14/11/2020
எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...
எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.
இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...
அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள்...
கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.
இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.
வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரத் தளபாடங்கள் செய்யயப் பயன்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சிலரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.
இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் கொக்கைத்தடிகளால் காய் பறிப்பார்கள்.
எப்படி இருந்தாலும் நீளமான கொக்கைத்தடிகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு கொக்கைத்தடிகளை இழப்பதும் உண்டு.
சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.
காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.
எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.
வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்...
திராவிட கீ.வீரமணி எனும் தெலுங்கு கொள்ளையன்...
கழக நிதி என்ற பெயரில் ஈவெ ராமசாமி தமது காலத்தில் வசூலித்து குவித்த பல கோடி ரூபாய் சொத்துக்கள. இப்பொழுது திராவிட தெலுங்கன் வீரமணி என்ற வியாபார மணியும் அவர் குடும்பமும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தயவு செய்து கழக கண்மணிகள் யாராவது இதற்கு பதில் கூரவும்.
இதற்க்கு திராவிட தெலுங்கன் கோமாளிகளுடம் இருந்து பதில் என்ன?.
விடை தமிழனுக்கு வேண்டும்.
தமிழனை ஏமாற்றி ராமசாமி நாய்கர் சேர்த்த சொத்து தற்போது பொறம்போக்கு சொத்து தானே.. அது அரசாங்கத்தின் சொத்து தானே..
அப்படி என்றால் வீரமணி பொறம்போக்கு சொத்தை ஆட்டை போட்டு அனுபவித்து கொண்டிருக்கிறார் என்று தானே அர்த்தம். ஏன் அரசாங்கம் கண்டுக் கொள்ளவில்லை...
கொடிய பஞ்சத்தைப் போக்கிய சித்தர் கோரக்கர்...
பொதுவாகவே வேறு எங்கும் பஞ்சம் ஏற்படலாம். ஆனால், அத்ரிமலையில் மட்டும் ஏற்படாது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம், இந்த இடம் ஒரு தபோவனமாக இருப்பது தான்.
அத்ரி மகரிஷி, தன் பிரதான சீடர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார். அந்த சீடர்களில் கோரக்கர் குறிப்பிடத்தக்கவர். தன் குரு அத்ரி முனிவருக்கு அவர் வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். அந்தச் சமயத்தில் தென்பாண்டிச் சீமையில் பல நல்ல நிகழ்வுகளும் கோரக்கரால் நிகழ்ந்தேறின.
ஒரு காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்தப் பஞ்சம் தாமிரபரணிக் கரையிலுள்ள நெல்லையப்பர் ஆட்சி செய்யும் திருநெல்வேலி சீமை வரை நீடித்தது. நெல்லுக்கு வேலியிட்டவர் நெல்லையப்பர். இவர் ஆட்சி புரியும் பகுதியிலேயே பஞ்சமா.. அனைவரும் அதிர்ந்தனர்.
இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இப்பகுதி மக்கள் அத்ரி மலையிலிருந்த கோரக்கரை நாடினர். மக்களின் குறைகளை கோரக்க முனிவர் கேட்டார்.
பின்னர், தன்னுடைய ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தினையும் அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்னி தேவனும், அவரது வாகனமாகிய ஆடும், சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்ர வடிவில் காட்சி தந்தார். அக்னி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் வாடத் தொடங்கின. நெற்பயிர்களெல்லாம் கருகின. ஆகவே, இந்த இடம் கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது..
இதைத் தெரிந்து கொண்ட கோரக்கர், ஒரு யோசனை கூறினார்.. தாமிரபரணிக் கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைத்து யாகங்களும் பூஜைகளும் செய்தால் ஈசனின் கோபம் குறையும். அழிந்து வரும் இப்பகுதியும் மீண்டும் புத்துயிர் பெறும். நாட்டில் நிலவும் பஞ்சமும் நீங்கும்’ என்று கூறினார்.
உடனே, அவரும் மக்களின் பிரச்னையை தீர்க்க தாமிரபரணியின் மேற்குக் கரைக்கு வந்தார். அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமி தினத்தன்று யாகங்களை நடத்தத் துவங்கினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவ பெருமான் அக்னி சொரூபத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தண்ணருளைப் பொழிந்தார்.
இந்த இடத்தில் அழியாபதி ஈஸ்வரர் என்கிற திருப்பெயரில் காட்சி தந்தார். அதன் பின்னர் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது.
தாமிரபரணிக் கரையின் கீழ்ப்பகுதியில் அக்னீஸ்வரரையும் மேல் பகுதியில் கோரக்கர் அமைத்த அழியாபதீஸ் வரரையும் தற்போதும் காணலாம். இத்தலமும் நெல்லை நகரத்திலுள்ள குறுக்குத்துறைக்கு அருகிலுள்ளது.
சிவலிங்க வழி பாட்டின் பெருமைகளை அளவிட முடியாது. வழிபாடு, ஸ்தோத்திரம், பாராயணம், தரிசனம், அபிஷேகம் இப்படி பல விதங்களிலும் மனதையும் உடலையும் சிவனுக்கு அர்ப்பணித்து பக்தியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்றோரையும் அதில் மூழ்கச் செய்பவர்களே சித்தர்கள்.
இவ்வாறு சித்தர்கள் அமைத்து வழிபட்ட லிங்கத்தை ஆர்ஷ லிங்கம் என்பார்கள்.
இந்த வகையில் கோரக்கர் முனிவர் அமைத்து வழிபட்ட ஆர்ஷ லிங்கம் இதுவே.
கோரக்கர் உருவாக்கிய இந்த லிங்கம் குறித்து தாமிரபரணி மகாத்மியம் பெருமைபட பேசுகிறது. சப்த ரிஷிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் அண்டம், அகிலங்களையெல்லாம் தோற்றுவிக்கும் சக்தி படைத்தவர்கள். சப்த ரிஷிகள்தான் நட்சத்திர மண்டலங்களாக வானில் ஜொலிப்பதாக வடமொழி வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
சித்திர சிகண்டிகள் எனப் பெயர் பெற்ற ஏழு ரிஷிகளில் ஒருவராக திகழ்கிறார் அத்ரி. வேத மந்திரங்களை உலகுக்கு வழங்கிய ரிஷிகளில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
ரிக் வேதத்தின் பல காண்டங்களை அத்ரி மகரிஷிதான் தம்முடைய தபோ வலிமையால் ஈர்த்துக் கொடுத்தார். அத்ரி மகரிஷி ஆயுர்வேதம், ஜோதிடம் போன்றவற்றிலும் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். மானுட சரீர ரகசியங்கள், யோகம் போன்றவற்றை பதஞ்சலி ரிஷிக்கு குருவாய் இருந்து கற்றுக் கொடுத்துள்ளார்.
பிரபஞ்சப் படைப்பை விஸ்தரிப்பதற்காக ஆழ்ந்த பெருங்கடலின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார் அத்ரி மகரிஷி. அதே வேளையில் அவருக்கு மனதில் வேறு ஒரு எண்ணம் தோன்றியது. உலகிற்கு ஒரே ஒளியாக சூரியன் திகழ்கிறது. இந்த சூரியன் பகலில் மட்டும் வெளிச்சம் தருகிறது. ஆனால், இரவில் வெளிச்சம் இல்லாமல் ஜீவராசிகள் துன்பப்படுகின்றன.
எனவே, இன்னொரு ஒளியும் உலகிற்கு வேண்டுமென்று நினைத்தார்.அதற்காக ஒரு அற்புதத்தை செய்தார்.
அன்னதானம் - அத்ரிமலை யாத்திரை சுமார் 6 கி.மீ. நடை பயணம்தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. விரதமிருந்து அத்ரியை மனதில் நினைத்து நடைபயணத்திற்கு ஆயத்தமாக வேண்டும். நிச்சயம் தனியாக செல்லக்கூடாது, நாலைந்து பேர் சேர்ந்துதான் போக வேண்டும். போகும் வழியில் கூச்சல் போடாமல் செல்ல வேண்டும். கூச்சலைக் கேட்கும் மிருகங்கள் கீழேயிறங்கி வந்து விடக் கூடும்.
மேலும், அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது கவனமாகச் செல்ல வேண்டும். கவனம் தப்பினால் பாதை மாறிவிடும். காலை உணவை கையில் வைத்துக் கொண்டு, காலை 7 மணிக்கு பயணம் துவங்கினால் ஆற்றை கடக்கும் போது உணவை உண்டுவிட்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்தால் மதியத்துக்குள் அத்ரிதபோவனத்துக்கு சென்று விடலாம். அங்கேயே மதிய சாப்பாட்டை சமைத்துக் கொள்ளலாம்.
பௌர்ணமி, அமாவாசை, கடைசி ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களில் மேலே அன்னதானம் நடைபெறும்.
முக்கியமாக, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கப் பாருங்கள்.
ரொம்பவும் அவசியமென்றால் அந்த பிளாஸ்டிக் குப்பைகளை அத்ரி மலையில் எங்கும் போட்டுவிடாமல், யாத்திரை முடிவில் கீழே இறங்கியபின் உரிய குப்பை போடும் பகுதியில் சேர்த்துவிடுங்கள்...
கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா?
தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி (துப்பாக்கி) யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.
கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?
அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.
உரோம ஆட்சியாளர்கள் இயேசு கிறித்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள்.
உரோம ஆட்சியாளர்களையும் சிலுவையையும் யார் பாராட்டுவார்கள்?
உரோம ஆட்சியாளர்கள் பாராட்டுவார்கள்.
உரோமப் பேரரசனாகிய கான்சுடன்டைன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தான். அதன் பின்னர் சிலுவை சிறப்பிக்கப்பட்டது.
யாரால்? உரோமப் பேரரசனைச் சேர்ந்த கிறித்தவர்களால்.
கொல்லப்பட்டதன் அடையாளம்.. கான்சுடன்டைன் காலம் வரை கிறித்தவத்தைக் குறிக்க சிலுவை அடையாளம் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பின்னரே கான்சுடன்டைனைச் சேர்ந்த கிறித்தவர்கள் சிலுவைக்குச் சிறப்புக் கொடுத்தார்கள்.
சிலுவை : இயேசு கிறித்து கொலை செய்யப்பட்டார் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும். சிலுவையில் இயேசு கிறித்து மட்டும் கொலை செய்யப்படவில்லை.
உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் மரணதண்டனையை நிறைவேற்றப் பயன்பட்ட கருவிகளில் சிலுவையும் ஒன்று. அதனால் உரோமர்களால் ஏராளமானவர்கள் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்கள்.
உயிர்த்தெழுந்ததன் அடையாளம்...
சிலுவை : இயேசு கிறித்து உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் அடையாளம் ஆகாது. எவ்வாறு எனில் இயேசு கிறித்து சிலுவையில் உயிர்த்து எழவில்லை. இயேசு கிறித்து உயிர்த்து எழுந்ததைக் குறிக்கும் அடையாளம் வெறுமையான கல்லறையாகும்.
ஆகவே, இயேசு கிறித்து இறந்து உயிர் பெற்றார் என்பதை சிலுவை அடையாளம் குறிக்க இயலாது.
இயேசு கிறித்து..
1. இறந்தார்
2. உயிர்த்தெழுந்தார்
3. பாவத்தை நீக்கி மக்களை மீட்டுக் கொண்டார்
ஆகிய இந்த மூன்று கருத்துகளையும் குறிக்கும் அடையாளமே கிறித்துவின் நற்செய்தியை விளக்கும் அடையாளம் ஆகும்.
சிலுவை அடையாளத்தால் இந்த மூன்று கருத்துகளையும் குறிக்க இயலாது.
(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய நூலில் எடுத்து பதியப்பட்டுள்ளது)...
நமசிவய எனும் மந்திரத்தை ஏன் உச்சரிக்க வேண்டும்? அதன் பயன் என்ன?
ந ம சி வ ய என்னும் இந்த ஐந்து எழுத்துக்களையும் நமது உடலின் ஐந்து பகுதிகளாக, நிலையங்களாக சித்தர்கள் கூறுகின்றனர்..
அவை இடநாடி, பிங்கலநாடி, ஆகிய பாதத்திலே நம என தொடங்கி, தோள்களில் சி யும் வாயில் வ வும் தலையில் ய வும் மண்டலம் கொள்கின்றன, இதுவே சித்தர்கள் உணர்த்தும் மிகப்பெரிய ரகசியம்..
நமசிவய எனும் பொழுது மூலக்கனலானது கீழிருந்து மேல் எழுகிறது, சிவாய நம என்னும் பொழுது மேலிருந்து கீழ் இறங்குகிறது இதனை பல சித்தர்கள் பாடல்களில் ஏற்றி இறக்குதல் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்...
தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப் படுத்திய தெலுங்கர் ஈ.வெ.ரா...
தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு..
ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத் தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார்.
அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலை மறையாகச் சொல்லிவிட்டார்.
இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின் உரிமை’ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கி விட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்).
அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டது தான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர்.
இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது.
சென்னையில் சில அம்பேத்கர் வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின் ‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்.
(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963).
இதிலிருந்து தெரிவதென்ன?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா.
தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள்.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையும் கேவலமாகப் தான் பேசியிருக்கிறார்...
ஹிப்னாடிசம் எனும் மனோவசியம் கலை...
நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடு தான் பிறப்பெடுத்துள்ளோம்.
எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.
கடவுளின் மறுவடிவம் தான் நாம். அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.
நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.
ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.
உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன் மூலம் சரி செய்யலாம்...
நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.
இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை...
நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்...
இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது.
இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.
தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது.
மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா, சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.
பர்மாவைத் தாக்கிய பிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.
அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.
அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.
ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது.
சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.
இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.
மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர்.
மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது ஒரு கண்ணீர் அத்தியாயம்.
சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.
இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன.
குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.
அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுறையில் கவனித்தனர்.
சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.
1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.
போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.
வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனர். இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.
இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது.
ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.
தமிழ் ஈழ தாயகத்தின் விடிவிற்காக உலகத் தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்...
தைமூர் என்ற ஆப்கானிஸ்தான் மன்னனின் பெயரை கேட்டால் இன்னமும் வட இந்தியா அலறுகிறது...
நடிகை கரீனா கபூர் தன் மகனுக்கு தைமூர் என்று பெயர் சூட்டினார்.. வட இந்திய பிஜேபினர் கோபத்தில் கொதித்தார்கள். ஆர்.எஸ்.எஸ் மண்ணில் புரண்டு விழுந்து அழுதது.
700 வருடங்களுக்கு முன்னால் இறந்துப்போன தைமூருக்கு ஏன் இன்னமும் இவர்கள் அஞ்சுகிறார்கள்?
செம்மட்டை தலையும் கருநிறத்திலும் இருந்த வட இந்தியர்கள் வெள்ளையாக பிறப்பதற்கு காரணம் 'தைமூர்' தான்...
பெரும்பாலான வட இந்திய ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை தங்களது அந்தபுர அடிமைகளாக வைத்துக் கொண்டனர் தைமூர் படையினர்.
அந்த படையெடுப்புக்கு பின் தான் வட இந்தியர்கள் நிறம் மாறியது. தாங்கள் வெள்ளையாக இருக்கிறோம் என்று சொல்வதற்கு பிஜேபி எம்.பி தருண்விஜய் வெட்க படவேண்டும்..
வட இந்தியர்கள் கடவுளாக வணக்கும் ராமன், கிருஷ்ணர், சிவன் யாவரும் கருப்பர்கள் என்று அவர்கள் புராணங்களே வர்ணிக்கின்றன.
பிஜேபி எம்.பி தருண் விஜய் வெள்ளையாக இருப்பதற்கு பெருமை கொள்லலாம்... அது நல்ல குடும்பத்துகாரனுக்கு அசிங்கம்.. இழிவு .. பிறப்பிற்கு அவமானம்...