16/09/2020
சிவ நாகம் மரத்தின் வேர்...
இது சிவ நாகம் என்ற மரத்தின் வேர்...
இது மரத்தில் இருந்து வெட்டி எடுத்தாலும் 10 முதல் 15 நாட்களுக்கு உயிருடன் பாம்பு போல் நெளிந்துக் கொண்டே இருக்கும்...
இது ஒரு அபூர்வ வேர்...
தனிமை எனும் இனிமை...
நாம் ஒருவராய் பிறந்தோம்..
ஒருவராய் இருக்கிறோம்..
ஒருமை நம் இயற்கை..
ஆனால்..
அதை நாம் உணர்வதில்லை..
இதை நாம் உணராததால்..
நாம் நமக்கே அந்நியமாகி விடுகிறோம்..
நம் ஒருமையை பிரதானமான அழகாகவும்..
வரமாகவும்..
அமைதியாகவும்..
நிம்மதியாகவும்..
வாழ்வோடு ஒன்றுபட்ட வழியாகவும் பார்க்காமல்..
நாம் ஒருமையை தனிமை என்று தவறாக புரிந்து கொள்கிறோம்..
இதனால் முழு வாழ்வின் அர்த்தமும் மாறிவிடுகிறது..
ஒருமைக்கு - அழகு, சிறப்பு, ஒத்திசைவு உண்டு..
தனிமை என்று உணர்வது ஏழ்மை, எதிர்மறை..
அது வருத்தப்பாட்டை உணர்த்தும்..
அந்த ஒருமையே தான் இறை..
இறையே தான் நாம் ஒவ்வொருவரும்..
ஒருமை என்றால் தனிமை அல்ல..
ஒன்றுபட்ட நிலை என்று பொருள்..
ஆழப் பெருங்கடல் ஆனாலும்..
அதற்கு அடித்தளமாக இருப்பது நிலம் என்பது போல..
நாம் அனைவரும் ஒருமையின் ஒன்றான இறைசக்தி என்ற நூலால் பினையப்பட்டு இருக்கிறோம்..
நூலுக்கு மூலம் பருத்தி..
அந்தப் பருத்திக்கு மூலம் அணுக்கூட்டு என்பது போல..
நம் ஒவ்வொருவருக்கும் மூலம் இறை சக்தியே அன்றி வேறில்லை..
மூலத்தோடு ஒன்றி இருக்கும் நிலையை உணர்ந்தால் நாம் அனைவரும் ஒன்றே..
மூலத்தை மறந்து ஞாலத்தொடு ஒன்றி இருந்தால்..
நாம் வெவ்வேறானவர்களாக உணர்வோம்..
ஞாலத்தி விட்டு..
மூலத்தோடு ஒன்றி..
ஒருமையின் நிலையை உணர்ந்தால்..
நாம் நித்ய புருஷன் என்ற நிறை உணர்வு கிட்டும்...
இருப்பது நிறை
அதுவே இறை
இறையே நாம்...
எதற்கு நீட் தேர்வை தமிழகம் ஏன் எதிர்க்கிறது ?
தமிழக மாநில வருவாயில் மாநில மக்கள் அளித்த வரியை கொண்டு உருவாக்கப்பட்ட...
32 மருத்துவ கல்லூரிகலில். 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில்
2018-2019 ல் 88+ 18= 116 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து உள்ளார்கள்..
இந்த சூழ்நிலை எதனால் ஏற்படுகிறது நீட் என்று வியாபார நோக்கம் கொண்ட தேர்வால்...
இது எவ்வளவு பெரிய அயோக்கிய தனம்😡
இலக்கியத்தில் தமிழர்நாடு...
கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?
தமிழ் :
தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது. முக்கியமானவை மட்டும் தருகிறேன்.
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58.
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50.
தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6.
தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார், கொள்ளார் - பரிபாடல் 9.
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் - பரிபாடல் 4.
தமிழர் :
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து - புறநானூறு 19. (இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்).
மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் - புறநானூறு 35 (தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்).
தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள் - பரிபாடல் 8 (தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்).
அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை - சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை.
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண - முத்தொள்ளாயிரம் 24.
தமிழர்நாடு :
தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31
இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்
தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம் - பரிபாடல் 9
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51 (தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்க மாட்டானாம். தனக்குத் தான் அது சொந்தம் என்பானாம்)
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக் - பதிற்றுப்பத்து 63 (செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து).
தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227 (தமிழகம் எனும் சொல்).
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த. - சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை).
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு - சிலப்பதிகாரம், வேனில் காதை (வரம்பு அதாவது எல்லை).
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை.
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை.
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை.
தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை - மணிமேகலை (தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி).
யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது...
2009 வரை திராவிடம் என்றால் என்ன என்ற கேள்வியே எழவில்லையே ஏன் ?
அந்த திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, தமிழரல்லாதவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் இந்த தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக உயர்ப் பொறுப்புக்களிலும் திட்டமிட்டு நிரப்பி வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதே எங்களுக்கு 2009க்கு பின் தான் தெரிய வருகிறது.
இதுவரை இந்த தெலுங்கு கன்னட மழையால் வந்தேறிகளின் ஆட்சியில் தலைமை செயலராக ஒரு தமிழர் கூட இருந்ததில்லை என்பதே இவர்கள் எப்படி தமிழின அழிப்பை மேற்கொண்டுள்ளனர் என்பதையும், தமிழின விரோதப் போக்கை காட்டுகின்றது..
தமிழர் உரிமை, உடைமை, உயிர் சார்ந்த போராட்டங்களுக்கு உதட்டளவில் மட்டுமே குரல் கொடுக்கும் இந்த தமிழரல்லாத திராவிடர்களாலேயே, போராட்டங்களின் வீரியம் குறைகிறது, போராட்டங்களில் இலக்கு திசை மாறிச் செல்கிறது.
தமிழகமே சாராயத்தை எதிர்த்து போராடியது; தெலுங்கர் வைகோபால்சாமி நாயூடு உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி போராட்டத்தி திசை திருப்பினார்.
இதைத் தான் இந்த தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் இத்தனை வருடங்களாக செய்து கொண்டு வருகின்றனர்.
கேரளா மலையாளிகளின் ஆளுமையின் கீழிருக்கும்..
ஆந்திராவும், தெலுங்கானாவும் தெலுங்கர்களின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..
கர்நாடகா, கன்னடரின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..
ஆனால், தமிழ் நாடு மட்டும் திராவிடருக்குப் பொதுவானது என்றால், எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதை தமிழச் சொந்தங்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது...
4G கதிர்வீச்சாலேயே பல உடல் உபாதைகள் புற்றுநோய், கருத்தடை போன்ற நோய்கள் வர வாய்ப்பிருக்கும் நிலையில். அதைவிட 100 மடங்கு சக்திவாய்ந்த 5G எப்படி பாதுகாப்பானதாக இருக்க முடியும்...
4Gயால் ஏற்படக்கூடிய உடல் பாதிப்புகளை விட 100 மடங்கு அதிகம்.
5G சோதனை ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து விழுந்தது நாம் அறிந்ததே.
5G நம்மை கண்காணிக்கும் பிக்பாஸ் மட்டுமின்றி, தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை உள்ள ராணுவ ஆயுதம். ஒரு முழு திரைப்படத்தை சில நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து விடலாம் என்று ஆசைப்பட்டு உயிரை விட்டு விடாதீர்கள்.
இதன் காரணமாகவே பல உலகநாடுகளில் 5G கோபுரங்களை எரித்து அழித்தும் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்...
ஜோதிடம் சூட்சுமங்கள்- சுக்கிரன் தரும் சுகம்...
ஜோதிடம் சுக்கிரனை நல்ல ஒளி கிரகம் என்கிறது.. பிரகாசமான சுக்கிரனின் ஒளி மனிதனுக்கு சுகம் , சந்தோசம், மகிழ்ச்சி, ரசனையை தருகிறது..
இன்பத்தை, காதலை கொடுக்கிறது.. ஆணையோ பெண்ணையோ கவர சுக்கிர பலம் வேண்டும்.. சுக்கிரனில்லையேல் சுகம் இல்லை... சொத்துக்கள் இல்லை வசதி வாய்ப்புகள் இல்லை.
லக்னத்துக்கு கேந்திரம் , திரிகோணத்தில் சுக்கிரன் இருந்தால் நல்ல வசதி , பண வரவு , சுகம், அழகான மனைவி, பெரிய வீடு, கார் எல்லாம் அமையும்...
சுக்கிரன் பாவருடன் சேராமல் பகை வீட்டில் இல்லாமல் இருக்கனும்...
லக்னத்துக்கு சுபரா இருந்தா சூப்பரா அமையும்.. லக்னத்துக்கு கேந்திரம் இன்னும் நல்ல பலத்தை சுக்கிரனுக்கு கொடுக்கும்... 4ல் சுக்கிரன் சுகவாசி.. நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி எதைப்பத்திய்டும் கவலைப்படாம வாழலாம் அப்பா மூலம் சொத்து கிடைச்சிடும் மாமனார் மூலமா சொத்து கிடைச்சிடும்.. மாமனார் க்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் மாமனார் பணக்காரரா இருப்பார் நிறைய பண உதவி சங்கடமில்லாம செய்வார்.. மனைவி அழகா அமைஞ்சிடும்.. நச்சரிப்பு இருக்காது.. ஊட்டி போகலாமான்னு கேட்டா.. சுவிட்சர்லாந்து போகலாம் வாங்கன்னு சொல்லும் ஆளாக இருந்தா எப்படி இருக்கும்.. அப்படி அமையும்.
7ல் சுக்கிரன் அழகு மங்கை மனைவியா வருமா என்பது விட மனைவி மையுமான்னு பல பேர்க்கு சந்தேகம்.. சுக்கிரன் காரக நாஸ்தி ஆச்சேன்னுதான்.. ஆனால் தாமதம் ஆனாலும் சொர்க்கம் காட்டும் மனைவி அமையும்... பங்காளி சொத்து எதிர்பாராம இவருக்கு கிடைக்கும் கூட்டாளி சம்பாஹிச்சு இந்தாப்பா உன் பங்குன்னு வீட்டுக்கே வந்து பெரிய அமவுண்டை கொடுப்பார்..
பத்தில் சுக்கிரன் தந்தை பணக்காரர்... அப்பா சொத்தே பல கோடி மூணு தலைமுறை சாப்பிடலாம்னு ஊரார் சொல்லுமளவு வசதி இருக்குமான்னு கேட்டா சுக்கிரன் எந்தளவு வலிமையா இருக்கோ.. 9ஆம் அதிபதி வலிமையை பொறுத்து அப்படி அமையும்.. மிதுன லக்னம் சனி 9ல் ஆட்சி.. பத்தில் சுக்கிரன் உச்சம் என்றால் அவருக்கு இப்படி அமையும். தந்தையால் பெரும் அனுகூலம்.. ராஜாவீட்டு கன்னுக்குட்டி...
சுக்கிரனுடன் சேரும் கிரகம் சுப கிரகங்களாக இருந்தால் அதுவும் நிறைய அள்ளிக்கொடுக்கும்.. 4,5 ஆம் அதிபதிகள் சேர்க்கை 1,4 ஆம் அதிபதிகள் சேர்க்கை,1,9 அதிபதிகள் சேர்க்கை,10,11 ஆம் அதிபதிகள் சேர்க்கை, 5,11 அதிபதிகள் சேர்க்கை, 4,2 அதிபதிகள் சேர்க்கை , 2,5 அதிபதிகள் சேர்க்கை எல்லாம் மிக்கப்பெரிய யோகங்கள்.. எக்காரணம் கொண்டும் இவர்களுடன் 6,8,12 ஆம் அதிபகள் கூடக்கூடாது எல்லாம் மொத்தமா போயிடும்..
சுக்கிரனுடன் பாம்பு கிரகங்கள் சேர்ந்தாலும் தவறு.. .பணம் கிடைப்பது கடினம்.. சனி, செவ்வாய், சூரியன், சேர்ந்தாலும் அவ்வளவு சிறப்பல்ல.. ஆதிபத்தியம், காரகத்துவம் நன்றாக இருந்தால் தவறில்லை.. ஆனாலும் பாவ கிரகத்துடன் சிறுபாதிப்பை தராமல் இருக்காது..
சுக்கிரன் நீசமானாலும் ,சுக்கிரன் கேதுவுடன் இருந்தாலும் பணம் வருவதில் தடை இருக்கும்.. சுக்கிரன் 6,8ல் இருந்தாலும் கடன் பிரச்சினை உண்டாக்கும்..
சுக்கிரன் கெடாமல் இருப்பதே சுகம் தரும் சொத்து தரும் இன்பம் தரும். சுக்கிரன் வலுத்தவர் சுகவாசி.. சுக்கிரன் கெட்டவர் சாமியார். ரசனை இருக்காது எந்த சுகமும் அனுபவிக்க முடியாது.. சதா நேரமும் அலைந்து கொண்டிருப்பர்...
நான் படித்த உளவியலில் இருந்து ஊக்குவித்தல் (Motivation) பற்றி தெரிந்துக் கொள்வோம்...
ஊக்குவித்தல் (Motivation) என்ற சொல் இலத்தின் மொழிச் சொல்லான mover or motum எனும் சொல்லில் இருந்து உருவானது.
இச்சொல்லிற்குச் ‘செயல்படு’ அல்லது ‘செயல்பாட்டிற்கு உட்படுத்து’ என்று பொருள்.
எந்த ‘ஒரு செயல்’ ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவையையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்றதோ, அச்செயலே ‘ஊக்குவித்தல்’ எனப்படுகிறது..
.
மாஸ்லோ என்ற உளவியல் அறிஞர் ஊக்குவித்தல் என்பது ‘ஒரு தொடர் செயல்’, ‘முடிவுறாதது’, ‘மாறுபடக் கூடியது’ மற்றும் ‘கடினமானது’ என்று கூறுகிறார்..
மேலும் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உரிய குணம் என்றும் குறிப்பிடுகிறார்.
ஊக்கம் என்பது ஒரு மாணவனின் ‘உள்ளத் திட்பம்’. அது அவனுடைய குறிக்கோளை அடைய அகத்தூண்டுதல் காரணியாகச் செயல்படுகின்றது. ஒரு மாணவன் தனது வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைய கற்றல் மிக அவசியமானது...
அரசு, நீதித்துறை, இராணுவத்தை விமர்சிப்பது தேசதுரோகம் அல்ல - உச்ச நீதிமன்றம் நீதிபதி...
கொலைகாரன் இறை வழிபாட்டு தளத்தை இடித்தவன்...
ரயிலுக்கு தீ வைத்தவன்..
இந்திய ஒன்றியமேங்கும் மதத்தை வைத்து மத கலவரத்தை உருவாக்குவவன்...
இதன் சுதேசி பழங்குடி இன மக்களுக்கு எதிரான பாசிச வெறி பிடித்தவன்...
அரசு நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிக்கு விற்று கையூட்டு வாங்கும் கேடுகெட்ட மற்றும் பொய் புரட்டுகளை மூலதனமாக வைத்து ஆட்சிக்கு வந்தவர்களின்...
கீழ் இயங்கும் அரசு நிர்வாகம் எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா மேன்மை தாங்கிய நீதியரசர்களே...
புலன்கடந்த ஆற்றல் என்றால் என்ன?
நாம் புலன்களுக்கு எட்டாத காரியத்தை செய்யும் போது அதை நாம் சித்து என்றும் புலன்கடந்த ஆற்றல் என்றும் கூறுவோம்.
உதாரணமாக தண்ணீரில் நடப்பது, காற்றில் எழும்புவது, கண்ணை கட்டிக் கொண்டு படிப்பது, எங்கோ நடப்பதை இங்கிருந்தே பார்ப்பது, மனதை படிப்பது இப்படி பல உள்ளது.
இவை எல்லாமே மனித மூளையின் உச்சபட்ச செயல்பாடே ஒழிய வேறில்லை. நம் மூளையின் பயன்பாடு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டால் அவை புலன்களுக்கு கட்டுபடாது.
அதை எப்படி வளர்த்துக் கொள்வது?
எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்.
Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்.
ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது?
நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள் தான் அவை.
அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்.
தயவு செய்து இனி படுத்த பிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்து விடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகி விடும்.
உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்து விட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.
அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்.
ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?
நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது.
சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது. அதனால் நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்.
வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே.
ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும். பிரம்மம் பூமியில் கலக்கும் அதாவது முகூர்த்தம் ஆகும் நேரமே பிரம்ம முகூர்த்தம்...
பல்லவர் கட்டிய திருப்பதி...
திருப்பதி கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கல்வெட்டு ஆய்வு 1920 இல் மஹந்த் ப்ரயாக்தாஸ் என்பவரால் தொடங்கப்பட்டது.
ஆனால் திருப்பதி வரலாறு என்றாலே நினைவுக்கு வந்து நிற்பவர் சாது சுப்பிரமணிய சாஸ்திரி ஆவார்.
1922 லிருந்து 1933 வரை திருப்பதி வட்டாரத்தில் 1,150 கல்வெட்டுகளை இவர் மொழிபெயர்த்துள்ளார்.
இதில் பெரும்பாலானவை தமிழ் மொழியில் உள்ளன.
அதற்கு அடுத்ததாக கன்னட கல்வெட்டுகள் உள்ளன.
தெலுங்கு கல்வெட்டுகள் சிலவையே...
கி.பி.830 ஆம் ஆண்டைச் சேர்ந்த பல்லவர் விஜயதந்தி வர்மன் என்பவரது கல்வெட்டே மிகப் பழமையானது.
மேற்கண்ட தகவல்கள் 2009 ஆம் ஆண்டு திருப்பதி முதல் பிரகாரத்தின் உட்பகுதி தங்கத் தகடுகளால் மூடப்பட இருந்தபோது 80 கல்வெட்டுகள் மறைக்கப்பட இருப்பதாக [தலைப்பு: Gold coat to hide Tirumala carvings (Sep 22, 2009)] டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் உள்ளவை ஆகும்.
கோவிலின் இதயப் பகுதியான இதில் இருக்கும் இந்த 80 கல்வெட்டுகளிலும் 55 தமிழ், 15 கன்னடம், 10 தெலுங்கு கல்வெட்டுகள் என தமிழே அதிகம்.
இதில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பழமையான பல்லவர் கல்வெட்டும் மறைக்கப்பட்டது.
எதை மறைத்தாலும் சாது சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியுள்ள நூல்கள் இன்றும் திருப்பதி தமிழர்களுக்குச் சொந்தம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.
படம்: 1930 இல் S.Subrahmanya Sastri வெளியிட்ட Early inscriptions எனும் நூலில் இடம்பெற்றுள்ள பல்லவர்காலத் தமிழ்க் கல்வெட்டு பற்றிய பக்கம்...
தமிழகத்தில் பிறமொழியினர் பரவல்...
1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு 1961 இல் வெளிவந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு ஆவணத்தில் [Census of india 1961 vol ix A] கொடுக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதி மொழி வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட வரைபடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
எல்லைப் புறத்தில் வேற்றின மக்கள் இருப்பது இயல்புதான்.
அப்படிப் பார்த்தால் மலையாளிகள் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை (இன்றைய நிலை தெரியவில்லை).
இதில் நாம் கவலைப்படவேண்டிய விடயம் எல்லையைத் தாண்டி உட்பகுதி வரை குடியேறியுள்ள கன்னடர் பற்றியும் ஊடுருவி மறுமுனை வரை செறிவாக குடியேறியுள்ள தெலுங்கர் பற்றியும்தான்.
நமது மாநிலம் அமைந்த போது நமது எல்லைப் பகுதிகள் பெரும்பாலானவற்றை இழந்தோம்.
அப்படி நாம் அறுதிப் பெரும்பான்மை யாக இருந்த பகுதி மட்டுமே தமிழகமாக ஆனது.
அதிலும் உட்பகுதியில் குடியேற்றம் 1961 லேயே இந்த அளவு இருப்பது அப்போதே கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனென்றால் நாம் இழந்த பகுதிகள் அனைத்துமே அந்நியர் குடியேற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் இழந்தவை தான்.
குறிப்பாக சிங்களவர் இப்படி குடியேறித்தான் நமது நிலத்தை முழுதாக ஆக்கிரமித்தனர்...
Subscribe to:
Posts (Atom)