28/08/2018

கிராம்பு...


கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு..

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்...

அதிமுக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கிறது...


பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறது...


பிரபஞ்சமானது , மக்கள், சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள் , கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டே தான் இருக்கிறது.

சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள்.

நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை தடுத்துக் கொள்கிறோம்.

பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள் தான்.

இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும்
கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக்
கொண்டு இருக்கிறது.

நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது ,

நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின் நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது..

நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, சுக துக்கங்களுக்கு நம் எண்ணங்களே காரணம்...

அமெரிக்கா ஒரு ஆயுத வியாபாரி...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-13...


டேனியல் டங்க்ளஸ் ஹோம் (1833-1886) ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டவர்களில் மிகப் பிரபலமானவர். ஸ்காட்லாண்டில் பிறந்த அவர் தாயாரின் சகோதரி மேரி குக் என்பவரால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலேயே பெரியம்மாவுடன் அமெரிக்கா சென்ற ஹோமிற்கு இளமையிலேயே நெருங்கியவர்களின் இறப்பு ஆவி ரூபத்தில் அடிக்கடி தெரிய வந்தது. இந்தக் காலத்தைப் போல 19 ஆம் நூற்றாண்டில் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாததால் சில இறப்புகள் அவரால் உடனடியாக அறியப்பட்டு சில நாட்கள் கழித்து கடிதம் வந்த பின்பே உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

அவருடைய 17ஆம் வயதில் தாய் "டேன், 12 மணி" என்று சொன்னதாய் காட்சி கண்டார். பெரும்பாலும் அவருக்கு ஏற்படும் காட்சிகள் இறந்தவர்கள் சம்பந்தப் பட்டதாகவே இருப்பதால் தாய் மரணமடைந்து விட்டார் என்று உணர்ந்தார் ஹோம். பின்பு தாயார் அந்தக் குறிப்பிட்ட நாளில் 12 மணிக்கு காலமானார் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. தாயாரின் மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் சத்தமாகத் தட்டுவது, தட்டு முட்டுச் சாமான்கள் எல்லாம் அங்குமிங்குமாக இடம் பெயர்வதெல்லாம் நிகழத் துவங்க அவரது பெரியம்மா பயந்தார். சிலர் சைத்தான் ஹோமை ஆக்கிரமித்துள்ளது என்று கருதினார்கள். ஒரு முறை ஒரு டேபிள் தானாக நகர ஆரம்பிக்க ஹோமின் பெரியம்மா பையிளை அதன் மீது வைத்தார். அப்போதும் அது நிற்காமல் போகவே தன் முழு எடையையும் அதன் மேல் போட்டு தடுத்துப் பார்த்தார். ஆனாலும் டேபிள் நகர்வது நிற்கவில்லை. தன் வீட்டுக்குள் சைத்தானின் சேட்டைகளை அறிமுகப்படுத்தி விட்டதாகக் கூறி அந்த அம்மையார் ஹோமை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.


ஆனாலும் அவரையும் அவரது சக்திகளையும் நம்பிய நண்பர்கள் அவருக்கு உதவினார்கள். ஆவிகளுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் சொல்ல ஆரம்பித்தார். அவருடைய இளம் வயதிலேயே நியூயார்க் மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் எட்மண்ட்ஸ், பெனிசில்வேனியா பலகலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ராபர்ட் ஹாரே போன்றவர்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

தனக்கு கிடைத்த ஆவிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்த அபூர்வ சக்திகள் இறைவனால் அளிக்கப்பட்டது என்று நம்பிய ஹோம் தன் சேவைகளுக்கு யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. ஆனால் அவர் பெரிய செல்வந்தர்கள் தாங்களாகத் தந்த பரிசுகளையும், பண உதவிகளையும் மறுக்கவில்லை. அரசர்களும், பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் அவரை ஆதரித்தனர்.

1868ல் அட்லாண்டிக் கேபிள் கம்பெனி என்ற பிரபல நிறுவனத்தின் தலைமை பொறியியல் வல்லுனர் க்ராம்வெல் வார்லெ என்பவருடனும், பின்னர் லண்டன் வாதக்கலை சமூக நிறுவனத்துடனும் சேர்ந்து ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் சுமார் ஐம்பதை ஹோம் நடத்தினார். லண்டன் சமூக நிறுவனத்தினருடனான நிகழ்ச்சிகளில் சுமார் முப்பது பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 1871ல் சமர்ப்பித்த அறிக்கையில் சத்தங்கள், அதிர்வுகள், யாரும் தொடாமலேயே பொருள்களின் அசைவுகள், கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகளில் இருந்து இசை, பரிச்சயமில்லாத சில முகங்கள், சில கைகள் ஆகியவற்றை கண்டதாகவும்/ கேட்டதாகவும் கூறினார்கள்.


ஹோமைப் பற்றிப் படித்து ஆர்வம் கொண்ட விஞ்ஞானி சர் வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் தானும் ஹோமை வைத்து ஆராய்ச்சிகள் நடத்தினார். அவருடன் லண்டனின் ராயல் சொசைட்டியின் இன்னொரு விஞ்ஞானி சர் வில்லியம் ஹக்கின்ஸ் உட்பட எட்டு கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஒரு ஆராய்ச்சியில் ஒரு மரப்பலகையின் எடையை ஹோம் தொடாமலேயே கூட்டிக் குறைத்துக் காண்பித்தார்.

இன்னொரு ஆராய்ச்சியில் ஒரு பிரத்தியேக கூண்டு ஒன்றைத் தயாரித்து அதில் ஒரு இசைக்கருவியைத் தலைகீழாக வைத்து இசைக்கருவியின் பின்புறத்தை மட்டும் ஹோமால் ஒரு கையால் தொட முடிகிறாற் போல் அந்தக் கூண்டை ஹோம் அமர்ந்திருந்த மேசையினடியில் தள்ளி வைத்தார்கள். ஹோமின் மறு கையை மேசையின் மேல் வைக்கச் சொன்னார்கள். (விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது). ஹோம் தொட முடியாத அந்த இசைக்கருவியின் ஆணிப்பட்டையில் இருந்து வித விதமாக இசை கிளம்பியதைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஹோம் அந்த இசைக்கருவியை எடுத்து அருகில் இருந்தவர் கையில் தந்த பின்னரும் கூட, யார் கைகளும் இசைக்கருவி மீது இல்லாத போதும் கூட இசை நிற்கவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளில் பலரும் வித்தியாசமான விளக்கொளிகளைக் கண்டனர். தட்டப்படும் ஓசையைக் கேட்டனர். மணிக்கட்டு வரையே தெரியக் கூடிய கைகளை மட்டும் கண்டனர். கூடியிருந்தவர்களுடன் அந்தக் கைகள் கை குலுக்கியும், மேசை நாற்காலிகளை நகர்த்தியும், இறந்தவர்களிடம் இருந்து செய்திகளை அங்கு வைக்கப்பட்டிருந்த எழுத்தட்டைகளை சேர்த்து வைத்துக் காட்டியும் அங்குள்ளவர்களை பிரமிக்க வைத்தன. ஹோம் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது தன் கைகளையும் கால்களையும் அங்குள்ளவர்களைப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார். தான் ரகசியமாக எதையும் இயக்குவதில்லை என்பதைப் புரிய வைக்க அப்படிச் செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

1852 முதல் ஹோம் செய்து காட்டிய இன்னொரு அற்புதம் அந்தரத்தில் நிற்பது. க்ரூக்ஸ் உட்பட பலர் அதைக் கண்டுள்ளார்கள். ஹோம் தரையிலிருந்து சுமார் ஆறு அங்குலங்கள் அந்தரத்தில் உயர ஆரம்பித்து பத்து வினாடிகள் அந்தரத்திலேயே நின்று மறுபடி தரைக்கு வந்ததைக் கண்ட ·ப்ராங்க் பொட்மோர் என்பவர் சாட்சிகளுடன் பதிவு செய்துள்ளார். பல சமயங்களில் பல அடிகள் மேலே அந்தரத்தில் நின்று காண்பிக்க இதில் ஏதோ ஏமாற்று வேலை இருக்கிறது என்று சந்தேகப்பட்ட ஒரு பத்திரிகை இது போன்ற ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துவதில் சமர்த்தரான எ·ப். எல். பர் என்ற நிருபரை அனுப்பியது.

அமெரிக்காவில் கனெக்டிகட்டில் வார்ட் சேனே என்ற செல்வந்தரின் வீட்டில் ஹோம் நிகழ்ச்சி ஒன்றில் பர் கலந்து கொண்டார். குறை காணப் போனவர் உண்மையாகவே அசந்து போனார். அந்தப் பத்திரிகையாளர் எழுதினார். "ஹோமின் கையை நான் பிடித்திருந்தேன். திடீரென்று ஹோம் தரையிலிருந்து ஒரு அடி தூரம் மேலே அந்தரத்தில் நின்றார். நான் அவருடைய காலையும் தொட்டுப் பார்த்தேன். மறுபடி கீழே வந்த அவர் அடுத்த முறை இன்னும் மேலே அந்தரத்தில் நின்றார். மூன்றாவது முறையோ அந்த அறையின் விட்டத்தைத் தொட்டுக் கொண்டு அந்தரத்தில் நின்றார். என்னைப் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிசயித்து நின்றோம்...."

1868 டிசம்பரில் லார்ட் அடாரே, லார்ட் லிண்ட்சே, கேப்டன் வின்னே என்ற மூன்று பிரபலங்கள் முன்னிலையில் லார்ட் அடாரேயின் மாளிகையில் மூன்றாவது மாடியில் ஒரு அரை ஜன்னல் வழியாக அந்தரத்தில் வெளியே சென்று மறு அறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தார். அந்த செய்தி பல பேரை பிரமிக்க வைத்தது என்றால் பலரை கடுமையாக விமரிசிக்க வைத்தது. அந்த மூன்று நபர்களும் சமூகத்தில் பெரிய மனிதர்கள், ஹோமிற்கு கள்ள சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்களை ஹிப்னாடிசம் செய்து ஹோம் இதை நம்ப வைத்திருக்கலாம் என்று சிலர் விமரிசித்தார்கள்.


அதை கேப்டன் வின்னே உறுதியாக மறுத்தார். 'என்னை அறிந்தவர்கள் யாரும் என்னை அப்படி வேறொருவர் ஹிப்னாடிசம் செய்து நம்பவைக்க முடியும் என்று கூற மாட்டார்கள். அப்படியெல்லாம் ஏமாறக் கூடியவன் அல்ல நான்" என்றார். மேலும் ஹோம் நல்ல ஆரோக்கியமானவராக இருக்கவில்லை. காசநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிக பலவீனமாக இருந்தார். மூன்றாவது மாடியில், அதுவும் டிசம்பர் குளிரில் சர்க்கஸ் செய்து காட்டுவது போல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவு செய்து காட்டக் கூடிய சக்தியெல்லாம் அவரிடம் இருக்கவில்லை என்பதும் உண்மை.

இந்த அற்புதங்களுக்கெல்லாம் காரணமாக ஹோம் என்ன சொல்கிறார்? ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தி கொண்ட அவர் இந்த நிகழ்வுகளுக்கு தான் காரணமல்ல என்கிறார். இதெல்லாம் நட்பான ஆவிகள் மூலமே சாத்தியமாகிறது. ஆனால் அவை எல்லாம் என் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை...

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மேலும் பயணிப்போம்....

தூத்துக்குடி மக்கள் நிலை...


பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவது எப்படி?


ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பெண்கள் எலி வால் போன்ற கூந்தலையும், ஆண்கள் வழுக்கைத் தலையையும் பரிசாகப் பெறுகின்றனர்.

மேலும் தங்களது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பலர் கடைகளில் விற்கப்படும் பல மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம் என்பது தெரியுமா?

 இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

வழி 1 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வழி 2 - பூண்டு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி 3 - பூண்டுகளை சூரியக்கதிர்கள் படும்படி வைத்து நன்கு உலர்த்தி, பின் அதை அரைத்து பொடி செய்து, கண்டிஷனருடன் சேர்த்து கலந்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பூண்டு சாற்றினை கண்டிஷனருடன் கலந்து பயன்படுத்தலாம். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வழி 4 -  ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

வழி 5 - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

வழி 6 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தண்ணீர் மற்றும் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை இந்த கலவையை தலைக்கு பயன்படுத்தும் முன்னும் நன்கு குலுக்கி பின் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்...

இந்திய திராவிட திருட்டு அரசியல்...


ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்...


1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.

தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கிக் கொள்ளப்பட்டது.

வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது.

அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.

எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.

வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.

ம.பொ.சி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை, திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது.

இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்.

( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.

தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)

அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்.

ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக் கொணரப்பட்டவை) எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை.

தடயங்களின் அடிப்படையில் நாம் முழு இந்தியாவையும் கோரலாம்தான்.

ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்.

அதைப் போல் ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது...

மற்றவன் சொன்னா அது இனவாதம் இல்லை...


ஆனால் தமிழன் சொன்னால் மட்டும் இனவாதமா?

ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை...


ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம்.

முட்டையை அவித்தோ, பொரித்தோ சாப்பிடுங்கள்.

மு‌ட்டையை எ‌வ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இ‌ந்த கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை.

இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது.

சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.

உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.

தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது.

ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை.

தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது...

போர்களின் பயன்படுத்தும் டாலர்களின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது...


போர் என்பதற்கு ஒரு நாட்டின் தோல்வியின் முடிவு என்பது இல்லை..

அது அடுத்த நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்பதற்கான தொடக்கம்...

பாஜக வாஜ்பாய் கண்டனம்.. சமஸ்கிருதம் முதல் மொழியல்ல...


விழித்துக்கொள் எம் தமிழினமே...


முக்கியமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சென்று பாருங்கள்..

தொழில்முனைவோர்களில் யார்..? அதிகம் என்று...

அந்தமான்-நிகோபர் தீவுகள்...


இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்..

இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.

ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும் உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.

இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.

ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்க வைத்துள்ளனர்...

ஆட்டு மந்தைகள் : ஊடகங்கள் அனைத்தும் இலுமினாட்டி கட்டுப்பாட்டில் இருக்கிறது...


நான் : உன் தலைவன் ஏன் அதுல பிரபலப்படுத்தப்படுறான் ?

எதிர்மறையா செய்தி போட்டாலும் அது விளம்பரம் தான்..

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 12...


ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அமெரிக்க உளவுத்துறை (CIA)யின் தலைவராக இருந்த ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஒரு அபூர்வப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன் அபூர்வசக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டு பிடித்தனர்.

இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட போது அதை ஒத்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.

உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லா விட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொண்டன. மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.


அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRIயின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.

SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வசக்தி மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர். அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.

ஆனால் இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகிற்குப் பிரசுரமாகாதது என்றாலும் ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக்கருவியினை வர்ணித்தார்.

அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டு பிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார். ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன் "வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது". அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஒரு அந்துப் பூச்சி.

SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச்சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.


சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றிய ஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக நிகழ்ச்சியாளர் கூறினார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள் அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.

இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?

மேலும் பயணிப்போம்....

கார்பரேட் அரசியல்...


கண்திறந்து கண்மணி உணர்வோடு...


கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ, தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர். கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண்திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்..

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்...

கண்முடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார்...

குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே - திருமந்திரம்.

கண் மோடி தியானம் செய்ய கற்று கொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரணகுழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்...

சேலம் –சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட்டு, தமிழகத்தில் மழை நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் - பாமக அன்புமணி ராமதாஸ்...


பாப் கார்ன் (சோளம்)...


திரைப்படம் பார்க்கும் போது பாப் கார்னை கொறித்தல் ஒரு நல்ல யோசனை தான்.

இருப்பினும் அதற்கு மறுபக்கம் உள்ளது.

நாம் உண்ணும் பாப் கார்ன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளத்தில் இருந்து தயார் செய்யப்பட்டவை மற்றும் பதப்படுத்தப்பட்ட உப்பு, பதப்பொருட்கள் போன்றவை பாப் கார்னின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கப்படுகின்றன.

மேலும் அதிக அளவில் சோடியம் மற்றும் இன்ன பிற இரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

இதுபோக இன்னும் வெண்ணெய் சேர்த்த சுவையூட்டப்பட்ட பாப் காரன்கள் இன்னும் மோசமான விளைவுகளை தருபவை..

ஆகவே கார்பரேட்டிடம் சென்று வாங்காமல் ஊர்களில் உள்ள சந்தை அல்லது விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி வீட்டிலேயே செய்து பயன்(வலு) பெறுங்கள், குழந்தைகளுக்கு கடைகளில் விற்க்கும் பாப் கார்னின் தீமைகளை புரியும் படி எடுத்து கூறுங்கள்...

இலுமினாட்டி கமல் எனும் உளவாளி...


தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.

மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா.. மீண்டும் பிறவாத நிலையைக் கொடு. என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.

பழம் கொட்டை என்பது கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்...

அடுத்த தலைமுறைக்கு அரசியல் வாழ்வியலை கற்று கொடுங்கள்...


முதலில் தமிழனுக்கு என்று ஒரு மாநிலம் வேண்டும்...


காவிகளின் கூடாரமா இருக்கும் இந்தியாவை அடக்க வேண்டும் என்றால் அது தமிழர்களால் மட்டுமே முடியும்..

தமிழர்கள் அப்படியான எழுச்சியயை உண்டு செய்ய முதலில் தமிழன் ஆளுமைக்குள் ஒரு மாநிலம் வேண்டும்..

அப்படி அமைந்தால் மட்டுமே அத்தனை பிரச்சனைக்கும் தமிழர்கள் எழுச்சியோடு போராடி வெற்றியும் அடைய முடியும்.

தற்போது இந்த இந்தியாவின் செல்ல குழந்தைகள் ஆரிய கள்ள குழந்தைகள் திராவிடம் நடத்தும் அடையாள போராட்டம் முழுக்க முழுக்க வடுகர்களின் ஆளுமைய தக்க வைக்கவும் தனது பொருளாதரத்தை உயர்த்த மட்டுமே போராட்டத்தை கையில் எடுத்து கொள்கிறார்கள்...

எடுத்து கொள்வது மட்டும் இல்ல வடுகர்களின் போரட்டம் என்பதே ஒரு வித மாஃபியா தான்..

தமிழர்கள் போரட்டம் என்பது தனது உயிரையும் மாய்து கொள்வார்கள் அந்த அளவுக்கு அதிலே உண்மை இருக்கும்.

அப்படியான தமிழர்களை வடுகர்கள் ஆளுமை செய்து தமிழர்களை எல்லாம் இன பற்று மொழி பற்று ஆளுமை பற்று இல்லாமல் ஒரு வித பண மது  பற்றுடன் ஓடுவதற்க்கு தள்ளிவிட்டுவிட்டார்கள் அப்படியான தமிழர்களை முதலில் மீட்க வேண்டும்.

வடுகர்கள் மார்வாடிகள் தமிழகத்தை கூறு போட்டு கொண்டு நம்மை வஞ்சித்து பெரும் முதலாளிகளா வாழ்கிறார்கள்.

இந்த ரேசில் தமிழன் கலந்துக்கவே வாயிப்பு இல்ல இதுல என்ன கொடுமைனா அவனுங்க ரேஸ் விளையாடும் திடல் தமிழர்களுடையது..

இனியும் நாம் விளையாடவில்லை என்றால் நாம் அவ்வளவுதான் முதலாளித்துவத்தை  கைபெற்றாமல் தனி நபர் வருமானத்துக்காக தமிழர்கள் ஓடினால் மாற்று முதலாளிகளை இங்க வீழ்த்த முடியாது அதை வீழ்த்தினால் மட்டுமே தமிழ் முதலாளிகளையும் காக்க முடியும் இல்லையெண்றால் நாளை தமிழர்களின் பெரும் நிறுவனங்களை கைப்பற்றுவார்கள் அதுவும் இல்லை என்றால் அவர்களின் கைப்பாவையா அந்நிறுவனங்களை அடக்குவார்கள் மாற்றுவார்கள்..

அப்படிதான் பல அண்ணாச்சிகள் மாறிவிட்டார்கள் ஒரு தலமுறை மாறினால் அடுத்த தலமுறைக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

தமிழர்கள் பெரும் இயக்கங்களா மாறினால் மட்டுமே இங்கு இருக்கும் தமிழ் முதலாளிகள் இந்திய மார்வாடி வடுகனுக்கு காவிகளுக்கு அடிமையாக மாறாமல் இருக்க வாயிப்பு இருக்கு.

அவ்வாறு அரசியல் பலத்தை தமிழர்கள் நாம் அடைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த தமிழர்களையும் காக்க முடியும் காவிகளிடம் இருந்தும் மார்வாடிகளிடமிருந்தும் ஆரியனிடம் இருந்தும் தமிழனை மீட்க முடியும்..

இல்லயென்றால் காவிபக்கம் சாயும் அத்தனை தமிழ் நபர்களையும் குறை மட்டுமே சொல்லிகொண்டு இருப்போம் எவன் பக்கமும் தமிழன் சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை முழுக்க முழுக்க நம் பங்கு. நாம் பலமாக இருந்தால் மட்டுமே எவனுக்கும் அடங்கி போகனும் என்ற எண்ணமே எந்த தமிழனுக்கும் வராது....

33 எண்ணும் உண்மைகளும்...


மாந்திரீக ரகசியங்கள்...



இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.

ஆகவே, மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம், சுபகாரிய நிகழ்வும், தீர்க்காயுளும் உண்டாகும்.

சிங்கம், புலி, கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.

நாம் செய்த பாவங்களை நாமே சம்பந்தப்பட்ட நபரிடம் கூறி மன்னிப்பு கோரினால் ( மன்னித்து விட்டால் விரைவாக பாவம் குறையும் ) அதுவும் குறைந்து கொண்டே வரும். ( அந்த நபருக்கு தெரியாமல் உதவி செய்தாலும் கூட பாவம் சிறிது சிறிதாக குறையும்) .

ஒரு வேலை மாந்திரீகம் பலித்தாலோ அல்லது மன்னிப்பு வாங்காமல் விட்டாலோ... 99 ஆண்டுகள் செய்த பரம்பரையே தாக்கும்.. (3 தலைமுறை)...

முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு. அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும். தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து, உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய் விடும்.

அடுக்கு அரளி, செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும். தொழில் விருத்தியடையும்.

ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்...

ஆட்சியில் இல்லை என்றால் அனைத்து நாச காரியங்களையும் மறந்துவிடும் திமுக...


வீரமங்கை செங்கொடியின் நினைவு நாள்...


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரின் உயிர் காக்க (மரண தண்டனைக்கு எதிராக) 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட வீரத்தமிழிச்சி செங்கொடியின் 6ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.

தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரத்தமிழிச்சியை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்...

உலக வங்கியும் உண்மைகளும்...





உலகின் முதல் சிவன் ஆலயம்.. அதன் சிறப்பு தகவல்கள்...


சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர், உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.

நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம்.

மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள்...

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்

நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள் உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

ஒம் நம சிவாயா...