10/03/2019

சாதிப் பெயர் வேண்டாமென முதன் முதலாகத் தீர்மானம் கொண்டு வந்தது தமிழர் தான்...


1929 பிப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும் என்றும் மத, சாதி அடையாளங்களை அணிந்து கொள்ளக் கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டு வந்தார்.

நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக் கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின் (Packiarajan Sethuramalingam) தாத்தா ஆவார்.

இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.

இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.

ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி ஈ.வெ.ராமசாமிக்கு கொடுத்து விட்டனர்.

சரி இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.

தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக் கொள்ளும் கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.

ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்..

அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்கு செய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன.

கருணாநிதியின் திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தவர் இளங்கோ சுப்பிரமணியன் (Elango Subramanian)...

பாஜக மோடியின் ஆட்சியால் மக்கள் அடைந்த துன்பங்கள் சில...


https://youtu.be/bBuzhV-ZU1k

Subscribe The Channel For More News...

தொப்பையை குறைக்க வழிகள்...


உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தொப்பையை குறைக்க வழி...

இளைஞர்களிடம் வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய சிந்தனையை நீர்த்துப் போகச் செய்யவே கன்னடன் கமல் அரசியலில் இறக்கி விடப்பட்டுள்ளார் என்றே தெளிவாகிறதா..?


அவரின் சமீபத்திய பேட்டிகளும் அதை நிரூபிக்கும் வகையில் பல இடங்களில் நடந்து கொள்கிறார்.

தமிழக இளைஞர்களே கமல் விடயத்தில் இன்னும் அதிக விழிப்புடன் அணுக வேண்டும் என்பதே தற்போதைய நிலை...

தோழர் முகிலன் ரயிலில்தான் பயணித்தார் என்பதற்கான உறுதியான சிசிடிவி ஆதாரம் தற்பொழுது கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம்...


டால்பின்...


டால்பின் (Dolphin) தமிழில் ஓங்கில் அல்லது கடற்பன்றி ஆங்கிலத்தில் (Dolphin) டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும்.

இவை திமிங்கலங்களுக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான பேரினங்களில் சுமார் நாற்பது வகையான ஓங்கில் இனங்கள்உள்ளன.

ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய் விளிம்பில் சுழியுடையதாய் இருக்கின்றது.

ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளன. இவை 40 கிலோகிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன.

ஓங்கில்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவைமீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம்.

ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு ஓங்கில் (டால்பின்) ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஓங்கிலும் தனித்துவமான சீட்டி (சீழ்க்கை) ஒலியை எழுப்புகின்றன. இவை மனிதர்களின் கை இரேகையைப் போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்தன்மையானவை ஆகும்...

தமிழக இளைஞரின் வேலை வாய்ப்பை பறிக்கும் வட இந்திய கும்பல்... தமிழக வேலை தமிழருக்கே - சீமான்...


https://youtu.be/kKUl0JfJqSk

Subscribe The Channel For More News...

சாக்குக்கணவாய்...


சாக்குக்கணவாய் ( தமிழில் பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபசு என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு.

சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.

தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு.

கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்).

சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின்செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இரைக்கப் பயன் படுகின்றது.

மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது.

முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும் குளிரான கடல் பகுதிகளில் ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்ப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம்.

இனப்பெருக்கத்திற்கான புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன...

பாஜக எனும் பார-தீய-புளுகு-சனதா...


தியானம்...


தியான முறைகளைக் குறித்து ஓஷோ ரஜனீஷ் அளவுக்கு யாராவது பேசியும், எழுதியும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே. ஆரம்ப காலங்களில் வட இந்தியாவில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மிக ஆழமாகப் படித்து பல வருடங்கள் அவற்றைக் கற்பித்தும் வந்தவர்.

அவருடைய விஞ்ஞான பைரவா தந்த்ரா புத்தகத்தில் 112 வகை தியானங்களை விவரித்திருக்கிறார். பண்டைய காலத்தில் பின்பற்றப்படுத்தப் பட்ட பல தியானங்களை புதிய மனவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி தன்னுடைய தியான மையங்களில் அறிமுகப்படுத்தியவர் அவர். அந்த தியான முறைகளுக்கு அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் நல்ல வரவேற்பும் இருந்தது.

”தியான முறைகளை முறைப்படி கற்று அதைச் சில நாட்கள் செய்து பாருங்கள். உங்கள் தன்மைக்கு ஏற்ற தியானங்களை மட்டும் முயன்று பாருங்கள். சில நாட்களில் உங்களிடம் எந்த நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தா விட்டால் அது உங்களுக்கேற்றதல்ல. அதை விட்டு விட்டு அடுத்த தியானத்தை ஆரம்பியுங்கள். மாறாக சில நாட்களில் உங்களுக்குள் நல்ல மாறுதலை நீங்கள் உணர்ந்தீர்களானால், அதை மிகவும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் தொடருங்கள் அது பல அற்புதங்களை உங்களுக்குள் ஏற்படுத்தும்” என்று சொல்கிறார் ஓஷோ.

ஓஷோ ஏராளமான தியானங்களை விளக்கி இருந்தாலும் ஜென் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தியானம் ஒன்று அவர் உபதேசித்த தியானங்களுள் பிரதானமானது. அந்த தியானத்திற்கு அடிப்படையான சில விஷயங்கள் என சிலவற்றை ஓஷோ சொல்கிறார்.

முதலில் ஜென் தியானம் செய்யும் இடத்தை மிகவும் முக்கியமாகக் கருதுகிறார். அது இயற்கையழகு மிகுந்த ஆரவாரமற்ற அமைதியான இடமாக இருப்பது நல்லது என்கிறார். (பூனே போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஓஷோவின் தியான மையங்கள் இயற்கையான அழகான சூழ்நிலைகளுக்குப் பெயர் போனவை.) அப்படி இல்லா விட்டால் தினமும் வீட்டிலேயே ஒரு அறையில் தொடர்ந்து தியானம் செய்வது நல்லது என்கிறார். தொடர்ந்து தியானம் செய்யும் அந்த இடம் தியான அலைகள் நிறைந்திருக்குமாதலால் நாட்கள் செல்லச் செல்ல தியான நிலை வேகமாகக் கைகூடும் என்கிறார் அவர்.

அடுத்ததாக உட்காரும் விதம் சௌகரியமாக இருப்பதும் மிக முக்கியம். உடல் அசௌகரியப்பட்டால் மனம் அதையே எண்ணியபடி இருக்கும், தியானம் கைகூடாது. உடல் பற்றிய நினைவே வராத அளவு நல்லது என்கிறார்.

ரிலாக்சாக இருப்பது அடுத்த முக்கியமான விஷயம். மனதோடு போராடுவது, மனதை அடக்க முயல்வது போன்றவை எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் அதைக் கைவிடுவது நலம் என்கிறார்.

ஜென் பௌத்தம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாளனாக இருக்க வலியுறுத்துகிறது. எண்ணங்களை எந்த விதமானமான தணிக்கைகளும், தீர்ப்புகளும் இன்றி கவனிப்பது முக்கியம்.

இனி இந்த எளிய தியான முறைக்குச் செல்லலாம்.

1) அமைதியான இடத்தில் சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்.

2) இயல்பாக மூச்சு விட்டு மூச்சு சீராகும் வரை மூச்சில் கவனம் செலுத்துங்கள்

3) இனி உங்கள் எண்ணங்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கண்காணியுங்கள். இந்த எண்ணம் நல்லது, இந்த எண்ணம் கெட்டது என்ற பாகுபாடுகள் வேண்டாம். வெறுமனே கவனியுங்கள். உங்கள் எண்ணங்களுக்கு நீங்கள் பார்வையாளனாக இருங்கள்.

4) கூர்மையாக கவனிக்கப்பட, கவனிக்கப்பட மனதின் எண்ணங்களின் எண்ணிக்கை, வேகம் குறைய ஆரம்பிக்கும். ஒரு பார்வையாளனின் தொடர்ந்த கண்காணிப்பில் எவர் செயல்களும் சற்று குறையவே செய்யும். மனமும் அதற்கு விதிவிலக்கல்ல.

5) ஒரு எண்ணம் மனதில் எழுகிறது. அதைக் கவனிக்கிறீர்கள். இன்னொரு எண்ணம் எழுகிறது. அதையும் கவனிக்கிறீர்கள். எண்ணங்கள் குறையக் குறைய இன்னொரு அழகான அனுபவமும் நிகழும். அது என்ன தெரியுமா? ஒரு எண்ணம் முடிந்து இன்னொரு எண்ணம் எழுவதற்கு இடையே உள்ள இடைவெளி. அதையும் கவனியுங்கள். அந்த இடைவெளியில் தான் மனம் மௌனமாகிறது. அது தான் மனமில்லா நிலை. அது மிக அழகான அனுபவம்.

6) எண்ணம்-இடைவெளி-எண்ணம்-இடைவெளி என ஒவ்வொன்றையும் எந்த விமரிசனமும் இன்றி கவனியுங்கள். ஆரம்பத்தில் சில மைக்ரோ வினாடிகள் தான் அந்த இடைவெளி இருக்கும். உங்கள் தியானம் ஆழமாக ஆழமாக அந்த இடைவெளிகளின் கால அளவும் அதிகரிக்கும். அந்த மனமில்லா நிலை தான் தியானத்தின் உச்சக்கட்டம்.

7) ஆனால் இடைவெளிகளையே அதிகம் நீங்கள் எதிர்பார்த்தால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் இடைவெளியின் மீது உங்களுக்கு விருப்பம் ஏற்பட்டு விட்டது என்றால் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாக இருக்க உங்களுக்கு முடியாது. அது முடியா விட்டால் தியானமும் நிகழாது.

 எண்ணம் எழுவதைக் கவனிப்பதும் ஒன்று தான். இடைவெளி வருவதைக் கவனிப்பதும் ஒன்று தான் என்கிற சமமான மனோபாவமே இங்கு முக்கியம். சூரிய ஒளியை ரசிக்கிறீர்கள். அடுத்ததாக மேக மூட்டம் வருகிறது. அதையும் ரசிக்கிறீர்கள். இதில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. நிகழ்வதைக் கவனிக்கும் சம்பந்தமில்லாத பார்வையாளனாக இருக்கிறீர்கள். இது தான் சரியான மனநிலை.

9) தியானம் ஆழப்பட்ட பின் பேரமைதியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். விருப்பு வெறுப்பில்லாத அந்த பார்வையாளனின் மனோபாவம் உங்களிடம் உறுதிப்பட ஆரம்பிக்கும். அது தியான சமயங்களில் பூரணமடைந்தால் மற்ற நேரங்களிலும் உங்களிடம் தங்க ஆரம்பிக்கும். தினசரி வாழ்க்கையே தியானம் ஆக ஆரம்பிக்கும். ஆரவாரங்களுக்கு நடுவேயும் நீங்கள் தியான நிலையில் இருக்க முடியும். ஜென் பௌத்தத்தின் குறிக்கோளே அது தான்.

மிக எளிதாகத் தோன்றும் இந்த தியானத்தைப் பயிற்சியாக செயல்படுத்துகிற போது அந்த அளவு எளிதானதாக இருப்பதில்லை என்பது அனுபவம். ஆனால் விடா முயற்சியோடு தொடர்பவர்கள் கண்டிப்பாக இதில் வெற்றி அடைய முடியும்...

இஸ்லாமியர்களின் இரட்டை வேடம்...


ஒரு பக்கம் பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்கனு சொல்ரது இன்னொரு பக்கம் அவனுங்க கூட கூட்டணி வச்சு அவனுக்கு ஓட்டு கேக்ரவன கூப்ட்டு பள்ளிவாசல் திறக்குறது…

அப்ரம் பள்ளிவாசல்ல இடிக்கிறான்னு போராட்டம் பன்றது...

மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் இந்தியா...


இந்திய அரசாங்கம் தன் மக்களைக் கெடுக்கக்கூடிய, முட்டாளாக்கக்கூடிய அனைத்திற்க்கும் ஆதரவு அளிக்கக்கூடியது, பணம் வரக்கூடிய எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதால் இதற்கு மட்டுமே பணத்தைக் கொட்டிக் கொட்டிச் கிரிக்கெடுக்கு செலவுசெய்தது, மற்ற விளையாட்டுகளை அறவே கைவிட்டது.

இதில் ஈடுபட்ட நம் மக்கள் அறவே தங்கள் கலாச்சாரத்தை மறக்க முடிந்தது. எப்படித் திரைப்பட நட்சத்திரங்கள் உருவானார்களோ அதுபோல கிரிக்கெட் நட்சத்திரங்களும் உருவானார்கள். திரைப்படங்களைப் பற்றிய வெட்டிக்கதைகள் பரவுவதைப்போலவே கிரிக்கெட் நட்சத்திரங்களைப் பற்றிய வெட்டிக்கதைகளைப் பேசியே பொழுதை போக்கினர் இன்னும் இதைப்பற்றி மிக விரிவாக எழுத எவ்வளவோ இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கிரிக்கெட்டைக் கைவிட்டால், இந்தியா ஒலிம்பிக்கில் பிற விளையாட்டுகளில் மேம்பட்டுச் சிறப்படைய முடியும் ,நம் நாட்டுப்புறக் கலைகளும் விளையாட்டுகளும் மேம்படும்.

இந்த விளையாட்டை அறவே புறக்கணித்து நம் நாட்டுக்குரிய விளையாட்டுகள், கலைகளில் ஈடுபடுங்கள் அல்லது வேறு பயனுள்ள வேலைகளில் பொழுதைச் செலவிடுங்கள்...

பாஜக கூட்டணிக்கு இது தான் நிலைமை...


எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ நாயூடு...


புலிகளுடன் தொடர்பு இல்லை; தமிழீழத்தை ஆதரிக்கிறேன்: வை.கோ.
என்ற தலைப்பில் 13.10.1993 தேதியிட்ட தினமணி நாளிதழில் வந்துள்ள வைகோவின் பேட்டியானது,

தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றவாறும்..

கருணாநிதி உயிருக்கு புலிகளால் ஆபத்துள்ள நேரத்தில் தன்னை புலிகளுடன் தொடர்புபடுத்தி கட்சியை விட்டு வெளியேற்ற சதி நடக்கிறது என்றவாறும் பேட்டி கொடுத்துள்ளார்.

புலித் தலைவர்களை சந்தித்தது பற்றி கேட்டதற்கு தான் ஈழத்தை அதரிப்பதாக மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்...

மிக்-21 விமானங்களுக்கு "பறக்கும் கல்லறை" என்ற புனைப்பெயர் உண்டு...


அதாவது  போரில் இறந்த ராணுவ வீரர்களை விட இந்த விமானத்தின் பயிற்சியின் போது இறந்த வீரர்கள் தான் அதிகம்...

தேசம் என்றால் என்ன ?


சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.

ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண்..

இரண்டாவது தேவை பொது மொழி..

 மூன்றாவது தேவை பொதுப் பொருளியல்..

நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான நாம் நம்மவர் என்ற தேசிய இன ஒருமை உணர்வு.

ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது.

இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.

பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது.

இது போன்ற சில விதி விலக்குகளும் உண்டு...

இந்தியா வை யார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் என்பது புரிகிறதா.?


மீன்களும் பெருமைக்காக வேட்டையாடும்...


மீன்களின் பெரியது எது என்று கேட்டால் திமிங்கலம் என்று தான் அத்தனைபேரும் சொல்வார்கள். ஆனால் எலும்புள்ள மீன் வகைகளில் பெரியது என்று கேட்டால் மோலா மோலா மீன்கள் அந்த இடத்தை பிடிக்கின்றன.

இந்த மீன்கள் மிதமான வெப்ப மண்டலம் கொண்ட கடல்களில் தான் காண முடியும். இந்த மீன் வகைகள் 11 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் எலும்பு மனித எலும்பு மாதிரி உறுதியானவை.

இந்த மீனின் விருப்ப உணவு குடை போன்ற உடல் உடைய இழுது மீன்   (Jellyfish) தான். ஆனால் இந்த மோலா மோலா மீன்களோ கடல் சிங்கத்துக்கு விருப்ப உணவாகி விடுகிறது.

இரைக்காக இவற்றை கடல் சிங்கங்கள் வேட்டையாடினால் கூட பரவாயில்லை. பல நேரங்களில் தானொரு பெரிய வேட்டைக்காரன் என்ற நினைப்பில் இந்த மீன்களை பார்த்ததும் பெருமைக்காவது வேட்டையாட தொடங்கி விடுகிறது.

இதனால் இந்த மோலா மோலா மீன்களின் எண்ணிக்கையே குறைந்து போய்விட்டது.

இந்த மீன்களின் சிறப்பு என்னவென்றால் இதன் துடுப்பு சுறா மீனின் துடுப்பு போல் இருக்கும். இதனால் இவை வலம் வரும்போது துடுப்பு மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரியும்.

அப்போது மீன் பிடிப்பவர்கள், கடல் ஆராய்ச்சியாளர்கள் சுறா மீனோ என்று அஞ்சுவதும் உண்டு...

தமிழர்களின் வேலைகளை முறைகேடு செய்து வட நாட்டவர்களை நியமிக்கும் பாஜக மோடி - விழித்துக்கொள் தமிழினமே..


https://youtu.be/-E5Rj3AZIBk

Subscribe The Channel For More News...

வாழ்வின் இலட்சியம்...


நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும்.

பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும்.

அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள்.

அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள்.

இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல்.

இந்தச் சொல்லைத் தெரிந்து இருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்...

இவற்றை தவிர்க்க பாருங்கள்...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நீங்கள் ஒரு Star Wars ரசிகர் என்றால், உங்களுக்கு ஜெடாய் மாஸ்டர் யோதாவை நன்கு தெரிந்திருக்கும். படத்தின் கதையில் இந்த இனங்கள், 70 சென்டிமீட்டர் அளவுக்கு உயரமும், பல நூறு ஆண்டுகள் நீடிக்கும் நீண்ட ஆயுள்காலம் கொண்டவைகளாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால்! இந்த ஜெடாய் கற்பனை கதாபாத்திரம் போன்ற உருவம், ஸ்மித்ஃபீல்ட் டிரீற்றல்கள் என அழைக்கப்படும். தெற்கு பிரான்சில் உருவாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதியில் உள்ளது. இது 700 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி ஆகும் " பிரிட்டன் நூலகத்தில் ஜூலியன் ஹாரிசன் என்பவரால் இந்த படம் வெளிச்சத்திற்கு வந்தது. இது ஒரு வேடிக்கையான தற்செயலாக உள்ளதாக கூறப்படுகிறது.

Star Warsன் ஜெடாய் வரைபடம். பச்சை நிறம், பெரிய அங்கி மற்றும் பெரிய காதுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த பாத்திரம் யார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இது கையெழுத்துப்பிரதியின் ஒரு பக்கம் மேலே காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பச்சை உருவ கதாபாத்திரம். விவிலிய சிம்சோன் மற்றும் டெலிலாவின் கதையில் வரும் யோதாவைப் போல ஒரு கதாபாத்திரத்தை குறிக்கிறது.

கதையின் நாயகன் சிம்சோன் பச்சை நிற தோல், வித்தியாசமான விரல்கள் மற்றும் துல்லியமான காதுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்.
கையெழுத்துப்பிரதியின் இந்த ஜெடாய் விசித்திரம் இங்கு மட்டும் நிற்க்கவில்லை.

கிழக்கு லண்டனில் உள்ள தேவாலயத்தின் 'லொர்ட் தார்ன்டன்' எனப்படும் கையெழுத்துப் பிரதியில் மற்றொரு 'யோதா' போன்ற தோற்றம் காணப்பட்டது. இது கரோல் பாஸ்கியனோவால் என்பரால் வெளிச்சத்திற்க்கு வந்தது. இந்த கையெழுத்துப் பிரதியில் மதக் கவிதைகளும், கதாபாத்திரங்களும் தான் ஏராளமாக உள்ளன.

'யோகாஸ்' என்ற இத்தாலிய கையெழுத்துப் பிரதிகளிலும் இந்த ஜெடாய் உருவங்களை வேறு நிறங்களில் காணலாம். இவை பிரதிகளின் விளிம்புகளில் பெரிய காதுகளுடன் இரண்டு பச்சைத் தலைகளுடனும் காட்சியளிக்கின்றன. மேலும் லியோனார்டோ டா வின்சி, அவர் கையெழுத்துப் பிரதியை அனைத்து கலைஞர்களுடனும் பாரம்பரிய கலை அடிப்படையிலான அலங்காரங்களுடன் இந்த உருவங்களை அலங்கரிக்க வழிவகுக்குத்தார். இந்த உருவங்கள், நீலம் மற்றும் பச்சையாகவும், வானதூதர்கள் போன்று (கேருபீன்கள் போன்றவை) குறைந்த ஓரங்களில் புனிதர்களாக சித்தரிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

ஜெர்மனி, செயிண்ட் ஜெரோம், 15 ஆம் நூற்றாண்டின் கையெழுத்து பிரதியிலும். ஏராளமான பச்சை நிற தோலை கொண்ட ஜெடாய் உருவங்கள் காணப்படுகின்றன.

உலகின் பல்வேறு வகையான உரைகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் இந்த ஜெடாய் உருவங்களின் ஒற்றுமைகள் இருப்பதை கண்டால், இது விலங்கு-மனித ( Hybrid ) கலப்பினங்களைக் கொண்ட படைப்புகளை ஒத்திருக்கிறது. அல்லது உண்மையாகவே இந்த உயிரினங்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கலாம்.!

அப்படியானால் இந்த தெளிவான கற்பனை அல்லது சில வகையான வேற்றுலக உயிரினங்களின் உண்மையான சித்திரமாக கூட இருக்கலாம் அல்லவா?
நீங்களும் இது போன்ற பச்சை நிற 'யோதா'வை தமிழ் கையெழுத்துப் பிரதிகளில் கவனித்திருக்கக்கூடும் என்றால். எனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்...

பாஜக மோடியும் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


மொழிகளின் முதல் நூல்...


சிங்களத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'சியபஸ்லகர' 1,000 ஆண்டுகள் பழமையானது.

தெலுங்கில் எழுதப்பட்ட முதல் நூல் 'மாபாரதம்' 1,000 ஆண்டுகள் பழமையானது.

கன்னடத்தில் எழுதப்பட்ட முதல் நூல் 'கவிராசமார்க்கம்' 1,170 ஆண்டுகள் பழமையானது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் 'தொல்காப்பியம்' 4,100 ஆண்டுகள் பழமையானது...

வைகோ சீடன் என்று நிருபிக்கும் அரசியல் வியாபாரி நாஞ்சில் சம்பத்...


https://youtu.be/7ZqCwo_Pmi0

Subscribe The Channel For More News...

மனம்...


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் சாட்சி
பாவம்..  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...