பூமியின் 460 கோடி ஆண்டு வரலாற்றில் கோடி கணக்கான சம்பவங்கள் நிகழ்வுகள் நிரம்பி கிடக்கின்றன.
ஆனால் அதில் மிக முக்கியமான விரல் விட்டு என்ன கூடிய நிகழ்வில் ஒன்று பூமியின் முதல் உயிரினம் உண்டான நிகழ்வு.
பூமியில் முதல் உயிரினம் எப்படி வந்தது என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல கோட்பாடுகள் உண்டு. அது பூமியில் தோன்றவே இல்லை என்று சொல்லும் கோட்பாடுகளும் உண்டு. இந்த கோட்பாடு படி உயிரினங்கள் உண்டாக காரணமான அடிப்படை உயிர் துகள்கள் பூமிக்கு ஆஸ்ட்ராய்ட் கற்கள் மூலம் வந்து சேர்ந்து இங்கு பரவியது என்று சொல்கிறார்கள்.
ஏலியன்கள் வந்து நம்மை இங்கு உண்டாக்கி விட்டு விட்டு சென்றார்கள் என்ற கோட்பாடும் கூட சொல்ல படுவது உண்டு.
பல வகை தியாரிகளில் எது உண்மை என்று யாராலும் மிக சரியாக இன்று வரை சொல்ல முடிய வில்லை என்றாலும்..
பொதுவாக இன்றைய விஞ்ஞாண உலகம் ஏற்று கொண்டுள்ள கோட்பாடை அடிப்படையாக கொண்டு நான் சொல்கிறேன்.
அந்த கோட்பாடு பெயர் Primordial soup theory....
இந்த கோட்பாடு சொல்ல வருவது இது தான்....
முதல் உயிரி காலகட்டமான இன்றைலிருந்து 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் வளிமண்டலத்தில் பிராணவாயு இருந்து இருக்க வில்லை. அங்கே இருந்தது எல்லாம் மீத்தேன், நீராவி, ஹைட்ரஜன்,மற்றும் அமோனியா தான்.
இந்த வாயுக்களின் கலவையில் நைட்ரஜன் மற்றும் உயிர்களுக்கு அடிபட யான கார்பன் கலந்தே இருந்தது.
இவைகளை ஒரு குறிப்பிட்ட வகையில் கலந்து வரிசைப்படுத்தி மாற்றி அமைத்து கலக்கினால் இவைகளால்
அமினோ அமிலங்களை உண்டு பண்ண முடியும். இந்த அமினோக்கள் தான் செல்களில் புரோட்டீன் என்ற ஒன்றை உற்பத்தி செய்ய கூடிய புள்ளி. அந்த புரோட்டீன் என்பது என்ன ? நாம் பார்க்கும் உயிரினங்களின் உடல்கள் இந்த புரோட்டீங்களால் ஆனது தான் அதாவது புரொட்டினால் உடலை உண்டு பண்ண முடியும்.
எனவே மேற்கண்ட கலவைகள் ஒன்று சேர்ந்து அமினோ அமிலங்கள் கொண்ட சூப் ஒன்றை உற்பத்தி செய்தது. அந்த உயிரியல் சூப் க்கு பெயர் தான் பிரிமார்டியல் சூப் மேற்கண்ட வாயு கலவைகள் ஒன்று சேர்ந்தாலே இப்படி ஒரு சூப் உண்டாகி விடுமா அதில் அமினோ.... ஆர். என் .ஏ..மற்றும் டி. என். ஏ கள் கிடைத்து விடுமா என்றால் அப்படி இல்லை.
அந்த சூப் கலவை மிக மிக மிக தற்செயலாக உண்டான தனி தன்மையான மிக மிக அரிதான ஒரு தற்செயல் கலவை என்கிறார்கள்.
அவைகள் மிக சரியாக கலந்து உயிரியல் சூப்பை உண்டாகியது மிக மிக தற்செயலானது என்கிறார்கள். அது உருவாக சரியான சுற்று சூழல் சரியான வளிமண்டல அழுத்தம் சரியான வெப்பம்... போன்ற சங்கதிகளை மிக சரியாக கலந்து இருக்க வேண்டும். ஆனால் இவைகள் மிக மிக தற்செயலாக உண்டான ஒன்று என்கிறார்கள்.
அப்படி நடக்க வாய்ப்பு சதவீதம் என்று பார்த்தால் பல கோடி கோடி யில் ஒன்று என்கிறார்கள்.
ஒரு உதாரணத்திற்கு ஒரு ஓவியன் வரையும் ஒரு பெண்ணின் ஓவியத்தை எடுத்து கொள்ளுங்கள் . அந்த ஓவியம் எண்பது என்ன .அது காகிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு வண்ணங்களை பூசுதல் அல்லவா... அதாவது காகிதத்தில் ஆங்காங்கே சில வண்ணங்கள் வைக்க பட்டுள்ளது.
ஆனால் எது எங்கே இருக்க வேண்டும் என மிக சரியான இடத்தில் வண்ணங்கள் தொட்டு வைக்க பட்டுள்ளது அல்லவா. ஒரு பேச்சுக்கு வண்ண குவலையை நீங்கள் ஒரு வெள்ளை தாளின் மேல் வீசி எறிகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் இப்போதும் கூட வண்ணங்கள் ஆங்காங்கே பட்டு கொண்டி தான் இருக்கும் ஆனால் அதில் ஓவியம் ஏதும் இருக்காது. ஒரு பேச்சுக்கு நீங்கள் வீசிய வண்ண கலவை மிக மிக தற்செயலாக முன்பு பார்த்த பெண் ஓவியம் போன்றே அமையும் படி வண்ணங்கள் அந்த தாளில் அங்கங்கே சரியான இடத்தில் சிதர்வுற்று இருந்தால் எப்படி இருக்கும்..?
அப்படி ஒரு தற்செயலுக்கு கிட்ட தட்ட வாய்ப்பே இல்லை எனும் அளவு மிக மிக மிக மிக குறைந்த வாய்ப்பே உள்ளது அல்லவா அப்படி ஒரு குறைந்த வாய்ப்பில் உண்டானது தான் அந்த சூப்...
சரி சூப் ரெடி இதில் உயிரிகள் வந்து விடுமா? என்றால் இந்த உயிரியல் சூப் வெறும் உடல் மட்டும் தான் அதில் உயிர் எனும் ஆற்றல் உண்டானது அதில் மின்னல் பாய்ந்து தான் என்கிறார்கள். (அடுத்த தற்செயல்).
அப்படி மின்னலால் சக்தி ஊட்ட பட்ட சூப் தனக்குள் ப்ரோகிரியாடிக் தன்மை கொண்ட துகளாகவும் பிறகு ஒரே ஒரு செல் கொண்ட ஒரு ஒற்றை உயிரினமாக... பாக்டிரியா வாக முதல் முதலாக வடிவம் எடுத்தது. அந்த பாக்டிரியாதான் ஒட்டு மொத்த உலக உயிரினங்களில் கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா.
உயிர் தோற்றம் பற்றிய பல்வேறு மாற்று கோட்பாடுகள் கொண்டவர்கள் கூட சில விஷயங்களில் மாற்று கருத்து இன்றி ஒன்றி போகிறார்கள். உதாரணம் முதல் உயிரினம் உண்டானது நிலத்தில் அல்ல நீரில் தான். முதல் உயிரினமாக முதல் முதலில் உண்டானது ஒரு செல் உயிரினங்களான பாக்டிரியா தான் போன்று.....
அந்த பாக்டிரியாகள் செய்த முதல் நல்ல காரியம் அவைகள் சூரிய ஆற்றலை நேருக்கு நேர் உள்ளே இழுத்து கொண்டு ஒளிச்சேர்க்கை செய்ததும் அந்த நிகழ்வில் ஆக்சிஜனை வெளியே விட்டதும் தான்.
படி படியாக ஆக்சிஜனை வளிமண்டலத்தில் பெருக்கும் வேலையை அவைகள் செய்தன.
உயிருள்ளவை உயிரற்றவை என்று பொருட்களை நாம் பிரிக்க உதவும் மிக பெரிய அளவுகோல் எது தெரியுமா... உயிருள்ளவை காண இலக்கணம் எது தெரியுமா? எதன் செல்கள் தன்னை போலவே பிரதி எடுக்கும் தன்மை வாய்ந்ததோ அப்படி பிரதி எடுக்கும் போது மூல உயிரின் தகவலை கடத்த முடிகிறதோ அவைகள் தான் உயிர்கள்.
செல் களில் உள்ள RNA செய்யும் வேலை பிரதி எடுத்தல் தான். DNA செய்யும் வேளை அந்த தகவலை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது தான்.
இதில் செல் பிரிதலில் தன்னை போலவே பிரதி எடுப்பதில் சிறு பிழை ஏற்பட்டு அடுத்த தலைமுறை கொஞ்சம் மாற்றங்களை சந்தித்து வேறு உயிரினமாக பரினமிக்க முடிவதன் பெயர் தான் ஜீன் மியூடியேஷன்.
இன்று ஒரு செல் உயிரியிலிருந்து மரம் செடி கொடி...ஊர்வன பறப்பன... பாலூட்டி... பூச்சி புழு.. குருவி டைனோசர்.. புல்.. பூண்டு.. குரங்கு மனிதன்.. மீன்.. நீ.. நான்.. என்று பல கோடி கணக்கில் வகை வகையான உயிரினங்கள் பரினமிக்க காரணம் இந்த ஜீன் மியூடியேஷன் என படும் செல் பிரிதலில் ஏற்பட்ட தவறு தான். எனவே இதை மிக சரியாக ஏற்பட்ட 'தவறு ' என்று அழைக்கலாம்.
முதன் முதலில் கடலில் உண்டான ஆக்சிஜன் உடனே தப்பி சென்று வளிமண்டலத்தில் கலந்து விட வில்லை அதற்க்கு முன் அவை ஒரு விசித்திர காரியத்தை செய்தது. இன்று நாம் கட்டும் ராட்சத கட்டிடங்கள்... ரயில்கள்.. பாலங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இவைகள் எல்லாம் சாத்திய படுவது அந்த விசித்திர காரியத்தால் தான். அதாவது பாக்டிரியா உண்டாக்கின ஆக்சிஜன் கடல் நீரில் எக்க சக்கமாக கலந்திருந்த ஒரு சமாச்சாரத்தால் ஈர்க்க பட்டது அந்த சமாச்சாரம் இரும்பு.
இரும்பும் ஆக்சிஜனும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியும் துறு பிடித்தல் . அந்த துறு பிடித்தல் நிகழ்வில் கடல் நீரில் கலந்த மொத்த இரும்பும் பூமி படுக்கையில் இரும்பாக படிய தொடங்கியது. இந்த வேதி நிகழ்வு தொடர்ந்து பல காலத்திற்கு நிகழ்ந்து பின் ஒரு கட்டத்தில் இனி துறு பிடிக்க... வேதி வினை புரிய இரும்பு இல்லை என்ற நிலைக்கு வந்த பின் தான்..... ஆக்சிஜன் முதன் முறையாக தப்பி சென்று வளிமண்டலத்தில் கலந்தது.
இந்த நிகழ்வு பூமியின் சூழலை என்றென்றைக்குமாக வெகுவாக மாற்றி அமைத்தது.
அவை மாற்றி அமைத்த நிகழ்வுகள் செய்த மாற்றங்கள் மிக பிரமிப்பானவை.. மிக விசித்திரமானவை. பூமியின் மொத்த விளையாட்டை மாற்றி அமைந்தவை இந்த ஆக்சிஜன்.
அந்த விசித்திரங்கள் அடுத்த அத்தியாயத்தில்...
- பூமி இன்னும் சுழலும்.....