04/05/2017

பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக மரண தண்டனை வழங்க முடியாது.. மும்பை நீதிமன்றம் தீர்ப்பு...


குஜராத்தில் சங்பரிவார் பயங்கரவாதிகள்  நடத்திய கொடூர படுகொலைகளின் ஒன்றான பல்கிஸ் பானு குடும்பத்தார் கொலை வழக்கில் - 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அப்போது பல்கிஸ் கர்ப்பமாக இருந்தார். அவளின் கண் முன்னே 3 வயது குழந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்தார்கள் வெறியர்கள். பிறகு அவளை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தார்கள் மதவெறிக் கும்பல்.

எந்த மனிதனும் ஏற்க முடியாத வன்முறைக் கொடூரம் அது. பல பெண்களை கற்பழித்து அவர்களின் பிறப்புருப்பில் மரகட்டையால் ஆப்பு அடித்து துடிக்க துடிக்க எரித்து கொலை செய்தார்கள்.. கவுசர் பானு என்ற 9 மாத கற்பினி பெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் பொசுக்கினார்கள்

இந்த வழக்கின் சாட்சிகளை கலைக்க  இணப்படுகொலையின் ‘மாதிரி மாநிலமான’ குஜராத்தின் காவலர்களும் மருத்துவர்களும் முயன்றதால் - வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரித்தது.

இத்தனை ஆண்டுகளுக்கு பின், தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கின் சாட்சியத்தை சிதைக்க முயன்ற மருத்துவர்கள், போலீஸ்காரர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை கொடும் பயங்கரவாதிகள் அவர்கள் என்பதையும், நீண்டதொரு போராட்டம் நடத்த வேண்டிய தேவையையும் இந்த வழக்கு  இந்தியனாக பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துக் காட்டுகிறது.

குஜராத் இணப்படுகொலை இந்தியாவின் மறக்க முடியாத ஆராதரணம் என்பது மட்டும் உண்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.