09/09/2018

2020 இந்தியா இலுமினாட்டிகளின் கையில்.?


உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இலுமினாட்டிகள்..

2020 இந்தியா வல்லரசு...

முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும்..

ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள்.. பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள்..

இந்த இலுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள் , கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம்..

இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும் ..

இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள்..

அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும்..

தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல..

தமிழ் படங்களிலும் இந்த இலுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்..

தற்போது வெளியாகியுள்ள பிச்சைக்காரன், ஜில் ஜங் ஜக்  போன்ற பல படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான்..

இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள்..

யாரும் லஞ்சம் வாங்கி, பணத்தை பதுக்க மாட்டார்களாம்.  வேறு வழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில போடுவார்களாம்..

பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும்..

அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும்.

அதன் பிறகு ஒவ்வொரு தனி மனிதனையும் வங்கியோட நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்..

லஞ்சம் ஒழிந்து விடுமாம்..

இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும்..

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்..

இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக் கொண்டு  இருக்கிறார்கள்..

இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டு விடுகிறார்கள்..

இதுக்கு தான் கட்டாய வங்கிக் கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்..

இதுக்குதான் தெருத் தெருவாக ஊடுருவி மகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள் ..

இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி..

மக்களுக்கான உண்மையான தலைவன் வரும்பொழுது லஞ்சம் தானே ஒழியும்..

இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள்..

இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது..

1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்சிகளில் புழக்கத்தில் இல்லை..

வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள்.

இது மறைமுகமாக இந்த இலுமினாட்டிகள் நமக்கு சொல்லும் கருத்து.

அதே போல் பிச்சைக்காரன் படத்திலும் 500, 1000 தடை செய்தால் யாரும் பணத்தை பதுக்க முடியாது என்று சொல்வார்கள்..

2016 நவம்பர் மாதம் இந்தியாவில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டும் விட்டது..

இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும்..

நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப் படுவோம்..

நாம் அனைவரும் இன்னும் சில ஆண்டுகளில் நாசமா போக போறோம்...

தமிழர்கள் உண்மையாகவே திராவிடர்களா ?


விபச்சார எச்ச ஊடகங்கள் அதிமுக ஊழலை மறைக்கிறது...


3500 கோடி இமாலய ஊழல்...

TIMES NOW ஆங்கில தொலைக்காட்சி...  150 நாட்கள் புலனாய்வு செய்து, அமைச்சர் SP_வேலுமணி அவர்கள் செய்த  120 கோடி ரூபாய் ஊழல்களை ஆதாரபூர்வமாக வெளிக்கொண்டு வந்துள்ளது...

விமரிசனம்...


விமரிசனங்கள் பல வகையானவை. அவற்றை எப்படி எதிர்கொள்வது?
 
காகித அம்பு...

சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி,மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும். இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.

கால்பந்து...

சில விமரிசனங்கள், விளையாட்டாக, உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும்.

விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.

கண்ணாடி...

சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.

உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

கத்தி...

சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும்.

நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பதுபோல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள். விலகி விடுங்கள்...

ஜுரம் (Fever) என்றால் என்ன?



தேவையில்லாத வைரஸ், பக்டீரியாக்களை வெளியேற்ற இரத்த நாளங்களும், இரத்த குழாய்களும் மிக வேகமாக வேலை செய்யும் போது உடலில் ஒரு விதமான வெப்பம் ஏற்படும் இதுவே ஜுரம்...

உடல் நலம் காக்கும் பச்சிலை காட்டுச்சுரை...


இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர்..

காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்து விடலாம்.

கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.

நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்...

பாஜக - அதிமுக வின் மக்கள் அழிப்பும் முன்னோட்டம்...


மனம் - 2...


மனிதன் நினைத்தாள் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம், படித்திருப்போம்..

ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை...

வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை..

நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர்..

இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது..

எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது..

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்..

உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரிதான்

இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள்...

பயங்கிரவாத பாசிச ஊழல் பாஜக ஒழிக...


எதிர்க்கும் அளவுக்கு எங்களிடம் வலிமை இல்லை...


ஆனால் அவர்கள் அதிகாரத்தின் அடித்தளத்தை தகர்க்கும் கருத்தியல் வலிமை எங்களிடம் அதிகம் இருக்கிறது...

அந்த கருத்தியலை தொடர்ந்து  விதைத்து கொண்டே இருப்போம்,

ஒருநாள் அனைத்தும் மாறும்..

ஏனெனில் அதுதான் இயற்கையின் விதி...

சிந்து சமவெளி நாகரிக உண்மைகள்...


சிந்து சமவெளி நாகரிகப் பகுதியான ராக்கி கரி (Rakhigarhi) அகழ்வாராய்ச்சி பகுதியில் 4500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மனித எலும்பின் மரபணு, தமிழ்நாட்டின் தற்போதைய நீலகிரியில் வாழும் தமிழர் பழங்குடியினரான இருளர் மரபணுவோடு ஒத்துப்போகிறது. ஆரியர்களின் மரபணுவோடு ஒத்துப்போகவில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு.

சிந்து சமவெளி, ஆரியர்களின் வேத காலத்திற்கு முந்தையது என்பதும், அவர்கள் ஆரம்பகால தமிழ் மொழி பேசி இருக்கக்கூடும் என்பதும் அறிவியல் பூர்வமாகிறது. இஸ்லாமியம், கிறித்துவம் எவ்வாறு அந்நிய மதங்கள் என நூற்றாண்டு காலமாக இந்துத்துவா வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறதோ, அவ்வாறே வேத மதம் எனப்படும் ஹிந்து(இந்து) மதமும் அந்நிய மதமே! ஆரியர்களும் புலம்பெயர்ந்தவர்களே!

மூதாதையர்களையும், முன்னவர் நினைவான இடுகற்களையும், மரங்களையும், இயற்கையையும் மட்டுமே வணங்கும் பழங்குடியினர் எந்த மதத்தையும் சாதியையும் சாராதவர்கள், தமிழர்கள். தமிழருக்கும் நிறுவனப்படுத்தப்பட்ட மதங்கள் எதற்கும் தொடர்பு இல்லை அனைத்து மதங்களுமே நம்மிடம் புகுத்தப்பட்டவை...

குட்கா ஊழல் நடைபெற்றது உண்மையே - ஜார்ஜ்...


ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது...


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடுதான் என அறிக்கை வெளியிட காரணம் என்ன? என அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், பல உறுப்புகளில் பிரச்சனைகளுடன் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, அவர் நினைக்கையில் வீடு திரும்புவார் என கூறியது ஏன் என்றும், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என வெளியிட்ட அறிக்கைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும் எனவும் அப்போலோ மருத்துவமனைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறந்த வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது...

ஊழல் அதிமுக கலாட்டா...


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடினால் என்ன நடக்கும்?


தமிழகத்தில் நெல் அறுவடை காலங்களில் வயல்களிலும் களத்திலும் நெல் மொத்தமாக வாங்கும் தரகர்களின் நடமாட்டத்தை மிக அதிகமாகப் பார்க்க முடியும்.

நெல் உற்பத்தியில் ஈடுபடும் சிறு குறுவிவசாயிகள் தங்கள் விவசாய பணிகளுக்கான மூலதனமாகக் கடன்களை நம்பித்தான் இருக்கிறார்கள். அப்படி கடன் வாங்கி விவசாயம் செய்யாதவர்களாக இருந்தாலும் அறுவடை காலத்தில் உடனடி பணத்தேவை காரனமாக வயலில் வைத்தே நெல்லை விற்றுவிடும் சூழலில் இருப்பவர்களின் தேவையின் பொருட்டு இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள்.

அப்படி அவர்கள் கேட்கும் அந்த அடிமாட்டு விலை என்பது அரசு நிர்ணைய்க்கும் குறைந்த பட்ச ஆதார விலையில் இருந்து சற்று குறைவானதாக தான் இருக்கும்,. அரசு கொள்முதல் நிலையங்களில் போடப்பட்ட நெல்லுக்கான பணத்திற்காக கொடுக்கப்படும் டோக்கன் வரிசையின் படி சில நாட்கள் காத்து கிடக்க வேண்டியிருக்கும்.. மற்றும் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் வண்டி செலவு கணக்கிட்டு களத்திலயே தரகர்களிடம் கொடுப்பார்கள். அரசு நிர்ணயித்திருக்கும் தொகை இந்த ஆண்டு 1550 தான் இது உற்பத்தி செலவோடும் விவசாயின் உழைப்பிற்கான கூலியோடும் கணக்கிடும் போது இந்த 1550 ரூபாய் என்பதே அநீதியானதுதான். ஆனால் தன் நெல்லின் விலை குறித்து தரகர்களோடு பேரம் பேச சிறு குறு விவசாயிகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச பிடிமானம் அரசு நிர்ணயிக்கும் விலையும் நெல் கொள்முதல் நிலையங்களும். அதை மூடுவது என்பது தமிழகத்தின் ஆற்றுப் படுகைகளில் இருக்கும் நெல் விவசாயிகளை மொத்தமாக அதில் இருந்து வெளியேற்றிவிடும்.

ஏனெனில் இப்படி குறைந்த பட்ச விலை நிர்ணயம் இல்லாத காய்கறிகள் மொத்தமாக விளைகின்றபோது ஏற்படும் பேரிழப்புகளை வார்த்தைகளின் சொல்ல முடியாது.

பதினைந்து வாழை குழைகளை நெல்லை நாயினார்குளம் மார்கெட்டின் கமிசன் மண்டிகளில் ஏலம் விட்டு 800 ரூபாயோடு வீடு திரும்பியிருக்கிறேன்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது என்பது அப்படியொரு நிலையை நோக்கித்தான் தமிழகத்தின் பெரும்பான்மையான விவசாயிகளை கொண்டுவிடும். மற்ற பயிர்ளை போலத் தேவை பார்த்துச் சூழல் பார்த்துச் செய்வது அல்ல நெல் விவசாயம். அது அணைகள் திறக்கும் பருவகாலத்தில் ஆற்றுப் படுகை முழுவதும் ஒரே நேரத்தில் பயிரிட்டு அறுவடை நடக்கும் பயிர். ஆண்டு முழுவதும், மக்களுக்கான உணவுப் பொருள் அது. அதில் அரசு தன் பொறுப்பை விட்டுவிட்டுச் செல்வது என்பது தன் குடிமக்களைக் கைவிட்டு செல்வதாகும்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதாக இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கை செய்திகளில் நாம் எல்லொரும் பார்த்தோம். இது குறித்து மே 17 இயக்கம் 2016லிருந்தே ரேசன் கடையை மூடப் போகிறார்கள் என்று பேசிவருகிறது.

விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தை நிறுத்துவது, ரேசனில் கொடுக்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு க்கு பதிலாக அதை பணமாக வழங்குவது, உணவைச் சேமிக்கும் கிடங்குகளை மூடப்பட வேண்டுமென்பது உள்ளிட்ட சரத்துகளை உள்ளடக்கிய உலக வர்த்தக கழகத்தின் வணிக வசதி ஒப்பந்தத்தைத் தான் இப்பொழுது நடைமுறைப்படுத்த துவங்கியிருக்கிறார்கள், இதை எல்லாம் விரிவாக மக்களிடம் பேசுவதால் தான் எங்கள் தோழர் திருமுருகன் காந்தி மீது இந்த அரசிற்கு இத்தனை வன்மம். உண்மைகளைத் தொடர்ந்து பேசுவதால் அவர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை பதிகிறார்கள்...

ஓசி சோறு திக கீ.வீரமணியே பதில் சொல்...


SC/ST வன்கொடுமை சட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம்: இன்று முழு அடைப்பு. மோடி உருவபொம்மை எரிப்பு...


SC/ST வன்கொடுமை சட்டத்தை வலிமையாக்கும் பாஜக அரசுக்கு எதிராக, மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பிற்படுத்தப்பட்ட OBC வகுப்பினரும், பொதுப்பட்டியல் வகுப்பினரும் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்துகின்றனர்.

பிரதமர் மோடியின் சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜாஸ்தான் மாநிலங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

மத்திய பிரதேச முதல்வரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. பல இடங்களில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கப்பட்டுள்ளனர்; போராட்டக்காரர்களின் கேள்விகளை எதிக்கொள்ள முடியாமல் பலர் தலைமறைவாகி உள்ளனர்.

SC/ST வன்கொடுமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: பின்னணி என்ன?

SC/ST வன்கொடுமை சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை தடுப்பதற்காக - இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறவர்களுக்கு பிணை வழங்க வேண்டும், அரசு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால் விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இருப்பதாக கருதினால் மட்டுமே வழக்கு தொடுக்க வேண்டும் -  என உச்சநீதிமன்றம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பளிக்கும் இந்த சட்டத்தினை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறவில்லை. மாறாக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து அப்பாவிகளை விசாரணை இல்லாமல் தண்டிக்கக் கூடாது. போதுமான ஆதரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை மட்டுமே தண்டிக்க வேண்டும் என்றது உச்சநீதிமன்றம்.

நாட்டின் மிகப்பெரும்பாலான குற்றங்களில் நீதி இவ்வாறுதான் நிலைநாட்டப்படுகிறது. குற்றம் சாட்டப்படுவதாலேயே யாரும் குற்றவாளியாக கருதப்படக் கூடாது. உரிய விசாரணையின் கீழ் குற்றம் மெய்ப்பிக்கபட்ட பின்னரே குற்றவாளியாக கருதப்பட வேண்டும் என்பதே இயற்கை நீதி. இதைத்தான் SC/ST வன்கொடுமை சட்டத்திலும் உச்சநீதிமன்றம் நிலைநாட்டியது.

ஆனால், இந்த நியாயமான தீர்ப்பை எதிர்த்து மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப்படுத்தி, SC/ST வன்கொடுமை சட்டத்தின் அநீதியான பிரிவுகளை நீட்டிக்கச் செய்யும் சட்டத்திருத்தத்தை ஆகஸ்ட் 9 ஆம் நாள் மோடி அரசு கொண்டுவந்தது. அதனை எதிர்த்து தான் தற்போது வடமாநில மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு் OBC மற்றும் பொதுப்பட்டியல் பிரிவுகளை சேர்ந்த 35 அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனிடையே, புதுதில்லி அருகே உள்ள நொய்டா மாநகரின்  குடியிருப்போர் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து, இச்சட்டத்துக்கு எதிராக, கூட்டாக போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா - மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை மறு ஆய்வு செய்ய கோரியுள்ளார்...

காபி கொட்டைகளின் மருத்துவ உண்மைகள்...


வீட்டு வைத்தியம்...


மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

நெல்லி வற்றல், சந்தனத்தூள், தனியா மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்...

அந்தமானின் வந்தேறிகள்...


அந்தமான்-நிக்கோபர் மக்கள் தொகையில் இனவாரியாகப் பார்த்தோமேயானால்,

வங்காளியர் 32%
தமிழர் 26%
மலையாளிகள் 11%
ஹிந்தியர் 11%
தெலுங்கர் 6%
உருது 2%
தொல்குடிகள் 12%

1954ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அந்தமான்-நிகோபர் தீவுகளின் பெரிய அந்தமான் தீவில் தமிழர்களே அதிகம் வசித்து வந்தனர்.

அதன்படி அத்தீவு தமிழகத்துடன் இணைத்திருக்கவேண்டும்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

1952லிருந்தே வங்காளியர் உட்பட பல்வேறு இந்துக்களை அந்தமான் நிகோபரில் குடியேற்றும் திட்டமானது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 1953லேயே நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது அத்தீவுகளை ஹிந்தியாவிடமே வைத்திருக்க திட்டமிட்ட குடியேற்றம் நடைபெற்றது.

ஐந்தாண்டுத் திட்டம் போல மூன்று கட்டமாக நடைபெற்ற இந்த குடியேற்றத்தின்படி 15ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்து ஏக்கர் நிலம், போக்குவரத்திற்கு ரூ210,
உணவுக்கு ரூ70,
வீடுகட்ட ரூ800,
மாடு வாங்க ரூ700,
பண்டங்கள் வாங்க ரூ180,
விதைகள் வாங்க ரூ100
என வாரிவழங்கியது ஹிந்திய அரசு.

(அதற்கு முன்பே தமிழர் வாழ்ந்து வந்த நிலம் தமிழர்களுக்கு பட்டா போட்டு இன்று வரை தரப்படவில்லை).

1970ல் 300ஆயிரம்(30லக்சம்) பேரைப் பலிகொண்ட வங்கதேச விடுதலைப் போரின்போது வெளியேறிய வங்காளியரையும் இங்கேயே ஹிந்திய அரசு குடியமர்த்தியது.

இதற்கெல்லாம் காரணம் ஹிந்திய அரசில் இடம்பெற்றிருந்த வங்காளியரின் இனப்பற்றே ஆகும்.

ஏதிலி என்ற பெயரில் பலரும் குடியேறினர் இன்றும் கூட அவர்கள் வங்கதேசத்திற்கான விசா வைத்துள்ளனர்.

அவர்களின் நண்பர், உறவினர், வீடு, சொத்து, தொழில் என அனைத்தும் வங்கதேசத்திலேயே நடத்திவருகின்றனர்.

இவை மட்டுமல்ல அதுவரை சென்னையிலிருந்து சென்றுவந்த கப்பல் போக்குவரத்து கல்கத்தா வழி செல்வதாக மாற்றப்பட்டது.

அந்தமான்-நிகோபர் உயர்வழக்காடு (நீதி)மன்றத்தின் மேல்முறையீடு கல்கத்தாவின் உச்ச வழக்காடு மன்றமாக ஆக்கப்பட்டது.

பள்ளிகளில் இந்தி, வங்காளி மொழிகள் புகுத்தப்பட்டு பல்கலைக் கழகங்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டன.

வங்க மக்களுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்குவங்க மாநில அரசு செய்துவருகிறது.

தமிழருக்குப் பிறகு குடிவந்த வங்காளியர் இப்போது சகலமானதும் பெற்று நிரந்தரக் குடிமக்களாக முதல்நிலைக் குடிகளாக ஆகிவிட்டனர்.

வங்காளியர் குடிவரும் முன்பே அங்கே வாழ்ந்துவரும் தமிழர் இன்றும் பிழைக்கச் சென்றவர்களாக,  சிறு வணிகர்களாக, வேளாண்மைக் கூலிகளாக, சேரி மக்களாக வங்காளியரை அண்டிப்பிழைக்கும்  இரண்டாம் தர மக்களாகவே வாழ்ந்துவருகின்றனர்.

தமிழக வந்தேறி அரசுகள் அந்தமான் தமிழரை ஏறெடுத்துப் பார்க்காததுடன் அவர்களைப் பற்றி தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாமல் பார்த்துக்கொண்டன.

1970ல் வங்க ஏதிலிகள் குடிவந்த போது அப்போது பெரும் பாண்மையாக இருந்த தமிழர்கள் சின்ன எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்கவில்லை.

1980களின் தொடக்கத்தில் சிறிமாவோ-சாஸ்திரி உடன்பாடு மற்றும் சிறிமாவோ-இந்திரா உடன்பாடு ஆகியவற்றின்படி இலங்கை அரசு 500ஆயிரம்(5லக்சம்) மலையகத்தமிழரை வெளியேற்றியபோது ம.கோ.ரா (எம்ஜிஆர்) தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று இந்திராவைச் சந்தித்து அவர்களை அந்தமானில் உள்ள ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் குடிவைக்க கோரிக்கை விடுத்தது..

உடனே வங்காளியர் கொதித்தெழுந்தனர்.

அந்தமானின் வங்காளிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வங்காளிய மக்களை அரசின் இந்த முடிவைத் தடுக்க தந்தி அனுப்பும் போராட்டத்தை செய்யவைத்தனர்.

தமிழக அனைத்துக் கட்சி தூதுக்குழு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததை
வங்காளியர் அனுப்பிய காகிதத்துண்டுகள் தோற்கடித்தன.

இதுதான் சாக்கு என்று ஹிந்திய அரசு அந்தமானில் இடம் இல்லை என்று வடிகட்டிய பொய்யைச் சொல்லி மறுத்துவிட்டது.

இறுதியாக மலையகத் தமிழர் நீலகிரி மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்தமான்-நிகோபரில் தமிழர்:

'தேனக்க வார்பொழில் மாநக்கவாரம்' என்று இராசேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் இடம்பெறும் 'நக்கவாரம்'தான் தற்போதைய நிகோபர்.

சோழர்களின் எழுச்சி உச்சத்திலிருந்த போது (கிபி.1020கள்) அந்தமான்-நிகோபர் தீவுகள் உட்பட இன்றைய மலேசியா வரை சோழராட்சி பரவியிருந்தது.

நிகோபரில் இருக்கும் இராசேந்திர சோழனின் வெற்றித்தூண் 'கங்காநதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

கி.பி.1066ல் இராசேந்திர சோழன் இந்தத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளார்.

முனைவர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் வெளிக் கொண்டு வந்த உண்மை,
அந்தமானில் 'நான்கௌரி' தீவில் இராசராச சோழனின் வெற்றித்தூணும் கல்வெட்டும் உள்ளன.

தஞ்சைக் கல்வெட்டுக்களிலும் இத்தீவுகள் நக்கவாரம், நாகதீபம், கார்த்தீபம் என்று குறிக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அந்தமான் நிகோபர் தீவுகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

பழக்கங்கள், மொழி, வேர்ச்சொல், தோற்றம் என அந்தமானின் பழங்குடிகளிடம் தமிழ் அடையாளங்கள் இருக்கவே செய்கின்றன.

1895ல்  ஒரு தமிழ்க் கிறித்தவப் பாதிரியார் 'வேதப்பன் சாலமன்' என்பவர் தொண்டுகள் பல செய்தார்.

ஆதிகுடிகளுடன் தமிழருக்கு நெருக்கம் ஏற்பட முக்கிய காரணம் இவர்.

அதன்பிறகு அந்தமானில் தமிழர் குடியேற்றம் அதிகரித்தது
(திணிக்கப்பட்ட குடியேற்றம் அல்ல)

1944ல் ஜப்பான் இத்தீவுகளைக் கைப்பற்றியயோது சுபாஸ் சந்திரபோசிடம் கையளிக்கப்பட்டு 'கேணல்.லோகநாதன்' என்ற தமிழரை அவர் ஆளுநராக நியமித்தார்.

இன்றும் தமிழகத்தின் ஆதரவில்லாமலேயே அந்தமான் தமிழர் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

(நன்றி: 'தமிழன் இழந்த மண்' பழ.நெடுமாறன்)

தமிழ் நாட்டாண்மையின் பொறுப்பு:

அந்தமான்-நிகோபர் தீவுகளானது தமிழர் ,கலிங்கர், ஆங்கிலேயர், சப்பானியர், பர்மியர், வங்காளியர், ஹிந்தியர் என பல்வேறு வல்லாதிக்கங்களின் கீழ் பந்தாடப்பட்டு வருகிறது.

தமிழர்கள் அந்தமான்-நிகோபரை தமக்காகக் கேட்கவில்லை.
(நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள்.. பழந்தமிழர் அங்கே ஆடையின்றி வாழும் மக்களைக் குறிக்கும் வகையில்தான் பெயரே வைத்துள்ளனர்) அங்கே குடியிருப்போருக்கான உரிமைகளைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள்.

தமிழர்கள் அங்கே வங்காளியரைப்போல ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை.
பிழைத்துதான் வருகின்றனர்.

அந்தமான்-நிகோபர் தீவுகள் 293 உள்ளன, இங்கே மண்ணின் மைந்தர்களான பழங்குடிகள் சந்தித்து வருவதெல்லாம் அழிவைத்தான்.

வல்லரசுகளால் இவர்கள் முற்றாக அழியும் எண்ணிக்கைக்கு வந்துவிட்டனர்.

ஹாங்காங் தீவு ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அங்கே இயங்கிவரும் தொழிற்சாலைகள் இங்கே மாற்றப்பட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன.

ஹிந்திய படை இங்கே பழங்குடிகளை கேடாக நடத்துகின்றனர்.

வடக்கே கோகோ தீவு பர்மாவால் சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ஹிந்தியாவைக் கண்கானிக்க சீனா தளம் அமைத்துக் கொண்டுள்ளது.

ஆதிகுடிகள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சுற்றுலா என்ற பெயரில், மதப்பரப்புரை என்ற பெயரில், படைத் தளங்கள் என்ற பெயரில், கள்ளத் துறைமுகங்கள் என்ற பெயரில், மொழித்திணிப்பு என்ற பெயரில் நாள்தோறும் அவர்கள் சீரழிந்து வருகிறார்கள்.

தனித்த நாடமை (தேசிய)இனமான 50பேர் வாழும் ஒரு சின்னஞ்சிறு தீவு தனிநாடு கோருமேயானால் அதை ஆதரிப்பதுதான் தமிழ்நாட்டாண்மை.

தமிழ்மக்கள் தாய்நிலத்தை மீட்டு தமிழ் குடியரசு உருவாகுமேயானால் உலகின் மூத்த இனம் என்றவகையில் உலக இனங்களுக்கு அதன் தாய்நிலத்தில் விடுதலை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.

தமிழீழம் - தமிழகம் - அந்தமான்- நிக்கோபர்... ஆகியவை தமிழர்களுக்கான நாடு என்பதை மறந்து விட வேண்டாம்...

பிராமணீயத்திற்கு எதிரி தமிழியமே...


திராவிடம் எப்போதுமே பிராமணீயத்திற்கு கங்காணி...

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...


1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு...

வரலாறு முக்கியம் பாஜக பத்தாள்ஸ்...


பூம்புகார் மர்ம முடிச்சி இறுதி பகுதி...


இங்கு கண்டு பிடிக்கப்பட்ட முக்கியமானவைகள் சிலதை முதலில் பாப்போம்.

எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பை தமிழர்கள் என்ற ஒற்றை காரணம் காட்டி மறுத்துள்ளது இந்தியா என்பது உங்களுக்கு புரியும்..

பூம்புகாரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட முடிவில் பின் வருபவைகள் ஆதாரபூர்வமாக தெரிகின்றது.

1 இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பே உலகில் ஆங்காங்கே உள்ள நாகரீகத்தில் தமிழக நாகரீகமும் இருந்துள்ளது.

2 சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் அன்றைய காலத்திலையே சுட்ட செங்கற்கள் பயன்படுத்தும் முறை உள்ளதாக அறிய முடிகிறது.

3 இந்நகரம் கடலில் 75 அடி ஆழத்தில் மூழ்கி இருப்பதால் அன்றிலிருந்து இன்றுவரை கடல் 75 அடி உயர்ந்துள்ளதாக அறிய முடிகிறது.

4 இக்காலகட்டத்தில் தான் குமரி கண்டம் நீரில் மூழ்கி அழிந்தது என்ற வரலாற்று பேருண்மையும் அறிய முடிகிறது ,

5 அந்த வகையில் இயேசு கிருஸ்து வுக்கு முன் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டம் இருந்ததாகவும் அறிய முடிகிறது.

6 இந்த காலகட்டத்தில் தான் ஆழி பேரலையினால் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தனி நாடாகவும் மாற வசதியாக பிரிந்துள்ளது.

7 இந்திய பெருங்கடல் மற்றும் வங்க அரபிக்கடல் என்ற தோற்றம் முழுமையாக வெளிப்பட்டது..

8 இந்த இரண்டு கடல்கள் பிரித்தமையால் உலக வரைபடமும் சரியான அளவில் இன்றுவரைக்கும் முழு வடிவம் பெற்றது...

9 கி மு , 17,௦௦௦ அல்லது 10,௦௦௦ ஆண்டுகளில் தான் பனிப்பாறைகள் உருகியதால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல நாடுகளை அழிக்கவும் செய்துள்ளது என்ற வரலாற்று உண்மை தெரிந்துள்ளது.

10 இயற்கையின் மாறுபாடுகள் முக்கியமாக கடலால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் உட்பட நில நீர் பகுதி மாற்றங்கள் என்பவற்றை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது..

இவ்வளவு முக்கியமான வரலாற்று தகவல்களை தந்த பூம்புகார் ஆய்வறிக்கையை தமிழகத்தில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் வெளியிட கூடாது என்ற கேடுகெட்ட பார்ப்பனீயம் வேலை செய்தது.

அதன் தாக்கத்தால் தமிழகத்தில் கூட இவர் வெளியிட முடியவில்லை.

இவ்வளவையும் கேமராவில் பதிவு செய்தவர் இதை வெளியிட முடியாமல் தவிர்த்தார்..

காரணம் இந்திய ஊடகங்கள் இந்த ஆய்வை வெளியிட கூடாது என்று கட்டளை..

இதனால் நொந்து போன கிரஹாம் அமெரிக்காவின் லேர்னிங் தனியார் தொலைக்காட்சியில் நெடும் தொடராக அண்டர் வேல்டு எனும் தலைப்பில் வெளியிட்டார்..

ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்திய இந்த தொடர் மூலம் வெளிநாட்டு பயணிகள் பூம்புகார் நோக்கி வரவும் ஆரம்பித்தனர்..

இந்நிலையில் சில நல்லவர்களின் தொடர் அழுத்தத்தால் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த ஆய்வை வெளியிட அரசு அனுமதித்தது அதுவும் எங்கே தெரியுமா ?

தமிழகத்தில் அல்ல பெங்களூருவில்...

பெங்களுர் கண்காட்சியில் ஒரே ஒரு நாள் மட்டும் இந்த ஆய்வுகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது..

இதன் முக்கியத்துவம் உணர்ந்த லேர்னிங் சேனல் நெடுந் தொடராக underworld எனும் தலைப்பில் வெளியிட்டு தமிழின எதிர்ப்பு வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டியது..

என்னதான் இருந்தாலும் தமிழகத்தின் ஆய்வை தமிழகத்தில் திரையிட முடியாமல் போனதற்கு இந்த வட நாட்டு
கும்பல்களே காரணம்...

இப்போது சொல்லுங்கள்.. இந்தியா யாருக்கான நாடு.?

பல ஆண்டுகால அடிமை கட்டமைப்பை, சில ஆண்டுகளில் தகர்க்க முடியாது என்பதை உணர்ந்தாலே உவனின் பயணத்தின் பாதை தெரியும்...


ஒவ்வொரு தனிமனிதனாக மாற முயற்சி செய்வோம்..

அது அடுத்த தலைமுறையை முழுவதுமாக மாற்றும் என்ற நம்பிக்கையில் உவன்...

அரசாங்கம் எதையெல்லாம் தடை செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அனுமதி கொடுக்கும்...


மது, சூது, ஒழுங்கற்ற வாழ்கை முறை..

ஏன் இப்படி செய்கிறது...

ஒழுங்கான நேர்மையான ஒரு கூட்டத்தை அடக்கி ஆள முடியாது,

தனக்கு வேண்டியதை செய்து கொள்ள முடியாது.

எதை பற்றியும் கவலை இல்லாமல் ஏதேனும் ஒரு போதைக்கு அடிமையாகி கிடக்கும் கூட்டத்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

முழுமையாக அழிக்கவும் செய்யலாம்.

இனி வரும் காலங்களில் குடும்பம் எனும் முறையில் நீங்கள் வாழ்ந்தாலே நீங்கள் பெரிய நல்லவர் தான்.

பாக்கியம் செய்தவர் அல்லது உண்மை உணர்ந்து வாழ்பவர்கள்..

இது ஒரு சோதனைகாலம்  இந்த சோதனை தாண்டி எவன் ஒழுங்கா வாழ்கிறானோ அவனது வாரிசுகள் சிறந்து விளங்கும்.

சிறந்தவனுக்கு தான் உலகத்தில் இடம் உண்டு.

நல்லோர்கள் உடன் சேர்ந்து வரும் பிரச்சனைகள் எதிர்கொள்ள தயார் செய்யுங்கள்.

குழந்தைகள் பெண்களும் தான் அவர்கள் முக்கிய குறிகள்.

உலக அரசியல்...

சமூக சீர்கேடுகள் பற்றி  குழந்தைகளிடம் சொல்லி வளருங்கள் இல்லை எனில் மாயவலையில் சிக்கி வாழ்க்கையை இழப்பார்கள்.

நல்ல குடும்பம் ஒரு கோவில்..

இனி குடும்பம், நல்ல காதல் பற்றி படங்கள் வராது.

தப்பான எண்ணங்கள் புகுத்தும் படங்கள் தான் அதிகம் வரும்.

ஊடகத்தின் இடம் இருந்து குழந்தைகள் விலக்கி வையுங்கள்...

பெயர், புகழ், பணம் சம்பாதித்த பின்பும் கார்ப்பரேட்காரனிடம் இவர்கள் (திரைதுரையினர்) அடிமையாகி நம்மையும் அடிமையாக்கா முயலுகிறார்களே ஏனோ? வேறு ஏதும் காரணம் உண்டா...


பூம்புகார் மர்ம முடிச்சி - 2...


ஏற்கனவே பூம்புகார் ஆரம்பித்த விஷயத்தை சொன்னேன் அதில் இந்திய அரசு பணம் இல்லையென்று கைவிரித்தது என்றும் சொன்னேன்.

அதே அரசு இல்லாத துவாரகையை துருவி பலகோடியை விரயம் செய்ததையும் சொன்னேன் பின்பு
இந்தியாவே தலை குனிவை ஏற்படுத்துகிற செய்தி என்று ஒன்றை சொன்னேன்.

அது என்ன தெரியுமா ?

இவ்வளவு பெரிய இந்தியா பணம் இல்லையென்று கைவிரித்த நிலையில்
இங்கிலாந்தை சேர்ந்த கிரஹாம் ஹான்காக் இந்தியா வருகிறார்.

இவர் உலக கடல்வாழ் ஆய்வில் தேர்ச்சி பெற்றவர் இவரது ஆய்வுகளை பல பல்கலை கழகங்கள் அங்கீகரித்துள்ளது...

கோவா சென்ற அவர் பூம்புகார் சம்பந்தப்பட்ட ஏடை தூசு தட்டி அது சம்பந்தமான விபரங்களை கேட்டு கொண்டு அவர் பயணப்பட்டார்.

பூம்புகாரை நோக்கி...

ஆய்வு செய்ய நான் தயார் அதற்கான பணம் எங்கே போவது இந்தியா கைவிரித்து விட்டதே என்று யோசித்த அவர்..

தொடர்பு கொண்டார் இங்கிலாந்தை சார்ந்த சேனல் 4 என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை..

அவர்கள் இவ்வளவு பாரம்பரியமிக்க ஆய்வுக்கு நாங்களும் குறிப்பிட்ட பணத்தை தருகிறோம் என்றது..

இன்னும் பணம் தேவையே என்றுணர்ந்த கிரஹாம் அமெரிக்காவை சார்ந்த லேர்னிங் சேனல் என்ற நிறுவனத்திடமும் பேசி ஒப்பந்தம் போட்டு ஆய்வில் இறங்குகிறார்..

இது தான் இந்தியாவுக்கே கேவலம்..

இந்தியாவில் உள்ள மிகவுமே பழமையான நாகரீகத்தை இந்தியா கேவலம் பணம் இல்லையென்று ஒதுக்கும்பொழுது..

எங்கிருந்தோ வந்து நான் பாத்துக்குறேன் என்று அங்கே இங்கே என்று பணத்தை தயார் செய்து ஆய்வாய் வெளியிட..

அயலவனுக்கு என்ன தலைவிதியா ?

அவனுக்கு தெரிந்த பொக்கிஷம் இங்குள்ள வட மாநிலத்தவனுக்கு தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்..

இதே பூம்புகார் நகரம் குசராத்திலோ மத்திய பிரதேசத்திலோ இருந்து இருந்தால் இந்நேரம் இந்தியாவே அங்கு தான் கண் வைத்து இருக்கும்..

பூம்புகார் இருப்பது தமிழர்கள் நகரில் அல்லவா அப்படிதான் செய்யும் இந்த பார்ப்பனிய கும்பல்..

இவர் ஆய்வில் தெரிந்த விஷயங்கள்...

கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமே புதையுண்டு
கிடப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்..

அதன் வயது தான் வட நாட்டு கும்பல்களுக்கு எரிச்சலாக மாறியது.

ஐஸ் ஏஜ் என்று சொல்லக்கூடிய பனிக்கட்டி காலத்தில் ஐஸ் உருகி இந்நகரம் மூழ்கி இருக்கலாம் என்று சொன்னார் .

இந்த ஐஸ் ஏஜ் காலம் எவ்வளவு தெரியுமா ?

சுமார் 17 ஆயிரம் ஆண்டுகள்..

வரலாற்று சிதைவுகள் படி சுமார் 11 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது இந்த நகரம் மூழ்கி என்று அறிக்கையை சமர்ப்பித்தார்..

இங்கும் சில தமிழ் விரோதிகள் கேள்வி எழுப்பினர் அதாவது பனிக்காலம் நடந்தது 17 ஆயிரம் ஆண்டுகள் பூம்புகார் பற்றி நீங்கள் சொல்வது 11 ஆயிரம் ஆண்டுகள் அப்படியானால் எப்படி சாத்தியம் என்றார்கள்.

இதற்கு விடை என்ன தெரியுமா ?

இந்த பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தான் உருகின அதன் உருகு தன்மை சுமார் 7 இல் இருந்து 5 ஆண்டுகள் தொடர்ந்ததாக சொல்லுகிறார்கள்.

அப்படி பார்க்கப் போனால் பூம்புகார் 11 ஆயிரத்து 500 வருடங்கள் ஆகிறது ...

அப்பா எவ்வளவு பெரிய நாகரீகம் இது.

மெசபொமிய ஹரப்பா முகாசத்தாரோ சிந்து சமவெளி இவற்றுக்கெல்லாம் முன்னோடி இந்த பூம்புகார் தான் ....

இப்படிப்பட்ட அதிசயத்தை இந்தியா [வட மாநில] கும்பல் விட்டு வைக்குமா ?

தடைவிதித்து இந்த ஆய்வை வெளியிட..

காரணம் தமிழர்கள் எங்களை மிகைத்து விடுவார்கள் என்று பயந்து ..

ஆனாலும் வெளியிடப்பட்டது எங்கே தெரியுமா ?

தமிழ்நாட்டில் அல்ல

பிறகெங்கே ?

பேசுவோம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சி தகவல்...


RTI 1 : தமிழகத்தில் சாலை வரி மூலம் 2010 -ல் இருந்து ஏறக்குறைய ₹20 ஆயிரம் கோடி வசூல்.

RTI 2 : சாலை வரி மூலம் வசூலிக்கப்பட்ட பணத்தை என்ன செய்தீர்கள் என கேட்டால் , அப்படி ஒன்று வசூலிப்பதில்லை என பதில்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் விபச்சாரம் சட்ட பூர்வமாக விரைவில் அங்கிகரிக்கும்...


பூம்புகார் மர்ம முடிச்சி - 1...


பூம்புகார் பல மர்மங்களுக்கு விடை தெரியாத புதிர்..

இப்படியாக இந்த பூம்புகாரை நீங்கள் வாசித்தது இல்லை தொடராக வரக்கூடிய இந்த பதிவினை முழுவதும் படியுங்கள் இறுதியில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள்..

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் கோவாவில் உள்ளது.

1990 ஆண்டு இந்நிறுவனம் பூம்புகாரை ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தது.

தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆய்வுகள் செய்தது, அதில் பூம்புகாரில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் பல கிணறுகள் இருப்பதை கண்டு பிடித்தது.

இதன் தொடர்ச்சி தரங்கம்பாடி வரையில் இருப்பது கண்டு பிடிக்க பட்டது.

ட ;வடிவ கட்டிடங்கள் மற்றும் சங்ககால பொருட்களையும் கண்டு பிடித்தது.

அக்காலகட்டத்தில் தொல்லியல் துறையை சார்ந்தவர்கள் மற்றும் இலக்கிய மனிதர்களிடமும் பெரும் சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி கொண்டு இருந்த நேரம் அது.

காரணம் நமது முன்னோர்களது பொருட்கள் மற்றும் தமிழர்களின் நாகரீகங்கள் தமிழர்களுக்கு பெருமை சேரக்கூடிய அம்சங்கள் அதில் இடம் பெற்று இருந்தது.

இன்னும் தோண்ட தோண்ட பொக்கிஷங்கள் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு கிடைக்கும்.

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்றெல்லாம் தமிழ் அறிஞர்கள் உட்பட அனைவரும் சந்தோசப்பட்டு கொண்டு இருக்கும் வேளையில்..

இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது அந்த அறிக்கை என்ன தெரியுமா ?

போதிய நிதி பற்றாக்குறையால் இந்த பூம்புகார் நகர ஆய்வை நாங்கள் நிறுத்துகிறோம் என்றது..

[கீழடி நினைவில் வருகிறதா தொடருங்கள்]..

இது அப்படியே இருக்கட்டும் ..

இன்னொருபக்கம் இதே காலகட்டத்தில்  குஜராத்தில் உள்ள துவாரைகளை அகழ்வாய்வு செய்து கொண்டு இருந்தது இந்திய அரசு.

பூம்புகாரை விடவும் பல கோடி செலவில் துவாரைகள் ஆய்வு செய்யப்பட்டது.

காரணம் என்ன தெரியுமா ?

துவாரகை கண்ணன் வாழ்ந்ததாக சொல்லப்படுகிற நகரம்.

சிந்துசமவெளிக்கு முந்தைய நாகரீகம் துவாரகை நாகரீகம் என்ற பொய்யை அறிவிக்க முயற்சி எடுத்த அத்தனையும் வீண்.

ஆகவே கண்ணனை வரலாற்றில் காண்பித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல கோடியை கொட்டி ஆய்வு செய்த இந்திய அரசுக்கு எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.

ஆகவே பல கோடி வீண் செலவு...

அதே வேளையில் ஒரு நகரமே தண்ணிக்கு அடியில் இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அது பழங்காலமாக மொசப்படிமியா விட மிகப்பழமையான தமிழர்களின் நாகரீகத்தை வட நாட்டு கும்பல் எப்படி தான் சகிக்கும்.

கீழடி புறக்கணிக்க பட்டதற்கு இப்பொழுது காரணம் புரிகிறதா ?

ஆனால் விடவில்லை இந்த பூம்புகார் நகர ஆய்வு ?

பின்பு எப்படி ஆய்வு தொடரப்பட்டது.

இந்தியா கைவிரித்த நிலையில் யாரால் முடியும் ?

ஆனாலும் முடியும்.

எப்படி ?

இந்தியாவே தலை குனிவை ஏற்படுத்துகிற செய்தி தான் அது.

சரித்திரம் தொடரும்..

காத்திருங்கள்...

தொடரும் நீட் படுகொலை...


மூனுசுழி ண , ரெண்டுசுழி ன என்ன வித்தியாசம்?


படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்.

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம் - தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில்..

ரெண்டுசுழி ன என்பதும் தவறு.
மூனுசுழி ண என்பதும் தவறு.

ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேர்ந்தே வருவதைப் பாருங்களேன், இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்.

(வர்க்க எழுத்து-ன்னா, சேர்ந்து வரும் எழுத்து, அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா, அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும். ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா, அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும். ஏன்னா அது றன்னகரம்.

என்று புரிந்து கொள்ளலாம்...

இதை சொன்னா நம்மள பைத்தியக்காரம்பாங்க...


குறிக்கோள்கள் எவ்வாறு வெற்றியை தீர்மானிக்கின்றன...


குறிக்கோள்கள் இல்லாத வாழ்கைப் பயணம் என்பது இலக்கை நிர்ணயிக்காமல் எய்த அம்பினைப் போன்றது.

நீங்கள் இப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்வோம்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டிலுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இங்கே தான் நம்மில் பலர் தவறு செய்கின்றனர்.

இலக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் பலர் நான் சச்சின் டெண்டுல்கர் போல மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று தனது இலக்கிணை தீர்மானிக்கின்றனர்.

நாம் சச்சினைப் போல சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற இலக்கிணை நிர்ணயிக்கும் போது..

வெற்றியை நோக்கி நமது இலக்கிணை தீர்மானிக்கின்றோம்.

அது நம்மை தோல்விப் பாதைக்கே அழைத்துச் செல்லும்.

அவ்வாறு இல்லமால் நம்முடைய இலக்கிணை நம்முடைய செயலில் அதாவது இங்கே கிரிக்கெட் ஆட்டத்தில் வைக்க வேண்டும்.

இலக்கிணை செயலில் எவ்வாறு நிர்ணயிப்பது?

முதலில் இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால்...

அது மாறிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு மலையினை முழுவதுமாக உடைக்க எண்ணினால் அந்த மலையையே இலக்காக வைத்து செயல்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றி பயத்தினை ஏற்படுத்தும்..

மாறாக நீங்கள் அந்த மலையை கற்களாகவும், சிறு சிறு பகுதிகளாகவும்  இலக்கிணை நிர்ணயித்து உடைது வந்தால் உங்களால் அந்த முழு மலையையும் உடைக்க முடியும்.

உதாரணமாக உங்களுக்கு பிடித்த செயலான கிரிக்கெட்டில் நீங்கள் இலக்கிணை எவ்வாறு தீர்மானிப்பது என்று பார்போம்.

முதலில் நீங்கள் சிறந்த பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,

உங்களைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் அதிகம் விளையாட வேண்டும்,

அதிக நேரம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்,

பல மாறுபட்ட சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்த்து பயிற்சி செய்ய வேண்டும்,

பல்வேறு தன்மைகொண்ட ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,

உடலினை வலிமையாக ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்,

உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இப்படி உங்களின் இலக்குகள் முழுவதும் உங்களின் செயலினைத் தொடர்ந்தே இருக்க வேண்டும்.

இலக்கை நோக்கி பயணிக்கும்போது சிலசமயங்களில் சிலரின் எதிர்மறை எண்ணங்கள், அல்லது சிறு தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யலாம்...

மக்கள் தொகை குறைப்பு கொள்கை...


வேற்றுகிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம் - ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்...


உலகில் உதித்த பண்டைக்கால நாகரீகங்கள் அனைத்திலும் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், குறியீடுகள் என்று எங்கு பார்த்தாலும் ஊர்வன வேற்றுகிரகவாசிகளை பற்றியும், அவர்கள் வருகை புரிந்ததாக கூறப்படுகிற Pleiades எனப்படும் கார்த்திகை நட்சத்திர தொகுதியை பற்றி தான் அதிகம் வெளிபடுத்தியுள்ளனர்...

எல்லாம் தற்சார்ப்பு அழிப்பு தான்...


எது பக்குவம்..?


ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது...

உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும் போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.


நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை. அவர் காயப்படுத்துவதும் இல்லை.

தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை.

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக் கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...