28/02/2021

R2A2 சூத்திரம்...

நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..

உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்..

இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது..

R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate ).

A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது. (Assimilate and Apply ).

உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..

இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..

அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...

கடவுள் Vs நான்...


நான் கடவுளிடம் நல்ல அன்பான, அறிவான, கியூட்டான தோழியை கொடு எனக் கேட்டேன்...

.

கடவுள் உன்னை எனக்குத் தந்தார்..

.

அன்றிலிருந்து எனக்கு கடவுள் நம்பிக்கையே போச்சு..

😃😃😃😃

பிராடு பயலுங்க சார் பாஜக...

 


மதுரையில் செய்தியாளர் சந்திப்பின் போது திமுகவை சேர்ந்த அபுபக்கரை "டேய் தொப்பி இங்க வாடா" என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அருவருக்கத்தக்க வகையில் கூறியுள்ளார்...

 


தன் மத அடையாளத்தை துரை முருகன் கேலி செய்ததால் மனமுடைந்த அபுபக்கர்  கூட்டத்தை விட்டு விலகி ஓரமாக சென்றார்...

நண்பன் - நண்பன் அப்பா - நான்...

 


நண்பனின் அப்பா : ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற......

நண்பன் : நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது..  இப்ப நானும் சம்பாதிக்கிறேன்.....

நான் : இவனுக்கு கடை வச்சு கொடுத்து நீங்க பெரிய தப்பு பண்ணிட்டீங்க பா....

இவனை எல்லாம் என்னைய மாதிரி BSC , BE , MSC , MBA , MCA, M.A ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா அலைய விட்டு இருக்கணும்.🤣🤣🤣

ஆர்டிக் கடற்பகுதியில் மறைந்துள்ள இரகசியம்...


ஆர்டிக் பெருங்கடல் பகுதி பனிபாறைகளால் சூழப்பட்டது. பருவ காலங்களுக்கு தகுந்த படி அதிகமாவதோ அல்லது குறைவதோ நிகழும். ஆயின் கடந்த காலங்களின் அதாவது 35 வருடங்களை கணக்கில் எடுத்து கொண்டால் அவற்றின் பரப்பளவானது 14 சதவீதம் குறைந்து விட்டதாக ஒரு (டேட்டா ) குறிப்பேடு தெரிவிக்கிறது.

ஆர்டிக் பகுதியில் தொடர்ந்த கண்காணிப்புகளும், ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன.  மேலா பார்வையில் இவை மீன்வள ஆய்வாகவே தெரியப்படுத்தப் படுகின்றன.

சொல்லப்போனால்  கடற்படுகையின் வளங்களை பற்றின ஆய்வாகவே அவை கருதப்படுகின்றன.

இந்த வருடம் கனடா புதிதாக இரண்டு பெரிய ஆய்வு கப்பல்களை (Vessels) ஆர்டிக் கடற்படுகைகளை ஆய்வு செய்வதற்காக அமர்த்தி இருக்கிறது.  இம்மாதிரியான நடவடிக்கைகள் ஆக்கிரமிப்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவுமே உற்று நோக்கப் படுகின்றன. மேற்படி ஆர்டிக் கடற்படுகை பிரதேசங்களில் மறைந்து இருக்கக்கூடிய பெருமளவு எண்ணெய் வளங்களும், வாயுக்களையும் கைக்கொள்வது எப்படி என்பதான பிரதேச போட்டி இது என்று சொல்லலாம்.

2007 ல் ரஷ்யர்கள் குட்டி நீர்மூழ்கிகளை எடுத்துக்கொண்டு ஆர்டிக் பகுதிக்கு  போய் வடகோளம் எமது.. என்பதாக அவர்கள் நாட்டு கொடியியை அங்கு நட்டு வைத்ததார்கள்.

அப்போதிருந்தே ஆர்டிக் கடற்படுகை பிரதேசத்தில் “லொமோனோஸோவ் ரிட்ஜ்”(Lomonosov Ridge) என்ற பகுதி முக்கியமான அவதானிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. (படத்தில் இப்பகுதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது )  இப்பகுதி முழுக்க தம் சொந்தப்பகுதி என சொந்தம் கொண்டாடியது ரஷ்யா.  ஆனால் அப்படி கருதமுடியாது என்று கீரின்லாந்தை தன் ஆளுமையில் வைத்திருக்கும் டென்மார்க் குரல் எழுப்பியது.  இத்தோடு கனடாவும் சேர்ந்து கொண்டது. தத்தம் நாட்டு புவியியல் பரப்பளவின் எல்லைகளின் படி ஒரே நாடு அப்பகுதியை சொந்தம் கொண்டாட முடியாது என்ற கோரிக்கையும் முன் வைக்கப் பட்டது. அது பற்றிய பஞ்சாயத்து ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் இப்பகுதி பிஸியான பகுதியாக மாறிப்போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தாலும் அதன் பின்னனியில் ஆக்கிரமிப்புகளினால் ஏற்படப்போகும் நிலவியல் மாற்றங்களும் சுற்று சூழல் பாதிப்புகளும் தாம் எமக்கு பூதாகரமாக தெரிகின்றன...

கன்னட பிராமணன் கமல் கலாட்டா...

 


ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுகவினர் மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்குகளை விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது...

 


வற்றிப்போன கடல்...


1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள்.  அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்?

உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ?

தொடர்ந்து வாசியுங்கள்...

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர்.  (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு ) 1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர்.  ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர்.  நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது.  மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன.  அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்...

விவசாயிகளிடம் இருந்து அடாவடியாக உங்க கட்சிக்காரர்கள் பிடுங்கிய நிலங்கள் தான இப்படி வெள்ளி ஏர்கலப்பையா மாறியிருக்கு...

 


10,626கோடி கொள்ளையன் ஜக்கி வாசுதேவ்...

 


தமிழன் பார்ப்பன் வேறு... ஆரிய பிராமணன் வேறு...

 


மாரியாத்தா கோவில்ல கூழ் ஊத்தனும்..

முனீசுவரர் கோவில்ல  காது குத்தனும்..

ஐயனார் கோவில்ல மொட்டை அடிக்கனும்..

மதுரை பாண்டி கோவில்ல கெடா வேட்டனும்..

கருப்பசாமி கோயில்ல சேவல் அறுக்கனும்..

சுடலை மாடனுக்கு பன்றி  படையல் வைக்கனும்...

இதுபோன்ற நமது பாரம்பரிய தமிழன் வழிபாட்டுக்கு,  சும்மா ஒரு பேச்சுக்கு இந்த மோடி பயலையோ, இல்லை மோடிக்கு காவடித் தூக்கும் பிராமணப் பயல்களையோ  கூப்பிட்டு பாருங்களேன் வரமாட்டான்., தெறிச்சு ஒடுவான். 

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் வேறு தான், வட இந்திய  வரவான ஆரிய பிராமண இனம் வேறுதான். அதேபோல  தமிழனின் தனித்த வழிபாடும் என்றுமே வேறுதான்.

இன்றைக்கு காட்டை அழித்து  சிவனை வழிபடுவதை எதிர்க்கும் நம்மை. தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இதே எச்ச.ராசா  பிராமண கும்பல் தான்..

அன்று சிவனடியார் ஆறுமுக நயினாரை  சிதம்பரம் கோவிலினுள் தேவாரம் பாட விடாமல், அடித்து விரட்டியது..

மேலும் இன்று வரையிலும், தமிழக கோவில்களில் தமிழ்மொழியைத் தீட்டு மொழி என்றுக்கூறி அனுமதிக்க மறுக்கிறது.

செத்த மொழியான சமசுகிருதத்தை  போற்றுகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மறுக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழையும், தமிழர்களையும் தீண்டத்தகாதவராக கருதி இன்று வரையிலும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆரிய பிராமண இனத்தின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகிவிடாதீர்கள் தமிழர்களே..

ஏமாந்திராதீங்க தமிழர்களே...

மாட்டு மூத்திர குடிகார பாஜக பிராடு பயலுங்க...

 


திமுக தெலுங்கர் கருணாநிதி குடும்பம் டூபாக்கூராச்சே...

 


தெரிந்துக் கொள்ளுங்கள்...

 


குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் . நாடு நாசமாகாது...

தேச துரோக பாஜக பிராடு பயலுங்க...

 


பிராடு பாஜக எனும் வரி கொள்ளையர்கள்...

 


புரட்சி...

சில எண்ணங்களும், பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன. 

அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள், சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?

பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள். 

ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

மக்கள், எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள். தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள். கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.

ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன. 

ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும் போது தான் உண்மையான புரட்சி ஏற்படும். 

இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம், மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான புரட்சி தான்...

கணவன் - மனைவி - நீதிபதி...

 


மனைவிமார்கள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்...

என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா.. அதாகப்பட்டது.

நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்".. (WHY SHOULD WIVES COOK FOOD TO HUSBANDS?)..

வித்தியாசமான வழக்கு.. விசித்திரமானதும் கூட..?

எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய ஒரே ஒரு point ஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்..

கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்....

அது என்ன point...?

MY LORD,

               " IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER.."

கணம் நீதிபதி அவர்களே,

   .         "கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை/பொறுப்பு.."

CASE DISMISSED...

அரசியல் தத்துவ மேதை ரூசோவின் சில சிந்தனை சிதறல்கள்...

ஒரு மனிதன் தன்னிச்சையாகக் காரியங்கள் செய்ய அனுமதிக்கப் படுகிற வரையில்தான் தர்ம நியாயமாக நடந்து கொள்வான்..

மானிட சுபாவம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சுபாவம் இல்லை. அதேபோல எப்போதும் சமாதானமாக வாழும் சுபாவமும் இல்லை..

விருப்பம் போலக் காரியங்கள் செய்வது அடிமைத்தனம்.தானே வகுத்துக் கொண்ட சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது சுதந்திரம்..

சமூகமானது,உடல் பலத்தின் காரணமாக மனிதர்களிடையே உண்டாகிற சமத்துவமின்மைக்குப் பதிலாக, ஒழுக்க ரீதியான, சட்ட ரீதியான ஒரு சமத்துவத்தை அளிக்கிறது. மனிதர்கள் உடல் பலத்திலும், அறிவிலும் வித்தியாசப்பட்டவர்களாக இருந்த போதும் சட்ட ரீதியாக சமத்துவம் உடையவர்களாக ஆக்குகிறது..

ஒரு தேசத்தில் எவ்வளவுகெவ்வளவு சட்டங்கள் இயற்றப்படுவது குறைவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அத்தேசம் புகழ் பெறுகிறது..

அரசு அதிகாரிகள் மக்களுடைய எஜமானர்கள் அல்ல. அவர்களுடைய காரியஸ்தர்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்..

அரசுப்பணி என்பது ஒரு நபருக்குக் காட்டப்படுகிற சலுகை அல்ல. ஒரு நபருக்கு அளிக்கப்படும் பொறுப்பு...

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நல்லது செய்யும் என்று நீங்கள் நினைத்து ஆதரிக்கும் கட்சிக்கு, முட்டு கொடுக்கும் ஒவ்வொரு முறையும் நினைவில் கொள்ளுங்கள், எதிர் காலத்தில் அனைத்தையும் இழக்க போகிறோம் என்று...

 


ஐ.ஜே.கே - ச.ம.க கூட்டணி 😁

 


நண்பன் Vs நான்...

நண்பன் : ச்சே.. ஏன் தான் கல்யாணம் பண்ணோமோனு இருக்கு...




நான்...

மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால் அது யோகா...

மனைவி திட்டுவதை காதில் வாங்காமல் இருந்தால் அது தியானம்..

யோகாவும், தியானமும் உடம்புக்கு நல்லது..

புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..

🤣🤣🤣🤣

நன்றியுணர்வும்.. எண்ணங்களின் சக்தியும்...



ஒரு செயலை தொடர்ந்து 21 முறைக்கும் மேல் செய்தோம் என்றால் அந்த செயல் நம்முடைய பழக்கவழக்கமாக மாறி விடுகிறது.

நம்முடைய பழக்க வழக்கங்கள் இடம், பொருள் மற்றும் ஏவல் என்று எதையும் பார்க்காமல் அது தானாகவே செயல்பட ஆரம்பித்து விடும்.

நம் ஆழ்மனதில் ஒரு அற்புதமான செயலை நமது பழக்கவழக்கங்களில் (HABIT) ஒன்றாக மாற்றிவிடுகிறது. அது தான் நன்றியுணர்வு.

நன்றியுணர்வு எனும் உணர்வு நம்முள் சென்றுவிட்டால் அது நமக்கு தரும் பலன்கள் அளவிட முடியாதது.

நமது எண்ணங்கள் யாவும் நிறைவேற வேண்டுமெனில் நம்மில் நன்றியுணர்வு அதிகமாக இருந்தாலே போதும்.

அதனால் நமக்கு ஏற்படும் பயன்கள் பல அதில் சிலவற்றை மட்டும்  கொடுத்துள்ளேன்..

நீங்கள் இன்று எத்தனை பேருக்கு நன்றி( THANK_U )சொல்லியுள்ளீர்கள். அல்லது எத்தனை பேர் உங்களுக்கு இன்று நன்றி சொல்லியுள்ளார்கள் என்பதை பொறுத்தே.. நமது எண்ணங்கள் செயலாக மாற வாய்ப்புள்ளது.

நன்றியுணர்வு அதிகம் உள்ளவர்கள் பலர் மிக பிரம்மாண்டமான சாதனைகளை செய்துள்ளார்கள்.

நாம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல ஒரு சிறிய முயற்சியினை ஆரம்பிப்போம்…

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

தினமும் நமக்கு 86,400 நொடிகள் பரிசாக கிடைத்துள்ளது, இதில் ஒரு நொடியை எதற்காவது நன்றி (thank you) சொல்ல செலவிடலாமே…

நன்றியுணர்வு அனைத்தையும் மாற்ற வல்லது...

அந்த விஷயத்துக்கு இவரு சரிபட்டு வர மாட்டாரு...

 


பாஜக - அதிமுக வின் வரி கொள்ளைகள்...

 


கணவன் Vs மனைவி...

மனைவி: உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... 

எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா? 😍

கணவன்: அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌...😓😓

மனைவி: ஏன் ஏன் அப்படி சொல்றீங்க?😳

கணவன்: என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா.. 😔

அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு... 😏😏

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவம்.. எந்த ஊசியும் தேவை இல்லை இதை மட்டும் செய்தால் போதும்...

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.  இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.

இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,

இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே  கால் குவளையாக வரும் வரை  காய்ச்சி, காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்..

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...

 


தமிழன் டா...

 


தமிழரின் இசைக் கருவி....

 


தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும்.

மிகப் பெரிய தமிழர் இசைக் கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.

வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும். வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண் (இசை)  எழுப்பப்படும்.

குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும். அதை மலையாளத்தில் ”மிழவு” என்றழைக்கின்றர்கள்.

சங்க இலக்கியங்களில் குட முழவத்தைப் பற்றி பலப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. மேலும் மறவர்களின் தோல் வலிமைக்கும், பலாப் பழத்திற்கும், பனை மரத்தின் அடிக்கும், இக்கருவியை ஒப்பிட்டும் பல சங்கப் பாடல் பாடப்பட்டுள்ளன...

வீட்டுக்கு விளக்கு ஏத்த வரியானு என் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட கேட்டேன்...

 


வெளக்குமாத்தோட வரேன்னு சொல்லுது..

ஒரு வேளை வீட்ட கூட்டி விட்டுட்டு விளக்கு ஏத்துவாளோ..?

சின் (தியான) முத்திரைகள்...


தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் சின் முத்திரையில் தான் இருப்பார்கள்.

சின் முத்திரை செய்முறை...

உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொட வேண்டும்.

மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம்.

மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பலன்கள்...

மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

மன அழுத்தத்தை போக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்...

பிராடு பாஜக மோடியின் தேர்தல் நாடகம் ஆரம்பம்...

 


தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு...


யார் வெற்றி என்று சொல்வதற்கு இத்தனை நாட்கள் தேவை என்றால் எதற்காக வாக்கு எந்திரம்...? 

தில்லு முல்லு செய்ய தானே...

பாஜக பினாமி தேர்தல் ஆணையமே... வாக்கு சீட்டு முறையை நடைமுறை படுத்து...

மூன்றாவது கண்...

 


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன்முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம் மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக்கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...

ஒக்கால ஓலி திராவிட பிரசன்னா இப்ப என்னடா சொல்ற....😂😂

 


பாமக வின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...


 

மனமற்ற நிலை என்றால் என்ன.?


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலை பெறுவது தான் இறுதிச் சாதனை.

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்.

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்.

மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால்கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்.

மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும்.  இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

பிராடு பாஜக மோடியை செருப்பால் அடித்த ஜிக்னேஷ் மேவானி...

 


இங்கு ஆளும் அரசின் திட்டத்தை முகநூலில் எதிர்த்து கொண்டு இருந்தால் அவர்கள் துளியும் மதிக்க மாட்டார்கள்...

 


அவர்களை இயக்கும் கார்ப்பரேட் பொருள்களை புறக்கணிக்க முயற்சியுங்கள் அது தான் அவர்களை வீழ்த்த சிறந்த வழி...

எழுதுகோல் (பேனா) வரலாறைப் பற்றி தெரிந்துக் கொள்ளவோம்...

 


எழுதுகோல் என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?


இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை.


பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விசயம். ‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள்.

‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது. 5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது.


அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.


1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.


ஜான் ஹாக்கின்சு என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது.


அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.


1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது.


1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.


அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை.


நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.


அதைப் போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே...

பாஜக மோடி எனும் புரோக்கரே.. அப்போ அரசின் வேலை என்ன.?

 


திண்டுக்கல் மாவட்டத்தில் சண்ணார்பட்டி என்ற இடத்தில் தமிழக அரசு ஏற்கெனவே திறந்து வைத்த அம்மா மினி கிளினிக்கை, மீண்டும் திறந்து வைப்பதாக சொல்லி வெட்டி விளம்பரம் தேடியுள்ளார் திமுக எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம்...

 


அடேய் முடியல டா 😂