24/03/2019

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை...


குமரிக்கண்டத்து இசை...

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

கிரானைட்ஸ் தாது மணல் முறைகேடுகளில் சிக்கினார் பாஜக ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன்...


கண்டங்கத்திரி மருத்துவ குணங்கள்...


கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் பெற்ற மருந்து 'தசமூலம்' என்பதாகும். இது பத்து மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பத்து வகை மூலிகைகளில் கண்டங்கத்திரியும் ஒன்றாகும்.

மருத்துவ பயன்கள்: கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்துக்கொள்ள வேண்டும்.

இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாகக் காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும். காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு இதன் இலையை இடித்து எடுத்து சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் சமஅளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசிவர மறையும்.

கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியைத் தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண் குட்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.

கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.

நெருப்பில் இவற்றைப் போட புகை எழும். இந்தப் புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல் வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்...

பாட்டி ஸ்டைல் புதினா துவையல் செய்யலாம் வாங்க...


https://youtu.be/pGQIa0fzQsM

Subscribe The Channel For More News...

ஏப்ரல் 1 முட்டாள் தினம் - வரலாற்றில் இருந்து ஒரு தகவல்...


1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...

அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக்கொண்டது....

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்...

இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்...

ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்..

இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம்(paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது....

ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது....

கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்...

புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை ....

அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை....

யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்....

ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது....

அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool's day)...

உயிருக்கே உலை வைக்கும் இந்த மீன் வாங்கி சாப்பிடாதீங்க...


https://youtu.be/g_dWJUvfEfw

Subscribe The channel For More News...

ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு அருமருந்து...


ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ.. என்ற மருத்துவப் பழமொழி உண்டு.

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது.

இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு.

அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மண்கலயத்தில் போட்டு அரைப்படி நீர் விட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மேக ஓட்டம் , ரத்த மூத்திரம், பெரும் தாகம் ஆகியவை குணமாகும்.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன்படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்...

அதிமுக வுக்கு புதிய கட்சி திடீர் ஆதரவு, ஜெயலலிதா சொத்துக்களுக்கு குறி...


https://youtu.be/yiYpgPeXVrc

Subscribe The Channel For More News...

அண்ணன் சீமானுக்கு ஒரு திறந்த மடல்...


உங்கள் மச்சானை நீங்கள் விருது நகர் தொகுதி வேட்பாளராக நிறுத்தியதை கேட்டு மனமுடைந்து விட்டேன்.

குடும்ப அரசியலை எதிர்த்து அரசியல் செய்யும் நாம், இன்று உங்கள் குடும்பத்தில் இருந்தே வேட்பாளரை நிறுத்தியது மிகப்பெரிய அதிர்ச்சி.

விருதுநகரில் வேற எந்த ஒரு வேட்பாளரும் கிடைக்கவில்லையா?.. காளிமுத்து அவர்கள் சபாநாயகர், எம் எல் ஏ அமைச்சர் என்று பல பதவிகளை அனுபவித்தவர், பொறுப்புகளில் இருந்தவர்.. அப்படி இருக்கையில், அவர் வீட்டிலிருந்து தான் இன்னொருவரை நிறுத்த வேண்டுமா?  அவருக்கு என்ன தகுதி வேண்டுமானாலும் இருக்கட்டும்..   இன்னொரு தமிழன் குடும்பம் எம் எல் ஏ, எம்பி பொருப்புக்கு வரவைக்கலாமே?

குடும்ப அரசியலை ஒழிக்கனும்னா, முதலில் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள்  கட்சியில் பொறுப்பு எடுப்பதையே தவிர்க்கனும்.  ஒரு தலைமுறை இடைவெளி விட்டால் தான் குடும்ப அரசியலை ஒழிக்க முடியும்.

நீங்கள் தான் சொன்னீர்கள், ஆக சிறந்த குழு வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்று....  அப்படி இருக்கையில், அந்த ஆகசிறந்த குழுவிற்கு தெரியவில்ல்லையா? களத்திலயும், மேடையிலயும்,  இணையத்திலயும், தம்பிகள் , தமிழ் தேசிய உணர்வாளர்கள் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை எப்படி எதிர்க்கிறார்கள் என்று? இது நடந்தால் லட்சம் தம்பிமார்களுக்கு அவமானமாகும் என்று தெரியாதா?

ஒரு வேளை மச்சான், மிகச்சிறந்த தமிழ் தேசிய சிந்தனை உடையவராக இருந்தால், இந்த வேட்பாளர் தேர்வையே நிராகரித்து இருக்க வேண்டும். ஏனெனில் இன்று திராவிடம், தேசிய கட்சிகளும் குடும்ப அரசியலையும் அல்லகைகளையும் தான் உருவாக்கி வைத்து இருப்பது தெரிந்து இருக்கவில்லையா? இது நமது கருத்தியலுக்கு எதிராக அமையும் என்று தெரியாதா? அப்படி பட்டவர் வேட்பாளரா?

என்னைக்கு மச்சான், மாமன், பிள்ளைகளை போட்டியிட நிறுத்திருங்காளோ, கட்சியில் பொருப்பில் இருப்பவர்கள் அன்று தான், அல்லகைகள் வளையம் உண்டாகும். இதை தானே மேடையில் 8 ஆண்டாக பேசி வருகிறோம்.

உங்கள் மச்சானுக்கு 100% தகுதியே இருந்தாலும், குடும்ப அரசியலை கருத்தில் கொண்டு 98% தகுதியே இருந்தாலும்,  அடுத்த ஒருத்தருக்கு தான் கொடுத்து இருக்கனும்.

இன்று நீங்கள் செய்யும் இந்த தவறை, உங்களை சுற்றி இருப்பவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள், என்றால்,  உங்களை சுற்றி இருப்பவர்களும் அல்லகைகள் தான்.. ஏனெனில்  தலைமையே கொள்கையை மீறினால், அதை தட்டி கேள்வி கேட்பவன் தான் கட்சியை வளர்க்க உதவுகிறான் என்று அர்த்தம். ஆமா சாமி போடுறவன் எல்லாம் உங்களை கூடே இருந்தே கவிழ்க்கிறான் என்று தான் அர்த்தம்.

அடுத்து செயலாளர், பொருளாளர், மண்டலம், மாவட்டம் என்று அவனவன் மச்சான், மாமன், மகன் என்று தான் நிறுத்த என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்வான்.

அடுத்தடுத்த தேர்தல்களில் இதை முன்னுதாரணம் காட்டி அந்தந்த தொகுதிகளில் அல்லகைகள் வளையம் உருவாக்கபடும், அவர்களும் தேர்தலில் போட்டியிட சொந்தக்காரங்களை, பிள்ளைகளை நிறுத்த போகிறார்கள் என்று அர்த்தம்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்க்ள் இன்று செய்யும் தவறை மேற்கோள் காட்டி பல பேர்கள் இதை செய்வார்கள்.. நீங்கள் வார்த்து எடுக்கும் அரசியல் தகர்ந்து விடும்.

தயவு செய்து உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து, திங்கள் கிழமையாவது வேறு வேட்பாளரை நிறுத்துங்கள், இல்லை அந்த தொகுதியில் போட்டியிடால் கூட போவோம்.. ஆனால் கருத்தியலை சிதைக்காதீர்கள்.

நீங்கள் இந்த தவறுக்கு 1008 காரணம் கற்பிக்கலாம்,  ஆனால் நமது கருத்தியல் உடைகிறது, என்பது தான் உண்மை!.. இதற்காக உங்கள் தம்பிகள் எவ்வளவு மன வேதனையும், மற்றவர்களிடமும் அவமானமும் அடைய வேண்டும் என்று தெரியுமா? 

நமது கொள்கைகளை முதலில் நம்மால் முடிந்ததைதேயே நிறைவேற்ற முடியவில்லை என்றால், ஆட்சிக்கு வந்த பிறகு செய்வோம் என்ற நம்பிக்கையை எப்படி விதைப்பது?

இப்படிக்கு,
உங்கள் அன்பு தம்பி...

பெண்கள் வாக்குகளை கவர சீரியலில் நடிக்கிறார் அமமுக டிடிவி. தினகரன்...


https://youtu.be/VpogdnqBxQA

Subscribe The Channel For More News...

நீங்கள் ஒரு காந்தம்...


உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காந்தம். எப்படி காந்தம் பல பொருட்கள் சுற்றி இருந்தாலும் இரும்புத் துண்டுகளை மட்டுமே கவர்ந்திழுக்குமோ மனிதனும் தனக்குத் தக்க மனிதர்களையும், சூழ்நிலைகளையும் மட்டுமே தன் வாழ்க்கையில் கவர்ந்திழுக்கிறான்.

காந்தத்திற்கும் ஒரு படி மேலே போய் அவன் தன் காந்த சக்தியைத் தானே தீர்மானம் செய்கின்ற சக்தி பெற்றிருக்கிறான்.

அவன் தன் காந்த சக்தியின் தன்மையை தீர்மானிக்கும் முக்கியமான விதங்கள் மூன்று.

முதலாவது, கர்மா - மனிதன் முன்பு விதைத்ததை அறுவடை செய்யத் தேவையான மனிதர்கள் அவனால் ஈர்க்கப்படுகிறார்கள். அதற்கான சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் எல்லாம் தானாக அவனைத் தானாக வந்தமைகின்றன. முன்பு சில செயல்களைத் தீர்மானித்து செயல் புரிந்த அந்தக் கணத்திலேயே அதன் விளவுகளுக்கான காந்த சக்தியைத் தன்னிடம் ஏற்படுத்திக் கொள்கிறான். எல்லாம் துல்லியமான கணக்கோடு சரியான நேரத்தில் அவன் வாழ்வில் வந்து சேருகின்றன.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள் - உலகில் நல்ல விஷயங்களில் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருப்பவர்கள் நல்ல மனிதர்களையும் நல்ல விஷயங்களையும் தங்கள் வாழ்வில் தங்களை அறியாமல் வரவழைத்துக் காண்கிறார்கள். அதே போல நல்ல விஷயங்களில் அவநம்பிக்கையை ஆழ்மனதில் வளர்த்துக் கொள்கிற மனிதர்கள் அதை உறுதி செய்கிறது போன்றவற்றையே தங்கள் வாழ்வில் வரவழைத்துக் கொள்கிறார்கள். நான் அப்போதே சந்தேகப்பட்டேன் என்று பிறகு தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் அப்படி வரவழைத்துக் கொண்டதே தாங்கள் தான் என்பதை அறிவதில்லை.

மூன்றாவது அதீத ஆர்வம் - ஒரு மனிதன் எதில் எல்லாம் அதீத ஆர்வம் காட்டுகிறானோ அதுகுறித்து மேலும் ஞானமும், அனுபவங்களும் தரக் கூடிய மனிதர்களையும், சந்தர்ப்பங்களையும் காந்தமாக ஈர்த்துக் கொள்கிறான்.

ஆன்மீக ஆர்வம் அதிகமாக இருந்த விவேகானந்தரை ராமகிருஷ்ண பரம்ஹம்சரிடம் அழைத்துச் சென்றது அந்த காந்த சக்தியே. அதே போல் ஆன்மீகம் என்ற பெயரில் சித்து வித்தைகளில் அதிக ஆர்வம் காட்டுபவர்களைப் போலிச் சாமியார்களை சந்திக்க வைப்பதும் அந்தக் காந்த சக்தியே. இப்படி அவரவர் ஆர்வம் காட்டும் விஷயங்களில் ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே அவன் அனுபவங்களை விருத்தி செய்யக் கூடியவை அவனை வந்து சேருகின்றன.

ரமண மகரிஷி தானாகப் போய் ஆன்மிகப் பிரசாரம் செய்ததில்லை. சிஷ்யகோடிகளைச் சேர்த்ததில்லை. திருவண்ணாமலையை அடைந்த பிறகு அந்த ஊரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. பல நாட்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்திருக்கிறார். ஆனாலும் அவரது ஆன்மீக காந்த சக்தி இந்தியாவில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பல ஆன்மீகவாதிகளை அவரிடம் வரவழைத்த அதிசயத்தைக் கண்டிருக்கிறோம்.

ஆகவே தற்போது நம்மிடம் உள்ளதும், இது வரை வந்ததும் நாம் காந்தமாகக் கவர்ந்தவையே. நாம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் மேலே குறிப்பிட்ட மூன்று வழிகளில் வர வைத்திருக்கிறோம். பிற காந்தங்களால் நாம் கவரப்படுவதும் இந்த விதிகளின் படியே. பிரபஞ்சம் இந்த மூன்றின்படியே எல்லாவற்றையும் நமக்கு வினியோகித்திருக்கிறது.

இந்தப் பேருண்மை நம்மை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்துகிறது. வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நமக்குள்ள சுதந்திரத்தை இது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மூன்றில் முதல் விதியான கர்மாவால் வந்தது நமது பழைய சுதந்திரமான செயல்களின் விளைவு என்பதால் அதைத் தவிர்க்கும் சக்தி மட்டும் நமக்கில்லை. அதை அனுபவித்து தீர்த்துக் கொள்ளுதலே ஒரே வழி.

இரண்டாவது, ஆழ்மன நம்பிக்கைகள். நோய்க்கிருமிகளின் சக்தி மேல் பலமான நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமே நோய்வாய்ப்படுகிறான். தன் உடலின் எதிர்ப்பு சக்தி மீது நம்பிக்கை வைத்திருப்பவன் சீக்கிரமாக நோய்வாய்ப்படுவதில்லை. அப்படியே நோய் வந்தாலும் வந்த வேகத்தில் அது போயும் விடுகிறது என்று இன்றைய மருத்துவம் கண்டுபிடித்து இருக்கிறது.

ஆழ்மனதில் முன்பே வைத்திருக்கும் தவறான நம்பிக்கைகளை உடனடியாக மாற்றிக் கொள்வது சிறிது கஷ்டமே என்றாலும் அது முடியாததில்லை. நாம் எதை பலமாக நம்புகிறோம், எதை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பட்டியலிட்டு அதில் தேவையற்றவற்றையும், தவறானவற்றையும் நீக்கிக் கொள்ளுதல் நலம்.

அதற்கு எதிர்மாறான நல்ல விஷயங்களைப் பற்றி படித்தும், கேட்டும், அப்படி வாழ்பவர்களின் சகவாசத்தை வளர்த்துக் கொள்ளுவதும் சிறிது சிறிதாக நம் ஆழ்மன நம்பிக்கைகளை நல்ல திசையில் திருப்பும். நம் முன்னோர்கள் இதன் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்து நல்ல மனிதர்களின் சேர்க்கையை "சத் சங்கம்" என்ற பெயரில் வலியுறுத்தியுள்ளார்கள்.

மூன்றாவதான ஆர்வம் நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டும் போது நல்ல எண்ண அலைகளை நாம் ஏற்படுத்துகிறோம். அவை பலப்படும் போது நன்மையைப் பெருக்குகின்ற பலதும் நம் வாழ்வில் வந்து சேர ஆரம்பிக்கும். நாம் எதில் அதிக ஆர்வம் காட்டுகிறோம் என்பதை முதலில் கவனியுங்கள்.

அடுத்தவர்களின் தவறுகளைக் கண்டுபிடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் தன் தவறுகளை வளர்த்துக் கொள்கிறான். சில்லரை விஷயங்களிலேயே அதிக ஆர்வம் காட்டுபவன் அந்தத் தரத்திலேயே சாதித்து மடிகிறான். ஆர்வத்தின் தரத்தைப் பொறுத்தே பெறுகின்றதன் தரமும் அமையும்.

நீர் நிறைந்திருக்கும் டம்ளரில் பாலை நிரப்ப வேண்டுமானால் முதலில் நீரைக் கொட்ட வேண்டும். பின்பு தான் அதில் பாலை நிரப்ப முடியும். அது போல அற்ப விஷயங்களில் ஆர்வம் காட்டிக் கொண்டு பெரிய சாதனைகள் புரிய நாம் கனவு காண்பது வீணே. முதலில் அற்பங்களை அப்புறப்படுத்துங்கள். மேற்போக்கான ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் ஆர்வம் உங்களிடம் ஆழமாக இருக்குமானால் மட்டுமே அது காந்தத் தன்மை பெறும்.

எனவே இது வரை நாம் கவர்ந்தவற்றின் கணக்கை நம் வாழ்வில் ஆராய்வோம். எதற்கும் யாரையும் குறை கூறாமல் கவர்ந்து பெற்றதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வோம். இனி எதைக் கவர வேண்டும் என்று சிந்தித்து அவற்றை நம் மனதில் ஆழப் பதிப்போம். அதற்கான ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி அதைப் பலப்படுத்துவோம்.

இப்படி புதிய காந்த சக்தியை நம்மில் வளர்த்துக் கொண்டால் மீதியை இந்த பிரபஞ்ச விதிகள் பார்த்துக் கொள்ளும். வாழ்க்கை சிறப்படையும். அதற்குத் தேவையான சூழ்நிலைகள் நம் வாழ்வில் அமைய ஆரம்பிக்கும். சந்தர்ப்பங்கள் உருவாகத் துவங்கும். உதவும் படியான மனிதர்கள் நம் வாழ்வில் வந்து சேர்வார்கள். கனவுகள் மெய்ப்படும்...

நான் வெற்றி பெற்றால் என் மருத்துவமனையில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிப்பேன் - ஏ.சி. சன்முகம்...


https://youtu.be/7qDQ20lpSas

Subscribe The Channel For More News...

அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான உலக வானிலை தினம்...


தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பல இடங்களில் வெப்பம் 42 ° செல்சியஸை நோக்கி உயர்கிறது.

இது வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் வரும் நாட்களில் படிப்படியாக அதிகரிக்கக் கூடும்.

அருணாச்சல பிரதேசம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் சில இடங்களில் இன்று மழை பெற வாய்ப்புள்ளது.

இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை கணிப்பு பின் வருமாறு.

அளவு செல்சியஸில்.

ஸ்ரீநகர் 11, 4
தில்லி 31, 18
குவஹாத்தி 31,19
கொல்கத்தா 36,19
அகமதாபாத் 38,20
மும்பை 31,26
ஐதராபாத் 39,24
திருப்பதி 40,22
பெங்களூரு 35, 22
சென்னை 35,26
திருவனந்தபுரம் 34,27
கன்னியாகுமரி 33,27

தகவல்: வானிலை செந்தில்குமார்...

வன்னியர்கள் என்றால் இலக்காரமா முக்குளத்தோர் மட்டும் தான் முக்கியமா? டிடிவியை உலுக்கும் தொண்டர்கள்...


https://youtu.be/CyNepemBtV8

Subscribe The Channel For More News...

உச்சக்கட்ட பேரம்.. கட்சி மாறும் முக்கிய தலைகள்.... தொண்டர்கள் அதிருப்தி...


லோக்சபா தேர்தல், சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வில், 'சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த முக்கிய பிரமுகர்கள், தி.மு.க.,விடம் பேரம் பேசுவதாக தெரிகிறது.

அ.ம.மு.க.,வில், மாவட்ட செயலர் பதவி வகித்த, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அக்கட்சி துணை பொதுச்செயலர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தி.மு.க.,வில் இணைந்தார்.

அவருக்கு, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என, தி.மு.க., தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க.,வில் வாய்ப்பு அளிக்கவில்லை. அதிருப்தி அடைந்த அவர், சமீபத்தில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தார். தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதற்கு பரிசாக, அவருக்கு அடுத்த சட்டசபை தேர்தலில், சீட் வழங்க, தி.மு.க., தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அ.ம.மு.க., சார்பில், மத்திய சென்னையில் போட்டியிட, மாவட்ட செயலர் கலைராஜன் விரும்பினார். ஆனால், அந்த தொகுதியை, கூட்டணி கட்சியான, எஸ்.டி.பி.ஐ.,க்கு, அ.ம.மு.க., ஒதுக்கியது. இதனால், அதிருப்தி அடைந்த கலைராஜன், திருச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.

அவருக்கும், அடுத்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இப்படி, அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில், சீட் கிடைக்காத பிரமுகர்கள், பேரம் பேசி, தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்...

டெல்டா பகுதி வாக்காளர்கள் கவனத்திற்கு...


பிரபஞ்சத்தின் இயக்க விதி...


உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை, உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள், நமக்கு அது தெரியவில்லை ?

அந்த ரசசியம் என்னவென்று பார்ப்போம்...

நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம், ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன, அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம்.

நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் நீங்கள் இப்போது  ஈர்த்து கொண்டு இருகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களது ஒவ்வொரு எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான மெய்பொருள் தான். அது ஒரு சக்தி.

பிரண்டிஸ் மல்போர்ட் (1834-1891) இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள்.

வில்லியம் ஷேக்ஸ் பியர், ராபர்ட் பிரௌனிங், வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள்.

இன்னும் பல பேர் தங்களது இசை மூலமும், ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள்..

இந்து மதம், புத்த மதம், யூத மதம்,  கிருத்துவ மதம், இஸ்லாம், ஹீர்மேடிக் பாரம்பரியம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன.

காலத்தின் மூலதோடையே இவ்விதி உதித்தது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும், ஒவ்வொரு செயலையும், நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது.

இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள் தான், அதை நீங்கள் உங்களது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள்.

இதற்கு இன்னொரு பெயரும் உண்டு "படைப்பு அமைப்பின் சகலமும் சார்ந்து இருக்கும் ஒருபோது பிறலாத மாபெரும் விதி" மெய்யறிவு படைத்தோர் இதை எப்போதும் அறிந்து இருந்தனர்.

பண்டைய காலத்தில் பாபிலோனியர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து இருப்பார்கள், உலகில் உள்ள தொங்கும் தோட்டத்தை உருவாகிய பெருமை அவர்களுக்கு உண்டு.

பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு அதை பயன்படுத்தியது மூலம் வரலாற்றிலேயே அவர்கள் செல்வசெழிப்பான முறையில் வாழ்ந்தார்கள்.

மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் செல்வத்தை ஈர்த்தவர்கள் (அதாவது சம்பாதித்தவர்கள்) இந்த ரகசியத்தை தெரிந்தோ தெரியாமலோ உபயோகபடுத்தி உள்ளார்கள்.

அவர்கள் எப்போது அபரிவிதமான செல்வ செழிப்பான எண்ணங்களை எண்ணி கொண்டிருகின்றனர்.

அதற்கு நேர் மாறான எண்ணங்களை அவர்கள் மனதில் எழாமல் பார்த்து கொண்டனர்.

அவர்கள் மனது முழுவது எப்போதும் செல்வ செழிப்பு பற்றி மட்டும் தான் எண்ணிக் கொண்டு இருகிறார்கள்,  அவர்களிடம் இருந்த செல்வ செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்கு செல்வங்களையும், செழிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்து உள்ளன.

அது தான் ஈர்ர்பு விதியின் இயக்க விதி.. இன்னும் ஈர்க்கும்...

அல்சர் நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்...


https://youtu.be/QaoS-OW-Lng

Subscribe The Channel For More News...

நோய்களும் உணர்வுகளும்...


நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.

நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.

அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.

இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன...

அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை..

இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.

சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன.

இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்...

1. பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை)..

2. வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை).

3. பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை).

4. தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.

நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.

எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.

இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள்.

இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள்...

தமிழினமே தயாராக இருங்கள்...


சிங்கப்பூரில் இந்தித் திணிப்பு...


இந்திய மொழிகளில் தமிழ் தான் சிங்கப்பூரில் அரசாங்க மொழி, வேறு எந்த இந்திய மொழியும் அல்ல. படத்தில் காணப்படும் சீனம், மலாய், ஆங்கிலம் அரசாங்க மொழியுடன் நம் தமிழ் இல்லாதது கண்டிக்கதக்கது. இதை தகுந்த நிர்வாக அமைப்புடன் எடுத்துச் சொல்ல வேண்டும். இது நமது உரிமை.

Relevant authorities should know that Tamil is one of the official four languages in Singapore and not other Indian languages. Media must know this...

திமுக - கம்யூனிஸ்ட் ஓட்டு கேட்டு வராதீர்கள் - மதுரை மக்கள்...


திருட்டு திராவிடத்தின் இருட்டு வேலைகள்...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் வாழ்க்கையை தியாகம் செய்து, ஆண்டாண்டு காலமாக தமிழ் மண்ணை தெலுங்கர்கள் ஆள வழிவகைகளை தேடித்தேடி அமைத்து வைத்தார்...

தமிழ் மண்ணில் வாழும் திருட்டு திராவிட வடுக தெலுங்கு கூட்டங்கள் அரசுப் பணிகளிலும், அரசியல் அதிகாரப் பதிவிகளிலும் தமிழர்கள் கையில் கிடைத்து விடாமல் இருக்க தீவிர களப்பணி ஆற்றி இருக்கிறார்.

தமிழ் இனத்தின் அனைத்து குல மக்களுக்கும் இலவச கல்வி கிடைத்திட செய்த காமராசரின் சாதனையை திராவிடர்கள் திருடி ஈரோடு வேங்கட ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

திருட்டு வடுக திராவிட கூட்டங்கள் சாதி, மதம் தவிர்த்து தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு நல்லது செய்திருக்கிறார்களா இல்லை...

எதற்கெடுத்தாலும் தமிழ் இனத்திடம் சாதி, மத வேறுபாட்டை மட்டுமே பேசி தமிழ் இன மக்களை பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர, வேறென்ன தெரியும் இந்த திருட்டு திராவிடர்கள் அரசியல் கட்சி வெங்காயங்களுக்கு...

யாரப்பா இங்கு பெரியார்...?

தமிழ் மண்ணுக்கும், மக்களின் நலனுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை களத்தில் நின்று போராடிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா மட்டுமே தமிழ் இனத்தின் பெரியார்....

தமிழர் மண்ணை தெலுங்கன் மட்டுமே ஆளவும், திராவிடர்கள் மட்டுமே சிறப்பாக வாழவும் வழிவகைகளை ஏற்படுத்தி செத்துப் போன ஈரோடு வேங்கட ராமசாமி நாயக்கர் அல்ல தமிழர்களுக்கு பொரியார்....

இவ்வளவு விளக்கமாக பேசும் திராவிட பக்தர் கூட்டங்கள் ஏன் மதுபான ஆலை நடத்தும் (திமுக, அதிமுக), புகையிலை தொழிலில் (வையாபுரி கோபால் நாயுடு மகன்) பங்குதாரராக இருப்பதை எதிர்க்காதது ஏன் ?

அதை எதிர்க்காமல் தமிழ் தேசியத்தை வளர விடாமாட்டோம் என்று தமிழர்களின் ஒற்றுமை எழுச்சியை அழிப்பதற்கு மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது ஏன்?

ஒருத்தனுக்கும் டெபாசிட் கிடைக்காது போலயே...


காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்ற நடிகர் மன்சூர் அலிகான்.. என்ன இப்படி ஆயிட்டாரு...


திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் தொகுதியில் தான் வெற்றி பெற்றால், துண்டிக்கப்பட்ட கண்மாய்கள் சீர் செய்யப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றும், நிலக்கோட்டை பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மன்சூர் அலிகான் உறுதி அளித்து வருகிறார்.

கடந்த ஒருமாதகாலமாக திண்டுக்கல் மாவட்ட மக்களை சந்தித்துப் பேசி வரும் அவர், தனது வழக்கமான அனல் பறக்கும் பேச்சால் திண்டுக்கல்லை கலக்கி வருகிறார்.

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி கரும்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு சென்று விவசாயிகளை சந்திப்பது, அவர்களுடன் சேர்ந்து விற்பனை செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது என வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் மன்சூர் அலிகான் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்...

உயிர்வாழ தேவைப்படும் செலவுகள் மட்டுமே தோராயமாக கணக்கிடப்பட்டது... ஆடம்பர செலவுகள் சேர்க்காமல்...


திருட்டு திராவிடத்தை விழ்த்துவோம் தமிழா...


வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ..

இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ..

மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை..

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.

திராவிடத்தை விட்டு ஒழி..
தமிழா சிந்திபீர்..
எழு தமிழா எழு..

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று
வீறு நடை போடுவோம்...

அண்ணன் பொட்டு அம்மான் உயிரோடு தான் இருக்கிறார்...


மரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை...


பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம் தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.

கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது...

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும்.

எனவே தான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.

மரம் முழுவதும் மருந்தாக இருக்கும் முருங்கையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள்...