24/03/2019

பிரபஞ்சத்தின் இயக்க விதி...


உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை, உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள், நமக்கு அது தெரியவில்லை ?

அந்த ரசசியம் என்னவென்று பார்ப்போம்...

நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம், ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன, அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம்.

நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் நீங்கள் இப்போது  ஈர்த்து கொண்டு இருகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களது ஒவ்வொரு எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான மெய்பொருள் தான். அது ஒரு சக்தி.

பிரண்டிஸ் மல்போர்ட் (1834-1891) இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள்.

வில்லியம் ஷேக்ஸ் பியர், ராபர்ட் பிரௌனிங், வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள்.

இன்னும் பல பேர் தங்களது இசை மூலமும், ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள்..

இந்து மதம், புத்த மதம், யூத மதம்,  கிருத்துவ மதம், இஸ்லாம், ஹீர்மேடிக் பாரம்பரியம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன.

காலத்தின் மூலதோடையே இவ்விதி உதித்தது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும், ஒவ்வொரு செயலையும், நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது.

இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள் தான், அதை நீங்கள் உங்களது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள்.

இதற்கு இன்னொரு பெயரும் உண்டு "படைப்பு அமைப்பின் சகலமும் சார்ந்து இருக்கும் ஒருபோது பிறலாத மாபெரும் விதி" மெய்யறிவு படைத்தோர் இதை எப்போதும் அறிந்து இருந்தனர்.

பண்டைய காலத்தில் பாபிலோனியர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து இருப்பார்கள், உலகில் உள்ள தொங்கும் தோட்டத்தை உருவாகிய பெருமை அவர்களுக்கு உண்டு.

பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு அதை பயன்படுத்தியது மூலம் வரலாற்றிலேயே அவர்கள் செல்வசெழிப்பான முறையில் வாழ்ந்தார்கள்.

மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் செல்வத்தை ஈர்த்தவர்கள் (அதாவது சம்பாதித்தவர்கள்) இந்த ரகசியத்தை தெரிந்தோ தெரியாமலோ உபயோகபடுத்தி உள்ளார்கள்.

அவர்கள் எப்போது அபரிவிதமான செல்வ செழிப்பான எண்ணங்களை எண்ணி கொண்டிருகின்றனர்.

அதற்கு நேர் மாறான எண்ணங்களை அவர்கள் மனதில் எழாமல் பார்த்து கொண்டனர்.

அவர்கள் மனது முழுவது எப்போதும் செல்வ செழிப்பு பற்றி மட்டும் தான் எண்ணிக் கொண்டு இருகிறார்கள்,  அவர்களிடம் இருந்த செல்வ செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்கு செல்வங்களையும், செழிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்து உள்ளன.

அது தான் ஈர்ர்பு விதியின் இயக்க விதி.. இன்னும் ஈர்க்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.