22/11/2018

குழந்தை திருமணம் செல்லாது ஆனால் குழந்தை இராணுவ வீரன் செல்லும்?


17 வயது ஆண் மகன் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம்.

அதை செல்லாது என்று சொன்ன உலக நாடுகள்..

முதலாம் உலக போரில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் 17 வயதிற்குட்பட்ட சிறுவர்களையே போரில் கலந்து கொள்ள வைத்தது..

இது என்ன நியாயம் ?

பிரிட்டன் அரசு 25 இலட்சம்.. 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களை தமது நாட்டிற்க்காக பயன்படுத்தி கொண்டது...

அது மட்டுமின்றி இன்றைய உருகுவே, சீனா, ஜெர்மன், ரஷ்யா, மற்றும் அமேரிக்கா முதற்கொண்டு சிறுவர்களை [அவர்கள் பார்வையில்] போரில் பங்கு பெற வைத்தது...

இதில் இந்த 17 வயதிற்கும் குறைவான ஆண்கள் [சிறுவர்கள்] பல எதிரி நாட்டு பெண்களின் கற்பை சூறையாடியும் உள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு..

அதே போன்று வயது மிகுந்த தம் சக இராணுவ அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு [ஓரின சேர்க்கைக்கு] ஆளாக்கப்பட்டுள்ளார்கள் இந்த சிறுவர்கள் என்றும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது...

அது மட்டுமில்லாமல் இன்றைய ரஷ்யா குடும்பங்கள் இல்லாமல் அனாதையாக வீதியில் திரியும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தமது இராணுவ பயிற்சி பள்ளியில் சேர்த்து இராணுவ தளவாடங்களை பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறது....

இப்பொழுதும் கூட இந்த சட்டத்தை அமல்படுத்தி வருகிறது ரஷ்யா..

இந்த பதிவு பல கேள்விகளுக்கு பதில்
சொல்லும் சிந்தித்தால்...

தமிழக கொள்ளை கட்சி விசிக...


பித்தப்பை கற்களை நாமாகவே இயற்கை முறையில் அகற்ற எளிய வழி...


புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம்..

மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது..

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும்..

பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்..

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்..

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும்..

இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்..

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்..

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்...

மராட்டிய ரஜினி தமிழரை வைத்து பணம் சம்பாதிக்கும் ரோபா...


உதவி கன்னடர்களுக்கு மராத்தியர்களுக்கு மட்டும் தான்...

சில்லறை பொறுக்க மட்டும் தான் தமிழர் தேவை...

தொல்காப்பியமும் திருக்குறளும்...


5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது..

தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது.

ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.

பன்னெடுங் காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது..

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.

தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.

இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?

எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா?

தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

பாஜக மோடியின் பொய்களும்... ஏமாற்று வேலைகளும்...


கண்ணுக்கு எட்டின தூரம் பார்த்தா ஒன்றையும் காணோம்?

அப்படி ஏதாவது இருந்தா என் கண்ணுக்கு படுற மாதிரி போடுங்க பார்ப்போம் நாலு வருஷத்துல செஞ்ச நன்மையே...

அணு...


அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை... அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே..

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்..

ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள்.

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.

அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்..

சித்தர்கள்...

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் , மக்களை நல்வழி படுத்தும் சான்றோர்கள்.

நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.

அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.

தீராத நோய்களுககெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்..

இதையும் இன்று சித்தா என்று ஆங்கில தழுவலில் கூறும் மூடர்களை என்ன வென்று சொல்வது..

வானியல் அறிஞர்கள்...

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பயின்றவர்களே.

சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.

தமிழர்கள் என்றோ கண்டு பிடித்ததை , ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்...

மக்களை விட ஒரு சிறந்த அதிகாரம் எதுவுமில்லை...


இதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்..

இந்த ஒற்றுமை எப்போதும் இருந்தால், கண்டிப்பாக நமக்கான அரசியல் இங்கு விதைக்கப்படும்...

இயற்கையின் நிகழ்வா..? செயற்கை நிகழ்வா..? என யோசிப்பதை விட

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதே உணர வேண்டும்...

மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் காவல்துறையினருக்கு...


நாயை அடிப்பதுபோல் அடித்து, சட்டையைக் கிழித்துக் கைது செய்றாங்க. வீடு வீடாகப் புகுந்து கதவை உடைத்து, லத்தியால் அடித்து இழுத்துட்டு வர்றாங்க! ஊருக்குள்ளயே விரட்டி விரட்டிக் கைது செய்றாங்க! காரணம், அந்த மக்கள் தங்களுக்கு நிவாரணங்கள் வரவில்லை... அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்று அமைச்சர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்ததுதான்.

அந்தப் பெண்களும், பெரியவர்களும் அப்படிக் கதறி அழுறாங்க... வீடுகளை, வாழ்வாதாரங்களை இழந்து நிற்பவர்களுக்குச் சோறு தண்ணீர் கொடுப்பதெல்லாம் அரசின் கடமைதானே... அதை நீங்க கொடுக்கலைன்னா அவர்கள் கேட்கத்தான் செய்வார்கள்.

காவல்துறை அதிகாரிகள் எல்லாம் காக்கிச்சட்டையை அணிந்துவிட்டால், தங்களின் மனசாட்சியைக் கழற்றிக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் போல. ஏற்கெனவே சோறு தண்ணீர் இல்லாம, நரக விளிம்பில் நிற்பவர்களை நாயை அடிப்பதுபோல் அடிக்கிறோமே என்ற சிறு உறுத்தல் கூடவா உங்களுக்கு இல்லை? என்ன மனுஷன்யா நீங்க.

அங்கு கதறி அழும் தாய்மார்களின் சாபங்களும், குழந்தைகளின் கதறல்களும் ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யும் அனைவரையும் நாசமாக்கியே தீரும்...

கோடியக்கரை சரணாலயத்தில் இருந்த விலங்குகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன....


மனக்காயங்களுக்கு பின்னான உளவியல் சிக்கல்கள்...


POST TRAUMATIC STRESS DISORDER...

அமெரிக்க மனோவைத்தியர்களின் கூட்டமைப்பின் கருத்துப்படி, அதீத பய உணர்வையும் கொடூரத்தையும் , ஒன்றுமே செய்யமுடியவில்லையே என்கிற பரிதவிப்பையும் ஏற்படுத்தி, ஆழமான மனக்காயத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு சம்பவத்துக்கு முகங்கொடுக்க நேரிடும் ஒருவரில் உளக்காயத்துக்கு பின்னான உளநெருக்கீட்டுச்சிக்கல் எனப்படும்.

post traumatic stress disorder- PTSD,

ஒரு மனநிலை/நோய் நிலை ஏற்படுகிறது.

இப்படி மனக்காயத்தை உண்டு பண்ணும் சம்பவங்கள்..

1. யுத்தம்.

2. சித்திரவதை.

3. பாலியல் வன்முறை,வன்புணர்வு.

4. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்கள் மீதான வன்முறை.

5. கடத்தப்படுதல்.

6. பயங்கரவாதம்.

7. இயற்கை அனர்த்தங்கள் (தீ, சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி)..

8. பெரும் வாகன விபத்துக்களில் அகப்படுதல்..

9. உயிர்க்கொல்லி நோய் (கான்சர் போன்ற நோய்) தனக்கு ஏற்பட்டிருப்பதை அறிதல்..

10. கொலை,தற்கொலை உயிரிழப்பு சம்பவங்களை நேரில் பார்த்தல்..

இந்தச்சம்பவங்கள் பின்வருவோரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி PTSD ஆக மாற்றமடையும் வாய்ப்பு அதிகம்:

1.ஏற்கனவே இளம் வயதில் இப்படியான சம்பவங்களால் பாதிப்புற்றவர்கள்.

2. ஏற்கனவே மனநிலை/மனநோய்ச்சிக்கல் உடையவர்கள்.

3. கல்வியறிவு குறைந்தவர்கள்.

4. இளம்பராயத்தினர்.

5. பெண்கள்.

6. சமுக உறவு /ஆதரவு இல்லாதவர்.

7. அண்மைய மனதை நெருக்கும் வாழ்க்கை மாற்றங்கள்..

இவர்களில் பின்வரும் இயல்புகள் தென்படும்:

1. மனத்தை வாட்டமடையச் செய்யும் எண்ணங்களும், மனக்காட்சிகளும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

2. சம்பவம்போல பயங்கர கனவுகள் தூக்கத்தை குழப்புதல்.

3. அந்தச்சம்பவம் மீண்டும் நடைபெறுவது போல உணர்தல், அல்லது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நடந்து கொள்ளல்.

4. புண்படுத்திய சம்பவம் நினைவூட்டப்படும் சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்படல்.

5. நினைவூட்டப்படும்போது, வியர்த்தல், பதட்டம், நெஞ்சுப்படபடப்பு, உடல் விறைப்படைதல்

இவர்கள் மேலும்..

நடந்த சம்பவத்தை நினத்துப் பார்ப்பதையோ, அதைப்பற்றிப் பேசுவதையோ தவிர்ப்பார்கள்.

சம்பவத்தை நினைவு படுத்துகிற மனிதர்களை, இடங்களை, செயல்களைத் தவிர்ப்பார்கள்.

சம்பவத்தின் முக்கியமான பகுதிகளை மறந்து விட்டிருப்பார்கள்.

கொண்டாட்டங்கள், சந்தோஷங்களை , தொழில் ஆர்வத்தை, கல்வியில் உள்ள ஈடுபாட்டை இழந்துவிட்டிருப்பார்கள்.

மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையை நாடுபவர்களாக இருப்பார்கள்.

சந்தோஷப்படுகிற அன்புகாட்டுகிற, னெகிழ்ந்து போகிற தன்மை அற்று மரத்துபோனவர்களாக இருப்பார்கள்.

தமக்கு எதிர்காலம் ஒன்று இல்லை என்பதாக நாளைபற்றிய கனவுகள் எதுவுமற்றுப் போனவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் எப்போது அரண்ட நிலயில் இருப்பதால்..

ஒழுங்கற்ற தூக்கம்.

இலகுவில் எரிச்சலடையும், கோபப்படும் தன்மை.

மனதை ஒருமுகப்படுத்த முடியாத இயல்பு.

எப்போதும் விழிப்பாக ஆபத்து நிகழலாம் என்ற எச்சரிக்கை மனநிலை.

சிறு ஒலிகள், அசைவுகளுக்கு கூட மருளும் இயல்பு.

சிகிச்சை முறைகள்...

1. இந்த மனநிலை பற்றிய தெளிவும் அறிவும் தகவல்களும் கற்றுக் கொள்ளுதல் முதற்படி; தன் மனக்காயத்தை புரிந்து கொள்ள முடியும்.

2. பய உணர்வு ,கோபம், துக்கம் போன்ற உணர்வுகளை கையாளப்பழகுதல்.

3. துன்பப்படுத்தும் நினைவுகளை, செயல்களை எதிர்கொண்டு அவற்றிற்கூடாக உணர்வுகளை வடியச்செய்தல் -  நாடகங்கள். காட்சிப்படுதல், சம்பவங்களைப் பற்றி பேசுதல் போன்றன.

4. எண்ணவழி சிகிச்சை –COGNITIVE THERAPY..

தமிழக விபச்சார ஊடகங்களே... உங்க துரோகத்தை மறக்கமாட்டோம்டா...


ஆனா உங்களை என்னதான் கிழி கிழினு கிழிச்சாலும் நீங்க மக்களுக்கு உதவப்போறதில்ல..

ஒரு சமூக வளைதளம் தான் நம்மை காக்க சிறிது உதவுது, ஆளும் வர்க்கத்தால பல நேரங்களில் நம் கண்ணை விழிப்படையவிடாம குத்தவும் செய்யுது..

அடைப்பட்ட வலையின் எலிகளாக நாம்...

சென்னை மக்களே உதவவும்...


தேவையான பொருட்கள்...

டார்ச்
மெழுகுவர்த்தி
தார்பாய்
பிஸ்கேட்
மளிகை பொருட்கள்
அரிசி
நாப்கின்
மற்றும் உணவு பொருட்கள்...

கஜா புயல் பேரிடர் இழப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது?


நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை கடலூர் முதல் சிவகங்கை, ராமநாதபுரம் வரை கோரத் தாண்டவமாடிய கஜா சூறாவளியால் தமிழ்நாட்டின் ஏழு கடலோர மாவட்டங்கள் முற்றிலும் நிலைக்குலைந்து போயுள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள 45 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சீரழிந்துள்ளதை செய்திகளுன் காட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் கஜா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதல் கட்ட நிவாரணமாக ௹.1,000 கோடியை ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், விவசாயிகள் சந்தித்துள்ள கடும் சேதாரங்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரணமும் இழப்பீடும் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

சேதாரம் ஏற்பட்டுள்ள விவசாய நிலப்பகுதிகளின் கணக்கீடு ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால் நெல்லுக்கும், தென்னைக்கும்,. கரும்பு உள்ளிட்ட மற்ற பயிர்களுக்கும் அறிவித்துள்ள நிவாரணம் மற்றும் இழப்பீடுகள் ஏற்கத்தக்கதல்ல. நெல், கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஹெக்டேருக்கு ௹.13,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நீண்ட காலமாகவே இயற்கை இடர்பாடுகளால் தங்களுடைய விளைச்சல் முழுவதுமாக பாதிப்பிற்கு உள்ளாகும் போது – நெல்லுக்கு மட்டும் ஏக்கருக்கு செலவு + உழைப்புக் கூலி என்று கணக்கிட்டு ௹.25,000 கோரி வருகிறார்கள். ஆனால் ஒரு ஹெக்டேருக்கு (ஒரு ஹெக்டேர் = இரண்டரை ஏக்கர்) ௹.13,500 என்றால் ஒரு ஏக்கருக்கு வெறும் ௹.5,400 மட்டுமே. இது எப்படி நிவாரணம் + இழப்பீடு ஆகும்? இப்படியெல்லாம் அறிவிப்பது நமது விவசாய மக்களை ஏகடியம் செய்வதாகாதா?

தென்னைக்கு அறிவித்திருக்கும் நிவாரணமும் சற்றும் நியாயமற்றதாகும். ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னைகள் என்று கணக்கிட்டு அதற்கு இழப்பீடு நிவாரணமாக ௹.1,92,500, மறு சாகுபடி செய்ய ௹.72,100 என ஒட்டுமொத்தமாக ௹.2,64,600 பெறுவர் என்று அறிவித்துள்ளார். நிவாரணத்தை எடுத்துக்கொள்வோம் ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்களில் சராசரியாக 70 விழுக்காடு – 125 மரங்கள் ஒடிந்தும் வேரோடும் சாய்ந்துவிட்டன. இதற்கு மரத்திற்கு ௹.1,540 வருகிறது! இவ்வளவுதானா ஒரு தென்னையின் மதிப்பு?

இதனால்தான் எட்டு வழிச் சாலை கணக்கை நேற்று பதிவிட்டேன். அங்கு வெட்டிச் சாய்க்கப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் – அது காய்த்து பயனளிக்கும் மரங்களாக இருப்பின் ௹.50 ஆயிரமும் காய்க்கும் நிலையில் வளர்ந்த மரமாக இருப்பின் அதற்கு ௹.40 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்தீர்களே? அப்படியானால் இங்கு 125 மரங்களுக்கு ௹.62 இலட்சத்து 50 ஆயிரம் அல்லவா தர வேண்டும்? இவ்வாறு கேட்பது ஏதோ வேடிக்கை விநோதமில்லை. ஒரு தென்னை ஒவ்வொரு ஆண்டும் தரும் பலனில் இருந்தே அதற்கான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மனிதன், மரம், கொல்லை என்று எதுவானாலும் அதன் எஞ்சியுள்ள வாழ் நாளும் வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்கக் கூடிய பயனை வைத்தே இழப்பீட்டை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

எடுத்துக்காட்டாக, நேற்று தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தென்னை விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர் வீரசேனன், ஒரு ஏக்கரில் வளர்ந்து காய் கொடுக்கும் தென்னைகளில் இருந்து ஆண்டுக்கு ஆறு முறை காய் பறிப்போம் என்றும், அது இந்த ஆண்டில் தேங்காய்க்கு கிடைத்த விலையின் படி ஏக்கருக்கு 92,000 பலன் பெற்றோம் என்று தெரிவித்தார். அதன்படி பார்த்தால் ஒரு ஹெக்டேர் தென்னைக்கு ஆண்டுப் பலன் 2 இலட்சத்து 30 ஆயிரம். ஒரு ஓராண்டுக் கணக்கு, இதை குறைந்த்து பத்து ஆண்டுகளுக்கு கணக்கீடு செய்தால் 23 இலட்சம் வருவாய் தரக் கூடியதாகும். இதில் சில ஆண்டுகளில் மழையின்றியோ நோய் போன்று மற்ற வகைகளில் விளைச்சல் இல்லாமல் போனாலோ மட்டுமே இழப்பு ஏற்படும். அப்படி ஒரு 20 விழுக்காட்டை கழித்துவிட்டாலும் பத்து தொடர் ஆண்டுகளுக்கு ஒரு விவசாயி ஒரு ஹெக்டேருக்கு ௹.20 இலட்சம் அளவிற்கு உறுதியான வருவாய் பெறுவார்.

இது ஏதோ கற்பனைக் கணக்கு அல்ல, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனும் மின் ஆற்றல் இணைப்புக் கட்டமைப்பை உருவாக்கும் இந்திய ஒன்றிய அரசு நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் போது நீக்கும் தென்னைகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பதற்கான கணக்கீட்டு முறையை ஒரு சூத்திரமாகவே கொடுத்துள்ளது. இது கேரள அரசிடம் இருந்து பெற்றதை பயன்படுத்துகிறது. அதன்படி, Compensation = yield X constant factor X average market value X future age என்கிற சூத்திரத்தை வைத்து கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

இதைத்தான் இங்கு மேற்கண்ட கணக்கீட்டில் நான் கையாண்டுள்ளேன்.
இப்படி எந்த சூத்திரத்தை பயன்படுத்தி தமிழக அரசு நிவாரணத்தை கணக்கீடு செய்துள்ளது? தொழில்களுக்கும் வர்த்தகத்திற்கும் இழப்பு ஏற்பட்டால் மிகத் துல்லியமாக இழப்பீட்டை கணக்கீடு செய்து காப்பீடு வழங்கும் இந்நாட்டில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் மட்டும் பிச்சைக் கணக்கு போடுவது ஏன்?

ஒரு மரத்தை வெட்டுவதற்கும், அகற்றுவதற்கும் ௹.1,100 கணக்கீடு செய்து அளிக்கும் தமிழக அரசு, உயிரோடு காய்த்த நிலையில் சாய்க்கப்பட்ட தென்னைக்கு அது தந்த பலன், இன்னும் எத்தனை ஆண்டுகள் அது கொடுத்திருக்கக் கூடிய பலன், அந்த பலனுக்கு இருக்கும் சந்தை மதிப்பு ஆகிய அனைத்து காரணிகளையும் அல்லவா உள்ளடக்கி கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்? மறு சாகுபடிக்கு அறிவித்துள்ளதை குறை கூறவில்லை. ஆனால் இருப்பதை இயற்கை பேரிடரால் இழந்த விவசாயிக்கு நியாயமான இழப்பீடு பெறும் உரிமை இல்லையா? என்பதே எமது கேள்வியாகும். இது தென்னைக்கு மட்டுமல்ல, மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலன் தரம் மரங்கள் யாவற்றிற்குமான கோரிக்கையாகும்.

எனவே தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் மனிதாபிமானத்துடன் சிந்தனையை செலுத்தி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நமது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

கா. ஐயநாதன், சென்னை, நவம்பர் 20, 2018...

புதுக்கோட்டையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய களம் இறங்கிய கேரள மாநில அரசு மின்துறைக்கு நன்றி...


கஜா புயல் பாதிப்புகள்: தமிழக அரசின் உதவி மக்கள் கண்ணீரை துடைக்காது - பாமக அறிக்கை...


காவிரிப் பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பினாமி அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால், அங்குள்ள மக்களிடையே எழுந்துள்ள கோபமும், அக்கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்புவதையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை. அங்குள்ள மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சேர்த்த அனைத்தையும் ஒற்றை இரவில் இழந்து விட்டனர். கஜா புயல் தாக்குவதற்கு முந்தைய நாள் இரவு வரை கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் அடுத்த நாள் காலையில் ஒன்றுமில்லாதவர்களாக மாறி விட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் முழுவதையும்  புயல் வாரிச் சுருட்டி வீசி விட்டது. முதல் நாள் இரவு வரை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உணவு வழங்கியவர்கள் அடுத்த நாள் காலையில் ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்களாகி விட்டனர். இந்த வலி எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவிக்கும் மக்களால் மட்டுமே உணர முடியும்.

இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்ப்பது ஆதரவையும், ஆறுதலையும் தான். ‘பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்’ என்று கூறி அவர்கள் மனதில் நம்பிக்கையை மட்டும் விதைத்து விட்டால், அது கொடுக்கும் தைரியத்தில் இழந்தவற்றை மறு உருவாக்கம் செய்யும் பணிகளில் அவர்கள் முழுவீச்சில் இறங்கியிருப்பார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஒருவேளை உணவு வழங்குவதற்குக் கூட தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யவில்லை. புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற அமைச்சர்கள், சுற்றுலா சென்றதாக கருதிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்களே தவிர மக்கள் குறைகளை களையவில்லை.

புயலால் ஏற்படும் பாதிப்புகள் சரி செய்யப்படும் என்று கூறியிருக்க வேண்டிய அமைச்சர்கள், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியதால் தான் அவர்கள் மீது மக்களின் கோபம் திரும்பியது. சொந்தத்  தொகுதியான வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள்  துரத்தியடித்ததற்குக் காரணம் இந்த கோபம் தான். தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு,  கடம்பூர் ராஜு ஆகியோர் முற்றுகையிடப்பட்டதற்கு காரணமும் இதே கோபம் தான். அ.தி.மு.க.வின்  துணை அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் சொந்த ஊரிலேயே மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் மக்கள் கோபமடைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்  என்றால், மற்ற பகுதிகளில் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம்.

மக்கள் கோபத்துடன் போராட்டம் நடத்தும் இடங்களில் அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் தங்களின் அதிகாரத் தோரணையை காட்டியது தான் நிலைமையை மோசமாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடிக்காடு என்ற இடத்தில் முற்றுகையிட்ட மக்களை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தகாத வார்த்தைகளால் திட்டியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் தமக்கும் இத்தகைய வரவேற்பு தான் கிடைக்கக்கூடும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில்  நேற்றிரவு பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். இது மக்கள் கோபத்தை தணிக்கவில்லை; மாறாக மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை.

நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும் எனும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல.

சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் முதலமைச்சர் மக்களின் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்...

இதுவரை உதவிகள் கிடைக்காத கிராமங்கள்...


கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ, கேரளாவிலோ திராவிடம் என்ற வார்த்தைக் கூட இல்லையே ஏன்?


தமிழ் நாட்டில் மட்டும் திராவிட முன்னேற்ற கழகங்கள், இயக்கங்கள், தலைவர்கள் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள்..

தமிழ் நாட்டில் திராவிடம், திராவிடம் என்று பலர் விடாப் பிடியாக பிடித்து தொங்குவதற்குக் காரணம், திராவிடர் என்னும் போர்வையில் ஒளிந்துக் கொண்டு தெலுங்கரும், கன்னடரும், மலையாளியும் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பதே..

அண்டை மாநிலங்களில் எல்லாம் கன்னட நடிகர்கள் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம், தெலுங்கு நடிகர்கள் சங்கம் என்று தான் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர்கள் சங்கமாம்..

தற்போது, இந்த நடிகர் சங்கத் தலைவர் பதவியை, தெலுங்கன் விஷால் ரெட்டி என்னும் நடிகன் அடைந்து விட்டான்..

எனக்கு சில கேள்விகள்...

விஷாலுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

அவர் வேண்டுமென்றால், அவர் மாநிலத்தில் சென்று நடிகர் சங்கத் தலைவராகட்டும், இல்லை மாநில முதல்வராகட்டும், எவரும் கேட்கப் போவதில்லை.

ஆனால், அடுத்தவனுக்கு பரிமாறியுள்ள உணவை பறித்து திண்ணும் (எச்சி பொறுக்கும் வேலையை) வேலையை இந்த திராவிடர் போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எப்போது விடுவார்கள்?

எல்லா மாநிலத்திலும் அந்தந்த மண்ணின் மக்களின் ஆளுமையே இருக்கிறது. பிற மொழி மக்கள் அதிகப்படியாக வசித்தாலும், அந்த மாநில மண்ணின் மைந்தர்களில் கட்டுப் பாட்டுக்குள்ளேயே அவர்கள் இருப்பார்கள்..

உதாரணமாக, பெங்கலூருவில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் கர்நாடக மண்ணின் மைந்தர்களை மீறி எதுவும் செய்து விட முடியாது..

கேரளாவை மலையாளி ஆள்கிறான்,
ஆந்திராவை தெலுங்கன் ஆள்கிறான்.
கர்நாடகாவை கன்னடன் ஆள்கிறான்.

ஆனால், தமிழ் நாட்டை மட்டுமே திராவிடன் ஆள்கிறான்...

நமது தமிழ்ச் சொந்தங்களின் அறியாமையாலும், பெருந்தன்மையாலும், இயலாமையாலும், கண்டவனை எல்லாம் தலைமை ஏற்று வீண் போனதாலும், ஏழ்மையாலும் இன்று வரை இந்த இழி நிலை தொடர்கிறது..

நன்றாக தமிழ் தமிழ் என்று வீர வசனமெல்லாம் பேசுகிறார்கள் அனைத்துத் திராவிட இயக்கத் தலைவர்களும், ஆனால், எதாவது ஒரு தமிழர் வாழ்வாதாரப் பிரச்சனை, உயிர்ப் பிரச்சனை என்றால், வாய் மூடி மௌனிக்கிறார்கள். இல்லையென்றால், தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிரான நிலைப் பாட்டை எடுக்கிறார்கள்..

தமிழ் நாடு தமிழருக்கே. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்பதை தமிழர்கள் நிலை நாட்டினால் மட்டுமே திராவிடர் என்ற போர்வையில் தமிழரின் எச்சில் இலையிலிருந்து உணவை பறித்துச் செல்லும் திராவிடர்கள் திருந்துவார்கள்...

வரலாற்று நெடுகிலும் ஒருவரை ஒடுக்கவேண்டுமென்றால் அவரது அடையாளம் மூலமே ஒடுக்கி வந்துள்ளதை நாம் காணலாம்...


உதாரணமாக..

1. பறையர் – பறப்பயல்(இதன் விளைவாக ஆங்கிலத்தில் Pariah என்ற சொல் உருவாகி an outcast (தீண்டத்தாகதவர், ஒதுக்கப்பட்டவர், தனித்து விடப்பட்டவர்) என்ற அருத்தத்தில் பயன்படுத்துவார்கள்… இந்தச் சொல்லின் அருத்தத்தை ஆங்கிலத்தில் மாற்றுவோம்…)

2. சாணார் (நாடார்) – சாணப்பயல்

3. பள்ளர் – பள்ளப்பயல்

4. பள்ளி (வன்னியர்) – பள்ளிப்பயல்

5. கள்ளர் – கள்ளப்பயல்

6. இடையர் – எடப்பயல்

7. தமிழர் – பாண்டிப்பயல் (சேரலம்),  பறத் தமிழா (இலங்கை)

சரி… இந்த சூத்திரர் என்றால் யார்… சூத்திரர் என்ற சொல்லின் உண்மையான அருத்தம் என்ன…

சூத்திரர் என்பது வேளாளர்களின் வேறு பெயர்களுள் ஒன்று என்று பிங்கல நிகண்டு கூறுகிறது…

வேளாளர் என்பவர்கள் “தொல்குடி சூத்திரர்கள்” என்று பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (அவரும் “வேளாளர்” சமுகத்தை சார்ந்தவர் ஆவார்)…

சூத்திரர் என்பது இழிசொல்லாக இருந்திருந்தால், சேக்கிழார், தான் சார்ந்த சமூகத்தையே அப்படிக் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை…

அப்போது, சூத்திரர் என்ற சொல்லின் உண்மையான அருத்தம் தான் என்ன…

சாதியொழிப்பு என்ற தமிழர் இன அடையாள அழிப்பில் அரசியலுக்காக சார்திக் கட்டமைப்பில் பிராமணியமும் திராவிடமும் சேர்ந்து வேறு என்னென்ன வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து வைத்துள்ளார்களோ… அரிசனம் (அரி+சனம்), பஞ்சமர், சண்டாளன், தேவரடியாள் (தேவடியாள்(திரிபு)) ஆகிய சொற்கள் யாரைக் குறிக்கும்… அவற்றின் உண்மையான அருத்தம் என்ன…

பொருள் மாற்றம் அடைந்துள்ள சொற்கள்..

1. தமிழகத்தில் இருக்கும் தொல்குடி சூத்திரர்>தாழ்த்தப்பட்ட சூத்திரர்.

2. ஏற்றத்தாழ்வு இல்லாத Horizontal வருணமுறை>ஏற்றத்தாழ்வு கொண்ட Vertical வருணமுறை.

3. பறையர்>தீண்டத்தாகதவர், ஒதுக்கப்பட்டவர், தனித்து விடப்பட்டவர்.

4. பஞ்சமர்>நால்வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்.

5. அரிசனம்>தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், சூத்திரர்.

6. தமிழகத்தில் இருக்கும் தேவரடியாள்>தேவதாசி...

மஞ்சள் மருத்துவக் குணங்கள்...


நறுமண பொருட்களுடன் கலந்து உணவில் சேர்க்கப்படும் மஞ்சளின் மகத்துவம் அதிகமானது.

மஞ்சள் ஒரு நிலத்தடி வேர் ஆகும். இதன் வேரும், இலையும் நீண்ட நெடுங்காலமாக, பாரம்பரியமாக இந்தியா- சீனா மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மஞ்சளானது வலி நிவாரணியாகவும், கிருமிகளை அழிக்கும் கிருமி நாசினியாகவும், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வலிமையுடையதாகவும் இருக்கிறது.

ஜிஞ்சர் அல்லது ஜிஞ்சிபேரேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர் கர்கமா லாங்கா என்பதாகும். மஞ்சளில் ஆரோக்கியம் தரும் பலன் அதிகமாக இருக்கிறது. வலி நிவாரணியான இது, நுண்ணுயிர்களை அழிக்க வல்லது.

100 கிராம் மஞ்சளில் 1.80 மில்லி கிராம் பைரிடாக்சின் உள்ளது. இது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் அளவாகும். இந்த பைரிடாக்சின் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

புதிதாக பறிக்கப்பட்ட மஞ்சளில் வைட்டமின்-சி உள்ளது. தண்ணீரில் கரைக்கக்கூடிய வைட்டமின்-சி, சக்தி பெற்ற ஆன்டி ஆக்சிடன்ட்களையும், கிருமிகளையும் தடுக்க வல்லது.

மஞ்சளில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஷ், தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்கள் இருக்கின்றன.

இவற்றில் உடல் மற்றும் செல் திரவங்களில் முக்கிய அங்கம் வகிப்பது பொட்டாசியம். இது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது...

முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்...


கவலைகள் மாற...


கவலைகள் மனதில் இருந்தாலே தோல்வியையும். மூதேவியையும் விருந்து வைத்து அழைப்பது போலாகும்.

கவலைகள் உள்ள உள்ளத்தில் தெய்வ தேவதைகள் குடிகொள்ளாது, அதனால் தான் நம் முன்னோடிகள்..  ஆசையை ஒழித்தால் அனைத்தையும் பெறலாம் என கூறினார்கள்.

ஆசை நிறைவேறாத போது கவலைகள் உண்டாகும்..
ஆசையில்லாத போது கவலைகள் குடிகொள்ளாது..

எனவே மனதில் தெய்வ தேவதைகளுக்குத் தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர கவலைகளுக்கு அல்ல..

கவலை இருந்தால் சிந்தனை சிதறும். மனதை அடக்க முடியாது.

எனவே எப்பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதை முதலில் மறக்கவும், அல்லது விலக்கவும்.. அதுவே வெற்றிக்கான வழியாகும்...

கவலையில்லாத மனிதன் யாருமே இல்லைதான், கடந்தகால கவலை. நிகழ்கால கவலை. வருங்கால கவலை. இந்த மூன்று கவலையில் ஏதாவது ஒரு கவலையில் மனிதன் வாழ்கிறான்.

இதில் எதிலுமே கவலை இல்லாதவன் வாழ தகுதி அற்றவன் என சாஸ்திரம் கூறுகிறது.

எனினும் லட்சியக் கவலை இருக்கலாமே தவிர. வீண்கவலை இருக்க கூடாது.

அக்காலத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் ஆசையை அழித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மன்னர்களெல்லாம் போர்க்களம் செல்லும் போது உயிர் மேல் ஆசை வைக்காமல் சென்றவர்கள்.

அவர்களெல்லாம் கூட வெற்றி பெற அது ஒன்றே காரணம் என வரலாறு கூறுகிறது.

வெற்றி என்ற லட்சிய கவலையை ஆயுதமாக கொண்டு வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.

தாங்களும் நம்பிக்கையும். விடாமுயற்சியையும் கேடயமாக கொண்டு அன்பை ஆயுதமாக கொண்டு முயற்சியுங்கள் வெற்றி உண்டு.

நமக்கு இருப்பது ஒரு மனம் அதை கவலைக்காக இடம் ஒதுக்கிவிட்டால் தெய்வத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும் உணர்ந்துக் கொள்ளுங்கள்...

தரமான சம்பவம்...


கல்லணை...


உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும்...

நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை...

இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை.

கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 தினங்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...


பாஜக பொன். ராதா எனும் தமிழகத்து துரோகி...


ஒக்கி புயலின் போது வெளிநாட்டு பயணம்...

கஜா புயலின்போது வெளி மாநில பயணம்...

இதுதான் பாஜகவின் ஒரே எம்.பியும், மந்திரியுமான பொன். ராதாவின் ஆகச்சிறந்த நடவடிக்கை...

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்...


கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை அருள் மொழித் தேவன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.

கோயிலின் கடைகால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.

சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை (விமானத்தை) எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.

பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.

கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.

ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை..

அருள் மொழித் தேவன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

கஜா புயல்; பாமக சார்பில் ரூ 1 கோடி நிதி ஒதுக்கீடு: பாமக ராமதாஸ் ஐயா அறிவிப்பு...


இயற்கையை புரிந்து கொண்டால் உங்கள் இயற்கை தன்மையும் புரிந்து கொள்வீர்கள்...


இயற்கை தன்மையை புரிந்து கொண்டால்.

உங்கள் வாழ்க்கை பயண தன்மையும் புரிந்து கொள்வீர்கள்.

வாழ்க்கை பயண  தன்மையை புரிந்து கொண்டால்.. இயற்கையை புரிந்து கொள்வீர்கள்..

ஆம் இயற்கை கற்பிக்கும் சிறந்த வழிகாட்டி...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


படத்தில் உள்ள தலைப்பைப் படிக்கும் போது நிச்சயமாக அநேக மக்களை ஆச்சிரியப்படுத்தலாம்.

அதற்கான சில அடிப்படை காரணங்கள்.

நபி சுலைமான் கடவுளின் தூதராக இருந்தார், அவர் கடவுளின் படைப்புகளுக்குள் காற்றும் வல்லமையும் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கைப்பற்றும் திறனுடன் சிறப்புரிமை பெற்றார். உண்மையில், பறவைகள் மற்றும் ஜின்கள்(பூதங்கள்) எப்போதும் சாலமோனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தன.

பொரோபுதூர் கோவிலில் சிலைகள் மற்றும் பிற உயர் கட்டிடங்களைப்  கண்டறிந்ததால், சாலொமோன் ராஜாவின் அமானுஷ்ய சேவகர்களான ஜின்களின் (பூதங்கள்) உதவியுடனே ஒரு உயர் கட்டிடத்தை கட்டியமைக்க முடிந்திருக்கும் .

பொரொபூதூர் கோவிலில் கட்டியமைக்க உதவிய பல விலங்குகளின் சிலைகளே உள்ளன, சாலொமோன் ராஜா விலங்குகளுடன் பேச முடிந்த ஒரு அடையாளமாக இருக்கிறது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பொதுவாக 'su' என்று தொடங்கும் பெயர்களே  வைக்கப்படுகின்றது. அதன் தொடக்கம், சுலைமான் என்ற பெயரின் முதல் எழுத்தே.

இந்தோனேசியாவில் பிராந்திய சபா. மக்கள் பொதுவாக மத்திய ஜாவாவில் வானாசேபா ஐ குறிக்கிறார்கள். பண்டைய ஜாவஸ் இலக்கியத்தின் படி 'வானா' என்பது காடு. எனவே, வானாசேபா சபா வன பொருள். சபா என்றால் அது சேகரிக்கப் பயன்படுத்தப்படும் இடமாக இருக்கிறது. சதுப்பு நிலங்களைச் சுற்றிலும் பறவைகள் வந்து, அதைச் சேகரித்தபோது, ​​சாமுவேல் நிலப்பகுதி இருப்பதாக சாலொமோன் ராஜாவிடம் கூறினார்.

சாலமோனின் ராணியிடம் உரையாற்றினார் சாலொமோன் முன்னர். ஃபாஹிமி பஸ்யா படி, அந்த கடிதம் தட்டில் வைக்கப்பட்டுள்ளது. போரோபூரில் இருந்து சுமார் 36 கிமீ தொலைவில் இருக்கும் ராணி போகோ கோவில் குளத்தில் காணலாம்.

பொரோபுதூர் கோவிலில் சாலமன் முடிக்கப்படாத ஒரு சிலை உள்ளது. ஜின் ஒரு கோவில் கட்டிமுடிக்கும் போது, சாலமன் இறந்ததை கேட்கும் போது, ​​அவர்கள் வேலை விட்டு செல்கிறார்கள்.

- தொடரும்...

அனைவரும் வேண்டுவோம்..


இயற்கையை மனதில் வேண்டுவோம் தினமும்  இனி இந்த மண்ணையும் உயிரனங்களையும் இயற்கை காப்பாற்றும் எந்த தீங்கும் வராது.

இனி இயற்கை நன்மை மட்டுமே செய்யும் செய்கிறது என்று வேண்டுங்கள் மனதார.

நிச்சயம் இயற்கை கைகொடுக்கும் அனைத்து புயலும் தடம் மாறி சென்று அதன் கோபம் தனியும்.

கரம் சேருங்கள்  அதிர்வலைகளை கூட்டுங்கள்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ரோமானிய சிங்கசோராவில் உள்ள 16 ஆம் நூற்றாண்டின் காலத்தை கடந்த ஒரு தேவாலயத்தின் சுவர் மீது இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.

சதி ஆலோசனை ஆய்வாளர்கள். இந்த ஓவியம் வேற்றுலக பார்வையாளர்கள் மற்றும் மனிதகுலத்தின் சந்திப்புகளுக்கு ஆதாரமான, பல பழங்கால ஓவியங்களில் ஒன்றாகும் என்று கூறுகின்றனர்.

மேலும் 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு செம்பு நாணயத்தில் காணப்படும் பறக்கும் தட்டு போன்ற வடிவத்திலும் காட்சியளிக்கிறது.

1856 முதல் 1680 வரையிலான காலப்பகுதியில் இந்த பிரஞ்சு நாணயம் பண்டமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இதில் காணப்படும் அந்த சக்கரம் போன்ற பறக்கும் தட்டு, எசேக்கியேல் கண்ட சக்கரத்தை நினைவுபடுத்தும் விதமாக அச்சிடப்பட்டது. என சில UFO ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

இந்த விவிலிய தேவாலய ஓவியத்தின் விளக்கம்;

அவர்கள் தேவதூதர்களின் குறியீட்டு ரீதியான பிரதிநிதிகளாக இருப்பதால், அவர்களிடமிருந்து வெளிச்சத்தின் தூண்கள் பரிசுத்த ஆவியானவராய் இருப்பதைக் குறிக்கின்றன..

இயேசுவின் பிறப்புக்கு வழிநடத்திய ஒளியின் வெளிச்சத்தை பிரதிபலித்தவர்கள் இவர்களே..

இன்றைய மக்கள் உண்மையில் வானத்தில் இதுபோன்ற பொருள்களைப் பார்க்கிறார்கள். அதே போன்று கடந்த காலங்களில்  இந்த மக்களின் முன்னோர்கள் வானில் அவர்களை கண்டு கடவுளாகவும் வணங்கினார்கள்...