11/12/2017

விசிக கட்சி குண்டர்களின் வன்முறை வெறியாட்டம்...


இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த, பறையர் சமூக பிரமுகர் சிதம்பரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வீட்டை விசிக ரவுடிகள் அடித்து நொறுக்கிய அதிர்ச்சி காணொளி...

திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்.. ஞாபகப்படுத்துவோமே…


1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா? இல்லை..

2.1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே..

3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே..

4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் தானே முதல்வரானார்..

5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலரை ஓரங்கட்டி தானே முதல்வர் ஆனார்..

6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்!எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்கள் என அவரை கேட்டதற்கு..

7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக்கொண்டார்..

8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..

9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடு பொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே..

10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதல்வராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதல்வர் பதவி கிடைக்கவே இல்லையே..

11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது..

12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது 'என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்’ என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே கருணாநிதி..

13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே..

14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே..

15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி தானே.. இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே..

16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே..

17. கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும்தான் தெரியும் போல..

இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையில்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே..

ஆனால் எக்காரணம் கொண்டும் தலைவர் பதவியும், முதல்வர் வேட்பாளர் பதவியும் அவர் இருக்கும்வரை கட்சியில் வேறு யாருக்கும் வாய்பில்லை என்பது மட்டும் உறுதி..

தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்...


வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும்.

அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செளராஷ்டிர மொழியாகும்.

இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர்.

பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர்.

தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.

உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செளராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.

இம்மொழிக்கென வெளிவரும் பாஷாபிமானி எனும் மாத இதழில் தலையங்கம் செளராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது.

இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது.

ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...

பாஜக மோடி எனும் மகா நடிகன்...


கோயில்கள் வேணுமா, இல்லை மசூதிகள் வேணுமா? - மோடி (குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில்).

தோல்வியின் விளிம்பில் இருக்கும் கொடியவனின் கடைசி ஆயுதம் நரித்தனம்..

இவர்தான் எல்லோருக்கும் பிரதமர் வெட்கக்கேடு....

கரீபிய நாடுகளில் தமிழர்...


கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது.

இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன.

வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன.

இவை தென் அமெரிக்கத் தலைநிலப்பரப்புப் பகுதியில் இருக்கின்றன.

கயானாவின் மேற்கே வெனிசூலாவும், கிழக்கே சூரிநாமும், தெற்கே பிரேசில் நாடும் இருக்கின்றன.

டச்சு கயானா என்று அழைக்கப்படும் சூரிநாம், பிரேசில், கயானா அருகில் இருக்கிறது.

கரீபியன் பகுதியில் பரப்பளவில் மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்திருக்கிறது. ஜமைக்கா, கியூபா நாட்டின் அருகில் இருக்கிறது.

தமிழர் குடியேறிய வரலாறு..

கரீபிய நாடுகளில் தமிழர்களுக்கு முன்பாக தோட்டங்களில் ஆப்ரிக்கர்களே வேலை செய்து வந்தனர்.

1834-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்ரிக்கர்களின் அடிமைவாழ்வு முடிந்து தோட்டங்களை விட்டு வெளியேறியவுடன், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இந்தியாவிலிருந்து பிரஞ்சு குடியேற்றங்களுக்கு நிறையபேர் அனுப்பப்படுவதை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் தாமும், இந்தியாவிலிருந் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர்.

இதன் விளைவாக 1938-ஆம் ஆண்டு இந்தியக் கூலிகள் கயானாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.

பிறகு 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் டுபாக்கோவிலும், 1873-ஆம் ஆண்டு சூரிநாம், ஜமைக்கா நாடுகளுக்கும் இந்தியக் கூலிகள் கொண்டு வரப்பட்டனர்.

இவ்வாறு வந்திறங்கிய இந்தியக் கூலிகள் சிலர் இத்தீவுகளிலிருந்து கிரானடா நாட்டிற்கும் சென்றனர்.

கயானாவிலிருந்து இரண்டு பெரிய தோட்ட முதலாளியான ஜான் கிளாட்ஸ்டோன், கிளினெல்பிரபு என்பவரின் துணையோடு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரத் தொடங்கினார்.

இதன் பயனால் 156 ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து கிளம்பி ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில் 1838-ஆம் ஆண்டு கயானாவில் வந்து இறங்கிய கூலிகள் மொத்தம் 156 பேர்.

அதே மாதத்தில் விட்பை என்னும் கப்பலும் 263 கூலிகளைக் கொண்டு வந்து இறக்கியது.

முதற் கப்பல் கொண்டு வந்த கூலிகளைக் தோட்ட முதலாளியான கிளாட்ஸ்டோன் டெமராரா நதிக் கரையில் உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன் என்ற தோட்டங்களுக்கும் எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும் அனுப்பி வைத்தார்.

விட்பை ஏற்றி வந்த கூலிகளை டெமராராவில் உள்ள பெலிவ்யூ என்னும் தோட்டத்திற்கும், எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள ஹைபரி, வாடர்லூ என்னும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைத்தார்.

இவ்வாறு 1838-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தியக் கூலிகளின் கயானா வருகை 1917-ஆம் ஆண்டோடு முடிவடைந்தது.

இந்த என்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த கூலிகள் பலர் மேற்கிந்தியத் தீவுகளான டிரினிடாட், ஜமைக்கா, செயிண்ட் லூசியா, குவாடிலோப், மார்த்தினிக்கிற்கும், கயானாவின் கிழக்கில் உள்ள சூரிநாமிற்கும் அனுப்பப்பட்டனர்.

1838-ஆம் ஆண்டு தொடங்கி 1917-ஆம் ஆண்டு வரை கயானாவிற்கு மட்டும் வந்த இந்தியர்களின் தொகை 2,38,979 ஆகும்.

டிரினிடாட்..

டிரினிடாட்டிற்கு முதன் முதலாக 1845-இல் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள்.

பேட்டல் ரோசாக் எனும் கப்பலில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் போர்ட் ஆப் ஸ்பைன் துறைமுகத்தில் முதலாவது வந்த 225 இந்தியர்கள் இறங்கினார்கள்.

இந்தியர்கள் முதல் முதலாக டிரினிடாட்டிற்கு வந்த தினம் முதல் முறையாக 1978-இல் கொண்டாடப்பட்டது.

ஜமைக்கா..

1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28 இந்திய பெண்கள், 16 சிறுவர்கள் செயிண்ட் கேதரைனிலுள்ள பழைய துறைமுகத்தில் முதன் முதலாக வந்திறங்கினார்கள்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 4,550 இந்தியர்கள் ஜமைக்காவில் வந்து குடியேறினார்கள்.

1845-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே 36,412 இந்தியர்கள் ஜமைக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.

சூரிநாம்..

தென் அமெரிக்கத் தலை நிலப்பரப்பிலிருக்கும் சூரிநாம் மட்டும் டச்சுக்குடியேற்றப் பகுதியாக இருந்தது.

1853-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்துகொண்ட 74,000 கூலிகள் சூரிநாமிற்குக் கொண்டு வரப்பட்டனர்.

இதில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் 46% பேர்கள்.

கிரானடா..

1857-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே சுமார் 2,750 இந்தியக் கூலியாட்கள் இத்தீவிற்கு வந்து குடியேறினார்கள்.

இவர்கள் பிற கரீபியன் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.

ஆனாலும் தேவைக்கேற்ப மிகுதியான கூலியாட்கள் கிடைக்காததால், பல கரும்புத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்த போதிலும், பொதுவாக இத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தோன்றவில்லை.

மார்டினிக்தீவு..

காரைக்கால், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக 10,063 பேர் 1874-ஆம் ஆண்டில் மார்டினிக் சென்றுள்ளனர்.

இங்கிருந்து குவாடலோப் முதலிய தீவுகளுக்கும் சென்றுள்ளனர்.

தமிழரின் இன்றைய நிலை...

சமயம்..

கரீபிய நாடுகளில் மாரியம்மன், காளி, மதுரை வீரன் கோயில்கள் கட்டாயம் இருக்கும்.

ஏனெனில் தொழிலாளர்களாக சென்ற தமிழர்களில் முக்கால்வாசிபேர் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து சென்றவர்கள்.

மற்றும் சிலர் மதம்மாறி கிறிஸ்தவர்களானார்கள்.

ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தெய்வங்களைக் காணலாம்.

இந்துக் கோயில்களைக்கூட "சர்ச்" என்றே அழைக்கின்றனர்.

பெரும்பான்மையான கோயில்கள் சர்ச் பாணியிலேயே இருக்கின்றன. சிலைகளுக்கு பதிலாக படங்களே இருக்கின்றன.

'சேவலை' காவு கொடுக்கும் வழக்கமும்; வேலாடும் வழக்கமும் இருக்கின்றன.

சாதிப்பேய் அங்கேயும் இருக்கிறது.

கோவிலில் சிலரை உள்ளே அனுமதிப்பதில்லை.

கயானாவில் பெர்பீஸ் பகுதியில் இவ்வழக்கம் இருப்பதாக ஈசா. விசுவநாதன் தெரிவிக்கிறார்.

மாரியம்மன் தாலாட்டு, சிலக்குத்து என்னும் நூலிலுள்ள பாடல்களை பாடுகின்றனர்.

ஒரு வரியை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் பின்பற்றும் கிருத்துவ முறை காணப்படுகிறது. பக்தர்களுக்கு சுண்டல், வடை உண்டு.

சாமிமீதேறப் பெற்றவர் 'வெறியாடும்' வழக்கம் இருக்கிறது. அப்போது 'குறி'யும் சொல்லப் படுகிறது.

நோயுற்றோருக்கு மந்திரம் ஜெபித்து, தண்ணீர் தெளித்து வேப்பிலை அடிப்பதோடு, நாட்டு மருத்துவமும் செய்கின்றனர்.

இத்தகைய கோயில்களுக்கு எல்லோரும் வருகின்றனர்.

கொரன்டீனிலுள்ள ரோஸ்ஹால் கோயிலை நடத்துபவர் ஓர் ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங் கோயிலில் குறிசொல்பவர் ஒரு முஸ்லீம், மதராசிகள் (தமிழர்) நடத்தும் இக்கோயில்கள் வெறும் வழிபாட்டுக் கோயில்களாக இல்லாமல் நோய் தீர்க்கும் மருத்துவ நிலையங்களாகவும் உள்ளன.

கிரானடாத் தமிழர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறி விட்டனர்.

சூரிநாமில் இந்துக்கள் வட இந்திய முறைப்படி வழிபாடு செய்கின்றனர்.

ஜமைக்கா, குவாடலுப் போன்ற நாடுகளில் மதம்மாறி விட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முறையே 500 குடும்பங்கள் இருப்பதாக 1987-ஆம் ஆண்டு கணக்கெடுத்துள்ளனர்.

மார்ட்டினிக் தீவில் இன்றும் ஏராளமான தமிழர்கள் தமிழக முறைப்படி வழிபட்டு வருகின்றனர்.

இந்துக் கோயில்கள் மௌலின், கிராடிஸ், மாகௌபா முதலிய ஏழு இடங்களில் இருந்ததாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார்.

16 அடி உயரத்தில் இலிங்கம் மௌலின் கோயிலில் இருந்ததாக தெரிவிக்கிறார்.

மார்ட்டினிக்கில் தமிழக முஸ்லீம்களும் பெருமளவு குடியேறி இருந்தனர்.

நாகூர் மீரான் ஆண்டவருக்கு அங்கு ஒரு நினைவு பள்ளி இருந்ததாக வின்சென்ட் சாய்பு தனிநாயகம் அடிகளிடம் தெரிவித்துள்ளார் சாயுபு கூட வின்சென்ட் ஆகியிருப்பதிலிந்து நிலமையை உணரலாம்.

உணவு-உடை-தகவல் தொடர்பு..

பெரும்பாலான பெண்கள் இன்று நீக்ரோக்கள் உடையையும், கௌனையுமே அணிகின்றனர்.

ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கமே இல்லை. அமெரிக்க உடைகளே வழக்கில் இருக்கின்றன.

உணவும்கூட ஆங்கில, பிரஞ்சு முறைப்படி இருந்தாலும் சமயசடங்கு நேரத்தில் மட்டும் சுண்டல், வடை முதலியவை செய்யப்படுகின்றன.

காய்போட்டு காய்ச்சும் குழம்பை 'கொலம்போ' என்று அழைக்கின்றனர்.

புலவு, பிரியாணிக்கு கரீபியர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், முக்கிய உணவிடங்களில் கூட பிரியாணிக்கு செல்வாக்கிருப்பதாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார்.

இந்தியப் படங்களை வீடியோ நாடாக்கள் மூலம் பார்த்து வருகின்றனர்.

கரீபிய நாடுகளில் தமிழ் இதழ்கள் எங்கும் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரீபிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற விடுமுறை காலங்களில் தமிழகத்தில் தாங்கள் பார்த்து கேட்டு அனுபவித்த நாடகங்களை அங்கு நடத்தியதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அருணாசல கவிராயரின் இராமநாடகம், தேசிங்குராசன் நாடகம், இரண்யன் நாடகம், அல்லாபாஷா நாடகம் போன்றவையும், இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை நடித்ததையும் டி.டபிள்யூ.டி கொமின்ஸ் தம் நூலில் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பாடிய பல நாட்டுப் பாடல்களின் மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள் தங்கள் கிரியோல் மொழிப் பாடல்களில் கேட்கலாம்.

சில பாடல்களின் இறுதி அடிகளில் சின்னமுத்தம்மா, பெரியமுத்தம்மா என முடிவதிலிருந்து அறிகிறோம்.

தமிழ்மொழியின் நிலை..

கரீபிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று யாருக்கும் தமிழ் தெரியாது.

ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், கிரியோல் பேசுபவர்களாக மாறிப்போய் விட்டனர்.

தமிழர்களுடைய பெயர்களை எழுதிய பல்வேறு நாட்டு தோட்ட முதலாளிகள் அவரவர் மொழிக்கேற்ப மாற்றி எழுதி வைத்துள்ளனர்.

அதை மாற்றாமல் பல தமிழர்களும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளனர்...

மரியாய் - மாரியம்மா
வெள்ளினி - வள்ளி

என மாறி இருக்கிறது.

இந்துக்களாக இருப்பவர்கள் கூட தங்கள் பெயரின் பின் ஜான், ஜோசப் முதலிய கிருத்துவப் பெயர்களுடனே இருப்பது வியப்பாக இருக்கிறது.

கயானாவில் தமிழர்கள் 60 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

கங்காராம், ரோஸ்ஹால், ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-கொரன்டீன் பகுதியில் உள்ள ஊர்களிலும், மேற்கு டெமராராவில் உள்ள ஸ்டுவர்ட் வில்லிலும், ட்ரையம்பிலும் நூறுகுடும்பங்கள் இருப்பதாக விசுவநாதன் தெரிவிக்கிறார்.

கல்வி நிலை..

"தம் தாய்மொழியை யார் மறக்கிறார்களோ அவர்கள் தம் பண்பாட்டையும் மறக்கின்றார்கள்" என்று கயனாநாட்டு நோயல் மெனீஸ் கூறுகிறார்.

இன உணர்வையும், மொழியையும் இழந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாட்டு மொழியைதான் படிக்கின்றனர்.

மொழி இழந்ததால் அவர்களிடம் இலக்கியமும் போய்விட்டது.

ஆப்ரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட போதும் தங்கள் வாய்மொழி இலக்கியத்தை விடாமல் இருந்ததை தமிழர்கள் இனியாகிலும் உணரத்தான் வேண்டும்.

அமைப்புக்கள்..

ஜமைக்காவில் மட்டும் 8 இந்திய அமைப்புக்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளின் விபரங்கள் அறிய முடியவில்லை.

தமிழர் சாதனைகள்..

கயானாவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஒருசிலரில் திரு.லெஸ்வி முத்து என்னும் தமிழர் குறிப்பிடத்தக்கவர்.

இவர் ஜார்ஜ் (தலைநகரம்) டவுனில் மருத்துவராக உள்ளார். திரு. சாமி என்பவர் வியாபாரத் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பதோடு, இந்த நாட்டில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராக திகழ்கிறார்.

கல்வித்துறையில் டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி, கயானாப் பல்கலைக் கழகத்தில் உயிர்நூல் துறையில் பணியாற்றுகிறார் இவருடைய தம்பி டாக்டர் ஹெர்னன் ராமசாமி என்பவர் செல்வாக்குள்ள மருத்துவர்களில் ஒருவராக கொரன்டீன் பகுதியில் இருக்கிறார்.

ஜமைக்காவில் 1950 வரை காய்கறிகளின் ஏகபோக உரிமை தமிழர்களிடமே இருந்தன.

ஜமைக்கா பாராளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்/தொழில் புரிவோர் விபரங்கள்..

கயானாவில் வாழும் தமிழரில் 85% விழுக்காட்டினர் தோட்டங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்கின்றனர்.

பொறியியல் வினைஞர்களாகவும், நர்சு, ஆசிரியர்களாக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாழ்கின்றனர்.

நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் சென்று விட்டதாக இங்குள் தமிழர்கள் கூறுகிறார்கள்.

அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் குறைந்தது ஒருவராகிலும் அமெரிக்காவிலோ கனடாவிலோ, பிரிட்டனிலோ வாழ்ந்து வருகின்றனர்.

சூரிநாமில் சரபாச்சா, நிக்கெரி மாவட்டங்களில் சிறுவிவசாயிகளாகவும், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலிலும் இவர்களின் பங்கு உள்ளது.

ஜமைக்காவில் விவசாயத்திலும் வியாபாரத்திலும் இருக்கின்றனர். கிரனடாவில் கரும்புத் தோட்டங்களி பணிபுரிகின்றனர்.

கரீபிய நாடுகளில் தமிழர்கள் பண்பாட்டை முதலில் வட இந்தியரிடம் இழந்தனர்.

பின்னர் அந்தந்த நாட்டு மொழி, பண்பாடுகளால் விழுங்கப்பட்டவர்களாக இன்று வாழ்கின்றனர்.

இன்றைய இளம் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்திய அரசாங்கம் உலகில் உள்ள நான்கு நாடுகளில் (கயானா, சுரிநாம், பீஜி, மொரீசியஸ்) இந்திய பண்பாட்டு மையம் (Indian cultural centre) நிறுவி அதன் மூலம் இந்திமொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை பரப்பி வருகிறது.

அதுபோல தமிழக அரசும் தமிழர்கள் அதிகமாக அந்நாடுகளில் வாழ்வதால் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்கிறார் விசுவநாதன்.

ஒட்டுமொத்த தமிழரின் விருப்பமும் இது என தமிழக அரசு உணர வேண்டும்...

பாஜக டூபாக்கூர் மோடி கலாட்டா...


சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு வெங்கய்யா நாயுடு பாரதி விருது வழங்கினார்...


வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம்ஆண்டுவிழாவை ‘பாரதிபெருவிழா, தேசபக்திபெருவிழாவாக’ நேற்று தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று விமானம் வழியே சென்னை வந்துள்ளார்.

அவரை முறைப்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்றார்.  அதன்பின்னர் மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு வெங்கய்யா நாயுடு பாரதி விருது வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்பொழுது, பாரதியாரின் பாடல்கள், கருத்துகள் தேசிய அளவில் பாட திட்டத்தில் இடம் பெற வேண்டும் என கூறினார்.  தமிழும், தமிழ்நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று.  மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என்ற பாரதியின் பாடல்களை தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டபொழுது எனக்கு தமிழை கற்க நேரம் கிடைக்கவில்லை.  நான் தற்பொழுது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல.  அனைவரும் தங்களது தாய்மொழியில் பேச வேண்டும்.

கூகுள் நிறைய தகவல்களை வழங்கினாலும், குருவை போல் யாரும் தகவலை தர முடியாது.  குருவை ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் மறக்க கூடாது.

அனைவரும் முயற்சி செய்தால் பாரதி கண்ட புதுமை தேசத்தை அடைய இயலும்.  இந்தியா இதுவரை எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை என்று கூறியுள்ளார்...

பாஜக பணம் பதவி வெறிக்காக எதையும் செய்யும் பொன். ராதாகிருஷ்ணன் எனும் பொய். ராதாகிருஷ்ணன் பேட்டி...


ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க கப்பல்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், கடலில் இறந்து மிதக்கும் மீனவர்களின் உடல்களை மீட்டுக் கொண்டு வரவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது- மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்...

தமிழ்நாடு எப்போ தனிநாடு ஆச்சுன்னு தெரியலையே...


ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும்அ டிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.

இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும்.

ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது.

வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன.

வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு.... அந்த உணவு..

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.

2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.

3.உடல் சோர்வை போக்குகிறது.

4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.

5.உடல் சூட்டை தணிக்கிறது.

6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.

7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.

8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்…..

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்ததும் HOW to MAKE PALAYA SORU ?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி... பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா…. இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்..

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்…

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை பேணுவோம்...

ஆசான் திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்...


1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. இரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல் - 100 பாக்கள்
8. வைத்திய சூத்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூத்திரம் - 30 பாக்கள்
11. வாத சூத்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்

இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது.

ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்.....

தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பற்றிய சுவாரஸ்யமான முக்கிய குறிப்புக்கள்...


அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர்.

 ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள்.

பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை.

பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்.

1.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

2.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டு வைத்திருந்தார்.

3.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக் கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது.

4. ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்? என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.

5.“பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்.

6.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை.

7.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை.

8.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்.

9.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப் பார்.

10.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்.

11.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்.

12.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்.

13.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்.

14.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

15.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்.

16.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்.

17.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்.

18.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்.

19.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்.

20.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!” “ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்று அடக்க மாகச் சொல்வார்.

21.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

22. தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்...

சேரர்...


பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரச வழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள்.

சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்.

சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம்.

மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர்.

சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.

சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன.

குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

எல்லைகள்...

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும்.

ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது.

ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன.

சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர்.

ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்..

நகரங்கள்...

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது.

முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன.

சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.

தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர். (தற்போது கேரளாவில் உள்ளது)..

அரசர்கள்...

மூன்றாம் கழகக்காலச் சேரர்கள்
கழக நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.

குறிப்பாக, மூன்றாம் கழக நூல்களுள் ஒன்றானபதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும்.

இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன...

இலுமினாட்டி கள் இரகசியம்...


நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்..

நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப் பட்டுவிட்டோம் என…

முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்…

இலுமினாட்டி (Illuminati)…

பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati களை கூற வேண்டும்..

உலகின் புதிய கட்டளை (New world order) எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது.

எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.

20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது.

அவர்கள் தான் உலகின் கிங் மேக்கர் களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லாஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)

யார் இவர்கள்…

நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன.

13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது…

இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள்.

இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப் பேணுவதில்லை… காரணம், தமது இலுமினாட்டி  தன்மைக்குரிய மரபணுக்களைப் பேணுவதற்காகத்தான்.

மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம் தான் என்ன…

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…

ஒரு உலகம்.. ஒரு அரசு என்பது தான் இவர்களின் நீண்டகாலத் திட்டம்.

இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…

இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்தி வருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

உதரணமாக…

சில வகை இசை வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது..

மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.

(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்… )

முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு.

அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்…

மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத் தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு… நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்..

ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலைவலி..
ஆசியா பகுதியை சேர்ந்தவர்களும்…. இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்… இவர்களின் மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்...

ஒரே பெயர் ஒரே சின்னம்...


சென்ற தேர்தலில் தற்போது போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது நடைபெறும் தேர்தலில் மதுசூதனன் என்ற பெயருடைய வேறு வேட்பாளருக்கு இரட்டை மின் விளக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் மதுசூதனன் என்ற பெயரில் 3 நபர்கள் போட்டியிடுகின்றனர்.

மலபார் என்பது தமிழே...


கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ்மொழியில் தான் முதல்முதலாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச்சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை ”மலபார்மொழி” என்றழைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழியில் முதன்முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு மேல்நாட்டினர் தான் தமிழ்மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர்.

அவ்வாறு முதல்முதலாக உருவாகி கொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன.
அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில் தான் இந்தநூல் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சில விபரங்கள்...

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கலேசுமாயிருக்கற அகராதி.
A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779
printed vapery...

வங்கியில் பணம் போட்டவர்கள் இனி ஒரு பைசா கூட திரும்ப பெற முடியாது : மத்திய பாஜக மோடி அரசின் புதிய சட்டத்திற்கு.. பாமக அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு...


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து...

நலிவடையும் வங்கிகளைக் காப்பாற்றுவதற்கான புதிய அமைப்பை உருவாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட முன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ள சில பிரிவுகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மக்களின் இந்த அச்சத்தைத் தீர்க்க வேண்டிய மத்திய அரசு, மக்களை திருப்திப்படுத்தும் வகையில் விளக்கமளிக்கக் கூட முன்வராதது கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதித் தீர்வு மற்றும் வைப்பீடுக்கான காப்பீட்டு சட்ட முன்வரைவு என்ற புதிய மசோதா தான் அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம் ஆகும். கொடுத்தக் கடன் திரும்ப வராத சூழலில் வங்கிகள் நலிவடைந்து விட்டால், அவற்றைக் காப்பாற்ற ‘தீர்வு நிறுவனம்’ என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவது தான் இச்சட்டத்தின் நோக்கமாகும். இதில் எந்தத் தவறும் இல்லை.

நலிவடையும் வங்கிகளைக் காப்பாற்ற இந்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுகள் தான் ஆபத்தானவையாக உள்ளன. இப்போதுள்ள நடைமுறைப்படி வங்கிகள் நெருக்கடிக்கு ஆளானால், அந்த வங்கிகளுக்கு அரசே நிதி உதவி செய்து காப்பாற்றும். ஆனால், புதிய சட்டத்தின்படி வங்கிகளுக்கு அரசு நிதியுதவி அளிக்காது. மாறாக, வங்கியில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ள நிதியை பயன்படுத்தி நெருக்கடியை வங்கிகளே சமாளித்துக் கொள்ள வேண்டும். இது மிகத் தவறானது.

புதிய சட்டப்படி மக்களின் சேமிப்புக் கணக்கில் உள்ள பணத்தை, குறிப்பிட்ட காலத்திற்கான வைப்பீடாக மாற்றிக் கொள்ளவும், அதற்கு மிகக்குறைந்த வட்டி வழங்கவும் வங்கிகளுக்கு அதிகாரமளிக்கப்படும். ஏற்கனவே உள்ள வைப்பீடுகளின் கால அளவை அதிகரிக்கவும், வட்டி அளவை குறைக்கவும் முடியும். இதனால், குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்ப விழாக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  வாடிக்கையாளர்கள் செய்துள்ள முதலீடுகளை அவர்களுக்கு தேவையான நேரத்தில் எடுக்க முடியாது. இதனால் வங்கிச் சேமிப்பு, வைப்பீடு ஆகியவற்றின் அடிப்படை நோக்கங்களே சிதைக்கப்பட்டு விடும்.

இதைவிட பெரிய ஆபத்தும் புதிய சட்டத்தில் உள்ளது. 1961-ஆம் ஆண்டின் வைப்பீடு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டத்தின்படி வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைப்பீடு செய்யும் தொகையில் ரூ.1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படும். அதன்படி ஓர் வங்கி நலிவடைந்து விட்டால் அதில் ஒரு லட்சம் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முழுப் பணமும் திரும்பத்தரப்படும். ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பணம் வைப்பீடு செய்திருந்தவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும். ஆனால், புதிய சட்டத்தின் 52-ஆவது பிரிவின்படி ரூ.1 லட்சம் வரையிலான காப்பீடு ரத்து செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு பைசா கூட வழங்க முடியாது என்று தீர்வு நிறுவனம் அறிவிக்க முடியும்.

கடந்த காலங்களில் வங்கிகள் நலிவடைந்தால் கூட அது மூடப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதிக்காது. மாறாக, அவ்வங்கியை பிற வங்கிகளுடன் இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும். ஆனால், புதிய சட்டத்தின்படி அந்த வாய்ப்புகள் பறிக்கப்படும். நலிவடைந்த வங்கிகள் அவற்றின் முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு மட்டுமே சீரமைக்கப்படும். அதாவது வங்கி நிர்வாகம் செய்யும் தவறுகளால் ஏற்படும் இழப்புகளை வாடிக்கையாளர்கள் தாங்க வேண்டும். வங்கிகளின் தவறுகளுக்காக வாடிக்கையாளர்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.

புதிய சட்டம் குறித்து மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் அதைப்போக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மத்திய நிதி அமைச்சகமும், நிதி அமைச்சரும் மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர்.

வாடிக்கையாளர் நலன் எந்த வகையில் பாதிக்கப்படும் என்ற வினாவுக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இது ஐயத்தை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இத்தகைய சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும். சைப்ரஸ் நாட்டில் இதேபோன்ற சட்டம் கொண்டு வரப்பட்டு, அதனடிப்படையில் கடந்த 2013-ஆம் ஆண்டில் சைப்ரஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் பணம் பறிப்போனது. அதேபோன்ற நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது. 2008-ஆம் ஆண்டில் உலக முழுவதும் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட போதும் கூட இந்திய வங்கிகள் வலிமையானவையாக திகழ்ந்தன.

ஆனால், பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்கள் திரும்பச் செலுத்தப்படாததாலும், அவை தள்ளுபடி செய்யப்பட்டதாலும் தான் இந்திய வங்கிகள் நலிவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் நிதித் தீர்வு மற்றும் வைப்பீடு காப்பீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டால் வாடிக்கையாளர்களின் பணம் பறிக்கப்படக்கூடும்.

வங்கிகள் அமைக்கப்பட்டதன் நோக்கமே வாடிக்கையாளர்களின் பணத்தை காப்பதும், வளர்ப்பதும் தான். அதற்கு மாறாக வாடிக்கையாளர்களின் பணத்தைப் பறிக்கும் சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. எனவே சர்ச்சைக்குரிய நிதித் தீர்வு மற்றும் வைப்பீடு காப்பீட்டு சட்டத்தை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்...

டிசம்பர் 11... 1882 -கவிஞர் சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாள்...



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இன்று நம்மில் பலர் எழுத
காரணமாக இருக்கும்
நம் கவிஞன் பாரதிக்கு
வாழ்த்து சொல்வோம்...

பாரதியே நின் புகழ் வாழ்க
வாழ்க வாழ்க வாழியவே....

எது எதற்கோ நேரம் ஒதுக்குகிறோம்
தமிழ் உணர்வை ஊட்டிய
விடுதலை கவிஞனுக்கு
வாழ்த்து சொல்ல
ஒரு நிமிடம் ஒதுக்குவோம்..

மகா கவியே..
மீண்டும் ஒரு முறை
பிறந்து வா..

நாம் இருவரும் கை கோர்த்து
தமிழனுக்கான சுதந்திரத்தை
வென்றிடுவோம்...

குமரியில் மிதக்கும் சடங்லங்களை கண்டு தமிழ் மறையோனே வெட்டி தலைகுணிந்த படம்...


இதயத்தை அளவில்லாமல் குத்தி இழுக்கின்றது மாளாத துயரம்...

எம் தமிழன் கட்டிய கோவிலில் வேற்று மொழிக்கு என்னடா வேலை...?


அது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் நகரமடா...