேட்பது ஒட்டுமொத்த அசாமியருக்கு எதிரானது; அயலாருக்குத் துணை போவது!

தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு 2018 இறுதியில் அணியப்படும்போது, அதில் அடையாளம் காணப்படும் “வெளியாரை” அசாமிலிருந்து வெளியேற்றி அவரவர் பகுதியில் குடியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த காலத்தாமதமும் இன்றி இந்திய அரசு செயல்பட வேண்டும்!

இதே வெளியார் சிக்கல், தமிழ்நாட்டையும் கடுமையாக பாதித்து வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். கடந்த 2011ஆம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அதன் பிறகான நடப்புகளும் தமிழ்நாடு – அசாமைவிட மிகப்பெரும் வெளியார் ஆபத்தில் சிக்கியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. (காண்க : தமிழர் கண்ணோட்டம் 2018 சூலை 1-15 ஆசிரியவுரை).

தமிழ்நாட்டில் வெளியார் குடியேற்றம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் திருவள்ளூர், காஞ்சி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மிகையாக அதிகரித்து வருவதை பல்வேறு ஆவணங்களின் வழியாகத் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறோம்.

எடுத்துக்காட்டாக, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 86,500 பேர் இந்தி மாநிலத்தவர் இருந்திருக்கிறார்கள். 2011 கணக்கில், இவர்களது மக்கள் தொகை 3,93,380 ஆக உயர்ந்திருக்கிறது. கோவையில், இந்திக்காரர்களின் எண்ணிக்கை 7,308லிருந்து 28,049 ஆகியிருக்கிறது. மதுரையில், 1766லிருந்து 9,443 ஆக உயர்ந்திருக்கிறது. வங்காளிகள் எண்ணிக்கையும் இவர்களைவிட உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில், 2001-க்கும் 2011-க்கும் இடையில் வங்காளிகளின் எண்ணிக்கை 160 விழுக்காடும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 107 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது.

இது தமிழர் தாயகத்தை கலப்பின மக்கள் வாழிடமாக மாற்றிவிடும்! தமிழர்களின் வேலை வாய்ப்பை – தொழில் வாய்ப்பை – மொழி வாய்ப்பைப் பறித்துவிடும்! தமிழ்நாட்டு அரசியலில் பா.ச.க.வும் அதற்கு அடுத்தநிலையில், பிற அனைத்திந்தியக் கட்சிகளும் கோலோச்சி தமிழையும், தமிழர்களையும் அவர்களுக்கான அரசியலையும் கீழ்ப்படுத்திவிடும்!

எனவேதான், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் வருவதை வரம்பு கட்டும் வகையில், “உள் அனுமதிச் சீட்டு முறை” (Inner Line Permit System) கொண்டு வர வேண்டும் என்றும்,  மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1–க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்தோரை “வெளியார்” என வரையறுத்து, அவர்களது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அவ்வாறு “வெளியார்” என்று அடையாளப்படுத்துவோரை படிப்படியாக வெளியேற்ற சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்...

மக்களை முட்டாளாக்கும் பாஜக மோடி...


விடுதலை புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரிய வேண்டுமா ?


விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி.....

“விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போராளிகள், சில தளபதிகள் சிங்கள அரசப் படைகளை எதிர்த்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.

சிங்களப்படைகள் நெருங்க நெருங்க துப்பாக்கி ரவைகள் முடியும் வரை நின்று போராடியிருக்கிறார்கள்.

அவர்கள்தான் அங்கே உடனடியாக கைது செய்யப்பட்டு அந்தந்த இடங்களில் வைத்தே உடனடியாக பழி தீர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்..

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து "தவபாலன்" என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார்.

அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும்,மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…

உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை!

*உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் தங்களது படை நடவடிக்கைகளுக்கு பெயர் சூட்டி அழைத்ததில்லை!

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை!

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் நாப்பதாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை!

*உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினரையும் உலக அரங்கில் பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாடுகள் அழைத்ததில்லை !

* உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையத்தளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக செய்திகள் வந்ததில்லை!

* விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை!

* விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது?

* அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெரும்பலம் அவர்களுக்குக் கிடைத்தது ?
பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே!

அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கானதளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்?

அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை!

இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார்.

அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:

* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி.
* அனைத்துலகச் செயலகம்.
* நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
* சுங்க வரித்துறை.
* தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
* அரசறிவியற் கல்லூரி.
* வன வளத்துறை.
* தமிழீழ நிதித்துறை.
* தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
* கலை பண்பாட்டுக்கழகம்.
* மருத்துவப் பிரிவு.
* திலீபன் சிறப்பு மருத்துவமனை.
* பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
* மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
* சுகாதாரப் பிரிவு.
* ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
* போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
* நிர்வாக சேவை.
* அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
* மீன்பிடி வளத்துறை.
* விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
* தொழில் நுட்பக் கல்லூரி.
* சூழல் நல்லாட்சி ஆணையம்.
* தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
* தமிழீழ விளையாட்டுத்துறை.
* தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
* தமிழீழ போக்குவரவுக் கழகம்.
* மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
* வளங்கள் பகுதி.
* மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
* விலங்கியல் பண்ணைகள்.
* விவசாயத் திணைக்களம்.
* தமிழ்மொழி காப்பகம்.
* தமிழீழ சட்டக்கல்லூரி.
* தமிழீழ கல்விக் கழகம்.
* தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
* காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
* செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
* செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
* வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
* அன்பு முதியோர் பேணலகம்.
* இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
* சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
* நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
* மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
* சீர்திருத்தப் பள்ளி.
* முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
* புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
* உதயதாரகை (விதவைகளுக்கானது).
* பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
* பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
* எழுகை தையல் பயிற்சி மையம்.
* மாணவர் அமைப்பு.
* பொத்தகசாலை (அறிவு அமுது).
* ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
* நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
* தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
* விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
* சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
* ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
* வெளிச்சம் (மாத சஞ்சிகை).
* நாற்று (மாத சஞ்சிகை).
* பொற்காலம் வண்ணக் கலையகம்.
* அருச்சுனா புகைப்படக் கலையகம்.
* ஒளிநிலா திரையரங்கு.
* புலிகளின் குரல் வானொலி.
* தமிழீழ வானொலி.
* தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
* பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
* தமிழீழ இசைக்குழு.
* காலணி (பாதணி உற்பத்தி மையம்)
* சேரன் உற்பத்திப் பிரிவு.
* சேரன் வாணிபம்.
* சேரன் சுவையகம்.
* சேரன் வெதுப்பகம்.
* சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
* பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
* பாண்டியன் சுவையூற்று.
* பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
* சோழன் தயாரிப்புகள்.
* பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
* தென்றல் இலத்திரனியலகம்.
* தமிழ்மதி நகை மாடம்.
* தமிழ்நிலா நகை மாடம்.
* தமிழரசி நகை மாடம்.
* அந்திவானம் பதிப்பகம்.
* இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
* இளவேனில் எரிபொருள் நிலையம்.
* இளந்தென்றல் தங்ககம் (ளொட்கெ).
* 1௯ தங்ககம் (ளொட்கெ)
* மருதம் வாணிபம்.
* மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
* மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
* கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
* மாவீரர் அரங்குகள்.
* மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
* மாவீரர் நினைவு வீதிகள்.
* மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
* மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
* மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
* மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
* மாவீரர் நினைவு நூலகங்கள்.
* மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
* மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)

இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது. இன்னும் பெயர் தெரியாத நிறைய அமைப்புக்கள்.

உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் விடுதலைப் புலிகளைப் போல் தங்கள் தேசத்திற்கென “தேசிய மலர்”, “தேசிய மரம்”, “தேசியப் பறவை”, “தேசிய விலங்கு” போன்ற தேசியச் சின்னங்களை வைத்துக் கொண்டதில்லை.

சிங்கள அரசாங்கமானது ஒவ்வொன்றுக்கும்தடைபோட்டு நசுக்கிப் பறிக்கப் பறிக்க… தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாக்க பல அமைப்புக்களை உருவாக்கினார்.

அவைகள்தான் மேற்குறிப்பிட்ட மக்களுக்கான உள்கட்டுமான அமைப்புக்கள். இவர்தான் உங்கள் பார்வையில் தீவிரவாதியா ?

மக்களுக்கான கட்டமைப்புக்கள்ஒருபுறமிருக்க….

இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…

தரைப்படைகள்
* இம்ரான் பாண்டியன் படையணி.
* ஜெயந்தன் படையணி.
* சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
* கிட்டு பிரங்கிப் படையணி.
* குட்டிச்சிறி மோட்டார் படையணி.
* இராதா வான்காப்பு படையணி.
* சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
* விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
* சோதியா சிறப்புப் படையணி.
* மாலதி சிறப்புப் படையணி.
* அன்பரசி படையணி.
* ஈருடப் படையணி.
* குறி பார்த்துச் சுடும் படையணி.
* சிறுத்தைப் படையணி.
* எல்லைப்படை,
* துணைப்படை,
* பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
* ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
* பாதுகாவலர் பிரிவு.
* முறியடிப்புப் பிரிவு.
* காப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
* ஆழ ஊடுருவும் படையணி.
* உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
* கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
* கடல் வேவு அணி.
* சார்லஸ் சிறப்பு அணி.
* அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
* சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
* கடற்சிறுத்தை சிறப்பு அணி.
* சங்கர் படையணி.
* வசந்தன் படையணி.
* சேரன் படையணி.
* பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
* வான்படை.
* கரும்புலிகள்.
* புலனாய்வுத்துறை.
* வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
* உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
* படையப் புலனாய்வுப் பிரிவு (Mஈ)
* வேவுப் பிரிவு.
* களமுனை முறியடிப்புப் பிரிவு.
* களமுனை மருத்துவப் பிரிவு.
* கணினிப் பிரிவு.
* பொறியியல் பிரிவு.
* விசேட வரைபடப் பிரிவு.
* அரசியல் துறை, பரப்புரைப் பிரிவு, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
* தமிழீழ படைத்துறைப் பள்ளி.
* ஆயுத உற்பத்திப் பிரிவு.
* மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.

* மாவீரர் பணிமனை
இப்படியானதொரு இராணுவக் கட்டமைப்பை உலகில் எந்த விடுதலை இயக்கமும் கொண்டு வந்ததில்லை.

ஆரம்பத்தில் உருவாகும்போது “விடுதலைப் புலிகள்” என்ற அமைப்பாகத்தான் இருந்தார்கள். காலங்களாகி வளர வளர மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள்.

ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பாக இருந்தாலும், இடைப்பட்ட காலங்களில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி சீருடையுடன் ஒரு தேசிய இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள்.

எல்லா நாடுகளிடமும் முப்படைகள் இருந்தது, விடுதலைப் புலிகளிடம் ஒரு படை அதிகமாகவே இருந்தது; அந்த வீரமிக்க படைதான் “கரும்புலிகள்”.

உலகில் எந்த நாடுகளிடமும் இல்லாத உயரிய ஆயுதமான, எந்தவிதமான ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளமுடியாத, எந்தவிதமான ஆயுதங்களோடும் ஒப்பிட முடியாத உயிராயுதமான “கரும்புலிகள்” விடுதலைப் புலிகளிடம் இருப்பது அவர்களுக்கு சிறப்பையும், அதிக பலத்தையும் கொடுத்திருந்தது.

அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படைகளுடன் மோத துணிச்சல் இல்லாத சிங்கள தேசம்தான், முப்பதிற்கு மேற்பட்ட உலக நாடுகளுடன் சேர்ந்து மோதி வெற்றி கண்டதென மார்தட்டிக் கொண்டு திரிகிறது.

தமிழர்கள் கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல….

ஒரு சின்னஞ்சிறிய தேசத்தில் எந்தவித உதவிகளும் இல்லாதிருந்த ஒரு மக்கள் படையுடன் முப்பதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள் மோதுகின்றன என்றால்… அங்கே தமிழனின் வீரம் எத்தகையது என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவேண்டும். அங்கு தமிழனுக்குத்தான் வெற்றி கிடைத்துள்ளது.

இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழனின் உண்மையான வீரம்தான் முன்னிலை வகிக்கிறது.

உலக சரித்திரத்தில் தமிழனுக்கென்று ஒரு குணம், தமிழனுக்கென்று ஒரு வீரம் அழியாமல் இடம் பிடித்துள்ளது! இதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலக வரலாற்றில் பதிய வைத்த விடுதலைப் புலிகளா… தீவிரவாதிகள் ?

விடுதலைத்தீ என்பது அனைத்து தமிழ் பேசும் மக்கள் மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது.

எந்த, தமிழ் பேசும் மக்களின் மனதில் விடுதலைக்கான தீ எரிகிறதோ….. அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள அரசும், சர்வதேசமும் மறந்து விடக்கூடாது.

விடுதலைத் தீ என்பது எளிதில் அணைந்து விடாது! யாரும் அணைக்கவும் முடியாது.

அந்தத் தீ எதற்காக எரிய ஆரம்பித்ததோ அதை அடையும் வரை எரிந்து கொண்டே இருக்கும். அதுவரையும் விடுதலைப் புலிகளும் வளர்ந்து கொண்டே இருப்பார்கள்..

யார் சொன்னது அவர்கள் அழிந்து விட்டார்கள் என்று ?

திமுக ஸ்டாலின் கலாட்டா...


பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பம் - வானூர்தி மற்றும் சமிக்ஞை கோபுரம் (AIRCRAFT AND SIGNAL TOWER) நுட்பத்தை காண்போம்...



அதற்கு முன் என் சில முடிவுரைகளை தொடக்கத்திலேயே கூறி விடுகிறேன்..

தமிழராக பிறந்த நாம் இன்று வேற்று மொழியினரால் ஆளபடுகிறோம். தமிழனுடைய தொன்மை, பண்பாடு, பூர்வ கலைகள், விஞ்ஞான பார்வை என அனைத்தையும் மறைத்து அதற்கான சான்றுகளை அழித்து அயல்நாட்டின் பண்பாடுகளை சிலர் புகுத்தி வருகின்றனர்.

இதற்கு காரணம் யாருடைய பண்பாடு பின்பற்றபடுகிறதோ அவர்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். அவர்கள் ஆட்சியின் கீழ் மக்கள் வளர ஏதுவாக இருக்கும். ஆனால் தமிழன் பண்பாடு, நாகரீகம் என்பது அழிக்க ஏதுவாக உள்ள ஓலை சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ, கல்வெட்டிலோ மட்டும் இருப்பது அல்ல எல்லாவற்றையும் தாண்டி அவனுடைய மரபணுவிலே காலம் காலமாக பிரதி எடுக்கப்பட்டு வருகிறது ஆக அதை யாராலும் அழிக்க முடியாது என்பதை கூறிகொள்கிறேன் அது யாருடைய சிந்தனை மூலமாக வெளிவந்து கொண்டே இருக்கும் இது உண்மை.

இதையும் புரிந்து கொண்ட அயல்நாட்டினர் அம்மரபணுகளை சிதைவை ஏற்படுத்தவே மரபணு மாற்றிய உணவுகளை மறைமுகமாக கொடுத்து வருகிறான். ஆனால் தமிழன் தன் தூக்க நிலையிலும் மரபணுவை காப்பற்றும் வழிமுறை அவனுக்கு அந்த இறைநிலை வழங்கியுள்ளது. ஆக அவன் இத்தீய சக்திக்கு எதிராக எப்போதும் இருப்பான் என முடித்து என்னுடைய கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன் வாருங்கள் தோழர்களே.

AIRCRAFT AND AUTOMATIC AIRCRAFT...

அக்காலத்திலே வானத்தில் மிதந்து செல்லும் ஊர்திகளை மிகபெரிய மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர். அதற்கு நிறைய ஆதாரம் இலக்கியங்களில் உள்ளது.

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென்

- (சிலப்பதிகாரம் மதுரைகாண்டம் கட்டுரை காதையில் எண்:196 - 200 ).


சிலப்பதிகாரத்தில் கோவலனோடு கண்ணகியை மேல் உலகம் என கூறும் இடத்திற்க்கு கூட்டி செல்ல அமரர் அரசன் இந்திரன் வானில் உலவும் தேரோடு வந்து இருவரையும் கூட்டி சென்றான் என கூறுகிறது.

ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்.

- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:233).

பண்தவழ் விரலில் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பிறக்கும்: வெய்ய
புண்தவழ் வேல்கண் பாவை பொறி இடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள் வீழ்ந்து கால் குவித் திருக்கும் அன்றே
                     
- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:239).

துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்.
                       
- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:273).

எஃகு என விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள்
                       
- (சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் எண்:299).

மேற்கண்ட பாடலில் கதையின் சுருக்கம் கூறுகிறேன். எதிரியிடம் இருந்து தப்பி செல்ல விரைவாக வானவூர்தி செய் என ஆணையிடுகிறான் அறிவு என்னும் அமைச்சர்.

இவ்வாணை அவனுடைய மன்னர் சச்சந்தன் ஏற்று ஒரு மயிற்பொறி செய்யுமாறு அதற்கான ஆளைப் பணிக்கிறான்.

அவன் உருவாக்கிய மயிற்போன்ற வானூர்தி இயக்கம் எப்படி இருக்கும் என்றால் அதன் பொறியினை வலஞ்சுழி, இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ, தரையில் இறங்கவோ செய்ய முடியும். அந்த ஊர்தி சிறிதும் துன்பம் தராமல் விரைவாக செல்லும் திறன் படைத்தது. போரின் அவசரத்தில் இருந்து தப்பி விசயை என்கிற மன்னனின் மனைவி தவறான பொத்தானை திருகியதால் அது சில தூரம் சென்று ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது இங்கிருந்துது சீவக சிந்தாமணி கதை பரபரப்பாக செல்கிறது.


நாம் பதிவுக்கு வருவோம்...

கம்பராமாயனத்தில் வானூர்தி பற்றி குறிப்புகள் காணபடுகின்றன.. அதில் எட்டு பேர் செல்லும் புட்பக விமானம் திருஞானசம்பந்தர் கூறும் மதிப்புமிக்க இராவணரிடம் இருந்ததாகவும் பின் அது இராமனிடம் சென்றதையும் கூறுகிறார் கம்பர். குறிப்புக்கு கம்பராமயணம் காணவும்.தமிழை வாழ்த்தி தமிழனை முழுக்க தவறாக சித்தரித்து விட்டார்.

புறநானூரில் ஒரு பாடல் உள்ளது. வானூர்தியில் யாரும் இல்லாமல் செல்லும் வகையில் அது உருவாக்கபட்டது குறித்து ஒரு அடி உள்ளது.

…..வலவன் ஏவ வானவூர்தி
- (புறநானூறு பாடல் எண்- 27).

வலவன் என்றால் இப்போது கூறும் விமான ஓட்டி (pilot).

இதை ஒரிசா பாலு அய்யா கூறும் போது இந்த அடிக்கு சான்றாக கடல்சார் பயணத்தில் ஆமைகள் மீது மர துண்டுகளை அக்காலங்களில் கட்டி விடுவர் அது மறுகரையான ஈழநாடுவரை எடுத்து செல்கிறது. அங்கு மக்கள் அந்த மரகலங்களை எடுத்து கப்பல் செய்தனர் என கூறுகிறார்.ஆளில்லாமல் பொருளை நாடு விட்டு நாடு அனுப்பியுள்ளோம் அதே போல் ஆளில்லாமல் வானவூர்திகளை அக்காலத்தில் அனுப்பியுள்ளோம் என கூறுகிறார்.

SIGNAL TOWER...

வானவூர்திகள் பற்றி ஆராயும் போது அதற்கு அவர்கள் சிலமரவகைகளை சமிக்ஞை கொடுக்க பயன்படுத்தியுள்ளனர் என கண்டறிந்தேன். ஓர் இடத்தில் இருந்து சென்று இன்னொரு இடத்தில் சேர்ந்தவுடன் மரத்தின் மூலம் தான் வந்து சேர்ந்ததாக தகவல் அனுப்புகிறார்கள்.

மரங்களை சமிக்ஞை கோபுரமாக பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி அதிகம் நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை இருப்பினும் உயர்திரு ஓஷோ அவர்கள் தன்னுடைய HIDDEN MYSTERIES (மறைந்திருக்கும் உண்மைகள்) என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு தருகிறார்.

அதாவது ஒரு கிராமவாசி தன் கிராமத்தை விடுத்து பணி நிமித்தமாக அடுத்த கிராமத்திற்க்கு சென்றவுடன், தன் மனைவியிடம் பேச, அங்குள்ள ஒரு மரவகையை பயன்படுத்தி தன் கிராமத்தில் உள்ள அதே மரவகையின் மூலம் பேசியுள்ளான் என கூறுகிறார். இதை ஆய்வு செய்த ஆய்வாளருக்கு கூட தெரியவில்லலை. ஏன், பேசுகிற அவனுக்கே இதை விவரிக்க முடியவில்லை பின் எப்படி என்றால் பாரம்பரியமாக இதை அவன் செய்கிறான். அதனால் அது முடியும் ஆனால் நம்மால் அதை அறிய முடியாது என கூறுகிறார்.

இது சாத்தியமா என என்னிடம் கேட்டால் நூறு சதவீதம் உண்மை அதற்கு நான் பெரிய புத்தக விளக்கம் தான் கொடுக்க வேண்டும் அது இயல் தமிழ், இசை தமிழோடு தொடர்புள்ள ஒரு விடயம் அது பற்றி இன்னும் ஆழமாக நான் ஆய்வு செய்யவில்லை. செய்தவுடன் இறையருள் மூலம் வெளிவரும்.

இதனுடைய மாறுபட்ட வெளிபாடு தான் SIGNAL TOWERS இதுவும் மரமும் ஒரே மாதிரியாக இருப்பதை கவனிக்கவும்.

காலத்தின் கோலம் மரம் நடாமல் TOWER ஆக நடுகிறோம் இவை புற கருவி இல்லை என்றால் வேலை செய்யாது என்பதை நினைக்க வேண்டும்.

இறுதியாக நான் கூற வருவது தமிழில் ஏராளமான விடயங்கள் உள்ளது. ஆனால், வெளிகொணர ஆட்கள் போதவில்லை. என்னுடைய கட்டுரைகள் உங்களிடம் தூண்டுதல் ஏற்படுத்தி சிந்திக்க வைத்தால் அது தான் என் வெற்றி. மேலும் உங்கள் மரபணுவில் இவைகள் பதிவு செய்யபட்டுள்ளது அதை நான் ஒரு கருவியாக இருந்து நியாபக படுத்தியுள்ளேன்...

விழிப்போம்.. தற்சார்பை மீட்டெடுப்போம்...


இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளை வாழவைப்போம்...

சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்...


அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்...

தமிழின விரோதி பாஜக அடிமை ஊழல் அதிமுக அரசு...


வெளி மாநிலத்தவர்களுக்கு பிறமாநிலங்களில் கட்டுப்பாடு : தமிழ்நாட்டிலோ வெட்கக்கேடு...


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க.அருணபாரதி – சிறப்புக் கட்டுரை...

சற்றொப்ப 90 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை அலுவல கத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் பெருமளவில் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

எனவேதான், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து போராட்டங்களையும், பரப்புரை இயக்கங்களையும் நடத்தி வருகிறது. இப்போது கூட, வரும் 2017 அக்டோபர் 25 தொடங்கி 31 வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கத்தையும், 31.10.2017 அன்று சென்னை - திருச்சியில் காத்திருப்புப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்துகிறது.

தமிழ்நாட்டில் நாம் முன்வைக்கும் இக்கோரிக் கையை, இதிலுள்ள உண்மையையும் ஆழத்தையும் உணர்ந்து கொள்ளாமல் சிலர் “இனவெறி” என்று அவதூறு செய்து வருகின்றனர். ஆரியத்துவ அமைப்பு கள் மட்டுமின்றி, தமிழ்த்தேசியம் எனப் பேசிக் கொண்டிருக்கும் சிலரே அவ்வாறான அவதூறுப் பரப்புரைகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங் களில் வெளி மாநிலத்தவர்க்கு சட்டப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது அவர்களுக்கெல்லாம் “இனவெறி”யாகத் தெரிவதே இல்லை!

இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத் தவர்களுக்கு வரம்பு கட்ட, என்னென்ன சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கவே இக்கட்டுரை!

அரசமைப்பு சிறப்பு அதிகாரம்...

1947 ஆகத்து 15 - இந்திய விடுதலைக்குப் பிறகும், தனிநாடுகளாக விளங்கிய பல நாடுகள் இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டபோது, அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

அதன்படி, ஜம்முகாசுமீர் மாநிலத்திற்கு, உறுப்பு 370-இன்படியும், நாகாலாந்துக்கு உறுப்பு 371A-இன்படியும், அசாமுக்கு உறுப்பு 371B-இன்படியும், மிசோரத்துக்கு உறுப்பு 371G-இன்படியும், அருணாச் சலப்பிரதேசத்துக்கு உறுப்பு 371H-இன்படியும், மணிப்பூருக்கு உறுப்பு 371C-இன்படியும், சிக்கிமுக்கு உறுப்பு 371-Fஇன்படியும் சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப் பட்டுள்ளன.

மேகாலயா, திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்களில் பிற மாநிலத்தவர் சொத்து வாங்கத் தடை உள்ளது. மேகாலயாவில், தனியார் தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத்தவரை வேலைக்கு வைத்துக் கொள்ள அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து பகுதிகளுக்கு, இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் வழங்கும் உள் அனுமதி நுழைவுச் சீட்டு (Inner Line Permit - ILP) இல்லாமல், வெளி மாநிலத்தவர் இம்மாநிலத்திற்கு பணிக்கு மட்டுமல்ல, பயணம்கூட செய்ய முடியாது! இந்த உள் அனுமதி நுழைவுச் சீட்டு உரிமை தங்களுக்கும் வேண்டுமென மணிப்பூரில் பழங்குடியின மக்களின் போர்க்குணமிக்கப் போராட் டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண் டுள்ளன.

இவையெல்லாம் பழங்குடி மக்கள் பாதுகாப்புக்காக என்று காரணம் கூறினால், கோவாவுக்கு உறுப்பு 371-I-இன்படியும், ஆந்திரா - தெலங்கானா மாநிலங்களுக்கு உறுப்பு 371-D மற்றும் 371-Eஇன்படி எதற்காக சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டன?

தனிநாடாக இருந்து இந்திய ஒன்றியத்தில் இணைந்தவை என்பதால்தான் பழங்குடியினர் குறைவாக உள்ள ஆந்திரா, கோவா போன்ற மாநிலங்களுக்கு இந்திய அரசமைப்பில் சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினால், 1962ஆம் ஆண்டு பிரஞ்சு அரசுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு இந்தியாவில் இணைந்த புதுச்சேரி மாநிலத்திற்கு இப்போதுவரை இந்திய அரசமைப்பில் சிறப்புரிமை வழங்கப்படாதது ஏன்? அது தமிழர்களின் மாநிலம் என்ற ஒரே காரணத்திற்காகவா?

ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு சீமாந்திரா உருவாக்கப்பட்ட நிலையில், அதில் தெலங்கானாவைச் சேர்ந்தவர்ளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படாமலிருக்க, அம்மாநிலத் தலைமைச் செயலாளர் எஸ்.பி. தாக்கூர், 09.08.2016 அன்று அரசு அலுவலகங்களுக்குத் தனிச் சுற்றிக்கை அனுப்பினார். தெலங்கானாவில் ஆகத்து 2017 முதல் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர் களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என அறிவிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 1959ஆம் ஆண்டு “கட்டாய வேலை வாய்ப்பு அலுவலகக் கட்டாய அறிவிப்புச் சட்டம் _- 1959’’ (The Employment Exchanges (Compulsory Notification Of Vacancies) Act, 1959) அந்தந்த மாநிலங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே அனைத்து வகை அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டுமென்ற நோக்கில் உருவாக்கப்பட்டது.

1960-களில் மகாராட்டிரத் தலைநகர் மும்பையில் அங்கு காலங்காலமாக வசித்த வந்த தமிழ் மக்கள், தங்களுக்குரிய வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்வதாகக் கூறி சிவசேனைத் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மகாராட்டிர அரசியலில் தங்கள் மாநிலத்தின் கல்வி - வேலை வாய்ப்புகளில் தங்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள சட்டமியற்ற வேண்டுமென்ற முனைப்பு எழுந்தது.

ஒவ்வொரு ஆண்டும் புதுதில்லியில் மாநில முதல்வர்கள் மற்றும் பேராளர்கள் பங்கேற்போடு நடைபெறும் “தேசிய ஒருமைப்பாட்டு மன்றம்” (National Integration Council) கூட்டம் 1968ஆம் ஆண்டு சூன் 21 - 22 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில், இந்தச் சிக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முகாமையானது!

இந்தியக் குடிமக்கள் இந்தியா முழுவதும் சென்று வாழ அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் மக்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பங்கு அளிக்க நிறுவனங்களை வலியுறுத்திக் கேட்பதில் தவறில்லை  என அக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (தீர்மானம் III - Regional and Economic imbalances and Employment Opportunities to the Local Population, 22.06.1968).

தொழிலாளர் நலன்களுக்காக இந்திய அரசால், 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “தேசியத் தொழிலாளர் ஆணையம்”, பல்வேறு கட்ட ஆய்வு களுக்குப் பிறகு 1969 - ஆகத்து மாதம் தனது முதல் அறிக்கையை வெளியிட்டது. அதில், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென அவ்வாணையத்தின் பரிந்துரைகள் உறுதிபடக் கூறின. (பரிந்துரை எண்கள் 17, 18, 19, 20).

மகாராட்டிரம்...

இதனையடுத்து, நாட்டிலேயே முதல் முறையாக மகாராட்டிரத்தில், 1968 நவம்பர் 5 அன்று, அம் மாநிலத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் 50 முதல் 80 விழுக்காடு வரை மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்க வேண்டுமென சட்டமியற்றப்பட்டது.

கர்நாடகா...

அதன்பின், கர்நாடகாவில் 1986இல் கர்நாடக அரசு நியமித்த சரோஜினி மகிசி அறிக்கையின்படி, அம்மாநிலத்திலுள்ள இந்திய அரசு, தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் 70 முதல் 100 விழுக்காடு வரை கன்னடர்களுக்கே முன்னுரிமை அளிக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 1998 முதல், வெளி மாநிலத்தவர் விளை நிலங்களை வாங்கத் தடை விதித்து கர்நாடகத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

குஜராத்...

குசராத்தில், 1995 மார்ச் 31 அன்று நிறைவேற்றப் பட்ட குசராத் தொழிலாளர் துறை தீர்மானம், மண்ணின் மக்களுக்கு 85% வேலை வாய்ப்புகளை மாநில அரசு, இந்திய அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டுமென ஆணையிடுகிறது. இன்றைக்கும் அது செயலில் உள்ளது.

இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கழகம் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம், குசராத்தில் கடந்த மே மாதம் (2017), 116 தொழிலாளர்களை பணியமர்த்திய போது, அதில் 15 பேர்தான் குசராத்திகள்! எனவே, வேலை கிடைக்காத குசராத் இளைஞர்கள் அத்தேர்வுக்கு எதிராக வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில், குசராத் அரசு தன்னை இணைத்துக் கொண்டு, மண்ணின் மக்களுக்கே வேலை தர வேண்டும் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது என 1995இல் இயற்றப் பட்ட தீர்மானத்தை முன்வைத்து வாதாடுகிறது. (காண்க: இந்தியன் எக்ஸ்பிரஸ், 09.05.2017).

இதற்கு முன்பு, கடந்த 2015இலிருந்து, குசராத் தொழிலாளர் துறை அமைச்சர் விஜய் ரூபானி மண்ணின் மக்களுக்கு வேலை அளிக்காத நிறுவனங்கள் கண்காணிக்கப்படும் என அறிவித்ததும், இச்சட்டம் சரிவர செயலில் உள்ளதா என 2016 சூன் மாதம் குசராத் சட்டப்பேரவையில் ஆய்வறிக்கை வெளியிட்ட போது, தனியார் தொழிற்சாலைகளில் சற்றொப்ப 92 விழுக்காட்டினர் குசராத்திகளே பணியமர்த்தப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்க செய்திகள்.

மேற்குவங்கம்...

மேற்கு வங்கத்தில், ஜோதிபாசு தலைமையில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்தபோது, 1999ஆம் ஆண்டே மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க சட் டம் இயற்றப்பட்டது. 2009 பிப்ரவரியில், வங்காளிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என அம்மாநில இடதுசாரி அரசு அறிவித்தது.

இமாச்சலப்பிரதேசம்...

இமாச்சலப் பிரதேசத்தில், 2003 சூலை முதல், அம்மாநிலங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள், அம்மாநிலத்தில் பின்தங்கியப் பகுதிகளில் 80 விழுக்காடும், மற்ற பகுதிகளில் 60 விழுக்காடும் மண்ணின் மக்களை வேலைகளில் அமர்த்தினால் மட்டுமே அரசுச் சலுகைகள் கிடைக்கும் என அம்மாநிலத் தொழில்துறை அமைச்சர் ஆர்.எல். தாக்கூர் அறிவித்தார்.

உத்தரகாண்ட்...

உத்தரகாண்ட்டில், 2007 மே 6 அன்று, தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 70 விழுக் காட்டினருக்கு வேலை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரசுத் தலைமைச் செயலாளர் எஸ்.கே. தாசுக்கு அறிவுறுத்தினார், அம்மாநில முதலமைச்சர் பி.சி. கந்தூரி!

மத்தியப்பிரதேசம்...

மத்தியப்பிரதேசத்தில், 2009 திசம்பரில், பா.ச.க. முதலமைச்சர் சிவராஜ் சவுகான், “மத்தியப்பிரதேச மாநிலத்தவருக்கே வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும்” என அறிவித்தார். 2010 அக்டோபர் முதல், அம்மாநிலத்திலுள்ள தொழிற்சாலைகளில் குறைந்தபட்சம் 50 விழுக்காடு மண்ணின் மக்களுக்கே ஒதுக்க வேண்டுமென ம.பி. அரசு அறிவித்தது.

அரியானா...

அரியானாவில், 2009 அக்டோபர் சட்டப்பேரவைத் தேர்தல் முதல், பா.ச.க., காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அரியானா மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பில் 90 விழுக்காடு வரை வேலை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

ஒடிசா...

ஒடிசாவில், 2010 சூலை முதல் அங்குள்ள தொழிற்சாலைகள், கீழ்மட்டப் பணிகளில் 90 விழுக்காடும், அதற்கு மேலுள்ள பணிகளில் 60 விழுக்காடும், அதற்கும் மேலுள்ள மேலாண்மைப் பணிகளில் 30 விழுக்காடும் ஒரிசா மாநிலத்தவருக்கே அளிக்கப்பட வேண்டுமென அம்மாநில சுரங்க அமைச்சர் மனோஜ் அகுஜா அறிவித்து, அதை செயல்படுத்தி வருகின்றனர்.

கேரளா...

கேரளாவில், 2013 ஆகத்து 25 அன்று மலையாளம் தெரிந்தோருக்கு மட்டுமே அரசு வேலைகளும், பிற சலுகைகளும் கிடைக்கும் என அம்மாநில காங்கிரசு அரசு ஆணை பிறப்பித்து, செயல்படுத்தியது. அதன்பின் வந்த இடதுசாரி அரசு, அதை பிற்போக்கு என்றோ இனவெறி என்றோ நீக்கவில்லை! தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது.

சத்தீஸ்கர்...

சத்தீஸ்கரில், 2015 பிப்ரவரி 25 முதல், மண்ணின் மக்களுக்கு 50% வேலை அளிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேசம்...

உத்திரப்பிரதேசத்தில், 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பா.ச.க. தனது தேர்தல் அறிக்கையில் அம்மாநிலத் தொழிற்சாலைகளில் 90 விழுக்காடு வேலைகள் மண்ணின் மக்களுக்கே ஒதுக்க சட்டமியற்றப்படும் எனத் தெரிவித்தது. பல கட்சிகளும் அதை வலியுறுத்தியுள்ளன.

பீகார்...

பீகாரில், 2016 சூலை முதல், லல்லு பிரசாத்தின் ராஷ்ட்டிரிய சனதா தளக் கட்சி, பீகாரின் கல்வி - வேலை வாய்ப்புகளில் 80 விழுக்காடு பீகாரிகளுக்கே வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் அக்கோரிக்கையை ஆதரித்தார். விரைவில் அதற்காக சட்டமியற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பா.ச.க.வும் அதை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட்...

பழங்குடியின மக்கள் நிறைந்து வாழும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பீகார், உ.பி. போன்ற வெளி மாநிலத்தவர் குடியேற்றம் காரணமாக - அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி அல்லாதவர்கள் முதல்வராகவேத் தேர்ந்தெடுக்கப்படும் அவலச்சூழல் நிலவுகிறது. 1932ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் பகுதிகளுக்குள் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற வேண்டு மென்ற கோரிக்கையுடன் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டங்களைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில், 2017 சனவரி 28 முதல், அரசு வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க அமைச்சரவை அளவில் முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

பஞ்சாப்...

பஞ்சாப்பில், 2017 சனவரி பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சி அம்மாநிலத்தின் தொழிற்சாலைகளில் 80 விழுக்காட்டு வேலைகளை பஞ்சாபியருக்கே வழங்க வேண்டுமென அறிவித்தார். பல கட்சிகளையும் அதை வலியுறுத்தி வருகின்றன.

தில்லி...

மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதால் தில்லியின் சூழல் கெடுகிறது என்றும், அதன் காரணமாகக் குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன என்றும், புதுதில்லிக்குத் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த காங்கிரசுக்காரர் சீலா தீக்சித், “தேசிய ஒருமைப்பாட்டு மன்றக்” கூட்டத்தில் பலமுறை வெளிப்படையாகவே புகார் செய்துள்ளார். அண்மையில், கடந்த 2017 சூனில், தில்லிப் பல்கலைக் கழகத்தில் 85% இடங்கள் மண்ணின் மக்களுக்கே என தில்லி சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவா...

கோவாவில், 2017 அக்டோபர் 13 அன்று ஊடகத்தினரிடம் பேசிய தொழிற்துறை அமைச்சர் விஜய் சர்தேஷி, தனியார் வேலை வாய்ப்பில் கோவா மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்கும் என அறிவித்துள்ளார்.

இவையெல்லாம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் செயல்படுத்தி வரும் சட்டங்கள்! மண்ணின் மக்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டங்கள் இல்லாத மாநிலங்களில், அவ்வாறு சட்டம் கொண்டு வரப்படும் என கட்சிகள் மக்களிடம் வாக்குறுதிகள் அளிக்கின்றன.

ஆனால், “மாநில உரிமைகளுக்காக” போர்க்குரல் எழுப்பும் மாநிலமாக சித்தரிக்கப்படும் தமிழ்நாடோ வந்தாரை மட்டுமே வாழவைத்துக் கொண்டுள்ளது! சொந்த மக்களை “இனவெறியர்கள்” என அவதூறு செய்பவர்கள் “முற்போக்காளர்களாகத்” தங்களைக் காட்டிக் கொள்ளும் அவலமும் இங்கு மட்டுமே நடக்கிறது!

"தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே வேலை - வெளியாரை வெளியேற்று" என 1991முதல் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை, எந்தளவிற்கு சரியானது, சனநாயகத்தன்மை வாய்ந்தது என்பதை, இத்தனை மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களும் திட்டங்களும் நமக்கு உணர்த்துகின்றன.

எனவே, “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை - வெளியாரை வெளியேற்று” என முழங்குவோம். வீதிக்கு வருவோம்..

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை)...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனைக்கு...


ஜெயலலிதா வீட்டில் ஓசிச் சோறு சாப்பிட்டு விட்டு திக. வீரமணி எழுதியது...


எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக் கெல்லாம் இடம் உண்டா?

இவர் வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு.

இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.

என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.

சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை''

-மு. கருணாநிதி கைது குறித்து திக தலைவர் கி வீரமணி (13.07.2001, நூல்: எனது மரண சாசனம்)

(தட்... நான் அவங்க அம்மாவ வண்டை வண்டையா திட்டுவேன், அவன் எங்கம்மாவ வண்டை வண்டையா திட்டுவான்... மொமெண்ட். திராவிடம் வளர்த்த நாகரீகமும், பெரியார் மண்ணும்னு நாம தனியா ஒரு புத்தகம் எழுதணும்)...

திமுக ஸ்டாலின் கலாட்டா...


பொறுமை...


பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது...

உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை..

பொறுமை மட்டுமே போதுமானது..

அது மட்டுமே போதும்...

பொறுமை என்றால் இணைப்புணர்வு..

எந்த வித அவசரமும் இல்லாமல்,

எந்த வித அவசரமும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்..

நேசம் மிகவும் மெதுவாக வளரும்..

அதற்கு பொறுமை தேவை..

பொறுமை மிகவும் கவனமானது..

பொறுமை சக்தியானது..

பொறுமை விரிவடையக்கூடியது..

காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம்..

அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை..

அது ஆழமான இணைப்புணர்வு...

உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை தேவை..

பயணகாலம் அளவிட முடியாதது..

எனவே அளவற்ற பொறுமை தேவை..

பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான்..

ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்..

நீ வாழ்வை உள் வாங்குபவனாக மாறும் அந்த கணத்தில்..

உனக்கு யாரும் போதனை தர தேவை இருக்காது..

நீயே ஒரு புத்தனாக மாறி இருப்பாய்...

தூதுவளையின் மருத்துவ பயன்கள்...


வீட்டில் உள்ள தோட்டங்களில் வளரக்கூடிய ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும், அதனால் குழந்தைகளை இதன் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதன் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவப் பயன் கொண்டது...

நீதிமன்றம் யாருக்கானது சிந்தியுங்கள்...


மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்...


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது.

பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.

மருத்துவ பயன்கள்...

பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.

பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்லமையை பெற்றுள்ளது.

பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.

பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.

பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்...

ஊடக உளவியல் அரசியல்...


நிகழ்வுகளை தங்களுக்கு லாபத்திற்கு ஏற்றவாறு பல்வேறு கோணங்களில் செய்திகளாக மாற்றப்படுகின்றன ஊடகங்களில்..

பலகோடி முதலீடு செய்யும் ஊடகத்தின் முதலாளி, தனக்கு ஏற்றவாறு லாபநோக்கில் தான் செய்திகளை சித்தரிப்பான்..

ஊடக அரசியலை உங்களின் அன்றாட அரசியலை தீர்மானிக்கின்றன...

பாஜக மோடியின் மோசடிகள்...


தானம், தர்மம் என்கிறார்களே? அப்படியென்றால் என்ன?


இந்த இறை கதையை படியுங்கள்...

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க
பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே.. பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.

ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே.

பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?

இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே... நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்... என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.

புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும்.

பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன் தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க...

ஈசனை வணங்கி நின்ற சூரியத் தேவன்.

தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்கிறார்.

நாமும் புரிந்துகொள்வோம்.

கேட்டு கொடுப்பது தானம்...
கேட்காமல் அளிப்பது தர்மம்...

பாஜக மோசடி மோடி சொன்ன கருப்பு பணம் எங்கே.?


சோழர்களின் செயலாளர்கள்...


நாட்டின் மத்திய / மாநில அமைச்சர்களுக்கும் பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் செயலர்கள் இருப்பது நமக்கெல்லாம் தெரியும்.

முக்கியமாக நமது பிரதமருக்கு முதன்மைச் செயலர், தனிச்செயலர் என்று செயலர் குழுவே இருக்கும்.

இது போன்றே, பண்டைய மன்னர்களுக்கும் செயலாளர்கள் இருந்தனர்.

குறிப்பாக சோழர்களின் செயலர்களின் பதவிகள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

அரசர்தரும் ஆணைகளை குறிப்பெடுக்கவும் ஓலைகளில் பதியவும் ‘திருமந்திர ஓலை’ என்ற அதிகாரிகள் இருந்தனர். (இன்றைய ஸ்டெனோகிராபர்கள் போல்).

அவர்கள் எடுத்த குறிப்புகள் சரிதானா, ஓலையில் ஒழுங்காகப் பதியப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க ‘திருமந்திர ஓலைநாயகம்’ என்ற அதிகாரிகள் இருந்தனர்.

அவ்வோலைகளில் கையொப்பம் இடுவதும் அவர்கள்தான்.

மன்னர்களின் தினப்படி நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை ஒழுங்குபடுத்துவது,  திட்டமிட்டபடி அவர்களின் நடவடிக்கைகள் நடக்கிறதா என்று சரிபார்ப்பது போன்ற வேலைகளையும் திருமந்திர ஓலை நாயகங்கள் செய்தனர்.

(தற்போதைய எக்ஸிக்யூட்டிவ் அஸிஸ்டண்ட் / முதன்மை செயலர்களின் வேலைகள்).

விடையில் அதிகாரி என்பவர்கள் அரசன் இடும் ஆணைகளை ஓலைகளின் மூலம் உரியவர்க்கு அளித்தல், அரசர்களுக்கு வரும் ஓலைகளுக்கு பதில் அளித்தல் போன்ற வேலைகளைச் செய்தனர். 

இப்படி ஒரு முறைப்படுத்தப் பட்ட ஆட்சி முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்படுத்திய சோழர்கள் நிர்வாகவியல் நிபுணர்கள் தான்...

பாஜக மோடியின் கதறல்...


கோயில் வெண்ணி...


தஞ்சை திருவாரூர் சாலையில் நீடாமங்கலத்துக்கு சற்று முன்னே இருக்கின்ற சிற்றூர் கோயில் வெண்ணி.

சங்க காலத்தில் தமிழ் சரித்திரம் அறிந்த முதற்போர் (அக்காலத்தில்  வெண்ணிப் பரந்தலை என்று அழைக்கப்பட்ட) இங்கு தான் நடைபெற்றது.

கரிகால் பெருவளத்தான் என்று அறியப்படும் திருமாவளவனுக்கும் அவனுடைய தாயாதியருக்கும் இடையில் நடந்த இந்தப் போரைப் பற்றி பல்வேறு சங்கப்பாடல்களில் காணப்படுகிறது. முக்கியமாக பட்டினப்பாலை...

பல்ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்...

என்று இருங்கோவேளையும் அவனுக்கு துணை வந்த பாண்டியனையும் எவ்வாறு திருமாவளவன் வெற்றி கொண்டான் என்று விவரிக்கிறது.

ஒரு பெரும் படையை இளமையிலேயே பெரு வெற்றி கொண்டான் கரிகாலன் என்று போற்றுகின்றனர் சங்க காலப் புலவர்கள்...

இயற்கை...


மன்னர்கள் கொடுத்த கொடைகள்...


வள்ளல்கள் என்று வரலாறு பலரைக் குறித்திருந்தாலும், பெரும்பாலான மன்னர்கள் பல்வேறு கொடைகளைச் செய்திருக்கின்றனர்.

பண்டைய வரலாறு,  அவர்கள் அளித்த கொடைகளைப் பொறித்து வைத்த கல்வெட்டுகளினாலும் செப்பேடுகளினாலுமே தெரிய வந்தது என்று பார்த்தோம்.

அவர்கள்  அளித்த முக்கியமான தானம் நிலங்களை இறையிலி நலமாக கோவில்களுக்கும் சில சில தனிப்பட்ட மனிதர்களுக்கும் அளித்திருக்கிறார்கள்.

இதில் தேவதானம் என்பது  சிவன் கோவிலுக்கு அளிக்கப்படும் தானம்.

திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோவிலுக்கும் பள்ளிச் சந்தம் என்பது சமண பள்ளிகளுக்கும் வழங்கப்படும் தானம்.

நம் தமிழ் மன்னர்கள் எல்லா சமயத்தையும் போற்றி வந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.

இது தவிர பிராமணர்களுக்கு கொடுக்கப்படும் தானத்தை பிரம்ம தேயம் என்றும் சோதிடர்களுக்கு வழங்கப்படுவதை கணி முற்றுட்டம் என்றும் அழைத்திருக்கிறார்கள்.

தானம் செய்யப் போகிற நிலத்தின் எல்லையை வகுக்க மன்னர்கள் கையாண்ட முறை விசித்திரமானது.

ஒரு பெண் யானையை குறிப்பிட்ட இடத்திலிருந்து நான்கு திசையும் நடக்கச் செய்து, அது நடந்த எல்லைகளைக் குறித்துக்கொண்டு, அதற்கு உட்பட்ட இடத்தைத் தானமாக வழங்குவது அக்காலத்தின் வழக்கமாக இருந்திருக்கிறது...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


நம்முள் ஜோதி தரிசனம் கிட்டும்...


எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுனை அளவு நெருப்பாக இருக்கிறான்.

நம் உடம்பில் உட்புகு வாசலாகிய இரு கண்மணியில் ஞான குருவால்  தீட்சை பெற்று கண்மணியில் உணர்வு பெற்று அதை நினைந்து நினைந்து உணர்ந்து  உணர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து முயற்சி செய்யச் செய்ய நெகிழ்ச்சி ஏற்பட்டு கண்களில்  நீர் ஆறாக பெருகி பாயும். இப்படியே சாதனை தொடர வேண்டும்.

அப்போது கண்மணியின் உள் உள்ள சிறுஜோதி கொஞ்சங் கொஞ்சமாக பெருகும். கண்மணியின் சுழற்சி கூடுவாதால் இது நடக்கும். மனம் அங்கே நிற்பதால் கை கூடும்.

இரு கண்மணி வழி பெருகும் ஜோதி உள்புகுந்து சேர்ந்து அக்னி கலையுடன் போய் சேரும், அந்த இடம் நம் தலை உச்சிக்கு கீழ் , வாய் அண்ணாவுக்கு மேல் உள்ள இடமே..

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் ருறுக்கியொ  ரோப்பிலா   ஆனந்தக்
கண்ணின்று காட்டி களிம்பறுத்  தானே " - திருமந்திரம்

சனாதன தர்மத்திற்கு விளக்கம் இந்த ஒரு பாடலே போதும்.

நம் கண்மணியில், வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் ஆகிய கண்மணிகளிலும் தியானம் செய்வதால் பெருகும் ஒளி உட்புகுந்து அக்னி கலையில் சேரும் - அதுவே முச்சுடரும் ஒன்றான நிலை. ஜோதி பாதம். திருவடி.

இந்நிலைபெறும் முயற்சியிலிருக்கும் சாதகனுக்கு படி படியாக  உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள 72000  நாடி நரம்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி பரவும். உடல் தூய்மையடையும்.  நோய் நொடி வராது. உடல் உறுதி பெறும். உள்ளம் பண்பாடும். இறைஅருள் கிட்டும். எல்லா ஞானிகளின் ஆசிர்வாதமும் பெறுவான். ஜோதி தரிசனம் கிட்டும்.  திரை விலகும் ஆன்மா பிரகாசிக்கும்.

அங்கிருந்து ஜோதி ஊர்த்துவமுகமாக மேல் எழுந்து உச்சியை சகஸ்ராரத்தை அடையும. உச்சியை அடைந்தால் அறிவுப்பிரகாசம். பரவெளி காணலாம்.  வெட்ட வெளியில் உலாவலாம். பேரின்பம்.. பேரின்பம்..  பேரின்பமே...

பாஜக விற்கு மாமா வேலை பார்க்கும் நியூஸ் 7...


வேற்றுகிரக வாசிகளும் உண்மைகளும்...


இந்தக் குக்ககிள்கான் என்னும் கடவுள்தான், மாயன்களின் அறிவுக்கே அடிப்படைக் காரணமானவர்கள் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...

உண்மையில் இந்தக் குக்கிள்கான் ஒரு ஊர்வன(Reptaliens) இன வேற்றுகிரக கடவுள். மாயன்களின் அனைத்து நடவடிக்கைகளும், ஏதோ ஒரு விதத்தில் விண்ணையும், விண்வெளியின் வேற்றுக் கிரகவாசிகளையும் நோக்கியதாகவே அமைகின்றன.
இதன் மூலம்தான் மாயன்களுக்கு ஊர்வன (Reptaliens)
இனத்தவர்களிடமிருந்தே  மறைஞானம் கிடைக்கப் பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்குத்தான் இது கொண்டு செல்கிறது.

ஊர்வன (Reptaliens) இனத்தவர்கள் ஆதியிலேயே பூமிக்கு வந்தும்,
இங்கேயே நிலைத்தும் இருக்கிறார்கள். அவர்கள் வந்து போன இடங்களில் ஒன்றுதான் மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த இடம். இவர்களே (Reptaliens)
மாயன்களுக்கு கணிதம், வாணியல், கட்டடக் கலை, விவசாயம், வரைகலை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இதை எப்படி ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக கூறிகிறார்கள் என்றால்
விண்ணிலிருந்து ஊர்வன இனத்தவர்கள் வந்ததற்கு சாட்சியாக பல கல்வெட்டு,சித்திர. ஆதாரங்கள் மாயன்களிடம் பரவலாக காணப்படுகின்றன.

அவைகள் அனைத்து விளக்குவது இந்த ஊர்வன(Reptaliens) இன வேற்றுகிரகவாசிகளை தான்..

மேலும் ஊர்வன (Reptaliens) இனத்தவர்கள் உலகில் உள்ள பல அரசுகள், மதங்களின் கோட்டுப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்றும் இருக்கின்றன.. தொடர்ந்து பார்ப்போம்...

கீசா பிரமிட் மேல் இருந்து எடுக்கப்பட்ட சட்டவிரோதமாக புகைப்படம் எப்படி இருக்கு?


வேற்றுகிரக வாசிகளும் உண்மைகளும்...


இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த ‘ஹூவ்லெட் பக்கார்ட்’ (Hewlett Packard) நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.

மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள் மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்றும் அவைகள் பூமி எங்கும் பரவியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகளின் மர்மம் தான் என்ன?

நமது சூரியக்குடும்பத்தின் 5ஆ-வது கோளான வியாழன் பூமியைவிட 120 மடங்கு மிகப்பெரிய கோளாகும். இதன் தரைத் தளம் பற்றி இன்றுவரை நமது அறிவியலாளர்களுக்குத் தெரியவில்லை. இதற்குத் தடையாக இருப்பது இதன் வளிமண்டலம்.

இதன் வளிமண்டலம் சுமார் 600 கி.மீட்டர் உயரம் வரை பல்வேறு அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அடுக்குகள் கொண்ட வளிமண்டலத்தின் மேற்புறம் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களாலும், அதன் கீழே நீராவி, கந்தகம், மற்றும் அமோனியா போன்றவைகளாலும், அதனைத் தொடர்ந்து மீத்தேன், ஹைட்ரஜனேற்றம் கொண்ட சயனைடுகளாலும் உள்ளது.

மேலும் அமோனியா, ஹைட்ரஜன், கந்தகம் கொண்ட கலவைகளால் ஆன கண்ணாடி போன்ற குவார்ட்ஸ் (Quartz) கிரிஸ்டல் துகள்களால் ஆன உயிரினங்கள் உருவாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சமீபத்திய தகவலின்படி வியாழன் கோளின் தரைப்பகுதியில் ஹைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம் மற்றும் கார்பன் அடங்கிய மிதமான தட்பவெப்பம் நிலவுவது தெரியவந்தது. இதை வைத்து வியாழனில் உயிர்கள் வாழும் வாய்ப்பு 50 விழுக்காடு இருக்கலாம் என தெரியவருகிறது. எனவே அவை கிரிஸ்டல் உயிர்கள்தானா? என்பது புதிராக உள்ளது.

மனிதன் மற்றும் தாவரங்களைப் போன்ற உயிரினம் நமது பூமியில் மட்டுமே தரைத் தளத்தில் வாழ்கிறது. ஆனால், வியாழனின் வளிமண்டல அடுக்கில் இருந்தே உயிர்கள் வாழும் சூழல் நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மோனியா, நீர், மீத்தேன் மற்றும் ஹைட்ரஜன் சல்பைட் கலந்த (கிரிஸ்டல்) மேகங்களின் இடையிடையே ஆன உரசல்களால் பல கோடி ஆண்டுகளாக தொடர்ந்து மின்னல் வெட்டிக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக இந்த மினத கிரிஸ்டல் உயிரினங்கள் உருவாகியிருக்கலாம்.

இவர்கள் நம்மை போன்று பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருக்கலாம்,அவ்வாறு பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவர்கள் நம்மை போன்று தான் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை….

மனித கிரிஸ்டல் உயிர்கள் என குறிப்பிட காரணம். மேலே குறிபிட்ட இரசாயன மூலக்கூறுகள் மனித உயிர்களிடம் காணப்படுகிறது.

எனவே தான் நமது உறவினர்களைப் போலவே மண்டையோடு இருக்கிறது, ஆனால் மனிதர்களைப் பற்றிய பரிணாம வளர்ச்சியில், நம்மைக் கவனித்துக் கொண்டே பல வேற்றுகிரக இனங்கள் நம்மிடையே உள்ளன.

மனிதனும் அனைத்தையும் அதாவது பூமியில் உள்ள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக எண்ணி ஏமாற்றம் கொண்டிருக்கிறான்…