உலகம் உருண்டை தான் என்று நிரூபிக்கவே இந்த நவீன அறிவியல் திக்குமுக்காடியது என்பதே உண்மை.
அதன் பிறகே எல்லா கோள்களும் உருண்டை தான் என்றும், சூரிய குடம்பம் என்றும், பல சூரியன் உண்டென்றும், எந்த அண்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் பல நவீன இயந்திரங்களின் உதவியோடு அதுவும் எந்த தெளிவும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு யுகமாம்வே கூறிவருகிறது இன்றைய நவீன அறிவியலும் அதை சார்ந்த ஆய்வுகளும்.
இன்றைய நிலைமையே இப்படி இருக்க, 9 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழன் இந்த அண்டம் உருண்டை தான் என்றும், நூறு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும் உள்ளன என்றும் அடித்து கூறியுள்ளான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
ஆம்.. இப்படியான பல அறிவியல் உண்மைகளை பற்பல நூறாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் இனத்தின் மூத்தோர்கள் தெளிவுற உரைத்துச் சென்றுவிட்டனர்.
சரி அந்த 9 நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் யார்? அவர் என்னதான் சொன்னார்? சற்றே பொறுமையாக படியுங்கள்.
அவர் பெயர் மணிவாசகர், திருவாசகம் இயற்றியவர். இவர் தான் பாடிய திருவாசகத்தில் திரு அண்டம் என்னும் பகுதியில் இந்த அண்டத்தின் வடிவம் பற்றியும் அவற்றில் நிறைந்திருக்கும் கோள்கள் பற்றியும் மிக விளக்கமாக கூறுவதை காண்போம்.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
இன்நுழை கதிரின் துன் அணுப் புரைய
சிறியவாகப் பெரியோன் தெரியின்”
விளக்கம்:
இந்த அண்டம் உருண்டையாகவே பிறந்துள்ளது, மேலும் இந்த அண்டத்தில் நூற்றியொரு கோடிக்கும் மேலான கோள்களும், விண்மீன்களும், சூரியன்களும்,சந்திரன்களும், பூமிகளும் நிறைந்து பறந்து விரிந்து கிடக்கிறது என்றும். இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒன்றுகொன்று தம் ஒளியை பகிர்ந்து கொள்கின்றன அதாவது ஒளியற்ற கோள்கள் கூட சூரியனின் அணுக்கதிர்களை உள்வாங்குவதால் ஒளியை சூடிக்கொள்கின்றன என்றும் கூறுகிறார்.
பூமியும், சூரியனும், சந்திரனும் மட்டும் அல்லாமல் இந்த அண்டமே உருண்டை தான் என்றும் அதில் நூறு கோடி விண்மீன்களும் கோள்களும் சிதறிக்கிடக்கிறது என்றும் இந்த மணிவாசகர் எந்த டெலஸ்கோப் வைத்து இதையெல்லாம் ஆய்ந்தார் என்பது தெரியவில்லை.
இப்படியாக ஒவ்வொரு தமிழனும் உலகம் வியக்கும் பலவற்றை வகுத்து தொகுத்து வழங்கி சென்றிருக்கிறான்.
ஆனால் இன்றைய நமது சமூகமோ, தமிழன் மூடன் என்றும் தமிழனுக்கு சுய அறிவு இல்லை என்றும் கூறிக் கொண்டுத் திரியும் மூடர் கூடமாகவே இருக்கிறது என்பதை எண்ணி நாம் நம்மையே கடிந்து தான் கொள்ள வேண்டும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.