26/08/2020
தமிழினமே விழித்துக்கொள்...
தேசியம் பேசவேண்டிய
காங்கிரஸ்காரரே கதறுகிறார்
என்றால் நிலைமை எவ்வளவு
மோசமாகிவிட்டது என்று தெரிகிறது...
இந்த இழிநிலைக்கு
எவரைக்குற்றவாளி ஆக்குவது?
தமிழகத்தலைவர்களின்
தரம் தெரிகிறதல்லவா?
பதவியும் பணமுமே குறியாய்க்கொண்ட
பகட்டுத்திருடர்கள் இவர்கள்..
அடிமைகளை இங்கு ஆட்சியில் வைத்துக்கொண்டு
ஆட்டம்போடும் வடநாட்டு பாஜக...
திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...
பிரசாந்த்கிஷோர் இருக்கும்வரை... தமிழர்களுக்கு கவலையே இiல்லை...
கைரேகை ஜோசியம் - வீடு,மனை யோகம்...
கைரேகை ஜோதிடம் பொறுத்தவரை மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரேகை வளரும் அல்லது மாறும் என்பார்கள்.. ஆணுக்கு வலது கை, பெண்ணுக்கு இடது கை என்பார்கள்.. ஆனால் இரண்டு கையையும் பார்த்து பலன் சொல்வதே சரி. கைரேகை மூலம், கல்வி, திருமணம், காதல், சொத்துக்கள் சேர்க்கை, நோய், கடன் போன்றவற்றை அறிய முடியும்.
செவ்வாய் மேடு, சுக்கிர மேடு, சந்திர மேடு,குரு மேடு, சனி மேடு என கவனித்து அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப,பலன் அறிய வேண்டும்.
கைரேகையில் அதிகம் பார்ப்பது ஆயுள் ரேகை எப்படி... கங்கண பொருத்தம் (கல்யாணம்) எப்படி என்பதுதான்..
சுக்கிர மேடு...
கட்டை விரலின் அடி பாகத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதியே சுக்கிர மேடு .சுக்கிரன் நல்லாருந்தா சொத்து சேர்க்கைக்கும், சுகத்துக்கும் குறைச்சலே இருக்காதே.சுக்கிர மேடு உப்பலாக இருந்து, அதில் அதிக கோடுகளும், குறுக்கு கோடுகளும் இல்லாமல் இருந்தால் சுக்கிரன் நன்றாக இருப்பதாக பொருள்.
குறுக்கும் நெடுக்கும் கோடுகள், புள்ளிகளுடன் வற்றலாக இருந்தால் சுக்கிரன் வலுவில்லை.. சொத்துக்களில் வில்லங்கம், வறுமை, கடன் உண்டாகும் என அர்த்தம்
செவ்வாய் மேடு...
சுண்டு விரலுக்கு நேர் கீழே சந்திர மேட்டுக்கு மேலே இருப்பது செவ்வாய் மேடு.நிலம்,மனை இவற்றுக்கு செவ்வாய் அதிபதி என்பதால், பூமி யோகம் பெற்றவர் கையில் செவ்வாய் மேடு பலமாக இருக்கும், மேலே சொன்னது போல குறையில்லாமல் இருக்கும்.
செவ்வாய் மேடும், சுக்கிர மேடும் நன்கு அமைந்து விதி ரேகை, சூரிய ரேகையும் நன்கு அமைந்து ஆயுள் ரேகையில் மேல்நோக்கிய கிளை ரேகை காணப்படும் வயதில் வீடு, மனை, வாகன யோகம் அமையும்.
ஒருவருக்கு சொத்துக்கள் சேர்க்கை அமையும் காலகட்டத்தில் (வயதுகளில்) குறிப்பிட்ட ரேகைகள் அழுத்தமாக தெளிவாக தோன்றும்...
திராவிடம் Vs தமிழ் தேசியம்...
வந்தேறிகளின் ஒற்றுமை..
சன்சூ என்ற போர்க்கலை நிபுணர் கூறுகிறார்.
எதிரி நாட்டுக்குள்ளே நம் படையினர் முன்னேற முன்னேற அவர்களிடையேயான ஒற்றுமையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்குமாம்.
நம் நாட்டு வந்தேறிகள் ஒற்றுமையுடன் நம்மை விட வேகமாகவும் துடிப்பாகவும் இருக்க இதுதான் காரணம்.
அவர்களுக்கு இது உயிரைக்காக்க ஓடும் ஒரு முயலின் போராட்டம்.
நமக்கு இது உணவுக்காக அதைத் துரத்தும் புலியின் போராட்டம்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
எனவே விழித்துக் கொள்ளுங்கள்...
திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...
இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..
அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..
தெலுங்கர்களை தமிழர்களாகவும்
தமிழர்களை திராவிடர்களாகவும்
சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்) செய்த சூழ்ச்சியே..
அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.
இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..
தமிழர்களாய் ஒன்றிணைவோம்..
ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...
வடுகர்களின் அறிவிக்கப்படாத போர்...
வடுகர்களின் பூர்வீகம் தெரியாவிட்டாலும் வேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தமிழ் மன்னர்கள் காட்டுமிராண்டிகளான வடுகர்களை கூலிப்படையாக வைத்திருந்தனர் என்பது மட்டும் தெரிகிறது.
(தமிழர்களான) நன்னர்களுக்கு அடங்கி விசுவாசமாக நடந்துவந்த (வடுகர்களான) கோசர்களுக்கு நன்னன் செய்த ஒரு வன்கொடுமையே, வடுகர்கள் தமிழர் மீது பகைகொண்ட தொடக்கப்புள்ளி.
ஆனால் வடுகர்கள் நேரடியாக அல்லாது மறைமுகமாக குறுக்கு வழியில் உறவாடிக் கெடுத்து தலைமுறை தலைமுறையாக தமிழினத்தின் மீது அறிவிக்கப்படாத போர் புரிந்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.
அந்த தொடக்கப்புள்ளி ஒரு பெண்கொலை.
நன்னனின் காவல்மரத்தின் (மாமரம்) ஒரு பழம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
அதை விபரம் தெரியாத ஒரு வடுகர் பெண் எடுத்து தின்றுவிடுகிறாள்.
இதற்கு மரணதண்டனை அளிக்கிறான் கொடுங்கோலனான நன்னன். வடுகர்கள் அவளது எடைக்கு எடை தங்கமும் அதோடு 81 யானைகளும் தருவதாகக் கூறி அவளை விடுதலை செய்யுமாறு கெஞ்சுகின்றனர்.
ஆனாலும் மனமிரங்காத அந்த கொடிய மன்னன் அந்த அப்பாவி பெண்ணைக் கொலை செய்கிறான்.
(புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் _பரணர், குறுந்தொகை 292)
அதன்பிறகு வடுகர்கள் ஒற்றுமையாகி சூழ்ச்சி மூலம் நன்னனை வீழ்த்தி அவனது காவல்மரத்தை வெட்டியெறிந்தனர்.
(நன்னன் நறுமா கொன்று
நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சி
_ குறுந்தொகை 73)
ஆனாலும் வடுகர் நெஞ்சில் இந்த கொலை ஆறாத வடுவாக பல தலைமுறைகள் படிந்திருந்தது.
நன்னர்களை வீழ்த்திய வடுகர்களைத்தான்..
நந்தர்களை வீழ்த்திய மோரியர் என்று வரலாறு பதிவு செய்கிறது.
பெரும் வல்லரசாக எழுந்த வடக்கு வடுகரான மோரியர் தென்வடுகர் உதவியுடன் தமிழர் மீது போர் தொடுத்தனர். ஆனால் மூவேந்தரின் கூட்டணிப்படையிடம் படுதோல்வி அடைந்தனர்.
அதன்பிறகு தமிழர்களை சுற்றிவளைத்து தோற்கடிக்க தென்னிலங்கைக்கு படையனுப்பி புத்தமதத்தைப் பரப்பி அங்கே சிங்களவரோடு கலந்து தமிழர்களுக்கு எதிராக சிங்களவரைத் தூண்டியபடி இருந்தனர்.
வடவடுகர் ஏற்படுத்திய மோரிய பேரரசு வீழ்ந்ததும் தென்வடுகரான களப்பிர காட்டுமிராண்டிகள் தமிழர் மீது படையெடுத்து வென்றனர். (இதுவே இருண்டகாலம் என்று கூறப்படுகிறது) களப்பிரர்க்கு அடங்கி சிற்றரசாக இருந்த பாண்டியர் கடுங்கோன் காலத்தில் கிளர்ச்சி செய்து வடுகர்களை தோற்கடித்து ஒழித்தனர்.
அதே நேரத்தில் வட இலங்கையில் இருந்து ஆண்ட பாண்டியர் மீது ஆண்டுகளாக பலமுறை போர்தொடுத்து போர்தொடுத்து இறுதியில் தாதுசேனன் என்ற மோரிய குடிவழி மன்னன் குறுக்கு வழியில் பாண்டிய மன்னர் இருவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களை 700 ஆண்டுகள் கழித்து ஈழத்தில் வீழ்த்தினான்.
ஆனாலும் சோழ அரசின் பேரெழுச்சி அனைவரையும் அடக்கி தமிழர் பேரரசாக எழுந்தது.
வடக்கே வடுகர்களை துவம்சம் செய்தது.
இலங்கையிலும் வடுகர்களை ஒழித்தது.
இராசராசனை எதிர்த்து தோல்வியடைந்த வடுகன் அம்மன்னனின் பிறந்தநாளில் விடுதலை அடைந்து அரசவையில் பாட்டுப்பாடி சோழ இளவரசியை பரிசாகப் பெற்று அவள் மூலம் பெற்ற மகனை (அநாபய சாளுக்கியன் அல்லது குலோத்துங்க சோழனை) சூழ்ச்சி மூலம் சோழ அரியணையில் அமர்த்தினான்.
கலப்பினமாயினர் சோழர். இலங்கையை சிங்களவர் மீண்டும் பிடித்தனர்.
பாண்டியநாடு தவிர தமிழ்மண் முழுதும் வடுகரால் ஆக்கிரமிக்கப்பட்டது.
அப்போது பாண்டிய பேரரசு மீண்டும் எழுந்தது.
வடுக படைத்தளபதியுடன் வந்த சேரனை முறியடித்து அரைவடுகரான சோழரை அடக்கி வடமேற்கு தமிழகத்தில் நுழைந்திருந்த வடுக ஒய்சளரை விரட்டியடித்து பல்லவ வம்சாவழி காடவரையும் தெலுங்கு சோழரையும் ஒழித்துஈழத்தையும் மீட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
முழுமையாக தமிழ்மண் ஒற்றையாட்சியில் மீண்டும் வந்தது.
ஆனால் வாரிசுரிமைப் போர்களால் பாண்டிய அரசு வலுகுன்றியது.
இதைப் பயன்படுத்தி வடக்கே ஆண்ட துருக்கிய மங்கோலிய சுல்தான்கள் தமிழகத்தில் பாதியை வென்றனர்.
அவர்களுக்குள்ளேயே உட்கலகம் நடந்தபோது வடுகர்கள் மீண்டும் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசாக நுழைந்தனர்.
துருக்கியரை வென்று பாண்டியரை அடக்கி தமிழகத்தை மீண்டும் கைப்பற்றினர்.
கண்டி சிங்களவருக்கு பெண்கொடுத்து அவர்களை மேலும் கலப்பினமாக்கி மீண்டும் தமிழருக்கு எதிராகத் தூண்டினர்.
(அதாவது மோரியர் காலத்தில் செய்ததை அப்படியே மீண்டும் செய்தனர்).
ஆங்கிலேயர் இங்கே நுழைந்ததும் அவர்களுக்கு அடிபணிந்து சிற்றரசாகத் தொடர்ந்த வடுக நாயக்கர்கள் அவர்கள் அகன்றதும் அவர்கள் உருவாக்கித்தந்த திராவிடம் எனும் பெயரால் மீண்டும் தமிழகத்தை ஆளத்தொடங்கினர். ஈழத்தில் சிங்கள பௌத்தம் எனும் பெயரால் தமிழர்களை ஒழிக்கத் தொடங்கினர்.
1958 ல் ஈழத்தில் வன்முறை தொடங்கியது.
1956 ல் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் விழுங்கப்பட்டன.
2009 ல் இனப்படுகொலை நடந்து இலங்கை முழுதும் விழுங்கப்பட்டு விட்டது.
2015 ல் இங்கே மண்ணோடு சேர்த்து தமிழினத்தை அழிக்க அணுவுலை மீத்தேன் ஹைட்ரோகார்பன் என நாசகாரத் திட்டங்கள் வடுகரால் தலைமேல் சுமந்து அழைத்து வரப்பட்டு தமிழ்மண் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முதலில் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழர் கூட்டணி அமைத்து மோரியரை விரட்டினான்.
அடுத்து கடுங்கோன் பாண்டியன் களப்பிரரை விரட்டியடித்தான்(அதன் பிறகு சோழர் எழுந்தனர்).
அடுத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நிலத்தை மீட்டான்.
தற்போது மீண்டும் வடுகம் ஹிந்தியரின் உதவியோடு தமிழர் மண்ணை சுற்றிவளைத்துள்ளது. விரைவில் வீழ்த்தவுள்ளது
இப்போது அதை முறியடிக்கப்போகும் தமிழர் தலைவன் யார்?
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?
மாரடைப்புக்கும் சூடான குடிநீருக்குமுள்ள தொடர்பு என்ன?
என்பதனை விளக்கும் விழிப்புணர்வு பதிவு...
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு...
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும்.
தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது.
குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்து விடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
பிறருக்கும் பகிருங்கள்...
விழிப்புணர்வுடன் இருப்போமேயானால், குறைந்தபட்சம் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்...
ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவை எதிர்த்த சுவாமி விவேகானந்தர்...
விவேகானந்தர் பெயரில் விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடியது...
ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர்.
இந்த விவேகானந்தர் யார்?
அவரின் ஒரு பக்கத்தை மட்டும் வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன்.
சுவாமி விவேகானந்தர் பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் அவர் எழுதியதை ஏன் இவர்கள் வெளிப்படுத்தவில்லை?
உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும்.
இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்?
அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்..
வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர்.
பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.
உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்..
பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.
மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன.
ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு..
ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்..
சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்..
பசுவதையும் - இந்துமதமும் குறித்து விவேகானந்தர் கருத்து..
தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை.
மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.
இந்துத்துவா வை சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர்...
இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தருக்கு விழாவை விசேடமாக நடத்துங்கள்..
இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை...
1953 சித்தூர் மீட்புக்கு தமிழகம் தந்த ஆதரவு...
17.05.1953 தேதியிட்ட இந்த 'செங்கோல்' இதழில் 'சித்தூர் கிளர்ச்சிக்கு ஆதரவு' என்ற தலைப்பு உள்ளது.
கீழே திருவண்ணாமலையில் நடந்த ஊர்வலத்தின் படம் உள்ளது.
சித்தூர் தமிழகத்துடன் இணைய 1953 மே மாதத்தில் தமிழகம் முழுவதும் ஆதரவான கூட்டங்கள் நடந்ததைக் குறித்து செய்திகள் மாவட்ட வாரியாக உள்ளன.
சென்னையில்,வண்ணையம்பதி (வாணியம்பாடி)யில் பொதுகூட்டம் நடந்தது.
திருச்சி நகரிலும் உறையூரிலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.
தஞ்சையில், திருத்துறைப்பூண்டியிலும் கும்பகோணத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.
சேலத்தில்,கொண்டாலம்பட்டி பொதுக்கூட்டத்தில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.
சித்தூரின் 6 தமிழ் தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைய தீர்மானம் இயற்றப்பட்டது.
கிச்சிப்பாளையத்திலும் சித்தூர் தினம் கொண்டாட்டமும், கிருஷ்ணகிரியில் 3மைல் நீள ஊர்வலமும் நடத்தப்பட்டன.
வட ஆற்காட்டில்,ஆம்பூரில் சர்வகட்சிக் கூட்டமும் கலவையில் கூட்டமும் திருப்பத்தூரில் ஊர்வலமும் நடந்தன.
மதுரையில்,பழனியில் ஊர்வலமும் மேலூரில் சித்தூர் தினக் கொண்டாட்டமும் நடந்தன.
சித்தூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
வள்ளிமலையிலும், அத்திமாஞ்சேரியிலும் பொதுக் கூட்டங்கள் நடந்தன.
திருத்தணியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலியில்,சங்கரநயினார் கோயிலில் (சங்கரன்கோயில்) கூட்டம் நடத்தப்பட்டது.
பம்பாயில்,தாராவியில் சித்தூர் தினம் கொண்டாடப்பட்டது.
ம.பொ.சி நடத்திய மண்மீட்பு அறப்போருக்கு தொடர்ச்சியாக ஆதரவு தந்த செங்கோல் எனும் இவ்விதழின் ஆசிரியர் ஆ.கோ. வெங்கட ராமானுஜன் என்று உள்ளது.
பெயரை வைத்தும் முகவரி திருவல்லிக்கேணி என்று இருப்பதை வைத்தும் இவர் பார்ப்பனத் தமிழர் என்று ஊகிக்க முடிகிறது...
திருட்டு திமுக உதயநிதியின் கேடுகெட்ட புத்தி...
திரு. தங்கவேல் மாரியப்பன் அவர்கள், தனது உன்னதமான முயற்சிகளின் மூலம் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றமைக்கு கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாதனைத் தமிழர், நம் சகோதரரை 'மாற்றுத்திறன் தம்பி' என்றழைத்து, அவர் சாதனையை மறைத்து, அவரின் ஊனத்தை சுட்டிக்காட்டி, இழிவு செய்த உதயநிதியின் ஆணவம் மாபெரும் கண்டனத்திற்குரியது...
தமிழகம் சில தகவல்கள்...
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)...
இடவொதுக்கீடு கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பெற்றுத் தந்ததா?
1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.
ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை..
அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).
1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.
ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.
ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான் (1925ல்).
1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதி வாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.
அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.
அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.
1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.
இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்).
அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.
ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.
சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.
அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.
ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.
ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.
ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.
அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசு வேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.
ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம் பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.
சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.
பிராமணர்கள் வெற்றி பெற்றதும் அது பொறுக்க முடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.
தாழ்த்தப் பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.
அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசி வரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.
கடைசி வரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.
கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.
திராவிடம் இதேபோல கடைசி நேரத்தில் புகுந்து முழு போராட்ட வரலாறையும் ஆட்டையைப் போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.
சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.
ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.
(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)
இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டு வருகிறது.
அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.
அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்று விட்டனர்.
ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.
நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia..
இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில் தான்.
முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.
இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர். குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.
தமிழர்கள் பதவி பெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.
(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில் நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)
வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.
திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து உருவாக்கியதும் ஆங்கிலேயரே.
அதனால் தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக் கூடாது' என்று கூறியது.
திராவிடம் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.
ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.
வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்து கிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.
திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது..
ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.
திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது. அது இன்றுவரை தொடர்கிறது.
திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?
சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?
சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.
திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.
அதன் ஒரு காட்சி தான் இடவொதுக்கீடு சாதனை.
இனியாவது உண்மையை உணருங்கள்...
தமிழ் இலக்கியங்களில் அறிவியல்...
உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.
அறிவியல், ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சிப் பெற்றுள்ளது.
எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை. இதனை உணர்ந்துதான் இன்றைய அறிவியலாளர்கள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.
இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறிய முடிகிறது.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு..
தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது..
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே”
(தொல்-1526)
என இயம்பியுள்ளார்.
இதில் மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,
‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
(தொல்-1526)
என வெளிப்படுத்தியுள்ளார்.
ஓர் அறிவுடையன
புல், மரம், செடி, கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,
‘புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1527)
இந்நூற்பா சுட்டுகிறது.
ஈர் அறிவுடையன
நத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,
‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1528)
என்ற நூற்பா இயம்புகிறது.
மூன்று அறிவுடையன
கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து, சுவையுணர்ந்து, மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,
‘சிதலும் எறும்பும் மூவறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1529)
என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.
நால் அறிவுடையன
‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து, சுவையுணர்ந்து, மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,
‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1530)
என்ற நூற்பா உணர்த்தும்.
ஐந்து அறிவுடையன
விலங்கினங்கள் அனைத்தும், விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,
‘மாவும் மாக்களும் ஐயறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1531)
இந்நூற்பா இயம்புகிறது.
ஆறு அறிவுடையன
மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர். இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,
மக்கள் தாமே ஆறறிவுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1532)
என்ற நூற்பா சுட்டுகிறது.
உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)
Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது. பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின. அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன. முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர். இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இவ்வுருமலர்ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;
ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)
உயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம். இது ஒருசெல் உயிரியாகும். இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது. தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிரிதல்..
ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன. பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது. இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.
பல செல் உயிரி..
ஒருசெல் உயிரியைப் புரோட்டோசோவா என அழைப்பது போல, பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர். பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம்.
1.முதுகுத்தண்டற்றவை, 2.முதுகுத்தண்டுள்ளவை.
முதுகுத்தண்டற்றவை..
கடற்பஞ்சு, புழுவினங்கள், நண்டு, சிலந்தி, நத்தை, நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும். தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை, மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன. இவை உற்றறிதலோடு, நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.
முதுகுத் தண்டுள்ளவை..
கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.
நில வாழ்; உயிரிகளை ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்.
ஊர்வன..
கரையான், எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர். இவை உற்றறிதல், சுவையுணர்வு, நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.
பறப்பன..
வண்டு, தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு, சுவை, நுகர்ச்சி, பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர். அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.
பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.
பாலூட்டிகள்..
விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர். அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.
மனித நிலை..
உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான். ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.
முடிவுரை..
தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.
செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.
செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.
அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது. இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.
தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது. இது தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது...
எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.
எழுபிறப்பு - நிற்பன, நெளிவன, தத்துவன, தவழ்வன, நடப்பன, கிடப்பன, பறப்பன என்பனவாம்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். – (குறள் – 0062)...
ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம் பார்த்துக் கொள்ளுங்கள்...
நட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்..
உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்...
இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு, மனவருத்தம், விவாகரத்து , குறை ஆயுள், குழந்தை இன்மை, அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.
இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம், கணபொருத்தம், யோனிபொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..
இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..
பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்...
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு.. இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்...
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம், இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது.. தேவகணம், மனுஷ கணம், ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம், மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.
மகேந்திரபொருத்தம்...
பெண் நட்சத்திரம் தொடங்கி, எண்ணும் போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது.. இதன் பலன் குழந்தை பாக்யம். ஆயுள் விருத்தி. இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், குரு நிலையை ஆராய வேண்டும்..
லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும். அதில் ராகு , கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிறதா என கவனிக்கவும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.
5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்.. இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்...
எட்டலை, பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம். தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு, குதிரை, சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்... அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்.. பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது......
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.. எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.. பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்.. ரோகிணிக்கு பூரம் அடங்கித்தான் போக முடியும்... நாய் , பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா. இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்...
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம், 3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம். 6 வது ராசி புத்திர நாசம், 7 வது உத்தமம். மாங்கல்யம், ஆயுள் விருத்தி, 8 வது அதிக புத்திர லாபம், 9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி, இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது.. அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.
ரஜ்ஜு பொருத்தம்...
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்.. அஸ்தம் சந்திரன் நட்சத்திரம். இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்.. மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமான பொருத்தம்.
27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு, பாத ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, என பிரித்திருப்பார்கள்.. கணவன், மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம், நஷ்டம், விபத்து என சொல்கிறது.. இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.
நட்சத்திர பொருத்தம் பார்த்தாலும் அவசியம் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது....
இருவருக்கும் லக்னத்துக்கு 7ஆம் இடம் சந்திரனுக்கு 7ஆம் இடம் , பார்க்கனும்..4ஆம் இடமாகிய ஒழுக்க ஸ்தானத்தை பார்க்கனும்.10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானம், 2 ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானம்... மாமனார் , மாமியார் ஸ்தானம், குடும்ப ஒற்றுமை, குணநலன் எப்படி என்ற விபரமெல்லாம் ஜாதகத்தில் தெளிவாக தெரியும். இருவருக்கும் என்ன திசை நடக்கிறது..? அந்த திசை யோகமான திசையா நஷ்டம் தரும் திசையா என்பதை ஆராய்ந்து செய்தால் தான் திருமணம் இனிக்கும்...
உதாரணமாக 27 நட்சத்திரங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன்...
இவற்றில் உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 3,5,7,12,21,25 வது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வந்தால் பிரிவு, மனவருத்தம், விவாகரத்து , குறை ஆயுள், குழந்தை இன்மை, அசுபம் போன்ற பலன்கள் ஏற்படலாம்.
இவை தவிர்த்த நட்சத்திரங்களில் முக்கியமான பொருத்தங்களான...,
தினபொருத்தம், கணபொருத்தம், யோனிபொருத்தம், ராசி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம்வர வேண்டும்..
இவை இல்லாதவை பொருத்தம் இல்லை..
பத்து பொருத்தங்களில் இந்த ஐந்து பொருத்தங்கள் மிக அவசியம்.
தினப்பொருத்தம்...
பெண் நட்சத்திரம் தொடங்கி ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வர,2,4,6,8,9,11,13,15,18,20,24,26 வது நட்சத்திரமாக வந்தால் தினப்பொருத்தம் உண்டு.. இதன் பலன் செல்வாக்குடன் வாழ்தல்,தம்பதிகள் ஒற்றுமை.
கணப்பொருத்தம்...
செல்வ வளத்துடன் வாழ்தல் குறிக்கும் பொருத்தம், இருவர் நட்சத்திரமும் ராட்ஷ கணமாக இருத்தல் கூடாது.. தேவகணம், மனுஷ கணம், ராட்ஷகணம் என பிரிக்கப்பட்டிருக்கும்..தேவ கணம்-தேவ கணம், மனுஷ கணம்-மனுஷ கணம் பொருத்தம் உண்டு.
மகேந்திரபொருத்தம்...
பெண் நட்சத்திரம் தொடங்கி, எண்ணும் போது ஆன் நட்சத்திரம் 1,4,7,10,13,16,19,22,25 வது நட்சத்திரமாக வரக்கூடாது.. இதன் பலன் குழந்தை பாக்யம். ஆயுள் விருத்தி. இந்த பொருத்தம் வந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், குரு நிலையை ஆராய வேண்டும்..
லக்னத்துக்கு 5ஆம் இடத்தையும் ராசிக்கு 5ஆம் இடத்தையும் பார்க்கனும். அதில் ராகு , கேது உட்பட ஏதேனும் பாவ கிரகங்கள் இருக்கிறதா என கவனிக்கவும். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனும், பெண் ஜாதகத்தில் குருவும் நன்றக இருந்தால் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்காது.
5ஆம் இடத்து அதிபதி பாவ கிரக தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தகுந்த ஜோதிடரின் துணையுடன் ஆராய வேண்டும்.. இது சரியில்லாவிட்டால் மகேந்திர பொருத்தம் இருந்தாலும் குழந்தை பாக்யத்தில் பிரச்சினை இருக்கும்.
யோனி பொருத்தம்...
எட்டலை, பத்தலை பிரச்சினை வரக்கூடாது என்றால் இந்த பொருத்தம் அவசியம். தாம்பத்தியம் செக்ஸ் திருப்தியை பற்றி சொல்லக்கூடிய முக்கியமான பொருத்தம்...
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஆடு, குதிரை, சிங்கம் என யோனி பிரிக்கப்பட்டிருக்கும்... அதற்கு பகையான யோனியும் சொல்லப்பட்டிருக்கும்.. பகை யோனி நட்சத்திரங்களை சேர்க்க கூடாது......
பாம்பு என ரொகிணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.. எலி என பூரத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.. பாம்பு, எலியை கண்டால் விடுமா விழுங்கிவிடும்.. ரோகிணிக்கு பூரம் அடங்கித்தான் போக முடியும்... நாய் , பூனை என சொல்லப்பட்டிருக்கும் நட்சத்திரங்களை சேர்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்குமா. இதெல்லாம் கவனிக்க வெண்டும் அதுதான் யோனி பொருத்தம்.
ராசிபொருத்தம்...
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2 வது ராசியானால் மரணம், 3 வது ராசி துக்கம்,4 வது ஏழ்மை,5 வது ராசி வைதவ்யம். 6 வது ராசி புத்திர நாசம், 7 வது உத்தமம். மாங்கல்யம், ஆயுள் விருத்தி, 8 வது அதிக புத்திர லாபம், 9 வது செளமங்கல்யம்,10 வது ஐஸ்வர்யம்,11 வது சுகம்,12 வது ஆயுள் விருத்தி, இருவருக்கும் ஒருவருக்கொருவர் ராசியோ லக்னமோ மறையக்கூடாது அதாவது 6,8,12ல் இருக்க கூடாது.. அப்படி இருந்தால் ஒத்துப்போகாது.
ரஜ்ஜு பொருத்தம்...
ரோகிணி சந்திரன் நட்சத்திரம்.. அஸ்தம் சந்திரன் நட்சத்திரம். இப்படி ஒரே கிரகத்தின் நட்சத்திரங்களை இனைக்க வேண்டாம்.. மாங்கல்ய பொருத்தம் என்னும் இருவரது ஆயுளை பற்றி சொல்லும் முக்கியமான பொருத்தம்.
27 நட்சத்திரங்களையும் சிரசு ரஜ்ஜு, பாத ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு, உதர ரஜ்ஜு, என பிரித்திருப்பார்கள்.. கணவன், மனைவி நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தால் கண்டம், நஷ்டம், விபத்து என சொல்கிறது.. இரண்டு நட்சத்திரங்களும் வேறு வேறு ரஜ்ஜுவில் இருந்தால் பொருத்தம் உண்டு.
நட்சத்திர பொருத்தம் பார்த்தாலும் அவசியம் ஜாதகத்தை ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது....
இருவருக்கும் லக்னத்துக்கு 7ஆம் இடம் சந்திரனுக்கு 7ஆம் இடம் , பார்க்கனும்..4ஆம் இடமாகிய ஒழுக்க ஸ்தானத்தை பார்க்கனும்.10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானம், 2 ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானம்... மாமனார் , மாமியார் ஸ்தானம், குடும்ப ஒற்றுமை, குணநலன் எப்படி என்ற விபரமெல்லாம் ஜாதகத்தில் தெளிவாக தெரியும். இருவருக்கும் என்ன திசை நடக்கிறது..? அந்த திசை யோகமான திசையா நஷ்டம் தரும் திசையா என்பதை ஆராய்ந்து செய்தால் தான் திருமணம் இனிக்கும்...
கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி...
மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு
தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது.
ஒரு உதாரணம்..
கொரிய நாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி.
அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.
இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள்.. நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.
அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி.
அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அவர்களினன் அயோக்கியத்தனத்தால் அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பி விட்டார்கள்.
ஆனால் உண்மையை அறிய.
பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது..
அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம்.
அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.
இதற்கேற்றார் போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.
இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.
செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.
தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை...
பெரியார் எனும் கன்னடர் ராமசாமி நாயக்கர் வாயில் இருந்து உதிர்ந்த வார்த்தைகள்...
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"
"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"
"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."
"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்." - பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:
பொதுவுடைமை போராளி சீவானந்தம்:
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார். பா.சீவானந்தம்.
அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகளை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."
நாவலர் சோமசுந்தர பாரதியார்:
"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.
1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.
அண்ணல் தங்கோ:
'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.
உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:
"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.
"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.
குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"
தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
"நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.
வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:
பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
ம.பொ.சி:
தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!
இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.
தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.
இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.
அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.
தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி...
விசிக திருமா விற்கு.. மாநில சுயாட்சி என்றால் என்னவென்று முதலில் தெரியுமா.?
விசிக தொடங்கி இதுவரை தமிழராக ஒரு முறை கூட தனித்து நின்று தேர்தலை சந்தித்தது இல்லை...
திராவிடத்தின் காலையே நக்கி பிழைப்பு நடத்தும் விசிக..
மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் தான்..
அனைத்து மாநிலமும் அந்தந்த மொழிக்காரன் ஆளும் போது...
இங்கு எழுச்சி தமிழன் என்று சொல்லிக் கொண்டு தானும் ஆள நினைக்காமல்..
தமிழனாக தமிழ் தேசியக் கொள்கை கொண்டவர்களையும் இன வெறியர்கள் என்று சொல்லிக் கொண்டும்...
திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைத்து தமிழனை அடிமையாக வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்ற வேலையை மட்டுமே செய்துக் கொண்டிருப்பதும்.. எல்லாமே மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவது விசிக வும் தான்...
அதை போலவே.. தமிழ் தேசியத்தை உருவாக்கி தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்று... போராடிக் கொண்டிருக்கும்.. பாமக மற்றும் நாதக வை.. எதிர்த்து திராவிடத்துடன் கூட்டு வைத்து அழிக்க நினைக்கும் இந்த விசிக திருமா...
திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைக்க நினைக்கும் விசிக திருமா.. மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் மட்டுமே...
குறிப்பு : விசிக திருமா என்றுமே தமிழ்தாட்டை தமிழன் தான் ஆளணும் என்று சொல்ல மாட்டார்... காரணம் புகைப்படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்...
https://youtu.be/qh5hiRLqcNs
கன்னட ஈ.வே. ராமசாமி நேர்மையான இறை மறுப்பாளரா?
நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா (விடுதலை 1.1.1962).
ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46. அந்த முதல் இதழில்...
இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.
குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கி வைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்...
அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்.
நன்றி:- முதல் ”குடியரசு” சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...
Subscribe to:
Posts (Atom)