14/05/2017
மே17 இயக்கத்திற்கு.. கீழடி குறித்த எனது கேள்விகள்...
கொந்தகை என்கிற ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தான் கீழடி..
திருமுருகன் காந்தி அவர்கள் கொந்தகை என்னும் பெயரை தப்பி தவறி கூட சொல்வதில்லை எதனால்?
பூம்புகார் நாகரீகம் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, ஆதிச்சநல்லூர் நாகரீகம் பத்தாயிரம் ஆண்டுகளை கடந்தது, 50 ஆயிரம் ஆண்டுகளை கடந்த லெமூரியா நாகரீகம், அத்திரப்பாக்கத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 15 லக்ஷம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கோடாரி என்று இதுவரை தமிழர்களின் பல தொன்மையான நாகரீகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அவ்வளவு ஏன்? தொடர்ந்து 9 ஆயிரம் ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் ஒரே நகரம் இந்தியாவில் மதுரை மட்டுமே.
கீழடி 2500 ஆண்டுகள் பழமையான நாகாரீகம் அவ்வளவு தான்.
ஆனால் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் 3600 ஆண்டுகளுக்கு முன் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது.
இது குறித்து சந்தேகம் இருந்தால் ஐயா Orissa Balu மற்றும் ஐயா ஐராவதம் மகாதேவன் ஆகிய இருவரிடமும் திரு முருகன் காந்தி அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ஐயா ஒரிசா பாலு, ஐயா ஐராவதம் மகாதேவன் இருவருமே மிக சிறந்த தமிழ் ஆர்வலர்கள் அதே சமயம் archaelogy Department டை சேர்ந்தவர்கள்.
கீழடியில் ஹிந்து மதம், ஆரியம் குறித்த எந்த சுவடும் கண்டு பிடிக்கவில்லை. தமிழர்களின் வாழ்வில் ஆரியம் புகுவதற்கு முன் உருவான நாகரீகம் கீழடி என்று எதற்கு? திருமுருகன் காந்தி அவர்கள் திரும்ப, திரும்ப சொன்ன பொய்யையே சொல்லி கொண்டிருக்கிறார்.
ஆரியம் என்றால் என்ன என்பதை பற்றி ஏற்கனவே பக்கம், பக்கமாக என் போன்ற பலர் எழுதியாச்சு.
ஆரிய, திராவிட வாதம் செய்வது எனது நோக்கம் அல்ல.
2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் அனைவருமே இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள் என்று திருமுருகன் காந்தி அவர்கள் சொல்வது சீப்பு, சீப்பா வரலை.
பத்தாயிரம், பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பல சிவன், பெருமாள், அம்மன் விக்ரகங்கள் எவ்வளவு? இதுவரை தமிழ்நாட்டில் அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என்பது ஐயா ஒரிசா பாலு, ஐயா ஐராவதம் மகாதேவன் போன்றவர்களுக்கு தெரியாதா என்ன?
சிவன் இருப்பதாக சொல்லப்படும் கயிலை மலையை காட்டிலும் திருவண்ணாமலை பல லக்ஷம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
சைவம், வைஷ்ணவம் என அனைத்துமே தோன்றியது இந்த தமிழ் மண்ணில் தான்.
12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் அவதரித்த புண்ணிய பூமி இது.
திரு முருகன் காந்தி அன்னே. சும்மா வாயால் வடை சுடாதீங்க.
கீழடியில் ஆய்வு நிறுத்தப்பட்டது தவறு தான்.
ஐயா அமர்நாத் போன்றவர்கள் அரும்பாடு பட்டு செய்த ஆய்வு இந்த கீழடி.
அமர்நாத் போன்றவர்களை கீழடியில் இருந்து எதனால்? மத்திய அரசு இடமாற்றம் செய்தது என்பதற்கான விளக்கத்தை தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
நிறுத்தப்பட்ட கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பல ஆய்வுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திரு முருகன் காந்தி அவர்கள் போராடினால் அவர் பின்னே என் போன்ற பலர் அணிவகுக்க தயார்.
இனி திரு முருகன் காந்தி அவர்கள் இதுபோல் உளராது இருக்க வேண்டும்.
அண்னன் திரு முருகன் காந்திக்கு ஆரிய பவன் இட்லி பார்சல்...
குற்றாலம் அருவியில் பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண் காவலர்கள், பெண் சுற்றுலா பயணிகள் புகார்...
குற்றாலல் மற்றும் ஐந்தருவிகளில் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடங்களில் ஆண் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளது அங்கு வரும் பெண்களிடையே சங்கோஜத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பலர் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கருதும் காவல் துறையின் நடவடிக்கை வரவேற்க தக்கது என்றாலும், பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண்களை நிறுத்தியது ஏன் பெண் காவலர்களை நிறுத்தலாமே என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலா பயணிகள்.
குளிக்க சென்ற சுற்றுலா பெண் பயணி ஒருவர் , உங்கள் பெண் உயர் அதிகாரிகள் இங்கு குளிக்க வந்தால் இப்படித் தான் நீங்கள் நின்று பார்ப்பீர்களா ? என கேட்டு போலிசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சமையல்காரர் பஞ்சவர்ணத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை சமையல் காரராக இருந்தவர் பஞ்சவர்ணம், இவருக்கு தற்போது வயது 80, இவரது மகன் முருகேசனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனராக நியமித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து முருகேசனை வெளியே அழைத்த மர்ம கும்பல் கத்தியால் குத்த முயன்றுள்ளது. இதை பார்த்த பஞ்சவர்ணம் அதை தடுக்க முற்பட்டபோது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
முருகேசன் அதிகாரியாக இருந்தும் சைதாப்பேட்டை போலிசார் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் முருகேசன் உதவி கமிஷனரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
மறைந்த முதல்வரால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் புகாரை கூட காவல் துறையினர் கண்டு கொள்ளவில்லை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
ஏற்கனவே மறைந்த முதல்வரால் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் அமைச்சரால் மிரட்டப்பட்ட நிலையில் தற்போது அதே பாணியில் மற்றுமொரு சம்பவம் நடைபெற்றுள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது...
மனித மாமிசம் உண்ணும் மனிதர்களும் தமிழர்களும்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு தீவு இருந்ததாக வரலாறு உண்டு.. அந்த தீவுக்கு பெயர் மணிப்பல்லவம்...
இங்கு நக்கசாரனர் என்ற பெயருடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் இந்த நக்கசாரனர்என்பதற்கு அர்த்தம் மனிதனை உண்ணுபவர்கள் என்று அர்த்தம்..
ஆம் இவர்கள் கேனிபலிசம் என்று அழைக்கப்படும் மனித மாமிசத்தை உண்ணுபவர்கள்...
இந்த மனித மாமிசத்தை உண்ணும் தீவான மணிப்பல்லவம் தீவுக்கு அருகே சாவகம் என்ற பகுதி இருந்த்தாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது..
இதன் தலைநகரம் நாகபுரம் என்றும் குறுப்பிடப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சாவகம் என்ற தீவில் பேசிய மொழி தமிழ் தான்...
நாடுகாண் பயனியான தொலமி சபதாய் தீவு என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது சாவகத்தை சபதாய் என்று குறித்துள்ளார் .
நாம் ஜாவா தீவு என்றும் சுமத்ரா தீவு என்றும் கேள்விப்பட்டுள்ளோம் அல்லவா அந்த தீவு தான் இந்த சாவகம் தீவு.
ஆகவே ஜாவா சுமத்ரா பகுதியில் தமிழ் மக்கள் ஆரம்பகாலத்தில் இருந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை.
மேலே குறிப்பிட்ட மணிபல்லவம் தீவில் நக்கசாரனர் என்ற மனிதனை உண்ணும் மனிதர்கள் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை...
ஆனால் இந்த சாவகம் தீவில் வாழ்ந்த நாகபுரத்து மக்கள் நேரடியாக தமிழகம் வந்தார்கள் என்ற வரலாறு உள்ளது..
இவர்கள் தமிழகத்தில் வந்து சேர்ந்த ஊர் பதிரிதிட்டா என்ற ஊர்.
தமிழகத்தில் உள்ள பதரி திட்டா என்ற ஊருக்கு இந்த நாகர்கள் வந்ததால் நாகர்களின் பட்டினம் ஆனது.
ஆம் இன்றைய நாகப்பட்டினம் என்றழைக்கப்படும் ஊர் தான்...
ஆகவே தமிழர்கள் மனித மாமிசம் உண்ணக்கூடிய மனிதர்களையும் சமாளித்துள்ளார்கள் என்பதாக தெரிகிறது..
குறிப்பு : மணிப்பல்லவத்தை நைனா தீவு என்றும் ஒரு கருத்து உள்ளது..
இந்த தீவு இன்றும் இலங்கையில் உள்ளது.
ஆனால் இந்த தீவுக்கும் மணிப் பல்லவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாக பல செய்திகள் கிடைக்கிறது.
அதனால் எனது ஆய்வின் அடிப்படையில் உறுதியாக கூற முடியாது.
ஒரு வேலை நைநா தீவாகவும் இருக்கலாம்...
பாவிகளின் பைபிள்...
புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..
பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..
ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..
இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..
இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...
ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?
1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..
கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..
கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.
பிரபலமான பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.
ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..
என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....
பரவலாக பரவியது இந்த பைபிள்..
பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..
பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.
இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....
காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.
ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ..
இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...
இப்போது விஷயம் எனனவென்றால்..
ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...
அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..
சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..
இதன் சொர்ப அளவு மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும் ....
காயகல்பம்...
கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.
அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்
மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்
தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு
பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே
- திருமந்திரம்..
கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.
கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.
இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?
தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...
நாயூடு - நாயர் - நாயகே - நாயக்கர் எல்லாம் ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள்...
இலங்கையில் தமிழினத்தை அழித்தது தெலுங்கர்கள்...
தமிழகத்திலும் இதுவரை அழித்து ஆண்டுக் கொண்டிருப்பதும் தெலுங்கர்களே...
இந்த வடுக (தெலுங்கு) இனவெறியர் வைகோ என்ற தமிழ்ப் பெயரில் யாரும் அழைக்காதீர்கள்...
இவருடைய உண்மைப் பெயர் வை.கோபால்சாமி நாயுடு, இவர் தமிழ் இனத்தைக் கருவறுக்க முகமூடி, அரசியலுக்கு இருபது ஆண்டுகள் முன்பு தனது உண்மைப் பெயரை அடையாள மாற்றத்தின் வாயிலாக மாற்றி நம்மை மோசடி செய்கின்றார்...
ஆகவே தமிழர்கள் இவரது உண்மைப் பெயரான வை.கோபால்சாமி நாயுடு என்றே அழைத்து விழிப்புடன் அடுத்த தலைமுறைக்கும் அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள்...
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்..
இனம் இனத்தோடு தான் சேரும்..
நம்மைப் பகைமூட்டிக் குளிர்காயும் வடுகத்தை இனியும் நம்ப வேண்டாம்...
வைகோ நாயூடு - ஈழத் தமிழர்களை கொன்ற பித்தலாட்ட துரோகி...
கொன்று ஒழிக்கப்பட்ட ஈழத்தின் இறுதி நிமிடம் வரை அண்ணன் நடசேன் அவர்களும் இன்ன பிற தலைவர்களின் நேரடி உரையாடலில் இருந்த ஒருவர் இந்த பித்தலாட்ட வைகோ.
ஒரூ தலைவனின் திறமை தோல்வி வரும் பொது அதற்கு முழு பொறுப்பு ஏற்கும் பக்குவத்தில் உள்ளது .
புலிகளின் அரசியல் தோல்விக்கு மிக பெரிய பொறுப்பு இந்த பித்தலாட்ட வைகோவிற்கு உண்டு .
ஆனால் அதனை இவர் இன்னும் மறுத்து மீண்டும் போர் வெடிக்கும், ஈழப் படை ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது என்று உதார் விட்டுக் கொண்டு தனக்கு வர வேண்டிய நிதிகள் அடிபடாதவாறு கிளறி விட்டு கொண்டு இருக்கிறார்.
அரசியலில் கில்லாடியான கலைஞரையே தூக்கி சாப்பிட போன காரணாத்தால் இவரை விரட்டி அடித்தார் கருணாநிதி...
தமிழகத்தில் ஈழ வேட்கை பற்றி எரிந்த எண்பதுகளில் தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்கும் எனும் வேளைகளில் ஈழத் தலைவர்களுடன் நெருக்கம் பேணிய வைகோ ஈழ ஆதரவையே தனது அரசியல் சக்தியாக மாற்றி காட்டியவர் .. இந்த ஈழ ஆதரவு வெளிப்பாடு பிறப்பால் இவர் தினமும் தெலுங்கு பேசும் நாயூடு என்பதை பலரும் மறக்க உதவியது..
இவர் ஒன்றும் கரை படியாத கரங்களுக்கு சொந்தகாரார் கிடையாது.
இவர் பலமாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் பொது திண்டிவனம் ராமமூர்த்திக்கு வலது கரமாக விளங்கிய இவர் மச்சினன் மூலம் இவர் அடித்த கோடிகள் தாராளம்.
திண்டிவனம் இராமமூர்த்தி ஒரு காலத்தில் பதவி இறக்கம் செய்யப்பட்டது பலருக்கும் நினைவு இருக்கும். அன்றைய கால கட்டத்தில் இவர் சகாயத்தால் நாயூடு நாயகர்கள் பலரும் பல அரசு பணிகளில் அமர்ந்தனர், இவர் பினாமிகள் பலரும் பல்வேறு வகைகளில் சொத்து, கல்லூரி என செல்வ செழிப்பு ஆனார்கள்.
பலம் இருக்கும் போதும் , பதவி இருக்கும் போதும் பல இனத்து மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது ஒரு நல்ல தலைவரின் கடமை ஆனால் இந்த பிதலாட்டக்காறார் தனது சமூகத்திற்கு மட்டும் சகாயம் செய்வதால் இவர் கட்சி பல இடங்களில் மூன்றாம் நிலை, நான்காம் நிலை கட்சியாக ஒரு ஜாதி ரீதியான ஒட்டு வங்கியாக இருந்து வருகிறது..
இவர் பின்னால் வந்த இவர் சார்ந்த சமூகத்து விஜயகாந்து பல இனத்தவரையும் அணைத்து செல்வதால் அபார வளர்ச்சியை எட்ட முடிந்தது... இவரின் வீழ்ச்சிக்கு இவரே காரணம் அன்றி வேறு யாரையும் குறை கூறுவது நல்லது அல்ல..
சரி விசயத்துக்கு வருவோம் ....
இந்த அரசியல் விளம்பரதாரி முத்து குமார் மரண மேடைகளில் செய்த செப்படி வித்தைகள் யாவரும் அறிந்ததே..
சட்ட கல்லூரி மாணவர் பலரது எதிர்ப்பையும் மீறி மேடை ஏற முனைந்தது , அங்கு மீடியாக்கள்ளுக்கு தன்னை மைய படுத்தி பேட்டி கொடுத்தது என அலப்பறை செய்து அந்த கணத்தில் உருவாக இருந்த மூன்றாவது அணியை முளையிலே கிள்ளி விட்டவர்..
இவருக்கு ஈழம் என்பது ஒரு ஊறுகாயை போல.. இவர் நலம் சார்ந்த விடயங்களுக்காக மட்டுமே ஈழ பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்..
சாகும் நிலையில் இருந்த தமிழர்களை ஒரு சர்வதேச பார்வையில் எடுத்து செல்ல விடாமல் பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெறுவோம் என இறுமார்பு கொண்டு இறுதி வரை இந்திய தேர்தலை மையமாக வைத்து ஈழ பிரச்சனையின் இறுதி நாட்களை கொண்டு சென்றவர்...
மேடைக்கு மேடை பெருமையாக நடேசனிடம் பேசினேன், அவரிடம் பேசினேன், இவரிடம் பேசினேன் என சொல்லும் இவர் நடந்த விபரீத விளைவுகல்லுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்..
தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என சீறியவர் இறுதியில் என்ன ஆனது ? இவர் பின்னால் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் தமிழ் பற்று, இன பற்று இல்லையே....
நாள் முழுதும தெலுங்கு பேசும் இவர் படை தமிழுக்கு என்ன பெரிதாக செய்து சாதிக்க முடியும்..
விரட்டி விட்டவனுடன் ஒட்டி கொண்டது, ஜெயிலில் தள்ளியவருடம் உறவாடியது என இவர் செய்த கூட்டணி வித்தைகள் அருவருப்பு நிறைந்தது..
இவருக்கு என்று என்ன கொள்கை இருந்து விட முடியும்?
ஈழத்தை கொன்ற காங்கிரசை விட, வஞ்சித்த கலைஞரை விட கடைசி வரை இருந்து கழுத்தை அறுக்கும் இவர் மகா கொடியவர்..
தமிழா விழித்து கொள்..
இவர் சின்ன கலைஞர் ..
நம்புவோர் துரோகம் செய்யப்படுவர்...
தமிழா சிந்தித்து எழு...
175000 தொப்புள் கொடி உறவுகளை பறி கொடுத்து, நதிநீர் உரிமைகளை இழந்து, ஆற்று மணலை, தாது மணலை கொள்ளை கொடுத்து, மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை, உடைமைகளை, உயிர்களை பறி கொடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் அங்கீகாரங்களை மாற்று மொழியினத்தவர்களுக்கு பறி கொடுத்து, தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பிற மொழி மக்களிடம் பறிகொடுத்து, அவமானத்தின் இழிவான சாட்சியங்களாக இருக்கும் நிலை கன்னடருக்கோ, தெலுங்கருக்கோ, மலையாளிக்கோ நிகழ்ந்திருக்கிறதா?
இல்லை.. காரணம் அங்கெல்லாம் மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள்...
ஆனால் தமிழ்நாட்டில் திராவிடம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...
சீக்ரெட் கோட் ஆப் நெவஜோ...
உலகில் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று தாய்மொழி அல்லாத ஒரு மொழியை கற்று கொள்வது...
அதுவும் அந்த மொழி பாரம்பரியம் மிக்க பழமையானதாக இருந்தால் கடினம் தான்
எந்த அளவுக்கு பழமையான மொழியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதை கற்றுகொள்வது சுலபமான காரியம் அல்ல..
தமிழை இன்று சீனர்கள் முதற்கொண்டு கற்க காரணம்..
தமிழ் பழமையானதாக இருந்தாலும் பழந்தமிழ் இன்று இல்லை என்று தான் கூற வேண்டும்...
திருக்குறள் தமிழ் தான் பின்னர் எதற்கு விளக்க உரை..
புரநானூரு போன்ற சங்க இலக்கியங்களை எடுத்து தமிழகத்தில் உள்ள 10 வகுப்பு மாணவனிடம் படித்து விளக்கம் கேட்டால் தெரியாது என்று தான் கூறுவான்.
அதே போன்று பழமையான மொழிகளில் ஒன்று நவஜா மொழி..
உங்களுக்கு இந்த மொழியை பற்றி கூறுவதற்கு முன்பு இதை பேசியவர்கள்..
அதபேஸ்கள் என்கிறார்கள்..
அரிஜோனா அதபேஸ் அமெரிக்கா...
பழங்குடியினர் இரண்டாம் உலகப் போரில் எதிரிகளை நிலைகுலைய வைத்தது இந்த நவஜோ மொழித்தான்..
பழங்குடியினர் சிலரை வைத்து அமெரிக்கா இந்த இரகசிய code யை தயாரித்தது.
இந்த மொழியில் தான் தகவல்கள் பரிமாற பட்டது...
ஜப்பானியர்களின் மொழியை புரியாத தவித்த உலகம் இந்த நவஜோ மொழியையும் அதனுடைய code யையும் புரியாமல் தவித்தது ...
நவஜோ இன்றும் அமெரிக்காவில் சில பகுதிகளில் பேசப்படும் ஒரு மொழி...
இந்த மொழி பேசப்படுவதை கேட்டீர்கள் என்றால் வித்தியாசத்தை உணர்வீர்கள்...
உதாரணமாக...
zasbas :
THALAITH ih
NAKI h
THAA
DII
ASHTHALA i
HASTHA
TSOSTS I'd
tseebii
nahast ei
neeznah i
மேலே உள்ள எழுத்துக்கள் ஜீரோவில் இருந்து பத்து வரை...
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க யாராவது வந்தா செம மாத்து விழும்- இயக்குனர் கௌதமன் ஆவேசம்...
ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளைத் தொடங்குவதற்காக யாராவது வந்தால் அவர்களை விரட்டியடிப்போம் என்று இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தேர்தலின் போது மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று இயக்குனர் கௌதமன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரேகார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனியர் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தம் நடைமுறை வழக்கப்படியே கையெழுத்திடப்பட்டதாகவும், மக்களின் கருத்தின் அடிப்படையிலேயே திட்டம் முழுவதம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும் திட்டத்தை செயல்படுத்த மும்முரமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
32வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களை நேரில் சந்தித்தார் இயக்குனர் கௌதமன்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் எண்ணத்தில் அதிகாரிகள் யாரேனும் இங்கு கால் வைத்தால் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மண்வளம், நீர்வளம் மட்டுமின்றி விவசாயத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டம். வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசு மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு வருவதாக கௌதமன் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காரைக்காலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தேர்தலின் போது தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தை சங்கிலி மற்றும் பூட்டு போட்டு பூட்டி பெரும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று விடுதலையானவர் இயக்குனர் கௌதமன்.
தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வரும் அதிகாரிகளை விரட்டியடிப்போம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது...
பாஜக வானதி சீனிவாசன்...
Zylog Systems India Limited கம்பெனியில் பாஜக தலைவி வானதிக்கு 1,20,000 ஷேர்களும்...
அவரது கணவர் ஸ்ரீநிவாசனுக்கும் அதே அளவு ஷெர்களும் ஆக மொத்தம் கணவன் - மனைவி சேர்த்து சுமார் 2,40,000 ஷேர்கள் இருந்து...
அதை தனது சட்ட மன்ற தேர்தல் Affidavitல் காட்டாமல் மறைத்திருந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் Suppression of fact படி ( People's Representation Act of 1951 ) படி குற்றமே....
மனைவி அமைவதெல்லாம்...
உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.
ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா.
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.
அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டு தான் சாப்பிடுவாராம். அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும் கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்று நெகிழ்ச்சியாக சொன்னாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்?
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம். இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே.
அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.
நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு.
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள்.
ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர்
மனைவியின் பிரிவைத் தாளாமல்
அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு.
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே.
அன்புடையவளே. என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே. என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே.
பின் தூங்கி முன் எழுபவளே. பேதையே. என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ. என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறு பாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா...
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.
அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்...
முருகன் - பல பெயர்கள் பற்றி பாவாணர்...
பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள்,
தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக் கொண்டு சேந்தன் (சிவந்தன்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள்.
சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும்.
வேட்டைத் தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும் மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள்.
குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும்.
குறிஞ்சி நிலத்தின் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின.
முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும் தோன்றியது.
கந்து என்றால் தூண், கந்தம் என்றால் பெருந்தூண் என்று பொருள்.
கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்.
என்ற புறநானூற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்குகாட்டலாம் - பாவாணர்...
Subscribe to:
Posts (Atom)