10/09/2020

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு...



இதுக்கு அடிப்படையான மூலிகைகள்...

கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை.

இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும்.

வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும் போது உணவில் பத்தியம் உண்டு.

புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்...

பாஜக பொன்.ராதா பரிதாபங்கள் 😂


ஏய் தகப்பா... அத்தைக்கு பதவி கொடுத்த? நீ செத்த...


பழந்தமிழனின் வழிபாட்டு முறை...



ஆதித் தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்து போன வீரர்களின் நினைவாக கல்நட்டு, அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை படையலிட்டு, பலியிட்டு வணங்குவதாகும்.

இறந்து போன மனிதனின் உடலோடு அவன் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பொருட்கள், அந்த குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்து புதைத்து தனது முன்னோரை தமிழன் வழிபட்டு வந்தான்.

இறந்தவர்களின் நினைவும், அது சார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுக்கல் வழிபாடென்பது அமைந்தது.

நடுக்கல்லுக்கு பூக்களைச் சூடி மயில் தோகையை அணிவித்து வழிபாடு செய்ததை அகநானூறும் கரையை அழிப்பது போல் பீறிட்டு வரும் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தியது போல் பாய்ந்து வரும் பகைவர் படையை தடுத்து நிறுத்திய வீரர்களுக்கு நடப்பட்ட நடுக்கற்களைப் பற்றி புறநானூறும் பேசுகின்றன.

இறந்தவர்களின் நினைவாக நடப்பட்ட நடுக்கல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டப்படுவதும், கள் படைக்கப்பட்டதும் முக்கிய இடம் பிடித்தது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சிறூர்ப்
புடை நடு கல்லின் நாட்பலி யூட்டி (புறம்:329).

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறம்:232).

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும் (அகம்:35).

இறந்தவனின் நினைவிடத்தில் அவன் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியை மேற்கண்ட சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

நடுக்கல்லை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு பகுதியினர் சமுதாய வளர்ச்சியையொட்டி புதிய மாற்றத்தை நோக்கி சென்றனர்.

குழுவாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்தனர்.

அரசு என்ற நிறுவனம் தோன்றியது; உடமை வர்க்கம் சான்றோர்களையும், உயர்ந்தோர்களையும் உருவாக்கியது; உழைப்போடு நேரடியாக தொடர்பில்லாத இந்த முலாம் பூசிய கூட்டமே ஆதிக்கத்தை தங்கள் கையில் வைத்திருந்தது.

இனக்குழு காலத்திலிருந்த பொதுவான நிலைமை மாறி, உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற இரண்டு கருத்துக்களும் அதனையொட்டி இரண்டு வகையான சமூக வாழ்வும், பழக்க வழக்கங்களும், கடவுள்களும் உருவாயின.

அரசுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் தொடர்ந்து யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தன. யுத்தங்களில் மனிதர்கள் முன்பு போலவே செத்து மடிந்தனர்.

ஆனால் இப்பொழுது செத்துப் போன சான்றோர்களுக்கு மேல் உலகமும், வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் கீழோர்களுக்கு வழக்கம் போல் ஊர் எல்லைகளில், காட்டுப் பாதைகளில் நடுக்கற்கள் நிறுத்தப்பட்டன. அவைகளையே தங்களின் தெய்வங்களாகவும் கருதினர்.

உடமை வர்க்கம் இறந்து போன சான்றோர்களுக்காக மேலே ஒரு உலகத்தை கட்டி அமைத்து, அவர்களுக்காக வேள்விகள் நடத்தி, எரியும் அக்னியின் வழியே மேல் உலகில் இருப்பவர்களுக்கான படையலை அனுப்பியது.

ஆனால் உடமைகள் அற்றக் கூட்டம் இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவை படையலிட்டு, ஆடு, கோழி வெட்டி பலியிட்டு அவர்கள் நினைவாக தாங்களே அதை உட் கொண்டு புதிய நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்ந்தனர்.

இன்று எண்ணிலடங்கா கிராம தெய்வங்களான அய்யனார், மாடன், காடன், மாயன், சுடலை, விருமன், கருப்பு, முனி பேச்சி, ஒச்சு, காத்தாயி, வீராயி என அனைவரும் மேல் உலகத்திற்கும், வீர சொர்க்கத்திற்கும் சான்றோர்களால் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டவர்களே.

வைதீக கருத்தியலின் அடிப்படையில் புறக் கணிக்கப்பட்ட ஒடுக்கு முறையின் வடிவங்களே.

ஒடுக்குமுறை என்பதும், சுரண்டல் என்பதும் பொருளியல் தளத்தில் மட்டும் தனித்து நடப்பதல்ல. சமூக வாழ்வின் மேல் கட்டுமானமான சாதி, சமயம், சட்டம், இலக்கியமென அனைத்திலும் அது நடக்கிறது.

இந்திய சமய மரபில் நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையின் ஒரு முக்கிய பகுதி கீழோர்களின் தெய்வகள் மீதும், அவர்களின் வழிபாட்டு முறைகளின் மீதுமான தாக்குதலாகும்...

இந்தி தெரியாது போடா Tshirt விற்பனை எதிரொலி கவலையில் எச். ராஜா 🤣


உபி யில் இந்தியின் நிலமை 🤣


இன்னும் எத்தனை பேரை காவு வாங்கும் இந்த நீட் தேர்வு...


அரியலூர் அருகே எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த மாணவன் விக்னேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை...

வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

நீட் தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் விக்னேஷ் 19. என்பவர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு விவாகரத்தினால்தான் தற்கொலை செய்துகொண்டார். இப்போது அதே மாவட்டத்தில் மாணவர் ஒருவர் நீர் தேர்வினால் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது...

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் செய்த சாதனைகள்...



கட்சத்தீவு உன்னுடையது,
ஆனால் நீ போக முடியாது..

வங்கக்கடல் உன்னுடையது,
ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது..

காவிரி ஆறு உன்னுடையது,
ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

பாலாறு உன்னுடையது,
ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது.

நெய்வேலி உன்னுடையது,
ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு.

இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது,
ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது,
ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது,
ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது,
ஆனால் தமிழர் ஆள முடியாது..

இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அதற்கு தமிழனே தமிழகத்தை
ஆள வேண்டும்...

மக்கள் விரோத பாஜக மோடியின் பித்தலாட்டம்...


அமானுஷ்யம் - மனுஷங்களைப் போல தான் பேய்களிலும்... ஏகப்பட்ட குரூப்கள்...



சில வகைப் பேய்கள் மக்களோடு தான்
இருக்கும்..

நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள்.

தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள்.

ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும்..

கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ஒரே கதை சொல்றாங்கன்னா, இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள்
பேய்கள்..

செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனால் ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொரு வகை..

மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

நிறைவேறாத ஆசை பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் மெசெஞ்சர்
பேய்கள்..

நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை.

பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது.

சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார் என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய்..

சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்து விட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் பாதுகாக்கும்
ஏஞ்சல்ஸ் முக்கியமானவை..

இவை ஒவ்வொருவருடைய தோளிலும்
அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம்.

பல நேரங்களில் மயிரிழையில் தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும்.

குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க
யாருமின்றி இறந்து போனால், அவர்கள்
ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்...

கனவு உலகத்துல வாழ்றான் போல 🤣


வடிவேலுவின் காமெடிகளை மிஞ்சும் அதிமுக எடப்பாடி அரசின் ஊழல்கள்...


பிரம்மத்தை நோக்கி - 3...



நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம்.

தாய் தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து வந்துள்ளோம்.

தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்களும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்களும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.

சரி தாய் தந்தையின் மூலம் என்ன?

நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.

இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரி வடைகிறது.

ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு தந்தையின் மூலம் ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.

அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.

இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.

ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்....

நீதிமன்றம் எனும் நிதிமன்றம்...


திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலின் பரிதாபங்கள்...


நீங்கள் ஒரு காந்தம்...



உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான். காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான். அவன் தன் காந்தசக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா-மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள்-உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம்-ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக்கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்...

அந்த மாரடைப்பே காவல்துறையால் தான் வந்தது...


ஞாபக சக்தி பெருக மணலிக்கீரை...



ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும்.

மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


திமுக கட்சியில் பிளவு ஏற்படுத்த பொன்முடி முயற்சி செய்ததாலும், தலீத் என்பதால் ஆ.ராசா ஓரங்கட்டபட்டதால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்கவும் கொடுக்கப்பட்ட டம்மி பதவி...


ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்...



பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப் பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.

சூரியன் தன் ஈர்ப்புச் சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம்  பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம்  ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்.

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்...

உனக்கென்னம்மா நீ பைத்தியம்.... தண்ணீய போட்டு என்னவேணாலும் உளறுவ...


நடிகைக்கு மக்கள் வரிப்பணத்தில் Y+ பாதுகாப்பு... வருங்கால பாஜக வேட்பாளர்...


மக்கள் விரோத பாஜக மோடி...


அப்போ சொன்னது தான்.. இப்பவும் சொல்றேன்...



தமிழினப் பகை பெரியாரை தூக்கிப் பிடிப்பவன்...

தமிழினத்தின் எதிரியே...
தெலுங்கர்களின் காவலனே..

ஆகையால் பெரியாரை ஆதரிப்பவன் யாராக இருந்தாலும்...

அவன் எம் தமிழினத்தின் எதிரியே...

கன்னட ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை...



அப்பா அப்பா என்று அம்மை மனம் குளிர, வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும்..

அம்மா அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்.

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.

- அண்ணாதுரை (திராவிட நாடு 03.07.1949).

பெரியாரின் மறுபக்கம் தொடரில் (பாகம் 14) ஈ.வே.ரா - மணியம்மை திருமணம் பற்றி விமர்சித்து அண்ணாதுரை எழுதிய முழு கட்டுரையும் உள்ளது...

பாஜக கலாட்டா...


வேடிக்கை பார்க்கும் அதிமுக எடப்பாடி...


சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...



எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும்.

அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது.

மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு.

நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm).

வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம்.

நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும்..

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.

15 வது நிமிட முடிவில் இரு நாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..

சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது.

இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை
செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப் பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டு வேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன.

நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

வத்தேறி திருட்டு திராவிடத்தை வீழ்த்தியே ஆக வேண்டும்...



தமிழ்நாட்டில் திராவிடர்கள் என்ற பெயரில் தமிழர்களை ஏமாற்றி  30 தெலுங்கு MLA, 5 கன்னட  MLA, 1 சௌராஷ்ட்ரா MLA, மற்றும் 28  தெலுங்கு MP, 1 மலையாளி MP இருக்கிறார்கள்.

ஆந்திரா, கேரளா., கர்நாடகாவில் ஒரு தமிழன் கவுன்சிலர் கூட ஆக முடியாத நிலைதான் உள்ளது...

110 கோடி முறைகேடு.. இது குறித்து வாய் திறப்பாரா ஊழல் மன்னன் எடப்பாடி...


பிரம்மத்தை நோக்கி - 2...


மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய் விடுவோம் என்கிற அறியாமை தான் அதற்கு காரணம்.

உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்கு பின் இல்லாமல் போவது இவை இரண்டும் தான். உண்மையில் இல்லாமல் இருப்பவை தான் இவை.

உன் உடலை விட்டு உயிர் நீங்கிய பின் உடலை எரித்து சாம்பலாக்கிய பின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.

அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்து விட்டால் உனக்கு மரணமில்லை.

மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்த பின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே, அந்த எண்ணங்கள் நீயா?

இல்லை அதே போல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வு தான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ...

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

தமிழின துரோகி பாஜக பொன்.ராதாக்கா உங்கள் ஓட்டு... குமரி மக்களே, சிந்தியுங்கள்...


ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய் வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல்...


ஆழ்நிலை தியானம்...



ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது.

மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்க வல்லது என்று இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது..

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும்.

நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.

இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும்.

ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும்.

மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும்.

நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும்.

மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும்.

அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது, என்று கூறுகிறார்கள்.

ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது.

இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது.

விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும்.

இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம்.

ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

பாஜக வந்தேறி பயலே...



உங்க இந்தியை பெத்து போட்டது... ஆங்கிலேயன் கிருஸ்துவன் ஜான் கில்கிர்ஸ்ட்...

அதுவும் நேரடியா பெத்து போடல...

உருது, பெங்காலி இணைச்சு இணைச்சு பல பேருக்கு பெத்து போட்டிருக்கான்..

நீ போய் உன் இந்தியை பெத்து போட்டவனை தேடு டா நாயே...

இது தமிழ்நாடு.. எங்களின் தமிழ் மொழி மட்டுமே இருக்கும்...

இந்த மரண வியாபாரிகள் கூண்டோடு களையப்பட வேண்டும்...