14/10/2018

உலகம் முழுக்க சிங்கமே வாழாத இடத்தில் இருக்கும் மனிதர்கள்...



" சிம்மராசி"
" சிம்ம சொப்பனம் "
" சிம்மாசனம் "
" சிங்கத்தின் கொடியை உபயோகப்படுத்துவதும் "
" சிங்கத்தின்மேல் அமரும் பெண்கடவுளை அம்மன் தமிழ் கடவுள் "

என பல நிகழ்வுகளும் பேச்சுகளும் அந்த நிலத்திற்கு சம்பந்தம் இல்லாத விலங்கை பற்றி பேசுகிறதே  என யோசிக்காத மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டு நான் பல ஆழமான உண்மைகளை பேசி கொண்டு இருக்கிறேன் என உணர்கிறேன்.....

நான் உட்பட பலரும் அன்றாட வாழ்க்கைக்கே ஓடி கொண்டு இருக்கும் சூழலில் மக்களுக்கு புரிதலோ விழப்புணர்வோ இப்போதைக்கு வர போவதில்லை என தோன்றுகிறது....

கிறிஸ்தவ பள்ளியில் தசராவிற்கு மாலை அணிந்த மாணவர்கள் வெளியேற்றம் : தூத்துக்குடியில் பரபரப்பு...


தூத்துக்குடி கிறிஸ்தவ பள்ளியில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிவித்து வந்த மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக லட்சகணக்கில் பக்தர்கள் கூடும் இடம் குலசை முத்தாரம்மன் கோவிலாக‌ உள்ளது. தசரா விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். தூத்துக்குடி சின்னக்கோவில் வளாகத்தில் உள்ள‌ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குலசைக்கு மாலை அணிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றார்களாம். அவர்களை பள்ளி நிர்வாகம் வலுக்கட்டாயமாக பள்ளியிலிருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தகவலறிந்த தூத்துக்குடி மாநகர இந்து  முன்னணி நிர்வாகிகள் ராகவேந்திரா தலைமையில் பெற்றோர்களுடன் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், தலைமை ஆசிரியர், மாலை அணிவித்த மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க சம்மதித்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது...

தமிழனின் பாரம்பரிய உணவு இன்று கார்ப்பரேட் கையில் நவீன முறையில்...


நாளை நமது விவசாயமும் கார்ப்பரேட் கையில் செல்லும் முன் விழித்துக் கொள்வோம்...

புதனும் - கேதுவும் பொதுப்பலன்...


ஜாதகத்தில் வித்தைக்காரகன் / புதன் மற்றும் ஞானக்காரகன் / கேது ஆகிய இருவரும் ஏதாவதொரு விதத்தில் தொடர்பு கொண்டு வலுத்திருப்பவர்கள் புராதண பழமை விரும்பிகள்.

சந்தேகப் பேர் வழிகளான இவர்கள், யாரையும் அவ்வளவு எளிதாக நம்பி விடமாட்டார்கள்.

தவிர, அதிபுத்திசாலிகளான இவர்கள், மற்றவர்கள் கூறும் அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை ஏற்க மறுப்பர்.

விவாத விரும்பிகளான இவர்களிடம், விவாதம் அல்லது தர்க்கம் செய்வது விழலுக்கு இறைத்த நீருக்குச் சமமாகும்.

ஏனெனில், எப்போதும் தன் கருத்தே பிரதானம் எனப் பேசும் இவர்கள் மற்றவர்களின் கருத்துக்கு துளிகூட செவிசாய்க்க மாட்டார்கள்.

கம்யூனிச செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இவர்களை சிந்தனைச் சிற்பிகள் அல்லது பகுத்தறிவாதிகள் எனவும் கூறலாம்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

"யாழ்-யாழி" தவறான புரிதலா?

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றமாக இருக்க வேண்டும்.

பைந்தமிழரின் யாழ் இசைக் கருவியின் வகைகள் கீழே...



யாழின் இசை கலவைகளை துல்லியமாக அறியப் செதுக்கிய சிற்பங்களா, சிங்கம், பாம்பு, யானை, யாழிகள்?

…தொடர்ந்து ஆராய்வோம்

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஒரு சாமானியனுக்கு பண்டைய நாகரீகங்களின் விசித்திரமான கல்வெட்டுகள், சிலைகள். பல வழிகளில் ஒரு கலையாக தான் விளங்கிக் கொள்ளப்படலாம்.

ஆனால் சில நேரங்களில் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்களுக்கு, அந்த விசித்திரமான,மர்மமான கல்வெட்டுகள்,சிலைகள் மனித அவையங்களுக்கு ஒத்துவராத வேற்றுகிரக உயிரினங்களை தான் வெளிப்படையாக தெளிவாக வெளிப்படுத்துவதாக கூறுவார்கள்..

பிரஞ்சு பொலினேசியாவில் மார்க்குசான் ஆர்க்கிபிலாக்கிலுள்ள மிகப்பெரிய தீவு தான் "நிக்கி ஹ்வா" ஆகும். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த தீவுப்பகுதியை அடைந்தார்கள், இந்த தீவில் சுமார் 2,000 ஆண்டுகள் முன்பு பழமையான பாலினேசியர்களால் ஒரு குடியேற்றப்பட்டது ஏற்ப்பட்டது. இந்த கலாச்சாரம் குள்ளமான தலைகள், பெரிய கண்கள் கொண்ட மனிதர்களை சித்தரிக்கும் சிற்பங்களில். புதிரான பல படைப்புகளை விட்டுச் சென்றது; அவர்களின் தோற்றம் நாம் பழக்கமாகிவிட்டது சாம்பல் வேற்றுகிரக வடிவத்தை  நினைவூட்டுவதாக உள்ளது.

சில சிற்பங்கள் மனித மற்றும் வேற்றுகிரக அம்சங்களின் கலவையை வெளிப்படுத்தும் கலப்பினங்களை பிரதிபலிக்கின்றன. நிக்கி ஹுவில் கல்வெட்டில் இரண்டு அயல் இனங்களைக் கொண்டுள்ளதாகக் உள்ளன: அவைகள் ஊர்வன மற்றும் சாம்பல் பிறவிகள். (Reptilian and grey).

இந்த பழங்கால கலை படைப்புகள் வேற்றுகிரக இனங்களுக்கிடையான மனித சம்பந்தமான ஈடுபாட்டிற்க்கு ஒரு சான்றாக இருக்க வேண்டும். பண்டைய வேற்றுகிரக இனங்கள் இந்த மக்களுடன் ஏதோவொரு தொடர்பை ஏற்படுத்தி கொண்டதால், அவர்கள் அந்த வித்தியாசமான உருவங்களை கட்டியெழுப்ப நிர்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

வழக்கு என்னவாக இருந்தாலும், இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டும்: தென் மார்க்ஸ்சியன் பேச்சுவழக்கில், அந்த தீவை "டென் ஃபெனுவா" என்காடா என்று அழைத்தனர், அதாவது "மனிதர்களின் நிலம்" என்று அழைக்கப்பட்டது. ஒருவேளை அவர்கள் நிலத்தில் வேற்றுகிரக உயிரினங்களின் அதிக்கப் படியான வருகைக்கு எதிராக "டென் ஃபெனுவா" என்ற இந்த சொல்லை பயன்படுத்தி இருக்கலாம்...

எச்சரிக்கை மனிதர்கள் வாழும் இடம்...

இன்டர்நெட் சேவை முடங்கலாம் - சைபர் தாக்குதலைத் தடுக்க ஐ.சி.ஏ.என்.என் எடுக்கும் 48 மணி நேரம்...


உலகம் முழுவதும் இருக்கும் இன்டர்நெட் பயனாளர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போக நேரிடும் என 'ரஷ்யா டுடே' செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கும் இணையத்தின் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், அவற்றைப் பராமரிப்பதற்காகவும் ICANN (Internet Corporation of Assigned Names and Numbers) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இணையதளங்களின் பெயர்கள், கணினிகளின் IP முகவரிகள் போன்றவற்றை இந்த அமைப்புதான் நிர்வகித்துவருகிறது. தற்போது, ICANN இணையத்தின் DNS சிஸ்டத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக, அடுத்த 48 மணி நேரத்துக்கு சில மாற்றங்களைச் செய்ய உள்ளது. குறிப்பாக, சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக கிரிப்டோ கீ-க்களை மாற்றியமைக்கவிருக்கிறது. இந்த நேரத்தில், இணையத்தின் பெரும்பாலான சர்வர்களில் இந்தப் பணி நடக்கும் என்பதால், உலகம் முழுவதும் இருக்கும் இன்டர்நெட் பயனாளர்கள், அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளங்களைப் பார்வையிடுவதிலோ அல்லது இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கோ சிக்கல் ஏற்படலாம்.

இந்தப் பிரச்னை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்படாது. பராமரிப்புப் பணிகளைப் பொறுத்து சில குறிப்பிட்ட நாடுகள், இணையதளங்கள் அல்லது சேவைகளில் மட்டும் சிக்கல் ஏற்படும். மொத்தத்தில் இது உலகம் முழுவதும் 1 சதம் பயனாளர்களை மட்டுமே முழுமையாகப் பாதிக்கும். பிறருக்கு, சில சேவைகளில் மட்டும் தொய்வு ஏற்படலாம். மொத்த பராமரிப்புப் பணிகளும் முடிந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். மேலும், இந்த மாற்றத்திற்குப் பெரும்பாலான இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயாராகிவிட்டன. ஒருவேளை 48 மணி நேரத்திற்குப் பின்னும் பிரச்னை தொடர்ந்தால், அது இன்டர்நெட் சேவை நிறுவனங்களின் DNS சிஸ்டத்தில் இருக்கும் சிக்கலாக இருக்கலாம்...

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - சேலத்தில் நடைபெற்ற கேள்விக்கென்ன பதில் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் கன்னடன் கமல் தகவல்...


திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையக் கூடிய வாய்ப்பு உண்டு - அந்த கூட்டணி உடையும் பட்சத்தில் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் - கமல்.

அதிமுக மற்றும் திமுகவை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் - கமல்...

ஆயுர்வேத மருத்துவம்...


ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா..

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


தமிழ் கடவுள் முருகர் பெயரும்.. திருட்டு திராவிட தெலுங்கர்களும்...


முருகர் தொடர்பான பெயர் வைத்திருந்தால் அவர்கள் தமிழர்கள் என்ற கருத்து நம்மிடம் காணப்படுகிறது.

இது உண்மையில்லை.

தெலுங்கர் பலரும் தமிழ்க் கடவுள் முருகனின் பெயரை வைத்துக்கொண்டு திரிகின்றனர்.

தெலுங்கர் கருணாநிதியின் தந்தை பெயர் முத்துவேலர் என்பதாகும்.

கருணாநிதி சாதியைச் சேர்ந்த சிவகார்த்திகேயன் தெலுங்கரே ஆவார்.

சுப்பிரமணியன் சாமி தெலுங்கு படைத்தளபதி ராமப்பையன் வம்சாவளி ஆவார்.

தற்போது ஸ்டாலினை ஆட்டிப்படைக்கும் ஏ.வ.வேலு ஒரு நாயுடு ஆவார்.

காங்கிரஸ் முக்கியப்புள்ளி திருச்சி வேலுச்சாமி ஒரு தெலுங்கர் ஆவார்.

இந்த வரிசையில் திருமுருகன் காந்தி ஒரு தெலுங்கு - மலையாளக் கலப்பு ஆவார்.

குமரன், சரவணன், செந்தில், வேல், பழனி, கார்த்திகேயன், சுப்பிரமணியன், கந்தசாமி, மயில், வள்ளி என முருகர் சார்பு பெயரை வைப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தாம்.

ஆனால் பெயரை வைத்தே இனத்தை முடிவு செய்ய வேண்டாம்....

நிதர்சணம் புரிந்து வெளியில் வரப்பாருங்கள்...


உங்களுக்கான பாதையை உருவாக்க தொடங்குங்கள்...

அடிமைக்கட்டமைப்பை உடைத் தெரிவோம்...

உங்களுக்கான தற்சார்பை உருவாக்க முயற்சியுங்கள்...

அபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள்.. என்ன செய்கிறார் தெரியுமா...


கள்ளக்காதலுக்காக சென்னை குன்றத்துரை சேர்ந்த அபிராமி தனது இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சிறை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

இந்நிலையில், புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியைப் பார்த்தால் சக பெண் கைதிகள் தெறித்து ஓடிவிடுவதாகவும், யாருமே அவருடன் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் அபிராமி மன அழுத்தித்தில் தவித்து வருவதாகவும், எப்போதுமே அழுது கொண்டே இருப்பதால் கவுன்சிலிங் கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன...

ஆத்திரம் அவசரம்னா ஒருத்தனும் உதவிக்கு வரமாட்டானுக...


உன் பிரச்சனைய நீ பாத்துக்கோ எங்களால வரமுடியாதுன்னு நேரடியாவே சொல்லுவானுக...

கையறு நிலையில் குடும்ப கஷ்டம் மட்டுமே கண்முன்னாடி வந்துபோகும்...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு...


ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில்,  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட் விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் நிலத்தை சிப்காட் ஒதுக்கியதையும் தமிழக அரசு ரத்து செய்தது. வ

உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த விசாரணையில், வழக்குகள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட  வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையினை ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், இந்தக்குழு சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் கருத்துகளையும் கேட்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஒரு மனுவை அளித்துள்ளது. அதில், 'ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமிஷனும் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் ஸ்டெர்லைட் வழக்குகளை சிபிஐ விசாரிப்பது என்பது சரியாக இருக்காது. தமிழக காவல்துறையே தொடர்ந்து வழக்கை விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற  இருக்கிறது...

சுயநலமும் பண போதையும் ஊறிப்போன உலகத்துல நமக்கான உரிமைகள தேடுறது கஷ்டம்...


திறமையின் மூலம் நமக்கு கெடைக்க வேண்டிய வேலைய வேற ஒருத்தன் பணத்த கொடுத்தோ உறவினர்கள வச்சோ வாங்கிடுவான்...

யாராலும் உங்களுக்கு வழங்க முடியாது...


உலகை துறக்க வேண்டிய அவசியமே இல்லை.

கோழைகளே அதை துறப்பார்கள்.

உலகில் வாழ வேண்டும்.

அனுபவம் பெற வேண்டும்.

இது ஒரு பள்ளி.

நீங்கள் இமயமலையில் வளர முடியாது.

உலகில்தான் வளர முடியும்.

ஒவ்வொரு காலடி வைப்பும் ஒரு தேர்வு.

நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சோதனை.

வாழ்வு ஒரு வாய்ப்பு.

உண்மை, உயிருள்ள உண்மை, ஒவ்வொரு தனி மனிதராலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.

யாராலும், அதை உங்களுக்கு வழங்க முடியாது...

இரத்தம் உரியுற அட்டைய போல வேலைய வாங்கி, ரெண்டு வருஷம் முடிஞ்ச ஒடனே பழைய அடிமைய தூக்கி போட்டு புது அடிமைய வேலைக்கு எடுப்பாங்க...


பாலக்காட்டுத் தமிழர்களிடம் கற்க வேண்டியவை...


பாலக்காடு நகரம், சித்தூர், மன்னார்காடு, ஆலத்தூர், ஒற்றபாலம் என ஐந்து தொகுதிகளாக பிரிக்கபட்டுள்ள பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் (மன்னார்காட்டின் ஒரு பகுதியான) அட்டப்பாடி, பாலக்காடு நகரம் மற்றும் சித்தூர் போன்ற கிழக்குபகுதியில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

அங்கே தமிழ்வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.
அலுவல் மொழி தமிழே உள்ளது.
தமிழ் படித்தால் தமிழர் பகுதியில் அரசு பணிக்கான உரிமையும் பெற்றுள்ளனர்.

அங்கு வெள்ளாளர், செங்குந்தர், வன்னியர், இருளர், கல்பாத்தி ஐயர் போன்றோர் தமிழர்களாக அறியப்படுகின்றனர்.

இன்றைய கோவை மாவட்டத்தின் தமிழர்களின் விகிதாச்சாரத்தைவிட எண்ணிக்கையில் பாலக்காடு மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மை...

ஏன் எதுக்குன்னு தெரியாம குடும்ப பொருளாதார நிலைய நெனைச்சு தானா போய் விழுகுற இளைஞர்கள் மட்டுமே அதிகம்...


ஊழல் புகார்கள் மீது சிபிஐ விசாரணை: எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும் - பாமக அறிக்கை...


தமிழக முதலமைச்சரும், நெருஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் குற்றச்சாற்றுகள் குறித்து மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை தமது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கியது, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை ஒப்பந்ததாரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் உயர்த்தி நிர்ணயித்தது ஆகிய குற்றச்சாட்டுகள்  குறித்து தமிழக காவல்துறையின் கையூட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆணையிட்டிருந்தது. ஆனால், கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணை நம்பிக்கையளிக்கும் வகையில்  இல்லை என்பதால் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு நீதிமன்றம் மாற்றியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்கு முன், 2011-ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே இத்தகைய ஊழல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவரது இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிடக் கோரி தமிழக ஆளுனர்களிடம் 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளது. அப்போதெல்லாம் ஆளுனர்களின் உதவியுடன் தப்பி வந்த எடப்பாடி இப்போது சிபிஐயிடம் சிக்கியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் புகார்களுக்கு முதற்கட்ட ஆதாரம் இருந்ததால் தான் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக விலக வேண்டும்...

அரசியல் சிம்மாசனகளை ஆட்டம் காணவைக்கும் பலம் நம் கைகளில் மட்டுமே உள்ளது என்பதை உணராதவரை நீயும்/நானும் மூடனே...


தெலுங்கர் மற்றும் தமிழர் பாளையங்கள் வரைபடம்...


1790களில் தெலுங்கர் மற்றும் தமிழர் ஆட்சி செலுத்திய பாளையங்கள்.

தமிழர் (சிவப்பு) அனைவரும் மறவர் சாதியினர்.

தெலுங்கர் (மை வண்ணம்) பெரும்பாலும் கம்பளத்தார் சாதியினர்.

(பாளையத்தின் பெயரை வைத்து மட்டுமே குறித்துள்ளேன். பாளையங்களின் எல்லைகள் தெரியவில்லை)..

தமிழர் பாளையங்கள

அழகாபுரி
இராமநாதபுரம்
ஊற்றுமலை (எ) வீரகேரளம்புதூர்
ஊர்க்காடு
ஏழாயிரம்பண்ணை
கடம்பூர்
கொல்லங்கொண்டான்
சேத்தூர்
சிவகிரி
சிங்கம்பட்டி
சுரண்டை
சொக்கம்பட்டி (எ) வடகரை
புதுக்கோட்டை
தலைவன்கோட்டை
நெற்கட்டும் செவல்
மணியாச்சி

தெலுங்கர் பாளையங்கள் வருமாறு...

அம்மைநாயக்கனூர்
அம்பாத்துறை
அம்பலத்தாறு
ஆய்க்குடி
ஆற்றங்கரை
இரசக்க நாயக்கனூர்
இடையக்கோட்டை
இராமகரி
எட்டையபுரம்
எமகேலாபுரம்
எரியோடு
ஏழுமலை
ஒன்பதூர்
கன்னிவாடி
கண்டமனூர்
கவுண்டன்கோட்டை
காமநாயக்கனூர்
காடல்குடி
குளத்தூர்
கூழப்பநாயக்கனூர்
கடவூர் (எ) பிள்ளைவிழுங்கி
கோல்வார்பட்டி
கோம்பை
சிறுபாலை
சொக்கம்பட்டி
சத்திரப்பட்டி
செங்குறிச்சி
தவசிமேடு
தேவாரம்
தேவதானப்பட்டி
தோட்டியன் கோட்டை
தோகைமலை
தும்பிச்சிநாயக்கனூர்
மருங்காபுரி
மறவநாடு
மாத்தூர்
மாதவ நாயக்கனூர்
மாறனூற்று
மாம்பாறை
மேல்மாந்தை
பழனி
பள்ளியப்ப நாயக்கனூர்
பாவாலி
போடிநாயக்கனூர்
பாஞ்சாலங்குறிச்சி
விருப்பாட்சி
வெள்ளியங்குன்றம்
வீரமலை
நாகலாபுரம்
நிலக்கோட்டை

நன்றி: கட்டபொம்மன் கொள்ளைக்காரன் (நூல்)..

மை வண்ணமிடப்பட்ட பகுதிகளில் கணிசமான மக்கட்தொகையும் அப்பகுதி நிலவுடைமையையும் தெலுங்கர் கொண்டிருக்கலாம்...

தமிழர்களின் கீழடி யை மூடிக் கொண்டிருக்கிறது பாஜக - அதிமுக...


ஈழபெண்ணிடம் போனில் மோசமாக பேசிய வைரமுத்து – பதிவை வெளியிட்ட சின்மயி...


ஈழபெண் ஒருவரிடம் வைரமுத்து போனில் மோசமாக பேசியதற்கான ஆதாரம் அப்பெண்ணிடம் உள்ளதாக அவர் எழுதிய பதிவை சின்மயி வெளியிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி கூறினார். இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் ஈழப்பெண் ஒருவர் வைரமுத்துவால் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், என் உறவிக்கார பெண் ஐரோப்பாவிலிருந்து சென்னைக்கு விடுமுறைக்கு சென்றார். அப்போது வேனில் சென்று கொண்டிருந்த போது, வேன் ஓட்டுனர் இது தான் வைரமுத்துவின் வீடு என காட்டினார். உடனடியாக அவர் வைரமுத்துவை பார்க்க ஆசையாக உள்ளது என கூறினார்.

பின்னர் என் உறவுக்கார பெண், அவரின் 3 குழந்தைகள், தாய் மற்றும் மாமா வைரமுத்துவை காண சென்றனர். கதவை ஒரு நபர் திறந்த பின்னர் விடயத்தை கூறினார்கள். பின்னர் அங்கு வைரமுத்து வந்து அவர்களிடம் நன்றாக பேசினார்.

இதையடுத்து பெண்ணின் போன் நம்பரை வாங்கி கொண்டார். அடுத்தநாள் வைரமுத்து அந்த நம்பருக்கு போன் செய்து மோசமாக பேச தொடங்கினார். இதையடுத்து அவருடன் பேசுவதை நிறுத்த தொடங்கினார் என் உறவுக்கார பெண்.ஆனால் மீண்டும் மீண்டும் போன் செய்து அவர் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து போனில் வைரமுத்து பேசுதை அவர் ரெக்கார்ட் செய்தார்.

பின்னர் அவரை ஐரோப்பியாவுக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார். ஏனெனில் இந்த ஆடியோ ஆதாரத்தை வைத்து இந்தியாவின் சட்டப்படி தண்டனை வாங்கி தர முடியாது என்பதால், ஐரோப்பாவுக்கு வந்தால் அங்குள்ள பொலிசில் புகார் தர ஐரோப்பாவுக்கு அழைத்துள்ளார்.

நாங்கள் ஈழப்பெண்கள், இது 100 சதவீத உண்மை, எங்களிடம் இதற்கான ஆதாரம் உள்ளது என பதிவிடப்பட்டுள்ளது...

பதிவு - http://www.thaainaadu.com/s/ஈழபெண்ணிடம்-போனில்-மோசமா/

NEEM GAT FIT மத்திய மாநில அரசின் கண்கட்டு வித்தைகளில் இதுவும் ஒன்று...


இன்ன வருடத்தில் இத்தனை பேருக்கு வேலை கொடுத்துவிட்டோம் என்ற ஆதாரக்குறிப்பு... ஆனால் எந்த வேலையும் நிரந்தரமற்ற ஒன்று...

தியானம் - அட்டாங்க யோகம்...



தியானம்...

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே -- 599

விளக்கம்...

ஞானத்துக்குக் கருவியாக நிற்கும் கண், வாய், மூக்கு, காது இவைகளின் சத்திகள் ஒன்று சேரும் கூட்டத்துள் பக்குவப்படுத்திக் கொண்டு நின்ற பழமையாகிய பொருள் ஒன்று உண்டு.  அண்ணாக்காகிய பிரணவத்தின் கண் அகண்டாகாரமாகிய பிரகாசத்தை சாதனா சம்பந்தமானவர்களுக்கு பிரத்தியட்சமாய்க்காட்டி முதலில் வருத்தி நம்மைப் பிழைப்பித்த வழியிதுவே.

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலுமாமே -- 600

விளக்கம்...

சமானமில்லாத நேத்திரத்தில் பொருந்திய பிரகாசத்தை நேத்திரத்தினாலேயே ஊன்றிப் பார்த்து அதோடு கலந்து இருப்பதினாலே தேவாமிர்தமானது வெளியில் உதிர்திறங்கிட யாவராலும் செய்யப்படாத சிவம் நின்றிருப்பதைப் பார்க்கலாம்.

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே -- 602

விளக்கம்...

மனமாகிய விளக்கை, இருட்டு நீங்க மேலேயேற்றி உக்கிரத்தோடு கூடிய சூரிய சந்திர தீபங்களை மேற்செல்லும்படி நெருக்கி, எல்லா விளக்குகளையும் (சூரியன், சந்திரன், அக்கினி, பஞ்சாக்கினி) அறிவாகிய பிரணவத்தில் சேரும்படித் தூண்ட மனமாகிய விளக்கு அழியாத சிவாக்கினியாக விளக்காகும்.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருப்பினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உன் நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே. -- 603

விளக்கம்...

எண்ணாயிரம் வருடம் வரை யோகத்திலிருந்த போதிலும், கண்ணிறைய பரசிவத்தைக் கண்டு அறிந்து கொள்பவர்கள் கிடையாது.  உள்முகமாகப் பார்வையைத் திருப்பி உள்ளே பிரகாசமானது வந்து சேரப் பார்த்தால் கண்ணாடியில் பிரதிபிம்பம் தோன்றுவதுபோல கலந்திருந்தான் பரமசிவம்.

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லைத் தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே -- 604

விளக்கம்...

ஒருவன் பார்வையிரண்டையும் பிரணவத்தினுடைய மூக்கின் நுனி நடுவில் பொருந்தும்படி வைத்தால் தளர்ச்சியடைய வேண்டியதுமில்லை.  தேகத்துக்குச் சிதைவும் கிடையாது.  வேகமுமடங்கிவிடும்.  அறியுந்தன்மையுமில்லை தானேன்பதும் இல்லை.  ஆராய்ச்சி செய்ய வேண்டியதுமில்லை.  சிவனே அவனாகியிருப்பான்.

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர் வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே -- 605

விளக்கம்...

பார்வையிரண்டையும் முன் சொன்னபடி பிரணவ நுனியில் வைத்து விட்டு கீழேயிறங்காத உயர்ந்த பிராண வாயுவை நடு வீட்டில் சேர்த்து அதை துக்கமாகிய சரமானது ஒழிய அசைவற்ற பார்வையோடு பார்த்துக் கொண்டு தூங்குகிறவர்களுக்கு காயமானது பிரயோசனத்தைக் கொடுக்கும் நாசமாகிறதென்னும் பயமுமில்லை.

மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணி ந்தவர்க் அல்லது பார்க்க ஒண்ணாதே -- 606

விளக்கம்...

கெண்டாமணியின் ஓசையும், கடல் ஓசையும், யானையின் முழக்கமும், நாதத்தை விருத்தி செய்யும் புல்லாங் குழலின் ஓசையும் மேகக்கர்ச்சனையும், அழகு பொருந்திய வண்டுகளின் ரீங்கார சத்தமும், கருவண்டின் பறக்கும் ஓசையும், சங்கின் ஓசையும், பேரிகைச் சத்ததும், வீணையின் நாதமும் ஆகிய பத்துவகை நாதங்களும் அடக்க மாயிருந்தது எழும்பும் குருநாதரை வணங்கி அவர் உபதேசித்தாலல்லது உற்பத்தியைப் பார்க்கவும், நாதத்தைக் கேட்கவும் இயலாது.

கடலொடு மேகங் களிறெடும்ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மனு வேனுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே -- 607

விளக்கம்...

கடலின் அலையோசையும் மதம் பிடித்த யானைகள் ஒன்றோடொன்று போராடுவதில் எழும்பின ஓசையும் அண்டத்திலும் அண்டத்துக்கு மேல் சோதியானது பொருந்தியிருக்கும் துவாதசாந்த வெளியில் வேணுநாதமும் வலம் புரிச்சங்கின் ஓசையும் திடத்தையறிந்த யோகிக்கு அல்லாமல் மற்றோர்க்குத் தெரியாது.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே -- 609

விளக்கம்...

ஓசையின் முடிவிலே நன்மையைக் கொடுப்பவளாகிய சத்தியிருப்பாள்.  ஓசையின் முடிவில் நன்மையைக் கொடுக்கும் யோகமானது இருக்கும்.  ஓசையின் முடிவிலே பார்வையின் சத்தியானது இருக்கிறது.  ஓசையின் முடிவிலே விஷத்தை உண்ட பரமசிவன் இருக்கிறான்.

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுத் தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே -- 611

விளக்கம்...

நேத்திரத்தில் (முக்கிறந்திகளையும் இருட்டையும் தாண்டின பிறகு) பகலைத் தவிர இருட்டு என்பது கிடையாது.  சதாபிரகாசத்தையுடைய அக்கினியுள்ள அறையில் பற்றிக் கொள்ளாமல் காத்துக் கொள்ளலாம்.  இந்த அக்கினியானது பிரகாசத்தையுடைய அறிவாகிய பிரணவத்தின் மத்தியில் யோசனைதூரமாக நீண்டிருக்கின்றது.  சதா பகலாயிருக்கும் அறையில் விடியவில்லை என்பதே கிடையாது.

குறிப்பு:  கண் இருட்டினாலேயே இருட்டும் வெளிச்சமும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசத் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றாம தாமே -- 614

விளக்கம்: (தெரிசனம் ஆகவில்லையென்று) மனஞ்சோர்ந்து போனவன் இருளால் சூழப்பட்ட நேத்திரத்திற்குள்ளே உதித்து எழும்புகின்ற சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிலும் சுழிமுனை துவாரமானது பொருந்தி பெரிய பாசத்தினுடைய துருவாகிய இருட்டு நீங்கிப்போனால் கஷ்டமில்லாமல் மார்கழி மாசத்திய ராசியாகிய தனுசு என்கிற வில்லின் ஏற்றமாகும்.

வில்லின் வளைவுக்கு உவமானித்தார்...

28வது இடத்தில் இருக்கும் திமுக தெலுங்கர் கருணாநிதி முதலமைச்சர் ஆனது எப்படி?


மது மயக்கத்தில் ஹோட்டலை விலைக்கு வாங்கிய தம்பதிகள்....


தேன்நிலவுக்காக இலங்கை வந்த இங்கிலாந்தின் மார்க் லீ தம்பதியினர்  ஹோட்டல் அறையில் மது அருந்தி விட்டு  தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை வாங்க முடிவு செய்தனர்.

அடுத்த நாளே ஹோட்டலின் ஓனரை சந்தித்து சுமார் ரூ.29 லட்சத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அதனை லீசுக்கு எடுத்து நடத்தி வரும் ருசிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது...

தமிழர்களை ஏமாற்ற தயாராகும் கன்னடன் கமல்...


கொரியாவில் பாண்டியனின் மீன் சின்னம்...


பாண்டியர்களின் கோயில்களில் உள்ள மீன் குறியீடுகள் , கொரியா கொடி சின்னம் ஒப்பிட்டு செய்க..


கொரியா தமிழ் வரலாற்று உறவுகளை தமிழ் நில மண்ணில் , கொரியா மண்ணில் உள்ள திணை கோட்பாடுகளை அவர்களின் நிலம் அதன் பொழுதை அங்கு கலந்துள்ள கடலன் என்று என்ற பாண்டியர்களின் பண்பாடுகளை ஒப்பிட்டு தேடுகின்ற என் போன்றவருக்கு வியப்பை தருகின்றன..

-- கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு..

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


அதிமதுரம்...


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது தமிழ் பழமொழி...

உடல் பலத்தோடு பொருள் நிறைவு சேரும்போது மனம் மகிழ்ச்சி பெறும். இவ்வுலகில் அனைவரும் விரும்புவதும் வேண்டுவதும் ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வைத்தானே? நல்ல ஆரோக்கியத்துக்கும் அக மகிழ்வுக்கும் அடிப்படையாக விளங்குவது இயற்கை மருத்துவம். நாம் மறந்துவிட்ட இயற்கையையும் இயற்கை நமக்களித்த மருத்துவத்தையும் இங்கே காண்போம்.

அதிமதுரம் என்ற பெயரிலேயே அதன் தனித்துவம் விளங்குகிறது. அதி + மதுரம் = அதிமதுரம். மிகுந்த இனிப்புச் சுவை உடைய மூலிகை என்பது இதன் பொருள்.

அதிக நேரம் இனிப்பது என்பதும் கூட பொருளாகும். அதிமதுரத்தின் தாவரவியல் பெயர் Glycyrrhiza glabra.

இது Fabaceae தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகை.

சித்த மருத்துவத்தில் ‘அதிமதுரம்’ என்றும், வழக்கு மொழியில் ‘அதிங்கம்’, ‘அட்டி’, ‘மதூகம்’ என்று வழங்குவர். சமஸ்கிருதத்தில் ‘யுஷ்டிமது’, ‘அதிரஸா’, ‘மதுரஸா’ என்று குறிப்பிடுவர். உருது மொழியில் முலெத்தி என்று கூறுவர். அதிமதுரத்தின் வேர்களே நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. வேர்கள் மிகுந்த இனிப்புச் சுவை கொண்டவை... குளிர்ச்சி தன்மை உடையவை. அதிமதுரத்தை உண்ட பிறகு, அது இனிப்பாகவே மாறும் (பிரியும்) இயல்புடையது. அதிமதுரத்தில் 2 வகைகள் உள்ளன

1. சீமை அதிமதுரம்..

சீமை அதிமதுரம் பெருவிரல் கனத்திலும், சிவப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், ஒடித்தால் உட்புறம் மஞ்சள் நிறமாகவும் இனிப்பாகவும் இருக்கும். இந்த சீமை அதிமதுரம்தான் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைப்பது. இது வங்கதேசம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.

2. நாட்டு அதிமதுரம்..

நாட்டு அதிமதுரம் சிறியதாகவும், விரல் பருமனாகவும், ஒடித்தால் வெண்மையாகவும், சிறிது இனிப்பாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இதை ‘குன்றிமணி வேர்’ என்ற பெயரில் நாட்டுமருந்துக் கடைகளில் விற்கின்றனர்.

அதிமதுரத்தில் Glycyrrhizin என்ற கிளைக்கோசைடும், Glycyrrhizic acid, Silicones, Sterols, Amino acids, Amine, Isoflavonoids போன்ற தாவரச் சத்துகளும் உள்ளன.அதிமதுரத்தின் பொதுவான செய்கைகள்...

வறட்சியகற்றி (Emollient), உள்ளழலாற்றி (Demulcent), கோழையகற்றி (Expectorant), உரமாக்கு (Tonic) ஆகிய செய்கைகளாகும்.பொதுவாக அதிமதுரத்தினால் கபத்தால் ஏற்படும் கோழை, பித்த மிகுதியால் ஏற்படும் உடல் சூடு, சுவாச காசம், கோழைக்கட்டு, கண் நோய்கள், வெறிநோய்கள், காமாலை, வெப்ப நோய்கள், வெண்புள்ளி (வெண்குஷ்டம்) முதலியன தீரும்.

அதிமதுரத்தால் வறட்டு இருமல் தீரும். அதிமதுரம், மிளகு, திப்பிலி, கடுக்காய் தோல் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து 4 முதல் 6 வராகன் எடை (ஒரு வராகன் எடை: 4.2 கிராம்) அளவு தேனில் குழைத்துத் தரலாம்.

நெஞ்சில் ஏற்படும் கோழைக்கட்டுக்கு அதிமதுரத் துண்டு ஒன்று/இரண்டு வாயிலிட்டு அதன் உமிழ் நீரை விழுங்க வேண்டும்.  அதிமதுரம் நெஞ்சகக் கோளாறுகள், கப நோய்கள் (சீதள நோய்கள்).

நுரையீரல் தொந்தரவுகள், வறட்டு இருமல், காச நோய், சிறுநீரக நோய்கள், தொற்றுநோய்கள், வயிற்றுவலி, வாயுக் கோளாறுகள், சிறுகுடலில் அமில தேக்கத்தினால் ஏற்படும் புண்கள், வயிறு வீக்கம், வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு தனியாகவும் அல்லது பிற மூலிகைகளுடன் சேர்த்து மருந்தாக பாகம் செய்தோ வழங்கப்படும்.

அதிமதுரத்தை பொடித்து வெந்நீருடன் கலந்து அருந்த மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். தடைப்பட்ட மாதவிலக்கைத் தூண்டும். அதிமதுரமும் முட்சங்கன் வேரும் சம எடை எடுத்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து தேற்றான் கொட்டை அளவு உருட்டி பசும்பாலில் ஒரு நாளைக்கு இருவேளை என்று கொடுக்க, மஞ்சள் காமாலைக்கும் மருந்தாகும்.

கர்ப்ப காலத்தில் ஏதேனும் ரத்த ஒழுக்கு ஏற்படின், அதிமதுரமும் சீரகமும் சம எடை எடுத்து 350 மி.லி. நீர் விட்டு எட்டில் ஒன்றாக (1/8) காய்ச்சி, காலை, மாலை - 3 அல்லது 4 நாட்கள் தரலாம். அதிமதுர இலைகளை அரைத்து உடலில் அக்குள்களில் பூசி குளித்து வர - கற்றாழை நாற்றம், சொறி, சிரங்கு, தேமல், படை போன்ற சருமப் பிரச்னைகள் தீரும்.

அதிமதுரம், சோம்பு, சர்க்கரை, வகைக்கு 1 பங்கு எடுத்துப் பொடித்து, அதனுடன் கொடிவேலி வேர்ப்  பொடி 17 கிராம் சேர்த்து கலந்து கொண்டு தேனில் குழைத்து, அதிமதுர சூரணமாகத்  தர தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி குணமாகும்.

ஜப்பான் நாட்டில் ஈரலுக்கான ஊசி மருந்தில் அதிமதுரத்தின் சத்தும் சேர்க்கப்படுகிறது. அதிமதுரம் ஈரலை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது...

வணிகப் போர்... உச்சம் அடையும்...


இந்திய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய வரிப்பகிர்வு நிலுவை 19 ஆயிரம் கோடி ரூபாய்...


தமிழ்நாடு அரசோ சாராயம் விற்று நிதி சேர்க்கிறது...

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை..

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 08.10.2018 அன்று புதுதில்லியில் இந்தியத் தலைமை அமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்துக் கொடுத்த மனுவில் 20 கோரிக்கைகள் இருந்தன. அவற்றில் பல, சட்டப்படி தமிழ்நாட்டிற்கு இந்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனடியாகத் தர வேண்டும் என்பவை ஆகும்.

1. கடந்த 14ஆவது நிதி ஆணையம் ஒதுக்கியபடி தமிழ்நாட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 2017 – 2018 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு (Performance Grant) மானியத் தொகை ரூபாய் 560.15 கோடி. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018 – 2019 ஆண்டிற்குத் தர வேண்டிய அடிப்படைத் தொகை ரூ 1,608.03 கோடி. ஆகமொத்தம் உள்ளாட்சித் துறைக்கு நடுவண் அரசு தர வேண்டிய பாக்கித் தொகை ரூ 2,160.18 கோடி.

2. ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூலில் ஒன்றிய அரசும் மாநில அரசும் தலா 50 விழுக்காடு பகிர்வு கொள்ள வேண்டும். அதன்படி 2017 – 2018 நிதியாண்டில் (2018 மார்ச்சுடன் முடிவடைந்த நிதி ஆண்டு) தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய 5,426 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை ஒன்றிய அரசு. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 2018 – 2019 முதல்பாதி நிதியாண்டிற்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. வரி வசூல் பங்குத் தொகையையும் இந்திய அரசு இன்னும் தரவில்லை.

3. கடந்த 13 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு 21 திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகையில் 8,699 கோடி ரூபாய் இன்னும் வரவில்லை. 13ஆவது நிதி ஆணையக் காலம் முடிந்து, 14ஆவது நிதி ஆணையக் காலமும் முடிவெய்தி 15ஆவது நிதி ஆணையம் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில் 13ஆவது நிதி ஆணையம் ஒதுக்கிய நிதியில் இன்னும் நிலுவை உள்ளது.

4. 14 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு உரியவாறு நிதி ஒதுக்கி ஞாயம் வழங்கவில்லை என்பதற்காக அதை ஈடுகட்ட ரூ 2,000 கோடி தனி ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. அத்தொகையை இன்னும் தரவில்லை.

5. பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பத்தாம் வகுப்பிற்கு மேல் கல்வி தொடர்வதற்கு – நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் உதவி தொகையில் ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதி தரவேண்டும். மாநில அரசு 40 விழுக்காடு நிதி தரவேண்டும். ஒன்றிய அரசு 2017 – 2018 நிதி ஆண்டில் இம்மாணவர்களுக்கு தர வேண்டிய ரூபாய் 985.78 கோடி ரூபாயை இன்னும் தரவில்லை.

மேற்கண்ட ஐந்து வகை இனங்களில் மட்டும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் - 19,278.96  கோடி ரூபாய்! (இதில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வர வேண்டிய ஜி.எஸ்.டி. வரிப் பங்குத் தொகை சேர்க்கப்படவில்லை. அது எவ்வளவு ரூபாய் என்ற கணக்கை அரசு வெளியிடவில்லை).

இந்தியாவிலேயே இந்திய அரசுக்கு அதிக வரி வசூல் தரும் மாநிலம் தமிழ்நாடு! சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் எழுதிய கட்டுரையில் ஓர் ஆண்டில் இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 31 விழுக்காடு என்று கூறி இருந்தார். (Times of India, 05.09.2018). அதேவேளை இந்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தொகை 3 விழுக்காடு என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏட்டுக் கணக்குப்படி தில்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதாகக் கூறப்பட்ட 3 விழுக்காட்டுத் தொகையில் 19,278.96  கோடி ரூபாய் வரவில்லை.

1947 ஆகத்து 15க்கு முன் இவ்வாறு தமிழ்நாட்டு நிதியை இலண்டனில் இருந்து கொண்டு வேட்டையாடினால் அது ஏகாதிபத்தியச் சுரண்டல்! இப்போது புதுதில்லியிலிருந்து கொண்டு வேட்டையாடினால் இது இந்தியத் தேசிய வளர்ச்சியா? அதுவும் இதுவும் காலனியச் சுரண்டல் தான்.

இந்திய ஆளுங்கட்சியுடன் நல்லுறவு கொண்டு தமிழ்நாட்டிற்கு நலன்கள்  சேர்க்கிறோம் என்று கூறும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் சாதித்தது இது தான்! தலைமை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டுத் தவமிருந்து ஆறு மாதங்களுக்குப் பின் சந்திக்க “அனுக்கிரகம்” பெற்று பணிந்து சமர்ப்பித்த வேண்டுகோள் விண்ணப்பத்தில் தான் மேற்கண்ட நிலுவைத் தொகைகளைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் பட்டியலிட்டுள்ளார்.

ஒரு கழகம் இன்னொரு கழகத்தைத் தாக்கி வசைமாரி பொழிவதையே தமிழ்நாட்டு அரசியலாக்கிய திராவிடக் கட்சிகள் – அந்தத் தொற்று நோயை மற்ற கட்சிகளுக்கும் பரப்பிவிட்டன.

இந்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதையும், தமிழ்நாட்டு வளங்களைச் சூறையாடுவதையும், இன அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையும் உரியவாறு எதிர்க்காமல் தங்களுக்குள் மட்டும் பதவிச் சண்டை இட்டுக் கொண்டு தில்லிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சேவகம் செய்கின்றன தமிழ்நாட்டுக் கட்சிகள்.

தமிழ்நாட்டு மக்கள் நலத்திட்டங்களுக்காக சாராயம் விற்கிறோம் என்று கூறுகின்றன அ.தி.மு.க.வும் தி.மு.க.வும்.

வாக்குறுதி தந்தபடி சிறப்பு நிதி ஆந்திரப் பிரதேசத்துக்கு மோடி அரசு தரவில்லை என்றவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, மோடி அரசை வீழ்த்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது தெலுங்கு தேசம் கட்சி.

தமிழ்நாட்டு அரசியல் சீரழிவைக் கலையாமல் தமிழர்களுக்க எதிர்காலம் இல்லை. நாமும் தமிழ்நாட்டுக் கழகங்களையும் கட்சிகளையும் குற்றம் சொல்வதை முதன்மையாக்கிக் கொள்ளாமல் தமிழின உணர்வும், உரிமை கோரும் விழிப்புணர்வும் பெற்று கோடிக்கணக்கான தமிழர்களை இலட்சியப் பிடிப்புள்ள தமிழ்த்தேசியத்தின்பால் திருப்பிட முன் வர வேண்டும்! தமிழர் உரிமைக் களத்தை வலுப்படுத்த வேண்டும்...

அன்று இந்த பதிவின் அர்த்தம் விளங்கும்...


அதுவரை நாங்கள் இந்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அனாதைகளே...

உலக நாகரிகங்களில் தமிழனின் தடம்...


வருடம் கி.மு. 3000 அதாவது இன்றிலிருந்து மிகச் சரியாக 5000 வருடங்களுக்கு முன்பு, அரேபிய (Arab) நாட்டை தெற்கு வடக்காக கடந்து Persian Gulf-யை அடைந்து பிறகு Euphrates நதிக்கரையில் அமைந்திருக்கும் அந்த புகழ்பெற்ற நகரத்தை நோக்கி ஒரு வணிக கூட்டம் போய்கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டே போகிறார்கள். என்ன ஆச்சரியம் அவர்கள் பேசுவது தமிழ் மொழி, ஆம் அவர்கள் தமிழில் தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களை நாம் இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாம் வாருங்கள். அடக் கடவுளே அவர்கள் தமிழ் வணிகர்கள். தமிழக வணிகர்களுக்கு இங்கு என்ன வேலை? இந்து மா கடலையும், அரேபியாவின் பாலைவனங்களையும் கடந்து இவர்கள் எங்கே போய்கொண்டிருக்கிறார்கள்?

ஊர் (Ur), அந்த தமிழ் வணிகர்கள் போய்கொண்டிருப்பது இந்த நகரத்தை நோக்கித்தான். அவர்களில் சிலர் ஊர்க் (Urk) என்கிற நகரத்தை நோக்கி பிறகு செல்வார்கள். இந்த ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் எங்கே இருக்கின்றன என்று நீங்கள் புருவம் உயர்த்தினால் இதை படியுங்கள். இந்த இரண்டு நகரங்களும் Mesopotamia நாகரீகம் செழித்து வளர்ந்த Sumeria-யாவில் இருக்கின்றன. Euphrates மற்றும் Tigris நதிகள் ஓடும் இன்றைய Iran, Iraq பகுதிகளைத்தான் 5000 வருடங்களுக்கு முன்பு சுமேரியா (Sumeria) என்று அழைத்தார்கள். மனித நாகரீகத்தின் தொட்டில் என்று சுமேரிய நாகரீகத்தை வரலாற்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

ஊர் மற்றும் ஊர்க் நகரங்கள் இரண்டும் சுமேரிய நாகரீகத்தின் முதல் பெருநகரங்கள். இன்றைய Metropolitan City-களுக்கு ஒப்பானவை. அக்கேடிய அரசு, ஊர் நகரத்திலிருந்தே தொடங்கியது. இங்கிருந்து அரசாண்ட அனைத்து சுமேரிய அரசர்களும் தங்களின் பெயர்களுக்கு முன்னால் இந்த ஊர் என்கிற வார்த்தையை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் (Pyramid) போன்ற அமைப்புடைய மிக பிரம்மாண்டமான சிகுராத்கள் (Ziggurat) இந்த நகரங்களில் இருந்தது. சிகுராத் என்பது சுமேரியர்களின் வழிபடும் இடம். ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ என்கிற இந்த வார்த்தைகள் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டதாக நடுநிலை வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இப்படி அறிஞர்கள் கருதுவதற்கு காரணம் இந்த இரண்டு நகரங்களிலும் இருந்த தமிழர்களின் செல்வாக்கு. இன்றையிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஊர்’ மற்றும் ‘ஊர்க்’ நகரங்கள் தமிழ் வணிகர்களின் குடியேற்ற நகரங்களாக இருந்திருக்கின்றன. பொதுவாக தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ‘ஊர்’ என்று அழைப்பது வழக்கம். எந்தவித சிறப்பு பெயரும் இல்லாம் ‘ஊர்’ என்கிற ஒற்றை சொல்லே ஒரு நகர்புறத்தை குறிக்கும். ‘நான் ஊருக்கு போனேன்’, ‘அந்த ஊரு ரொம்ப தூரம்’ போன்ற சொல் வழக்குளில் ஒரு இடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை என்றாலும் ஊர் என்கிற ஒற்றை சொல்லே நாம் பேசும் நகரத்தை குறிப்பிட்டுவிடுகின்றது. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த காரணத்தாலும் அவர்கள் வாழும் பகுதி ஊர் என்று அழைக்கப்படுகின்ற காரணத்தாலும் சுமேரியாவின் Euphrates நதிக்கரையிலிருந்த இந்த நகரங்கள் ‘ஊர்’ என்றும் ‘ஊர்க்’ என்றும் காரணப் பெயராக அழைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க் என்பது ஊர் என்ற சொல்லின் மருவிய வடிவம்.

தமிழர்களின் செல்வாக்கால் பெயர் பெற்ற ‘ஊர்’ நகரம் விவிலியத்திலும், மனித நாகரீகத்தின் முதல் நாவல் என்று அழைக்கப்படும் கில்காமேசிலும் (Gilgamesh) குறிக்கப்பட்டிருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியாவின் எந்த பகுதிக்கு சென்றும் நான் தமிழன் என்று ஒருவர் சொன்னால் உடனே அடையாளம் கண்டுகொள்ளப்படுவார். அதாவது இன்று ஒரு அமெரிக்கர் உலகின் எந்த இடத்திலும் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதுபோல். இன்றைக்கு தமிழன் தமிழ்நாட்டிலேயே தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ள முடிவதில்லை. இனவெறியன், பிரிவினைவாதி என்று ஆபாசமாக முத்திரைக்குத்தப்படுகிறான். ஈழத்தில் தன் தாய் மண்ணில் இனப்படுகொலைக்கு ஆளாகிறான்.

தமிழகத்தில் கிடைத்த உபரி உற்பத்தியை தமிழர்கள் சுமேரிய நாகரீகத்துடன் வணிகம் செய்திருக்கிறார்கள். சுமேரிய உபரி உற்பத்தியை தமிழகம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் ஆடம்பர பொருட்களை சுமேரிய அரசர்கள் தாங்கள் இறந்தும் தங்களுடைய கல்லறைகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். சுமேரியாவிற்கு வணிகத்திற்கு சென்ற தமிழன் சுமேரியாவின் நகர நாகரீக வளர்ச்சிக்கும் உதவி செய்திருக்கிறான். சுமேரியா மற்றும் எகிப்திற்கான கடல் வணிக பாதையை உருவாக்கியது தமிழன் என்றால் அது மிகையாகாது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதும் எவரும் தமிழர்களின் தொடர்புகளை புரக்கணித்துவிடமுடியாது. ஆனால் ஏனோ நம்முடைய வரலாற்று நூல்கள் தமிழர்களின் இத்தகைய சிறப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர் அகண்ட பாரதத்தை கட்டி எழுப்பும் வரலாற்று புணுகு மூட்டைகளையே ஓட்டுமொத்த இந்திய வரலாறாக அவிழ்த்துவிட துடிக்கிறார்கள். ஆரியவர்தமானமே இந்தியாவின் மானம் என்று கைகூசாமல் எழுதி குவிக்கிறார்கள். எகிப்து, சுமேரிய நாகரீகங்களுடனான தமிழர்களின் தொடர்புகளைப் பற்றியும், சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பதைப் பற்றியும் எழுத துணிச்சல் அற்ற இந்திய பாட நூல் கழகம், தமிழர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது.

இன்றையிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று நாகரீகங்கள்தான் நாகரீக கலாச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றன. ஒன்று எகிப்தியர்களுடையது, அடுத்தது சுமேரியர்களுடையது மற்றது தமிழர்களுடையது. சிந்துவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்கிற காரணத்தால் அது தனியாக இங்கே குறிப்பிடபடவில்லை. உலக வரலாற்று அறிஞர்கள் தமிழர்களின் தொடர்புகளை வெளிகொண்டுவந்து புண்ணியம் தேடிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் தமிழன் வரும் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூங்கிக் கொண்டே தான் இருப்பான்...

கீழடி அகழ்வாராய்ச்சி யும் பாஜக மோடியின் தமிழின அழிப்பும்...


பல MNC தொழிற்சாலைகளின் நிலை இதுதான்...


குடுக்குற 10000 சம்பளத்துக்கு ஆட்டுமந்த மாதிரி சூடு சொரணைகள விட்டு ஆசாபாசங்களைவிட்டு ஊர்விட்டு ஊர் போய் வேலை செய்யுற பசங்ககிட்ட கேட்டு பாருங்க... அவங்க கஷ்டமெல்லாம் புரியும்...

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்...


தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை.

இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.

தோற்றம் :

அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

அடங்கியுள்ள பொருட்கள் :

ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம், நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின், நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.

குணங்கள் :

இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்:

பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்.

அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும்.

இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி மாறும்.

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி தீரும்.

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.

அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.

அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின் போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.

வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.

இக்கீரை பித்த நோயை நீக்கும்.

இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்...

பெட்ரோல், டீசலுக்கு 'லோன்'. அறிமுகமானது புதிய கடன் திட்டம்...


நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து காண்போம்...



உண்மை 1..

3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

உண்மை 2..

உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

உண்மை 3..

ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

உண்மை 4..

சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

உண்மை 5..

முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

உண்மை 6..

பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

உண்மை 7..

இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

உண்மை 8..

ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

உண்மை 9..

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

உண்மை 10..

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்...