08/05/2024
மாமன் வீரவல்லாள தேவன்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ''மாற வர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனின்'' (கி.பி.1308 - 1342) கல்வெட்டு ஒன்று :-
''மாமடி வல்லாள தேவன் காணிக்கை''
என்று குறிப்பிடுகிறது. ஓய்சாள வேந்தர் மூன்றாம் வீரவல்லாள தேவர் அவர்களை, பாண்டிய வேந்தன் ஸ்ரீ வல்லபன் அவர்கள் ''மாமன்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்சாளர்களும் பாண்டியர்களும் மிக நெருங்கிய உறவினர் ஆவர்.
ஓய்சாள வேந்தர் மூன்றாம் வீர வல்லாள தேவர் அவர்களை, கி.பி.16 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணமானது ''வன்னிய குல மன்னன்'' என்று குறிப்பிடுகிறது.
கூடல் இருவாட்சி புலவர் என்பவரால் இயற்றப்பெற்று அரியலூர் மழவராயர் அரசவையில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற, வன்னியர் புகழ் பாடும் நூலான ''திருக்கைவளம்'' என்ற நூலானது, ஓய்சாள வேந்தர் மூன்றாம் வீரவல்லாள தேவர் அவர்களை ''வன்னிய வம்சத்தவர்'' என்று குறிப்பிடுகிறது.
எனவே, மிக நெருங்கிய உறவினர்களான ஒய்சாளர்களும் - பாண்டியர்களும் வன்னிய வம்சத்தவர் என்று தெரியவருகிறது...
மீட்டான் அப்பனான.. சோழேந்திர சிங்க.. சம்புவராயன்...
சோழப் பேரரசு என்ற பெருமாளிகையைத் தாங்கி நின்ற தூண்களாக விளங்கிய சிற்றரசுகளில்* *சம்புவராய மன்னர்களும் ஒருவர் ஆவர்.
சோழ சக்கரவர்த்தி இரண்டாம் ராஜாதிராஜ சோழன் அவர்களை "எங்கள் வம்சத்தவர்" என்று காஞ்சிபுரம்* *ஆர்ப்பாக்கம் கல்வெட்டில் குறிப்பிட்ட சம்புவராயர்கள், சோழர்கள் மேற்கொண்ட பல* *போர்களில் பங்குபெற்றனர் என்பதாகும்.
மாபெரும் வீரர்களாக சம்புவராயர்கள் விளங்கினர் என்பதை சோழர் காலத்திய விரிஞ்சிபுரம் கல்வெட்டு* *நமக்கு மிகத் தெளிவாக தெரிவிக்கின்றது.
மூன்றாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் :
"செங்கேணி விராசனி அம்மையப்பன் தனிநின்று வென்றான் தன் வசி காட்டுவான்* *அழகிய சோழனான எதிரிலி* *சோழ சம்புவராயனேன்* "
என்பவர் குறுநிலமன்னராக இருந்தார்.
மாவீரனான இவர் "போரில் தனித்து நின்று பல பேரை வெற்றிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்" ஆவார். மேலும் இவர்* " *எதிரிகளுக்கு பேரிடி முழக்கம் போன்றவர்" (விராசனி = The thunderbolt to heroes) என்பதை* *கல்வெட்டு தெரிவிக்கின்றது..
மேலும் இச் சம்புவராய மன்னர், விழுப்புரம் பிரம்மதேசம் கல்வெட்டில் :
"செங்கேணி மங்கல மீட்டான் அம்மையப்பன் மீட்டான் அப்பனான சோழேந்திர சிங்க சம்புவராயன்"*
என்று குறிப்பிடப்பட்டார்.
இவர் போர்புரிந்து "மங்கலம்'' என்னும் ஊரை மீட்டிருக்கிறார்" என்று தெரியவருகிறது. எனவே இவர் "மீட்டான்* *அப்பன்" என்றும் "சோழேந்திர சிங்கம்'' (சோழர்களின் சிங்கம்) என்றும் குறிப்பிடப்பட்டார்கள்.
இத்தகைய மாவீரர்களின் தியாகத்தாலேயே, சோழப் பேரரசு தென்கிழக்கு* *ஆசியநாடுகள் வரை தன்னுடைய வெற்றிக் கொடியை நிலைநாட்டியது என்பதாகும்...
வில்லவன் மாதேவி...
(சேர குல அரசி)
பெரும்பாணப்பாடி என்று வழங்கப்பெற்ற திருவல்லம் கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று (1092 A.D) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது...
"திருவல்லமுடைய மஹாதெவர்க்கு நீலகங்கன் அச்சலவீமன் அரைசர் தலைவன் என் மகள் பிள்ளையார் வீரசொழதெவர் நம்பிராட்டியார் வில்லவன் மாதெவியார்க்காக வைத்த திருநன்தாவிளக்கு" (S.I.I. Vol-III, No.59).
அச்சல குலமான சேரர் குலத்திற்கு தலைவன் (பீமன் = Head) போன்றவனும், அரசர்களுக்கு எல்லாம் தலைவனானவனுமான நீலகங்கன் அவர்கள், தன் மகளும், அரசர் வீரசோழ தேவர் (மருமகன்) அவர்களின் பட்டத்தரசியுமான வில்லவன் மாதேவியாருக்காக திருவல்லத்தில் உறையும் இறைவனுக்கு திருநந்தா விளக்கு வைத்தார் என்பதை கல்வெட்டு தெரிவிக்கிறது.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனும், சாளுக்கிய வேங்கி நாட்டின் அரசருமான வீரசோழ தேவர் அவர்களின் பட்டத்தரசி "வில்லவன் மாதேவி" என்ற சேர குல அரசியாருக்காக, அவரது தந்தையார் நீலகங்கன் என்பவர் திருவல்லம் கோயில் இறைவனுக்கு திருநந்தா விளக்கு வைத்தார்.
இந்த நீலகங்கன் என்பவரை மேற்குறிப்பிட்ட திருவல்லம் கல்வெட்டு "அச்சல குலமான சேரர் குலத்திற்கு தலைவன்" என்றும் "அரசர்களுக்கு எல்லாம் தலைவரானவர்" என்றும் குறிப்பிடுகிறது. இந்த குறிப்பின் மூலமாக இவர் "சேர குலத்திற்கு தலைவராக விளங்கினார்" என்று தெரியவருகிறது.
இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக இவரது மகளின் பெயர் "வில்லவன் மாதேவி" என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வில்லவர் என்ற பெயரானது சேரர்களை குறிப்பிடும் பெயராகும். சேரர்கள் வில்லவன் என்று சான்றுகளில் குறிப்பிடப்பட்டனர் என்பதாகும்.
930 வருட பழமையான இந்த அரச சமூக கல்வெட்டு சாசனமே "சேர வம்சத்தவர் யார்" என்பதை உறுதிசெய்யும் மிக முக்கியமான சான்றாகும். இதுவே அடிப்படை சான்றாக ஏற்கப்படும்.
நீலகங்கரைய மன்னர்கள் சோழர் கால கல்வெட்டுகளில் "வன்னிய நாயன்", "பள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இடங்கை வலங்கை புராணம் இவர்களை "வில் வீரபராக்கிரமர்", "சம்பு குல வேந்தன்" என்று குறிப்பிடுகின்றன.
குறிப்பு : சேரர் மற்றும் பாண்டியரும் "ஒரே மரபினர்" ஆவர். பல்லவரும் இதே மரபினர் ஆவர்...
Post Credits - Jaya Varman
சாளுக்கியர் யார்.?
சாளுக்கியர் என்போர் "வேள் குலத்தவர்" ஆவர். அதாவது, சங்க தமிழ் இலக்கியம் கூறும் தொன்மையான "வேளிர் குலத்தவர்" ஆவர். வேளிர் என்போர் பண்டைய துவாரகையை அரசாட்சி செய்த க்ஷத்திரிய வம்சத்தவர் ஆவர்.
இந்த தொன்மையான சாளுக்கியர் குலத்தில் தோன்றி, சோழர்களின் குலதெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுடிசூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழன் அவர்களை கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்கள் "இருக்கு வேதம் கூறும் முதற்குலம்" (இருக்குமுதல் ஆரண முதற்குலம்) என்று குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் கூறியுள்ளார்.
அதாவது, தில்லையில் திருமுடிசூடும் பிச்சாவரம் சோழர்களின் முன்னோரான இரண்டாம் குலோத்துங்கச் சோழன் தோன்றிய சாளுக்கிய குலம் என்பது தொன்மையான "ரிக்வேதம் கூறும் முதன்மையான குலம்" என்று புலவர் ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்.
இத்தகைய தொன்மையான சாளுக்கியர் குலத்தில் தோன்றிய சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜராஜ சோழனை, அவருடைய மாமன் (மூன்றாம் ராஜராஜ சோழனின் அக்கா வீட்டுக்காரர்) ஆளப்பிறந்த பள்ளி வம்சத்து காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் அவர்கள் "வன்னிய மணாளன்" (வன்னிய மாப்பிள்ளை) என்று செஞ்சி அண்ணமங்கலம் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, யாககுண்டத்தில் தோன்றிய தொன்மையான வேளிர் வம்சத்து சாளுக்கியர் என்போர் "வன்னிய வம்சத்தவர்" (பள்ளிகள்) என்று அடிப்படை அரச வம்ச சான்றுகளால் (Repeat) அடிப்படை அரச வம்ச சான்றுகளால் தெரியவருகிறது.
இதெல்லாம் சும்மா சொல்கின்றனர் என்று சிலர் நிச்சயமாக நினைக்கலாம். ஏனென்றால், திணைக்குடியினர் உள்ளிட்ட பலர் தங்களை சாளுக்கிய/சோழ வம்சம் என்று கூறிவருவதால் யார் சொல்வது உண்மை என்று பலருக்கு தெரியாமல் போகிறது.
இந்த துயரிய நிலையினை போக்க "அடிப்படை அரச வம்ச சான்றுகள்" பயன்படுகின்றன என்பதாகும்.
சோழப் பெருவேந்தன் இரண்டாம் ராஜாதிராஜ சோழனை, பல்லவராயன்பேட்டை சோழர் கால கல்வெட்டு ஒன்று "உடையார் விக்கிரம சோழனின் பேரன்" (கொள்ளு பேரன்) என்று கூறுகிறது. இந்த சான்றானது "அடிப்படை அரச வம்ச சான்றாகும்".
சாளுக்கிய வம்சத்து விக்கிரம சோழனின் கொள்ளு பேரன் இரண்டாம் ராஜாதிராஜ சோழனை, காஞ்சி ஆர்ப்பாக்கம் சோழர் கால கல்வெட்டு ஒன்று, வன்னிய குலத்தைச் சேர்ந்த சோழர் படை தலைமைத் தளபதி எதிரிலிச் சோழ சம்புவராயரின் வம்சத்தவர் என்று மிகத் தெளிவாக கூறுகிறது. இந்த சான்றானது "அடிப்படை அரச வம்ச சான்றாகும்".
"அடிப்படை அரச வம்ச சான்றுகள்" மட்டுமே தென்னிந்திய அரச வம்ச வரலாற்றை தீர்மானிக்கும் சான்றுகள் ஆகும்.