தமிழகத்தில் நெல் அறுவடை காலங்களில் வயல்களிலும் களத்திலும் நெல் மொத்தமாக வாங்கும் தரகர்களின் நடமாட்டத்தை மிக அதிகமாகப் பார்க்க முடியும்.
நெல் உற்பத்தியில் ஈடுபடும் சிறு குறுவிவசாயிகள் தங்கள் விவசாய பணிகளுக்கான மூலதனமாகக் கடன்களை நம்பித்தான் இருக்கிறார்கள். அப்படி கடன் வாங்கி விவசாயம் செய்யாதவர்களாக இருந்தாலும் அறுவடை காலத்தில் உடனடி பணத்தேவை காரனமாக வயலில் வைத்தே நெல்லை விற்றுவிடும் சூழலில் இருப்பவர்களின் தேவையின் பொருட்டு இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள்.
அப்படி அவர்கள் கேட்கும் அந்த அடிமாட்டு விலை என்பது அரசு நிர்ணைய்க்கும் குறைந்த பட்ச ஆதார விலையில் இருந்து சற்று குறைவானதாக தான் இருக்கும்,. அரசு கொள்முதல் நிலையங்களில் போடப்பட்ட நெல்லுக்கான பணத்திற்காக கொடுக்கப்படும் டோக்கன் வரிசையின் படி சில நாட்கள் காத்து கிடக்க வேண்டியிருக்கும்.. மற்றும் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் வண்டி செலவு கணக்கிட்டு களத்திலயே தரகர்களிடம் கொடுப்பார்கள். அரசு நிர்ணயித்திருக்கும் தொகை இந்த ஆண்டு 1550 தான் இது உற்பத்தி செலவோடும் விவசாயின் உழைப்பிற்கான கூலியோடும் கணக்கிடும் போது இந்த 1550 ரூபாய் என்பதே அநீதியானதுதான். ஆனால் தன் நெல்லின் விலை குறித்து தரகர்களோடு பேரம் பேச சிறு குறு விவசாயிகளுக்கு இருக்கும் குறைந்த பட்ச பிடிமானம் அரசு நிர்ணயிக்கும் விலையும் நெல் கொள்முதல் நிலையங்களும். அதை மூடுவது என்பது தமிழகத்தின் ஆற்றுப் படுகைகளில் இருக்கும் நெல் விவசாயிகளை மொத்தமாக அதில் இருந்து வெளியேற்றிவிடும்.
ஏனெனில் இப்படி குறைந்த பட்ச விலை நிர்ணயம் இல்லாத காய்கறிகள் மொத்தமாக விளைகின்றபோது ஏற்படும் பேரிழப்புகளை வார்த்தைகளின் சொல்ல முடியாது.
பதினைந்து வாழை குழைகளை நெல்லை நாயினார்குளம் மார்கெட்டின் கமிசன் மண்டிகளில் ஏலம் விட்டு 800 ரூபாயோடு வீடு திரும்பியிருக்கிறேன்.
நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவது என்பது அப்படியொரு நிலையை நோக்கித்தான் தமிழகத்தின் பெரும்பான்மையான விவசாயிகளை கொண்டுவிடும். மற்ற பயிர்ளை போலத் தேவை பார்த்துச் சூழல் பார்த்துச் செய்வது அல்ல நெல் விவசாயம். அது அணைகள் திறக்கும் பருவகாலத்தில் ஆற்றுப் படுகை முழுவதும் ஒரே நேரத்தில் பயிரிட்டு அறுவடை நடக்கும் பயிர். ஆண்டு முழுவதும், மக்களுக்கான உணவுப் பொருள் அது. அதில் அரசு தன் பொறுப்பை விட்டுவிட்டுச் செல்வது என்பது தன் குடிமக்களைக் கைவிட்டு செல்வதாகும்.
நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதாக இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கை செய்திகளில் நாம் எல்லொரும் பார்த்தோம். இது குறித்து மே 17 இயக்கம் 2016லிருந்தே ரேசன் கடையை மூடப் போகிறார்கள் என்று பேசிவருகிறது.
விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தை நிறுத்துவது, ரேசனில் கொடுக்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு க்கு பதிலாக அதை பணமாக வழங்குவது, உணவைச் சேமிக்கும் கிடங்குகளை மூடப்பட வேண்டுமென்பது உள்ளிட்ட சரத்துகளை உள்ளடக்கிய உலக வர்த்தக கழகத்தின் வணிக வசதி ஒப்பந்தத்தைத் தான் இப்பொழுது நடைமுறைப்படுத்த துவங்கியிருக்கிறார்கள், இதை எல்லாம் விரிவாக மக்களிடம் பேசுவதால் தான் எங்கள் தோழர் திருமுருகன் காந்தி மீது இந்த அரசிற்கு இத்தனை வன்மம். உண்மைகளைத் தொடர்ந்து பேசுவதால் அவர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை பதிகிறார்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.