போக்குவரத்து துறை:
1. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நிலத்தடி தொடர்வண்டி (மெட்ரோ) போக்குவரத்து.
2. நகரப்பேருந்துகள் தொலைவிலுள்ள கிராமங்களுக்கு மட்டுமே. நகரங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.
3. நகரமயமாக்கம் குறைக்கப்படும். அனைத்து ஊர்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
4. அனைத்து தமிழக தொடர்வண்டிகளும் பேருந்துகளும் மின்மயமாக்கப்பட வேண்டும்..
வாகனப்புகையற்ற சுகாதார தமிழ்நாடு உருவாக்க வேண்டும்..
5. அனைத்து பேருந்துகளும் சீரான வேகத்துடனும், பாதுகாப்புடனும் செல்லும் வகைச் செய்து கண்காணிப்போடு விபத்தை தடுக்கப்பட வேண்டும்..
6. மிக முக்கியமாக நீர் வழிப்போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும்...
1. ஆற்று வழி நீர்ப் போக்குவரத்து:
1. தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் திருநெல்வேலி, திருநெல்வேலியில் இருந்து புன்னைக்காயல் வழியாய் தூத்துக்குடி வரை.
2. காவிரி, பவானி ஆறுகளில் மேட்டூரிலிருந்து ஈரோடு, சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு, ஈரோடு-கரூர்-திருச்சி-சிதம்பரம், திருச்சி-தஞ்சாவூர், திருச்சி-நாகூர்.
3. வைகையில் தேனீ-மதுரை, மதுரை-பரமக்குடி
இவைதவிர...
2. கடல்வழி நீர்ப் போக்குவரத்து :
சென்னை-மகாபலிபுரம்-பாண்டிச்சேரி-கடலூர்-சிதம்பரம்-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி-கோடியக்கரை-மணமேல்குடி-தொண்டி-இராமேஸ்வரம்-கீழக்கரை-தூத்துக்குடி-திருச்செந்தூர்-உவரி-கன்னியாகுமரி-குளச்சல்.
என அமையும் 1000 கிலோமீட்டருக்கான கடல்வழிப்போக்குவரத்தின் பயன்கள்:
1. தரைவழிப் போக்குவரத்து (சென்னை-விழுப்புரம்-திருச்சி-மதுரை-நெல்லை-கன்னியாகுமரி வரை) (பேருந்து-தொடர்வண்டி) நெரிசலைக் குறைக்கும்.
2. அதிக செலவில்லா போக்குவரத்தாக அமையும். கடலில் ஒவ்வோர் ஆண்டும் சாலை போடும் தேவையே இருக்காது. தஞ்சையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் செல்லும் கப்பல், சூரிய ஒளி கப்பல் என அமையும்.
3. சுற்றுலா பெருக்கும் வழிமுறையாக அமையும். கப்பலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தவிர உள்ளூர் மக்களும் விரும்புவர். ராமேஸ்வரம்-தூத்துக்குடி வரை உள்ள 12 தீவுகளில் தங்கும் விடுதி வசதி போன்றவை அமைக்க வேண்டும்..
சென்னைக்குள்ளேயே புலிகாட் ஏரி, எண்ணூர் லிருந்து திருவொற்றியூர், பாரிமுனை, சாந்தோம், பட்டினம்பாக்கம், நீலாங்கரை, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை வரை நகரப்பேருந்து போல படகு இயக்க வேண்டும்...