13/03/2018

செக்கில் எடுக்கப்படும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு, அது பாதுகாப்பில்லா எண்ணெய் என சில போலியான விஷயங்களை உறுதிபடுத்தியது அத்துறை செய்தி..


நிச்சயம் இந்த மாரடைப்பு, புற்றுநோய், கிட்னி பிரச்சினை இன்னபிற நோய்கள் வர இறைச்சி வகைகள் கூட காரணமல்ல பாதுகாப்பாற்ற எண்ணெய் வகைகளே காரணம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுதெல்லாம் மக்கள் செக்கில் ஆட்டபட்ட  எண்ணெய்களை வாங்க ஆரம்பித்தாயிற்று.

சிலரோ கவனமாக மூலபொருளை கொடுத்து எண்ணெய் வாங்கி செல்லும் அளவு விழிப்புடன் இருக்கின்றனர், அப்படியே நலமுடனும் இருக்கின்றனர்.

இதனால் என்னாயிற்று என்றால் இந்த ரீபைன்ட் ஆயில், மினரல் ஆயில், கலப்படம் மிகுந்த சன்பிளவர் ஆயில் எல்லாம் விற்பனை ஆகவில்லை.

கூட்டி கழித்துபார்த்தால் இந்த செக் எண்ணெய்க்கு உணவு பாதுகாப்பு துறை ஏன் குதித்தோடி வந்திருக்கின்றது என்பது புரியும்.

அப்படி மக்கள் நலனில் அபார அக்கறை உள்ள துறை என்றால் இந்த ரீபைன்ட் ஆயில் கம்பெனிகள், எடிபிள் ஆயில் என ஏதோ ஒன்றை சூரியகாந்தி எண்ணையில் கலக்கும் கம்பெனிகள் எல்லாம் விசாரித்தார்களா?

பாமாயில் முதல் எத்தனையோ விஷயங்கள் இறக்குமதி செய்யபடுகின்றன, அதனை கவனித்தார்களா? சோதித்து உறுதிபடுத்தினார்களா ?

இல்லை, ஏனென்றால் அவை எல்லாம் பரகாசுர கம்பெனிகள் யாரும் கை வைக்க முடியாது, அதனால் அவை தரமற்ற எண்ணெயினை கவர்ச்சி பாக்கெட்களில் விற்கலாம்.

வல்லவன் விற்றதே எண்ணெய்.

அந்த சூரியகாந்தி எண்ணெய் முதல் பல எண்ணெய்களில் கழிவு கச்சா எண்ணெய் கலக்கபடுவதாக பகிரங்க புகார் வருகின்றது, மிக மிக ஆபத்தான விஷயம் அது. அதனை இத்துறை சோதித்ததா?

ஆக அந்த மாபெரும் அரக்கர்களை விட்டுவிட்டு மாட்டு செக்கில் பிழிபவர்களிடம் அதுவும் மூலபொருளை மக்களிடமே வாங்கி பிழிபவர்களிடம் சென்று தங்கள் கடமையினை உணவு பாதுகாப்புதுறை நிறைவேற்றுமாம்.

இதெல்லாம் சிறுதொழிலை நசுக்கும் விஷயம் மட்டுமல்ல மக்களை பணக்கார் கம்பெனிகளின் மோசமான எண்ணெயினை வாங்கி உண்டு நாசமாய் சாவுங்கள் என சொல்வதும் ஆகும்.

இம்மாதிரி விஷயங்களில் மக்கள் எச்சரிக்கையாயிருந்து, இதனை எல்லாம் கடந்து செக்லில் ஆட்டபடும் இயற்கை எண்ணையினை வாங்கி ஆரோக்கியத்தை காப்பதே நல்லது.

இன்றைய நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய், சீனி, வண்ணம் சேர்க்க பயன்படும் ரசாயாணம், காபி, கலப்பட டீ தூள் என சில விஷயங்கள்.

இதெல்லாம் தவிர்த்து நம்மால் நலமாக வாழமுடியுமா என்றால் நிச்சயம் முடியும், அக்காலத்தில் இவை இன்றிதான் மிக்க நலமாக வாழ்ந்தார்கள்.

இதில் மிக விழிப்பாய் இருக்க வேண்டிய விஷயம் எண்ணெய், தமிழகம் அதில் விழிக்க ஆரம்பிக்க பராகசுர கம்பெனிகள் கண்களை உருட்டுகின்றன.

உன்னை அழிக்கத் தான் அரசே தவிர.. உன்னை காக்க அல்ல...

300வது நாளை நோக்கி...


3 மணி நேரத்தில் 20000 ஆதார் கார்டு விவரங்களை திருடிக்காட்டிய பிரான்ஸ் நாட்டவர்...


ஆதார் கார்டு விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஆகவே இந்திய மக்களே, உங்கள் வங்கி விவரம், தொலைபேசி விவரம், கிரெடிட் கார்டு விவரம் என அனைத்தையும் ஹேக் செய்பவர்கள் திருட முடியும் என்கிற நிலையில்தான் டிஜிட்டல் இந்தியா இருக்கிறது...

பிஞ்சிகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் சி.பி.எஸ்.இ...


இந்த ஆக்கங்கெட்ட கூவைகள் தான் நீட் தேர்வு வினாத்தாள்களை தயார் செய்கிறார்கள்...

நம்ம சாதி ஆளு தமிழ்நாட்டு தந்தை என்ற சாதித் திமிரை ஆந்திராவில் வணிகமாக்கத் தானே சாதிப் பெயரோடு தெலுங்கில் படம்?


இங்கு ‘நானும் பச்சை தமிழர் தான்’ என்று வலம் வரும் திராவிட கட்சி தலைவர்களும் சாதிப் பாசத்தோடு தானே பாலாற்றை ஆந்திரத்திற்கு தாரை வார்த்தார்கள்?

இதை கேட்டால் நீயும் இன வெறியனே...

ஓடினான் ஓடினான் இமையமலைக்கே ஓடிவிட்டான் மராட்டிய ரஜினி...


தமிழா இந்தியா நம்மை மறைமுகமாக இனப்படுகொலை செய்துக் கொண்டிருக்கிறது.. புரிந்துக்கொள்...


நாளை நெடுவாசலில் தீப்பிடித்து எரியலாம்...

கூடங்குளத்தில் விபத்து ஏற்படலாம்...

அன்றும் அரசுகள் நிவாரணம் தான் அறிவிக்கும் இறந்த நம் உறவுகளை மீட்கவா முடியும்?

அதை தடுக்க அந்த திட்டங்களை தடை செய்யும் வரை போராட வேண்டும்...

உங்களுக்கு எல்லாம் கிடைப்பதால் தான் அனைத்தையும் வளர்ச்சி என்கிறீர்கள்...


உங்களுக்கு நேரமிருந்தால் இந்த இடத்திற்கு செல்லுங்கள், அதன்பிறகு நீங்கள் வளர்ச்சி என வார்த்தையை என்றைக்கும் உபயோகப்படுத்த விரும்ப மாட்டீர்கள்.. தனிமனித வளர்ச்சி என்பது வளர்ச்சி இல்லை...

தமிழா விழித்துக்கொள்...


டேய் அடிமை அரசாங்கமே உங்ககிட்ட அதிகாரம் இருக்குனுதாண்டா இவ்ளோ பண்றீங்க...


உழைக்கிற மக்களோடு அதிகாரத்தையும், எங்களோடு கோபத்தையும் ஒருநாள் நீங்க பார்க்கதாண்டா போறீங்க...

தியானம்...


தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போட்டு தான் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தீய சக்திகள் தொல்லை செயயும்.. திசை திருப்பும் என்று சொல்கின்றனர் உண்மையா எஜ்று கேள்வி கேட்டுள்ள நண்பரே...

தியானம் செய்யும் போது சூட்சும கட்டு போடுவது என்பது உண்மை தான் அதில் சந்தேகம் வேண்டாம்..

இந்த சூட்சும கட்டில் பல வகைகள் உண்டு...

மந்திர கட்டு, எந்திர கட்டு, பிரணவ கட்டு, பிராண கட்டு, குரு கட்டு என்று சொல்ல கூடிய தீட்சை இப்படி பல உண்டு.

இவைகளெல்லாம் அனைவராலும் செய்ய முடியாது.

ஆனால் பிராண கட்டு, பிரணவ கட்டு, இவைகள் கொஞ்சம் முயற்சி செய்தால் அனைவராலும் கூடும்.

குரு கட்டு என்பது தியானத்தில் நல்ல தேர்ச்சி அடைந்த குருவிடம் தீட்சை வாங்கி கொண்டால் அந்த ஆற்றல் உங்களுக்கு பாதுகாத்து கட்டு போல் செயல்படும்.

அதற்காக யாரும் கட்டணம் கட்டி தீட்சை பெற கிளம்பி விடாதீர்கள்.

பிராண கட்டு என்பது சுவாச பயிற்சி செய்து விட்டு தியானம் செய்வது.

பிரணவ கட்டு என்பது பிரணவ மந்திரத்தை சத்தமாக நீளமாக அதாவது ஓ................ம் என்று பத்து முறை உச்சரித்து விட்டு தியானிப்பது.

இவைகள் அனைத்தையும் விட தீட்சை மற்றும் விளக்கு ஏற்றி வைத்து தியானிப்பது நல்ல பாதுகாப்பையும் வெற்றியையும் தரும்.

இது நான் கண்ட அனுபவமும் கூட திருச்சிற்றம்பலம்...

மற்றநாடுகளுக்கு கடன் கொடுக்கும் மத்திய அரசு சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்...


தன்னுடைய இதுலயே அதாமா.. அடுத்தவன பாத்து சிரிக்கிறானாமா.. அந்த கதையாக அல்லவா இருக்கிறது...

ஆபத்தான இது போன்ற சுற்றுலா (ட்ரக்கிங்) அவசியமா ?


டரக்கிங்க கிளப்புகள் இன்றைக்கு அதிகரித்து வருகின்றது. சைக்கிளில் உலாவருவது , பைக்கில் சுற்றுவது மலை ஏறுவது என ஆண்கள் பெண்கள் தங்களின் நேரத்தை ஜாலியாக கழிப்பதே இதன் அடிப்படை எனக் கூறப்படுகின்றது.

ஆட்சியாளர்களை குறை கூறம் அதே நேரத்தில் 9 உயிர்களை பலிவாங்கியுள்ள பாதுகாப்புகள் இல்லாத இது போன்ற ஆபத்தான சுற்றுலா (ட்ரக்கிங்) அவசியமா எனவும் சமூக வலைளதத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது...

ஏழைநாடுகளின் மேல்.. (இலுமினாட்டி) கார்ப்பரேட்களின் பெருங்கனவு...


சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் கழிந்துவிடும் தொடைநடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்.

தமிழகமே அழியப் போகிறது.

இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.

அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலைபோட்டு.. அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்.. அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.

இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் தீவிரவாதிகளையும் அழிப்பது.

இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது.
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்.
இதற்காகத்தான் மீனவன் கொலை.
இதற்காகத்தான் கெயில் திட்டம்.
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு.
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது.

இதற்காகத்தான் பூமிக்கடியில் வெடி வெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு.

இதற்காகத்தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு.

இதற்காகத்தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்).

இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது.. (இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது).

இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம். அதாவது முற்றிலும் அழியவுள்ளது.

ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனர்.

பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய் விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திட்டம் நன்றாக வேலைசெய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்துவிட்டன. அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).

இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர்.

பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்து கொண்டது.

இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு. திட்டத்தைப் போட்டுக் கொடுத்ததே அவர்கள் தானே.

பின்னே! ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5 பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?

இதனால் மக்களுக்கென்ன லாபம்?

உண்டே கடுகளவு லாபம்.

விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான். அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.

பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான். அதற்கான தொழிற்சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.

கடலையும் விற்றுவிடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.

கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள். அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.

அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான்.
அதில் கூலிவேலை கிடைக்கலாம்

அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (சாகர் மாலா திட்டம்). அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.

இது கற்பனை இல்லை நிஜம்.

இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)..

இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.
வேறுவழியே இல்லை. போராட்டம் நடத்திக் கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.

அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.

சிறுசிறு தாக்குதல்கள் நடத்த வேண்டும்.

என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராட வேண்டும்.

ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.

இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.

அவர்களைப்போல பசி பட்டினி வந்தபிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.

தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு..

இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே...

கடலில் மூழ்கிய கண்டம் - ஒரு வரலாற்று ஆய்வு -1...


கடலினுள் கண்டங்கள் மூழ்கி உள்ளனவா… மக்கள் வாழ்ந்து இருந்த மாபெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளையிட்டுக் கொண்டு சென்று விட்டதா? என்றக் கேள்விக்கு ஆம் என்கின்றனர் கிரேக்க ஞானிகளான பிளாடோவும் (Plato) ஓமரும் (Homer) , நம் இளங்கோவடிகளும்.

ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விடுகின்றது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார் என்ற செய்திகள் அவர்களின் கூற்றுகளில் தெளிவாக இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போகின்றன.

மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டே ஒரு அழிந்தக் கண்டதினை உலகம் முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியப் பாடில்லை.

அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒவ்வொரு இடத்தினைக் குறிப்பதாகவே அமைந்து வருகின்றன.

ஒரு சமயம் அட்டுலாண்டிசு அமெரிக்காவிற்கும் ஐரோபியாவிற்கும் இடையில் உள்ளது என்கின்றனர்.

மறு சமயம் அது சப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பதாக சொல்லுகின்றனர்.

மற்றொரு சமயம் ‘பெர்முடா முக்கோணம்’ இருக்கும் இடத்தில் தான் இந்தக் கண்டம் இருந்து இருக்கலாம் என்கின்றனர்.

இத்தகைய முரண்பாடான தகவல்கள் மூலம் அட்டுலாண்டிசு என்னும் கண்டம் தனியே இருந்ததா இல்லை வேறேனும் ஒரு மூழ்கிய கண்டத்தினைப் பற்றிய தகவல்கள் அட்டுலாண்டிசு என்னும் பெயரின் மூலம் கதையாக வெளியாகி உள்ளதா என்று எண்ணும் எண்ணம் வருகின்றது.

அப்படி வேறோரு கண்டத்தினைப் பற்றி ஐரோப்பிய அறிவியலாளர்கள் இன்னும் அவர்களின் தேடலை ஆரம்பிக்கவில்லை. பிரச்சனை இல்லை நாம் ஆரம்பிப்போம்.

தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒருத் தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது. கடலில் மூழ்கிய இந்தக் கண்டத்தினைப் பற்றி கதைகளாகவோ, இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ நாம் நிச்சயம் அறிந்து இருப்போம். அட்டுலாண்டிசு என்றக் கண்டத்தினைப் போல் விவரங்கள் தெளிவாக இல்லாத நிலை போல் அல்லாது குமரிகண்டதினைப் பற்றிய விவரங்கள் தெளிவாக கிடைகின்றன. தமிழ் சங்க இலக்கிய பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் குமரிக்கண்டதினைப் பற்றியக் குறிப்புகள் தெளிவாக இருக்கின்றன.

இந்த இடத்தில் இந்த நிலையில் தான் குமரிக் கண்டம் இருந்தது என்று அந்த நூல்கள் உறுதிப்படக் கூறுகின்றன. நாம் முன்னரே கண்டது போல் நம்முடைய நூல்கள் எந்த இடத்தில் குமரிக்கண்டம் இருந்தது என்றுக் கூறுகின்றனவோ அதே இடத்தில் தான் உயிரினம் தோன்றி இருக்க வேண்டும் என்று அறிவியலும் கருதுகின்றது.

மேலும் தமிழர்களின் சில பழக்க வழக்கங்களும் சமகாலத்தில் நடந்த சம்பவங்களும் குமரிக்கண்டம் என்ற ஒன்று இந்த மண்ணில் இருந்தது என்றும் கூற்றுக்கு ஆதாரங்களாக இருந்துக் கொண்டு இருக்கின்றன. குமரிக் கண்டதினையும் அதன் வழி மனிதனின் வரலாற்றினையும் பார்க்கும் முன் நாம் அந்த விடயங்களைப் பார்த்து விடுவது நல்லது.

௧) குமரிக் கண்டத்தினைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுவது என்ன..

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள….

மேலே உள்ள இந்தக் கூற்றின் படி பல மலைகளுடன் குமரிக்கண்டமும் கடலினுள் சென்றது என்ற செய்தி நமக்கு தெரிகின்றது.

௨) ஆடு மேய்ச்சான் பாறை…

தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்த்து இருக்கின்றனர்.

ஆனால் காலத்தில் கடல் அந்த இடத்தினைக் கொள்ளைக் கொள்ளவே மக்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து விட்டனர். ஆனால் ஆடு மேய்த்த பாறை என்ற பெயர் மட்டும் அங்கேயே தங்கி விட்டது.

இதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்து இருந்த இடம் இன்று கடலுக்கு அடியினில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகின்றது.

௩) காவேரிப்பூம்பட்டினம்…

பூம்புகார் என்றுப் பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரமும் கடலினுள் மூழ்கி விட்டது. காலத்தில் பூம்புகார் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினை விட முந்தியது என்பது அறிஞர்களின் கருத்து.

௪) தனுசுக்கோடி…

இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுசுக்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது.

எனவே கடலில் நம் நகரங்கள் மறைந்து உள்ளன என்னும் செய்திகள் பொய்யல்ல என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,

தெற்கு திசையில் உள்ள தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும், ஒரு பெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளைக் கொண்டு போய் உள்ளது என்னும் செய்தியினை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

இந்த உண்மைகள் எல்லாம் அந்த நிலப்பரப்பினில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம் என்றால் நிச்சயம் புலனாகும். ஆனால் இந்திய அரசோ அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாது இருக்கின்றது. அத்தகைய ஆராய்ச்சிகளை மற்றவர்கள் மேற்கொள்ளவும் ஆதரிக்காது இருக்கின்றது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏன் இந்தியா ஆராய்ச்சியினை மேற்கொள்ளாது இருக்கின்றது என்ற கேள்வியோடு சேர்த்து நாம் இது வரை பார்த்து இருந்த கேள்விகளுக்கும் விடையினைக் காண முயல்வோம்….

ஆனால் அதற்கு எல்லாம் அடிப்படையாக நாம் தெளிவாக குமரிக்கண்டதினைப் பற்றி அறிய வேண்டும்...

குமரிக்கண்டம் உண்மையா அல்லது கற்பனையா என்பதனை அடுத்தப் பதிவில் காண்போம்...

இந்தியாவில் விவசாயம் எதற்காக ஒடுக்கப்படுகிறது..?


மண்ணுக்காக போராடியவர் சிறையில் மௌனம் காப்பது முறையா?


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, பன்னாட்டு குளிர்பான ஆலை எதிர்ப்பு, கிரானைட் கனிமவள கொள்ளை, நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக, நிலத்தடி நீர் கொள்ளை, மீத்தேன், சாயக்கழிவு, ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை, தாமிரபரணி நீர் மற்றும் மணல் கொள்ளை, பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை எதிர்த்து, அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை மற்றும் எண்ணற்ற பல இயற்கை வள சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து அதில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர்ந்து செயல்பட்டு வரும்,

தமிழகத்தின் போராட்ட மனிதர் தோழர் முகிலன் கூடங்குளம் வழக்குகளுக்காக சிறை சென்று இன்றுடன் 175 நாட்களாகிறது.

தமிழக அரசே.. தோழர்.முகிலன் மற்றும் ஒரு இலட்சம் மக்கள் மீதான கூடங்குளம் அணு உலைப் போராட்ட 132 வழக்குகளை ரத்து செய்து விடுதலை செய்..

எங்கே செல்லும் இந்தப் பாதை...


தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலக்கரிச்சுரங்கள்கள், பெட்ரோலிய மண்டலங்கள், மீத்தேன் திட்டத்தால் பெருவாரியான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட உள்ளீர்கள்.

பொருளாதார வளர்ச்சி,வேலைவாய்ப்பு என்ற பசப்பு வார்த்தைகளால் உங்களுக்கு எந்த நம்மையும் விளையப் போவதில்லை.

மாறாக தமிழர்களுக்கு சொந்த மண்ணில் எவ்வித அரசு வேலையும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இந்திய அரசு அதிதீவிரம் காட்டுகிறது.

அண்டை மாநிலங்களில் இருந்து இனி வரும்காலத்தில் உங்களுக்கு நீர் என்பது கிடைக்கப் போவதில்லை என்பது உறுதி.

நீரும், நிலமும் இல்லாத இந்த மண்ணை விட்டு எங்கு போகப் போகிறீர்கள்.

அண்டை மாநிலங்கள் உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு உஙகளை அடையாளம் காண்டு அடித்து விரட்டும்.

எந்த நாடும் உங்களை அகதியாக ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

கிடைக்கும் அடுமட்ட வேலைகளைச் செய்து அதன் பக்கவிளைவுகளால் நோய்யுற்று நடைபிணமாய் வாழப்போகிறீர்கள்.

இனி தமிழகத்தில் வேளாண்மை என்ற ஒன்று இல்லாமல் போகப்போகிறது.

அண்டை மாநிலங்களை மட்டுமே உணவுக்காக நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்ப்படப் போகிறது.

கிடைக்கவிருக்கும் அடிமட்ட வேலையை சொற்ப சம்பளத்துக்கு செய்துவிட்டு சோத்துக்கே வழியின்றி நோயோடு வாழுங்கள்.

உங்களுக்காகவே இந்திய அரசு கருணைக்கொலையை பல்லாண்டு விவாதத்திற்குப் பிறகு நடைமுறைப்படுத்த இருக்கிறது.

கருணைக் கொலையில் உங்களுக்கே முன்னுரிமை அதில் போட்டிக்கு எவனும் வரப்போவதில்லை.

அநீதிக்கு எதிராகப் போராடத தமிழினமே...

உங்கள் அழிவை எதிர்கேள்வி இன்றி நீங்களே தேடிக் கொண்டீர்கள்.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாமாய்
போகப் போகிறோம்...

தமிழர் விரோத இந்திய ஒன்றியமும் தமிழரை முழுவதுமாக அழிக்க கட்டப்பட்ட முள்வேலி முகாம்களும்...


தமிழர் விரோத இந்தியாவின் எதிரி நாடு சீனா, ஆனால் சீனாவில் இருந்து இந்தியவிற்கு வரும் திபெத்திய அகதிகளுக்கு இருக்கும் முகாம் ஒரு சுற்றுலா தலம் போல் இருக்கிறது….

ஆனால் என் மொழி பேசுபவன் என் இனம்… தமிழர்கள் எங்களை நம்பி வருபவர்களை தமிழர் விரோத இந்திய அரசும் இந்த திராவிட (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகளின் பதுங்குகுழி, தமிழர்களின் புதைகுழி) அரசும் கொடுக்கும் மரியாதை   இது தான்…

இப்போ சொல்லுங்கள் நான் ஏன் இன்னும் இந்தியன் என்று சொல்ல வேண்டும்….

நம் வயத்து வலிக்கு நாம் தான் மருந்து சாப்பிட வேண்டும்...

ரேசன் கடை : அரசு ஒரு திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செய்கிறது என்றால் அங்கு நிழல் உலகில் கார்பரேட் உள்ளது என பொருள்...




பல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்...


பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான். பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன.

பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம். பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.

விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.

சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ். முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம்.

மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும். ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும். பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை.

டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.

முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும். உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.

அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது. மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை.

சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது.

இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது. சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை.

அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது. அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.

எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும். அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும்...

ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் நீங்கள் மறுபக்கத்தை ஏன் பார்க்கவில்லை?


படியளந்தார் பண்டைத் தமிழர்.. நாம் எப்படி இருக்கிறோம்..?


நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக்கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை உனக்கென்னப்பா முதலாளி படியளக்கிறார்...

என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'விரைவு உணவு' (Fast Food) கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விசயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விசயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.

நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விசயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது ஆர்வமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விசயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு, மூணு, நாலு, ஐந்து, ஆறு , ஏழு.. என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும் போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விசயத்தைக் கருத்தில் கொண்டு தான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக் கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது.

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்...

மும்பை விவசாய புரட்சி வென்றது...


மறக்குமா குறிஞ்சாக்குளம் மாகாபாதகம்... வைகோ நாயுடு அவர்களே..


1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ந் தேதி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுகாவிலுள்ள கரிசல் பூமியான குறிஞ்சாக்குளத்தில் அப்பாவி தமிழ்ச்சாதி இளைஞர்கள் நான்கு பேர் கண்டந்துண்டமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் முறையே சுப்பையா (44), 3 குழந்தைகள், சக்கரைபாண்டி (21), ஒரு குழந்தை, அன்பு (21) மணமாகவில்லை, அம்பிகாபதி (17) மணமாகவில்லை.

ஏன் கொலை செய்யப்பட்டார்கள் ?

தங்கள் பட்டா நிலத்தில் சாமி கும்பிட கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக..

கொலை செய்தது யார்?

மதிமுக பொது செயலாளர் வைகோவின் உடன் பிறந்த தம்பியும் கலிங்கப்பட்டி ஏகபோக பஞ்சாயத்து தலைவருமான திரு.ரவிச்சந்திரன் மற்றும் அவரின்
மாமா சங்கு வெட்டி மோகன்தாசு நாயக்கர் என குற்றஞ்சாட்டியது திருவேங்கடம் காவல்துறை. இதில் முதல்குற்றவாளி ரவிச்சந்திரன்.

ஏதற்காக நடந்தது ?

கோவில் கட்டும் உரிமை கேட்டதற்காக ஒரு கொலையா? தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் கரிசக்காட்டு பூமியில் தமிழ்ச்சாதி பறையனுக்கு கோவிலா? என்ற வெறுப்பில் கொலை நடந்தது. கொலை நடந்த குறிஞ்சாக்குளம் கலிங்கப்பட்டியிலிருந்து கூப்பிடும் தொலைவிலிருந்தது. வைகோ வின் அசைக்கமுடியாத செல்வாக்கு வழக்கை அடித்து நொறுக்கியது.

மகாபாதகம்...

ஒருவருடைய ஆணுறுப்பு கொலை செய்யப்பட்டுக்கிடக்கும் இன்னொருவருடைய வாயிலும்.. குடலை வெட்டி மாறி மாறி.. பொருத்தி வக்கிரம் கொண்ட அந்த மாபாதக வழக்கில் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். இதற்கெல்லாம் மேலாக வெண்மணி வழக்கில் கார் வைத்திருக்கும் பண்ணை முதலாளி ஒருவர் தப்பு செய்வாரா என்று கேட்ட ஒரு நீதியரசரின் கொடுந்தீர்ப்பை போல இங்கும் ஒரு ஆர்.டி.ஓ கேட்டார்.

கொலைக்கான காரணம்...

கொலை நடப்பதற்கு இரு மாதத்திற்கு முன்னால் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நாயக்கர்களுக்கும் தமிழ்சாதி பறையர்களுக்குமிடையே ஒரு சமாதானக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தை வழி நடத்திய ஆர்.டி.ஓ ஒரு அதிசயமான தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

நாயக்கர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும், பறையர்கள் அவர்கள் பட்டா நிலத்திலும் புழங்கிக் கொள்ளலாம். ஒருவர் பட்டா நிலத்தில் மற்றவர் நடக்கக் கூடாதென்றார். அய்யோ பாவம் கரிசல்காட்டில் 90 விழுக்காட்டை கையில் வைத்திருக்கும் நாயக்கர்களிடம் குடியிருக்க வீடற்ற பறையரால் மோதி செயிக்க முடியுமா என்ன?

தங்கள் குடிசைகளுக்குள் முடக்கப்பட்ட தமிழ்ச்சாதி பறையர்கள் நடமாடமுடியாத
நிலை ஏற்பட்டது. அரசு நிர்வாகம் அத்தனையும் வைகோ என்ற ஒரு மனிதனின் அசுர பலத்துக்குப்பின் கைகட்டி நின்றது. வழக்கம் போல் வழக்கு குப்பைக்கூடைக்கு போனது. கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அநியாயமாய் பறிக்கப்பட்ட குறிஞ்சாக்குளம் தமிழ்ப் போராளிகளின் நினைவு தினம் வரும் மார்ச்-14.

இந்தக் கொடூரத்துக்காக வைகோ ஒரு வருத்தம் தெரிவித்தால் கூட அவரை நாம் மதித்திருக்க முடியும். அது நடக்கவில்லை.

கொலையாளிகளை கைது செய்ய கோரி மள்ளர் சமூக தலைவர்களான..

திரு.ஜான் பாண்டியன்
திரு.பசுபதி பாண்டியன்
ஆகியோர் குறிஞ்சாக்குளத்தை முற்றுகையிடச்சென்று கைதாயினர்.

தமிழ்ச்சாதிகளின் மானம் கப்பல் ஏறிய நாள் மார்ச் 14..

இந்துக்களை காப்பதாக கதை விடும் RSS குறிஞ்சாக்குளத்தில் காந்தாரிக்கு கோயில் கட்ட முயற்சியெடுத்து தோற்றது. தமிழ்சாதிகளுக்கான பாடம் புதைந்து கிடக்கிறது குறிஞ்சாகுளத்தில். 

தமிழர்களை கொலை செய்துவிட்டு தமிழர்களுக்கு நாடகம்...

அண்ணன் ஒரு எம்.பி எனும்போதே நாலு கொலைகளை பண்ண முடியுமென்றால் அதே அண்ணன் முதலுவரானால் ரவிச்சந்திரன் எத்தனை கொலைகளை பண்ணியிருப்பான். இதே ரவிச்சந்திரன் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் பொடா வில் வேறு கைது செய்யப்பட்டான். உள்ளூர் தமிழனை கொலை செய்து விட்டு அந்தப்பாவத்தை மறைக்க பக்கத்து ஊர் தமிழனை ஆதரித்த இந்த வடுகத்தின் சூழ்ச்சிகளை உணருங்கள் தமிழர்களே...

அன்பான தமிழர்களே ராமதாஸ் கிருஷ்ண சாமி மற்றும் தேவர் அமைப்பு தலைவர்கள் இவர்கள் எல்லாம் சாதி கட்சி சாதிய ஆட்கள் என்ற சொல்லாடலை உடைப்போம்..

என்றுமே மோதலில் வரும் சண்டைகள் ஒருவரை ஒருவர் சாதி வெறியரா சித்தரிக்கும் பின்னாளில் அந்த சித்தரிப்பே நிஜமாகும் அந்த நிஜத்திற்காக சாதி வெறியர்களா இல்லாதவர்கள் கூட சாதி வெறியர்களா மாற நேரிடும்..

இனி உண்மையான பரம்பரை சாதி வெறியர்  வை கோபால் சாமி நாயுடு போன்ற சாதி வெறியர்களை அடையாளம் காணுவோம்..

பறையனை தொட்டா தீட்டு நாடானை பார்தாலே தீட்டு என்ற பழமொழிய உருவாக்கி இரு தமிழ் சாதிகளையும் தாழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடித்து இருக்கிறார்கள் வடுகர்கள் இது போன்று..

கள்ள பய
பற பய
பள்ளி பய
பள்ள பய
எட பய
பாப்பார பய

இப்படி தமிழ் சாதிகளை இழிவு படுத்தி அதையே தமிழ் சாதிக்குள் ஒரு வித பகமையை நிறுவி தமிழர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்..

ரெட்டி நாயுடு இன்னும் பிற தெலுங்கு சாதிகளில்  இது போன்ற பழமொழி உண்டா ?

பொன்னாடையுடன் வந்த பாஜக பினாமி அதிமுக பன்னாடைகள்...


இந்தியாவை ஆள்வது ஆரியம்... அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம்...


இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான்.

இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான்.

காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும்.

முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான்.

தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான்.

நம் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்.

தமிழராய் ஒன்று இணைவோம்...

தேனி குரங்கிணியில் நீயூட்ரினோ ஆய்வுக்காக அரசே தீ வைத்திருக்கலாம் - சீமான்...


அனுமதி வாங்காமல் எப்படி அவர்கள் உள்ளே சென்றார்கள்? சோதனைச்சாவடி தூங்கிக் கொண்டிருந்துதா? இது நியுட்ரினோ ஆய்வுக்காக 9 பேரை பலி கொடுத்து நடத்தப்படும் நாடகமா? - சீமான்...

தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...


பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...

நான் ஒரு தமிழன்.
எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை.
அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.

தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.

ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.

தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும்,
வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.

கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?

தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள். எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்.

இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
 
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல் கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.

அதேபோல "இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே?" என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான். ..

வாழ்த்துக்கள் இளம் விஞ்ஞானியே...


இனி 'அலைபாயுதே’ படத்தைப் போல பதிவுத் திருமணம் செய்யத் தடா. பெற்றோரின் அனுமதி வேண்டும்...


இந்திய திருமணச் சட்டத்தின் படி திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

உரிய வயது வருவதற்கு முன்னால் நடத்தி வைக்கப்பட்டும் திருமணங்களைத் தடுக்கவும் ஏற்கெனவே நடந்த திருமணங்களை மறைப்பதைத் தடுக்கவும் திருமணப் பதிவை அரசாங்கம் கட்டாயமாக்கியது.

தமிழ்நாடு திருமணச் சட்டம் 2009 கூறுவதன்படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவாளர் அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், பதிவு செய்ய 60 நாள்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

150 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் மீது வழக்குப் போடவும் சட்டத்தால் முடியும்.

திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், கோயில், சர்ச், பள்ளிவாசல் ஆகிய நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாகக் கொடுக்கும் ஆவணம், நோட்டரி அபிடிவிட் போன்ற ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும்.

இது பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் எனில் எவ்வித பிரச்னையும் இல்லை.

ஆனால் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் காதல் திருமணங்களைப் பதிவு செய்வது இனி சுலபமில்லை.

இந்து திருமண சட்டத்தின்படி, இந்துக்களின் திருமணம் பதிவு செய்யப்படுகிறது. திருமண வயது நிறம்பிய ஆணோ, பெண்ணோ தங்கள் மனம் கவர்ந்தவர்களை திருமண செய்து கொள்ளலாம், இதற்கு பெற்றோர் மற்றும் உறவினரின் சம்மதமும் தேவை என குறிப்பிட்டிருக்கவில்லை. ஆண் பெண் இருவரும் அவரவர்க்குரிய ஆவணங்களுடன் பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டின் இறுதியில் திருமணத்தைப் பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை சுற்றறிக்கை மூலம் அனுப்பியது திருமணப் பதிவுத் துறை.

அந்தப் பட்டியலில் இடம் பெற்றவை...

திருமணம் செய்யவிருக்கும் ஆண் பெண் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வயதுக்கான சான்றிதழாகப் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மணமக்கள் தலா நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும்.

இதற்கென உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து பதிவுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில், குறிப்பிட்டுள்ள பெற்றோர் மற்றும் சாட்சியாளர்கள் ஆகியோரது அசல் அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும்.

பெற்றோரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரி பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் திருமணப் பதிவு நடக்கும்.

விண்ணப்பத்தில், ஒரு வேளை பெற்றோர் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், புகைப்படத்துடன் அவர்களது அசல் இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இதில் பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என்பதை நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும், பெற்றோரின் அசல் அடையாள அட்டை இல்லாமலோ அல்லது பெற்றோர் உயிரிழந்திருந்தால் அவர்களது அசல் இறப்புச் சான்றிதழ் இல்லாமலோ எந்தவொரு திருமணத்தையும் இனி பதிவு செய்ய முடியாது...

தேனி காட்டுத்தீ யும் உண்மைகளும்...


எதற்காக அக்காலத்தில் தமிழர்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை பேணிப் பாதுகாத்து வாழ்ந்தனர்?


கூட்டு குடும்பம் சொர்க்கம். ஏன்?

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.
 
தங்கைக்காக எதையும் விட்டுகொடுப்பது அண்ணனின் பாசம்.

அண்ணனின் தவறுக்கு தாயியிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

வாழ்க்கையை சொர்க்கமாக வாழக் கூடுக்குடும்பமே சிறந்தது....

அதனால் தான் தமிழர்கள் கூட்டு குடும்ப வாழ்க்கையை பெரிதும் போற்றிப் பேணிக் காத்தனர்...

ஒன்னும் செய்ய முடியாம எதுக்கு உங்களுக்கு பதவி.. உடனே தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்யுங்கள்...


தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு - வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு...


தீவிபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர், ஈரோட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு.

இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில், 10 பேர் நலமாக உள்ளனர் - வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால்.

காயமடைந்த 17 பேரில், 5 பேர் தேனியிலும், 8 பேர் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதி - சத்தியகோபால்.

இறந்தவர்கள் விவரம்...

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த புனிதா, அருண், பிரேமலதா, சுபா, விபின், அகிலா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது - தேனி ஆட்சியர் பல்லவி.

சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடல்...

வாழ்த்துக்கள் தமிழன் சத்தியராஜ்...


ஒரு பொருளை வாங்கவும், விற்கவும் காசை கண்டிப்பிடித்து பயன்படுத்தியது தமிழனே...


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது.

இம்முறையில் ஒருவரை ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில்மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது இந்தக்  காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும். அது . மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தை பயன்ப்படுத்த தொடங்கினர். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன. செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர். தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன.

இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள்உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர். அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியமான் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும். . இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் னெதபிரான் -பெயர் பொறிக்கப்பட்ட  காசும்  புழக்கத்திற்கு   வந்துள்ளன.

அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது.

இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

மலையமான் காசுகள்...

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன்.

இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இரும்புக் காசுகள் கிடைத்துளன.

அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்.. இது விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இப்போது நாம் பயன் படுத்தும் காசுகள் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது என்று நினைக்கும் போது சற்று வியப்பாகவே உள்ளது...

கொடைக்கானலுக்கும் குரங்கணி மலைக்கும் ஏறக்குறைய குறைந்தது 100 கிமீ இருக்கும்...


இப்போது கொடைக்கானலில் காட்டு தீ
இது நிச்சயம் திசை திருப்பும் செய்யலே...

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்...


முத்துக்குமாரன் தந்த அவன் பேராயுதமான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானமோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனி மனிதனின் இயக்கத்தின் உண்மையை, அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

சனவரி 29 வியாழக்கிழமை:
நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடைய பெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வைகோபால்சாமி நாய்டு, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாசு, திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆசர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).

அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர்.

அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வைகோபால்சாமி நாய்டு தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச்செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.

மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள், வக்கீல்கள், திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது.

திரு.வைகோபால்சாமி நாய்டுவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்ற போராளிகளும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாசும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்)

ஈகா திரையரங்க சிக்னலில் இருந்து சிறிய சந்திற்குள் நுழைந்த பின் தலைவர்கள் தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ள வேகமாய் ஊர்வலத்தை நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.

மாலை 6 மணியளவில் கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்கு அருகில் இருந்த சாலையில் முத்துக்குமாரனின் சடலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் சீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக் கூறினார்.

நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.
”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.

2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.

3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக் கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்.

4. அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.

திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் (students xerox) அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராசன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார்.

மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள். நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குனர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.

முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.

சனவரி 30 :வெள்ளிக் கிழமை
மெல்ல அந்த இரவு விடிந்தது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி,
தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
புரட்சிகர இளைஞர் முன்னணி
பெரியார் தி.க
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)
புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம்
போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள்.

கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.
ம.தி.மு.க தலைவர் திரு.வைகோபால்சாமி நாய்டு, பா.ம.க தலைவர் திரு.ராமதாசு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” – திரு.பழ.நெடுமாறன்.
திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.

திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.
“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாசு

”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட – திரு.திருமாவளவன்.

திரு வைகோபால்சாமி நாய்டுவும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”, தலைவர்களை.
இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார். திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார்.

வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு. “விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”. நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல் கட்சி உறுப்பினர்களும் பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர்.

பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை. திரு.ராமதாசும் திரு.வைகோபால்சாமி நாய்டுவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார்.

மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே. திரு.ராமதாசு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாசு வரவே இல்லை. திரு.வைகோபால்ச்சாமி நாய்டு பேச முயற்சி செய்தார்.

”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.

”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வைகோபால்சாமி நாய்டு கூட்டத்திற்கு முன் வாசித்தார்.

மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.
மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.
கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எசு.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார்.

தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன். முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.

தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிசமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.
வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.

ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம். இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை.

நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வைகோபால்சாமி நாய்டு வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .

சனவரி 31 :சனிக்கிழமை

மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குனர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குனர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.

நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராசா, அமீர், ஆர்.கே.செல்வமணி, சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம்; முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இரண்டு மணி வாக்கில் வைகோபால்சாமி நாய்டு வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார்.

மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது. 3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.

3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஐ ரோட், யானை கவுளி, வால்டேக்சு சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல் துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என சனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார்.

அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.

ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர், மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.

அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வைகோபால்சாமி நாய்டு அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.

பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.
முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது, ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி , புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.

மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குனர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர்; அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.

நடந்து வந்த திரு.வை.கோபால்சாமி நாய்டுவும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது.

சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.

அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு M80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.

அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ” புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது. புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார்.

அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார்.

எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது. ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை.

மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர்; சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குனர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள், அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும், எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார். இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.

நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வைகோபால்சாமி நாய்டு அராசகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்...