09/09/2018

எது பக்குவம்..?


ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது...

உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும் போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.


நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை. அவர் காயப்படுத்துவதும் இல்லை.

தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை.

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக் கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.