நாம் ஒருவராய் பிறந்தோம்..
ஒருவராய் இருக்கிறோம்..
ஒருமை நம் இயற்கை..
ஆனால்..
அதை நாம் உணர்வதில்லை..
இதை நாம் உணராததால்..
நாம் நமக்கே அந்நியமாகி விடுகிறோம்..
நம் ஒருமையை பிரதானமான அழகாகவும்..
வரமாகவும்..
அமைதியாகவும்..
நிம்மதியாகவும்..
வாழ்வோடு ஒன்றுபட்ட வழியாகவும் பார்க்காமல்..
நாம் ஒருமையை தனிமை என்று தவறாக புரிந்து கொள்கிறோம்..
இதனால் முழு வாழ்வின் அர்த்தமும் மாறிவிடுகிறது..
ஒருமைக்கு - அழகு, சிறப்பு, ஒத்திசைவு உண்டு..
தனிமை என்று உணர்வது ஏழ்மை, எதிர்மறை..
அது வருத்தப்பாட்டை உணர்த்தும்..
அந்த ஒருமையே தான் இறை..
இறையே தான் நாம் ஒவ்வொருவரும்..
ஒருமை என்றால் தனிமை அல்ல..
ஒன்றுபட்ட நிலை என்று பொருள்..
ஆழப் பெருங்கடல் ஆனாலும்..
அதற்கு அடித்தளமாக இருப்பது நிலம் என்பது போல..
நாம் அனைவரும் ஒருமையின் ஒன்றான இறைசக்தி என்ற நூலால் பினையப்பட்டு இருக்கிறோம்..
நூலுக்கு மூலம் பருத்தி..
அந்தப் பருத்திக்கு மூலம் அணுக்கூட்டு என்பது போல..
நம் ஒவ்வொருவருக்கும் மூலம் இறை சக்தியே அன்றி வேறில்லை..
மூலத்தோடு ஒன்றி இருக்கும் நிலையை உணர்ந்தால் நாம் அனைவரும் ஒன்றே..
மூலத்தை மறந்து ஞாலத்தொடு ஒன்றி இருந்தால்..
நாம் வெவ்வேறானவர்களாக உணர்வோம்..
ஞாலத்தி விட்டு..
மூலத்தோடு ஒன்றி..
ஒருமையின் நிலையை உணர்ந்தால்..
நாம் நித்ய புருஷன் என்ற நிறை உணர்வு கிட்டும்...
இருப்பது நிறை
அதுவே இறை
இறையே நாம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.