28/10/2018

ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை...


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.

ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது..

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடை பிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம் தான்.

அவ்வளவுதானா? அதுவும் இல்லை.

இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே. ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களை இடி தாக்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது.

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது...

இலுமினாட்டிகளின் தொடக்கம்...


இலுமினாட்டிகள், இவர்களின் தொடக்கம், இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மதவரலாற்று ரீதியான தகவல்களை நான் ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று "இலுமினாட்டிகள்" என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன்..

அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர் என்னிடம் கூறினார்.

உண்மை தான், சில முக்கியமான விஷயங்களை பற்றி அதில் விரிவாக கூற தவறிவிட்டேன்., அதற்காகத்தான் இந்த பதிவு., நான் அதில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான தகவல்களுக்கான மத ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாத்திய கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.,

தொடக்கம்:

இலுமினாட்டிகள் என்ற இரகசிய குழு கி.பி. 1776 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்டதாக பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன., இந்த குறிப்புகள் முழுவதும் உண்மை என்று நம்பும் சிலர் இலுமினாட்டிகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தான் தோன்றினார்கள் என்றும் அதற்கு முன்பு வரை அவர்கள் இல்லை என்றும் தீர்க்கமாக நம்புகின்றனர்.

உண்மையில் இலுமினாட்டி குழுமம் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது., ஆனால் இந்த பெயர் இல்லை., சூழலுக்கு ஏற்றாற்போல் இவர்கள் தங்களது வெளிப்படுத்தும் பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

இந்தவகையில் தற்போது அவர்கள் வெளிப்படுத்தி நாம் அவர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பெயர் தான் "இலுமினாட்டி". இந்த பெயரும் மாற்றப்படும்., கூடிய விரைவில் இவர்கள் தங்களை வேறு பெயரிலும் வெளிப்படுத்தலாம்.

காபாலா, ஃப்ரீ-மேசன்ஸ், சியோனிஸ்ட், இன்னும் இதுபோன்ற பல பெயர்கள் இவர்களுக்கு உண்டு.,

தங்களது நிகழ்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காக இது போன்ற பெயர்களில் தங்களை வெளிப்படுத்தி இந்த குழுக்களை திரைக்கு பின்னால் இருந்து இயக்குவதும், தேவை நிறைவேறிய உடன் இந்த குழுக்களை தடை செய்வதும் கலைப்பதும் இவர்கள் தான்.,

இவர்களின் நிலையான இருப்பை நாம் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் கையாளும் யுக்திகளில் இதுவும் ஒன்று.,

ஆனால் இந்த வேறுவேறான குழுக்களின் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் இறுதி இலக்கு இவற்றை ஒத்து நோக்கும் போது இவற்றை இயக்கும் ஒரு பொதுவான கூட்டம் இருக்கிறது என்ற இவர்களின்(இலுமினாட்டிகளின்) இருப்பு உறுதி செய்யப்படுகிறது.

1776க்கு முன்பிருந்தே இவர்கள் இருக்கிறார்கள்:

1. யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (The protocols of the elders of Zion) இலுமினாட்டிகளை பற்றி தேடும் அனைவரும் இந்த புத்தகத்தை படித்திருப்போம்., இந்த புத்தகம் சுமார் 120 வருடங்களுக்கு முன் பேசப்பட்ட சில திட்டங்களை பற்றி எடுத்துரைக்கிறது., இந்த திட்டங்கள் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சியோனிஸ்ட்டுகளுக்கு இலுமினாட்டிகளால் இடப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு., 1897ல் விவாதிக்கப்பட்ட அந்த திட்டங்களை சற்று உன்னிப்பாக கவனிக்கும் பொது, அந்த திட்டங்கள் விவாதிக்கப்பட்ட விதம், அவற்றின் நுணுக்கம், அடுத்தடுத்து அவைகள் செயல்படுத்தபட்ட விதம் இவை அனைத்து இவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1776ல் தான் உருவானார்கள் என்ற கருத்தியலை உடைத்தெறிகிறது.,

2. திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 90 முதல் 102 வரையிலான வசனங்கள் ஒரு யூத குழு பேரரசர் முஹம்மது(pbuh) அவர்களை சந்தித்து பேசிய சில விஷயங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இறக்கப்பட்டதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்., அந்த குழுவின் பெயர் எந்த விரிவுரையிலும்(தப்ஸீர்) குறிப்பிடப்படவில்லை., ஆனால் அந்த குழு முன் வைத்த வாதத்தை ஆராயும் போது அந்த குழு காபாலா என்று சொல்லப்படக் கூடிய ஃபிரீமேசன் குழு என்பது உறுதியாகிறது., ஃபிரீமேசன் என்பது 33° (33 படிநிலைகள்) கொண்ட ஒரு (இரகசிய) குழு., இவர்களை இலுமினாட்டிகளின் முதல் கட்ட அடிமைகள் என்று சொன்னால் அது மிகையாகாது., இந்த குழுவின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களைத் தான் நாம் இலுமினாட்டிகள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்., இந்த உச்ச அதிகாரத்தில் இருக்கும் இலுமினாட்டிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற காபாலா என்ற சூனிய மந்திரம் பயன்படும் என்று நம்புகின்றனர், அதை பயன்படுத்தவும் செய்கின்றனர்., எனவே தான் இவர்களுக்கு காபாலாஸ் என்ற பெயரும் உண்டு.,

பேரரசர் முஹம்மதிடம்(pbuh) இவர்கள் விவாதித்த விஷயங்கள்:
(பல விஷயங்கள் உண்டு தலைப்பிற்கு தேவையானதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்)

i) நாங்கள் எங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுகிறோம் என்பதால் எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள்.,(இங்கு எங்களுக்கு அருளப்பட்டதை என்று இவர்கள் குறிப்பிடுவது தவ்ராத்தையோ, சபூரையோ, இஞ்சீலையோ அல்ல, ஆதாரம் 2:91).

ii) பேரரசர் சாலமன் (pbuh) அவரே எங்கள் தலைவர், அவரே எங்களில் தலைசிறந்த சூனியக்காரர் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். (2:102வது வசனம் இவர்களின் இந்த கூற்றை அடியோடு மாறுகிறது, அதேவேளை இலுமினாட்டிகளின் தொடக்கத்தை பற்றியும் தெளிவாக பேசுகிறது.,).

iii) ஜிப்ரீல் எங்களுக்கு எதிரி, அவர் தான் உங்களுக்கு செய்தியை கொண்டு வருகிறார் என்றால் நாங்கள் உங்களை ஏற்கமாட்டோம்., (சிலர் இதை ஒட்டு மொத்த யூதர்களின் கருத்தாக பார்க்கின்றனர், ஆனால் அவர் ஒட்டுமொத்த யூதர்களுக்கும் எதிரியல்ல., பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி அதிகாரத்தை பார்த்து பொறாமை பட்டவர்களுக்கும், இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்தவர்களுக்குமே இவரை எதிரியாக பார்த்தனர்.,)
இன்னும் சில.,

விவாதிக்கப்பட்ட இந்த விஷயங்கள் ஃபிரீமேசன்ஸ் 1400 வருடங்களுக்கு முன்பே இருந்தார்கள் என்பதை உறுதி செய்கிறது., இன்று நாம் யாரை இலுமினாட்டிகள் என்று அழைக்கிறோமோ அவர்களின் ஆரம்பகால பெயர் தான் இந்த காபாலா, ஃபிரீமேசன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.,

3. இயேசுவின் (pbuh) மீதான கொலை முயற்சி மற்றும் கிறிஸ்துவத்தின் உருவாக்கம், இது 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே இவர்கள் ஒரே நோக்கம் மற்றும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மற்றோரு ஆதாரம்., இது பற்றி மிகத்தெளிவாக ஆழத்துடிக்கும் அடிமைகள் பாகம் இரண்டு "நிழலின் நிஜங்கள்" என்ற எனது இரண்டாவது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.,

4. ஃபிரீமேசன் என்பது பேரரசர் சாலமானால் (pbuh) யூதர்களுக்கான முதல் ஆலயத்தை அதாவது பைத்துல் அல்அக்ஸாவை கட்டுவதற்காக இழுத்துவரப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டது., சிலர் இந்த குழு 1717ல் தான் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றனர்., ஆனால் திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 102 இவர்கள் பேரரசர் சாலமன் (pbuh) காலத்திலேயே உருவானவர்கள் தான் என்பதை உறுதி செய்கிறது., இலுமினாட்டிகளுக்கு காபாலாவின் சூனிய மந்திரங்கள் எப்படி கிடைத்தது என்பதையும், பேரரசர் சாலமனை (pbuh) சூனியக்காரர் என்றும் தங்களின் தலைவர் என்றும் சொல்லிக்கொண்டிருந்த ஒரு கூட்டம் பேரரசர் சாலமனின்(pbuh) காலத்திலேயே உருவாக்கி விட்டது என்பதை விரிவுரையாளர்களின் குறிப்புகள் உறுதி செய்கின்றன.,

இதுவே இலுமினாட்டிகள் 1776ல் உருவானவர்கள் அல்ல என்பதற்கும் அவர்கள் பேரரசர் சாலமனின்(pbuh) ஆட்சி காலத்தில் உருவானார்கள் என்பதற்கும் நான் தரும் ஆதாரம்.,

தஜ்ஜாலின் பிறப்பு:

தஜ்ஜால் எந்த வருடம், எங்கு பிறந்தான் என்பதற்காகன நேரடியான எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை., ஆனாலும் கிடைத்திருக்கும் குறிப்புகளை வைத்து இவன் எங்கு எப்போது பிறந்திருப்பான் என்பதற்கான சாத்தியக்கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.,

1. இலுமினாட்டிகள் தங்களது அரசனை பற்றி வெளிப்படுத்தும் அநேக இடங்களில் அவன் அரசர் தாவூத்தின் (pbuh) வம்சத்தை சேர்ந்தவன் என்றே குறிப்பிடுகின்றனர்., யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையில் கூட இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.,

2. பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்டிருந்த யூதர்களில் ஒரு சாரார், அவர்கள் பாபிலோனில் தான் வசித்து வந்தனர்., பேரரசர் சாலமன் (pbuh) உயிரோடிருந்த காலத்தில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு அவரின் மரணத்திற்கு பின் விடுதலை பெற்ற ஜின் ஒன்று அவரது ஆட்சி குறிப்புகளை திருடி அந்த பாபிலோன் வாசிகளிடம் தான் கொடுத்தான்.,

3. காபாலாஸ், ஃபிரீமேசன் இந்த குழுவின் அடித்தளம் பாபிலோனில் வைத்தே இடப்பட்டது.,

4. சராசரிக்கு அதிகமாக மனித ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனை சிறை பிடிக்க வேண்டும் என்றால், அது முழு மனித ஆற்றலை வெளிப்படுத்த கூடிய ஒருவரால் தான் முடியும்., அந்த வகையில் பார்த்தால் இது வரை வரலாற்றில் பேரரசர் சாலமன் (pbuh) வெளிப்படுத்திய அளவிற்கு மனித ஆற்றலை யாரும் வெளிப்படுத்தியதில்லை.,

5. தஜ்ஜால் தனது ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே சிறைபிடிக்கப் பட்டுவிட்டான்., எனவே தான் அவனை பற்றிய எந்த குறிப்பும் (மதங்களுக்கு வெளியே உள்ள) வரலாற்றில் இல்லை.,

6. அரசர் தாவூதுக்கு (pbuh) வழங்கப்பட்டதை விட மிக உயர்ந்த மற்றும் பலம் பொருந்திய அதிகாரம் மற்றும் ஆட்சி பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்டிருந்தது., இருந்தும் இவர்கள் அரசர் தாவூதுக்கு (pbuh) கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரரசர் சாலமனுக்கு கொடுப்பதில்லை., அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மீது கொண்ட பொறாமை, லூசிஃபரை சிறைவைத்ததினால் ஏற்பட்ட வன்மம், தஜ்ஜாலை சிறைவைத்ததினால் ஏற்பட்ட கோபம் இவைகளே இவர்கள் பேரரசர் சாலமனை (pbuh) புறக்கணிப்பதற்கும், அவரை சூனியக்காரர் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கும் காரணம்.,

இவையெல்லாம் தஜ்ஜாலின் பிறப்பு பேரரசர் சாலமனின்(pbuh) காலத்தில் பாபிலோனில் வைத்து நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு நான் முன் வைக்கும் சாத்தியக்கூறுகள்.,

தொடரும்.,

இலுமினாட்டிகளின் இருப்பு மற்றும் நோக்கத்தை உறுதி செய்யும் மதரீதியான ஆதாரங்கள் அடுத்த பதிவில்., இறைவன் நாடினால்.,

தகவல் - முஸ்தபா...

பழந்தமிழனின் வழிபாட்டு முறை...


ஆதித் தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்து போன வீரர்களின் நினைவாக கல்நட்டு, அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை படையலிட்டு, பலியிட்டு வணங்குவதாகும்.

இறந்து போன மனிதனின் உடலோடு அவன் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பொருட்கள், அந்த குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்து புதைத்து தனது முன்னோரை தமிழன் வழிபட்டு வந்தான்.

இறந்தவர்களின் நினைவும், அது சார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுக்கல் வழிபாடென்பது அமைந்தது.

நடுக்கல்லுக்கு பூக்களைச் சூடி மயில் தோகையை அணிவித்து வழிபாடு செய்ததை அகநானூறும் கரையை அழிப்பது போல் பீறிட்டு வரும் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தியது போல் பாய்ந்து வரும் பகைவர் படையை தடுத்து நிறுத்திய வீரர்களுக்கு நடப்பட்ட நடுக்கற்களைப் பற்றி புறநானூறும் பேசுகின்றன.

இறந்தவர்களின் நினைவாக நடப்பட்ட நடுக்கல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டப்படுவதும், கள் படைக்கப்பட்டதும் முக்கிய இடம் பிடித்தது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சிறூர்ப்
புடை நடு கல்லின் நாட்பலி யூட்டி (புறம்:329).

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறம்:232).

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும் (அகம்:35).

இறந்தவனின் நினைவிடத்தில் அவன் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியை மேற்கண்ட சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

நடுக்கல்லை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு பகுதியினர் சமுதாய வளர்ச்சியையொட்டி புதிய மாற்றத்தை நோக்கி சென்றனர்.

குழுவாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்தனர்.

அரசு என்ற நிறுவனம் தோன்றியது; உடமை வர்க்கம் சான்றோர்களையும், உயர்ந்தோர்களையும் உருவாக்கியது; உழைப்போடு நேரடியாக தொடர்பில்லாத இந்த முலாம் பூசிய கூட்டமே ஆதிக்கத்தை தங்கள் கையில் வைத்திருந்தது.

இனக்குழு காலத்திலிருந்த பொதுவான நிலைமை மாறி, உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற இரண்டு கருத்துக்களும் அதனையொட்டி இரண்டு வகையான சமூக வாழ்வும், பழக்க வழக்கங்களும், கடவுள்களும் உருவாயின.

அரசுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் தொடர்ந்து யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தன. யுத்தங்களில் மனிதர்கள் முன்பு போலவே செத்து மடிந்தனர்.

ஆனால் இப்பொழுது செத்துப் போன சான்றோர்களுக்கு மேல் உலகமும், வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் கீழோர்களுக்கு வழக்கம் போல் ஊர் எல்லைகளில், காட்டுப் பாதைகளில் நடுக்கற்கள் நிறுத்தப்பட்டன. அவைகளையே தங்களின் தெய்வங்களாகவும் கருதினர்.

உடமை வர்க்கம் இறந்து போன சான்றோர்களுக்காக மேலே ஒரு உலகத்தை கட்டி அமைத்து, அவர்களுக்காக வேள்விகள் நடத்தி, எரியும் அக்னியின் வழியே மேல் உலகில் இருப்பவர்களுக்கான படையலை அனுப்பியது.

ஆனால் உடமைகள் அற்றக் கூட்டம் இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவை படையலிட்டு, ஆடு, கோழி வெட்டி பலியிட்டு அவர்கள் நினைவாக தாங்களே அதை உட் கொண்டு புதிய நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்ந்தனர்.

இன்று எண்ணிலடங்கா கிராம தெய்வங்களான அய்யனார், மாடன், காடன், மாயன், சுடலை, விருமன், கருப்பு, முனி பேச்சி, ஒச்சு, காத்தாயி, வீராயி என அனைவரும் மேல் உலகத்திற்கும், வீர சொர்க்கத்திற்கும் சான்றோர்களால் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டவர்களே.

வைதீக கருத்தியலின் அடிப்படையில் புறக் கணிக்கப்பட்ட ஒடுக்கு முறையின் வடிவங்களே.

ஒடுக்குமுறை என்பதும், சுரண்டல் என்பதும் பொருளியல் தளத்தில் மட்டும் தனித்து நடப்பதல்ல. சமூக வாழ்வின் மேல் கட்டுமானமான சாதி, சமயம், சட்டம், இலக்கியமென அனைத்திலும் அது நடக்கிறது.

இந்திய சமய மரபில் நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையின் ஒரு முக்கிய பகுதி கீழோர்களின் தெய்வகள் மீதும், அவர்களின் வழிபாட்டு முறைகளின் மீதுமான தாக்குதலாகும்...

திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் செய்த சாதனைகள்...


கட்சத்தீவு உன்னுடையது,
ஆனால் நீ போக முடியாது..

வங்கக்கடல் உன்னுடையது,
ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது..

காவிரி ஆறு உன்னுடையது,
ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

பாலாறு உன்னுடையது,
ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது.

நெய்வேலி உன்னுடையது,
ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு.

இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது,
ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது,
ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது,
ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது,
ஆனால் தமிழர் ஆள முடியாது..

இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அதற்கு தமிழனே தமிழகத்தை
ஆள வேண்டும்...

யூத இலுமினாட்டிகளும் இவ்வுலக அடிமைகளும்.....


உலகம் 20 குடும்ப்த்துக்கு சொந்தம் யுத இலுமினாட்டிகள் பற்றிய மற்றும் ஒரு தமிழ் புத்தகம். விகடன் பதிப்பு...

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள், அப்படித்தான் சொல்ல முடியும்.

இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20தான்.

அந்த இருபது குடும்பத்தின் கையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விளக்கியுள்ளார்.

இந்த உலகத்தில் 752 கோடி பேர் மக்கள் தொகையில் வெறும் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ‘மிக மிக...’ ரெக்கரிங் பணக்காரர்கள்.

அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர்தான்.

உலகில் உள்ள மொத்த அசையும் அசையாச் சொத்துகளில் பாதி இந்த 6 ஆயிரம் பேரிடம் இருக்கிறது.

அதாவது பாதி உலகம் அவர்கள் கையில்; மீதிப் பாதி உலகம் அவர்களுக்கு அடங்கி (அடிமையாக) இருக்கிறது.

இந்தியா, சீனாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்த 6 ஆயிரம் பேரில், முதல் ஆயிரம் பேரிடம் மட்டுமே இருக்கிறது.

இந்த 20 குடும்பங்கள்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘பேஸ்ட்’ முதல் பெஸ்ட் வரை கொடுத்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள்.

வகையாகச் சிக்கிய எலியைப் பூனைக்குட்டி கவ்வுவதுபோல அவர்கள் நம்மைக் கவ்வியிருக்கிறார்கள்.

இந்த நூலைப் படித்தால் அவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்ளவாவது முயற்சிக்கலாம்!

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியாது.

இந்த புத்தகம் எனக்கும் தேவைபடுகிறது (புத்தகம் மற்றும் pdf file) புத்தகம் கிடைக்கும் இடம் பற்றிய விவரம் தெரிந்த நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்....

அதேபோல் "யுத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை" (The Protocols of the Elders of Zion) புத்தகத்தின் தமிழ் பதிப்பு புத்தகம் மட்டும் (pdf file இருக்கறது) இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்...

http://books.vikatan.com/index.php?bid=2157

குறிப்பு : இந்தியாவின் இலுமினாட்டி தலைவர் சோனியா காந்தி....

சிங்களமும், பௌத்தமும் எப்படி? எப்போது? வந்தது...


இலங்கையில் தமிழரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டமை யாவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தமிழரின் தொன்மைகளை முன்னைய மூன்று கட்டுரைகளில் விபரித்து இருந்தேன். அதே போல் இந்தச் சிங்களவர்கள் யார்? எவர்? என்று கூற விளைகிறேன்.

இலங்கையில் இன்று பெரும்பான்மையின மக்களாக உள்ள சிங்களவர்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வரலாறுகளின் படி அவர்கள் கலிங்க தேசத்தில் இருந்து கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு வந்த விஜயனின் வம்சத்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் விஜயன் சிங்களவனும் அல்ல,பௌத்தனும் அல்ல. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இலங்கையில் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.அவர்கள் தமிழரின் சுதேசிகான இயக்கரும் நாகர்களும் ஆவார்கள்.

இவ்வாறு தமக்கென சிங்களமும், சிங்கள வரலாற்று நூல்களும் கூறும் வரலாற்றினை ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் முற்று முழுதாக மறுதலிக்கின்றன.அவர்களது கருத்துப்படி விஜயன் என்ற கதாபாத்திரம் இலங்கைக்கு வந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதில் உறுதியாயிருக்கின்றனர்

இது இப்படியிருக்க 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தென்னாசியக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய சிங்களப் பேராசிரியர் கலாநிதி குணதிலக்க என்பவர் ஆரியக் குடியேற்றம் என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை எனக் கூறியிருக்கின்றார்.

இதே கருத்தையே H .W . CODRINGTON என்ற வரலாற்று ஆய்வாளரும் பின்வருமாறு கூறுகின்றார். "மகாவம்சம்,தீபவம்சம் மற்றும் சிங்கள பௌத்த நூல்களை நன்கு ஆராய்ந்த பின்னர் விஜயனின் வருகை என்பது பல விநோதக் கதைகளின் கூட்டு என்பது புரிகிறது" என்றார்.

சிங்கள வரலாறு கூறும் தகவல்களை முற்றாக மறுத்துரைக்கின்றார்.அது மட்டுமின்றி தற்குரிய காரணத்தையும் ஆதாரபூர்வமாகக் கூறியிருக்கின்றார். இனி சிங்களம் என்ற பெயர் எவ்வாறு தோற்றம் பெற்றது என நோக்குவோம். DR .A.H .MIRANDO என்ற மாபெரும் சரித்திர வரலாற்று ஆய்வாளர் "சிங்களம்" பற்றி அது கறுவாவிட்க்கான சமஸ்கிருதப் பெயர் "சின்ஹல" என்பதாகும்.கறுவா அதிகம் விளையும் நாடு என்பதால் அது முன்னர் சின்ஹல நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது.அது பின்னர் மருவி சிங்கள நாடு ஆகியது.இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் சிங்களவர்கள் எனப் பெயர் பெற்றனர் என்பது அவரது கருத்தாகும்.

அவர் கருத்து அப்படியிருக்க இலங்கை வரலாற்றில் சிங்களத்தை எப்படிச் சித்தரித்திருக்கிறார்கள் பாருங்கள்.சிங்கத்துக்கும் ஒரு இளவரசிக்கும் பிறந்தவனான சிங்கபாகு என்பவனின் மகனே விஜயன் என்றும் அவனது தோற்றுவாயே சிங்கள இனம் என்று கதைவிட்டிருக்கிரார்கள்.

இங்கு வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் மாநிடவியளுக்கே சவாலான இனத்தவர்களா? வேறு வேறான இன அங்கிக் கூட்டங்கள் இணைந்து எச்சங்களைத் தோற்றுவிக்க முடியுமா? என்பது தான் எம் எல்லோருடைய கேள்வியும்.இதற்கு விடையை சிங்கள வரலாற்றினை எதற்க்கு எடுத்தாலும் ஆதாரமாய்க் காட்டுபவர்கள் தான் கூற வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள்.

இது இவ்வாறு இருக்க இலங்கையை குறிக்கும் எந்த இடத்திலும் "ஸ்ரீ லங்கா" என்று இட்டு சிங்களச் சொல்லொன்றை இட்டு விட்டதாய்ப் பெருமைப் பட்டுக் கொள்ளும் எத்தனை சிங்களவருக்குத் தெரியும் "லங்கா" என்ற சொல் தமிழில் இருந்து மருவியதென்று.
அதை மேலும் பார்க்கையில் கறுவாவிட்க்கான தூய தமிழ் சொல்லு "இலவங்கம்" என்பதாகும். இந்த இலவங்கமே திரிபடைந்து இலங்கையானது.

மேலும் வடமொழிப் பாதிப்பால் லங்கா ஆனதாக DR .A .H .MIRANDO கூறுகிறார்.

இவாறான தனது விளக்கங்களுக்கு DR .A .H .MIRANDO பின்வருவனவற்றை ஆதாரமாய் எடுக்கிறார்.சம்ஸ்கிருத அகராதி,codrington எழுதிய "A short histroy of cyelon ", மூலிகைகள் பற்றிய அகராதிகளான சரஸ்வதி நிகண்டு, சித்த சுவாத நிகண்டு H .H WILSON எழுதிய சம்ஸ்கிருத அகராதி என்பவையாகும்.

இவற்றின் மூலம் தனது கருத்துக்கு வலுச்சேர்த்த DR .A .H .MIRANDO மற்றும் codrington ஆகியோர் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் அதே வேளை, மொழியை வைத்து ஒரு இனத்தைத் தீர்மானிக்க முடியாது என உறுதியாகக் கூறுகின்றனர். இதே அடிப்படையிலான கருத்தைத் தான் சிங்கள மானிடவியல் ஆய்வாளரான G .OBEYASEKARA உம் கூறியிருக்கின்றார்.

தேவநம்பிய தீசன் மன்னன் காலத்திலேயே இலங்கையில் பௌத்த சமயம் அறிமுகமானது. அப்போது பௌத்த சமயத்தினைப் போதிக்கும் பீடங்களாக மகா விகாரையும், அபயகிரி விகாரையும் விளங்கின. மகா விகாரையிழ்ப் பாளி மொழியிலும், அபயகிரி விகாரையில் தமிழ் மொழியிலும் பௌத்த சமயம் கற்பிக்கப் பட்டது.

கி. பி 6 ஆம் நூற்றாண்டளவில் சைவமும்,வைச்னவமும் மாபெரும் புத்துணர்வு பெற்றது. அத்தோடு மகாயான பௌத்தம் என்ற ஒரு பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில்ப் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டது இதனால் காஞ்சியிலிருந்த பெருமளவான புத்த கோவில்கள் விஸ்ணு ஆலயங்களாக மாறின.

இதன் பாதிப்பு இலங்கையிலும் வெளிக்காட்ட ஆரம்பித்தது. பௌத்த சமயத்தின் மூல வடிவான தேரவாத பௌத்தத்தில் ஆழ்ந்திருந்த மகா விகாரையின் மகா சங்கப் பிக்குகள் மகாயான பௌத்தத்தின் தாக்கத்திற்கு அஞ்சி தேரவாத பௌத்தத்தைக் காக்கும் முயற்சியில் இறங்கினர்.

தமிழ் மொழியில் பௌத்த சமயம் அபயகிரி விகாரையில் போதிக்கப்பட்டதால் அங்கு மகாயான பௌத்தத்தின் செல்வாக்கு இலகுவில் பரவி விடும் என்று அஞ்சிய மகா சங்கத்தினர் தீவிரமாகச் செயற்ப்படத் தொடங்கினார்கள். அதன்படி அவர்களால் "தாம் தீப " கொள்கை உருவாக்கப் பட்டது.

இக் கொள்கைப்படி இலங்கை சிங்கள பௌத்த நாடு, சிங்களவர்கள் பௌத்தத்தின் காவலர்கள் என் விபரிக்கப் பட்டது. ஆனால் இக் கொள்கை தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கொள்கையாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. அபாயத்திலிருந்த தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்றவே இக் கொள்கை உண்மையில் வகுக்கப்பட்டது.

ஆனாலப் பின்னாளில் வாழ்ந்த தீவிர சிங்கள இனத்துவேசப் பித்தர்களால் தவறான வழியில் ஆதாரமாகக் கொள்ளப்பட்டு விட்டது.இருப்பினும் பின்னாளில் தமிழ் சிங்கள இனங்களிடையே வேற்றுமைகள் எழுந்ததற்கு இக்கொள்கை ஓர் முக்கிய காரணமாகும்.

எது எப்படி இருப்பினும் அனுராதபுரம் பற்றி 17 ஆம் நூற்றாண்டில்க் கண்டி மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேயரான Robert knox என்பவர் தன்னுடைய இலங்கை பற்றிய அனுபவங்களை கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆதரவுடன் வெளியிட்ட "A Historical Relation of the islaand of ceylon "என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"கண்டி மன்னனின் சிறையிலிருந்து இலங்கையின் வடக்குப் பக்கமாகத் தப்பியோடிய போது அனுராதபுரம் என்ற இடத்தை அடைந்தேன் அங்குள்ள மக்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கவில்லை அதனால் அவர்களோடு உரையாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் தலைவனிடம் என்னை அழைத்துச் சென்ற பொழுது அவனுடன் உரையாட எனக்கொரு மொழிபெயர்ப்பாளன் தேவைப்பட்டான். என்றும் அவர்கள் பேசிய மொழி தமிழ் மொழி" என்றும் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் மன்னராட்சியின் இறுதிக்கால கட்டத்தில் அனுராதபுரத்தில் சிங்களம் பேசத்தெரிந்த மக்களே இல்லாதிருந்த போதும் இன்று மக்களாட்சி நடைபெறும் இலங்கையின் அனுராத புரத்தில் சிங்களமொழியை தாய் மொழியாகக் கொண்ட சிங்களவர்களே அதிகம் இருக்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமானது? அங்கிருந்த தமிழர்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்?

ஆட்சிப் பீடத்திலிருந்த தீவிர சிங்கள இனத்துவேசிகளால் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டன.

ஆனால் தமிழனுக்கு சிங்களவன் எதிரியுமல்ல, சிங்கள வரலாற்று நூல்கள் கூறுவது போல் சிங்களவனின் வரலாறும் இல்லை என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்...

முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்க சித்தர் மருத்துவம்...


அமானுஷ்யம் - மனுஷங்களைப் போல தான் பேய்களிலும்... ஏகப்பட்ட குரூப்கள்...


சில வகைப் பேய்கள் மக்களோடு தான்
இருக்கும்..

நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள்.

தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள்.

ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும்..

கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ஒரே கதை சொல்றாங்கன்னா, இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள்
பேய்கள்..

செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனால் ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொரு வகை..

மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

நிறைவேறாத ஆசை பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் மெசெஞ்சர்
பேய்கள்..

நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை.

பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது.

சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார் என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய்..

சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்து விட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் பாதுகாக்கும்
ஏஞ்சல்ஸ் முக்கியமானவை..

இவை ஒவ்வொருவருடைய தோளிலும்
அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம்.

பல நேரங்களில் மயிரிழையில் தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும்.

குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க
யாருமின்றி இறந்து போனால், அவர்கள்
ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்...

காச நோய்க்கு மருத்துவம்...


ஐந்து பூண்டு பற்களை உரித்தெடுத்து 100மிலி பால் 200 மிலி நீர் ஊற்றிக் இலக்கி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து.. அது பாதியாக வற்றியதும் இறக்கி இளஞ்சூட்டில் ஒரு நாளைக்கு மூன்றுவேளை அருந்தவும்.

இவ்வாறு தினசரி செய்து ஒரு மாதம் அருந்தி வர சிறந்த பலன் கிடைக்கும்...

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு...


இதுக்கு அடிப்படையான மூலிகைகள்...
 
கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை.

இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும்.

வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும் போது உணவில் பத்தியம் உண்டு.

புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும்.

மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்...

பாஜக அடிமை ஊழல் அதிமுக vs பாமக...


ஆன்மா...


நன் மக்கள் கூற்றை கேளுங்கள்.... தெரிந்து கொள்வதில் கெடுதல் இல்லை..

உடம்பைச் சாராத ஆன்மா..

அதுவே நீ என்ற தியானப் பகுதி இது..

ஆன்மா வாழும் வீடு இந்த உடம்பு.

அதாவது, உள்ளே உறைகின்ற ஆன்மா என்பது ஒன்று, உடம்பு என்பது வேறொன்று.

இதனை தியானிப்பவன், இந்த உண்மையை ஆழ்ந்து சிந்தித்து தனக்கு உரியதாக்கிக் கொள்பவன், அந்த உணர்விலேயே வாழ முடிந்தவன் சுதந்திரனாகிறான்.

அதாவது உடம்பு, மனம் போன்ற கருவிகள் தன்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து விடுபடுகிறான்.

உடம்பும் மனமும் தன்னிலிருந்து வேறானவை அவை தன்னைக் கட்டுப்படுத்துவதில்லை என்று உணர்கின்ற ஒருவன் மரணத்திலிருந்தும் விடுபடுகின்றான்.

ஏனெனில் மரணம் உடம்பிற்கு மட்டுமே.

சுருக்கமாகச் சொல்வதானால் அவன் மரணத்தை வெல்கிறான்.

உடம்பு வீழ்ந்த பிறகு, மீண்டும் பிறவாத நிலையை அடைகிறான்.

ஹம்ஸ: சுசிஷத் வஸுரந்தரிக்ஷசத்
ஹோதா வேதிஷத் அதிதிர் துரோணஸத் I
த்ருஷத் வரஸத் ரிதஸத் வ்யோமஸதப்ஜா
கோஜா ரிதஜா அத்ரிஜா ரிதம் ப்ருஹத் II (கட 2.1:2)

பொருள் : அந்த ஆன்மா எங்கும் செல்வது, தூய ஆகாயத்தில் சூரியனாக இருப்பத், அனைத்திற்கும் ஆதாரமானது, வெளியில் (SPACE) காற்றாக இருப்பது, அக்கினியாக பூமியில் இருப்பது, விருந்தினனாக வீட்டில் இருப்பது, மனிதனில் உறைவது, தேவனில் உறைவது , உண்மையில் உறைவது, ஆகாயத்தில் உறைவது, நீரில் தோன்றுவது, பூமியில் தோன்றுவது , யாகத்தில் தோன்றுவது, மலையில் தோன்றுவது, பிரபஞ்ச நியதியாக விளங்குவது, பெரியது.

ஆன்மாவின் எங்கும் நிறைந்த தன்மைக்கான ஒரு பரந்த விளக்கத்தை இங்கே காண்கிறோம்.

எங்கும் நிறைந்த ஒன்றாக இருப்பதால் அது செல்ல முடியாத இடம் என்று ஒன்று இல்லை. எனவே எங்கும் செல்வது.

விருந்தினர் தெய்வமாகக் கருதப்பட வேண்டும் என்கிறது தைத்த்ரீய உபநிஷதம்.

ஒரு காலத்தில் இந்தக் கருத்து பிரபலமாக இருந்ததாகவும் தற்போது மறைந்து வருவதாகவும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

சங்கு, சிப்பி, முது, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் நீரில் தோன்றுபவை. தானியங்கள் முதலானவை நிலத்தில் தோன்றுபவை.

பிரபஞ்சத்தில் பல்வேறு சக்திகள் செயல்படுவதையும், அந்த சக்திகளே பிரபஞ்சத்தை இயக்குவதையும் கண்ட வேத கால மனிதன் வாழ்வின் வளத்திற்கும் நலத்திற்கும் அந்த தேவர்களை நாடினான். யாகங்களின் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டான். எனவே யாகம் என்பது பொதுவாக தேவசக்திகளின் சின்னமாக உள்ளது. அந்த தேவசக்திகளாகவும் ஆன்மா இருக்கிறது. அதுவே ‘யாகத்தில் தோன்றுவது’ என்று கூறப்பட்டது.

மலையிலிருந்து தோன்றுகின்ற நதிகள் முதலானவையகவும் ஆன்மா உள்ளது.

சற்றே அமைதியாக நின்று இந்த உலகை, அதன் செயல்பாடுகளை ஒருமுறை பார்க்கத் தெரிந்த யாருக்கும் இந்த உலகின் இயக்கம் ஒரு மாறாத நியதிக்குக் கட்டுப்பட்டு நடைபெறுவது தெரிய வரும்.

சூரிய உதயம், காற்றின் இயக்கம், பூக்களின் மலர்ச்சி, நட்சத்திரங்களின் பயணம், உயிரினங்களின் செயல்பாடுகள் என்று அனைத்திலும் ஒரு நியதி, ஓர் ஒழுங்கு நிலவுகிறது.

இந்த ஒழுங்காகவும் நியதியாகவும் ஆன்மாவே உள்ளது...

நமக்காக இருந்த துருப்புச்சீட்டை நாம் தவறவிட்டு விட்டோம்...


இறுதிக்கட்ட முல்லைத்தீவில் நடந்த இனப்படுகொலையை வைத்து,

நாம் நம்முடைய ஒற்றுமையால் சர்வதேச அரசியலை ஆட்டம் காண வைத்திருந்தால்..

இன்று நமக்கான தீர்வு கிடைத்திருக்கும்..

இங்குள்ள அரசியல்வாதிகளும், தேசியவாதிகளும் இந்தியா எங்களது நாடு, நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்கிறோம் எனக்கூறி..

இந்தியா அரசாங்கம் செய்த அனைத்தையும் நம்பி,

இன்று நமக்கான அரசியலை இல்லாமல் அனாதையாக நிற்கின்றோம்..

இனி இந்த இனப்படுகொலைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது..

அதை வைத்து இங்கு பிழைப்பு அரசியலை நடக்கும்...

பாஜக மோடிக்கு சோல் விருது வழங்குவதை எதிர்த்து தென் கொரியாவில் ஆர்ப்பாட்டம்...


பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை... இலங்கையில் இனப் படுகொலையாளிகள் கூட்டணி: வேடிக்கை பார்க்கக் கூடாது...


இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது இலங்கையின் உள்விவகாரம் தான் என்றாலும் தமிழர்கள் நலனும், இந்தியப் பாதுகாப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால் இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 226 இடங்களில் 106 இடங்களில் வென்ற விக்கிரமசிங்க அதிபர் சிறிசேனாவின் இலங்கை விடுதலைக் கட்சி ஆதரவுடன் பிரதமராக பதவி வகித்து வந்தார். அவருக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை விடுதலைக் கட்சி திரும்பப் பெற்றதால் விக்கிரமசிங்க பெரும்பான்மையை இழந்து விட்டதாகக் கூறி அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு பதில் பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவுக்கு இலங்கை விடுதலைக் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்தே மொத்தம் 95 பேரின் ஆதரபு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்க வேண்டியது நாடாளுமன்றம் தானே தவிர அதிபர் அல்ல என்று கூறி இந்த முடிவை ஏற்க மறுத்துவிட்ட ரணில் தாமே பிரதமராக நீடிப்பதாக கூறியுள்ளார். இதனால் அங்கு குழப்பம் நிலவுகிறது.

இவை அனைத்தும் இலங்கையின் உள்விவகாரங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இலங்கையில் இப்போது நடைபெற்றுள்ள பிரதமர் மாற்றம் இந்தியாவின் பாதுகாப்புச் சூழலையும், இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனையும் மிகக்கடுமையாக பாதிக்கும். இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்ச பதவியில் இருந்த போது அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு  மட்டுமே விசுவாசம் காட்டினார். இப்போது கூட புதுதில்லி வந்து பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து விட்டு சென்ற ராஜபக்சே, சீனாவின் ஆதரவுடன் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில், அவர் பதவி நீக்கப்படுவதை  இந்தியா முன்கூட்டியே அறிந்து ராஜிய நடவடிக்கைகளின் மூலம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியா தனக்குத் தானே தேடிக்கொண்டிருக்கிறது.

இலங்கை அதிபராக ராஜபக்சே பதவி வகித்த காலத்தில் சீனாவிடம் வாங்கியக் கடனுக்காக இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த  அம்பன்தோட்டா துறைமுகத்தை ஒப்படைத்தார்.  அந்தத் துறைமுகத்தை ராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்குடன் மாத்தளை விமான நிலையத்தை கையகப்படுத்த இந்தியா முயன்றது. அதற்கு இலங்கை அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், பிரதமராகியுள்ள ராஜபக்சே, இந்தியாவிடம் மாத்தளை விமானநிலையம் ஒப்படைக்கப்படுவதை தடுப்பார்; அதுமட்டுமின்றி அம்பன்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் இராணுவப் பயன்பாட்டை அனுமதிப்பார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

அதேபோல், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே வீழ்த்தப்பட்டதற்கு பிறகு தான் ஈழப்பகுதிகளில் தமிழக மக்கள் ஓரளவு நிம்மதிக் காற்றை சுவாசிக்க முடிகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் அதிக அளவில் இராணுவத்தை நிறுத்துவதன் மூலம் தமிழர்களை ராஜபக்சே அச்சுறுத்துவார்.  இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்ததால் தான் 2009 முதல் 2015 வரை இலங்கைப் போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றம் எட்டப்படவில்லை. அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணையோ, இலங்கை மற்றும் பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பின நீதிமன்ற விசாரணையோ நடக்காமல் தடுத்து வந்தார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் 1.40 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதில் இராஜபக்சே மட்டும் குற்றவாளி அல்ல. இப்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் அவருக்கு துணை நின்றவர் தான்.

இனப்படுகொலையாளிகள் இருவரும் இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், போர்க்குற்ற விசாரணையை முற்றிலுமாக முடக்கத் துடிப்பார்கள். அதைத் தடுத்து ஈழத் தமிழர்களுக்கு நீதிபெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. எனவே,  இலங்கை பிரதமராக ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிப்பதை இந்தியா தடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து நீதிவிசாரணையை இலங்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஐநா மனித உரிமை பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன்  முடிவுக்கு வருகிறது. ஆனால், அதற்குள் போர்க்குற்ற விசாரணை முடிவடையாது என்பதால் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை  நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐநா மனித உரிமை பேரவையில் இந்தியா கொண்டு வர வேண்டும்...

பாஜக மோடியின் சாதனைகள்...


டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் மதிப்பெண் வழங்க பேரம்: முடிவை உடனே வெளியிடுக - பாமக அறிக்கை...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் ஓராண்டுக்கு மேலாகியும் வெளியிடப்படவில்லை. மிக முக்கியமான போட்டித் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசுத் துறைகளில் 29 மாவட்ட துணை ஆட்சியர்கள், 34 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 8 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், ஒரு மாவட்டப் பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், 8 மாவட்ட தீயவிப்பு மற்றும் மீட்புப் பணிகள் அதிகாரி என மொத்தம் 85 முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில்  நடத்தப்பட்டது.  இத்தேர்வுகளில் மொத்தம் 4602 பேர் பங்கேற்றனர். வழக்கமாக இத்தேர்வு முடிவுகள் அதிகபட்சமாக 4 மாதங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஓராண்டுக்குப் பிறகும் முடிவுகள் வெளியாகவில்லை என செய்திகள் வந்துள்ளன.

தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாதது தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்வில் பங்கேற்ற அனைவரின் விடைத்தாள்களும் திருத்தப்பட்டுவிட்ட நிலையில், சிலருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை தேர்வாணைய அதிகாரிகள் என்ற பெயரில் சிலர் தொடர்பு கொண்டு லட்சங்களில் பணம் கொடுத்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பேரம் பேசியதாகவும் தெரிகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடத்திய முதல் தொகுதி  தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததையும், அத்தேர்வில் விடைத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டதையும் கட்ந்த ஆண்டு நான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். அதன்தொடர்ச்சியாக அந்த முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அந்த விசாரணையில் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முறைகேடு செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப் பட்டால் அதுவும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதால் தான் முடிவுகளை வெளியிடுவதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னரே முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய முதல் தொகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி வெளியிட்டது. அதன்பின் 4 மாதங்கள் கழித்து 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1.38 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் 4602 பேர் முதன்மைத் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் அதற்கான முடிவுகள் வெளியிடப் படவில்லை என்றால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீதான நம்பிக்கை தகர்ந்து விடும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல்பணி உள்ளிட்ட 23 வகையான குடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்கான அத்தேர்வுகளின் ஒவ்வொரு கட்டமும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணைப்படி நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அதனால் கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில் பங்கேற்றவர்கள் முடிவுகளைப் பொறுத்து அடுத்தக்கட்ட முடிவை  எளிதாக தீர்மானிக்க முடிகிறது. இதேபோன்ற சிறந்த அணுகுமுறையையும், ஒழுங்கையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடைபிடிக்காதது ஏன்? அதற்கு தடையாக இருப்பது எது?

முதல் தொகுதி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நேர்காணல்களை மின்னல் வேகத்தில் நடத்தி, அதைவிட அதிக வேகத்தில் முடிவுகளை அறிவித்து பணி நியமன ஆணைகளை வழங்கும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மட்டும் தாமதம் செய்வது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. முதன்மைத் தேர்வுகளில் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை இந்த தாமதம் உறுதி செய்கிறது. நடுநிலையுடன் செயல்பட வேண்டிய  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீது இத்தகைய சந்தேக நிழல் படிவது நல்லதல்ல.

இந்த நிலையை மாற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை கொண்டவையாக மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் போட்டித் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் போதே, அத்தேர்வுகளின் பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடிவு வெளியிடப் படும் தேதியும் அறிவிக்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் முன்பாக 2016&ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதி முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளை ஒரு வாரத்திற்குள் ஆணையம் வெளியிட வேண்டும்...

இலங்கை தமிழர்களுக்கு எச்சரிக்கை மணி...


தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை வைத்து...


தமிழ் சமூகம் தன் ஒற்றுமையால்,

சர்வதேச அரசியலை கழுத்தை நெறிக்கும் தொணியில் ஒன்றிணைந்து இருந்தால்

இந்நேரம் நமக்கான அரசியல் கட்டமைப்பு உருவாகி இருக்கும்..

ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் தமிழீழத்தை வைத்து அரசியல் பிழைப்பு தானே நடத்துகின்றனர்..

துரோகங்களாலேயே எப்போதும் அழியும் ஒரே இனம் எம் இனம் மட்டுமே...

உலகின் மிகப்பெரிய சந்தையை எந்த வணிகனாவது அழிக்க விரும்புவானா..?


தங்களின் கருத்துக்கள்.....

இங்கே சுரண்டல்கள் மட்டுமே நடக்கும்..

அதற்கு பின் மறைமுகமாக இந்த அமைப்பை எதிர்ப்பவர்களை குறிப்பிட்ட வட்டத்திற்குள் வரவழைத்து அவர்கள் களையெடுக்கப்படுவார்கள்..

இந்தியா மிகப்பெரிய சந்தை, அதில் சிறந்த சந்தை தமிழ்நாடு....

கார்ப்பரேட்டுக்கு முட்டு கொடுக்கும் இந்த விளம்பரம் தமிழ்நாடு, ஆந்திரம், முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது...


கற்பை நிரூபிக்க மனைவியை நெருப்பில் சுட்ட கணவன்.. மந்திரவாதி முன்னிலையில் தண்டனை...


உத்தரபிரதேசத்தில் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் நம்பிக்கை இல்லை என கூறி பஞ்சாயத்து வரை விஷயத்தை கொண்டு போனார்.

அங்கிருந்த மந்திராவதி நெருப்பில் கை வைக்குமாறும், சூடு படாதவர்கள் பொய் சொல்லவில்லை,  சூடு பட்டால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும் கூறினார்.

அதன்படி எரியும் நெருப்பில் முதலில் கையை  வைத்த கணவன் சில நொடிகளில் கையை எடுத்து கொண்டார். பின்னர் மனைவி கையை வைக்கும்போது கணவன் வெளியே எடுக்காதபடி அழுத்தி பிடித்து கொண்டார். இதனால் மனைவியின் கை வெந்து போனது.

இது தொடர்பான புகைப்படம் வைரலானதை தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்...

ராஜபச்சே பின்னணியில் யார்.?


வேற்றுக்கிரகவாசி களும் இராமாயணமும்...


இராமாயணம் மிகப் பழைய இதிகாசமாகும். இதன் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் 500 கி.மு. மற்றும் கி.பி. 500 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நாஸ்க்கா சமூகத்தினரால் வரையப்பட்டது.

இதில் இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது.

இந்த நாஸ்கா மக்கள் வரைந்த குரங்கிற்க்கும், இராமாயண ஆஞ்சநேயருக்கும் ஏதும் தொடர்புண்டா?

இங்கு ஒரு வேதவசனம்:

“கோளங்களும், பூமியும் (ஆரம்பத்தில்) ஒரே துண்டாக (ஒன்றாக)த்தான் இருந்தன. பிற்பாடு நாம் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தோம்” (திருக்குர்ஆன்-21:30)

அன்றைய காலகட்டத்தில் பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றாக இருந்ததை, நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை மலையை தேடி உலகம் முழுவதும் சுற்றியதாகவே கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றதான் கூறப்படுகிறது.

ஆனால் சஞ்சீவி மலையின் இருப்பிடம் இமையமலை என்று கூறினாலும் இதில் சில முரண்பாடுகள் உள்ளது. எனவே அந்த மலையின் சரியான இடம் தெரியவில்லை.

மேலும் நாஸ்கா மக்கள் வரைந்த அந்த குரங்கின் கைகளை பார்த்தால், எதையோ கையில் ஏந்துவை போன்றுதான் உள்ளது.
இந்த நாஸ்கா கோடுகள் ஆரம்பத்தில் நட்சத்திர மண்டலங்கள் அல்லது சூரிய சக்தியுடன் இணைந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டன, ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நாஸ்கா கோடுகள் தண்ணீர் மற்றும் கருவுறுதலுடன் தொடர்புடைய சடங்கு அல்லது சடங்கு தளங்களை சுட்டிக்காட்டுகின்றன. என்றும் காற்றிலிருந்து கண்டவற்றையும் கூடுதலாக, வரைந்தனர் என்றும் வெளிப்படுகிறது.

அவ்வாறு வரைந்ததே குரங்கு ஆஞ்சநேயர் உருவமாக இருக்கலாம்.
இது யுகமாக கூட இருக்கலாம், ஆனால் காலமும், கலையும் இதில் உடன்பாடு உள்ளது என்றே காட்டுகிறது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


பண்டைய காலங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பூர்வ மனிதர்கள் நம்பமுடியாத ஒன்றை கண்டதை ஒரு நிமிடம் கற்பனை செய்து பார்க்கலாம். பண்டைய மனிதகுலம் விண்வெளி கப்பல்கள் மற்றும் நம்பமுடியாத தொழில்நுட்பங்களைக் கொண்ட பூமிக்கு வந்த பூர்வீக விண்வெளி வீரர்களின் வருகையை ஒருபோதும் மறக்க முடியாத அந்த காட்சியைப் எப்படியாவது பதிவு செய்திருப்பார்கள் இன்றைய மனிதகுலம் காட்சிகளை பதிவு செய்வது போல..

பறக்கம் பொருள் மற்றும் பிற நிகழ்வுகளை உருவாக்கிய 'பரலோக' பண்டைய மனிதர் தோன்றியிருப்பதை நிச்சயமாக அன்றைய மனிதகுலம் வணங்கி, அவர்கள் வருகையை பதிவு செய்திருக்க வேண்டும்.

பல முக்கிய ஆய்வாளர்கள் உறுதியாக இது போன்ற சிறிய வாய்ப்பு கூட  சாத்தியம் என்கின்றனர்,  உலகில் உள்ள பல குகைகளில் ஏராளமான இது போன்ற சித்தரிப்புகள் உள்ளன, இது ஒரு நம்பமுடியாத சந்திப்புகள், வானில் மர்மமான பொருட்கள் மற்றும் பூமியிலுள்ள ஏதேனும் இனங்கள் போலல்லாமல் விசித்திரமான உருவங்களை தங்கள் கலை அறிவிற்க்கு உட்பட்டு சித்திரங்களை சித்தரிக்கின்றன. என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேற்றுகிரக மனிதர்களாகத் தோன்றுகிற மிக அற்புதமான சித்திரங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அவைகள் 10.000ஆண்டு  வயதான குகை ஓவியங்களின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் அவற்றில் பிற உயிரினங்களையும், வட்டு வடிவ பொருள்களையும் போன்று பல உருவங்களை சித்தரிக்கிறது. பொதுவாக, விசித்திரமான மனிதர்கள் மற்றும் மர்மமான விண்கலங்களை சித்தரிக்கும் போது, இன்றைய வேற்றுகிரக அம்சங்களுக்கு கிட்டத்தட்ட பொறுந்திப்போகிறது, இந்த குகை ஒவியம் மற்றும் நவீன வேற்றுகிரக அம்சம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒற்றுமையால் வல்லுனர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

இந்திய வல்லுநர் ஜே.ஆர்.பாகத்தின் கூற்றுப்படி, இது பண்டைய காலத்துக்கு முன்பே, மற்ற கிரகங்களிலிருந்து பூமிக்கு வந்த மனிதர்களைப் பார்த்ததன் வெளிப்பாடு என்கிறார். இந்த சித்திரங்களின் தன்மையை முழுமையாக புரிந்துகொள்ள ஒரு விரிவான விசாரணை தேவை. ஆனால் எங்களிடம் இது சார்ந்த எந்த நிபுணர்கள் இல்லை என்கிறார்.

ஓவியங்கள் இயற்கையாகவே வண்ணங்கள் செய்யப்படுகின்றன, அவை பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவ்வப்போது மறைந்திருக்கின்றன. வித்தியாசமான செதுக்கப்பட்ட ஆயுதம் போன்ற பொருட்களை வைத்திருப்பதோடு, அவைகள் தெளிவான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, மூக்கு மற்றும் வாய் காணவில்லை.

சில படங்களில், அவர்கள் கூட விண்வெளி உடைகளை அணிந்து காட்டப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் நவீன விண்வெளி உடைடைகளை பற்றிய கற்பனை சாத்தியம் குறைவுதான், ஆனால் மனிதர்கள் பொதுவாக இத்தகைய விஷயங்களைக் கற்பனை அல்லாமல், காட்சிகளை கண்டதன் விளைவே இந்த சித்திரங்கள் என்கிறார்கள்..

இது ஒரு கற்பனைக்குரிய குகைமனித சித்திரங்கள் என்று பலர் இதை தள்ளுபடி செய்யலாம். ஆனால் ஓவியங்கள் மற்றும் வேற்று கிரக வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கும் இடையேயான ஒற்றுமைகளைப் அப்பட்டாமாக வெளிப்படுத்தும். நமது மூதாதையர்களின் மனநிலையை நாம் சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்...

ஆழ்கடலில் கண்டுபிடிக்கபட்ட வித்தியாசமான உயிரினம்...


HEADLESS CHICKEN MONSTER...

சமீபத்தில் ஆராச்சியாளர்கள் ஆழ் கடலில் வினோதமான உயிரினத்தை கண்டறிந்துள்ளனர். இதை HEADLESS CHICKEN MONSTER என குறிப்பிடுகின்றனர். இந்த உயிரினம் அண்டார்டிக்காவின் ஆழ் கடலில் நீந்தி கொண்டிருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

தலை இல்லாமால் காணப்படும் இது கடல் வெள்ளரி. இதன் அறிவியல் பெயர் Enypniastes eximia.

இது தலை இல்லாமல் காணப்படுவதன் மட்டுமில்லாமல் வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டுள்ளது. இதன் உடல் ஒளி புகும் தன்மை கொடுத்தால் இதன் உடல் உள்ளுறுப்புகள் வெளியில் தெரிகின்றன. இது ஆழ்கடல் பகுதியில் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் அளவு 9 இன்ச். முதன் முதலில் மெக்ஸிகோ வளைகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் இதை படம் பிடித்தனர்.

தெற்கு கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதன் முறை என்று தெரிவித்துள்ளனர்.

இதை பற்றி கில்லியன் ஸ்லோக்ம் வெளியிட்டுள்ள அறிக்கை  கடல் பகுதி பல்வேறு வித்தியாசமான மற்றும் பலவகையான உயிரினங்களுக்கு வீடாக உள்ளது.

இதை எதிர்காலத்திற்காக பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.

இது போன்ற உயிரினங்களை இதற்கு முன் பார்த்ததில்லை என டர்க் டர்க் வெல்சிபோர்ட தெரிவித்துள்ளார். இவர் தான் இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர். விண்வெளியை ஆராய்ந்த அளவிற்க்கு நாம் ஆழ்கடலை பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

Video  -   http://bit.ly/2Pd2nBl

THE DARK SIDE OF CHOCOLATE - இனிப்பின் கசப்பான பின்னனி...


உலகில் அதிகம் மக்களினால் விரும்பி உண்ணப்படும் சுவையான பண்டங்களில் “Chocolate” முக்கிய இடத்தை வகிக்கின்றது.

குழந்தைகளினால் அதிகம் சுவைத்து உண்ணப்படும் இந்த சாக்லேட் இன் பின்னணியில் கசப்பானதொரு உண்மையும் மறைந்துள்ளது.

உலகின் “சாக்லேட்” தேவைகளை 36% நிறைவு செய்யக் கூடிய கோட்டிவார் பகுதியின் மலைக்காடுகளில் 2010 ஆம் ஆண்டு பயணம் செய்த ஆவணப்பட இயக்குனர்கள் “Roberto romano” மற்றும் “Miki Mistrati” அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியூட்டியது.

அந்தக் காடுகள் முழுவதும் ( 5 முதல்  11 வயதிற்குட்டபட்டவர்கள் ) ஏறத்தாழ 1.8 மில்லியன் ஆபிரிக்க குழந்தைத் தொழிலாளர்கள் அடிமைகளாக அக் காடுகள் முழுவதும் பணி புரிவதைக் கண்டு உடனே தன் கேமராவைக் கொண்டு “THE DARK SIDE OF CHOCOLATE” எனும் ஆவணப்படத்தை தயார் செய்து பல நெஞ்சை உருக்கும் சம்பவங்களோடு உண்மையை உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்கள்

பிரபலம் வாய்ந்த சாக்லேட் கம்பனிகளான “Hershey’s”, “m&m” மற்றும் “Nestle” கம்பனிகளின் ஆதிக்கத்தின் கீழ் 13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சாக்லேட் நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்த தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திக்கான கொக்கோவை கோட்டிவார் பகுதிகளிலேயே பெற்று கொள்கின்றன.

இந்த ஆவணப்படம் வெளியான பின்பு இயக்குனர் மிக்கி மிஸ்ட்ராடியினால்  சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. நெஸ்லே மற்றும் சில கம்பனிகளுக்கு இதை பார்வையிடவும் அதைப்பற்றிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொருட்டு அனுப்பப்பட்ட அழைப்பிதழை இக் கம்பனிகள் நிராகரித்தனர். இதையடுத்து மிக்கி மிஸ்ட்ராடி அதற்கடுத்த நாள் நெஸ்லே கம்பெனி அருகே இந்த ஆவணப்படத்தை திரையிட்டு அந்த நிறுவனத்தில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காண்பிக்க முயலும் போது நெஸ்லே கம்பெனி நிறுவனத்தினர் போலீஸ் அதிகாரிகளோடு வந்து அவரது முயற்சியைதடுத்து நிறுத்தினர்.

வலிகள் பல நிறைந்த இந்த ஆவணப்படத்தில் பல குழந்தை தொழிலாளர்களின் கசப்பான அனுபவங்கள் பதியப்பட்டுள்ளன.

இதனிடையே சிறுவர் உரிமைகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என சுற்றி திரியும் ஐநாவும் மனித உரிமைகளும் மௌனம் காத்தமை கேள்விக்குரியதொன்றே...

தெற்கு வானின் கடற்கொள்ளைகாரர்கள்- NGC 2467... நெபுலாவின் புதிய படங்கள்..

மரபணுக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன...


ஆதிகாலத்தில் இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சிக்கு முன் வேட்டையாடி  வாழ்ந்தவர்கள் நாம்
 அப்போது மிருங்களின் மாமிசத்தை பச்சையாக தான் உண்டு வாழ்ந்து வந்தோம் அப்போது நமது உடலில் செரிமான சக்தி அதிகமாக இருந்ததால்
மாமிசத்தை செரிக்க செய்யும் ஆற்றல் உடலில் இருந்தது ஆனால் இது இயற்கை அல்ல.

நமது எண்ணங்களுக்கு ஏற்றவாறு மரபணுவும் அதில் உருவான உடலும் தன்னை காலத்திற்கு ஏற்ப தயார்படுத்தி கொண்டது என்பதே உண்மை.

ஆனால் இப்போது உள்ள காலத்தில் நம் உடல் மாமிசங்களை பச்சையா ஏற்றுக்கொள்ளுமா என்றால் வாய்ப்புகள் குறைவுதான் எப்படி இந்த மாற்றம் வந்தது ?

நமது முன்னோர்களின் உடல் கற்காலத்தில் பச்சை மாமிசத்தை ஏற்றது இப்போது ஏன் மறுக்கிறது ?

ஏற்க மறுப்பது நமது உடலை வடிமைப்பது மரபணுக்கள்.

ஆதியில் மாமிசம் சாப்பிட்டு வாழ்ந்து வந்தான் பிறகு நெருப்பை கண்டு பிடித்த அதில் வேகவைத்து சுவயாக சாப்பிட்டான் பிறகு  தீயில் வாட்டி உண்டே நாட்கள் கடக்க பச்சையாக உண்ணும் முறை தேவையில்லை என மனம் மாறிக்கொள்ளும் பிறகு தனது தலைமுறைகளை உருவாக்கா போடும் விதையில் உள்ள மரபணுகள் முன்னோர்களை Xerox எடுத்து விதைக்கும் , அப்போ கொஞ்சம் மாறியிருக்கும் பிறகு தலைமுறைகள் மாற மாற மரபணு செரிமான சக்தி இவனுக்கு தேவையில்லை என அளவை குறைத்துவிடும்.

External memory ya vey dna core la internal memory storage ku data vai transfer செய்வது.

இப்படி எண்ணங்கள் தான் எல்லாத்தையும் மாற்றுது. ஆனால் இந்த மரபணுபவை மாற்ற சிறிது காலம் எடுக்கும் காரணம் எவ்வளவு என்றால் அது நம்ம எண்ணங்களின் வீரியம் பொறுத்தது.

தேவைகளும் ஏக்கங்களும் நம்மை அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியை தந்திருக்கிறது மரபணு மாற்றத்தையும் தந்திருக்கிறது , இன்னும் தரும்.

இந்த தேவையும் ஏக்கங்களையும் உன் வாழ்வியல் மாற்றும் , காலம் மாற்றும் சுற்றுச்சூழல் மாற்றும் , இன்னும் தெளிவாக சொல்லப்போனால் உன்னில் உதயமாகும்  எண்ணங்களின் கையில் இருக்கு... இதை செயற்கையாகவும் உருவாக்கலாம்.

மரபணு என்பது தகவல் கடத்தி தானே இதில் உடலை பற்றியும்  கடத்தப்படும் தானே. மரம் மற்றும் அதன் விதையே இதற்கு சாட்சி...

ஆன்டிமேட்டர் பற்றிய முழுமையான தகவல்களுக்கு...