15/10/2017

தமிழர்களின் தற்போதைய நிலை...


2030 -ல் பூமிக்கு ஆபத்தா? அச்சிறுத்தும் ஆய்வுகள்...


பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் காந்தத்திலும் இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது.

பூமியின் காந்த மண்டலம்தான் சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களில் இருந்து நம்மை காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும்.

காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம். இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது என விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர்.

2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது.

இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர்.

கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.

துருவங்கள் மாறும் இந்த நாலு லட்சம் ஆண்டுகள் என்பது கிட்டத்தட்ட இந்துக்கள் கூறும் கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது.

இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:

கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்

த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்

த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்

கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர்.

தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்...

விவசாயத்தை காப்போம் தமிழா...


குண்டலினி...


எளிய முறை குண்டலினி...

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்.

காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்.

புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும்.

ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல.

உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.

அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது.

பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது.

இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினை சக்கரம்..

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும்.

உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும்.

அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது.

மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.

தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.

மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.

ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...

டெங்கு நோயை வைத்து கொள்ளை அடிக்க திட்டம் போடும் எடப்பாடி அரசு...


அந்த காலத்தில் தீபாவளி சலுகை.. மெட்ராஸ் ரயில்வே...


இன்றைக்கோ எல்லாமே தலைகீழாக...

Madras and Southern Mahratta Railway..

The Madras and Southern Mahratta Railway was a railway company that operated in southern India. It was founded on 1 January 1908 by merging the Madras Railway and the Southern Mahratta Railway...

கார்பரேட் பொருள்கள் வந்தது இயற்கை அழிந்தது நோய்கள் பரவியது வியாபாரம் அதிகமானது...


மாட்டிறைச்சி மனித கொலைகள்...


பசு இறைச்சியை வைத்திருந்ததாக கூறி ஜார்க்கண்டில் பஜ்ரங்தள் பயங்கரவாதிகளால் அடித்து கொல்லப்பட்ட அலீமுதீன் அன்ஸாரியின் படுகொலையை நேரில் கண்ட சாட்சியான ஜலீல் அன்ஸாரியின் மனைவி வாகன விபத்தில்  கொல்லப்பட்டுள்ளார்.

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க சென்றபோது அடையாள சான்றுகளை கேட்டதால் அதனை எடுப்பதற்காக அலீமுதீன் அன்ஸாரியின் மகனுடன் பைக்கில் வீட்டிற்கு செல்லும் வழியில் பின்னால் வேகமாக வந்த வாகனம் வேண்டுமென்றே மோதியதில் அவர் பலியானார்.

அலீமுதீன் அன்ஸாரியின் மகனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து திட்டமிட்டு நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவருக்கு ஏற்கனவே சாட்சியம் அளிக்கக்கூடாது என்று பஜ்ரங்தள் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து வந்தனர்...

மலர் மருத்துவம்...



லண்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் பாஹ் என்கிற ஹோமியோபதி டாக்டர், மலர் மருத்துவம் என்ற புதிய துறையைக் கண்டறிந்தார்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக லண்டன் காடுகளில் பூக்களோடு உறவாடிய பிறகுதான், இந்த மருத்துவ முறையை அவர் கண்டறிந்தார்.

ஒவ்வொரு மலருக்கும் ஒரு தனிச் சிறப்பு குணம் உண்டு. அது உடல்நலச் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வாகப் பயன்படும் என்று அவர் ஆராய்ச்சி செய்துள்ளார். தனி மலரையோ அல்லது, பல மலர்களின் கலவையையோ சிகிச்சையாகப் பரிந்துரைத்துள்ளார்.

மனமும் உடலும்..

மலர்களின் நறுமணம், நிறம், அமைப்பு போன்றவை மனிதர்களுக்குக் காலம்காலமாகப் புத்துணர்வை வழங்கிவந்துள்ளன. அத்துடன் நில்லாமல் மலர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் என்பதே அவருடைய கண்டறிதல். உடல்நலக் கோளாறு என்பது மனதின் வெளிப்பாடே. மனதைச் சுகமான நிலையில் வைத்திருப்பதால், உடலும் சுகமடைகிறது என்பதே இதன் அடிப்படைத் தத்துவம்.

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு இந்த மருத்துவம் உதவுகிறது.

ஒருவருடைய உடல் பகுதி பகுதியாக வலிக்கிறது என்றால், உடல் இறுக்கமடைந்துவிட்டதாகக் கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மனநிலையும் அதுபோலவே இருக்கும். இவருக்கு எடுத்த பொருட்களை எடுத்த இடத்தில் வைக்காவிட்டால் கோபம் வரும். நேரத்துக்கு ஒரு வேலையை முடிக்காவிட்டால் பொறுக்க முடியாது.

சுத்தம், நேரம் ஆகியவற்றைப் பராமரிப்பதற்காக அதிக நேரத்தையும், மனதையும் செலுத்தும் நபராக இருப்பார். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர், தன் மனதிடம் பிடிவாதமாக இருக்கிறார். அதுவே அவருடைய உடல் வழியாக, உறுப்புகளில் வலியாக வெளிப்படுகிறது.

இதற்கு ரா வாட்டர் மற்றும் பீச் என்னும் இரு மலர் மருந்துகள் உதவும். அதே நேரத்தில் வேலையும் நடக்கும். இறுக்க உணர்வை மனம் கைவிடும்.

பிரச்சினைகளுக்கு உதவி..

முதுகு வலி உள்ளவர்களுக்குப் பணம் அல்லது உறவு குறித்த கவலையோ, பயமோ இருக்கலாம். இதைப் போக்க கார்ஸ், மிமுலாஸ் என்கிற மருந்துகள் உதவும். இதனால் முதுகு வலி குறையும்.

டீ, காபி, வெற்றிலைப் பாக்கு, மது, சிகரெட் பழக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும் மலர் மருந்துகள் உண்டு. பரு, தோல் பிரச்சினை, தலைமுடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் மலர் மருந்து உண்டு.

இந்தச் சிகிச்சையைத் தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும், அனுபவமும், தீவிர ஆர்வமும், உள்ளார்ந்த பார்வையும் அவசியம். அப்படிப்பட்ட ஒருவரிடம் சிகிச்சை பெறும்போது மலர் மருத்துவம் தரும் பலன்களை உணரலாம்.

அகத்திப்பூ:   பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும்சூட்டையும் நீக்கும்.

முருங்கைப் பூ: பித்தம் நீக்கும்.வாந்தி குணமாகும்.கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வை அதிகமாக்கும்.

செந்தாழம் பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோஷம், க்ஷயம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்த்திப் பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் சுட்டால்  உண்டாகும் நோயை  நீக்கும்.

இலுப்பைப்பூ: நல்ல சுவையுடைய  இப்பூவினால் பாம்பின் விஷம் நீக்கும், வாத நோய்  குணமாகும்.

புளியம் பூ: மலையை சார்ந்த காட்டில் முளைக்கும்  இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.                      

மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி,  இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும். இரத்தம் மிகுதியாகும். உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.          

வேப்பம்பூ:  நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்குநோய்கள், ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்                    .

பனம் பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம் பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ: சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை  குணமாகும். விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய், வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்,

குருக்கத்திப்பூ: கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம்,  புண் பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும். அதிகப் பால் சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால் சுரப்பு குறையும்.

பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்து விரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம் பூ: இதனை முகர வாந்தி நிற்கும். உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினை நோய் ஆகியவை நீங்கும். ஆனால் பித்த மயக்கம் ஏற்படும்.            

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும். வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு, ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்.

செண்பகப்பூ: வாத, பித்த நோய்,  எலும்பு காய்ச்சல்,  பால்வினை நோய், விந்து விரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.

இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி,  நீங்கும். தலைமுடி நன்றாக வளரவும், கருமை நிறத்தினை தரும்.

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.

காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும்...

ரெய்கி : Reiki and Pranic Healing...


ரெய்கி என்றால் என்ன? அது ஒரு வகையான சிகிச்சை முறை. இதைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

நமக்குக் கண்ணுக்குத் தெரிவது எலும்பு, சதை, ரத்தம், நரம்புகளால் ஆன உடல் மட்டுமே. நம் ஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் சூட்சும உடல் ஒன்று இருக்கிறது. அது நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

பொதுவாகப் பொருள் என்பது Solid, Liquid அல்லது Gas நிலையில் இருக்கும். இந்தச் சூட்சும உடம்பானது Plasma என்னும் நேர் மற்றும் எதிர்மறை அயனிகளால் (Positive and Negative Ions) ஆன ஒரு (நான்காம்) நிலையில் உள்ளது.  உடல் திசுக்களின் செல்களில் இருக்கும் அந்த ப்ளாஸ்மா வேறு; இது வேறு. இந்தச் சூட்சும உடம்பிற்கு Etheric body, Energy body, Bio-Plasmic body எனப் பல பெயர்களை வைத்து வழங்குகின்றனர்.

நம் உடலில் இருக்கும் ரத்த நாளங்களைப் போல இந்த energy body-யிலும் ஆற்றல் பாதைகள் (energy channels or meridians) இருக்கும்.

இந்தச் சூட்சும உடம்பானது நமது மெய்யுடலைச் சுற்றி ஒரு 4-5 inches கவர்ந்தவாறு கோழி முட்டை வடிவில் இருக்கும்.  நம் உடலின் எந்தப் பாகத்தில் நோய் வருவதாக இருந்தாலும் இந்த energy body-யை முதலில் தாக்கிவிட்டு அதன் பின்னர் தான் நம் உடலில் தாக்கத்தைக் காட்டும்.

அதே போல, நம் உடலில் வெட்டு போன்ற காயங்கள் ஏற்படும் போது இந்த energy body-யிலும் மாற்றங்கள் தெரியும். எனவே இந்த energy body-க்கு ஆற்றல் கொடுப்பதன் மூலம் நோயிற்கான சிகிச்சையை நாம் துரிதப்படுத்த முடியும்.

சரி, இந்த ஆற்றலை நாம் எங்கிருந்து பெறுவது? இதென்னடா வேண்டாத வேலை.. பெட்ரோல் டீசல், CNG (fuel) மாதிரி இதற்கும் ஆற்றல் தேவையா என்று பயப்பட வேண்டாம். இந்த ஆற்றலை (energy) நாம் இயற்கையிடமிருந்தே பெறலாம். அதாவது பிரபஞ்சத்திடமிருந்து. சூரியன், காற்று, மரங்கள் போன்றவற்றிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அலைகளைப் பெற்று உடம்பில் சிகிச்சை தேவைப்படும் இடத்துக்குச் செலுத்துவது தான் இக்கலை. சரி இதற்கு ஏதேனும் கருவி தேவையா? இல்லை. இதெற்கென மருந்து? இல்லை. சிகிச்சை அளிப்பவர் ஒருவர் இருந்தால் மட்டும் போதும். உலகின் எந்த மூலையில் இருப்பவரும் எந்த மூலையில் இருப்பவருக்கும் Distant Healing முறையில் கூட சிகிச்சை அளிக்கலாம்.

இவ்வளோ நேரம் சீரியஸா கேட்டுட்டு இருந்தோம்.. இப்போ தான் தெரியுது இது ஒரு கப்சானு என்று சொல்பவர்கள் இப்பொழுதே அப்பீட் ஆகிக் கொள்ளலாம். மாறாக இயற்கை நமக்கு அளித்திருக்கும் ஒரு அதிசயமாக இதை எண்ணுபவர்களும் தீராத நோயினால் அவதிப்படுபவர்களும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் இருப்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம்.

Common Cold, Fever, Headache, Diabetes, High BP, High Cholestrol, Heart Problems, Thyroid போன்ற Hormone Problems, Kidney Problems, Migraine, Tonsillitis, Sinusitis, STD, Leprosy, Cancer போன்ற எல்லா விதமான நோய்களுக்கும் தனியாகவோ, மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து supplement ஆகவோ Pranic Healing சிகிச்சை செய்யலாம்.

இது சிகிச்சை முறையைத் துரிதப்படுத்தும் catalyst (ஊக்கி) ஆகப் பயன்படுகிறது.

Rei என்றால் Universal; Ki என்றால் Life Energy or Prana (நம்முடைய மொழியில்). இதைத் தான் Reiki என்றும் Pranic Healing என்றும் சொல்கின்றனர். இரண்டு கலைகளும் ஒன்று தான்.

ஆனால் இந்த இரண்டு சிகிச்சை முறைகளும் சில minor வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.

Reiki-இல் ஆற்றல் அளிப்பதை (energizing) மட்டுமே முக்கியமாகக் கொள்கின்றனர்.

Pranic Healing-இல் முதலில் ஆற்றல் மையங்களைச் (Energy Chakras) சுத்தம் செய்வது (Cleansing), பின் ஆற்றல் அளிப்பது, சிகிச்சை அளிப்பவர் சிகிச்சை பெறுபவரிடம் இருந்து நோய் (அ) தீய ஆற்றல் தனக்குப் பரவாமல் பார்த்துக் கொள்வது போன்ற வரிசை முறையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர்...

லார்ட் லபக் தாஸ் யார்?


உண்மையில் லார்ட் லபக் தாஸ் ஒரு ஆங்கிலேயர் கிடையாது.

இந்த சொல் 1900 களில் சென்னையில் பெரிய நிலம் வாங்கி வசதியாக வாழ்ந்த குஜராத்திகளைக் குறிக்கும்.

(அந்த நிலம் இன்றும் பார்டர் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
குஜராத்திகள் இப்போதும் இருக்கிறார்கள்).

அவர்கள் பெயர் லாட் என்று தொடங்கி தாஸ் என்று முடியும்.

இன்றும் L.G.N road, V.N.Doss road, Mohan doss road, Gopal doss road ஆகியன இவர்களின் பெயரிலேயே அமைந்துள்ளன...

தமிழகத்தில் சாதி இனம் மறந்து வடுக திராவிட வந்தேறி தெலுங்கர் கள் தமிழராக வாழ்கிறார்கள்...


வயிற்றுவலி...


வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும்.

வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள்.

அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள்.

சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும்.

கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்..

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.

2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்.

3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.

4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.

5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டு பிடித்து மருத்துவம் செய்ய வேண்டும்.

காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

மருத்துவம்...

மருந்து_1..

நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2..

அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

மருந்து _ 3..

முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயற்றுவலி குணமாகும்.

மருந்து _ 4..

அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எÊடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

மருந்து _ 5..

சுத்தமான களிமண்ணை மாவுபோல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 3 மணி நேரம் கழித்து எடுத்துப் போட்டுவிட வேண்டும். வெயிலில் வேலை செய்து திரும்பியவர்கள் வயிற்று வலி நீர் இறங்கவில்லை என்று கூறினால் மல்லாந்Êது படுக்கவைத்து வயிறு முழுவதும் விளக்கெண்ணெய் பூசி வைத்தால் வயிற்றுவலி குறையும்.

அதிகமான கவலை, மனஉளச்சல், உணர்ச்சிவேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால் தான் பெரும்பாலும் வயிற்றில் புண்ணுண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றது.

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்...

இதே போன்று எங்கள் உரிமைகளை எங்களுக்கே கொடுத்து விட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி...


எஸ் எப் ஐ தலைவர் எசக்கி கைது ஏன்? எடப்பாடி மாணவர் சங்கத் தலைவர்களைக் குறிவைப்பது ஏன்?


ஆர் எஸ் எஸ் தனக்கு மிகப்பெரிய சவாலாக இடதுசாரி மாணவர் இயக்கத்தையே கருதுகிறது . இந்தியா முழுவதும் அவர்களை வேட்டைபாடுகிறது.

காவி அடிமை எடப்பாடி எஜமானரைக் குளிர்விக்க எஸ் எப் ஐ மீது பாய்கிறார்.

ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசியாக காட்சிதர எம் மாணவத் தோழர்களை வேட்டியாட ஏவல் நாய்களை அனுப்புகிறார்.

எங்கும் இடது சாரி மாணவர் கூட்டே வெல்லுகிறது. ஏனெனில் அவர்களே கல்விக்காகவும் நியாயத்துக்காகவும் போராடுகிறவர்கள்.

தமிழகத்திலும் அதுவே நிகழும். அடிமைகளே. ஏவல் நாய்களே. புரிந்து கொள்வீர்...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 32...


யோகாவின் எட்டு நிலைகள்...

தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்த கலையாக இருந்தது. யோகிகளும், சித்தர்களும் தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தியும், மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் மலைக்க வைக்கும் சக்திகளை எல்லாம் பெற்றிருந்தார்கள். இந்திய வரலாற்றை ஆராய்ந்த பல வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களும் யோகிகளின் இந்த யோக சக்திகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்திய யோகா பற்றி பல முனிவர்களும், யோகிகளும் பல வழிகளில் விவரித்திருந்தனர் என்றாலும் பதஞ்சலி மகரிஷி அவற்றை எல்லாம் சேர்த்து, தொகுத்து, சுருக்கி “யோக சூத்திரங்கள்” எழுதினார். அந்த யோக சூத்திரங்களைப் படித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு பிரமிப்பு வராமல் இருக்காது. அது என்னவென்றால் ஒரு தேவையில்லாத அலங்காரச் சொல்லைக் கூட அதில் யாரும் காண முடியாது.

முதல் சூத்திரமே ‘இப்போது யோகம் விளக்கப்படுகிறது’ என்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார்.

“மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்”

ஒரு குளத்தில் அலைகள் இல்லாத போது, அது நிச்சலனமாக இருக்கும் போது அதன் அடியில் உள்ளவை எல்லாம் மிகத் துல்லியமாகத் தெரியும். அதே போல மனமும் பல எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்படாமல், அது பல வித எண்ணங்களால் ஆட்கொள்ளப்படாமல் அமைதியாக இருக்கும் போது நம் ஆழ்மனதை நம்மால் முழுவதுமாக அறிய முடிகிறது. ஆழ்மனதை அறிகிற போது அதன் அற்புத சக்திகள் மிக எளிதில் நமக்குக் கை கூடுகின்றன. இதையே பதஞ்சலி மகரிஷி யோகமாகச் சொல்கிறார்.

இப்படி யோக சூத்திரங்களை மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகளால் சுருக்கமாக விளக்கிக் கொண்டே போகிறார் பதஞ்சலி. முழுவதுமாக யோக சூத்திரங்களைப் படிக்க விரும்புபவர்கள் விவேகானந்தரின் ராஜ யோகம் நூலைப் படிக்கலாம். அதில் அவர் பதஞ்சலியின் சூத்திரங்களையும், அதற்கான விளக்கங்களையும் மிக அழகாகக் கொடுத்துள்ளார்.

பதஞ்சலி யோகத்தின் எட்டு அங்கங்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஏழாவது அங்கம் தான் தியானம். பெரும்பாலான தியான வகைகள் யோகாவின் சில அம்சங்களையாவது பின்பற்றி வலியுறுத்துகின்றன என்பதால் பதஞ்சலியின் யோகாவின் எட்டு நிலைகளை மிகச்சுருக்கமாக ஒரு சாமானியனுடைய பார்வையில் தெரிந்து கொள்வோம்.

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.

2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.

3. ஆசனா - யோகாசனங்கள்.

4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.

5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்.

6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்.

7. தியானா- தியானம்.

8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இந்த ஒவ்வொரு படியைப் பற்றியும் இங்கு கூறியிருப்பது துல்லியமான விளக்கமாகாது. இங்கு பதஞ்சலியின் யோக சூத்திரங்களை விரிவாக அறிந்து தேர்ச்சி அடைவது நம் குறிக்கோள் அல்ல என்பதால் பொதுவான விளக்கம் எளிய சொற்களில் தரப்பட்டிருக்கிறது.

(அவற்றை மிகச்சரியாக, விரிவாக அறிய விரும்புபவர்கள் பதஞ்சலியின் யோகசூத்திரங்களை நல்ல நூல்கள் மூலம் படித்துக் கொள்ளலாம்)

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆரம்பப் படிகளாகவே இவற்றை சொல்வது ஏனென்றால் நற்பண்புகள் இல்லாதவன் எதைக் கற்றாலும் அதனால் அவனுக்கும், அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் தீமையே விளையும் என்ற ஞானம் அன்றைய யோகிகளுக்கு இருந்தது.

இன்றைய காலக் கட்டத்தில் நற்குணங்கள் இல்லாத அறிவு எத்தனை அழிவுகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அடுத்ததாக மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். உடல்நலம் சரியாக இருக்கும் வரை மட்டுமே மற்ற உயர்ந்த விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்துதல் சாத்தியம் அல்லவா?

நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.

ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது.

குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.

இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து தியான முறைகளும் அமைந்துள்ளன.

இனி அந்த தியான முறைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்.....

தமிழினத் துரோகி திருமா வும் விசிக கட்சியும்...


கர்நாடகா மாநில விசிக, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக்கூடாது என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஒரு சொட்டு நீர் தமிழகத்துக்கு தரப்பட்டால் கூட கர்நாடகாவில்  ஒரு தமிழனும் வாழ முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று அவர்கள் கொக்கரித்து வருகிறார்கள்..

அது போல ஆந்திரா மாநில வசிக, பாலாற்றுக்கு குறுக்கே ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணைக்கு தமிழ்நாடு தடை போடக்கூடாது. அப்படி தடை போடுமானால், தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் செல்வதை உடனடியாக  தடுத்து நிறுத்துவோம் என்று முழங்கி வருகிறார்கள்.

கர்நாடகாவில், ஆந்திராவில் கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற  ஒன்று இருக்கிறதா., அப்படி இருந்தால் அதன் தலைவர் யாராக இருக்கக்கூடும் என்று ஆராய்ந்து பார்த்தால், கர்நாடகா  மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆந்திரா மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக விடுதலை சிறுத்தைகளின் அந்தந்த மாநில பிரிவுகளாம். அவற்றுக்குத்  தலைவரும் நம்ம திருமாவளவன் தானாம்.

அடடே... தமிழ்நாட்டில் காவிரி வேண்டி போராட்டம். கர்நாடகாவில் காவிரி மறுப்புப் போராட்டம். தமிழ்நாட்டில் பாலாறு நீர் வேண்டி போராட்டம். ஆந்திராவில் பாலாறு நீர் மறுப்புப் போராட்டம்.

திராவிடன் கூட பழகி பழகி திருட்டு வேலையெல்லாம் நல்லா கத்துக்கிட்டு இருக்கார் தலைவரு.. ஆனா தேற மாட்டாரு...

https://m.youtube.com/watch?v=Kfob6c8sBfs

கடலூர் நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி சர்க்கரை ஆலைநிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த டன் ஒன்றிற்கு ரூபாய் 975.00ஐ கொடுக்காமல் ₹. 125.00 மட்டுமே வழங்க முடியும் என்று எதேச்சதிகாரபோக்குடன் செயல்படும் மேற்படி ஆலைநிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஆலைவாசலில் நடைபெற்றது...


மேற்படி ஆர்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க நகர தலைவர் தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் திரு.மாதவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் தொடர்ந்து கரும்பு விவசாயிகள் ஈஐடி பாரியின் உள்பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்...

சித்தர் ஆவது எப்படி - 12...


பிறவி தாண்டிய அனுபவத்தில் கனல் பெருக்கம் பெறல்...

எதுவாக இருந்தாலும் எந்த உடைமைகளை கொண்டு இருந்தாலும், எந்த எந்த பொருள்களை சொந்தமாக கொண்டு இருந்தாலும், ஏன் இந்த அண்டத்தையே தனக்கு சொந்தமாக கொண்டு இருந்தாலும், அதை இயக்குவதற்கும் பயன் படுத்துவதற்கும், வேண்டிய ஆற்றல் அறிவு நம்மிடம் இல்லையென்றால் அவைகளால் என்ன பலன் என்ன பயன் ?

அலெக்ஸாண்டர் பரந்த சாம்ராஜ்ஜியத்தை வென்றான்.. ஆனால் அதை அனுபவிக்க ஆற்றல் இழந்து உயிர் பிரிந்து தன் சொந்த ஊர் திரும்புவதற்கு முன்பே, மரணம் ஒன்றை அடைந்து விட்டான்..

அவனுடைய முயற்சியால் பலத்த உயிர் சேதங்கள்... அத்தனையும் விரையமானதற்கும், விரையமாக போவதையும் அறியக்கூடிய அறிவும், அந்த அறிவை அடையும் ஆற்றல் இல்லாமல் போனது ஒரு காரணம் என்பது ஒரு தெளிவான விசயம்..

சரி மீண்டும் அலெக்ஸாண்டர் பிறந்து விட்டான் என்று வைத்து கொள்வோம்.. அவன் முன்பு வென்ற அந்த பரந்த சாம் ராஜ்ஜியத்தை மீண்டும் எனக்கே என உரிமை கொண்டாட முடியுமா ?

நிச்சயமாக முடியாது, காரணம் அவன் இறந்து பிறந்த இடைப் பட்ட காலத்தில் அந்த பரந்த சாம்ராஜ்ஜியம் வேறு பலரின் ஆக்கிரமிப்புக்கு சொந்தமாகி விடும்..

அலெக்ஸாண்டர் மீண்டும் அதே போர் அதே உயிர் சேதம், அதே வீர செயல் செய்தால் தான் மீண்டும் பெற முடியும்..

அப்படி பெற்றபின் மீண்டும் அதே கதைதான்..

தன் உயிரை காத்துக் கொள்ளாத அவன், மீண்டும் அவற்றை இழந்து, விரையமாக்க வேண்டியது தான்...

அவன் ஒரு முட்டாள் என்று சொன்னால் தவறு ஒன்றும் இல்லையே..

அலெக்ஸாண்டர் ஒரு முட்டாள் என்ற முத்திரை குத்த வேண்டியவனை மாவீரன் என்று அல்லவா போற்றி புகழுகின்றது..?

இதிலிருந்து ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்ளப் படவேண்டியது என்ன வென்றால் உலக புகழ் பெற்ற அனைவரும் முட்டாள்கள்..

இந்த உண்மை மனிதனுக்கு எப்பொழுது தெரியவரும் என்றால் அவன் பிறவி தாண்டிய ஒரு அனுபவத்தை பெற்றால் ஒழிய அறிந்து கொள்ள முடியாது..

எல்லாம் தோன்றும், பொறி புலன்கள் வழியாக வெளிப்படும், இந்த தோற்ற உலகமாகிய இந்த பிறவி, இந்த வாழ்வுக்கு அப்பால், இருக்கும் தோன்றா நிலையாகிய பிறவிக்கு அப்பால் ஆன ஒரு அனுபவத்தை அறியும் போது மட்டுமே; எதை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ, அந்த ஒன்றை அறிய முடியும்...

அந்த ஒன்றை அறிந்து விட்டால் அவன் எல்லாம் அறிந்தவன் ஆகிவிடுவதால் அவன் ஒரு போதும் முட்டாள் ஆக முடியாது...

அந்த நிலையில் எது நிரந்திரம் என்பதை அறிகின்ற அறிவும், அதை பெறுகின்ற திறனும் உடையவனாக தகுதி பெறுவதால், நிரந்திரத்தை பெற்று விட்ட காரணத்தினால், அவன் ஒரு போதும் ஒரு நாளும் முட்டாள் ஆக முடியாது..

சரி, இந்த பிறவி தாண்டிய அனுபவத்தை, இந்த பிறவியிலேயே பெற முடியுமா ? என்ற கேள்வி இயல்பாகவே எழலாம்..

இந்த பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவத்தை பெற முடியவில்லை என்றால் எப்போதும் முடியாது..

காரணம் மனம் பிறவியில் மட்டுமே உள்ளது.. மனம் மரணத்தில் இல்லை... மனம் மூலமாக அறியும் அறிவும் மரணத்தில் இல்லை..

ஆனால் உயிரோடு இருக்கின்ற பொழுது மரணத்தின் தன்மை அறிகின்ற அந்த நிலையில், மனம் இருக்கும்: அதனால் அறிவும் இருக்கும்..

இந்த நிலையில் தான் அந்த ஒன்றை அதாவது எதை அறிந்தால் எல்லாம் அறிய முடியுமோ, அந்த ஒன்றை மனதால் அறியவும், அறிவால் அனுபவப் படவும் முடியும்... இந்த நிலை தான் தெளிவு நிலை அல்லது ஞான நிலை என்பர்..

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. ஞானம் அடைந்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் அல்ல.. அவர்கள் அறிவு களஞ்சியங்கள் அல்ல.. எதையுமே அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் அவர்களிடம் துளியும் இருக்காது.. அவர்களுடைய சித்தம் எந்த எண்ணப் பதிவுகளையும் தாங்கி நிற்காது..

ஆனால் தேவையான ஒன்றை, நொடியில், அறிவு களஞ்சியமாகிய பேரறிவிலிருந்து, பேரறிவாகிய மிக பெரிய கணணியில் ( computer server ) பெறும் ஆற்றலை உடையவர்கள்..

ஆனால் சாதாரண மனிதனோ தானே அறிவு களஞ்சியமாகி தன் சித்தத்தில் அதி மிஞ்சிய பளுவினை ஏற்றி ஏற்றி, நிலை தடுமாறி போகின்றான்..

அறிவு குவியலிலே விழுந்து, தேவையான அறிவை தேவையான நேரத்தில் பெற முடியாமல் அல்லல் படுகின்றான்..

அறிவு குவியலிலே விழுந்தவனுக்கு தேவையான அறிவினை உடனே எடுத்துக் கொள்ள முடியாமையால், அதற்கு ஒத்தது போல் தோன்றும் தவறான அறிவினை தேர்ந்தெடுத்து முட்டாள் ஆகிறான்..

ஒரு ஞானி அறிவிலே குழந்தை போல் தோன்றுவான்.. அவன் சித்தத்தில் பாரம் எதுவும் இல்லையாதலால் என்றும் மகிழ்வுடன் இருப்பான்..

ஆனால் ஆபத்து காலங்களில் தன்னை முறையாக காத்துக் கொள்ளும் புத்திசாலியாக இருப்பான்..

ஆனால் அனைத்தையும் கற்ற பண்டிதனோ, சித்தத்தின் சுமையால் சிரிக்கவே மறந்து போய் இருப்பான்...

இப்படியான சூழ்நிலையில் பிறவி தாண்டிய அனுபவத்தை பெற நமக்கு உதவுவது கனல் ஒன்றே..

அதன் மூலம் மட்டுமே நாம் பேரறிவோடு தொடர்பு கொள்ள முடியும்..

பேரண்ட கணணியோடு தொடர்பு கொண்டு, சித்தத்தை வெறுமை அதாவது வெற்றிடமாக்கி, பளு இன்றி வேண்டிய அறிவினை வேண்டிய நேரத்தில் பெற முடியும்..

வேண்டிய நேரம் என்பது மிக முக்கியம்.. அதுவே புத்தியாகும்..

காலம் கடந்து வருகின்ற அறிவால் ஒரு பயனும் இல்லை.. காலம் கடந்த அறிவினை பெறுகின்றவனும் ஒரு முட்டாளே..

அலெக்சாண்டர் தான் உயிர் போகும் தருவாயில் தன் தவறை உணர்ந்து காலம் கடந்து பெற்ற அறிவால் தான் வென்ற பரந்த சாம்ராஜ்ஜியங்களால் ஒரு பலனும் இல்லை என்பதை குறிக்கவே தன் சவப்பெட்டியில் தன் இரு கைகளை வெளியே நீட்டி வைத்து சவஊர்வலம் செல்ல விரும்பினான்..

அவன் மட்டும் அல்ல இன்றும் அவ்வாறே எல்லோரும் இருக்கிறோம்..

காலம் கடந்து வரும் அறிவு புத்திக் கூர்மை இன்மையாலே என்பதை நாம் மறக்கக் கூடாது..

கனலை மட்டும் பெற்றால் போதாது.. தேவையான அறிவினை தேவையான நேரத்தில் பெற உதவும் புத்தியை பெற, போதுமான கனல் பெருக்கத்தையும் பெற அவசியம் ஆகிறது..

அந்த கனல் பெருக்கம் பிறவி தாண்டிய அனுபவத்தில் உறுதியாக பெற முடியும்..

மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் கனல் என்பது பிறவியில் உயிரோடு இருக்கும் போதும் இருக்கும்.. பிறவி தாண்டிய அனுபவமான மரணத்திலும் இருக்கும்..

தேக மரணத்தில் பெறுகின்ற கனல் நம் கைவசம் இல்லை.. ஆனால் உயிரோடு உள்ள போதே, யோகத்தின் மூலம் பிறவி தாண்டிய அனுபவ நிலையில் கனலை வேண்டிய அளவு பெற முடியும்..

எட்டு ஆகிய எண் குணம் பிறவியில் உள்ளது. ஆனால் அருளும் ஆற்றலும் ஆகிய இரண்டு பிறவி தாண்டிய நிலையில் உள்ளது..

இந்த எட்டும் ( அ என்பது ) இரண்டும் ( உ என்பது ) கூடிய அனுபவமே பிறவியிலேயே பிறவி தாண்டிய அனுபவமாகிய பத்தும் ( ய என்பது ) சேர்ந்த கனல் அனுபவம் என்பது...

இந்த அ,உ, ய என்பது தமிழ் எண்கள் எட்டு, இரண்டு, பத்தை குறிக்கும்...

எட்டு இரண்டை கூட்டி எண்ணவும் அறியீர் என்ற வள்ளலார், அந்த கனல் அனுபவத்தை பெற முடியாத அவல நிலையையே குறிப்பால் சுட்டி காட்டுகிறார்...

கனல் பயிற்சியை சித்தர்கள் உயிராக கொண்டனர்...

மாநில சாலை போட்டதில் தார் வாங்கிய செலவில் மட்டும் 1000 கோடி ஊழல் நடந்திருக்கலாம் என ஆர்டிஐ ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள்...


பிட்டுமன் எனப்படும் தார் மூலப்பொருள்  எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது.  பிட்டுமன் அதிக விலை உள்ளப்போது வாங்கப்பட்டதாக கணக்கு துவங்கப்பட்டு பிட்டுமன் விலை வீழ்ந்த போது ரோடு போட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

சாதாரண ரோடு காண்டிராக்டில் உள்ள தார் வாங்குவதில் மட்டும் ஆயிரம் கோடி ஊழல் என்றால், மொத்த ரோடு கான்டிராக்டில் எத்தனை ஊழல் இருக்கும் ? மொத்த பட்ஜட் செலவினங்களில் எத்தனை கோடி இருக்கும் ?

அத்தனை கோடியும் ஊழல் இல்லாமல் இருந்தால் சாராயம் விற்று பிழைக்க வேண்டிய தேவை அரசிற்கே இருக்காதே...

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், வடபாதிமங்கலம் ஊராட்சியில் 2015-16 நிதியாண்டில் நடைபெற்ற முறை கேடுகள் தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது...



அதில் ஒன்று, ரூ.60400க்கு சோடியம் மின் விளக்குகள் பெறப்பட்டதாக ரசீது உள்ளது. ரசீதில் தேதி இல்லை. அதற்கு காசோலையும் வழங்கபட்டுள்ளது.

ஆனால் ஊராட்சியில் உள்ள 270 மின் கம்பங்களில் ஒன்றில் கூட சோடியம் மெர்குரி வகை மின் விளக்குகள் இல்லை..

ரசீதுகள் போலியாக பெறப்பட்டு பணப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளது.

ஊழலில் துவக்கமே நாம் அலட்சியமாக இருப்பதுதான். கிராம சபை கூட்டம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் இது போன்ற முறைகேடுகளை வெளிக் கொண்டு வாருங்கள்..

உங்கள் வரிப்பணம் கொள்ளை போவதை அனுமதிக்காதீர்கள்...

தர்பூசணி...


பிரபஞ்ச இரகசியம்...


உங்கள் பெயர் உங்களுக்கு சொந்தம் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துள்ளதுப் போல், உங்கள் தேவையான விருப்பமும் உங்களுக்கு சொந்தம் என்பதை அறியும் வரை உணர்வுப்பூர்வமாக அகக்காட்சியாக கற்பனை செய்யுங்கள்.

உங்களை இயக்கிக் கொண்டுயிருக்கும் அப்பேராற்றல் பிரபஞ்சத்தில் உள்ள அந்த நுண்ணிய காந்த களத்துடன் தொடர்புக் கொண்டு நீங்கள் விரும்பியதை  உங்கள் முன் தோற்றுவிக்கும்.

இதற்க்கு தேவை உங்கள் உள்யிருக்கும் இப்பேராற்றல் மீது நீங்கள் விஸ்வாத்துடான வைக்கும் முழு நம்பிக்கையே..

அவ்வளவுதான் எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை உணர்வுப்பூர்வமாக அகக்காட்சியில் பாவனை செய்யுங்கள்..

இம்முறையில் நீங்கள் எல்லாம் வல்ல இறைவனையும் உணரலாம் பாவனை ஒன்றே போதுமே பரமநிலை ஏய்துவதற்க்கே என்று பாரதியாரே கூறியுள்ளார்..

அப்பேர்ப்பட்ட பேராற்றல் நம்முள் உள்ளது அதை அன்போடு பயன்படுத்துவோம்...

இதையே இன்று ஆல்பா தியானம் என்று பயிற்சியும் அளிக்கப்படுகிறது...

இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


பாஜக வை பற்றி தெரிந்து கொள்வோம்....


1) இந்திரா காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

2) ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

3) தீவிரவாதி ஆசாராம் பாபு வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி.

4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த வாரன் ஆன்டர்சனின் வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

5) ஊழல் பெருச்சாலி லலித் மோடி யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் வசுந்தரா ராஜி யின் கணவனும், மகளும்.

6) வொடபோன் வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

7) தீவிரவாதி அப்சல் குரு விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

8) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

9) கடத்தல் மன்னன் அலேமோ வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி.

10) சஹாரா ஸ்கேன் ஊழல் குற்றவாளி சுப்ராத் ராய் வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

இந்தியாவின் முக்கிய வழக்குகளில் பணத்துக்காக குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான இவர்கள் தான் நமக்கு தேச பற்று குறித்து பாடம் நடத்துகிறார்கள்...

டெங்கு கொசு எச்சரிக்கை...


அரியலூர் மாவட்டம் கருப்பிலாகட்டளை கிராமம் கண்டுகொள்ளத அரசு...


சாலை அமைக்ககோரி கீழப்பழுவூரில் பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டம்...

இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாறிய கிராமம் வங்கி கட்டணங்களை தாங்க முடியாமல் பழைய நிலைக்கே திரும்பியது...


இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதுதான் முன்மாதிரியாக இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் எக்கானமிக்கு மாறியது தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். தெலுங்கானாவின் சித்திப்பேட்டை தொகுதியில் உள்ள இப்ராஹிம்பூர் கிராமம் முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறியது.

சித்திப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் இப்ரஹிம்பூர் என்ற கிராமத்தை தத்தெடுத்து பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற்றினார். இச்செய்தி இந்தியா முழுவதும் மீடியாக்களில் வெளியாகியது. கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடரப்பட்டு, பணமில்லா பரிவர்த்தனைக்கு அடித்தளமிடப்பட்டது. இப்போது அங்கு நிலையே பெரிதும் மாறிவிட்டது. ஏடிஎம் வசதிகள் இல்லாமை, வங்கி கார்டுகள் மூலமான பரிவர்த்தனைகளுக்கு அதிகமான சேவை கட்டணம் ஆகியவை கிராமத்தினரை கார்டை தூக்கி எறியசெய்து, பழைய நிலைக்கே திரும்ப செய்து உள்ளது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக நாங்கள் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு ஆதரவை கொடுத்தோம், ஆனால் வங்கிகளால் அதிகமான சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதால் நாங்கள் பழைய நிலைக்கே திரும்பிவிட்டோம் என கூறுகின்றனர் கிராம மக்கள்.

கடந்த டிசம்பர் மாதம் கிராமம் நாடு முழுவதும் செய்தியாகிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள், ஆட்டோ கட்டணம் முதல் நொறுக்கு தீனி வரைக்கும் கார்டுதான் என்றனர். அப்போது கிராமத்தில் காணப்பட்ட எழுச்சியானது இப்போது கிடையாது.

வங்கிகள் பரிவர்த்தனைகளுக்கு அதிகமான சேவை கட்டணம் வசூலிப்பது காரணமாக மக்கள் மீண்டும் பண பரிவர்த்தனையையே தொடங்கிவிட்டனர்.

அக்கிராமத்தை சேர்ந்த பிரவீன் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்து உள்ள பேட்டியில், “ மாதம் ரூ. 1,400 வாடகை காரணமாக ஸ்வைப்பிங் மிஷின்களை வங்கிகளில் ஒப்படைத்துவிட்டோம். நாங்கள் ஸ்வைப்பிங் மிஷ்ன்களை பயன்படுத்தாமல் இருந்தாலும் கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற நிலையே நீடித்தது,” என்று கூறிஉள்ளார். தொடக்கத்தில் முதல் 6 மாதங்களில், மிஷ்ன் பயன்படுத்தியது காரணமாக எனக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டம்தான் ஏற்பட்டது. இவ்வளவு கட்டணம் செலுத்தி என்ன கேஷ்லெஸ் பரிவர்த்தனை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

 இப்போது “மன்னிக்கவும், பணம் மட்டும் கொடுங்கள், கார்டு எல்லாம் வேண்டாம்,” என கடைக்காரர்கள் கூறும் நிலை காணப்படுகிறது.

70 வயதாகும் உள்ளூர் விவசாயி பொம்மையா பேசுகையில், “நாங்கள் கார்டுகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம். எங்களுக்கு பணம் தேவையென்றால் ஏடிஎம்களுக்கு செல்கிறோம், பணத்தை எடுத்துக் கொள்கிறோம்,” என்கிறார். இப்ரஹிம்பூர் கிராமம் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாறிய போது இந்தியா முழுவதும் ஒரு முன்மாதிரியான கிராமமாக காணப்பட்டது.

இப்போது கிராம மக்கள் தாங்கள் தவறு இழைத்துவிட்டோம் என்கிறார்கள்.

பஞ்சாயத்து உறுப்பினர் கே லட்சுமி தேவியின் மகன் கும்பாலா ரெட்டி பேசுகையில், “கட்டாய கேஷ்லெஸ் பரிவர்த்தனை என்பதற்கு எந்தஒரு இடமும் கிடையாது என நாங்கள் உணர்ந்து கொண்டோம். வாடிக்கையாளர்களுக்கு எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதன்படியே அவர்கள் செயல்படலாம் என்பதே சரியாக படுகிறது,” என்றார்.

 ஆந்திரா வங்கியின் உள்ளூர் கிளையின் மானேஜர் முல்லா சங்கரும் கிராமத்தில் கேஷ்லெஸ் பரிவர்த்தனை என்பது தோல்வியை தழுவியது என்று கூறுகிறார்.

அவர் பேசுகையில், “நாங்கள் ஸ்வைப்பிங் மிஷ்ன்களை வழங்குவதற்கு முன்னதாகவே கூறிவிட்டோம் மாதம் ரூ. 1,400 வாடகை வசூலிக்கப்படும் என்று. அப்போது காணப்பட்ட ஆர்வத்தில் அவர்கள் கவலை கொள்ளவில்லை. கிராமத்தில் மிக சிறியளவிலே வர்த்தகம் ஆகும் கடைக்காரர்களால் வாடகையை தொகையை கொடுப்பது கடினம் என்ற நிலையானது உருவானது, அவர்கள் ஸ்வைப்பிங் மிஷ்ன்களை திரும்ப ஒப்படைத்துவிட்டனர்,” என்றார். அரசுக்களால் பாராட்டப்பட்ட கிராமம் சேவை கட்டணம், வாடகையை தாங்க முடியாமல் மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பி உள்ளது.

தெலுங்கானா மாநில விவசாயத் துறை மந்திரியும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான ஹரீஷ் ராவ் பேசுகையில், “ கிராமத்தில் உள்ள கடைக்காரர்கள் அனைவரும் சிறிய அளவிலான வருமானம் கொண்டவர்கள், வெளிப்படையாகவே அவர்களால் பெருமளவு சேவை கட்டணத்தை தாங்க முடியவில்லை. அவர்களுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம், வங்கிகள் இதனை பரிசீலனை செய்தால் நாங்கள் மீண்டும் கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு மாற கிராம மக்களிடம் பிரசாரம் செய்வோம்,” என கூறிஉள்ளார். வங்கி ஏடிஎம் வசதியும் சொல்லும்படியாக இல்லை எனவும் கிராம மக்கள் சொல்கிறார்கள்.

தெலுங்கானா மாநில அரசின் மகிளா வங்கியின் உதவியுடன் கிராம மக்கள் பணம் பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கிறார்கள்.  கிராமம் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்திலிருந்து வெளியேறியது என்றே பார்க்கப்படுகிறது...

இன்றைய நாகரிக வாழ்க்கை...


சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை தடுக்கு கட்டிய தடுப்பணைகளையும் தாண்டி வெள்ளப் பெருக்கெடுத்தோடும் பாலாறு...



அடேய் இயற்கைக்கு எதிரா எது செய்தாலும் அது அழிவு தான்..

கர்நாடககாரன் ஒரு நாளைக்கு தண்ணீரிலேயே அழிய போறான்...