01/01/2018

இயற்கைக்கு மாறுவோம்...


சீயக்காய், அரப்பு போட்டு குளிக்க சொன்னது கூந்தல் வளர இல்ல,‍ கொசுவை ஒழிக்க.. முன்னோர்கள் சொன்ன எக்கோ சிஸ்டம்...

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தான் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும்.

ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.

துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால்  தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை திண்ணும்.

சீயக்காய், அரப்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன.

ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .

ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு  ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை.

அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது . முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.

இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை அவர்களைக் கொன்றழிக்கும்...

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1000 - 1174.
இரண்டாம் படம் காலம் 1174 - 1324.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra...

போதும் உன் நாடகம் மராட்டிய கன்னட ரஜினி...


தன் படத்திற்கான சீட்டின் விலையை 1000 2000 ரூபாயாக விற்கும் போது இல்லாத நேர்மை..

தன் கடைக்கு வாடகை கொடுக்காத போது வராத நேர்மை..

25 ஆண்டுகளுக்கு முன் தன் திருமண மண்டபத்தில் வரும் வருமானம் முழுவதும்.. என்னை வாழ வைத்த தமிழர்களுக்கு செலவழிப்பேன் என்று சொல்லிட்டு.. இன்றுவரை 1 ரூபா கூட செலவு செய்யாத போது வராத நேர்மை...

அரசியல்வாதி ஆன பின்பு மட்டும் வருமா....?

பாஜக பினாமி மராட்டிய கன்னட ரஜினி...


பொதுவாக கார்ட்டூனிஸ்ட்டுகளுக்கென்று சில கிறுக்குத்தனமான புத்தி உண்டு. சமயங்களில் அவர்களின் கிறுக்கல்கள் அப்படியே பலித்துவிடுவதும் உண்டு.

இந்த பதிவில் இருப்பவையும் அப்படி பலிக்கலாம்..

இந்தியாவில் இருக்கும் பிற எந்த மாநிலத்தை விடவும் தமிழகம் எப்போதும் தனித்துவமானது. அந்த வகையில் ஜெயாவின் மர்ம மரணமும்..

அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கருணாநிதியின் மர்ம மவுனம் என தமிழகம் தற்போது மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது.

ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒரு புதிய மாற்றம் வரும். அப்படிதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி திராவிட இயக்க அரசியலும் ஓட்டரசியலும் எழுச்சியுடன் கிளம்பியது.

ஓபனீங் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா பினிசிங் சரியில்லயேப்பா.. என்ற வடிவேலுவின் தத்துவத்தின் படி, திராவிடம் பேசிய கொள்கைகளுக்கு நேர் எதிராக பயணித்ததன் விளைவு தற்போது மரணத்துக்கு முந்தைய மூச்சிழுப்பில் இருக்கிறது திராவிட ஓட்டரசியல் .

திருவாளர் திருக்குவளை முத்துவேலரின் மகன் கருணாநிதி 2009ல் ஊழலில் திளைத்ததற்கு பதில் உபகாரமாக ஈழத்தில் தமிழினத்தை பலி கொடுக்க துணை நின்று திராவிட ஓட்டரசியலுக்கு முடிவு எழுதிவிட்டு மவுனமாகிவிட்டார்.

இந்துத்துவ அரசியலுக்கு பிற எந்த மாநிலத்தையும் விட தமிழகத்தை கைப்பற்ற வேண்டியது முக்கியமான செயல்திட்டம்.

ஜெயாவின் மரணத்திற்குப்பின் அதற்கான வேலைகளை மிக தீவிரமாக தங்களுடைய அதிகாரத்தை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக அடிமைகளை பழையபடி தரையில் புரண்டு கும்பிடு போட வைக்கும் அதிகாரத்துடன் இருந்தவர் சசி. ஜெயாவின் மரணம் முடிந்த சில நாட்களில் நீதிமன்ற தீர்ப்பு வந்தது. உள்ளே தள்ளினார்கள். அது எப்படி ஜெயா இருக்கும் வரைக்கும் அந்த தீர்ப்பு வரவில்லை என்றெல்லாம் என்று நாம் கேட்கவில்லை.

அடுத்து தினகரன்..

பொதுவாக லஞ்சம் கொடுக்கும் போது தான் பரஸ்பரம் இருவரையும் கைது செய்வார்கள். ஆனால் இங்கு யாருடனோ பேசினார்.. முயற்சி செய்தார் என்று சொல்லி கதையை முடித்து விட்டார்கள்.

மோடியின் அரசியல் ஒரு சர்வாதிகாரத்தன்மை கொண்டது. அங்கு ஜனநாயகத்தன்மை என்பதற்கெல்லாம் பேச்சு இல்லை. வேண்டுமானால் கண்ணீர் விட்டு கதறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுப்பாருங்கள்.

இப்படியான சூழலில் தமிழகத்தை தங்களுடைய கைப்பிடியில் வைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் களேபர சூழலில், ஒருவேளை தேர்தல் வந்தால், நடக்கும் நிகழ்வுகளால் (கவனிக்க நடக்கும் நிகழ்வுகளால்..)

திமுக பிசாசே பரவாயில்லை என்று மக்கள் தேர்வு செய்துவிடுவதற்கான வாய்ப்பும் உண்டு என்பதால் அப்படியான ஒரு சூழல் வருவதை பாஜக விரும்பவில்லை. அதே சமயம் 2009க்குப்பின் உருவான தமிழர் அடையாள அரசியலும் அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

ஆக மன்னார்குடி கும்பலின் முக்கிய தலைகளை உள்ளே தள்ளிவிட்டால் மற்ற செம்மறி ஆடுகளை வருமானவரித்துறை, சிபிஐ என மஸ்தான் பொம்மைகளை வச்சு வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது திட்டம்.

பன்னீர் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பது அல்லது ஓபிஎஸ் இபிஎஸ் அணியை மிரட்டி ஒன்றாக்கி கைக்குள் வைத்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வது ஒரு திட்டம்.

இரு குரூப்பையும் மோதவிட்டு விளையாடுவதுபோல், கூடவே திமுக கூடாரத்திலும் அழகிரி ஸ்டாலின் கனிமொழி என இருக்கும் குழுக்களையும் மோதவிட்டு தமிழக குட்டையை குழப்பி மீன் பிடிப்பது மற்றொரு திட்டம்.

அடுத்த முக்கியமான திட்டங்களில் ஒன்று ரஜினி..

ஜெயா கருணா என்று இரண்டு முக்கியமான தலைமைகள் இருந்ததாலும் அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அறிந்து வைத்திருந்ததால், அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை தள்ளி வைத்திருந்த ரஜினியை கட்சியில் இழுத்து அவரை முதல்வராக்குவதன் மூலம் மீண்டும் தமிழர்களை சினிமா அரசியலுக்குள் வைத்திருப்பது பெரும் திட்டம்.

அதற்கு ஏற்ப ரஜினியும் தனது பழைய சங்கத்து ஆட்களை தயார் படுத்தும் வேலைகளை செய்து வருகிறார் என்கிறார்கள்..

ஆக கடைசிவரைக்கும் ஸ்டாலின் முதல்வர் நாற்காலியை வேடிக்கைதான் பார்க்க வேண்டுமா என்றெல்லாம் கேட்டு எரியுற வயிற்றில் பெட்ரோலை ஊற்றாதீர்கள்.

ஆனால் ஒன்று இனிவரும் காலம் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் அவ்வளவு இனிப்பானது அல்ல என்பது மட்டும் நன்கு தெரிகிறது..

– கார்ட்டூனிஸ்ட் பாலா...

5-5-17 அன்று எழுதப்பட்ட கட்டுரை இது...

தமிழில் உயிர் எழுத்து எத்தனை என்று ரஜினியை சொல்ல சொல்லுங்க பாப்போம் ? இவரு தமிழ்நாட்டை ஆளப்போறாரா - ரஜினி அறிவிப்பு குறித்து சீமான்...


ஆலிவ் எண்ணெய் உடல்நல நன்மைகள்...


நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால் தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்...

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்...

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்...

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்...

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்...

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்...

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (ஓய்ல்வே ஆயில்) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்...

ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்; அவரது துணிச்சலான முடிவுக்கு எனது பாராட்டுக்கள்: பாஜக தமிழிசை...


பாஜக வின் மத அரசியலை தமிழகத்தில் தணிப்பதற்காக உருவாக்கப்படும் நபர் தான் மராட்டிய கன்னடன் ரஜினி...

பாஜக வின் அடிமை தான் மராட்டிய கன்னட ரஜினி என்று ஊருக்கே தெரியுமே...


ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு...


For Every action, there is an equal and opposite reaction...

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்..

பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.

பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.

தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.

பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பி வருகிறது" பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்து கொண்டிருக்கும்.

இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.

பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமையாக்கி தண்டிக்கிறது.

அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.

நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்.

பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது.

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது. செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது.

செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.

நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்...

தமிழனுக்கு மட்டுமே தமிழன் வாக்கு... வந்தேறிகளை வச்சி செய்வோம்...


தமிழா.. தை ஒன்றே நம் புத்தாண்டு...


தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்...

மாசியில் மங்களம் சூடிடும்..
புது வரவுகள் பொங்கிடும்...

பங்குனியில் ஊரெங்கும் திருவிழா..
தெருவெங்கும் தேரோட்டம்...

சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க..
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்...

வைகாசியில் வைபோகம்..
கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்...

ஆனியில் உச்சிவெயில் தணியும்..
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்...

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்..
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்...

ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்..
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்...

புரட்டாசி விரதம்..
மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும்...

ஐப்பசி மழை அடை மழை..
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்...

கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு..
ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும்...

மார்கழி குளிரில்..
வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்...

தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் நன்றாக வாழ வேண்டும், தமிழன் மட்டும் சாக வேண்டுமா?


வால்பாறையில் உள்ள இந்த அணை காமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையின் பெயர் நீராா் அணை;

இந்த அணையில் இருந்து கேரளாவிற்கு அதிகப்படியான தண்ணீர் அளவு திறந்து விடப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையை விட மிக அதிகமாக யாருக்கும் தெரியாமல் இந்த திராவிட அரசுகள் செய்துக் கொண்டிருக்கிறது...

தேவைப்படுவோர் இந்த விபரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம்..

நமக்கு தண்ணீர் தரமறுக்கும் கேரளா அரசுக்கு தமிழகத்தின் திராவிட அரசு செய்த ஒப்பந்தத்தை விட மறைமுகமாக இன்று வரை அதில் அதிகப்படியான தண்ணீரை தந்துக் கொண்டிருக்கிறது.

தமிழனின் இளச்சவாயதனத்தில் இதுவும் ஒன்று..

திருட்டு திராவிடத்தின் இருட்டு வேலைகளில் இதுவும் ஒன்று...

ஐ.நா சபையும் இலுமினாட்டி களும்...


அமைதிக்காக போராட கூட நம்மை விட மாட்டார்கள்...

251 வயது வரை உலகில் வாழ்ந்த மனிதன் - நம்பினால் நம்புங்கள்...


உலகில் ஒருவர் 251 வருடங்கள் வாழ்த்துள்ளார் என்றால் நம்பமுடிகிறதா உங்களால் ?

நம்பித்தான் ஆகவேண்டும்..

சீனாவைச் சேர்ந்த லீ “சிங் யூன்” எனப்படும் நபரே இவ்வாறு பல்லாண்டு காலம் உலகில் வாழ்ந்து காட்டியவர்.

இவரது பிறப்பு ஆண்டு தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்த போதும் இறுதியில் இவரது பதிவேட்டின் படி 1677 இல் பிறந்தார் என கண்டறியப்பட்டுள்ளது.

இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 23 மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 1928 இல் இவர் இறந்துள்ளாத ஒரு தகவல் தெரிவித்த போதிலும் விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் இவர் 1933 ம் ஆண்டு இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் தனக்கு 71 வயதாக இருக்கும் போது சீன இராணுப்படையில் இணைந்து அங்கு ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவரது ஆயுளின் ரகசியம் பற்றி ஆய்வு செய்த டாக்டர்கள் குறிப்பிடுகையில்...

இவர் யோகா போன்ற பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளமையால் இது சாத்தியப்பட்டுள்ளதாக..

இதுமாத்திரம் இன்றி இவர் ஆயுளை அதிகரிக்க கூடிய உடல் ஆரோக்கியத்துக்குரிய குறித்த சில மூலிகைகளையும் உட்கொண்டு வாழ்ந்ததாக குறிப்பிட்டார்கள்....

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடல் எளிதில் பருமனாகும்...


தமிழர்களின் முப்பாட்டன் படை முகாம்...


நம் முப்பாட்டன் முருகன் படையோடு சென்று முகாமிட்டு கடல்வழி வந்த படையெடுப்பை முறியடித்த இடமே செந்தூர் ஆகும்.

யார் இந்த முருகன்?

முருகன் என்பவரின் இயற்பெயர் குமரவேல் பாண்டியன்.

இவர் தமிழ் அரசன்.

அழகாக இருந்ததால் முருகன் என்ற பெயர் பெற்றார்.

இவர் திருப்பதி முதல் கதிர்காமம் வரை படை முகாம் அமைத்து தமிழகத்தை பல்வேறு படையெடுப்புகளில் இருந்து காப்பாற்றினார்.

அந்த முகாம் இடங்கள்தான் இன்று படைவீடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

உயரமான இடத்திலிருந்து போரிடுவது தான் எளிது.

சன் சூ எழுதிய போர்க்கலை உயரமான இடத்தை முதலில் கைப்பற்று என்கிறது.

ஆகவே தமிழ் பேசும் மண் முழுவதுமே குன்றுகளில் முருகனின் படை முகாம்கள் இருந்தன.

அவை கோவில்களாக மாறி இன்று குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறார்.

இவர் இன்றும் போர்க்கடவுளாக வணங்கப்படுகிறார்.

இவர் அறிமுகப்படுத்திய வேல் என்ற ஆயுதம் புதுமையாகவும் எளிதாகவும் இருந்தது.

பல வெற்றிகளை ஈட்டித்தந்தது.

அதன்பிறகு வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கம் போர்முழக்கம் ஆனது.

அலகு குத்துதல், காவடி தூக்குதல், மலையேறுதல், தேரிழுத்தல், உண்ணாமல் நோன்பிருத்தல் போன்றவை போர் பயிற்சி வடிவங்கள் (தீ மிதித்தலும் கூட).

குற்றால மலை குறவர்களிடம் பெண் எடுத்து திருமணம் செய்தவர்.

மயில் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதனால் எப்போதும் மயிலொன்றை கூடவே வைத்திருப்பார்.

இவருக்கும் இந்து மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

5000 ஆண்டுகள் முன்பு இவர் உயிருடன் வாழ்ந்த மனிதர்.


சிவனும் இவரைப் போல உயிருடன் வாழ்ந்த மனிதர் தான்.

அவரது இயற்பெயர் ஆதிநாதன்.

சிவன் புலித்தோல் கட்டியவர்.

அதனால் அவர் நாகரீகம் தோன்றிய ஆரம்ப காலத்தைச் சேர்ந்தவர்.

முருகன் கோவணம் கட்டுபவர்.

அதனால் நூல் மூலம் ஆடை செய்ய ஆரம்பித்த நாகரீக காலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

இறந்த பிறகு தமிழ் மக்கள் வணங்கத் தொடங்கி விட்டார்கள்.

பக்தி என்ற உணர்ச்சி பின்னர் இதில் கலந்துவிட்டது.

முருகன் தமிழ்க் கடவுள்.. பொங்கல் தமிழர் பண்டிகை அதை அனைத்து தமிழரும் கொண்டாடுவது போல முருகனையும் அனைத்து தமிழரும் தமது மூதாதையராக ஏற்றுக் கொள்ள வேண்டும்...

தமிழகம் இந்தியத்திற்கு வரி கட்டுவதை நிறுத்தி விட்டு.. தமிழக நலனை காக்க செலவிட வேண்டும்...


இந்தியாவிலே தமிழகம் தான் அதிக வரி செலுத்தும் முதல் மாநிலமும் கூட...

நாம் செலுத்தும் வரி பணத்தை கூட நிவாரணத்திற்கு தருவதில்லை... பிறகு எதற்கு நாம் வரி கட்ட வேண்டும்...

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் தமிழினத்தின் நலனுக்கும் இதுவரை மத்திய அரசு எதாவது செய்துள்ளதா..

அப்படி இருக்க நாம் ஏன் வரி கட்ட வேண்டும்...

இந்தியா வை விட்டு தமிழகம் பிரிந்தால்.. இழப்பு தமிழர்களுக்கு அல்ல... துரோக இந்தியத்திற்கு தான்...

https://youtu.be/5zVJ_rqCRnU

கோண் மருதாணியினால் ஏற்ப்பட்ட விளைவு இது...


சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா.?


சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி.

இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.

வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு.

மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.

ஆனால் சனியனே என திட்டக்கூடாது...

இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி...

சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்..

மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்...

பாஜக மோடி சொன்னதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...


2018 நீயாவது நிம்மதி தருவாயா...


அன்பாய் வந்தாய்...
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய்..

உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய்..

பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய்..

ரமலான்  எனும் மனித
நேயத்தை கொடுத்தாய்..

தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய..

கிறிஸ்து  எனும் புனிதத்தை
கொடுத்தாய்..

அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை..

வருபவனை வரவேற்க - தடையில்லை..

ஆதலால்
அன்புடன் சென்றுவா..
உன் நண்பனை வரவேற்க..

Good bye 2017
Welcome 2018

2018 இனிதுடன் வருக..
தமிழனுக்கு தனி தமிழ்நாடு கிடைக்க
வழி செய்க...