04/05/2017

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திரா... முறையிட்ட தமிழகம்... கைவிரித்த மத்திய பாஜக மோடி அரசு...


தமிழுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் ஆணி புடுங்காத ஒரே அரசுன்னா அது நம்ம மோடிஜி அரசு தான்....

ஜெயலலிதா இறந்த 15 நாளில் ஓபிஎஸ் போட்ட ஒப்பந்தம்… அதிர வைக்கும் ஊழல்… தூசு தட்டும் எடப்பாடி...


ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப் பிறகு அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

அந்த ஒப்பந்தத்தின் மூலம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது.

1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள். அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.

அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர் விடப்பட்டது.

ஆனால், இந்த முறை டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள், 437 ரூபாயாக இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன.

அதன் பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இருந்தனர்.

ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிரீமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து செய்து விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார்.

அதன்பிறகு ஒரு வழியாக பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதாவது முன்பிருந்த தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம்.

ஒருவழியாக இந்தத் தொகைக்கு ஒப்புக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அப்போது 1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது. அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும் ஒப்புக்கொண்டார்.

ஆனால், திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது, ‘உடனடியாகக் கொடுக்க முடியாது. 25 சதவிகிதம்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது கொடுக்க முடியும். அதன் பிறகு மீதித் தொகையை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும் என்றார்.

ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் திட்ட இயக்குநரை சமாதானப்படுத்தி உடனடியாகக் கொடுத்து விடலாம் என்றார். அதன்படி 808 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த திட்ட இயக்குனரக அதிகாரிகள், ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள், தொகையைப் பிரித்து மூன்று மாத தவணையில் வாங்கிக் கொள்ளலாமே என்று யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில்,
முதல்வர் ஓ.பி.எஸ் உடனடியாக தனக்கான கமிஷன் தொகை 240 கோடியைக் கேட்கிறார்...

எனவே, நாங்கள் முழுத் தொகையை இப்போதே வாங்கினால்தான் அவருக்கான கமிஷனைக் கொடுத்து விட்டு, எங்கள் வேலையை ஆரம்பித்து, நாங்களும் லாபம் பார்க்க முடியும் என்று சொல்லி அதிர வைத்துள்ளனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க முடியாது.. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு...


குஜராத்தில் சங்பரிவார் பயங்கரவாதிகள்  நடத்திய கொடூர படுகொலைகளின் ஒன்றான பல்கிஸ் பானு குடும்பத்தார் கொலை வழக்கில் - 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அப்போது பல்கிஸ் கர்ப்பமாக இருந்தார். அவளின் கண் முன்னே 3 வயது குழந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்தார்கள் வெறியர்கள். பிறகு அவளை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தார்கள் மதவெறிக் கும்பல்.

எந்த மனிதனும் ஏற்க முடியாத வன்முறைக் கொடூரம் அது. பல பெண்களை கற்பழித்து அவர்களின் பிறப்புருப்பில் மரகட்டையால் ஆப்பு அடித்து துடிக்க துடிக்க எரித்து கொலை செய்தார்கள்.. கவுசர் பானு என்ற 9 மாத கற்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் பொசுக்கினார்கள்

இந்த வழக்கின் சாட்சிகளை கலைக்க  இணப்படுகொலையின் ‘மாதிரி மாநிலமான’ குஜராத்தின் காவலர்களும் மருத்துவர்களும் முயன்றதால் - வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரித்தது.

இத்தனை ஆண்டுகளுக்கு பின், தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் சாட்சியத்தை சிதைக்க முயன்ற மருத்துவர்கள், போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை கொடும் பயங்கரவாதிகள் அவர்கள் என்பதையும், நீண்டதொரு போராட்டம் நடத்த வேண்டிய தேவையையும் இந்த வழக்கு  இந்தியனாக பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துக் காட்டுகிறது.

குஜராத் இணப்படுகொலை இந்தியாவின் மறக்க முடியாத ஆராதரணம் என்பது மட்டும் உண்மை...

நம்ப முடியாத உண்மைகள்...


ஈ.வே.ரா தனித்தமிழ்நாடு கேட்டாரா?


மூன்றுமுறை நிறம் மாறிய பச்சோந்தி...

1930ல் இந்திய சார்பு..

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார், ஒரே இலட்சியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.

இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும், விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம் - (குடிஅரசு, 09.11.1930)..

1938 ல் தனித்தமிழ்நாடு...

உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப்பூசை செய்கிறோம். மலத்தை மனமாரமுகருகிறோம். மானமிழந்தோம்,பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம்.இதற்குத் தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்?
எழுங்கள். நம்மை ஏய்த்து அழுத்தி, நம்தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போகவடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.இனியாவது, தமிழ்நாடு தமிழருக்கே.. என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்.

நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்து கொண்டதோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் நமக்கு இதைவிட மானமற்றதன்மை,இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்.
புறப்படுங்கள்.

தமிழ்நாட்டுக்குப்பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச்சின்னா பின்னமாக்குங்கள்.
தமிழ்நாடு தமிழருக்கே -(குடிஅரசு 23.10.1938).

1947 ல் மீண்டும் இந்திய சார்பு...

தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழராட்சி, தமிழ்மாகாணம் என்று பேசப் படுவனவெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும். (ஈ.வெ.ரா.,விடுதலை 11.01.1947).

1957 ல் மீண்டும் தனித்தமிழ்நாடு...

என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும்
என் இன மக்களாகிய தமிழர்களுடையவும்,
என்னுடையவும் தாய் நாடான தமிழ்நாட்டைப் பனியா - பார்ப்பனர்களின் அடிமைத்தளையிலிருந்தும்,
சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.

அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல், பொருள், ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன். வணக்கம்! வணக்கம்! வணக்கம்! -  (விடுதலை தலையங்கம் 15.12.1957)

1965 ல் மூன்றாவது முறையாக இந்திய சார்பு...

இந்தியா ஒண்ணா இருக்கணும்னா பொதுவா ஒரு ஆட்சிமொழி வேணும்தானே?
இந்திக்காரன் உங்க மாதிரி இங்கிலீஷை நினைக்கல்லையே. இங்கிலீஷ் அவமானம்னு நினைக்கிறானே.

தமிழ்நாட்டுக் காரன் சொல்றபடி இந்தியா நடக்குமா? அது ஜனநாயகமா? - (ஆனந்த விகடன் பேட்டி 11.4.1965).

1973 ல் மூன்றாவது முறையாக தனித்தமிழ்நாடு...

நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும்
பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டிய ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

‘சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம்’ என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

பதினாயிரக்கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு வினியோகிக்க ஆசைப்படுகிறேன்.
பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக (கூப்பாடாக) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பொது மக்களே! இளைஞர்களே!
பள்ளி, கல்லூரி மாணவர்களே! மாணவிகளே!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்!
உறுதி கொள்ளுங்கள்.

(1973-ல் பிறந்த நாள் அறிக்கையில்)...

பாஜக எஸ்.வீ. சேகரிடம் சரியாகத் தான் கேள்வி கேட்டுருக்கான்...


திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று எண்ணுவோமாக...


என்ன தான் இருந்தாலும் வருங்கால முதல்வர் நம்ம குட்டி தளபதி உதயநிதி ஸ்டாலின் தானே?

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடும் யாரையும் கைது செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஆணை...

பாஜக காரன் பிழைக்கிறது திங்கிறது தூங்குறது எல்லாம் தமிழகத்தில்...


ஆனால் வாலு ஆட்டுறது மட்டும் ஹிந்திக்கா?

நாங்கள் அனைவரும் தமிழர்கள்.. நீ மூடிட்டு போடா தமிழகத்தில் பிழைக்க வந்த வடநாட்டு எச்ச. ராஜா சர்மா...


பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


உலகத்திலேயே அகழ்வாராய்ச்சி செய்த  இடத்தை மூடிய ஒரே இடம் கீழடி மட்டும்  தான்..

காரணம் இந்தியாவின் பயம்..

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு  முன்னமே தமிழர்கள் மிகவும்  நாகரீகமாக  வாழ்ந்ததற்கான ஆதாரமாக கீழடி  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின்  பொய்யான பல  வரலாற்றை முறியடித்ததோடு  மட்டும்  இல்லாமல் இந்திய  வரலாற்றையே  மறு  வாசிப்பு செய்ய வைத்துள்ளது தான்  இந்தியாவின்  பயம்.

இந்தியாவின்  மூத்தகுடி  மட்டுமல்ல  இந்தியா முழுமையும்  தமிழர்களோடது என்ற  உண்மையும்  இந்த ஆய்வில்  வெளியே  வந்துவிடும்..

அந்த பயத்தால் தான் இரண்டு  ஆண்டுகளாக தோண்டப்பட்ட  நாற்பத்திஎட்டு குழியும் ஒரே நாளில்  மூடப்பட்டது...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது சில அதிகாரிகளுடன் டெஹ்ராடூனில் வந்து இறங்கினார்.

ஞாயிற்றுக் கிழமைக்குள் உத்தர்கண்ட் அழிவுகளில் சிக்கியிருந்த 15,000 குஜராத்திகளை மீட்டு அவரவர் வீடுகளுக்கு மோடி அனுப்பி வைத்து விட்டதாக சொல்லப்பட்டது...

ஊடங்களில் பெரிதும் பிரபலப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் முழு ராணுவ அமைப்பும் 40,000 பேரை மீட்பதற்கு 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் போது ஒரே நாளில் இது எப்படி சாத்தியமானது?

மோடி 80 இன்னோவா கார்களை பயன்படுத்தி இந்த சாதனையை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் தெரிவித்தன...

மிச்ச கதையெல்லாம் நமக்கு தெரிஞ்சது தான்...

பாஜக மோடிக்கு செருப்படி...


பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் உரையைத் தொலைக்காட்சியில் ஒபாமா பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை உல்டா செய்து, மோடியின் உரையை ஒபாமா பார்க்கிறார் என்று பரப்பியது. குட்டும் உடைந்தது.

எம்.ஜி.ஆர். – சிவாஜி போன்ற எல்லா நட்சத்திரங்களுக்கும் ரேகை பார்க்கும் படத்தை மாட்டி வைத்திருக்கும் ஜோசியக்காரனைப் போல, அமிதாப்பும் ரஜினியும் மோடியை ஆதரிப்பது போல வீடியோ, புகைப்பட உல்டாக்களை இறக்கவே, அவர்களே அதனை மறுத்தார்கள்.

இதற்காகவெல்லாம் காக்கி அரைடவுசர்கள் வெட்கப்படவில்லை.

அடுத்தது டென்டுல்கரின் மகள் பெயரில் டிவிட்டர் தளத்தை உருவாக்கி, மோடியை அவர் ஆதரிப்பதாக அதில் எழுதினார்கள்.

என் மகளுக்கு டுவிட்டர் கணக்கே இல்லை என்று டென்டுல்கரே அறிவிக்க வேண்டியதாயிற்று...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களே வளர்ச்சிக்கு தடைக்கல்லாக உள்ளது என கூறி வந்தனர்.

இதைத்தொடர்ந்தே பல மக்கள் நலத்திட்டங்களுக்கான  மானியம் வெட்டிச்சுருக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக வசதி படைத்தவர்கள் எரிவாயுக்கான மானியத்தை விட்டுக் கொடுக்க கோரி கிவ் இட் அப் என்ற திட்டத்தை விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த விளம்பரம் எரிவாயுவிற்கான மானியம் பெறுபவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பது போன்று சித்தரித்து பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்யப்பட்டது.

பின்னர் இந்த விளம்பரத்தின் மூலம் நாட்டில் எரிவாயு மானியத்தை தானாக முன்வந்து மானியத்தை வேண்டாம் என்றதன் பலனாக ரூ 22000 கோடி அரசுக்கு மிச்சமானது என்று மோடி அரசு மார்தட்டி வந்தது.

இதன் மூலம் நாட்டில் எரிபொருளுக்கு மானியம் பெறுபவர்களை குற்றவாளிகள் என்ற எண்ணத்திற்கு கொண்டு செல்ல அவ்வப்போது மோடியும் அவரது அமைச்சரவை வட்டாரங்களும்  முயன்று வந்தனர்.

இந்நிலையில்  மோடி அரசின் நடவடிக்கையால் ரூ 22 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தியதாக பிரதமர் பேசி வந்தது சுத்த பொய் என்பது சிஏஜி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அறிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 2000 கோடி ரூபாய் மட்டுமே மானியத்தை விட்டுக் கொடுத்தவர்களால் அரசுக்கு மிஞ்சியுள்ளது.

மீதம் உள்ள 20000 கோடி என்பது இந்தியா இறக்குமதி செய்யும் எல்பிஜியின் விலை உலகச்சந்தையில் கடுமையாக  குறைந்ததே காரணம் என்று சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவினர் நடத்திய ஆய்வில் 2014 -15ல் 36,571 கோடி ரூபாய்க்கு எல்பிஜி இறக்குமதி செய்யப்பட்டது.

அதேபோல் 2015-16ம் ஆண்டில் மட்டும் 25,626 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு 10945 கோடி மட்டுமே ஒராண்டில் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மோடி அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி படுத்தப்படுகிறது.

பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு செங்கோட்டையில் உரையாற்றுகையில் எரிவாயு இணைப்புகளின் மூலம் முந்தைய அரசு 15000 கோடி வரை திருடியதாக குற்றம் சாட்டினார்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஆதார் அடையாள அட்டை, வங்கிக் கணக்கில் மானியம் அவற்றை நெறிப்படுத்தி உள்ளதாக மார்தட்டினார்.

ஆனால் தற்போது தயாராகி உள்ள சிஏஜியின் அறிக்கை நாட்டின் பிரதமரே மக்களிடம் பொய்யான தகவலை பரப்பி உள்ளார் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது...

கரும்பு சாகுபடிக்கு போர் போட்டு தண்ணீர் இல்லாததால் திருவையாறு அருகே அணைக்குடியில் விவசாயி செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை...


தமிழக அரசும், இன்ன பிற அரசியல் கட்சிகளும்  இதையும் சொந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தான் சொல்லும் என வேதனைப் படுகின்றனர் விவசாயிகள்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 56...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் பகுதி 56-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். 56-ம் தீர்க்க தரிசனம் விண்வெளி இரகசியங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறது.

56-ம் தீர்க்க தரிசனம் கூறும் விளக்கத்தை இங்கு நாம் காண்போம். அண்டம் என்கிற இந்த பிரபஞ்சம் பல அடுக்குகளைக் கொண்டது என்றும், இந்த அடுக்குகள் ஒவ்வொன்றும் சுற்று வட்டமாக சம அளவில் பிணைக்கப்பட்டுள்ளது என்றும், இது 36 கட்டங்களை கொண்ட பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்று 56-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.

36 அடுக்குகளை கொண்ட இந்த மகாபிரபஞ்சத்தை மனிதஇனம் இன்றும் எட்டவில்லை என்றும், 3-ம் நிலை அடுக்குகளின் சுற்றுவட்டப் பாதையில் மட்டுமே மனித கண்டு பிடிப்புகள் நுழைந்து உள்ளன என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மனித விஞ்ஞானம் தன்னைப் போன்ற மனித உயிரினங்கள் (வேற்றுகிரக வாசிகள்) மற்ற கிரகங்களில் உள்ளார்களா? என்ற ஆய்வினை செய்து வருகிறார்கள் என்றும், அவர்கள் (வேற்றுகிரக வாசிகள்) கோள்களின் அடுக்குகளின் மத்தியில் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சந்திரனில் பனிப்புயல், சூரியனில் காந்தப்புயல் என்று விஞ்ஞானம் தமது கண்டறிதல் விஷயங்களை மக்களுக்கு தெரிவிப்பது போல, வேற்றுகிரகத்தில் வாழ்பவர்களால் இன்று வரை பூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளும் விஞ்ஞான வளர்ச்சியில் அவர்கள் உள்ளனர் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


மோசமான வான் நிலைகள் இனி உருவாகிடும் என்றும், அதற்கான காரணங்கள் வளிமண்டல அடுக்குகளில் இனி நிகழும் என்றும், பூமியை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேற்றுகிரக வாசிகள் பூமியை நோக்கி வர தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. 3748341/3 HRTS 12329OMEZ என்ற நுட்ப எண்கள் அவர்களின் சமிக்கைகள் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

காலத்தால் அளவிட முடியாத வானியல் கோட்பாடுகளை மனிதகுலம் அறிய முற்படுவது வரவேற்கதக்கது என்றும், ஆனால் அனைத்துமே விஞ்ஞானத்தால் முடியாது என்றும், அவைகள் மெய் ஞானத்தை சார்ந்து வந்தால் மட்டுமே அது முழுமை பெறும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இவ்வுலகத்தில் கண்டறிந்த அனைத்து புதிர்களுமே மனித மனமே கண்டறிந்து உள்ளது என்றும், அதற்கான வழிகளை மனித அறிவு அவர்களுக்கு உதவி உள்ளது என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஜெட் வடிவ வான் ஊர்தி ஒன்று இந்திய வான் எல்லையில் இனி அடிக்கடி தென்படும் என்றும், இது வேற்று உலகவாசிகளின் மேற்பார்வையாக இருக்கும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

வான் மண்டலத்தில் மிதந்து கொண்டு உள்ள செயற்கை கோள்களின் இயக்கத்தினை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர அயல்கிரவாசிகள் முயற்சிக்கும் ஒரு சம்பவம் திடீர் என்று நடக்கும் என்றும், அப்பொழுது அதன் இயக்கத்தோடு தொடர்புடைய சாதனங்கள் யாவும் சில மணித்துளிகள் தமது கட்டுபாட்டை இழக்கும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கேரள மாநிலத்திலிருந்து ஒரு நபர் வேற்றுகிரக வாசிகளின் வருகையைப் பற்றி செய்தி பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார் என்றும், அச்சமயத்தில் அங்கு ஒரு வினோதச் சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாக மற்றொரு குறிப்பு 56-ம் தீர்க்க தரிசனத்தில் கூறப்பட்டுள்ளது.

காய்தேமில்லத் மாவட்டத்தில் ஒரு வினோத வழிபாடு சம்பவம் துவங்கும் என்றும், இதற்கு அங்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படும் என்றும், அதனை கூர்ந்து கவனித்தால் ஒருவர் வான் மண்டலத்திலிருந்து பூமிக்கு வருவார் என்றும், அவருக்கான வழிபாடு தற்போது நடைபெற்று வருவதாக மக்கள் பேசிக் கொள்ளும் சம்பவம் ஒன்று நிகழும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் ஒரு வினோத குறிப்பை தருகின்றது.

மேற்கண்ட சம்பவம் வான்மண்டல வாசிகளுக்கு தொடர்புடைய ஒரு செயலாக இருக்கும் என்று கேள்விபட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் தமிழகத்திற்கு வரும் ஒரு சூழ்நிலைக்கு இச்சம்பவம் முன்னோடியாக அமையப் போகிறது என்று 56-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கத்தை தருகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

துடைப்பதால் அடித்துக் கொண்ட மாமன் மச்சான்கள் , உறவு நேருக்கமாக ஆண்டபட்டி மறவபட்டி திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன்...


ராட்சத குலாய் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சிய மினரல் வாட்டர் கம்பெனிக்கு சீல்...


1000 பேருக்கு பிரியாணி போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய வாணியம்பாடி கொல்லப்பள்ளி கிராமத்தினர்...

விஜயபாஸ்கர் மனைவிக்கு சம்மன் , வருமான வரித்துறை அலுவலகத்தல் ஆஜர்...


இரண்டு அணியும் இணையும் என பேச்சு வார்த்தை நடக்கும் வரை எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது, இணைய வாய்ப்பில்லை என்றதும் மீண்டும் பழையபடி ஆரம்பித்து விட்டார்..

ஆனால் கேட்டால் எங்களும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

பாஜக மோடியின் மத்திய அரசு ஒன்னும் முட்டாள் இல்லை...


நம் ராணுவ வீரர்களை கொலை செய்ததால்தான் இந்த முடிவு....

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 56...


அறிந்ததை சோதித்துப் பாருங்கள் -டெலிபதி...

ஆழ்மன சக்திகள் பற்றி ஆதாரபூர்வமான நிகழ்வுகளை ஆரம்பத்தில் பார்த்தோம். பிறகு அந்த ஆழ்மன சக்திகளை அடைய உதவும் வழிகளில் தியானம் துவங்கி பல வகைப் பயிற்சிகளையும் பார்த்தோம். ஆழ்மன சக்திகளைப் பெற உதவும் உணர்வு மற்றும் மனநிலைகளையும், அதைப் பெறத் தடையாக இருக்கக்கூடிய மனநிலைகளையும் பார்த்தோம். கடந்த சில வாரங்களில் ஆழ்மனதைப் பலப்படுத்துபவை எவை, பலவீனப்படுத்துபவை எவை என்றும் பார்த்தோம். இது வரை அறிந்தவற்றை எல்லாம் பயன்படுத்தி நம்மாலும் அந்த சக்திகளைப் பயன்படுத்த முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கும் கடைசிக் கட்டத்திற்கு இப்போது வந்திருக்கிறோம்.

ஒரு விஷயத்தை அறிவு பூர்வமாக அறிந்து கொள்வது வேறு. அதை உணர முடிவது வேறு. அறிந்து கொள்வதற்கு அறிந்தவர்களும், தகவல் சாதனங்களும் உதவ முடியும். ஆனால் உணர்வது என்பது தனிமனித அனுபவமே. அதற்கு மற்றவர்களோ, சம்பந்தப்பட்ட தகவல்களோ உதவ முடியாது. இந்த உண்மை மற்றெல்லா விஷயங்களையும் விட அதிகமாக ஆழ்மன சக்திகளுக்கு பொருந்தும்.

அறிய உதவும் தகவல்கள், வரைபடங்கள் போன்றவை. ஒரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கும். ஆனால் அந்தத் தகவலை எந்த அளவுக்கு ஒருவன் பயன்படுத்துகிறான், அங்கு போக எந்த அளவு முயற்சி செய்கிறான், அவன் போகும் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அந்த தனிமனிதனையே சார்ந்தது. அதைப் பொறுத்தே அவன் அந்த இடத்திற்குப் போய் சேர்வதும், சேராதிருப்பதும் தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு இது வரை சொல்லப்பட்ட பயிற்சிகள், தகவல்கள் எல்லாம் வரைபடங்கள் போன்றவையே. அந்தப் பயிற்சிகளை எந்த அளவு பயன்படுத்துகிறீர்கள், செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இதில் பெறும் வெற்றியின் அளவும் இருக்கும். இதில் சில பயிற்சிகள் சுவாரசியமில்லாதவையாக இருக்கலாம். சில பயிற்சிகள் கடினமானதாக இருக்கலாம். சில பயிற்சிகள் பொருளில்லாதவையாகக் கூடத் தோன்றலாம். ஆனாலும் அதை விடாமுயற்சியோடும், ஆர்வத்தோடும் செய்வது மட்டுமே முடிவில் ஆழ்மன சக்திகளை அடைய வழி செய்யும்.

ஆனால் உங்களுக்குள்ளே இருக்கும் ஆர்வம் உறுதியானதாக இருந்தால், அது காலப்போக்கில் வடிந்து போகாததாக இருந்தால் அது ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான அனைத்தையும் உங்களைச் செய்ய வைக்கும். அப்படித் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து, உங்களுக்குத் தெரிந்த வகையில் விடாமல் பயிற்சிகளும் செய்து வந்திருந்தால் அந்த சக்திகளை ஓரளவாவது நிச்சயமாக நீங்கள் அடைந்திருப்பீர்கள். அதை சோதித்துப் பார்க்கும் வழிகளைப் பார்ப்போம்.

முதலில் ‘டெலிபதி’ எனப்படும் ஒரு மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு வார்த்தைகளால் அல்லாமல் செய்திப் பரிமாற்றம் செய்யும் சக்தியைப் பார்ப்போம். மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தி இயல்பாகவே அதிகம் இருக்கும் என்று பார்த்தோம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருக்கும். எதையும் சொல்லியே தெரியப்படுத்திப் பழகி விட்டதால் சொல்லாமல் உணரும் சக்தியைப் பெரும்பாலும் நாம் இழந்து விட்டிருக்கிறோம். பொதுவாக ஏதோ சில அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இது நம்மிடையே எழுகிறது.

ஆதிசங்கரர் சன்னியாசம் வாங்குகையில் அவர் தாய் ஆர்யாம்பாள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தார். அவரிடம் அவருடைய மரண காலத்தில் கண்டிப்பாக வந்து சேர்வதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து தந்தார். அதே போல ஆர்யாம்பாள் மரணத் தருவாயில் மகனை நினைக்க உடனடியாக ஞான திருஷ்டியால் ஆதிசங்கரர் உணர்ந்து தாயிடம் விரைந்து சென்றார் என்று படித்திருக்கிறோம். இது தான் டெலிபதி என்று சொல்லலாம்.

இதே போன்ற இன்னொரு சம்பவம் நடந்ததை நான் அறிவேன். எங்கள் வங்கியில் வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் தன் தந்தையுடன் மிகவும் பாசமாக இருப்பவர். வெளியூரில் வேலை கிடைத்ததால் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தார். ஒரு நாள் தன்னுடன் தங்கி இருந்த தோழியுடன் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குச் செல்லும் போது மிகவும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டு சென்ற அவர் கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் காரணம் தெரியாமல் சோகமயமானார். திடீரென்று விக்கி விக்கி அழ ஆரம்பிக்க அந்தத் தோழி காரணம் கேட்டார். ஆனால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏனோ அழுகை அழுகையாய் வருகிறது என்று சொல்லி தொடர்ந்து அழுதார். சிறிது நேரம் கழித்து இருவரும் ஹாஸ்டலிற்குத் திரும்பினார்கள். ஹாஸ்டலுக்கு வந்த போது அவரது தந்தை மாரடைப்பால் காலமானார் என்று சிறிது நேரத்திற்கு முன் போனில் தகவல் வந்ததைத் தெரிவித்தார்கள். அந்தக் காலத்தில் இந்தக் காலத்தைப் போல செல் போன் வசதி இல்லாத காரணத்தால் வீட்டார்கள் லேடீஸ் ஹாஸ்டலிற்குப் போனில் தகவல் சொல்லி இருந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தந்தைக்கு மாரடைப்பு வந்த சமயத்தில் தான் காரணம் தெரியாமல் அந்தப் பெண் அழ ஆரம்பித்திருக்கிறார் என்பது பின்னர் புரிந்தது. தந்தைக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையே எல்லை இல்லாத பாசம் இருந்தது என்பதைத் தவிர ஆழ்மன சக்தி, டெலிபதி போன்ற பெரிய விஷயங்களைப் பற்றி இருவரும் அறியாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படி உணர்ச்சிகளின் உச்சக்கட்டங்களிலும், அவசரமான கட்டங்களிலும் மிகவும் நெருக்கமான நபர்களுடன் நாம் அரைகுறையாக உணர முடிகிற விஷயங்களை இயல்பான நேரங்களிலும் கூட வார்த்தைகளில்லாமல் தெளிவாக உணர முடியும் என்பது ஆழ்மன சக்திகளை அடைந்தவர்களின் அனுபவம். இந்த டெலிபதி உங்களுக்கு கைகூடி வருகிறதா என்பதை இனி சோதித்துப் பாருங்கள்.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம். முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வரா விட்டால் விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள். உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை. இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்.

இனி அடுத்த ஆழ்மன சக்திகளைப் பரிசோதிக்கச் செல்லலாமா?

மேலும் பயணிப்போம்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


2005-ம் ஆண்டு குஜராத் மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டு பிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம்.

எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.

மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள்.

ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது.

2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டு பிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.

இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது.

அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன்.

வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது...

பாஜக மோடியும் தமிழின அழிப்பும்...


பாஜக மோடியின் தமிழின அழிப்பு நேரடி ஆரம்பம்...

தமிழர்களின் தொன்மை கண்டு பிடிக்கப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி குழியை அவசர அவசரமாக ஜேசிபி வைத்து மண்ணை போட்டு மூடும் அதிகாரிகள் - அதிர்ச்சி காணொளி...

நாட்டிலேயே அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தை மண்ணை போட்டு மூடுவது இதுவே முதல் முறை , மண்ணோடு புதையும் தமிழர்களின் தொன்மை  என தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்...

தமிழன் தான் உலகத்திற்கே வழிகாட்டி...


சோழர் காலத்தில் ஆட்சி முறை அமைப்பு...

ஒரு நாடு சீராய் செயலாற்ற, நல்ல நிர்வாகம் தேவைப்படுகிறது. இங்கு நாம் பார்ப்பது, சோழ ஆட்சியின் அமைப்பு.

இந்த படம், இன்று மக்களாட்சி என்று நாம் பின்பற்றும் விடயங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த மண்ணில் இருந்தவை என்பதை கூறுகிறது.

நகரின் வகைக்கு ஏற்ப , அதன் ஆட்சியையும், நிர்வாகத்தையும் மாற்றி அமைத்துள்ளனர்.

குறிப்பு: ராசராசசோழன் வரலாற்றுக் கூடம் புத்தகத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது...

தமிழக அரசின் கலாட்டா...


யோவ் சும்மா இருயா...


அவனே பார்க்க சைக்கோ மாதிரி இருக்கான்... வம்பு இழுக்குறவனை அடிக்காம அவன்கிட்ட ஏன்யா வம்பு இழுக்கிற...

பாஜக அமித்ஷா கலாட்டா...


சிறை தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரி சசிகலா மனு...


சசிகலாவிற்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுவே, இருப்பினும் 99 சதவிகிதம் மறு சீராய்வு மனுவில் தண்டனைகள் மாற்றப்படாது என்பது சட்ட வல்லூணர்களின் கருத்து...

மத்திய பாஜக மோடி அரசை விமர்சிக்க வேண்டாம் - எடுபுடி பழனிசாமி...


பாஜக மோடி கலாட்டா...


பாஜக மோடி குரூப் இங்கேயும் வந்துடுச்சு டா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 55...


மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும். முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்தபலன் கண்டவர்கள் ரஷியர்கள்.

ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்தது பற்றி முன்பு கூறியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.

மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.

டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.)

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.

ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.

சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...

மேலும் பயணிப்போம்.....

பாஜக மோடி அரசு...


தனி அறைக்கு மாற்றப்பட்ட சசிகலா , 2 ஆம் எண் அறையிலிருந்து 4 ஆம் எண் அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்...


இளவரசி மற்றும் சசிகலா ஒன்றாக இருந்த நிலையில் சசிகலா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்...

இலுமினாட்டி ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தின் சொந்த வங்கிகள்...


ரோத்ஸ்சைல்ட் இவன் தான் வங்கி,  தாள் பணம், பங்குச்சந்தை ஆகியவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடங்கியவன்.

இவனது குடும்பம் இப்போது சொந்தமாக வைத்துள்ள வங்கிகள் கீழே தரப்பட்டுள்ளன...

List of Banks owned by the Rothschild family..

Give me control over a nations currency, and I care not who makes its laws – Baron M.A. Rothschild.

ROTHSCHILD OWNED BANKS:

Afghanistan: Bank of Afghanistan
Albania: Bank of Albania
Algeria: Bank of Algeria
Argentina: Central Bank of Argentina
Armenia: Central Bank of Armenia
Aruba: Central Bank of Aruba
Australia: Reserve Bank of Australia
Austria: Austrian National Bank
Azerbaijan: Central Bank of Azerbaijan Republic

Bahamas: Central Bank of The Bahamas
Bahrain: Central Bank of Bahrain
Bangladesh: Bangladesh Bank
Barbados: Central Bank of Barbados
Belarus: National Bank of the Republic of Belarus
Belgium: National Bank of Belgium
Belize: Central Bank of Belize
Benin: Central Bank of West African States (BCEAO)
Bermuda: Bermuda Monetary Authority
Bhutan: Royal Monetary Authority of Bhutan
Bolivia: Central Bank of Bolivia
Bosnia: Central Bank of Bosnia and Herzegovina
Botswana: Bank of Botswana
Brazil: Central Bank of Brazil
Bulgaria: Bulgarian National Bank
Burkina Faso: Central Bank of West African States (BCEAO)
Burundi: Bank of the Republic of Burundi

Cambodia: National Bank of Cambodia
Came Roon: Bank of Central African States
Canada: Bank of Canada – Banque du Canada
Cayman Islands: Cayman Islands Monetary Authority
Central African Republic: Bank of Central African States
Chad: Bank of Central African States
Chile: Central Bank of Chile
China: The People’s Bank of China
Colombia: Bank of the Republic
Comoros: Central Bank of Comoros
Congo: Bank of Central African States
Costa Rica: Central Bank of Costa Rica
Côte d’Ivoire: Central Bank of West African States (BCEAO)
Croatia: Croatian National Bank
Cuba: Central Bank of Cuba
Cyprus: Central Bank of Cyprus
Czech Republic: Czech National Bank

Denmark: National Bank of Denmark
Dominican Republic: Central Bank of the Dominican Republic

East Caribbean area: Eastern Caribbean Central Bank
Ecuador: Central Bank of Ecuador
Egypt: Central Bank of Egypt
El Salvador: Central Reserve Bank of El Salvador
Equatorial Guinea: Bank of Central African States
Estonia: Bank of Estonia
Ethiopia: National Bank of Ethiopia
European Union: European Central Bank

Fiji: Reserve Bank of Fiji
Finland: Bank of Finland
France: Bank of France

Gabon: Bank of Central African States
The Gambia: Central Bank of The Gambia
Georgia: National Bank of Georgia
Germany: Deutsche Bundesbank
Ghana: Bank of Ghana
Greece: Bank of Greece
Guatemala: Bank of Guatemala
Guinea Bissau: Central Bank of West African States (BCEAO)
Guyana: Bank of Guyana

Haiti: Central Bank of Haiti
Honduras: Central Bank of Honduras
Hong Kong: Hong Kong Monetary Authority
Hungary: Magyar Nemzeti Bank

Iceland: Central Bank of Iceland
India: Reserve Bank of India
Indonesia: Bank Indonesia
Iran: The Central Bank of the Islamic Republic of Iran
Iraq: Central Bank of Iraq
Ireland: Central Bank and Financial Services Authority of Ireland
Israel: Bank of Israel
Italy: Bank of Italy

Jamaica: Bank of Jamaica
Japan: Bank of Japan
Jordan: Central Bank of Jordan

Kazakhstan: National Bank of Kazakhstan
Kenya: Central Bank of Kenya
Korea: Bank of Korea
Kuwait: Central Bank of Kuwait
Kyrgyzstan: National Bank of the Kyrgyz Republic

Latvia: Bank of Latvia
Lebanon: Central Bank of Lebanon
Lesotho: Central Bank of Lesotho
Libya: Central Bank of Libya

Uruguay: Central Bank of Uruguay

Lithuania: Bank of Lithuania
Luxembourg: Central Bank of Luxembourg

Macao: Monetary Authority of Macao
Macedonia: National Bank of the Republic of Macedonia
Madagascar: Central Bank of Madagascar
Malawi: Reserve Bank of Malawi
Malaysia: Central Bank of Malaysia
Mali: Central Bank of West African States (BCEAO)
Malta: Central Bank of Malta
Mauritius: Bank of Mauritius
Mexico: Bank of Mexico
Moldova: National Bank of Moldova
Mongolia: Bank of Mongolia
Montenegro: Central Bank of Montenegro
Morocco: Bank of Morocco
Mozambique: Bank of Mozambique

Namibia: Bank of Namibia
Nepal: Central Bank of Nepal
Netherlands: Netherlands Bank
Netherlands Antilles: Bank of the Netherlands Antilles
New Zealand: Reserve Bank of New Zealand
Nicaragua: Central Bank of Nicaragua
Niger: Central Bank of West African States (BCEAO)
Nigeria: Central Bank of Nigeria
Norway: Central Bank of Norway

Oman: Central Bank of Oman

Pakistan: State Bank of Pakistan
Papua New Guinea: Bank of Papua New Guinea
Paraguay: Central Bank of Paraguay
Peru: Central Reserve Bank of Peru
Philip Pines: Bangko Sentral ng Pilipinas
Poland: National Bank of Poland
Portugal: Bank of Portugal

Qatar: Qatar Central Bank

Romania: National Bank of Romania
Russia: Central Bank of Russia
Rwanda: National Bank of Rwanda

San Marino: Central Bank of the Republic of San Marino
Samoa: Central Bank of Samoa
Saudi Arabia: Saudi Arabian Monetary Agency
Senegal: Central Bank of West African States (BCEAO)
Serbia: National Bank of Serbia
Seychelles: Central Bank of Seychelles
Sierra Leone: Bank of Sierra Leone
Singapore: Monetary Authority of Singapore
Slovakia: National Bank of Slovakia
Slovenia: Bank of Slovenia
Solomon Islands: Central Bank of Solomon Islands
South Africa: South African Reserve Bank
Spain: Bank of Spain
Sri Lanka: Central Bank of Sri Lanka
Sudan: Bank of Sudan
Surinam: Central Bank of Suriname
Swaziland: The Central Bank of Swaziland
Sweden: Sveriges Riksbank
Switzerland: Swiss National Bank

Tajikistan: National Bank of Tajikistan
Tanzania: Bank of Tanzania
Thailand: Bank of Thailand
Togo: Central Bank of West African States (BCEAO)
Tonga: National Reserve Bank of Tonga
Trinidad and Tobago: Central Bank of Trinidad and Tobago
Tunisia: Central Bank of Tunisia
Turkey: Central Bank of the Republic of Turkey

Uganda: Bank of Uganda
Ukraine: National Bank of Ukraine
United Arab Emirates: Central Bank of United Arab Emirates
United Kingdom: Bank of England
United States: Federal Reserve, Federal Reserve Bank of New York

Vanuatu: Reserve Bank of Vanuatu
Venezuela: Central Bank of Venezuela
Vietnam: The State Bank of Vietnam

Yemen: Central Bank of Yemen

Zambia: Bank of Zambia
Zimbabwe: Reserve Bank of Zimbabwe

Banks owned or controlled by the Rothschilds: http://bit.ly/fW17i1

Bank For International Settlements (BIS): The Rothschilds Control And How To Dictate The World – Bla

www.blacklistednews.com

பாஜக மோடி பத்தாஸ்சும்.. தேசப் பத்தியும்...


தமிழா திருட்டு திராவிட கொள்ளைக் காரர்களை விரட்டி அடிப்போம்...


தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்று தான்.

தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது.

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் உலகத் தமிழர்களும் தமிழகமும் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பன்னிரண்டு  கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்ட போதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்ட போதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்ட போதோ, ஆந்திராவில் 20 தமிழர்கள் கொள்ளப்பட்ட போதோ.. தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை. காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதை போல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்...

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது..

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது..

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிந்தது..

மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது.

பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது.

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது.

உலகமே இப்படி இருக்கும் போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும் போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?

மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால் தான். தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்து விட்டார்கள்..

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.

இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத்தான் இருப்பார்.

தமிழகத்தைச் சீரழித்தது பெரியார் விதைத்த  திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்பதே எங்கள் கருத்து...

ஊர்ல உள்ள எல்லா அறிவாளியும் இங்க தான் சுத்துறானுங்க...


ஆகாயத்தில் ஒரு ஒளி - 55...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 55-ம் பகுதியாகும். மனித செயல்களை காட்டிலும் கடவுளின் செயல்கள் மிக, மிக சூட்சமமானவை. அவைகளை புரிந்து கொள்ள மனிதனுக்கு அவகாசம் இல்லை என தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

கடவுள் நம்பிக்கை என்பது என்ன? என்ற கேள்வியை இந்த 55-ம் தீர்க்க தரிசனப்பகுதி மக்கள் சமூகத்திற்கு முன் வைக்கின்றது. தன்னுடைய மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்த சமூகத்தை சுற்றியே இருக்கும் பட்சத்தில் கடவுளிடம் மனித சமூகம் வசதி, வாய்ப்புகளை எதிர்பார்ப்பது எவ்வளவு இழிவான செயல் என்று தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் இங்கு ஒரு விளக்கத்தை தருகின்றது. தன் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பது யார்? தீர்மானிப்பது... அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் சமூகம் இங்கு எங்குள்ளது? என்ற கேள்வியை தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் மக்கள் சமூகத்திற்கு இங்கு ஒரு வினாவை எழுப்புகிறது. தன் உழைப்பை நம்பாமல், தான் வணங்கும் கடவுள் நமக்கு இன்று தருவார் என்று நம்பிக்கையோடு சுற்றி திரியும் மக்கள் கூட்டத்தின் நிலையை எவ்வாறு புரிய வைப்பது என்பதே இன்றைய கடவுள் நம்பிக்கை என்ற தலைப்பின் முக்கிய அம்சம் என்று 55-ம் தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் ஒரு குறிப்பை தருகின்றன.


தன் சமூகத்தில் உள்ள வசதி, வாய்ப்புகளை ஒருவன் உழைப்பின் வழி மட்டுமே அடைய வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை தனது அறிவாலும், ஆற்றலாலும் அடைய வேண்டும் என்றும், அதற்கான வழிமுறை தேடுதல்களில் ஏற்படும் தடைகளை நீக்கவே கடவுள் என்ற மகாசக்தியிடம் மனிதன் முறையிட வேண்டும் என்றும், தனது பிறப்பு, இறப்பு என்ற நிலைகளை, தான் தீர்மானிக்க முடியாத சூழல்களில் மட்டுமே தன்னை காக்கும்படி கடவுளிடம் மன்றாட வேண்டும் என்றும், இதுவே முழுமையான கடவுள் நம்பிக்கை என்பதை மனித குலம் மறந்து விடக்கூடாது என 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


மேலும் ஆன்மீகம், பக்தி, தேடுதல், யோகம், தியானம், தவம் என்ற பெயரில் மக்கள்குலம் தன் உழைப்பையும், அறிவாற்றலையும் நம்பி முயற்சி செய்யாமல் மலை, மலையாக, ஜீவ சமாதி உள்ள இடங்களை நோக்கி அலைவது எதற்காக என்று இங்கு ஒரு கேள்வியை எழுப்புகிறது. அக்கால சித்தர்களும், ஞானிகளும், அரசர்களும் தங்களது பதவி, அந்தஸ்து, மனைவி, மகன், மகள், சொத்து, உறவுகளை விட்டுவிட்டு, நிலையான சந்தோஷம், ஆத்ம திருப்தி, நிலையான வாழ்க்கை, உண்மையான கடவுள் என தனது அறிவின் ஆற்றலையும், உயிர் வாழும் உன்னத நிலைகளை தேடியே மலை, மலையாக ஏறி அலைந்து ஜீவசமாதி ஆனார்கள். ஆனால் இன்றைய மக்கள் கூட்டமோ இதனை அறியாது அந்த ஜீவ சமாதி உள்ள இடத்திற்கு கூட்டம், கூட்டமாக சென்று அவர்களிடத்தில் பொன், பொருள், அருள் வேண்டி அலைகின்றனர். அவர்களுக்கு எத்தனை சித்தர்கள் காட்சி கொடுத்து ஆசி வழங்கி அவர்களுக்கு வழிகாட்டி உள்ளனர் என்ற கேள்வியை 55-ம் தீர்க்க தரிசனம் எழுப்புகிறது.

சித்தர்களின் நோக்கத்தையும், அவர்களின் தவத்தின் தன்மையை அறியாது இன்று மக்கள் கூட்டம் வெறும் ஆன்மீகம் என்ற பெயரில் அலைகிறது என 55-ம் தீர்க்க தரிசனம் குற்றம் சாட்டுகிறது. இதுவரை எந்த சித்தராவது கூட்டமாக செல்லும் மக்கள் கூட்டத்திற்கு முன் ஒரு சேர காட்சி கொடுத்துள்ளனரா? என்று 55-ம் தீர்க்க தரிசனம் இங்கு மற்றொரு கேள்வியை எழுப்புகிறது.

சித்தர்களின் அனைத்து ஜீவ சமாதிகளும் இறைவன் ரூபம் கொண்டுள்ள ஏதாவது ஒரு ஸ்தலத்தில் மட்டுமே காணப்படும். இதன் நோக்கம் அவர்கள் தேடியது இறைவனை மட்டுமே என்பதே இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். ஆக மக்கள் சித்தர்களின் ஜீவசமாதியை தேடி சென்று அங்குள்ள இறைவனை முழுமையாக உணர வேண்டும் என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மக்கள் தங்களை மறந்து வேடமிட்டு மலை, மலையாக ஏறி, இறங்கியும் தன் மீது இறைவன் மனம் இறங்கவில்லையே என்று புலம்புவதை இன்று நாம் காணலாம். மலை ஏறவும் வேண்டாம், மனதால் புலம்பவும் வேண்டாம். யாருக்கும் துன்பம் கொடுக்காமல் இறைவனை மனதில் நிலைநிறுத்தி, சித்தர்கள் முயற்சித்த செயல்முறைகளை அறிந்து அதன் வழியில் மனிதன் முயற்சித்தாலே அவன் பாவம் குறைந்து அவன் வாழ வழி கிடைக்கும் என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. சித்தர்களின் ஜீவசமாதியில் அவர்களின் ஆற்றல் மட்டுமே நிறைந்திருக்கும் என்றும், அவர்கள் அனைவரும் இறைவனிடத்தில் ஒன்றிணைந்து இருப்பார்களே ஒழிய அவ்விடத்தில் இருக்க மாட்டார்கள் என 55-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு விழிப்புணர்வை மக்கள் சமூகம் அறிய வேண்டும் என எடுத்துக் கூறுகிறது.


சித்தர்களின் ஜீவசமாதியில் உள்ள ஆற்றல்களை சாமான்ய மக்களால் அடைய முடியாது என்றும், அது சித்தர்களின் சொத்து என்று 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகிறது. நல்ல மனம் உடைய மாந்தர்கள், மனிதர்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உலக நோக்கத்திற்காக வாழும் அந்த மக்கள் சமூகம் சித்தர்களின் ஜீவசமாதியை தேடி வந்து அங்கு தவமியற்றும் சமயத்தில் சித்தர்கள் விண்ணுலகிலிருந்து இறங்கி வந்து அவர்களின் ஆத்மாவில் அமர்ந்து, தாமும் இறைவனை நோக்கி தவமியற்றி மனமகிழ்ந்து, அவர்களை விட்டு விலகும்சமயத்தில் தனது தவசக்திகளை அந்த மனிதர்களின் புனித ஆத்மாவிற்கு வழங்கி விட்டுச் செல்வார்கள் என்றும், அவ்வாறு சித்தர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த மனிதர்களை மக்களால் அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாது என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

இனி மக்கள் அதிகமாக கூடி, தவம், யோகம் என்று தங்களுக்கு தாங்களாகவே பெயர் சூட்டிக் கொண்டு பௌர்ணமி, அம்மாவாசை தினங்களில் கொட்டம் அடிக்கும் மக்கள் கூட்டத்தில் திடீர் என்று பல சோகச் சம்பவங்கள் நடக்கும் என்றும், இனி மக்கள் அவ்வாறான இடங்களுக்கு செல்ல மாட்டார்கள் என்று 55-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தன்னைவிட இவ்வுலகில் சிறந்த ஆன்மீகவாதி யாரும் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் அத்தனை நபர்களுக்கும் இது போதாத காலம் என்று 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஒரு மகா பாதகன் ஆன்மீகவாதியாக தன்னை சித்தரித்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும், அவனின் முகத்திரையை விலக்கி அவனின் சுயரூபம் என்னவென்று உலக மக்கள் அறியும்படி செய்யும் ஒரு மகா சம்பவம் ஒன்று தற்போது நிறைவேற உள்ளதாக 55-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -3...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1325 - 1499
இரண்டாம் படம் காலம் 1499 - 1649

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra- By Cynthia Talbot...

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -2...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1000 - 1174
இரண்டாம் படம் காலம் 1174 - 1324

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்..

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra - By Cynthia Talbot...

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள்...


தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை.

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்...

நூல்: Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra- By Cynthia Talbot...