27/08/2017
அரசியல் ஆதாயங்களுக்காக ஹரியானவை பற்றி எரிய விட்டுள்ளீர்கள் - ஹரியான மாநில அரசை கடுமையாக சாடியுள்ள - ஹரியான பஞ்சாப் உயர் நீதிமன்றம்...
கலவரம் ஏற்படும் என முன் கூட்டியே தெரிந்தும் சாமியாரின் லட்சக்கணக்கான ஆதராவாளர்களை ஒன்று கூட விட்டு அவர்களை பாதுகாக்க முயன்றுள்ளீர்கள் என உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
போலிஸ் அதிகாரியை சஸ்பண்ட் செய்து விட்டோம் எனக் கூறி எங்களை ஏமாற்றப் போகின்றீர்களா ? அவர் மட்டும் தான் இதற்கு காரணமா ? எனவும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்புயுள்ளது...
சுப்ரீம் கோர்ட்டே சொன்னாலும் கேட்க மாட்டோம் : ஆதார் கேட்டு அடம்பிடிக்கும் வருமான வரித்துறை...
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்பும் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என்று, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க வருமான வரித்துறை வரும் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், தனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டது.
இதனால் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கப்படும் நடைமுறையில் பல மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் கோர்ட்டின் இத்தகைய தீர்ப்பால் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
இருப்பினும் வருமான வரித்துறை தனது தீர்மானத்தில் உறுதியாக உள்ளது.
ஆதாரை பானுடன் இணைக்காவிட்டால் பான் எண் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது...
பாஜக வின் பேசப்படாத ஒரு பெரும் ஊழல் - தி இந்து...
ரூ.19,700 கோடி மதிப்புள்ள ஒரு ஊழலை, நாடே அறியாதபடி பார்த்துக்கொண்ட திறமைக்காகப் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டலாம்.
இல்லாத வாயுவைக் கண்டுபிடித்து, வெளியில் எடுப்பதாக ‘பாவனை செய்ய’ அசாதாரணத் திறமையும், சூழ்ச்சி செய்யும் மனமும் தேவை.
நடந்ததையெல்லாம் எவர் கண்ணிலும் படாமல் மறைக்க மிகுந்த திறமைசாலியாக இருக்க வேண்டும்.
இதுதான் கிருஷ்ணா-கோதாவரி வடிநில வாயு மோசடியின் கதைச் சுருக்கம்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் 5 அறிக்கைகளில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.19,700 கோடி மதிப்புள்ள இந்த ஊழலை, நாடே அறியாதபடி பார்த்துக்கொண்ட திறமைக்காகப் பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டலாம்...
சுப்பரமணியன் - முருகனின் தமிழ்ப்பெயரே தவிர வடமொழிப்பெயர் அல்ல...
முருகன், வேலன், சரவணன், வடிவேலன், குமரன், செந்தூரன் போலவே சுப்பிரமணியன் என்ற பெயரும் தமிழ்ப்பெயரேயன்றி வடமொழிப் பெயர் அல்ல, அது வடமொழியாக்கப்பட்டது.
உதாரணமாக, சென்னையில் கலாசேத்திரப் பார்ப்பனர்கள் எவ்வாறு தமிழர்களிடமிருந்து சதிராட்டத்தை இரவல் வாங்கி, அதற்கு மெருகூட்டி, அதற்குப் பரதம் என்று பெயரிட்டு விட்டு, அதை வடநாட்டுப் பரதமுனிவர் உருவாக்கியதாக கதை விட்டது மட்டுமன்றி, அதற்கு எவ்வாறு பாவம், தாளம், ராகம் என்றெல்லாம் அர்த்தம் கற்பித்தார்களோ, அவ்வாறு தான் முருகனின் இன்னொரு தமிழ்ப்பெயராகிய சுப்பிரமணியன் என்ற பெயருக்கும் சமக்கிருதத்தில் பல கருத்துக்களைக் கற்பித்தனர்.
சுப்பிரமணியன் என்ற முருகனின் பெயர் தமிழா அல்லது வடமொழியா என்பதை நான் தமிழாசிரியருடனும், வேறு பலரிடமும் முன்பே விவாதித்திருக்கிறேன்.
அவர்களுடைய கருத்துடன், சமக்கிருதம் என்று கருதப்படும் பல சொற்கள் உண்மையில் தமிழ்ச்சொற்களே என்பதை தமிழர்கள் அறியும் வகையில் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலரது கருத்துகளின் தொகுப்பே இதுவாகும். சுப்பிரமணியம் என்பதற்கு சமக்கிருத வாதிகள் கூறும் கருத்துக்களுடன் ஒப்பிடும் போது தமிழில் அதன் கருத்து தான் பொருத்தமானதாக எனக்குப் படுகிறது.
Subramaniam (Tamil: சுப்பிரமணியம் or சுப்ரமணியம்; Telugu: సుబ్రహ్మణ్యం) is a South Indian name. It is also be spelled Subramanian or Subramanyam. The name is derived from merging two common Sanskrit/Tamil words supri-ya (सु), meaning "good" or "dear," and mani-ya, meaning jewel; the name translates loosely as "worthy jewel". Other mistranslations such as "dear to Brahmins" are widespread.
சுப்பிரமணியன் என்பது சுப்பிரியா என்ற சமக்கிருதச் சொல்லும் மணி என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து உருவாகிய பெயர் என்கிறது விக்கிப்பீடியா.
தமிழில் சுப்பிரமணியன் எனும் முருகனின் பெயரின் கருத்தைப் பார்ப்போம்:
சு(ல்) + பரம் + அணியன் = சுப்பரமணியன் = ஒளிரும் + கடவுள் + நெருங்கியவன் = (தமிழர்களுடைய) நெருக்கமான ஒளிரும் கடவுள் = முருகன்
சுல்:
தமிழில் சுல் என்பது ஒளிப்பொருள் கொடுக்கும் வேர்ச்சொல்.
சுல்3 (சிவத்தற் கருத்துவேர்)
பரம்:
தமிழில் பரம் என்பது பரம்பொருள் (கடவுளைக் ) குறிக்கும்
பரம் > பரமன்
பரம் என்ற சொல் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு சமக்கிருதத்தில் பிரம் ஆகியது.
பரமன் (தமிழ்) – பிரமன் (சமக்கிருதம் )
பரமம் > பிரமம்
பரமண்ணர் > பிரமண்ணர் > பிராமணர்
பரம் + சாதம் (சத்து (மென்மை) என்ற தமிழ்ச்சொல் (சோறு) = பிரசாதம் (கடவுளுக்குப் படைத்த சோறு)
பரம் +அரசு +அதி +பதி = பிரசாதிபதி = பிரம்மம்
அணியன்:
தமிழில் அணியன் என்றால் நெருங்கியவர் (பிடித்தமானவர்) எங்களுடையவன், சொந்தக்காரன், என்று பொருள் படும்.
"நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கா லனையார் தொடர்பு." (நாலடியார் 218)
(பொ-ள்.)நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின் சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிக நெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவி செய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?; சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு - கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்த இயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும் அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும்.
"சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில்". (திருவாய்மொழி)
தமிழ்க் கடவுளாகிய முருகனின் பெயர்களில் ஒன்றாகிய சுப்பிரமணியன் என்ற பெயர் தான் பார்ப்பனர்களின் மத்தியிலும், தமிழர்களல்லாத திராவிடர்கள் மத்தியிலும் பரவலாக வழக்கத்தில் உள்ளது.
அதனால் சிலர் அதை சமக்கிருதப் பெயர் எனவும், பார்ப்பனீயம் முருகனை சுப்பிரமணியன் ஆக்கி விட்டது, அதனால் சங்ககாலத்தில் தமிழர்கள் வெறியாடல் ஆடி வணங்கிய அந்த முருகன் வேறு, இன்றைக்கு தமிழ்நாட்டில் குன்றுகள் தோறும் குடியிருப்பது மட்டுமன்றி, ஈழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் கோயில் கொண்டிருக்கும் தமிழ்க்குமரனுக்கும் தொடர்பு கிடையாது என்பது போல உளறத் தொடங்கி விட்டார்கள்.
கதிர்காமத்தில் முருகன் இயந்திர வடிவில் இருப்பதால் அங்கு சிலைகள் கிடையாது, ஆறுமுகங்களுடன் கூடிய திரைச்சீலை மட்டும் தான் தொங்குகிறது. அந்த திரைச்சீலையில் கந்தபுராணம் கூறும் ஆறுமுகப்பெருமான் மட்டும் அங்கே காணப்படுவதால், ஆதித்தமிழர்களின் கடவுளாகிய முருகன் அங்கு கிடையாது, அதனால் தமிழர்களுக்கும் கதிர்காமக் கந்தனுக்கும் எந்த தொடர்புமில்லை, என்று கூறினால், அது எவ்வளவு அபத்தமானது என்பதை சிலர் உணர்வதேயில்லை. தமிழர்களின் வழிபாட்டில், அவர்களின் பாரம்பரியத்தில் பார்ப்பனீயம் பல மாற்றங்களை ஏற்படுத்தி, உருமாற்றி விட்டது என்பதை மறுக்க முடியாது.
அதே வேளையில் சங்ககால முருகன் தான் தமிழர்களின் முருகன், இன்றைக்குச் திருச்சீரலைவாயிலில் சுப்பிரமணியன் என்ற பெயருடன் நிற்கும் முருகன், ஆதித்தமிழர்கள் வணங்கிய உண்மையான முருகனல்ல என்று சிலர் கூறுவது, முருகனை வணங்கும் பெரும்பான்மை தமிழர்களை அவமதிக்கும் அதிகப்பிரசங்கித்தனமாகும்...
தமிழரின் வீழ்ச்சி என்பது வடுகர்களின் படையெடுப்புகளுக்கு பின்பு தொடங்கியது...
அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கினால்
அனைவருக்கும் தாழ்வு
- என்பது பழமொழி.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அனால் தமிழர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த வடுகர்கள் நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்பதனை நன்கு உணர்ந்து அதற்கான வேலைகளை செவ்வன செய்துக் கொண்டிருக்கின்றனர்..
தமிழா ஒன்றுபடுவோம்..
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி...
2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி..
பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டு வரும் பகுதி.
பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டு வரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள்.
இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.
இது துல்லியமானதென்று கூறிவிட முடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதி கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மை பூர்வீக மண்ணே ஆகும்.
தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.
புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில் எந்த இனத்தினருக்கும் அத்தகுதி இல்லை.
அத்தகுதிகளாவன - வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள், தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள், திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள், சொலவடைகள், செவிவழிக் கதைகள், பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள், உடற்கூறு, தோற்றம், உறவுமுறைகள், சமூகக்கட்டமைப்பு, தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு.
தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்; கனிசமான எண்ணிக்கை, சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமை கொண்ட வேற்றின மக்கள்..
ஈழம்.. ஒரு முன்னோட்டம்...
ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்..
ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடி பணியாது போராடிவரும் வீரமறவர்கள்.
தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.
தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது, உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.
ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.
ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி...
அந்தமான்-நிகோபர் தீவுகள்...
இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்..
இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.
ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும் உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.
இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்க வைத்துள்ளனர்...
தமிழ்நாடு...
தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதி ஆகும்..
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை.
இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்து வருவதே ஆகும்.
இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர்.
வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, ட்ரினாட் டொபகோ போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது.
அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறு மொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது.
பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்து விடவில்லை.
தவிர, தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர் இன்றும்
தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.
தவிர இது கூடிக் கொண்டே போகிறது.
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா? முடியாது தானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே.
வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்ட போதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
வந்துள்ளனர். இது அனைவரும் அறிந்த உண்மை.
அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் ஒரு சில விடயத்தில் அதிகாரம் பெற்று நிம்மதியாக வாழ்வர் என்பது உறுதி.
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 85% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்...
ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்...
1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கிக் கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது.
அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல் தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
ம.பொ.சி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை, திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது.
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்.
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்.
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.
(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும் மட்டுமே பெரும்பாலும் வெளிக் கொணரப்பட்டவை) எனவே இந்த மண்ணை நாம் கோருவதில் தவறில்லை.
தடயங்களின் அடிப்படையில் நாம் முழு இந்தியாவையும் கோரலாம்தான்.
ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்.
அதைப் போல் ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய உள்ளது...
ஆரோக்கிய வாழ்வுக்கு தினமும் ஒரு முட்டை...
ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம்.
முட்டையை அவித்தோ, பொரித்தோ சாப்பிடுங்கள்.
முட்டையை எவ்வாறு சமைத்து சாப்பிட்டாலும் இந்த கலோரிச்சத்துகள் குறைவதில்லை.
இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது.
சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும். சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.
உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.
தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது.
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது.
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை.
தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது...
பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுவது எப்படி?
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய மோசமான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறையால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, பெண்கள் எலி வால் போன்ற கூந்தலையும், ஆண்கள் வழுக்கைத் தலையையும் பரிசாகப் பெறுகின்றனர்.
மேலும் தங்களது தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட பலர் கடைகளில் விற்கப்படும் பல மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.
ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம் என்பது தெரியுமா?
இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.
வழி 1 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து 1 மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.
வழி 2 - பூண்டு எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வழி 3 - பூண்டுகளை சூரியக்கதிர்கள் படும்படி வைத்து நன்கு உலர்த்தி, பின் அதை அரைத்து பொடி செய்து, கண்டிஷனருடன் சேர்த்து கலந்து, தலைமுடிக்கு பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் பூண்டு சாற்றினை கண்டிஷனருடன் கலந்து பயன்படுத்தலாம். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.
வழி 4 - ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
வழி 5 - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.
வழி 6 - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு சாறு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தண்ணீர் மற்றும் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறை இந்த கலவையை தலைக்கு பயன்படுத்தும் முன்னும் நன்கு குலுக்கி பின் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதனை குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்...
திருட்டு திராவிடர்ஸ்...
ஒடுக்கப் பட்ட தலித் என்று அழைக்கப் படும் பறையர்கள் எல்லாம் சாக்கடை ஓரம், சாலை ஓரம் குடி இருக்க...
பெரியார் திடல் சுற்று வாழ வைக்க பட்டு இருக்கும் ஏழைகள் யார் யார் என பாருங்க நியாயம் மானவர்களே..
தியாகராய நகர் தமிழர் தலை நகரத்தில் தெலுங்கு பிராமணர்கள் மட்டும் குடி ஏறி வாழ திருட்டு திராவிடர்களால் உருவாக்கப் பட்ட பகுதி என்பதையும் மறுக்க முடியாது...
உணவே மருந்து - எப்போது?
நன்றாக பசித்த பின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம். ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.
அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்?
சாப்பிடும் போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.
எரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.
இரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.
நல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒரு போதும் உணவை வீணாக்காதீர்கள்...
தஞ்சை பெரிய கோவிலில் பிள்ளையார் வழிபாடும் நகரத்தார் தொடர்பும்...
பெருவுடையார் கோவிலின் மேற்குப்புற திருச்சுற்று மாளிகையின் உட்புறத்தில் உள்ள சிறு பிள்ளையார் முகப்பில் கல் வெட்டு உள்ளது.
அதில் இக்கோவில் பிள்ளையாருக்கு தினசரி அமுது படைத்தல் வேண்டும்..
தினம் ஒன்றுக்கு 150 வாழைப்பழங்கள் வேண்டும்.
இந்த அமுது படையல் நிகழ்வானது வருடம் முழுவதும் தடையின்றி நடக்க நகரத்தார்கள் விரும்பினார்கள்.
ஒரு வைப்புத்தொகை உருவாக்கப்பட்டது..
வாழைப்பழம் வாங்குவதற்காக வைப்பு தொகை அளிக்க, தஞ்சையின் முக்கிய நான்கு தெருக்களை சேர்ந்த நகரத்தார்கள் கொடுத்தார்கள்.
அவர்கள் முறையே 60 காசு., 120 காசு., 120 காசு., 60காசு.. மொத்தம் 360 காசுகள் நிவந்தனம் அளித்தனர்.
இந்த வைப்புத்தொகை 360 காசுகள்...
தஞ்சை சிறுவணிகர்களுக்கு ஆண்டுக்கு 12.5 % என்ற வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டது..
வருட வட்டியாக 45 காசுகள் ( 360*12.5% - 45) பெறப்பட்டது.
பிள்ளையாருக்கு அமுத படைக்க நாளொன்றுக்கு 150 வாழைப்பழங்கள் தேவை.
ஆண்டுக்கு 360 நாட்கள் எனத் தெரிகிறது.
ஆக... ஒரு வருடத்திற்கு தேவைப்படும்
வாழைப்பழங்களின் எண்ணிக்கை 360* 150 - 54000..
அன்றைய நாளில் ஒரு காசுக்கு 1200 வாழைப்பழங்கள் கிடைத்தன.
வட்டித்தொகையாக கிடைத்தது 45 காசுகள்.
எனவே 45*1200 - 54000 வாழைப்பழங்கள் கிடைத்தன.
பிள்ளையாருக்கும் தடையின்றி வருடம் முழுவதும் படையல் தொடர்ந்தது.
இச் செய்தியினை விரிவாக கூறும். கல் வெட்டு வரிகளை கீழே உள்ளது படித்து பாருங்கள்.
சமுத்திரம் போல் இருக்கும் தஞ்சை பெரிய கோவிலில்.. ஒரு சிறு துளிபோல் காணப்படும் பிள்ளையார் கோவிலுக்கு தினசரி நெய்வேத்தியம் செய்ய இவ்வளவு ஏற்பாடுகள் என்றால்..
தஞ்சை பெருவுடையாருக்கு பூஜைகள் நடக்க எவ்வளவு, எவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.?
நகரத்தாரின் செல்வாக்கு எப்படி இருந்திருக்கும் என நினைத்து பாருங்களேன்...
Subscribe to:
Posts (Atom)