11/04/2019

அகாரசாதகம்...


உயிரெழுத்துகளாகிய ஆ, ஈ, ஊ, என்ற அகார, இகார, உகார உயிரினாலேயே சுரங்களைப் பாடுதல் வேண்டுமென்பது நம் மூதாதியினர்களின் கருத்தாகும்.

அதாவது ஒவ்வொருவரின் தொண்டையிலிருந்து வரும் உயிரொலியானது சுருதியோடு ஒன்றி ஆ- என்றோ, ஈ-என்றோ, ஊ-என்றோ எது பொருந்துமோ அதைக் கூறி, ஏழிசைகளையும் இயற்றுதல் வேண்டுமாம்.

விளக்கம்...

ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ, ஆ
ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ, ஈ
ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ, ஊ
ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ, ஏ
ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ

இவ்வாறு ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று அகார, இகார, உகார முறையில் பாடும்போது, ஏழிசைகளும் இவ்வுயிர்களினால் தொடர்ந்து ஒலியோடு வரல் வேண்டும். இடைவெளிவிட்டுக் காணுதல் கூடாது.

இம்முறையை தான் “அகாரசாதம்” எனக் கூறுகின்றனர்...

பாஜக மோடி கலாட்டா...


பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்...


இணையத்தில் எதார்த்தமாக தேடலின் போது இந்த பெண் போல உருவம் கொண்ட  நரிலதா மலர் கண்களில்  தென்பட்டது.

மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய போது  கிடைத்த  செய்திகள் ஆச்சிரியப்பட வைத்தது .இந்த  நரிலதா மலர்  பூர்வீகம் இமயமலை  அடிவாரம் என்றும் 20 வருடங்களுக்கு ஒரு மட்டுமே பூக்கும் எனபதே ஆச்சிரியம்.

நரிலதா மலர் மரம்  இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து , இலங்கை நாடுகளில்  காணப்படுகிறது.

புத்த மத புராணப்படி இந்த மரத்தை கடவுள் படைத்தாக தெரிகிறது.அச்சு அசலாக பெண் நிர்வாணமாக இருக்கும் இந்த மலரை மனிதன் தான் உருவாக்கி இருக்க வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் இருந்து 500 கி.மீ தொலைவில் பெட்சபூன் என்ற இடத்தில் இருக்கிறது. 

தாய்லாந்தில் இந்த மரத்தை நாரிபோல் என்றழைக்கப்படுகிறது. நாரி என்றால் ஆண், பெண்ணையும் போல்
என்றால் மரத்தையும் குறிக்கிறது...

நடிகர் கமலால் நாசமானேன்.. உண்மையை போட்டுடைத்த நடிகர் விவேக்... பரபரப்பு புகார்...


https://youtu.be/UDxixrdawBQ

Subscribe The Channel For More News...

விண்வெளி ஆராய்ச்சியாளரா 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழன் மணிவாசகர்...


உலகம் உருண்டை தான் என்று நிரூபிக்கவே இந்த நவீன அறிவியல் திக்குமுக்காடியது என்பதே உண்மை.

அதன் பிறகே எல்லா கோள்களும் உருண்டை தான் என்றும், சூரிய குடம்பம் என்றும், பல சூரியன் உண்டென்றும், எந்த அண்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் பல நவீன இயந்திரங்களின் உதவியோடு அதுவும் எந்த தெளிவும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு யுகமாம்வே கூறிவருகிறது இன்றைய நவீன அறிவியலும் அதை சார்ந்த ஆய்வுகளும்.

இன்றைய நிலைமையே இப்படி இருக்க, 9 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழன் இந்த அண்டம் உருண்டை தான் என்றும், நூறு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும் உள்ளன என்றும் அடித்து கூறியுள்ளான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..

ஆம்.. இப்படியான பல அறிவியல் உண்மைகளை பற்பல நூறாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் இனத்தின் மூத்தோர்கள் தெளிவுற உரைத்துச் சென்றுவிட்டனர்.

சரி அந்த 9 நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் யார்? அவர் என்னதான் சொன்னார்? சற்றே பொறுமையாக படியுங்கள்.

அவர் பெயர் மணிவாசகர், திருவாசகம் இயற்றியவர். இவர் தான் பாடிய திருவாசகத்தில் திரு அண்டம் என்னும் பகுதியில் இந்த அண்டத்தின் வடிவம் பற்றியும் அவற்றில் நிறைந்திருக்கும் கோள்கள் பற்றியும் மிக விளக்கமாக கூறுவதை காண்போம்.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய

சிறியவாகப் பெரியோன் தெரியின்”

விளக்கம்:

இந்த அண்டம் உருண்டையாகவே பிறந்துள்ளது, மேலும் இந்த அண்டத்தில் நூற்றியொரு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும், சூரியன்களும்,சந்திரன்களும், பூமிகளும் நிறைந்து பறந்து விரிந்து கிடக்கிறது என்றும். இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தம் ஒளியை பகிர்ந்து கொள்கின்றன அதாவது ஒளியற்ற கோள்கள் கூட சூரியனின் அணுக்கதிர்களை உள்வாங்குவதால் ஒளியை சூடிக்கொள்கின்றன என்றும் கூறுகிறார்.

பூமியும், சூரியனும், சந்திரனும் மட்டும் அல்லாமல் இந்த அண்டமே உருண்டை தான் என்றும் அதில் நூறு கோடி விண்மீன்களும் கோள்களும் சிதறிக்கிடக்கிறது என்றும் இந்த மணிவாசகர் எந்த டெலஸ்கோப் வைத்து இதையெல்லாம் ஆய்ந்தார் என்பது தெரியவில்லை.

இப்படியாக ஒவ்வொரு தமிழனும் உலகம் வியக்கும் பலவற்றை வகுத்து தொகுத்து வழங்கி சென்றிருக்கிறான்.

ஆனால் இன்றைய நமது சமூகமோ, தமிழன் மூடன் என்றும் தமிழனுக்கு சுய அறிவு இல்லை என்றும் கூறிக் கொண்டுத் திரியும் மூடர் கூடமாகவே இருக்கிறது என்பதை எண்ணி நாம் நம்மையே கடிந்து தான் கொள்ள வேண்டும்...

சீனா வின் மருத்துவ கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறி வரும் தமிழகம்...


தமிழா இனமே எல்லை.. அதுவே அரண்...


மலையாளிகளுக்கு அமைப்புகள்  இருக்கின்றன... தமிழரையோ தெலுங்கரையோ மற்றவர்களையோ அதில் பார்க்க முடியாது.. சேர்க்க மாட்டார்கள்...

தெலுங்கருக்கு அமைப்புகள் இருக்கின்றன.. நூல் பிடித்தது மாதிரி தெலுங்கர்கள் மட்டும் தான் உள்ளே இருப்பார்கள்.. ஒரு தமிழரையோ மற்றவர்களையோ உள்ளே விடமாட்டார்கள்...

கன்னடர், பஞ்சாபியர், வங்காளியர். இத்தாலியர், இங்கிலாந்தியர் என்று
எல்லோருமே அப்படித்தான் இருகிறார்கள். அதாவது, மிகச் சரியாக இருகிறார்கள்..

ஆனால் எல்லா தமிழ் அமைப்புகளுக்குள்ளும் தெலுங்கர்கள் இருகிறார்கள் மற்றவர்களும் இருகிறார்கள்...

இருகிறார்கள மட்டுமல்ல..  பெரும்பாலானவற்றில் அவர்களே பொறுப்புகளில் இருகிறார்கள்..

இந்த இழிவுக்கு முட்டுக் கொடுக்க அந்தகாலத்துப் பராசக்தி படம் முதலே நமக்கு உசுப்பேத்திக் கொண்டே இருகிறார்கள்..

வந்தாரை வாழவைத்த தமிழ் நாடு  என்று.. இதைக் கேட்டு கேட்டு மெய் மறந்து மயங்கிக் கிடக்கிறார்கள் நம் தமிழர்கள்.. மயங்கிய நிலையில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து  எல்லாவற்றையும் உருவிக் கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாட்டிலுள்ள தமிழத் தேசிய அமைப்புகளின் தொடர் தேய்மானத்திற்கு பின்னணியில் இருப்பது திட்டமிட்ட ஊடுருவலே...

மார்சியம் பேசுவார்கள், பெரியாரியம் பேசுவார்கள், பொதுவுடைமை பேசுவார்கள், விடுதலைப் புலிகளைப் பற்றி பேசுவார்கள், ஈழம் பற்றி உருகுவார்கள், திராவிடம் பேசுவார்கள், தமிழ் பற்றிப் பேசுவார்கள்...

ஆனால் தமிழர், தமிழர் நாடு, தமிழர் அரசியல் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்..

விடுதலைப் பயணத்தில் இமயம் போன்று எதிரே நிற்கிற எதிரிகளைவிட எலிபோல இருக்கிற ஊடுருவல் தான் பேரிடர் நிறைந்தது..

நாடும் மொழியும் நம் இரு கண்கள்...

தமிழர் நாடு நமது இலக்கு....

டிடிவி தினகரனுடன் அண்டர்கிரவுண்ட் லிங்கில் 8 அமைச்சர்கள்.. 10 தொகுதிகளில் ஆட்டம் காணும் அதிமுக...


https://youtu.be/AZQLzhZ7ieQ

Subscribe The Channel For More News...

பாலியல் புகாரில் சிக்கிய பெரியகுளம் தொகுதி அமுமுக வேட்பாளர்...


தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு கதிர்காமு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்...

8 வழிச்சாலையை ஏன் திமுக ஆதரித்தது.? ரகசியத்தை போட்டுடைத்த டிடிவி. தினகரன்...


https://youtu.be/fIwzgwSReuU

Subscribe The Channel For More News...

கார்ப்பரேட் சதி...


பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி...

நேர்த்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி...

தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி...

தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி...

தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி...

உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி...

தாய்ப்பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி...

மாட்டுப்பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி...

சுகப்பிரசவம் என்பது இயற்கையின் விதி...

சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி...

யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி...

சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக்கூடாது என்பது கார்ப்பரேட் சதி...

யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி...

இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக்கூடாது என்பது கார்ப்பரேட் சதி...

பசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி...

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி...

ஆரோக்கியகிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி...

அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி...

நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி...

நோயைக்காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி...

எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி...

எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி...

மொத்ததில்...

மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி...

அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி..

திமுக கூட்டணி கதை முடிந்தது... சிக்கிய முக்கிய ஆதாரம்.. கலக்கத்தில் ஸ்டாலின், உ.பி.கள்...


https://youtu.be/0QLm9QP5v7w

Subscribe The Channel For More News...

இலுமினாட்டி ரோத்ஸசீல்டும் இந்திய வங்கிகளும்...


1934 ம் ஆண்டு ரூபாய். 100 மதிப்புள்ள பங்குகளாக முதல் பெறப்பட்டு இந்தியா ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.. கீழ் உள்ள படத்தில் உள்ளவர்கள் தான் அதன் பங்குதாரர்கள்.

ஆனால் 1949 ம் ஆண்டு பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை இந்தியா ரிசர்வ் வங்கி திரும்ப வாங்கி கொண்டது.  அன்று முதல் இந்தியா ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பித்ததது.

1947 ம் ஆண்டு அமெரிக்கா டாலருக்கு இணையாக இருந்த இந்திய ரூபாய் மதிப்பு இன்று 63 .91 பைசாவுக்கு மாறி உள்ளது. இதன் அர்த்தம் இந்திய மதிப்பு குறைந்துள்ளது.

இரண்டாம் உலக போருக்கு பணம் தேவை பட்டதால், பங்குதாரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியானது, போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட IMF (International Monetary Fund)யின் கீழ் வருகிறது.

IMF 1944 ல் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின் பேரில் 1949 ல் இந்தியா ரிசர்வ் வங்கி, பங்குதாரர்களுக்கு பணம் கொடுத்து, தனி சட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு கீழ் வருகிறது.

ஆனால் IMF யின் அதிகபட்ச பங்குதாரர் United States Department of the Treasary.

United States Department of the Treasary யின் அதிகபட்ச பங்குதாரர் Federal Reserve Bank of New York.

Federal Reserve Bank of New York யின் பங்குதாரர் ரோத்ஸசீல்டு..

நேரடியாக ரோத்ஸசீல்டு, இந்தியா ரிசர்வ் வங்கி யோடு தொடர்பு படுத்தி கொள்ளவில்லை ஆயினும், ரோத்ஸசீல்டு வசமே, இந்திய வங்கிகளும் உள்ளன.

ரூபாய் , தங்கம் , பெட்ரோல் மட்டும் அல்ல , bitcoin உருவாக்கி அதன் மதிப்பு நிர்ணயம் செய்வதும் ரோத்ஸசீல்டு குடும்பம் மட்டுமே...

மராட்டிய ரஜினி கலாட்டா...


போன தேர்தல் வாக்குறுதியிலும் இதையே தான்டா சொன்னாங்க வெண்ண...

துன்பம் நிரந்தரமாய் நீங்க...


துன்பம் வரும் போது அதை அப்படியே அனுபவியுங்கள். அதைக் கண்டு ஓட வேண்டாம். அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டு தான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும். மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது. நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும். அது மரண வலியாகத் தான் இருக்கும்.

அதை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம். தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும் போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ, அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால், அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ, அதனுடன் கலந்து விட்டீர்களோ, அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில் தான் உணர முடியும்...

கிள்ளாடிகள்.. இந்த 6 ராசிகாரர்கள் தான் சொல்லி அடிப்பார்களாம்...


https://youtu.be/pgeWm8cMO9w

Subscribe The Channel For More News...

ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை எப்போதோ அலட்டல் இல்லாமல் கண்டுபிடித்த தமிழன்...


நம் அனைவருக்கும் அரசன் கோச்சடையானை நம்மில் பலருக்கு தெரியும். அந்த அரசன் கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்றும் ஒரு பெயரும் உண்டு. இவர் தான் சோழர்கள், சேரர்கள் மற்றும் ஆந்திரர்கள் என்று இன்றைய தெற்கு பகுதியில் இருந்த அரசுகளை கைப்பற்றி பாண்டிய நாட்டை விரிவு படுத்தியவர்.

சோழர்களை வென்ற ஜடாவர்மன், அவர்களிடம் இருந்த விலை மதிப்பில்லாத செல்வங்களையும் கைப்பற்றினான். கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் தென்னகத்தில் உள்ள பல கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

தொண்டை மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு எண்ணற்றத் திருப்பணிகள் செய்தார். சிதம்பரம் நடராசர் கோயில், மற்றும் திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவில் இந்த இரண்டு கோவில்களும் தான் ஜடாவர்மனின் திருப்பணிகளில் அதிகம் பலனடைந்த கோயில்கள்.

திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவிலுக்கு “துலாபார தானம் “ அதாவது ஒருவரின் எடைக்கு எடை தங்கம் என்கிற அளவுக்கு தானம் செய்தார்.

ஆனால் ஜடாவர்மன் செய்த தானம் சற்று விசித்திரமானது, ஒரு மனிதனின் எடைக்கு எடை தானம் தருவதை விடுத்து. இவர் தனது நாட்டில் இருக்கும் ஒரு யானைக்கு மேல் அம்பாரி வைத்து அந்த அம்பாரியில் தானும் தனது அரசியும் முழு கவசத்துடன் சேர்ந்து அமர்ந்துகொண்டான், இவர்களுடன் யானை பாகனும் முன் அமர்ந்து கொண்டான் இந்த மொத்த எடைக்கு எடை தங்கத்தை திருவரங்கம் கோயிலுக்கு தானம்  வழங்கினார்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஒரு யானையை ஒரு தாராசில் ஏற்றி அதன் எடைக்கு எடை நிகர் நிற்க கூடிய தாரசை செய்திருக்க முடியுமா! பிறகு எப்படி இதை இவர்கள் செய்தார்கள் என்று கேள்வி எழுகிறாதா?

சரி அதை எப்படி செய்தார்கள், இதற்கும் இந்த கட்டுரையின் தலைபிற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போமா...

ஜடாவர்மன், இதை செய்ய முதலில் காவிரிக் கரையாரில் ஒரு குள மண்டபத்தை கட்டினான். அந்த மண்டபத்திற்கு அருகில் ஒரு தெப்பம் நீரில் மிதக்கும் பலகையை கட்டினான். அந்த தெப்பத்தின் மேல் அம்பாறி பூட்டப்பட்ட யானையும் அதன் மீது அரசனும் அரசியும் மற்றும் பாகனும் ஏறினர். இப்போது அந்த தெப்பம் இந்த மொத கனத்தையும் தாங்கி சிறிதளவு நீரில் அமிழ்ந்தது.

அதன் பிறகு யானையை இறக்கிவிட்டு அதற்கு ஈடாக தங்கங்களை வைத்தனர். இது அந்த யானை தெப்பத்தில் இருந்த போது எவ்வளவு உள்ளே தெப்பம் அமிழ்ந்ததோ அவ்வளவு உள்ளே அமிழும் வரை தொடர்ந்தது. இப்படியாக அந்த “துலாபார தானம்” நடந்தது.

இப்போது சொல்லுங்கள், ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை முதன் முதலில் கண்டவனும் செய்து காட்டியவனும் நமது முன்னோர்கள் தானே.

தமிழ் என்பதும் தமிழன் என்பது ஒரு மொழி மற்றும்  அது சார்ந்த இனத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு இயங்கியல், அறிவியல் என்று உரக்கச் சொல்லுங்கள்...

ஒரு வாரியத் தலைவர் பதிவிக்காக.. பாஜக விடம் விவசாயிகளை அடகு வைத்த திமுக பினாமி ஐயாக்கண்ணு...


https://youtu.be/XUf7xWfTUb0

Subscribe The Channel For More News...

இந்த புகை படத்தில் உள்ள kandy egg அட்டையில் 0-3 னு தவறு குறியீடு போட்டுருக்கு...


அப்போ இந்த குறியீட்டீன் அர்த்தம் 1வயது முதல் 3 வயது குழந்தை சாப்டகூடாது என்று அர்த்தம்.

இதை அந்த முட்டாய் உள்ள காகிதத்தில் அச்சடித்தால் யாரும் வாங்கமாட்டாங்குனு அதை அட்டையில் அச்சடித்திருக்கிறார்கள்.

இது வியாபார மூளை...

தயவு செய்து குழந்தைக்கு இது போன்ற விளம்பரம் வந்தாலோ சேனலை மாத்திருங்க முடிந்த அளவு குழந்தையை கடைக்கு கூட்டிட்டு போய் பழக்க வேண்டாம்...

அரசியர் ரீதியான பிரிவிற்கு தயாராக இருங்கள்...


சுவருடன் உரையாடு தியான யுக்தி....


உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கருத்து கணிப்பில் மட்டுமே வெற்றி பெறும் ஒரே கட்சி நம்ம திமுக தான்...


சருமம் மினுமினுன்னு ஜொலிக்கணுமா?


கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணுங்க...

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருந்து, முக அழகை கெடுக்கிறதா?

அதற்கு கவலைபட வேண்டாம். வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

இந்த பொருள் மிகவும் ஈஸியாக அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இத்தகைய பொருளை சருமத்தை வைத்து பல முறைகளில் பராமரிக்கலாம்.

இப்போது அந்த கடுகை எவ்வாயெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்...

பாஜக மோடியை கடுமையாக சாடும் மதிமுக வைகோ காணொளி...


https://youtu.be/46KXgzijZ6o

Subscribe The Channel For More News...

நோக்குவர்மம்...


நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை.. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்பு தான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.

நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவு தான்.

அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும்.

சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.

இதுக்கு ஒரு குட்டி உதாரணம்...

உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.

இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும்.

அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).

பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.

புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.

நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள். அந்த தெளிவு உங்களை கூட்டிசெல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும். புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது.

தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும். நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.

இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...

வருமான வரித்துறை அதிரடி.. முதலில் திமுக துரைமுருகன் தற்போது எ.வ.வேலு...


https://youtu.be/TmZX5IOlOac

Subscribe The Channel For More News...

பறையர், புலையர் பற்றி கன்னட ஈ.வே.ரா (முரசொலி படம்)...


ஈ.வே.ரா பற்றி பொய் பரப்புரை...

அவர் பறைச்சி ரவிக்கை போட்டதை கிண்டல் செய்யவில்லை.

புலையர் சமூக பெண்கள் ரவிக்கை போட்டதைத் தான் கிண்டல் செய்தார்.

பள்ளர்களும் பறையர்களும் படித்ததைத் தான் அவர் கிண்டல் செய்தார்.

ஆகவே பறையர்களை அவர் கிண்டல் செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

ஈ.வே.ரா வை பிரிந்து தனிக்குடித்தனம் போட்ட கருணாநிதி முரசொலியில் போட்ட தெளிவான படம்...

தமிழினமே விழித்துக்கொள்...


தாளம் - லயம்...


தாளம் என்ற சொல்லிற்குத் தட்டிவருதல் அல்லது அடித்து வருதல் என்பது பொருள்.

இசை சம்பந்தமாகப் பேசும் போது அது ஒரே அளவாகத் தட்டி வருதலையே குறிக்கின்றது.

ஒரே அளவாகத் தாளத்தை தட்டி வரும் போது அதில் ஓர் இசையுணர்ச்சி உண்டாகின்றது.

இது ‘லய’ உணர்ச்சி எனப்பெறும்.

எப்படி ஏழிசை சுரங்களெல்லாம் ஆதார சுருதியிலே சேர்ந்தொலிக்கும் போது ஓர் உணர்ச்சி உண்டாகின்றதே, அதேபோல தாளத்தையும் ஓர் அளவாய்த் தட்டிப் போட்டு வரும் போது அதுமாதிரியான உணர்ச்சி உண்டாகின்றது.

லயம் என்ற சொல்லிற்கு ஒன்றுதல் என்பது பொருள்...

கூட்டணியில் இருந்து கொண்டே இதெல்லாம் கெத்து சார் பாமக வுக்கு...


உபிஸ்கள் ஒரு சின்ன ரைடுக்கே பயந்தவிங்க....

பிரபஞ்ச இரகசியம்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறபோகிறேன்.

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை.

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது. அது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...