03/02/2018

பிளிப்கார்டில் ஆர்டர் பண்றீங்களா... உஷார்...


ப்ளிப்கார்டில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு பதிலாக சலவை சோப்பு வந்து சேர்ந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

நவி மும்பை, பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் நாக்ராலி. ஐடி துறையில் பணிபுரியில் இவர், ஃப்ளிப்கார்டில் ரூ.55,000 மதிப்புள்ள ஐபோன் 8-ஐ ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பணத்தையும் ஆன்லைனில் செலுத்திவிட்டார் நாக்ராலி.

கடந்த ஜனவரி 22 ஆம் தேதி டெலிவரி செய்பவர் பார்சலைக் கொடுத்துவிட்டுச் சென்றள்ளார். நாக்ராலி உற்சாகமாக பார்சலை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஐபோன் பாக்சில் பின்க் நிற சோப்புக்கட்டி மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து, ப்ளிப்கார்டின் புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். ப்ளிப்கார்ட் பிரதிநிதிகள் நாக்ராலியின் ஆர்டர் குறித்து ஆய்வு செய்து பார்த்து, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் ஆர்டரை டெலிவரி செய்து விட்டோம் என்று அவரது புகாரை ரத்து செய்து விட்டனர்...

தமிழா களத்தில் இறங்கி போராடு...


பைந்தமிழ்ச் சித்தர் பா.வே. மாணிக்க நாயகர் பிறந்த நாள் 2.2.1871...


தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக் கழகம் நிறுவப்படவேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஒரு கட்டிடப் பொறியாளர் என்பது பலரையும் வியக்க வைக்கும். புகைப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், தோட்டக் கலை,  குதிரையேற்றம், தையற்கலை, மோட்டார் வண்டி பழுது பார்த்தல் ஆகியவற்றில் பல்கலை வித்தகராக ஒருவர் திகழ்ந்தார். அவர் வேறு யாருமல்ல, தமிழறிஞர் என்று போற்றப்படும் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார்.

இவர் சேலம் மாவட்டம் பாகல்பட்டி என்னும் சிற்றூரில் 1871-ம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்  2-ஆம் நாள் பாகல்பட்டி சமீன் குடும்பத்தைச் சேர்ந்த வேங்கடசாமி் - முத்தம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

இவருக்குப் பெற்றோர் மாணிக்கம் என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் இவர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்று அழைக்கப்பட்டார். " பா" என்பது பாகல்பட்டி ஊர் பெயரையும்,  " வே" என்பது தந்தை பெயரையும் குறிக்கும். இவரின் பெயருக்கு பின்னால் இருக்கும் "நாயக்கர்" என்ற பட்டம் சாதியை குறிப்பது அல்ல. இவரின் தாய்மொழி தமிழ். இவரின் முன்னோர்கள் விசயநகரப் பேரரசின் படைப்பிரிவில்  பணியாற்றி வந்ததால், பெயருக்குப் பின்னால்  "நாயக்கர்" எனும் பின்னொட்டை பயன்படுத்தி வந்தனர். இவரும் முன்னோர் மரபை பின்பற்றி பெயருக்கு பின்னால் " நாயக்கர்" என்று சேர்த்து கொண்டார். நாயகர்- என்ற தமிழ்ச் சொல்லே நாயக் , நாயக்கர், என்று பிறமொழிகளில் வந்தது. நாயகர் சொல்லுக்கு தலைவர் என்று பொருள். இனி அவரை கட்டுரையில் 'மாணிக்க நாயகர்' என்றே அழைப்போம்.

பாகல்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் மணலில் எழுதிப் பழகி வந்தார் மாணிக்கம். அப்போது சோதிடன் ஒருவன் பன்னிரண்டு வயது வரை குழந்தையை வெளியில் அனுப்பினால் உயிருக்கு ஆபத்து என்று கூறிடவே, இதனை நம்பிய பெற்றோர் வீட்டிலேயே மாணிக்கத்திற்கு கல்வி புகட்டி வந்தனர்.

பதிமூன்றாம் வயதில் சேலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மாணிக்கம் சேர்க்கப்பட்டார். அந்த இளம்வயதில் தமிழில் கவிபாடும் திறனை வளர்த்துக் கொண்டார். பின்னர் சேலம் கல்லூரியில் எப்ஃஏ முடித்துவிட்டு, 1886இல் சென்னை பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். இவரின் குடும்பம் ஜமீன் குடும்பம் என்ற போதிலும், வறுமையில் வாடியது. அப்போது மாணிக்கத்தின் கல்வி கற்கும் திறனை உணர்ந்த இரா.முனுசாமி நாயுடு என்பவர் இவரின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டார்.

பொறியியல் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணக்கராக தேர்ச்சி பெற்றார். கல்லூரி நிர்வாகம் இவருக்குத் தங்கம் பதக்கம் அணிவித்து கெளரவித்தது. 1896ஆம் ஆண்டில் இவருக்கு
பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்தது. பொறியியல் பணியில் இவர் சிறந்து விளங்கியதால் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் தரப்பட்டன. உதவிப் பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் என்று பதவி உயர்வு பெற்ற இவர் சேலம், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, குண்டூர், பெஜவாடா, வால்டேர் ஆகிய ஊர்களில் பணியாற்றினார்.

சேலம் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேட்டூர் அணை இடத் தெரிவிலும், சென்னை பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்திலும் இவரின் பங்கு முதன்மையானது.

1912ஆம் ஆண்டு மாணிக்க நாயகர் திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வடநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, அவரின் நண்பரும், உறவினருமான நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களை உடன் அழைத்துச் சென்றார்.  அப்போது  தில்லியில்  ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் ஓவியத்தில் சிறந்து விளங்கிய வெ.இராமலிங்கனார் அவர்கள் மன்னரின் உருவப்படத்தை வரைந்து தந்ததோடு, தங்கப் பதக்கமும் பெற்றார். இதற்கு மாணிக்க நாயகரே முழுக் காரணம்.

1913இல் மாணிக்க நாயகர் சட்டக் கல்வி பயில இங்கிலாந்து சென்றார். அத்தோடு, அங்குள்ள தொழில் நுட்பப் பள்ளியில் காரை கட்டிட வேலை குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.  அதில் கட்டுமான பணிக்கு உதவும் 500 
கூட்டுக் கணக்குகளை ஒரே நொடியில் கண்டறியும் 'கால்குலோகிராப்'
( calculograph) கணக்கு முறையை அறிவித்தார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

மாணிக்க நாயகர் தமது பணியின் இடையே கிடைத்த ஓய்வு நேரங்களிலும், நீண்ட கால விடுப்பு காலங்களிலும் தமிழுக்கு  ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. மாணிக்க நாயகர் அவர்கள் மறைமலையடிகள் முன்னெடுத்த தனித்தமிழ் இயக்கக் கொள்கையில் பற்றுறுதியோடு விளங்கினார். மறைமலை அடிகள் இவரை தம் நாட்குறிப்பில், "இவர் ஓர் தனித்திறமார் பேரரறிஞர் (மேதை)" என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறு, மொழியியல், அறிவியல் தமிழ்ச் சொற்கள், கணக்கியல் ஆகிய துறைகளில் தமது ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டார்.

தொன்மையும், தெய்வத்தன்மையும் கொண்ட மொழி தமிழே என்றும், தமிழால் உலக மொழிகளை எழுதவும் முடியும், எழுதிப் படிக்கவும் முடியும். உலகில் தோன்றிய அனைத்துக் கலைகளையும்  தமிழில் எழுதவோ, எழுதி அறியவோ முடியும் என்பதே மாணிக்க நாயகர் வந்தடைந்த முடிவாகும்.

1917இல் சென்னையில் நடைபெற்ற தென்னிந்தியக் கழகத்தின ஆண்டு விழாவில் தமிழ் எழுத்துகளின் அமைப்பு முறைகளை விளக்கும் " தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம்" ( The Tamil Alphabet its Mystic Aspect )எனும் தலைப்பில் உரையாற்றினார். இதில் உயிர் எழுத்துகளான பன்னிரெண்டு எழுத்துகளில் குறில் எழுத்தான 'ஒ'  எழுத்து சிறப்பானது என்றும், அதுவே எல்லா எழுத்துகளுக்கும் மூல எழுத்தும் என்றார்.  இதற்கு திருமூலரின்  "ஒமென்னும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஒமெனும்" என்று தொடங்கும் திருமந்திரப் பாடலை சான்று காட்டினார்.  தமிழ் எழுத்துகளில் தாம் கண்ட மறை பொருள் கொள்கை நிலைப்பாட்டை யாவரும் ஏற்க வேண்டும் என்று அறுதியிட்டு கூறவில்லை என்பதையும் தெளிவு படுத்தினார்.

மேலும், அவர் தமிழ் எழுத்துகளை ஒலியியல் (phonetics) என்றும், வடிவியல் (Form) என்றும் வகைப்படுத்தினார். ஒலி உச்சரிப்பை படித்தவர்கள்  தவறாகவும், கல்வி பயிலாத மக்கள் சரியாகவும் பயன்படுத்துவதாக கூறியதோடு, சென்னை பல்கலைக் கழகத் தமிழ் அகராதியில் தமிழ் உச்சரிப்பை ஆங்கில எழுத்துகளில் அச்சிட்டு இருப்பதை கண்டித்துப் பேசினார்.

எடுத்துக் காட்டாக, F, S - என்ற இரண்டு எழுத்திற்கு ஒலியையும், வடிவத்தையும் உருவாக்க இயலும். இதனை ஃபோர் - Four, ஃபவ்- Five என்றும், ஃசிக்ஃச் -Six, ஃசெவன் - Seven என்றும் எழுதுவதன் மூலம் வேறு அயல்மொழி எழுத்து வடிவங்களையும், ஒலிகளையும் தமிழில் கொண்டு வர முடியும் என்றார்.

"அறிவியல் தமிழ்ச் சொற்களின் அகராதி" என்ற தலைப்பில் இவரது தொகுப்புகள் சென்னை மறைமலையடிகள் நூலகத்தில் இன்றும் உள்ளன.

மாணிக்க நாயகர் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டார். அதில் முதன்மையாக மூன்று கட்டுரைகளை குறிப்பிடலாம். இக்கட்டுரைகள் அக் கால மெய்யியல் அறிஞர்களிடமும், மொழியியல் அறிஞர்களிடமும் பெருந்தாக்கத்தை உண்டாக்கின. முதலிரண்டும் மெய்யியல் தொடர்பானது. அடுத்தது தமிழ் ஒலி இலக்கணம் பற்றியது. அது பின்வருமாறு:

1. The Tamil Alphabet and it's Mystic
2. The Evolution of Intellect in Co- ordination with God
3. Tamil Phonetics

2.10.1920இல் சேலம் நகராட்சி கல்லூரி மண்டபத்தில் "தமிழகம்" எனும் தலைப்பில் "இலெமூரியக் கண்டம்" குறித்த மாணிக்க நாயகரின் உரை அறிவியல் நோக்கோடு இருந்தது.

 மண்ணுலகம் தொடக்கத்தில் நெருப்பு உருண்டையாக இருந்ததென்றும், பின்னர் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியே முதலில் குளிர்ந்ததென்றும், அந்த குளிர்ந்த பகுதியில்தான் தமிழகம் அமைந்திருந்ததாகவும், அதன் தெற்கில் இருந்த பெயரே இலெமூரியா என்றும் குறிப்பிட்டு விட்டு, அது எப்படி கடலில் மூழ்கியது என்பதை பின்வருமாறு விளக்குகிறார்;

"ஆஸ்திரேலியா ஒரு விந்தையான நாடு. உலகின் மற்ற நிலப்பகுதியில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டது. இங்குள்ள தாவரங்கள், விணைப்பறவை, சுவர்க்கப் பறவை, ஏமு, கங்காரு முதலிய விலங்குகள் வேறெங்கும் காணப்படாதவை.

"ஆகவே ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நமது நில உலகத்துடன் சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. இது ஒரு விண் வீழ் மீன் ( வானிலிருந்து விழுந்த பெரிய எரிகல்) இது இருவகை இயக்த்துடன் (1) தன்னைத்தானே பூமி சுற்றுதல், (2) கதிரவனன சுற்றி வருதல், கூடிய உலகின் மீது வீழ்ந்த போதுதான் இலெமூரியா கடலில் மூழ்கியது. அப்போதுதான், சிந்து கங்கைச் சமவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதிகள் வெளிக் கிளம்பின."

ஆஸ்திரேலியா விண்ணிலிருந்து தென்கடலில் விழுந்த ஒரு அயல்கோள் என்பதே அவரின் கருத்தாகும். மேலும், இலெமூரியா கடல் கொள்ளப்பட்ட போது அங்கு வாழ்ந்த மக்கள் வடதிசை நோக்கிச் சென்றதாக தமது உரையில் குறிப்பிடுகிறார். தற்போது இலெமூரியக் கண்டம் பற்றி விரிவான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 90 ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்க நாயகர் கூறியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

1923இல் ஆண்டு மு.இராகவையங்கார் எழுதிய "தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி" நூலினை மதுரை தமிழ்ச்சங்கம்  வெளியிட்டது.  இந்த நூலினைப் படித்த மாணிக்க நாயகருக்கு பல்வேறு ஐயங்கள் எழுந்தன. இவர் தாம் பணியாற்றி வந்த பெர்காம்பூரில் (ஒடிசா) இருந்து நான்கு கடிங்கள் எழுதினார். இவற்றுக்கு  மு.இராகவையங்கார் இரண்டு கடிதங்கள் வாயிலாக வினா வகையில்  பதில் எழுதினார்.  இந்த வினா தொடர்பாக நா.மு.வேங்கட சாமி நாட்டாரும் மாணிக்க நாயகருக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார்.

தொல்காப்பியர் கால மறை என்பது வடமொழி கலவாத தூய தமிழ் மறை என்பதே மாணிக்க நாயகர் எழுப்பிய வினாவின் கருத்தாகும். தொல்காப்பிய காலத்திற்கு முற்பட்டே வடமொழியும், தமிழும் கலந்து வந்துள்ளது என்பதே மு.இராகவையங்கார் தந்த விடையின் கருத்தாகும்.

மாணிக்க நாயகர் எழுதிய கடிதங்களைப் படிப்போருக்கு தொல்காப்பியத்தில் அவருக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும். அதனால்தான் என்னவோ, திரு.வி.க. இவரைப்பற்றி கூறுகிற போது, "தொல்காப்பிய கடலை நாளும் கடைவார்" என்றார்.

மூவரும் எழுதிய எட்டு கடிதங்களையும் தொகுத்து "தமிழ்வகைத் தொடர் - தொல்காப்பிய ஆராய்ச்சி" என்னும் பெயரில் 1924 இல் தமது சொந்தச் செலவில் மாணிக்க நாயகரே நூலாக வெளியிட்டார்.

1927ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை பால சுப்பிரமணிய பக்தசபை ஆண்டு விழாவில் மாணிக்க நாயகர் "தமிழ் அறிவியல் சொற்கள்" எனும் தலைப்பில் உரையாற்றினார். இக்கூட்டத்திற்கு கா.சுப்பிரமணிய பிள்ளை தலைமை தாங்கினார். அக் கூட்டத்தில், " தமிழிலேயே அளவிறந்ந சொற்கள் இருக்கின்றன. தமிழ் இயற்கை மொழி. செயற்கை மொழிகளை இயற்கை மொழிகளோடு சேர்ப்பதால் தமிழ்மொழி தனது இயற்கை வளமிழந்து இறந்து விடும். தமிழ்மொழி்யானது, வடமொழி, ஆங்கில மொழி முதலியவற்றால் கலப்புற்றுக் காணப்படுவது பெரிதும் வருந்தத் தக்கதாகின்றது . இதனை நீக்கவே இச்சொற்பொழிவை ஈண்டு பேச எடுத்துக் கொண்டேன்" என்றார்.

தமிழ் அறிவியல் நூல்களில் வடசொல் கலப்பு கூடவே கூடாது என்றும், அது தெளிந்த நீருடைக் குட்டத்தில் (குளத்தில்) எருமைகளை ஓட்டிக் கலக்கிச் சேறாவதற்கு ஒப்பாகும் என்று அழுத்தந் திருத்தமாக இரண்டு மணிநேரம் பேசினார்.

ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் தமிழ்ச்சொற்களை பயன்படுத்தியதையும், அது உருமாற்றம் பெற்று இவ்வாறாக,
அலகை- ஆலோ, இஞ்சி- ஜிஞ்சர், முருங்கை- மொருங்கி, ஒதிய மரம்- ஒதினா, ஆடாதோடை- ஆடாதோடாவாசிகா, மாங்காய்- மேங்கோ என்று அழைக்கப்பட்டு வருவதையும் எடுத்துக் காட்டினார்.

மாணிக்க நாயகர் எழுதிய பெரும்பாலான  ஆங்கிலக் கட்டுரைகளையும், தமிழ்ச் சொற்பொழிவுகளையும்  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான 'செந்தமிழ்ச் செல்வி' ஏடு வெளியிட்டது.

இவரது உரைகளை தமிழாக்கம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள்
காழி.சிவ.கண்ணுசாமிப் பிள்ளை,
க.ப.சந்தோசம் ஆகியோர் ஆவார். நீதிக்கட்சி ஆதரவாளராகவும் மாணிக்க நாயகர் விளங்கியதால், அவரின் பல ஆய்வுக் கட்டுரைகளை "ஜஸ்டிஸ்" ஏடு வெளியிட்டது.

மாணிக்க நாயகர் பிராமணீய மத, மூடநம்பிக்கை கருத்துகளை எப்போதும் எதிர்த்துப் பேசுபவர். அது சமய நூல்களில் வெளிப்படும் போதும் எதிர்க்கத் தயங்காதவர். கம்ப இராமாயாணத்தை மிகச் சிறந்த தமிழிலக்கிய நூலாகக் கருதினாலும், அது ஆரியர்களுக்கு ஏற்றம் தரும்  நூலாகவே கருதினார்.

1919ஆம் ஆண்டு குன்னூர் ஆனந்தாஸ்ரமம் மகரிசி சிவத்தியானாந்த சுவாமிகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பன் பிறழ்ந்து நிற்பதை குறிப்பிட்டு கடிதம் எழுதினார். அதுமுதலே இராமயண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். வால்மீகியின் நூலில் காட்டும் ஆரிய ஒழுக்கத்திற்கும், கம்பன் காட்டும் மக்கள் ஒழுக்கத்திற்கும் வேறுபாடு இருப்பதை உணர்ந்ததால் கடும் எதிப்பைக் காட்டினார்.

1931இல் சென்னை பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தில் மறைமலையடிகள் முன்னிலையில் "கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்" என்ற தலைப்பில் மாணிக்க நாயகர் உரை நிகழ்த்தினார். அது பின்னர் நூலாகவும் வெளி வந்தது.

பெரியாரும், அண்ணாவும் கம்பராமாயணத்தை எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்தவர் மாணிக்க நாயகர். பெரியாரும் கூட  இவரிடமிருந்தே இராமாயண எதிர்ப்பை கற்றுக் கொண்டார்.  மாணிக்க நாயகரும் பெரியாரின் நெருங்கிய நண்பர்கள். ஈரோட்டில் வெ.இராமலிங்கனாரும், பெரியாரும் மாணிக்க நாயகரை சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்போது மாணிக்க நாயகர்  ராவணனை உயர்த்திப் பிடித்து "ராவாயாணம்" பேசுவதை பெரியார் ஆர்வத்தோடு கேட்டதாக வெ. இராமலிங்கனார் தாம் எழுதிய 'என்கதை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்க நாயகர் இறக்கும்வரை தமிழுக்கு உழைப்பதை நிறுத்திக் கொள்ள வில்லை. 1931ஆம் ஆண்டு திசம்பரில்  சென்னை திருமயிலை சன்மார்க்க சகோதரத்துவ சங்க விழாவில் "மொழி முதற் தமிழர் கடவுட் கொள்கை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருந்தார். அவர்உடல்நலம் குன்றி வரமுடியாமல் போனதால் மகன் குணா மாணிக்கம் உரையைப் படித்தார்.

மொழி முதல் தமிழர் தமது கடவுள் கொள்கையை ஏடுகளில் எழுதவில்லை என்றும்,  தமிழ்மொழி அமைப்பிலே கடவுள் கொள்கை இருப்பதாகவும், கல்லிலோ, மண்ணிலோ தமிழர் வழிபாடு நடத்தவில்லை என்றும், தொல் காப்பியம் கூறுகின்ற  கொடிநிலை, கந்தழி, வள்ளி இந்த மூன்றிலும் இறைவன் உருவமற்று அருவமாக இருப்பதாகவும் உரையில் வாசிக்கப்பட்டது. இதிலிருந்து இறுதிக் காலத்தில் அவரின் பழைய உருவ வழிபாட்டு நம்பிக்கையிலிருந்து விடுபட்டதைக் காணலாம்.

தம் வாழ்வின் இறுதிக்காலத்தில்  மாணிக்க நாயகர் சென்னையில் உள்ள தமது மாளிகையில்தான் ஓய்வெடுத்து வந்தார்.  ஒருநாள் தமது சிற்றுந்தை பழுதுபார்க்கும் போது அதன் எஞ்சின் சூட்டினால் காலில் புண் ஏற்பட்டது. சர்க்கரையும், குருதி அழுத்தமும் கூடிய நிலையில் புண் ஆறாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தமது அறுபதாம் வயதில் 25.12.1931 அன்று காலமானார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்தில் எழுதப்பட்ட கடைசி வாக்கியம் பின்வருமாறு:

"மண்ணில் மறைந்தாலும் மாணிக்கம் தன்னொளி குன்றாது
காற்றில் கலந்தாலும் கவின்மலர் தன் மணம் மாறாது"

மாணிக்க நாயகரின் தமிழ்த் தொண்டினை தலைவணங்கிப் போற்றுவோம்.

நன்றி:

1. பா.வே. மாணிக்க நாயக்கர்
- பா.அன்பரசு.

2. என்கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை.

3. தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்
- குன்றக்குடி பெரியபெருமாள்.

4. தனித்தமிழ் இயக்கப் புரவலர் பா.வே.மாணிக்க நாயக்கர்
-க.திருநாவுக்கரசு.
தனித்தமிழியக்க நூற்றாண்டு விழா
மலரில் எழுதியது (2016).

கட்டுரை வந்த இதழ்
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
சனவரி 16-31 (2018)...

திமுக வின் செயல்படாத செயலு கேட்டுச்சா...


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் திடீர் பயங்கர தீ விபத்து...


மதுரை சுற்றுவட்டார தீயணைப்புப்படை மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

தீயை அணைக்க இயலாமல் வீரர்கள் மூச்சு திணறல்...

இதையெல்லாம் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்கும் உரிமை குடிமகனுக்கு உள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்...


வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடத்திருப்பதாக கூறி செந்தில் முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. எனினும் ஊடங்களில் வெளியான செய்திகளை வைத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது...

கரெண்ட் பில் எகிற போகுதுடோய்...


வந்தேறிகளின் திராவிட சாதி வெறி அரசியல் தந்திரம்...


நேற்று ஓமந்தூரில் ரெட்டியார் சங்கம் நடத்திய ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாள் மாநாட்டில் கலந்து கொண்ட விஷால் "நமது சமுதாய இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை தவிர வேறு வழியில்லை" என்று பேசியிருக்கிறார்.

இதுவே முன்னணி நடிகராக இருக்கும் தமிழன் ஒருவன் தன் சாதி சங்க கூட்டத்தில் பங்கெடுத்திருந்தால் இந்நேரம் எத்தனை செய்திகள் கட்டுரைகள் அவனை சாதி வெறியனாக்கி வந்திருக்கும். ஆனால் இதற்கு மூச்சு பேச்சில்லை..

தமிழரல்லாதவன் சாதியா போய் நின்னாக்கூட அவனை பற்றி வாய்திறக்காத இந்த முற்போக்கு கூட்டம் தமிழனிடம் மட்டும் வந்து யார் தமிழர்கள்? என்று மைக்கை நீட்டுவார்கள். அங்கிருந்து தான் தொடங்குகிறது தமிழரால்லாதவன் அதிகாரத்தை கைப்பற்றும் தந்திரம்...

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே...


ரயில் நிலையம், வங்கி அலுவலகம், பள்ளி, கல்லூரி, மென் பொருள் நிறுவனம், கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், என எங்கும் கடைநிலை ஊழியர் தொடங்கி இடைநிலை ஊழியர் அலுவல் பணியார்கள் வரை எங்கு பார்த்தாலும் வேற்று மாநிலத்தார்களே பணியில் இருக்கிறார்கள்.

மத்திய அரசு தொழில்களுக்கான தகுதி தேர்வுகளும் வட மாநிலத்தவர்களுக்கு சார்பாகவே இருக்கின்றது மேலும் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களும் வேற்று மாநிலத்தவர்களாகவே பெரும்பாலும் இருக்குறார்கள். கல்லூரி மேல் படிப்பு தொடங்கி வேலை வாய்ப்பு வரை மத்திய அரசின் தகுதி தேர்வுகளும் பணி அமர்வும் தமிழர்களை புறக்கனித்தே வருகிறது.

மத்திய அரசின் தொழில் துறைகள் மற்றும் நிறுவனங்களில் தான் இந்த அவலம் என்றால், தமிழ்நாடு அரசும் தன் பங்கிற்கு வரம்பற்ற முறையில் அரசு வேலைகளில் வேற்று நாட்டவர்களை வேற்று மாநிலத்தவர்களை அமர்த்துகின்றது, தகுதித் தேர்விற்கான வினாக்கள் கூட வட-இந்தியர்களுக்கு எளிதான வினாக்களாகவே இருக்கின்றது. பணி நியமன முறை வெளிப்படைத் தன்மையற்று மறைமுகமாகவே இருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் சொந்த மாநிலத்திலேயே தமிழர்கள் இரண்டாம் நிலை குடிகளாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மராட்டிய மாநிலத்தில் மராத்தியர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாலும் வேற்று மாநில மக்களின் வரம்பற்ற ஊடுவலால் தங்கள் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பிற்கு அச்சுருத்தல் ஏற்பட்டதாலும் அந்த இடைவெளியை பாசிச இனவாதக் குழுக்கள் தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை மூட்டியது.

அதே போல கர்நாடகத்திலும் வேற்று மாநில மக்களின் ஊடுருவல் பெங்களூரில் அதிகரித்ததால் கன்னடர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டது, அதனால் கன்னடர்களுக்கும் வேற்று மாநில மக்களுக்கும் இடையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. கர்நாடக மாநில அரசு தனிச் சட்டம் இயற்றி தனியார் பணிகளுக்கும் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது கன்னடர்களுக்கு முன்னுரிமை பெற்றுத் தந்தது.

இப்படி இருக்க, தமிழ் நாட்டிலோ படித்த தகுதி உள்ள தமிழ் இளைஞர்களே வேலை இன்றி தவித்து வரும் சூழலில் வேற்று மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தமிழர்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.

தமிழரின் பொருளியல் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு விடப்படும் சவால்.
தமிழ் நாட்டிலும் அனைத்து வேலை நியமனங்களிலும் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் முன்னிரிமை வழங்க வேண்டும்.

மத்திய அரசுப் பணியானாலும் மாநில அரசுப் பணியானாலும் தனியார் வேலை வாய்ப்புகளானாலும் மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் அதில் தமிழர்களே பணி அமர்த்தப்பட வேண்டும், தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உத்தரவாதம் செய்து பணி நிரந்தரம், வேலை பாதுகாப்பு, முதலியனவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வேலை வாய்ப்பு மற்று வேலைப் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஒவ்வொரு தேசிய இனத்தின் மாநில அரசின் கடமை. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டியது தமிழ் நாடு அரசின் கடமை.

ஒன்றியமானது ஒரு தேசிய இனத்திற்கான வெளியை தர மறுத்தால் தன்னாட்சிக்கான அரசியல் புரட்சி அங்கு எழும் தனக்காக வெளியை அந்த இனம் உருவாக்கிக்கொள்ளும்!!

-அன்பு

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’
சென்னையில் பிப்ரவரி 3 அன்று மாநாடு.

நாள்: பிப்ரவரி 3, 2018
இடம்: அண்ணா அரங்கம், சென்னை
நேரம்: காலை 9 மணி - மாலை 8 மணி...

திறமை உள்ளவர்களை மதி்க்காத நாடு தான் இந்தியா, அரசியல்வாதி மானங்கெட்டவனுங்களா...


உங்களை நம்புங்கள்.. நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...


1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே     இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.  அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொள்ளாதிர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

உங்களை நம்புங்கள்.. நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்...

நாடும், மாநிலமும் உனக்கானது ஆனால் இந்த அரசாங்கம்..?


கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதாகவும், சூதாட்டம் மூலம் போட்டியின் முடிவு முன்பே முடிவு செய்யப்படுவதாகவும், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு...


மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை பிப்.16க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்...

ஈஸ்டர் தீவின் மர்மங்கள் பற்றிய தகவல்...


ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகையான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட சிலைகள் இருக்கின்றன.இத்தீவுக் கண்டு பிடிக்கப்பட்ட புதிதில், இந்த சிலைகள் எல்லாம் எவ்வாறு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது புரியாத புதிராக இருந்ததது.

இத்தீவில் கி.பி. 200 ஆண்டில் 2000 மக்கள் வசித்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்றோ வெறும் இரு நூறுக்கும் குறைவான மக்களே வசிக்கின்றனர். 2000 மக்கள் கி.பி. 200 ஆண்டிலே வசித்தால் இப்பொழுதுஅதற்கும் அதிகமாக மக்கள் வசிக்க வேண்டும் அல்லவா? மக்கள் தொகை குறைவதற்கான காரணம் என்ன? மற்றும் எவ்வாறு இந்த சிலைகளை தொழில்நுட்பமோ கொண்டு சென்றனர்? என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

கேள்விக்கு பதில் தேடும் விதமாக, அத்தீவில் தொல்பொருள், தாவரவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நிறைய மரங்களும், உயிரினங்களும் அத்தீவில் இருந்தன என்பதைக் கண்டறிந்தனர். புவியைத் தோண்டி ஆராய்ந்தபோது, நிறைய விதைகள், பறவைகள் மற்றும் வேறு பல உயிரினங்களின் எச்சங்களும், தொன்மங்களும் கிடைத்தன.

இவையெல்லாவற்றையும் விட உருளை வடிவிலான மரம் ஒன்றின் விதையும் கிடைத்தது. இன்று அம்மரம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் வழி தோன்றலான, சில மரங்களும், அம்மரத்தின் குடும்ப மரங்களும் உள்ளன. எவ்வாறு உருளை மரம் காணாமல் போனது? பல வகை உயிரின்ஙகள் என்ன ஆயின என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. பல்வேறு ஆய்வு முடிவுகளை மேற்கொண்ட பின், சில உண்மைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஈஸ்டர் தீவு பழங்குடியினர் டால்பின் மீன்களை விரும்பி உண்டனர். கடலின் ஆழப் பகுதியில் தான் டால்பின்கள் கிடைக்கும். ஆழப்பகுதியில் மீன் பிடிப்பதற்காக உருளை மரங்களை வெட்டி, கட்டு மரம் செய்வதற்கு பயன்படுத்தினர்.டால்பின் கறி சுவை காரணமாக, நிறைய கட்டுமரங்கள் செய்தனர். அதிகமான கட்டுமரங்கள் தேவைப்பட்டதால், நிறைய மரங்களை வெட்டினர்.

நாகரீகத்தின் உச்சமாக கலைகள் வளர ஆரம்பித்தன. ஈஸ்டர் தீவு மக்கள் சிற்பக் கலையில் கை தேர்ந்து விளங்கினர். அவர்கள் மிகவும் பிரம்மாண்டமான சிலைகளை செய்தனர். அவர்கள் செய்த சிலைகளின் எடை 200 டன்னிற்கும் மேலாக இருந்தது. சிலைகளை தீவின் எல்லையோரங்களில் நிறுவினர். சிலைகளை நகர்த்தி செல்வதற்கு அவர்கள் உருளை மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். மனித பேராசை காரணமாக, அளவு தெரியாமல் உருளை மரங்களை வெட்டினர். உருளை மரங்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்து பெருக முடியாத அளவிற்கு வெட்டிச் சாய்த்தனர். அத்தீவில், ஒரு கால கட்டத்தில் உருளை மரங்களே இல்லாமல் போனது.

உருளை மரங்கள் அழிந்தபின், அத்தீவில் இருந்த ஆறு பறவை இனங்கள் அழிந்து போயின. அவை அழிந்த பின் தான் தெரிந்தது; அப்பறவை இனங்கள் அனைத்தும் உருளை மரங்களைச் சார்ந்து இருந்தன. பறவை இனங்கள் அழிந்தபின், தீவில் இருந்த தாவரங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பறவைகள் உண்டு போட்ட பழத்தில் இருந்த விதைகளினால் தான், பெரும்பாலான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் வளர்ந்தன. தாவரங்கள் இனப் பெருக்கத்திற்கு காரணமான, பறவை இனங்கள் அழிந்ததால் அனைத்து தாவரங்களும் அழிய ஆரம்பித்தன. தாவர இனங்களை நம்பி வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிய ஆரம்பித்தன.

உருளை மரங்கள் இல்லாததால், பழங்குடியின மக்களால் டால்பின்களை வேட்டையாட முடியவில்லை. தாவரங்களும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அழிந்ததால், உணவு உற்பத்தியே இல்லாமல் போனது. உணவு தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து ஏற்பட்ட பசி, பட்டினியாலும், உணவிற்கு ஏற்பட்ட சண்டையாலும் மக்கள் நிறைய பேர்கள் இறந்தனர்.

இங்கு ஒரு உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உருளை மரங்களை பழங்குடியின மக்கள் உணவிற்காக பயன்படுத்தவில்லை. உணவிற்காக பயன்படாத ஒரு மரத்தை வெட்டியதாலே, ஒரு தீவில் மனித இனம் அழிந்தது. நாம் இன்று வாழும் வாழ்க்கையால், எவ்வளவு மரங்களை அழித்து கொண்டிருக்கின்றோம், அதன் மூலம் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்த்துவதற்காக, பகிர்ந்து கொள்ளப்பட்டது...

இதையெல்லாம் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


தமிழகத்தில் இரண்டு பொய் தேசிய மாயைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன...


ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும், இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.

உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா? இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும். முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குமுகம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.

இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?

என்ன பாவம் செய்தேன் - குருவிகள்...


இந்தியா தான் முதலிடம் சிட்டு குருவிகளை சுட்டு தள்ளுவதில் செல்போன் மூலமாக...

இரண்டாம் உலகபோரின் போது அதிக அளவில் ரேடாரின் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது.. அப்போது ரேடார் ஆன்டனாவின் மீது பல பறவைகள் தாறுமாறான வேகத்தில் மோதி இறந்து வீழ்ந்தன..

ரேடார்கள் இயங்காத போது பறவைகள் ஆன்டனாவில் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இறந்த பறவைகள் கருகிபோய் இருந்தன அவை மைக்ரோவேவ் அடுப்பினுள் வைத்து கருக்கியதற்கு ஒப்பாக இருந்தன..

இதற்கு காரணம் என்ன?

பறவைகள் புவியில் உள்ள மிக்குறைந்த அளவுள்ள காந்த புலத்தினை பயன்படுத்தி தம் இருப்பிடத்தையும் தாம் பறக்கவேண்டிய திசையையும் அறிந்துக் கொள்கின்றன..

ஆன்டனா மற்றும் செல்போன் கோபுரங்களில் வெளிப்படும் சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சுக்கள் பறவைகளை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்துகின்றன..

மின்காந்த அலைகள் பறவைகளை மட்டுமல்ல மனிதனை இரண்டுவகையில் பாதிக்கிறது..

1, மின்காந்த அலைகளின் ஆற்றல் மனிதஉடல்தசைகளின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்கிறது இதனால் உணர்வுமிக்க மூளை போன்ற உறுப்புகளின் வெப்பநிலை மிக்குறைந்த அளவு உயர்ந்தாலும் மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் அதிகஅளவில் ஏற்படுகிறது..

2, மின்காந்த அலையில் உள்ள மின்காந்தபுலங்கள் நம் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை மற்றும் இதயத்தில் உள்ள மிகசிறிய அளவு மின் இயக்கத்தை அதிகஅளவு பாதிக்கச்செய்கின்றன..

பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் கோபுரங்களில் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த சர்வதேச தொலைத்தொடர்பு ஆணையம் ஒரு வரைமுறையை வகுத்த்து என்றாலும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கோட்பாட்டை கடைபிடிக்கின்றன..

ஆஸ்திரியா 0.001 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஸ்விட்சர்லாந்து 0.095 வாட்ஸ்/சதுரமீட்டர்

நியுசிலாந்து 0.5 வாட்ஸ்/சதுரமீட்டர்

பெல்ஜியம் 1.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஆஸ்திரேலியா 2 வாட்ஸ்/சதுரமீட்டர்

கனடா 3 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா 9.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா தான் முதலிடம் சிட்டு குருவிகளை சுட்டு தள்ளுவதில் செல்போன் மூலமாக...

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்...


விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்..

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்..

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக் குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்..

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்..

சிந்திப்போம் தமிழர்களே...

தமிழால் ஒன்றுபடுவோம்..
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்..

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்...

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்..

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்..

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்...

1881 வரை இல்லை மெரினா கடற்கரை-நம்ப முடிகிறதா...


உலகமக்கள் அனைவருக்கும் சென்னை என்றவுடன் நினைவிற்கு வருவது மெரினா தான்.சென்ற சனவரிக்கு 2017 முன்னர் எப்படியோ தெரியவில்லை! ஆனால் சனவரியில் நடந்த ஏறுதழுவலுக்கான போராட்டத்தின் பிறகு மெரினா என்றால் அறிந்திறாத உலக வாசிகள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம்.

ஆம். மெரினா என்பது இயற்கை நமக்கு தந்த சூழல் என்று கூறுவதைவிட நம் இளைய சமுதாயம் நமக்கு தந்த மன நிறைவை முன்னிறுத்திய ஒரு வரலாற்றுச் சின்னமாகவே தோன்றுகிறது.

இந்த மெரினா என்று பெயர் சூட்டப்பட்ட ஆசியாவின் இரண்டாவது நீளமான அழகான கடற்கரை 1880ம் ஆண்டுகளில் இருந்திருக்கவில்லை என்றால் நம்புவீர்களா.

நீங்கள் நம்புவதற்கான சான்றுகள் இதோ படியுங்கள்...

மெரினா கடற்கரை 1881 ம் ஆண்டு வரை இல்லை, அதற்கு முன் இது எல்லா கடற்கரைகளை போலவே இருந்துள்ளது. அதாவது சென்னை முதல் இராமேஸ்வரம் வரை கடற்கரை இருந்தாலும் சுற்றுலா தளமாக மக்கள் வந்து போக ஏதுவான இடமாக ஒரு சில கடற்கரைகளே உள்ளது அல்லவா! அப்படியே மெரினாவும் வெறும் கடலும் கடல் சார்ந்த காடுகளாகவும் மட்டும், 1881 வரை இருந்துள்ளது. ஆனால் சுமார் 150 ஆண்டுகளாக மெரினா கடற்கரை ஒட்டியுள்ள துறைமுகம் இருந்துள்ளது.

இன்று நாம் காணும் மெரினா என்கிற 13.கி.மீ. நீண்ட நெடும் கடற்கரை உருவாக காரணமாக இருந்தவர் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் 1881ல் மதராசு கவர்னராக அதிகாரத்தில் இருந்த சர்.மவுண்ட் ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் கிரான் டஃப். இந்த கடற்கரைக்கு மெரினா என்ற பெயரை சூடியவரும் இவர் தான்.

வெறும் கடலும் காடுமாக இருந்த மெரினா கடற்கரை 13கி.மீ. நீண்டு விரிந்து கொள்ள தேவைப்பட்ட காலம் வெறும் ஒரு ஆண்டு தான். காடுகளை திருத்தி, மணல்திட்டுகளை சமன் செய்து, மணலை சலித்து குழிகளை நிரப்பி ஒரு வருட காலம் கடின உழைப்பால் உருவானது தான் இந்த மெரினா கடற்கரை. இதே மெரினா கடற்கரை சாலையில் உழைப்பாளர்கள் சிலை அமைந்தது ஒரு வரலாற்று பொருத்தம் என்றே எண்ண வைக்கிறது.

சமீபத்தில் வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் வரியில் ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் பில்டிங் வெறும் செங்கல் மணல் மட்டும் இல்லை எங்களோட இரத்தம் கூட சேர்ந்திருக்குடா என்ற பாடப்பட்டு இருக்கும். இனி அந்த வரிகளில் நாம் மெரினா கடற்கரையும் எங்கள் முன்னோர்களின் இரத்தத்தில் தான் உருவானது என்று தான் சொல்ல வேண்டும்...

இலுமினாட்டி யும் போகன் படமும்...


தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்..  இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்..

இதுநாள் வரையில் ஆயுதங்களைக் கொண்டுத் தாக்கிய நம் பகைவர்கள் தற்போது உளவியலாக தொடர்ச்சியாக தாக்குகிறார்கள்...

தமிழக திரைத்துறை முழுமைக்கும் இரகசிய குழுமங்களால் நிறுவகிக்கப்பட்டு வருகிறது..

போகன் என்ற படம் முழுமைக்கும் உளவியல் தாக்குதல் மட்டுமே (psychological warfare)..

தாக்குதல் ஒன்று : கதாநாயகி அறிமுகக் காட்சியிலேயே மதுபாணக் கடையில்  மது வாங்குவது.. அதை குடிப்பது ஏதோ ஆரோக்கியமானது போல் அதை பாப்பாய் கீரை உண்பதுடன் ஒப்பிடுவது..

பெண்கள் இதுவரை தமிழகத்தில் 95% குடிப்பதில்லை, இது இலுமினாட்டி மதுபான வியாபாரிகளுக்கு எப்படி லாபமீட்டித் தரும்?

அப்போ பெண்களும் குடிக்க வேண்டும் அல்லவா ?

அதான் தொடர்ச்சியாக எல்லாப் படத்தில் வரும் கதாநாயகிகளையும் குடிகாரிகலாக காட்ட வேண்டும், அதைப் பார்த்து அப்படியே பின்பற்றும் தமிழ் பெண்களும் குடிப்பது ஒரு தவறல்ல என்ற மனநிலைக்கு வர வேண்டும் தானாக வியாபாரம் பெருகும்..

இலுமினாட்டிகள் நம்மை தொடர்ச்சியாக  ஆளனும்.. அதற்கு நாம் குடித்து.. சிந்தித்து வாழாமல் நாசமாய் போகனும்..

பெண்கள் மது அருந்துவது  போன்ற காட்சிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு புகுத்தப்படும் காட்சிகள்.. மக்களே உஷார்...

தாக்குதல் இரண்டு : சமீபகாலமாக திரைப்படங்களில் வரும் நிச்சயதார்த்த காட்சிகள் அனைத்தும் மோதிரம் மாற்றி கொள்ளும் படியாக, புதிய கலாச்சார உள்ளீட்டோடு இருப்பது அடுத்த உளவியல் தாக்குதல்...

இது ஒன்றும் புதிதல்ல.. சுமார் 30 ஆண்டு காலமாக பிராமன சடங்குகளை கொண்டு மட்டுமே திருமணம் நடப்பதாக காண்பித்து இப்போது அதை உண்மையாக்கிவிட்ட அதே கும்பல் தான் இப்போது இதையும் செய்கிறார்கள்....

இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மோதிரம் மாற்றித் தான் தமிழ்நாட்டில் நிச்சய சடங்குகள்  நடைபெறும்... இது ஒரு கலாச்சார சிதைப்பு...

மூன்றாவது தாக்குதல் : பெண்களை கவர்ச்சியாக காண்பித்து பெண்மையை கொச்சையாக வளரும் தலைமுறை சிந்தனையில் பதிய வைப்பது.

வருங்கால தலைமுறைக்கு பெண்கள் கண்ணகியாகவோ, வேலு நாச்சியாராகவோ தெரியமாட்டார்கள்.. சன்னி லியோனியாக மட்டுமே தெரிவார்கள்...

இந்த அளவுக்கு ஆபாசம் நிறைந்த ஒரு படத்திற்கு “U” சர்ட்டிபிகேட் கொடுத்தவன் குடும்பம் நாசமாய் போகட்டும்..

படம் முழுக்க கொச்சை வசனங்கள் வெளிப்படையாக...

இந்த சமூகத்தில் எப்படி ஒரு பிரபாகரன் எப்படி  ஒரு வா.உ.சி எப்படி ஒரு முத்துராமலிங்கதேவர் தோன்றுவார்கள்?
குற்றவாளிகளே இவற்றால் உருவாக்கப்படுவார்கள்......

( குறிப்பு: கற்பழிப்பு குற்றங்களுக்கு அடிப்படை காரணம் ஆண்கள் பெண்மையை மதியாதது தான்.. ஆண்கள் அவ்வாறு மாற்றப்படுவதற்கு அடிப்படைக் காரணம் ஊடகத்தில் பெண்களின் உடம்பை சந்தை படுத்துதலே... )

இந்த படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பிரபல இலுமினாட்டி சாமியாரின் தத்துவம் இடம் பெற்றது.. அனைத்திற்கும் ஆசைப்படு....

தமிழக இளைஞர்களே எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் தான்... உண்மை சுதந்திரத்தை சுவாசிக்க வேண்டும் என் தலைவன் கண்ட தேசத்தை காண வேண்டும்...

தேடுங்கள்.. போராடுங்கள்.. வெற்றி பெறுங்கள்...