03/08/2018

கோடி நன்மை தரும் ஆடிப்பெருக்கு பற்றி தெரிந்த தெரியாத சிறப்புகள்...


தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆடிப்பெருக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் மாபெரும் திருவிழாவாக கொண்டாப்பட்டு வந்த ஆடிப்பெருக்கு இப்பொழுது வெறும் சம்பிரதாயமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆடிப்பெருக்கின் மகத்துவமும், முக்கியத்துவமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாகும்.

தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆடிப்பெருக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் மாபெரும் திருவிழாவாக கொண்டாப்பட்டு வந்த ஆடிப்பெருக்கு இப்பொழுது வெறும் சம்பிரதாயமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆடிப்பெருக்கின் மகத்துவமும், முக்கியத்துவமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாகும்.

ஆடி பட்டம் தேடி விதை என்று ஒரு பழமொழி உள்ளது.

ஆடி மாதத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நீர் தாராளமாக கிடைக்கும்.

எனவே ஆடி மாதத்தில் அவர்கள் பயிரிட்டால் தை மாதம் அறுவடை செய்யலாம். அதைத்தான் நம் முன்னோர்கள் பழமொழியில் கூறியுள்ளார்கள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு நமது ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஆடி பெருக்கின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு பார்ப்போம். ஆடிப்பெருக்கு ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது மக்கள் குடும்பத்துடன் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு கடவுளை வணங்குவது ஆடிப்பெருக்காக நம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று ஆனால் தற்போது இது ஒரு விடுமுறை நாளாக மட்டுமே கருதப்படுகிறது. மற்றொரு புறம் இது மகாபாரத போரில் இறந்த வீரர்களை நினைவு கூறும் நாளாகவும் நம்பப்படுகிறது.

தமிழர்களும் ஆடிப்பெருக்கும் ஆடிப்பெருக்கு பண்டையகாலம் முதலே தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. குறிப்பாக பண்டையத் தமிழ் நூல்களில் மிகமுக்கிய பிடித்திருக்கும் நூல் பொன்னியின் செல்வன்.

அந்த நூலில் வரும் முக்கிய கதாபத்திரமான வல்லவராயன் வந்தியத்தேவனும், மற்ற முக்கிய கதாபத்திரங்களான பெரிய பழுவேட்டரையர், நந்தினி தேவி போன்றோரின் அறிமுகங்கள் ஆடிப்பெருக்கின் பின்புலத்திலேயே இருக்கும். அந்த இடத்தில் கல்கி அவர்கள் ஆடிப்பெருக்கை வர்ணித்திருப்பதை ரசிக்கத்தவர்களோ, அதை எண்ணி வியக்கத்தவர்களோ மிகக்குறைவு.

அவ்வாறு நம் வாழ்வியலுடன் கலந்த முக்கிய பண்டிகை ஆடிப்பெருக்காகும். காரணம் ஆடிப்பெருக்கு இயற்கை அன்னை நமக்கு வழங்கிய கொடைக்காக நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுவது.

ஆற்றங்கரையில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தண்ணீரோடு கரைந்து விடவும், எதிர்கால வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க வேண்டுமென அனைத்து தெய்வங்களையும் பிரார்த்திக்கும் விதமாக நடைமுறையில் இருக்கும் ஆடிப்பெருக்கு மக்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய சிறப்பான நாளாகும்.

ஆடிப்பெருக்கும் திருமண வாழ்வும் தமிழ் சமூகத்தில் பெரும்பாலும் புதிதாய் திருமணமான தம்பதிகளை பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு அன்று தாலி பிரித்து கட்டுதல் என்ற ஒரு சடங்கும் தமிழ் கலாச்சாரத்தில் பின்பற்ற பட்டு வருகிறது.

புதிதாய் திருமணமான தம்பதிகள் புது ஆடை உடுத்தி தாலியில் இருக்கும் கயிறை மாற்றி மீண்டும் தாலி கட்டுவார்கள். இதன்மூலம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் மகிழ்ச்சியாய் வாழலாம் என்று நம்பப்படுகிறது. ஆடிப்பெருக்கும் சங்கரநாராயணனும் இந்து புராணங்களின்படி பார்வதி தேவி சிவபெருமானிடம் திருமாலுடன் இணைந்து தன்னை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணனாக பார்வதி தேவியை ஆடிப்பெருக்கன்று ஆசீர்வதித்தனர்.

எனவே ஆடிப்பெருக்கன்று இறைவனை வழிபடுவது விஷ்ணு மற்றும் சிவனின் பூரண அருளை நமக்கு பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.

ஆடிப்பெருக்கும் செல்வமும் பெருக்கு என்பதன் பொருள் உயர்த்துவது ஆகும். ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவி பூரண மகிழ்ச்சியுடன் காட்சியளிப்பார்.

எனவே அந்த சமயத்தில் லட்சுமி தேவியை வணங்கும்போது கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், குழந்தை பாக்கியம், தைரியம் என அனைத்தும் கிடைக்கும்.

அதேபோல ஆடிப்பெருக்கு அன்று குபேரனை வழிபடுவது எவ்வளவு பெரிய நஷ்டத்திலிருந்தும் மீண்டு வர வழிவகுக்கும். வழிபடும் முறை இப்பொழுதெல்லாம் ஆடிப்பெருக்கு ஒரு விடுமுறை தினம் என்று மட்டும் மாறிவிட்டதால் அந்த சிறப்புநாளில் கடவுளை வழிபடுவது மிகவும் குறைந்துவிட்டது. அவ்வாறு இருக்காமல் காலையிலேயே ஆற்றங்கரை சென்று குளித்து புத்தாடை உடுத்தி மணலில் பிள்ளையார் செய்து கற்பூரம் காட்டி அந்த கற்பூரத்தை ஒரு வெற்றிலையில் வைத்து தண்ணீருடன் விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு செய்வது உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. கிராமமாய் இருந்தால் அங்கே 'முளைப்பாரி' ஆற்றில் விடுவது மிகவும் பிரசித்தமாகும்.

பலன்கள் ஆடிப்பெருக்கன்று இயற்கையையும், கடவுளையும் வழிபடுவது ஆற்றில் எவ்வாறு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதோ அதேபோல உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும்.

அதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கு என்பது வீட்டிற்குள் அடைந்து கிடக்க கிடைக்கும் விடுமுறை அல்ல, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிரகிடைத்த நாளாகும். எனவே அதனை உபயோகமாக கொண்டாடுங்கள். மறைந்து வரும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்களை அழிந்துபோக விட்டுவிடாதீர்கள். ஆடிப்பெருக்கை கொண்டாடிய கடைசி தலைமுறை நாம்தான் என்று ஆகிவிடக்கூடாது.

நமது அடுத்த தலைமுறைக்கும் ஆடிப்பெருக்கின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்...

ஊடகங்களே மக்களின் முதல் எதிரி...


இனிப்பின் இனிப்பான வரலாறு...


டயாபடீஸ்....

இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பயப்படும் அளவுக்கு உருவாக்கப்பட்ட நோய்..

இதற்கு காரணம் இனிப்புகள் என்று கூறப்படுகிறது.

ஆனால் இனிப்பும் சக்கரையும் நமது மூதாதையர்கள் எப்படியெல்லாம் சாப்பிட்டார்கள் என்று தேடிப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது...

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 510 ஆண்டுக்கு முன்பு பெர்ஷியாவிலுல்ல டேரியஸ் என்ற பெயருடைய அரசன் பஞ்சாப் பகுதிகளில் போர் செய்வதற்கு வருகிறான்.

போர் முடிந்து இளைப்பாறும் பொழுது நீண்ட தூரத்தில் சின்ன சின்ன குச்சி போன்ற பயிர் வகையை கண்டு என்ன அது என்று கேட்கிறான்..

காவலன் ஓடிச்சென்று ஒரு குச்சியை உடைத்து அடிப்பகுதியை வெட்டி அரசனிடம் தருகிறான்.

அரசன் முகர்ந்து பார்த்து வாசனை ஒன்றும் பெரிய அளவில் இல்லை என்று உணர்ந்து லேசாக கடித்துப்பார்கிறான்.

கண்கள் அகலவிரித்து அடேங்கப்பா இப்படி சுவையாக இருக்கிறதே தூக்குங்கடா எல்லாவற்றையும் என்று வெட்டி எடுத்து அவன் நாடான ஈரானின் கொண்டு போய் பயிரிட்டு வெளி உலகுக்கு தெரியாமல் அவன் மட்டுமே உண்டு வந்தான்.

ஆமா அது என்ன குச்சி..?
வேறென்ன கரும்பு..

ஆம் கரும்பு  கிமு 500 வரைக்கும் இந்தியர்கள் யாருக்கும் காட்டாமல் ரகசியமாகவே கரும்பை வைத்தனர்.

டேரியஸ் என்ற மன்னன் வரும் வரை.

பின்னர் பழங்கால அரேபிய படையினர் டேரியஸ் இடம் இருந்த கரும்பை எடுத்துக்கொண்டு போய் உலகம் முழுவதும் கரும்பு பற்றிய தகவலை தந்தனர் என்கிறது வரலாறு,

உலகம் முழுவதும் என்பதை குறிக்க ஒரு செய்தியை மட்டும் கூறுகிறேன் இங்கிலாந்து முதல் முறையாக சக்கரை பயன்படுத்திய வருடம்  1099 ல் தான் அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். . .

மிகவும் தாமதமாக வந்த சர்க்கரை  இங்கிலாந்தியர்கள் மத்தியில் எவ்வளவு பெரும் செல்வாக்கு பெற்றிருக்கும். .

சிந்து சமவெளி நாகரிக மக்கள் சர்க்கரை சாப்பிட்டுள்ளனர் என்று வரலாறு உண்டு ஆனால் எப்படி என்ற தகவல் கிடைக்கவில்லை.

முகம்மது நபி இறந்து  200 ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல கொதிவீடுகள் கட்டப்பட்டது.

இது வயலை ஒட்டி boiling house என்று சொல்லக்கூடிய கரும்பு சாறெடுக்கும் ஆலைகள் கட்டப்பட்டது.

இங்கு ஆப்பிரிக்கா மக்களை அடிமையாக கொண்டுபோய் வேலைக்கு விட்டுவிடுவார்கள்..

மறந்துக்கூட சர்க்கரை ஆலையில் இருந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்து நாக்கில் வைத்தால் கூட மரண தண்டனை தான். இப்படி கொலை செய்யப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் ஏராளம்.

இன்னும் கரும்பு சக்கையை எடுத்து மரத்தில் கட்டி சர்க்கரையை கொஞ்சம் எடுத்து வாயில் போட்ட அடிமையையும் கூட கட்டி தீ யிட்டு எரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

10 இல் இருந்து பல நூற்றாண்டுகள் சர்க்கரையை வைத்தே அந்த நாட்டின் பொருளாதாரத்தை முடிவு செய்துள்ளது அன்றைய உலகம்.

இன்னும் அவ்வையார் காலத்தில் பாலும் தேனும் சர்க்கரை பாகும் பருப்பும் கலந்த ஒரு விதமான இனிப்புகள் உண்டு என்ற வரலாறும் உண்டு.

உலகமே காப்பிக்கு கூட சேர்க்க செமத்தியான ஐட்டம் சர்க்கரை என்று மகிழ்ச்சி அடையும் நேரத்தில்.

நாம புது புது இனிப்புகளை செய்து உண்டு வந்துள்ளோம்...

உணவில் அன்றாடம் இனிப்பு வைத்து பரிமாறிய கூட்டம் நாம் ஆனால் இப்போது 13 வயது சிறுவனுக்கு கூட சர்க்கரை வியாதி,

எப்படி இது சாத்தியம்? 

வரலாற்றை புரட்டிய சம்பவம் - 8...


அம்பேத்கரின் உச்சகட்ட கோபம்...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மனுநீதியை தீயிட்டு கொளுத்திய அம்பேத்கர்.

அதே மாநாட்டில் சில விஷயங்களை பேசினார் அவைகள் எல்லாம் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்.

அதன் விபரம் வருமாறு...

இனி நேரடி அம்பேத்கர் வார்த்தைகள்.

மனுஸ்மிருதியிலும் இவைப்போன்ற இதர நூல்களிலும் கூறப்பட்டுள்ள விஷயங்கள் நய நாகரிகமற்றவையாகவும் மிகவு‌ம் இழிவினும் இழிவானவையாக உள்ளது,

இதையடுத்து இவைகளை என் தலைமையிலான இந்த மாநாடு கடுமையாக இவைகளை கண்டிக்கிறது.
இந்த கண்டனத்திற்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டு கொளுத்த தீர்மானிக்கிறது.

இனி சில உரிமைப் பிரகடனத்தை நான் வெளியிடுகிறேன்..

1 ,அனைத்து இந்துக்களும் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

 2 இதற்கு சட்டம் இயற்றப்பட
வேண்டும்.

3 பிராமணன் சூத்திரண் போன்ற வார்தைகளை உபயோகிப்பதை தடைச்செய்ய வேண்டும்.

4, இந்து சமய குருக்களை தேர்ந்தெடுக்க  பரீட்சை நடத்தபட வேண்டும்.

இதில் மக்களில் யார் தேர்ச்சி பெறுகிறாரோ அவரையே கோவில் குருக்களாக நியமனம் செய்ய வேண்டும்.

இப்படியாக இருந்தது.

வேதத்தை கொளுத்திய செய்தி புற்றீசல் போல பரவியது.

செய்வதறியாது திகைத்து நின்ற உயர்சாதி மக்கள், இப்போது ஏதும் செய்ய முடியாதவர்களாக ஆனார்கள்.

இதையெல்லாம் சரியாக கணித்த அம்பேத்கர், கூறுகிறார்.

குளமும் தண்ணீரும் பொது யாரும் யாருக்கும் அதிகாரம் செய்யமுடியாது என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.

இதோடு முடியவில்லை அம்பேத்கருக்கு எதிராக செய்தியை திரித்து வெளியிட்டது அன்றைய நாளிதழ்கள் கூட்டம் ஆங்காங்கே அம்பேத்கருக்கு எதிராக கிளம்பியது.

இதையறிந்த அம்பேத்கர்
இந்தியன் நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் விளக்கம் கொடுக்கிறார்.

அடங்கியப்பாடு இல்லை .

எப்படி இந்த ஆளு இப்படி செய்வாரு என தூண்டிவிட்ப்பட்ட இளைஞர் படை கலவரத்தை தூண்ட நினைத்தது.

அதே சூட்டோடு சூடாக அம்பேத்கர் திடீர் உத்தரவு பிறப்பித்தார்..

இதுநாள்வரை அரசுக்கு எதிராக ஏதும் செய்யாமல் குந்தகம் விளைவிக்காமல் இருக்கிறேன்.

இருப்பினும் அரசு இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

ஆகவே இந்த முறை நான் சில ஆயிரம் மக்களை திரட்டி சத்தியாகிரகம் செய்வது உறுதி என்று அறிவிப்பு வெளியானது.

வெளியான முதல் அரசு அலுவலக அதிகாரிகள் உட்பட அனைவரும் பரபரப்பானார்கள்.

காரணம் சத்தியாகிரகம் செய்துவிட்டால் அதிலுள்ள மக்கள் அனைவரும் அம்பேத்கர் உத்தரவுக்கு கட்டுபட்டவராக இருப்பார்கள்.

இது ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறிவிட்டால் அவ்வளவுதான் இந்தியாவை ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்து விடுவார் அம்பேத்கர்.

(அதுவும் ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று எல்லாம் ஒன்று கூடிவிட்டாள் என்ன ஆவது)

என்ற இரகசிய அறிக்கைதான் காரணம்.

அம்பேத்கரை வந்து சந்திப்பதும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொ‌ண்டு‌ வருவதும் போவதுமாய் இருந்தனர்.

ஆனால் அம்பேத்கர் இதை விடுவதாக இல்லை.

பம்பாய் கிரானிக்கள் செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இதான் வந்தது.

கடும் கோபமுற்ற அம்பேத்கர் பிப்ரவரி  26 தேதி ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் சில இரகசிய கூட்டத்தை கூட்டினார்.

மஹத் குளம் சம்பந்தமாகவும் சத்தியாகிரகம் சம்பந்தமாகவும் அதில் விவாதிக்கப்பட்டது.

இதில் கிட்டத்தட்ட  2000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்று
பிரசுரித்தது. .

இப்படிபரபரப்பாக இருந்த நேரத்தில் தான் காந்தி அவர்களுக்கு விஷயம் தெரியப்படுத்தப்படுகிறது.

மஹாத்மா காந்தி அவர்கள் இந்த பிரச்சினையில் களத்தில் இறங்குகிறார்.

முதல் கட்டமாக அம்பேத்கரை அழைத்துப்பேசுகிறார்.

ஆனாலும் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வருகிறது.

அம்பேத்கர் கடும் கோபம் கொள்கிறார்.

அப்படியென்றால் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ?

பேசுவோம்...

சிலுவை யுத்தங்கள் − 13...


முதலாவது சிலுவைப் போர் (ஹி.491 − ௧ி.பி.1097) − 3...

௧டந்தப் பதிவில் பார்த்த அந்த நிகழ்வைப் பற்றி வரலாற்றாசிாியர் இப்னு கல்தூன் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பைதுல் முகத்தஸைக் கைப்பற்றிய பிரஞ்சுக்காரா்கள் கூட அப்பிரதேசத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அதிகமான முஸ்லிம்களைக் கொன்றனர். பள்ளி வாயில்களில் தஞ்சம் புகுந்திருந்த இமாம்கள், உலமாக்கள், தொழுகையாளிகள், நல்லடியார்கள் ஆகியோர்களும் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு பலி எடுக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை விடவும் அதிகமாக இருந்தது.

இந்த உண்மையை சிலுவை வீரா்களின் வரலாற்றாசிரியர்கள் கூட மறைக்கவில்லை. பைதுல் முகத்தஸ் பிரதேசத்திற்குள் சிலுவை வீரா்கள் நுழைந்த பின்,அப்பிரதேசம் கண்ட பயங்கர கொலைச் சம்பவத்தை வில்யம் சூரி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"கொலையுண்ட முஸ்லிம்களின் இரத்தப் பெருக்கினால் உருவான பெரிய கொலைக்களம் சிலுவை வீரா்களிடையே பயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது."

இன்னுமொரு சிலுவை யுத்த வரலாற்றாசிரியரான Wells என்பவர் அந்த நிகழ்வைப் பின்வருமாறு விவரிக்கிறார்...

"அந்த கொடூரமான கொலைகள் நடந்த அன்று,நான் அத்தூய பிரதேசத்துக்குச் சென்றபோது,சிலுவை வீரா்களால் மேற்கொள்ளப்பட்ட அப்பாதக நடவடிக்கைகளினால் நகரினுள் புகுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், கொலை செய்யப்பட்டவர்களின் இரத்தம் முழங்கால் அளவு பெருகியிருந்தது" என்று குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பைதுல் முகத்தஸைக் கைப்பற்றியது சிலுவை வீரா்களின் நடவடிக்கையில் முக்கிய வெற்றியாகக் கணிக்கப்பட்டது. அதனால்,
இக்காட்டுமிராண்டிகள் தமது சொந்தப் பிரதேசங்களுக்குச் சென்ற போது கோலாகலமாக விழா எடுத்து வரவேற்கப்பட்டனா். திரும்பிச் சென்ற சிலுவை வீரா்கள் சொன்ன சம்பவக் கதைகள் அப்பிரதேச சுதேசிகளை கிழக்குப் பிரதேசம் நோக்கி இன்னொரு படை நடத்திச் செல்லத் தூண்டியது. என்றாலும்,சிரியாப் பிரதேசத்தில் பைதுல் முகத்தஸ், அன்தாகியா, திரிப்போலி, ரஹா ஆகிய நான்கு பிரதேசங்களிலும் சிலுவை அரசுகள் உருவாக்கப்பட்டதோடு யுத்தத் தீ அணைந்திருந்தது.

- தொடரும்....

வரலாற்றை புரட்டி போட்ட சம்பவம் - 7...


மறதி மறதி நாம் சில சமயங்களில் மறதியை நினைத்து வேதனைப்பட வேண்டும்.

தீண்டாமை என்ற கொடூரம் எது வரை சென்றது தெரியுமா?

ஒரு குளத்தில் உள்ள தண்ணீரை தலித்துகள் என்று சொல்லக்கூடிய சக மனிதன் எடுப்பதால் உண்டான கலவரமே இந்த வரலாற்று பதிவு..

1923 ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஹத் என்ற இடத்தில் செளதார் என்ற பகுதியில் உள்ள குளம் தான் இந்த பிரச்சினையை ஊட்டி விட்டது.

இங்கு தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்த ஆயிரக்கணக்கான மக்களை இந்த குளத்தில் தண்ணீர் எடுக்க விடாமல் பார்பனியம் துன்புறுத்தியது.

ஒரு அளவுக்கு மேல் பார்த்த மக்கள் பிரச்சனையை பெரியதாக ஆக்குகிறார்கள்.

பிரச்சினை மும்பை சட்டமன்றம் வரை செல்கிறது எஸ் கே போலே என்ற சட்டமன்ற உறுப்பினர் மூலம் இப்பிரச்சினை பேசப்பட்டது.

இறுதியில் முழு மனதுடன் அந்த குளத்து நீரை அனைவரும் பங்கு போட்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

இச்சட்டத்தால் மக்கள் சந்தோசம் அடைந்தாலும் ஊர் தலைவர்கள் என்று (ஷத்ரியர்களாம்) இருந்தவர்களை தூண்டிவிட்டு கொடுக்கவே முடியாது சூத்திரனும் நாமும் ஒரே குளத்தில் லா.

அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்தது ஊர்.

பிரச்சினை பெரிதாக ஆகி நம்ம தலையெழுத்து என அந்த மக்களும் விட்டுவிட்டனர்.

இப்படியாக  3 வருடம் போகிறது.

இந்த நிலையில் தான் அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் முயற்சியில் சரி போவுது பா அவங்களும் எங்க போவாங்க தண்ணீர் குடிக்க..

சரி தண்ணிய அவங்களையும் குடிக்க எடுக்க அனுமதிப்போம் என்று மஹத் நகர சபை முடிவெடுக்கிறது.

நகர சபை முடிவெடுத்ததும் மீண்டும் பார்பனர்கள் சாதிய இந்து மக்களை தூண்டிவிட்டு  பயங்கர எதிர்ப்பு அம்மக்கள் மீது காட்டினார்கள்.

இதற்கு மேலும் பொறுத்தால் சரிவராது என்று அந்த மக்கள் அனைவரும் சென்று ஒருவரை பார்த்து இநத கொடுமையை அவரிடம் முறையிடுவது என்று முடிவெடுத்தனர்.

அவர் தான் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.

இதனிடையே 1927 ம் ஆண்டு  19 மற்றும்  20 வது தேதிகளில்  இரண்டு நாட்களுக்கு பெரிய மாநாடு நடத்தி அரசின் கவனத்தையும் பார்பனர்களை ஒடுக்கவும் முடிவெடுத்தனர்.

இதற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றக்கதான் அம்பேத்கரை அழைத்தனர்.

இதற்காக இரண்டு மாதத்திற்கு முன்பே காடு மேடு பள்ளம் என்று தாழ்த்தப்பட்டவராக ஒதுக்கி வைத்துள்ள மக்களை சந்தித்து இப்படி ஒரு பிரமாண்ட மாநாடு நடக்கப்போகிறது எல்லாரும் வந்துடனும் நாம தண்ணிர் எடுக்க கூடாதுன்னு சொல்வதற்கு இவனுக யாரு?  இப்படியே விட்டால் நாம இன்னும் கீழ்த்தரமாக போய்
விடுவோம்.

முக்கியமாக நமக்காக பேசவும் தலைமையேற்று நடத்தவும் அம்பேத்கர் வருகிறார்.

என பட்டி தொட்டி கிராமங்களில் தகவல் பரப்பப்பட்டது.

இதன் காரணமாக பதினைந்து வயது சிறுவன் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரொட்டி துண்டுகளை பொட்டலங்களாக கட்டி தோள்களில் தொங்க விட்டு பல மைல் தூரத்தில் இருந்து மஹத்தை வந்தடைந்தனர்.

மஹாராஷ்டிரா குஜராதை  சேர்ந்த தலித் மக்கள் பத்தாயிரம் பிரதிநிதிகளும் ஊழியர்களும் இன்னும் பல இளைஞர்களும் கலந்து கொண்டனர் என்று வரலாறு கூறுகிறது.

இதற்கிடையே இவ்வளவு பிரமாண்டத்தை பார்த்த சாதி வெறியர்கள் மாநாடு போட்டுள்ள திடலுக்கு தண்ணீர் விடாமல் தடுத்து வைத்து இருந்தனர்.

இதையடுத்து மாநாட்டில் பங்கேற்க வந்த பிரமுகர்கள் எல்லாம் சேர்ந்து தண்ணீரை பணம் கொடுத்து வெளி ஊரில் இருந்து வரவழைக்கப்பட்டது அக்காலத்தில் இதன் மதிப்பு  40 ரூபாய் செலவில் தண்ணீர் மட்டும்.
கிழிந்த ஆடையும் ஒட்டிய வயிறும் கண்களில் சோகமும் ததும்ப நின்ற மக்கள் மத்தியில் அம்பேத்கர் உரையாற்ற ஆரம்பித்தார்.

அவருடைய கால வாழ்கையும் அவர் தீண்டாமை கொடுமையால் வேதனை பெற்றதையும் கூறி விட்டு முழு இந்தியாவே மறைத்து வைத்திருந்த ஒரு தகவலை சொன்னார்..

இந்தியாவே ஆட்டம் கண்ட
தகவல் அது.

பின்னர் என்ன நடந்தது ?
பேசுவோம்..

ஏன் வேண்டாம் அலோபதி எனும் ஆங்கில மருத்தவம்...


அருவை சிகிச்சை என்பது பெண்களை பலகீனமாக்கமே செய்யப்படுகிறது.

அனைத்து மருத்துவமனையிலும் அதிகம் அருவை சிகிச்சை செய்யும் போது எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் மட்டும் அதிகம் சுகப்பிரசவம் நடப்பது எப்படி?

அறுவை சிகிச்சையினால் பிறப்புவிகிதத்தை குறைக்க முடியும் என்பதும் முக்கியமான காரணமாகும்.

அறுவை சிகிச்சைக்கு பின்பான மருத்துவ வணிகம் என்பது மிகவும் அதிகம் லாபம் தரக்கூடிய மிகமுக்கிய வணிகமாகும்.

எனவே அறுவை சிகிச்சையை செய்யும் மருத்துவமணையில் பிரசவத்திற்கு சேர்க்காமல் சுகப்பிரசவம் செய்யும் மருத்துவமணைகளில் மட்டுமே பிரசவத்திற்கு சேர்க்கவும்.

மக்கட்பேறு மட்டுமே இந்த இனத்தைக் காக்கும் மிக முக்கிய காரணி எனவே அதிகம் பெற்போம். இனத்தைக் காப்போம்...

ஹீலர் பாஸ்கர் கைது...


தமிழகத்திலேயே கார்பரேட்டிற்கு எதிரா வீரியமா எழுந்த ஒரே மனிதர் இன்று உள்ளே செல்கிறார்...

ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த இவரை தயவு செய்து தமிழக மக்கள் அனைவருக்கும்  தெரியப்படுத்துங்கள்...

இவருடைய கைது வன்மையாக  கண்டிக்கத்தக்கது...

ஹீலர் பாஸ்கர் கைது பின்னணி என்ன.?


இந்திய நாட்டின் மூத்த குடிமக்கள் தமிழர்களே...


கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிகைகளில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிகைகளும் வெளியிட்டுள்ளன. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இப்படியொரு உண்மையை ஒரு தமிழன் கண்டறிந்து சொல்லியிருந்தால் இப்படி நாளிதழ் செய்தியாக வந்திருக்காது. காலங்காலமாக தமிழரை வல்லாதிக்கம் செய்துவருபவர்கள் இந்தச் செய்தியைகூட இந்நேரம் இருட்டடிப்புச் செய்திருப்பார்கள்.

எவனோ இருட்டடிப்புச் செய்வது இருக்கட்டும். வரலாற்று அறிவும் அறிவாராச்சிப் பார்வையும் கெட்டுப்போய்விட்ட தமிழர்களே இந்த ஆராய்ச்சி உண்மையை நம்ப மறுத்திருப்பார்கள்; மறுதளித்திருப்பார்கள். காலந்தோறும் காலத்தோறும் தமிழன் செய்து வந்திருக்கும் வரலாற்றுப் பிழையை இப்போதும் செய்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இந்த உண்மையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பவர்கள் தமிழர்கள் அல்லர். ஐதராபாத்தில் உள்ள மூலக்கூறு, மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையம், அமெரிக்காவின் ஆர்வர்டு பொது சுகாதார கல்லூரி, ஆர்வர்டு பிராட் கழகம், மாசசூசட்டு தொழில்நுட்பக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்படியொரு ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.
இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

ஆனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

பாவாணர் என்னும் தமிழன் கண்டுசொன்ன உண்மை..

இப்போது வெளிவந்துள்ள இந்தச் செய்தி இப்படி இருக்க, தமிழினத்தில் தோன்றிய மாபெரும் அறிஞர் – ஆய்வாளர் – பன்மொழிப் பயின்ற மேதை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இந்த உண்மையயயும்; இதற்கு மேலே இன்னும் பல உண்மைகளையும் தம்முடையை 50ஆண்டுகால ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார் என்பது நம்மில் பலர் அரியாமல் இருக்கலாம்.

1.மாந்தனின் முதல்மொழி தமிழே.
2.அந்தத் தமிழே ஆரியத்திற்கு மூலம்.
3.தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டம்.

என்னும் முப்பெரும் உண்மைகளைக் கண்டுகாட்டினார் – மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டினார்.

பாவாணருடைய கண்டிபிடிப்பை ஆதிக்க இனத்தவரும் கற்றறிந்த இந்திய மேதைகளும் தமிழினப் பகைவர்களும் ஏளனமும் ஏகடியமும் செய்தார்களே அன்றி, இதுவரை எவரும் சான்றுபட மறுக்கவில்லை.

பாவாணர் கண்டறிந்து சொன்ன தமிழியற் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்புச் செய்து மறைப்பதற்கே இந்தியாவின் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் ஆய்வாளர்களாவும் சொல்லப்பட்டவர்கள் முனைந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பாவாணர் என்ற ஒரு பேரறிஞரின் கண்டு பிடிப்புகள் எங்கேயும் எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழினப் பகைவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளனர்; இப்போதும் இருந்துவருகின்றனர் என்பது மறைக்க முடியாத வரலாறு.

ஆனால், பாவாணர் அன்று கண்டு சொன்ன உண்மைகள் இன்று மற்றவர்கள் வாயிலாக – மாற்றார்கள் மூலமாக வெளிவரத் தொடங்கிவிட்டன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இப்போது வந்துள்ள இந்தச் செய்தியும் அதையேதான் பறைசாற்றுகிறது.

காலம் ஒருநாள் கண்டிப்பாக மாறும். உண்மைகள் தற்காலிகமாக மறைக்கப்படலாம். ஆனால், முற்றிலுமாக ஒழித்துக்கட்டி இல்லாமல் செய்துவிட முடியாது. (மறைந்துபோன பழந்தமிழர் நாடு - குமரிக்கண்டம்).

உலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.

அப்போது, உலகத்தின் பல வரலாறுகள் திருத்தப்படலாம் – உலக இனங்களின் வரலாறுகள் மாற்றி எழுதப்படலாம் – உலக மொழிகளின் வரலாற்று ஆவணங்கள் புதுப்பிக்கப்படலாம்.

அனைத்திற்கும் காலம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீரும். அப்படி, காலம் பதில் சொல்லும் காலத்தில் அதனை எண்ணிப் பெருமைபடுவதற்கு.. ஒருவேளை பூமிப்பந்தில் எந்த மூலையிலும் ஓர் ஒற்றைத் தமிழன்கூட இல்லாமல் போகலாம்...

ஆனால் முட்டாள் ஆக்கப்படுவது என்னவோ மக்களும் அப்பாவி தொண்டர்களும் தான்...


இலுமினாட்டி லுசிபெரியனிசக் கொள்கையானது...


பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது. ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது.

freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன் (Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டு வந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்.

இன்றைய காலத்தில் பெயர்பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும். வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே.

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கை தான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது.

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர்.

குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர். ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது. சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது.

எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது. பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306).

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார். இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார். கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை ( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்.

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்.

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்அத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது. இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.

இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும். இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது. ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தர வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது. தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன. சிலை வழிபாடு புகுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான்.

இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.
இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

(இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிரித்தவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்.

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டு வந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

ஆச்சரியமான தகவல்கள்...


பாண்டி மகன் சபரி மலை ஐயப்பன்...


நீங்கள் சபரிமலைக்கு ஜோதி தரிசனத்திற்கு போகிறீர்களா?

கேரளாவின் பதிவு எண்  (KL) கொண்ட வாகனத்தில் போனால் பம்பா நதி வரை வாகனம் போகலாம்..

இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம்படி வரையேகூட வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம்.

அதே தமிழ்நாட்டின் பதிவு எண் (TN) கொண்ட வாகனத்தில் போனால்... ஐயோ பாவம்...
வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தை விட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும்.

மலையேறி சாமி கும்பிட்டு உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான் உங்கள் வாகனத்தை அடைய முடியும்.

ஏனென்றால் நீங்கள் தமிழன்.

பயணப்பாதைகளிலும்கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம்
நடத்துவது தமிழர்கள் தான். அங்கு எல்லோருக்கும்சம உரிமை உண்டு.

ஆனால், மலையாளிகள் நடத்தும்கடைகள், சன்னிதானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.

கண்கூடாக் காணமுடிவது மலையாள போலீஸாரின் அராஜகம்.

எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்வார்கள்.

2012ல் சபரிமலையில் ஒரு சென்னைத் தமிழனை மலையாள டீக்கடைக்காரன் வெந்நீர் ஊற்றிக் கொன்றான்.

அதை கொலை முயற்சியாக பதியாமல் விபத்து என்று பதிவு செய்தது மலையாளக் காவல்துறை.

இதிலிருந்து அவர்களின் இன வெறிப்போக்கை தெரிந்து கொள்ளுங்கள்.

மலையாள போலீசார் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகு தான் முடியைப் பிரிக்க வேண்டும் என்பார்கள்.(மலையாளிகளுக்கு அதெல்லாம் கிடையாது).

தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது.

சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக்கொண்டிருக்கிறது சபரிமலையில்.

பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன் தான்.

பழசிராஜா வம்சத்திலோ, வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல.

தமிழர்கள் ஐயப்பனை நாடி அதிகம் வருவார்கள் நிறைய கல்லா கட்டலாம் என்று இதை மறைக்காமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மறைக்காமல் கூறிவந்தனர்.

இப்போது சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆனால், ஐயப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

தமிழர்களிடம் இனியும் சபரிமலையைக் கொண்டு சேர்க்க வேண்டாம் என்ற அளவுக்கு தமிழர்கள் வரத் தொடங்கி விட்டனர் அல்லவா?

இப்போது அயாள் ஒரி பாண்டியானு... என்று மட்டும் கூறுகிறார்கள்.

பாண்டி என்ற சொல்லையே கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், ஐயப்பனே அந்தப் ‘பாண்டி’யின் மகன் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை.

சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் (தமிழக) செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம்.

அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம்.அதைத் தடுத்தால் வேறு வழியில்லாமல் சிவன் கோவிலில் வழிபாடு செய்பவரும் கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள், 

இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்தபோது,ஐயப்பனின் தீவிர பக்தரான செங்கோட்டை குருசாமி நாடார் என்ற தமிழர்..

கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரைதள்ளி விட்டது.

ஐயப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள்.

1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப்பகுதிகளாகவே இருந்தன.

எனவே, சபரிமலை என்பது மலையாளிகளுக்குத் தொடர்பேயில்லாத, முழுக்க முழுக்க தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு.

70ஆண்டுகளில் எல்லாம் மாறிப்போனது.

பழனியைப் பார்த்து பொறாமை கொண்ட மலையாளிகள் மாலைபோட்டு விரதமிருந்து கடினமான பயணம் செல்லும் வழிபாட்டு முறையை காப்பியடித்து.. ஏற்கனவே தமிழர்கள் சிறிய அளவில் சென்றுவந்த காட்டுக்கோவிலான ஐயப்பன் கோவிலை புது புராணக்கதை ஒன்று புனைந்து தமிழர்களிடமும் மலையாளிகளிடமும் நன்றாக விளம்பரப்படுத்தி காட்டை அழித்து வியாபாரமாக்கி இன்று தமிழன் மீதான இனவெறியைத் தீர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்துகின்றனர்.

கடவுள் மறுப்புக்கொள்கையை வெளியே முழங்கிக் கொண்டு,தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய திராவிடவாதிகளால்..

கண்ணகிக்கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் அதைச் சுற்றிய பகுதிகள் வேறு மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.

இன்று பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடிகூட சுமந்து வருவது இல்லை. பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டு வழியாக வந்து முதல்மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.

சபரிமலையைப் பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள்.

ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி ஐயப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத் தமிழர்.

ஐயப்பனின் தீவிர பக்தர் அவர்.

அவரது நாடகக் குழுவில் இருந்த போது தான், ஐயப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரிய வந்தது.

1949ல் ஐயப்பன் கோயிலில் சிலர் தீவைத்து விட்டனர்.சிலைகள் உள்பட கோயிலின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் மனம் வருந்திய கேரள பக்தர்கள் சிலர், ஐயப்ப பக்தரும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தையுமான பி.டி.ராசனிடம்கோரிக்கை விடுத்தார்கள்.

(கோவில் தமிழருடையது அதனால் தமிழர்களிடம் புணரமைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது)..

அவரும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து ஐயப்பன் திருவுருவச்சிலை ஒன்றைச் செய்தார்கள்.

சிலை செய்யும் பணி கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் நடந்தது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் கண் திறக்கும் சடங்கு நடந்தது.

சுவாமிமலையில் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் தோட்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தமிழகமெங்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சபரிமலையில் நிறுவப்பட்டது.

பல கோயில்களில் ஐயப்பனை வைதீகர்கள் அனுமதிக்கவில்லை.

‘எல்லைச்சாமியான அய்யனார்தான் ஐயப்பன். (இது உண்மையோ) எனவே அவரை அனுமதிக்க முடியாது’ என்றார்கள்.

பி.டி.ராசன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஊர்வலத்தை சிறப்பாக முடித்து சபரிமலைக்கு ஐயப்பனைக் கொண்டு சென்றார்.

தற்போதைய ஐயப்பன் திருவுருவச்சிலையை செய்தவர் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதி (ஸ்தபதி = பெருந்தச்சன்)என்ற தமிழரே.

அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற குறுகியப்பாதைகள் கூடக் கிடையாது.

தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற ஐயப்ப சாமிகள் கூட்டமாக இருமுடியோடு, தீப்பந்தங்களை கொளுத்திக்கொண்டு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.

வழியெங்கும் செடிகொடிகளை வெட்டி பாதையமைத்துக் கொண்டே செல்வார்கள்.

அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள்.

தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வடஇந்தியர்கள் வந்தனர்.

இனவேறுபாடு காட்டாமல் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு மற்றவர்களுக்கும் இருமுடி ஏற்றினார்கள்.

மலையாளிகள் செய்தது விளம்பரப்படுதத்துதல் மட்டுமே.

இதன் விளைவாக 75ஆண்டுகள் முன்புவரை தமிழ் வம்சாவவழி மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது. சபரிமலை புகழ் பெற்றது.

கல்லா நிறைய ஆரம்பித்ததும் தமிழனை வெட்டிவிட நினைக்கிறார்கள் மலையாள ஆன்மீக வியாபாரிகள்.

இதே நிலைதான் கண்ணகி கோவிலிலும். அதுபற்றி விரிவான ஒரு பதிவு போடுகிறேன்.

ஆக, சபரி மலையை ஆண்ட மன்னன் தமிழன்.

சிலை வைத்தவன் தமிழன்.

அங்கே கோவில் கட்டி பாதையமைத்து ஆன்மீகத் தலமாக்கியவன் தமிழன்.

அந்தப் பகுதி பெரும்பான்மை மக்கள் தமிழர்கள்.

கோவிலுக்கு சேவை செய்பவர்களும் பெருமளவில் செல்பவர்களும் காசு போடுபவர்களும் தமிழர்கள்.

நிர்வாகமும் பணமும் நிலமும் மலையாளிக்குச் சொந்தமா?

இருக்குடா உங்களுக்கெல்லாம் ஒருநாள்...

பாஜக வும் தமிழகம் அழிப்பும்...


நம் நாட்டின் வளங்கள் அரசின் உதவியோடு திருடப்பட்டு அதானி அம்பானி போன்ற ஆசிய பணக்காரர்களுக்குச் செல்கிறது...

அவர்கள் மூலம் அது மீண்டும் மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய்ப்படுகிறது...

இதில எங்க இருந்துடா நாட்டின் வளர்ச்சி வருது ?

தமிழர்களே ஒன்றே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் வளம்தான் உங்களுடன் இருக்கும் உண்மையான சொத்து...

அது தீர்ந்துவுட்டது எனில் நீங்கள் வெற்றுக்காகிதம் என்பதனை மறக்க வேண்டாம்...

வளம் எவ்வளவு எடுக்கப்படுகிறதோ அவ்வளவு வளர்ச்சி அவசியம்...

இன்னும் விழிக்காவிட்டால் சொந்த தேசத்திலேயே நீ அகதிதான்...

பாஜக பொன். ராதா வும் தமிழக அழிப்பும்...


கஞ்சா விற்ற பள்ளி மாணவர்கள் கைது...


காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வெளி பள்ளியில் இருந்து வந்து மாணவர்கள் கஞ்சா விற்பனை, 5 மாணவர்களையும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு...

5-மாணவர்களையும் காஞ்சி தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை... 

விழித்துக்கொள் எம் தமிழினமே...


நம் உலகில் அனைத்தும், நீர் கூட வணிகமாக்கப்பட்ட நிலையில், இன்னைக்கு நமக்கான ஒரே தீர்வு தற்சார்பு...



நம்மள தற்சார்புக்கும் நகரவிடாம அதையும் அரசுடைமை (வணிகமயம்) ஆக்குனா ? தனிப்பெரும் வணிக சந்தையே நடத்தலாம்..

வழக்கம் போல அடிமையா ..?

சிலை கடத்தலும் உண்மைகளும்...


இன பற்று இழிவானதா?


இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று..

ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை... இன உணர்வு என்றுதான் குறிப்பிடுகிறார்கள்..

மேடையில் மார் தட்டுபவர்கள் கூட இன உணர்வு என் இரத்தத்திலேயே ஊறியது என்றுதான் முழங்குகிறார்கள்.

அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.

இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம்.

குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.

இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.

ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா?

முன்னாள் இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளித்தார்..

சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்
எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட..

இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா?

மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன.

இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம்.

கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால் தான்.

அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான்.

எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!

அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity). எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன.

ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!

அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது.

ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன.

ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும் தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.

மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது.

எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.

தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா?

தமிழினமே  சிந்தித்து விழித்தெழு...

தமிழக அதிமுக அரசின் டூபாக்கூர் வேலைகள்...


ஒவ்வொரு முறையும் உங்களுக்கான அரசியலை, நீங்களே விலக்கி வைக்கிறீர்கள் என்பதுதான் நிதர்சனம்..


ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு அடிமை அரசியலுக்குள் சிக்கிக் கொண்டு..

இந்த அரசியல் என்னை காப்பாற்றும் என்று உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்...

திமுக ஸ்டாலினும் பொய்களும்...


டிஜிட்டல் இந்தியாவின் சட்டம்...


லஞ்சம் வாங்குனவன விசாரிக்கவே மாட்றீங்க...

லஞ்சம் கொடுத்ததா ஒருத்தர் புகார் கொடுத்தா உடனே கொடுத்தவன புடிச்சி சிறையில போட்டுட்டா யார் புகார் கொடுப்பா?

என்னங்க சார் உங்க சட்டம்?

ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது. இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அ

திலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது. அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.

தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும்.

ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

ஸ்டெர்லைட் கொலைகள்...


அமானுஷ்யம்...


ஆவிகள் தங்களது இருப்பை சில ஒலிகள் மூலம் வாசனைகள் மூலமும் மனிதர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டும். 

ஆனால் ஆவிகள் நாய்கள், பூனைகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகளுக்குச் சர்வ சாதாரணமாகத் தெரியும். 

நமது நடமாட்டத்தை விலங்குகள் எப்படி அவதானிக்கிறதோ அது போன்றே ஆவிகளின் நடமாட்டத்தையும் துல்லியமாக அறிகிறது.  இதற்கு உதாரணமாக யாருமே இல்லாத வெற்று திசையை நோக்கி நாய்கள் தொடர்ச்சியாகக் குரைப்பதையும் இல்லாத ஆளை துரத்திக் கொண்டு செல்வதையும் கூறலாம்.

ஆவிகள் இருக்கும் பகுதியை மனிதர்கள் வேறு எந்தவகையில் அறியலாம் என்றால் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு நாம் சென்ற உடன் தேவை இல்லாமல் உடல் புல்லரிக்கும்.  மன ஒட்டங்கள் தாறுமாறாக ஓடும்.  நமது கவனம் முழுமையாகச் சிதறும்.  அப்போது மனதைப் பிடித்து இழுத்து ஒரு மையப்புள்ளியில் நிறுத்தினால் இது சாத்யமாகும் நபர்க்கு ஆவிகள் வெண்படலமாகவோ கரும்படலமாகவோ தெரியும்.  மற்றபடி ஆவிகள் பார்க்க இயலாது.

பிரத்தியேகப் பயிற்சி எடுத்தவர்கள் வேண்டுமானால் தாங்கள் விரும்புகின்ற படி ஆவிகளை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் அழைத்துப் பார்க்கலாம், பேசலாம்.  அவைகளுக்குச் சில வேலைகள் தரலாம்.  அதன் மூலம் முடியாத பலவற்றை முடித்தும் காட்டலாம்.  ஆனால் அது மாந்தீரிகனாக இருப்பதற்கு உதவுமே அல்லாது நல்ல மனிதனாக இறைவனிடம் சேர்வதற்கு உதவாது.

 ஆவிகளை அனைவராலும் பார்த்து விட முடியாது என்கின்றபோது அவைகளைச் சிலர் புகைப்படம் எடுத்து இருக்கிறார்களே அது எப்படி நிகழந்தது என்ற வினா எழும்புவது இயற்கை முதன் முதலில் ஆவிகளைப் படம் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் வில்லியம் மம்ளர் ஆவார்.  இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.

1868 ஆம் வருடத்தில் வேறு ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கழுவி பார்த்தபோது சில வருடங்களுக்கு முன்பு இறந்து போன தனது உறவினர் ஒருவன் நிழல் உருவம் புகைப்படத்தில் படிந்து இருப்பதைப் பார்த்து வியந்து போனார்.  பின்னர் பல புகைப்பட நிபுணர்களிடம் அந்தப் படத்தைக் காட்டி இது எப்படி நிகழ்ந்து இருக்கும் என்று ஆராயச் சொன்னார்.

இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதே காலகட்டத்தில் வேறு சில ஆவிகளின் புகைப்படமும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்த புகைப்படமும் எந்த வித சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மையான புகைப்படம் என்ற முடிவிற்கு வந்தனர்.  அதன்பின் பல்வேறு நிஜ ஆவி புகைப்படங்கள் உலக ஆவி ஆர்வலர்களுக்கு இடையில் இன்று நடமாடுகிறது.

இந்தப் புகைப்படங்கள் அனைத்துமே திட்டமிட்டு காத்திருந்து எடுத்த புகைப்படங்கள் அல்ல.  யதேச்சையாக கேமரா கண்களுக்குள் சரிவர அகப்படாத ஆவிகள் புகைப்படத்திற்குள் அகப்பட்டுக் கொள்வது ஒரு அதிசயம் ஆகும்.  அதற்கான காரணங்கள் இதுவரை புரிய படவில்லை...

இந்த பூமியை பொருத்தவரை மனிதனும் ஒரு விலங்கு தான்...


யார் ஆட்சி?



இப்போது, தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் ஆட்சியா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் எவ்வாறு சம்மதித்தார்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை கோர்ட்டில் நேரில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி கொண்டு தயாரிக்கப்படும் ரசம் உடலுக்கும் மிகவும் நல்லது...


முன்னோர்களின் இயற்கை வழியை கடைபிடிப்போம்...

தமிழர் நாட்டில் வந்தேறிகள்...


தமிழர் நாட்டில் இன்றுவரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்துவருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டதுதான்..

தமிழர்கள் வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது.

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று .

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆளவேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும் , சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ? சிந்திப்பீர்..

தமிழர் நாட்டில் வந்தேறிகள் :

தெலுங்கு கன்னட பிராமணர்கள் , தெலுங்கு கன்னட சக்கிலியர்கள் , தெலுங்கு கன்னட கம்மவார் , பலிஜா , கவரா நாய்டு , கம்பளத்து நாய்டு , வளையல் கார நாய்டு , கம்மா நாய்டு , ரெட்டியார்கள் , ராஜுக்கள் , ஆரிய வைசியர் , கோமுட்டி செட்டி , தெலுங்கு கன்னட தேவாங்கு செட்டி , 24 மனை தெலுங்கு செட்டி, தொட்டிய நாயக்கர் , புதிரை வண்ணார் , ஒட்டர்கள் , சாளியர்கள் , தொம்பர்கள் , கன்னட ஒக்கிலியர், கன்னட லிங்காயத்து ,
பட்டுநூல் ( எ ) சௌராச்டிரர் , பொட்டுகட்டி (எ)சின்னமேளம் (எ) இசைவேளாளர் , ராயர்கள் , நரிகுறவர்கள் , குஜராத்தி மார்வாடிகள் , மலையாளிகள் , போன்றோர் ஆவர்.

மேற்கண்டவர்களை நாம் புறக்கணிக்க வேண்டாம் . மாறாக தமிழர்களுக்கே முன்னுரிமை கொடுப்போம்.

பாவாணர் காட்டிய வழி அதுதான்.

தமிழர் நாட்டை தமிழர்தான் அதுவும் நல்ல தமிழர்தான் ஆளவேண்டும்.

இருக்கும் உடைமைகளையாவது நமது தலைமுறையினருக்காக காப்போம்.

இழந்த உரிமைகளை மீட்போம்...

அதார் அட்டையும் மோசடிகளும்...


அகத்தியர் சித்தரின் பாடல் வரிகள் சில...


மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா..
மனமது செம்மை யானால் வாயுவை வுயர்த்த வேண்டா..
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா..
மனமது செம்மை யானால் மந்திரஞ் செம்மை யாமே..

உண்ணும்போ துயிரெழுத்தை வுயர வாங்கி..
உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்..
பெண்ணின்பா லிந்திரியம் விடும்போ தெல்லாம்..
பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு..
திண்ணுங்கா யிலைமருந்து மதுவே யாகும்..
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்..
மண்ணூழி காலமட்டும் வாழ்வார் பாரு..
மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே..

ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று..
உமையவளுங் கணபதியு முந்தி யாகி..
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்..
விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா..
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு..
பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு..
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்..
கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே..

விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்..
விதமான நாதமது குருவாய்ப் போகும்..
அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்..
ஆதியந்த மானகுரு நீயே யாவாய்..
சந்தேக மில்லையடா புலத்தி யனே..
சகலகலை ஞானமெல்லா மிதற்கொவ் வாவே..
முந்தாநாள் இருவருமே கூடிச் சேர்ந்த
மூலமதை யறியாட்டால் மூலம் பாரே..

மூலமதை யறிந்தக்கால் யோக மாச்சு..
முறைமையுடன் கண்டக் கால் வாதமாச்சு..
சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பார்..
சாத்திரத்தைச் சுட்டெறிந்தாலவனே சித்தன்..
சீலமுள்ள புலத்தியனே பிரம யோகி..
செப்புமொழி தவறாமல் உப்பைக் கண்டால்..
ஞானமுள்ள எந்திரமாஞ் சோதி தன்னை..
நாட்டினால் சகலசித்தும் நல்கும் முற்றே..

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது..
பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்.. உயிர்போச் சென்பார்..
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை..
ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்..
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்..
கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா..
சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து..
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே..

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு..
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா..
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்..
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்..
ஆடுகின்ற தேவதைகள் அப்பா. கேளு..
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்..
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்..
தளமான தீயில்விழத் தயங்கி னாரே..

தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்..
சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே..
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி..
மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்..
இயலான ரசந்தனி லீப் புகுந்தாற் போலும்..
இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்..
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்..
மாட்டினார் சிவனாருத் தரவினாலே..

உத்தார மிப்படியே புராணங் காட்டி..
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்..
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்..
கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்..
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்..
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்..
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து..
பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே..

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு..
பாரதபு ராணமென்ற சோதி யப்பா..
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்..
நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்..
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்..
நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்..
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்..
பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே..

கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்..
கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்..
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை..
அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி..
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்..
உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்..
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்..
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே..

பூரணமே தெய்வமென உரைத்தா ரையா..
பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்..
காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளு..
கலையான பதினாறும் பூரணமே யாகும்..
மாரணமா முலகத்தில் மதிம யங்கி..
மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா..
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்..
வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே..

ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்..
அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்..
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்..
முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்..
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்..
பேரான பூரணத்தை நினைவாய்க் காரு..
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்..
வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே..

தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே..
தாயான பூரணத்தை யறிந்த பின்பு..
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து..
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்..
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே..
ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்..
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்..
நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே..

பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்..
பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்..
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்..
உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்..
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்..
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்..
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை..
உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே..

பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்..
பரிபாடை யறியார்கள் உலக மூடர்..
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்..
தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்..
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்..
வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்..
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்..
நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே..

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி..
காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி..
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்..
குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து..
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது..
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே..

ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்..
உத்தமனே பதினாறும் பதியே யாகும்..
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்..
வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு..
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்..
தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது..
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்..
அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே..

பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து..
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்..
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்..
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது..
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு..
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு..
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்..
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே..

ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு..
உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு..
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி..
நாட்டாமற் சொன்னதனால் ஞான மாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்..
பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்..
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா..
தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே..

உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே..
உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே..
பகைமை பண்ணிக் கொள்ளாதே வீண்பே சாதே..
பரப்பிலே திரியாதே; மலையே றாதே..
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே..
நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே..
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று..
தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே..

வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு..
வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்..
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை..
தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா..
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே..
பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே..
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்..
கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே..

உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே..
உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்..
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்..
உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்..
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்..
உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்..
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே..
உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே..

பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்..
பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்..
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு..
விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா..
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்..
மகத்தான செவியோடு பரிச மெட்டும்..
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்..
பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே..

கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்..
காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்..
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்..
மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்..
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்..
சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்..
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
தாயான வத்துவென்றும் பதியின் பேரே..

பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்..
பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்..
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்..
பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்..
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்..
சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்..
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்..
நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்..

பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே..
பித்தர்களே நன்றாகத் தெரிந்து பார்க்கில்..
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்..
விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று..
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே..
காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு..
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்..
சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே..

கற்பமென்ன வெகுதூரம் போக வேண்டா..
கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா..
சர்ப்பமென்ன நாகமதோர் தலையில்நின்று..
சாகாத கால்கண்டு முனை யிலேறி..
நிற்பமென்று மனமுறுத்து மனத்தில்நின்று..
நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு..
சொற்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்..
துரியமென்ற பராபரத்திற் சென்று கூடே..

கூடப்பா துரியமென்ற வாலை வீடு..
கூறரிய நாதர்மகேச் சுரியே யென்பார்..
நாடப்பா அவள் தனையே பூசை பண்ணு..
நந்திசொல்லுஞ் சிங்காரந் தோன்றுந் தோன்றும்..
ஊடப்பா சிகாரவரை யெல்லாந் தோன்றும்..
ஊமையென்ற அமிர்தவெள்ளம் ஊற லாகும்..
தேடப்பா இதுதேடு காரிய மாகும்..
செகத்திலே இதுவல்லோ சித்தி யாமே..

ஆமென்ற பூர்ணஞ்சுழி முனையிற் பாராய்..
அழகான விந்துநிலை சந்த்ர னிற்பார்..
ஓமென்ற ரீங்காரம் புருவ மையம்..
உத்தமனே வில்லென்ற வீட்டிற் காணும்..
வாமென்ற அவள்பாதம் பூசை பண்ணு..
மற்றொன்றும் பூசையல்ல மகனே.. சொன்னேன்..
பாமென்ற பரமனல்லோ முதலெ ழுத்தாம்..
பாடினேன் வேதாந்தம் பாடினேனே..

பாடுகின்ற பொருளெல்லாம் பதியே யாகும்..
பதியில்நிற்கும் அட்சரந்தான் அகார மாகும்..
நாடுகின்ற பரமனதோங் கார மாகும்..
நலம் பெரிய பசுதானே உகாரமாகும்..
நீடுகின்ற சுழுமுனையே தாரை யாகும்..
நின்றதோர் இடைகலையே நாதவிந்தாம்..
ஊடுகின்ற ஓங்கார வித்தை யாகும்..
ஒளியான அரியெழுத்தை யூணிப் பாரே..

ஊணியதோர் ஓங்காரம் மேலு முண்டே..
உத்தமனே சீருண்டே வூணிப்பாரே..
ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும்..
ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கி நிற்கும்..
ஏணியா யிருக்குமடா அஞ்சு வீடே..
ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப் பாரு..
தோணிபோற் காணுமடா அந்த வீடு..
சொல்லாதே ஒருவருக்குந் துறந்திட்டேனே..

துறந்திட்டேனே மேல்முலங் கீழ்மூ லம்பார்..
துயரமாய் நடுநிலையை யூணிப் பாராய்..
அறைந்திட்டேன் நடுமூலம் நடுநா டிப்பார்..
அப்பவல்லோ வரைதாக்கும் தாரை காணும்..
உறைந்திட்ட ஐவருந்தான் நடனங் காணும்..
ஒளிவெளியும் சிலம்பொலியு மொன்றாய்க் காணும்..
நிறைந்திட்ட பூரணமு மிதுதா னப்பா..
நிசமான பேரொளிதான் நிலைத்துப் பாரே..

சும்மா நீ பார்க்கையிலே மனத்தை யப்பா..
சுழுமுனையி லோட்டியங்கே காலைப் பாராய்..
அம்மாநீ தேவியென்று அடங்கிப் பாராய்..
அப்பவல்லோ காயசித்தி யோகசித்தி..
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும்..
ஒருமனமாய்ச் சுழுமுனையில் மனத்தை யூன்று..
நம்மாலே ஆனதெல்லாஞ் சொன்னோ மப்பா..
நாதர்களி லிதையாரும் பாடார் காணே..

காணுகின்ற ஓங்கார வட்டஞ் சற்றுக்..
கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்..
பூணுகின்ற இடைகலையில் பரம்போ லாடும்..
பொல்லாத தேகமென்றால் உருகிப் போகும்..
ஆணவங்களான வெல்லா மழிந்து போகும்..
அத்துவிதத் துரியாட்ட மாடி நிற்கும்..
ஊணியதோ ரெழுத் தெல்லாந் தேவி யாகும்..
ஓங்காரக் கம்பமென்ற உணர்வு தானே..

உணர்வென்றாற் சந்திரனி லேறிப் பாவி..
ஓடியங்கே தலையென்ற எழுத்தில் நில்லே..
அணுவென்றால் மனையாகுஞ் சிவனே யுச்சி..
அகாரமென்ன பதியுமென்ன சூட்ச மாகும்..
கணுவென்ன விற்புருவ மகண்ட வீதி..
கயிலாய மென்றதென்ன பரத்தின் வீடு..
துணுவென்ற சூரியன்றன் நெருப்பைக் கண்டு..
தூணென்ற பிடரிலே தூங்கு தூங்கே..

மூவெழுத்தும் ஈரெழுத்தும் மாகி நின்ற..
மூலமதை யறிந்துரைப் போன் குருவுமாகும்..
ஊவெழுத்துக் குள்ளேதா னிருக்கு தப்பா..
உணர்வதுவே கண்டறிந்தோன் அவனே ஆசான்..
யாவருக்குந் தெரியாதே அறிந்தோ மென்றே..
அவரவர்கள் சொல்வார்க ளறியா மூடர்..
தேவரோடு மாலயனுந் தேடிக் காணார்..
திருநடனங் காணமுத்தி சித்தியாமே..

ஈரெழுத்து மோரெழுத்து மாகி யாங்கே..
இயங்கிநிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே..
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டுங் கொண்டு..
வித்திலே முளைத்தெழுந்து விளங்கி நிற்கும்..
சீரெழுத்தை யூணிநல்ல வாசி யேறித்..
தெரு வீதி கடந்தமணி மண்டபத்துச்..
சாரெழுத்தி னுட்பொருளாம் பரத்தை நோக்கிச்..
சார்ந்தவர்க்குச் சித்திமுத்தி தருமே தானே..

ஏகமெனு மோரெழுத்தின் பயனைப் பார்த்தே..
எடுத்துரைத்து மிவ்வுலகி லெவரு மில்லை..
ஆகமங்கள் நூல்கள்பல கற்றுக் கொண்டே..
அறிந்தமென்பார் மவுனத்தை அவனை நீயும்..
வேகாச்சா காத்தலைகால் விரைந்து கேளாய்..
விடுத்ததனை யுரைப்பவனே ஆசா னாகும்..
தேகமதி லொரெழுத்தைக் காண்போன் ஞானி..
திருநடனங் காணமுத்தி சித்தி யாமே..

குருவாக உமைபாக னெனக்குத் தந்த..
கூறரிய ஞானமது பத்தின் மூன்று..
பொருளாகச் சொல்லி விட்டேனப்பா நீதான்..
பொருளறிந்தாற் பூரணமும் பொருந்திக் காணே..
அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்..
அருநரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்..
அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்..
ஆகாயம் நின்றநிலை அறியலாமே...

சாதி ஒழிப்பு டூபாக்கூர் போராளிகள்...


பேரிக்காய் நன்மைகள்...


சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கக் கூடியது பேரிக்காய். காய் என்ற அடைமொழியுடன் இருந்தாலும், இது உண்மையில் ஒரு வகை பழம்தான். மலைப்பகுதியில் விளையும் இந்த பேரிக்காயில், ஆப்பிளில் கூட இல்லாத நிறைய சத்துக்கள் உள்ளன.

செயல்திறன் மிக்க சத்துக்கள் பேரிக்காயில் அதிகம். உயர்தர நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர பிளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவு மண்டலத்தை சுத்தம் செய்வதுடன், தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி ஹார்மோன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் உள்ளது.

எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இதய பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் 2 வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிகள் பேரிக்காய் சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமையடையும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

கால்சியம், இரும்பு சத்துக்கள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. இரவு உணவுக்குப் பின் பேரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் குறையும். பல் ஈறுகள் பலமாகவும், பல் வளர்ச்சிக்கும் பேரிக்காய் உதவுகிறது. இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. பசி உணர்வை தூண்டுகிறது.

கிராணி என்னும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது. சிலருக்கு திடீர் படபடப்பு, வியர்வை ஏற்பட்டு கை, கால்கள் உதறும். இவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கிவிடும். விட்டமின் பி சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

100 கிராம் பேரிக்காயில் உள்ள சத்துக்கள் :

கார்போஹைட்ரேட் - 15.23 கிராம்,
சர்க்கரை - 9.75 கிராம்,
நார்ச்சத்து - 3.1 கிராம்,
கொழுப்பு - 0.14 கிராம்,
புரதம் - 0.36 கிராம்,
விட்டமின் பி1 - 0.012 மி.கிராம்,
பி2 - 0.026 மி.கிராம்,
பி3 - 0.161 மி.கிராம்,
பி5 - 0.048 மி.கிராம்,
பி6 - 0.029 மி.கிராம்,
பி9 - 7 யூனிட்கள்,
சோலின் - 5.1 மி.கிராம்,
விட்டமின் சி - 4.3 மி.கிராம்,
விட்டமின் இ - 0.12 மி.கிராம், விட்டமின் கே - 4.4 யூனிட்,
கால்சியம்  - 9 மி.கிராம்,
இரும்பு - 0.18 மி.கிராம்,
மக்னீசியம் - 7 மி.கிராம்,
மாங்கனீசு - 0.048 மி.கிராம்,
பாஸ்பரஸ் - 12 மி.கிராம்,
பொட்டாசியம் - 116 மி.கிராம்,
சோடியம் - 1 மி.கிராம்,
துத்தநாகம் - 0.1 மி.கிராம்,
கலோரி சத்து - 239 ஜூல்கள்...

குலதெய்வ வழிபாடு - மிக முக்கிய பதிவு...


பெரும்பாலான தமிழ்மக்களின் குலதெய்வக் கோவில்கள் என்பவை  போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களின் நடுகல் வழிபாட்டின் நீட்சியே.

மாவீர்கள் இறந்த இடத்துக்கு ஆண்டுக்கு ஓருமுறை சென்று படையல் வைத்து வழிபட்டு வந்தனர். மாவீர்கள் வீரமரணம் அடைந்த இடம் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்பதால் அங்கே நினைவுக்காக நடுகல்லையும் (Tombstone ), அக்கல்லில் அவ்வீரனின் புடைப்புச் சிற்பத்தையும் உருவாக்கினர்.

எழுதப்படிக்கத் தெரிந்த சிலர் அவ்வீரனின் செயலை நடுகல்லில் கல்வெட்டாகவும் செதுக்கி  வைத்தனர்.

படையல் வைப்பதற்கு சிலமணி நேரங்கள்  முன்னதாகவே சென்று  அடர்த்தியான புதர்களை  வெட்டியெறிந்து நடுகல்லைச் சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்வர். இதனை ஒரு தமிழ்ப்படத்தில் நடிகர் விவேக் கிண்டல் செய்வது போல ஒரு காட்சிவரும்.

நடுகல்லின் அருகே சூலமும் வேலும் நடப்பட்டிருக்கும். சேவலை வேலில் குத்தி பலியிடுவது இன்றும் பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.

வீரமரணம் அடைந்தவர்கள் கருப்பசாமிகளாக நம்மை காவல் காப்பார்கள் என்பது நம் முன்னோர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். அக்கருப்புக்கு வேண்டிய சேவல்/கிடாயின்  குருதியைக் கொடுத்து வழிபடுவதை காலம் காலமாக கிராமிய மக்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கருப்பசாமி வழிபாட்டை சரிவரப் புரிந்து கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள் கிராமிய மக்களின் வழிபாடுகளை பேய் வழிபாடு  (Devil shrine)  என்று கொச்சைப்படுத்தினர்.

காவல் கருப்புகள் கொடுத்த வாக்குக்குக் கட்டுப்படும்.

நம் இனத்தின் எதிரிகளான பிராமணர்கள் அஞ்சுவது இந்தக் காவல் கருப்புகளுக்கு மட்டும் தான். எண்ணிகையில் சிறுபான்மையினரான பிராமணர்கள் படையெடுத்து வந்து தமிழர்களை வீழ்த்தியிருக்கவே முடியாது என்பது என் கருத்து.

காலப்போக்கில் இந்தக் கருப்புகளைக் கட்டும் வித்தையை அவர்கள் கற்றுக்கொண்டனர் ( அதர்வன வேதமாக இருக்கலாம் ). அதில் முன்னோடிகளாக இருந்தவர்கள் நம்பூதிரிகள் ஆவர்.

தொடக்கத்தில  தங்கள் நன்மைக்காக கெட்ட ஆன்மாக்களை மட்டும் அண்டவிடாமல் தடுக்கக் கண்டு பிடிக்கப்பட்ட வித்தையை நம் காவல் கருப்புகளின் மேல் சோதனை செய்து பார்த்து, அவற்றைக் கட்டுவதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

சிதிலம் அடைந்த குலதெய்வக் கோவில்களை புனரமைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பிராமணர்களை வைத்து கும்பாபிசேகம் செய்து நமக்கு நாமே மிகப் பெரிய ஆப்பாக சொருகிக் கொண்டோம்.

அவன் எவ்வாறு காவல் கருப்புகளைக் கட்டுகிறான்?

உலோகத் தகடு மற்றும் கலசத்தைப் பயன் படுத்தித்தான் அவன் நம் காவல் கருப்புகளைக் கட்டுகிறான். சிலை பிரதிச்டை என்ற பெயரில் சிலையின் அடியில் ஒரு உலோகத் தகடை மறைத்துவைத்து விடுவான். கருவறையின் மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் கலசங்களை வைத்துக் கட்டுவான்.

கோவில் கும்பாபிசேகத்தின் பொழுது நீங்கள் இரண்டு விசயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒன்று: கும்பாபிசேகம் எப்போதும் காலை 8-10 மணிக்குள் மட்டும் தான் செய்வார்கள்.

இரண்டு: கும்பத்தின் மீது ஒரு கழுகு பறந்து சென்றால் மட்டுமே கும்பாபிசேகம் நிறைவு பெற்றது ( கருப்பைக் கட்டியாச்சு ) என்று அறிவிப்பார்கள். ஒரு வேளை கழுகு வரவில்லை என்றால் அடுத்த நாள் மீண்டும் முயற்சி செய்வார்கள்.

ஏன் 8-10 மணி ?

ஒரு சூரிய நாளும் சூரிய ஆண்டும் ஒன்றோடு ஒன்று போருந்திக்கொள்பவை. ஒரு சூரிய நாளின் 8-10 மணி என்பது  ஒரு சூரிய ஆண்டின் “ கும்ப இராசிக்கு  “ இணையானதாகும். அதனால் தான் கோவில் “ கும்பாபிசேகங்களை “ அந்த நேரத்தில் செய்து பிராமணர்கள் வெற்றியடைகின்றனர். காவல் கருப்புகளை கும்பத்தில் கட்டுகின்றனர். 

கழுகு ஏன் ?

ஒவ்வொரு விலங்கு / பறவைக்கும் ஒவ்வொரு திறன் உள்ளது. பொதுவாகவே கழுகுகள் இறந்த சடலத்தின் மீது வட்டமிடுபவை. நடுகல் (Tombstone) என்பது போரில் இறந்த மாவீர்களின் சமாதியின் மீது நடப்பட்டவை. காவல் கருப்புகள் கும்பத்துக்குள் கட்டப்படும் பொழுது அதனை உணர்ந்த கழுகுகள் கும்பத்தின் அருகே பறந்து செல்கின்றன..

ஏன் அசைவம் கூடாது?

உங்கள் காவல் தெய்வங்களைக் கட்டிய பின்னர் 48 நாட்களுக்கு ( 1 மண்டலம் ) உங்களை அசைவ உணவு உண்ணக்கூடாது என்று சொல்வார்கள். ஏன் ?

காவல் கருப்பின் கட்டை உடைக்கக்கூடிய ஆற்றல் சேவல்/கிடாயின் குருதிக்கு மட்டுமே உள்ளது.

ஒரு மண்டலம் நீங்கள் அசைவ உணவைத் தவிர்த்தால் அந்தக் கட்டு பலமாகிவிடும். அது வலுவிழக்க 12 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என்று பிராமணர்கள்  வலியுறுத்துவார்கள்.

பல கிராமங்களில் இருந்த கோவில்களுக்கு வலியச் சென்று கும்பாபிசேகம் நடத்தினான் காஞ்சி சங்கராச்சாரி. நாமும் அவனை நம்பி சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம்.

காவல் கருப்புகளைக் கட்டும் தமிழக பிராமணர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுத்ததே கேரள நம்பூதிரிகள் தான். அவர்கள் ரொம்ப ரொம்ப ஆபத்தானவர்கள். சேரநாட்டையே அடையாளம் தெரியாமல் அழித்தொழித்த அவர்களின் செயல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் தொடரும்....