28/08/2021

அமைதியான மனதை அடைய என்ன வழி?

 


தியானம் தான். தியானம் ஒன்று மட்டுமே நம் மனதைப் பண்படுத்தி நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இப்போது விடக்கா என்றச் சொல்லைப் பற்றிச் சொல்கிறேன்.

பாலி மொழியில் டக்கா என்றால் தர்க்கம் எனப்படும். விடக்கா என்றால் மனிதனின் அலைபாயும் மனதைக் குறிக்கும்.

அன்றாட வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து நம்மை மூழ்க வைக்கும். இந்த நிலையை விடக்கா என்று சொல்லலாம்.

இந்த நிலை நமக்குள் இருக்கும் நமக்குள் இருக்கும் சக்தியை உணரவிடாமல் செய்கிறது.

பிரமிட் தியானம் இந்தச் சக்தியைக் கொடுக்கிறது. இதை ஆனாபானா சதி என்ற பெயரில் அழைக்கின்றனர். இதை ஒழுங்காகச் செய்தால் இந்த விடக்கா என்ற பலதரப்பட்ட எண்ண ஓட்டங்களிலிருந்து விடுபடலாம். மனம் சலனமற்ற நிலையை அடைகிறது.

ஆனாபானாசதி, பாலி மொழியில் ஆனா என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு. அபானா என்றால் வெளியே விடும் முச்சு. சதி என்றால் உடன் இருத்தல். அதாவது உள்மூச்சு வெளிமூச்சுடன் நாம் உடன் இருக்க வேண்டும். அப்படியே ஒன்ற வேண்டும். அதையே உன்னிப்பாய் கவனிக்க வேண்டும். இயற்கையாக சுவாசித்தலைக் கவனிக்க வேண்டும். இந்த தியானம் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

இதைச் செய்யும் முறை...

வசதியான விதத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொள்ளுங்கள். எல்லா உறுப்புக்களையும் தளர்த்திக் கொள்ளுங்கள். மனதால் எல்லா உறுப்புக்களும் தளர்ந்து விட்டதை உணருங்கள். பின் தியானம் ஆரம்பம்.

மூச்சு உள்ளே, வெளியே செல்வதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வந்து போகலாம். அது தானாகவே வந்து போய், பின் அடங்கி விடும். அதைக் கட்டுப்படுத்தாதீர்கள். எண்ணங்களின் மேல் இருக்கும் கவனிப்பை விடுத்து சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.

நம் மூக்கு தான் பிரமிட் என்று எண்ண வேண்டும். கொஞ்ச நேரத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் மலர்ந்து விரிவதைப் பார்க்கலாம். இதைச் செய்வதால் பிராணசக்தி நம் உடலில் பெருகுகிறது. மனம் தெளிவு பெறுகிறது. உணர்ச்சிப் பெருக்கில் நல்ல மாற்றம் உண்டாவது நமக்குத் தெரிகிறது. ஒரு சாந்த நிலை ஏற்படுகிறது. ஆன்மா ஊக்கப்படுகிறது. இந்தத் தியானம் ஆரம்பத்தில் பத்து நிமிடங்கள் செய்யலாம். பின் நன்கு பயிற்சி ஆனபின், 60 நிமிடம் வரை செய்யலாம்.

எகிப்து தேசத்தின் பிரமிட்கள் சுமார் 5000 வருடங்கள் பழமையானவை. இறந்த உடல்கள் இங்கு கெடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். . பிரமிட்டின் கீழே தூங்குபவர்களுக்கு ஹைபர்டென்சன், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் மறைகின்றன.

விஞ்ஞானி லியால் வாட்சன் சொல்கிறார், சிறிது நேரம் இதன் கீழ் அமர்ந்து மௌனமாகக் கண்களை மூடினாலும் கூட அது பலனைக் கொடுத்து விடுகிறது. மன அழுத்தம் மிகப்பெருமளவில் குறைந்து விடுகிறது.

பிரமிட் வடிவ டப்பாவில் நகைகள் அப்படியே புதுப் பொலிவுடன் இருக்கின்றன. சிறிது நீரை இதனுள் வைத்துப் பின் முகம் கழுவ, முக சுருக்கம் மறைகிறது. முக லோஷன் போல் உதவுகிறது. காய்கறிகள் பிரமிட்டில் வைக்க அப்படியே வாடாமல் இருக்கின்றன, உணவுப் பொருட்களும் கெடுவதில்லை. தவிர, மருந்துகளும் பிரமிட் டப்பாவில் வைக்க கூடுதல் நன்மை அளிக்கின்றனவாம்.

தலைவலிக்கு பிரமிட் போன்று அட்டையில் வடிவம் அமைத்து தலையில் தொப்பி போல் வைத்துக் கொள்ள, தலைவலி மறைகிறது. சிலர் வீடுகளிலும் இந்த மாதிரி வடிவம் அமைத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் நாட்டில் கோயம்பத்தூரில் வடவள்ளி என்னும் இடத்தில் பெரிய பிரமிட் கட்டிடம் உள்ளது. இதனுள் அமர்ந்து பலர் தியானம் செய்கிறார்கள். இதில் மூன்று மாடிகள் உள்ளன. மூன்றும் பிரமிட் வடிவம் தான்.

இந்தத் தியானம் செய்யும் முறை மிக எளிது என்பதால் எல்லோரும் இதைச் செய்ய முடியும். இத்தனை உபயோகம் தரும் இதை நாம் வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்ளலாமே...

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா.?




மறக்க முடியாத இடத்தில் நீயும்..

வெறுக்க முடியாத இடத்தில் நானும்..

இருக்கும் வரை..

எதோ ஒரு ஓரத்தில் 
வாழ்த்துக்கொண்டே இருக்கும்..

நம் காதல்...

அதிமுக கலாட்டா...

 


பாஜக வை பற்றி தெரிந்து கொள்வோம்....

 


1) இந்திரா காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

2) ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

3) தீவிரவாதி ஆசாராம் பாபு வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி.

4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த வாரன் ஆன்டர்சனின் வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

5) ஊழல் பெருச்சாலி லலித் மோடி யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் வசுந்தரா ராஜி யின் கணவனும், மகளும்.

6) வொடபோன் வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

7) தீவிரவாதி அப்சல் குரு விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

8) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

9) கடத்தல் மன்னன் அலேமோ வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

10) சஹாரா ஸ்கேன் ஊழல் குற்றவாளி சுப்ராத் ராய் வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

இந்தியாவின் முக்கிய வழக்குகளில் பணத்துக்காக குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு தேச பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்...

போடா பிராடு கடவுள் 😁

 


கண்டா வரச் சொல்லுங்க... 😧

 


பிரபஞ்ச இரகசியம்...

 


உங்கள் பெயர் உங்களுக்கு சொந்தம் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துள்ளதுப் போல், உங்கள் தேவையான விருப்பமும் உங்களுக்கு சொந்தம் என்பதை அறியும் வரை உணர்வுப்பூர்வமாக அகக்காட்சியாக கற்பனை செய்யுங்கள்.

உங்களை இயக்கிக் கொண்டுயிருக்கும் அப்பேராற்றல் பிரபஞ்சத்தில் உள்ள அந்த நுண்ணிய காந்த களத்துடன் தொடர்புக் கொண்டு நீங்கள் விரும்பியதை  உங்கள் முன் தோற்றுவிக்கும்.

இதற்க்கு தேவை உங்கள் உள்யிருக்கும் இப்பேராற்றல் மீது நீங்கள் விஸ்வாத்துடான வைக்கும் முழு நம்பிக்கையே..

அவ்வளவுதான் எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை உணர்வுப்பூர்வமாக அகக்காட்சியில் பாவனை செய்யுங்கள்..

இம்முறையில் நீங்கள் எல்லாம் வல்ல இறைவனையும் உணரலாம் பாவனை ஒன்றே போதுமே பரமநிலை ஏய்துவதற்க்கே என்று பாரதியாரே கூறியுள்ளார்..

அப்பேர்ப்பட்ட பேராற்றல் நம்முள் உள்ளது அதை அன்போடு பயன்படுத்துவோம்...

இதையே இன்று ஆல்பா தியானம் என்று பயிற்சியும் அளிக்கப்படுகிறது...

பாலியல் ஜல்சா கட்டி எனும் பாஜக...

 


பாஜக எச். ராஜா சர்மா கலாட்டா...

 


திராவிட மாயை - கண்டு கொள்ளுவோம் கழகங்களை...

 


கண்டு கொள்ளுவோம் கழகங்களை.. மற்றும் திராவிட மாயை - ஒரு பார்வை..

இந்த இரண்டு புத்தகங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் எழுத்தப்பட்ட புத்தகங்கள். ஆனால் இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்.

திராவிடக் கட்சிகளின் மூதாதையர் வரலாறு, அக்கட்சிகளின் நிலையில்லாத கொள்கைக் கோட்பாடு போன்றவற்றின் போலித்தனம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றன இரண்டுமே.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை..

கண்டு கொள்ளுவோம் கழகங்களை என்ற கட்டுரைத் தொடர் மூலம் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள் எண்பதுகளில் துக்ளக் இதழில் எழுதி வந்தார். அவரது மகனும், 'அகடவிகட அக்கப்போர்' என்ற அரசியல் பத்திரிகையின் ஆசிரியருமான ஜெ.மோகன்ராஜ் அவர்கள் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறையினருக்குப் பல புதிய விஷயங்களைத் தரும் விதமாகவும், எண்பதுகளில் துக்ளக் இதழில் ஜெபமணியின் கட்டுரைகள் படித்து வந்த எம்மைப் போன்ற தலைமுறையினருக்கு மீண்டும் நினைவூட்டும் விதமாகவும் அமைந்துள்ளன இந்தக் கட்டுரைகள்.

இந்தத் தொகுப்பிலிருந்து சில சுவாரசியமான விஷயங்கள்:

1942ல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டப் போராட்டமாக, இனி போராட்டமே கிடையாது... வெள்ளையனே வெளியேறு... மக்களே... செய்யுங்கள் அல்லது செத்து மடியுங்கள் என்று அறிவிக்க, அண்ணாதுரை அவர்கள் கிண்டலாக தம்பிமார்களுக்கு பின்வருமாறு எழுதினாராம்.

தம்பி காந்தியாருக்கு நல்ல பைத்தியம் பிடித்திருக்கிறது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது. ரெயில் ஓடாது. தந்தி இருக்காது. டேலிபோன் இருக்காது. ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்த்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூடச் செய்ய முடியாது. புரிகிறதா தம்பி?

நீதி கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் மதச்சின்னங்களை அணிவார்கள். சர்.ராமசாமி முதலியார், சர்.பி.டி.ராஜன் போன்ற நீதிக்கட்சியின் தலைவர்கள், நெற்றியில் மதக்குறி இல்லாமல் வெளியே வரவே மாட்டார்கள்.

தூத்துக்குடியில் புதுக் கிராமக் கொடுமைகள் பற்றி குறிப்பிடுகின்றார் ஜெபமணி. ஆனால் விபரங்கள் தரவில்லை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்குக் கொடுமைகள் போலும்.

நீதிக் கட்சியில் இருந்த அமைச்சர்கள் பெற்ற மாதச் சம்பளம் 5333 ரூபாய், 5 அணா, 4 பைசா. அவர்கள் காலத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 13 ரூபாய் 8 அணா. அரிசி ரூபாய்க்கு 18 படி கிடைத்து வந்தது. நீதிக் கட்சியின் அமைச்சர்கள், அன்று அவர்கள் வாங்கிய சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் 395 சவரன்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அண்ணாதுரை எழுதியது பற்றிக் குறிப்பிட்ட ஜெபமணி, ஜஸ்டிஸ் என்பதில் மூன்று வட எழுத்துக்கள். ஒன்றுதான் தமிழ் எழுத்து. அதை மூன்று வடமொழி எழுத்துக்களுடன் அப்படியே எழுத அண்ணாதுரைக்குத் தயக்கமில்லை. ஆனால் இராஜாஜி என்பதை இராசாசி என்று மட்டும் எழுதுகிறார், என்கிறார்.

டால்மியாபுரம் (கல்லக்குடி) என்ற ஊரின் பெயரை மாற்ற வேண்டுமென்று புறப்பட்டவர்கள். மதுரையிலுள்ள ஹார்விபட்டி யினை ஏன் எதிர்க்கவில்லை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையினை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்கின்றார் ஜெபமணி.

தேசிகாச்சாரி சாலை, தேசிகா சாலை ஆனது. ஆனால், தியாகராய நகரிலுள்ள டி.எம்.நாயர் சாலை மட்டும் மாறாமல் இருக்கிறது. முரணைச் சுட்டிக் காட்டுகின்றார்.

பகுத்தறிவு உள்ளவர் ஒருவர் வீட்டில் திருமணம் நடந்ததாம். அவர். பகலில் திருமண வீட்டில் குத்து விளக்கா... எவ்வளவு அறீவீனம்? என்று சொல்லி விளக்கை ஊதி அணைத்தாராம். அவர் இப்போது சட்ட சபை உறுப்பினராகத் தான் இருக்கிறார். (யார் இதுவெனத் தெரியவில்லை.) அன்னார் அண்ணா சமாதியில், பகலிலும் எரியக்கூடிய விளக்கைப்பற்றி ஒன்றும் சொல்லவும் இல்லை. பகுத்தறிவுக்கு இது விரோதமாச்சே என்று அவர் அதனை அணிக்கவும் இல்லை.

ஹிந்தி போராட்டத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றின் முடிவில், மதுவைக் குடிக்கச் உதவியவர்கள், மொழியைப் படிக்க உதவ மறுத்ததேன்? மதுவை விட மொழி கொடியதா என்று வினவுகின்றார் ஜெபமணி.

தியாகிகளுக்கும், இராணுவத்தினருக்கும் நிலமற்ற ஏழைகளுக்கும்தான் அரசு நிலங்கள் கொடுக்கப்படும். இதுதான் அரசின் கொள்கை. அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வருக்கு, சத்யா ஸ்டுடியோ அருகில் உள்ள, பல இலட்சங்கள் பெறுமானமுள்ள, அரசுக்குச் சொந்தமான நிலத்தைக் கொடுத்தார். என் சொத்து பூராவும் மக்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளும், இந்நாள் முதமைச்சர் தாம் இலவசமாகப் பெற்ற அரசு நிலத்தை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று சாடுகின்றார் ஜெபமணி. (அட்டைப் படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் படமும் சேர்த்திருப்பதால், இது அவரைப் பற்றிய செய்தியாக இருக்கும் என்று யூகிக்க முடிகின்றது.)

பெயர்: கண்டு கொள்ளுவோம் கழகங்களை..

ஆசிரியர்: தியாகி நெல்லை ஜெபமணி

பதிப்பு: முத்துமாலையம்மன் பதிப்பகம், கிழக்கு அபிராமபுரம், சென்னை-4

பதிப்பசிரியர்: ஜெ.மோகன்ராஜ்

கிடைக்குமிடம்: அகடவிகட அக்கப்போர் அலுவலகம், தணிகாசலம் தெரு, ஹிந்தி பிரச்சார சபா எதிரில். தி.நகர், சென்னை-17.

பக்கங்கள்: 254, விலை: Rs.100...

கணவன் Vs மனைவி கலாட்டா...

 


கணவனின் தலையை மடியில் வைத்து தடவிக்கொண்டே மனைவி...

கல்யாணத்துக்கு முன்பு தலைவலி வந்தால் இதைப்போல் யார் உங்களுக்கு தடவி விடுவார்கள்...?

கலங்கிய கண்களுடன் கணவன் இதயத்தை தொட்ட பதில்...

கல்யாணத்துக்கு முன் எனக்கு தலைவலி வந்ததே இல்லை...

😊🤣🤣🤣

பிராடு திமுக ஸ்டாலினின் பித்தலாட்டங்கள்...