23/02/2019

போராளி முகிலன் எங்கே.? ஊடகங்கள் மூடி மறைப்பதற்கான இரகசியம் என்ன.?


காணாமல் போனது பிரபல நடிகராயிருந்திருந்தால் ஊடகங்கள் மூச்சு விடாமல் ஊதி பெரிது படுத்தியிருகும்...

அரசியவாதியோ அல்லது அவரது பிள்ளையாகவோ இருந்திருந்தால் காவல்துறை கண் இமைக்க நேரமின்றி களம் கண்டிருக்கும். பல பேருந்துகள் தீக்கிரயாகியிருக்கும்.. ரயில் தண்டவாளங்கள் இடம் பெயர்ந்திருக்கும்.

சாதி தலைவனாக இருந்தால் கூட சமூகத்தின் நிம்மதி தொலைந்திருக்கும்...

மேற்படி  அனைத்திற்குமே அனைத்து கட்சித் தலைவர்களும் அறிக்கை மழை பொழிந்திருக்கக் கூடும்...

ஆனால்,காணாமல் போனது ஒரு எளிய மக்கள் தொண்டன், சளைக்காத சமூகப் போராளி...

ஆகவே தான் மக்கள் இயக்கங்கள் களம் கண்டுள்ளன..

சென்னையில் இன்று நடந்த முகிலனுக்கான இந்த போராட்ட நிகழ்வு நாளை முதல் தமிழகம் முழுக்க நடக்க வேண்டும்...

முகிலன் தனி மனிதரல்ல,
சமூகத்தின் மனசாட்சி..

அவரை கண்டடையும் வரை சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருப்போம்...

ஆதிக்கவாதிகளுக்கும்,அதிகாரவர்கத்திற்கும் சிம்ம சொப்பனமாக முகிலன் இருந்திருக்கிறார் என்பது தான் அவர் காணாமல் போன செய்தி நமக்கு உணர்த்தும் உண்மை..

இந்த எளிய மக்கள் போராளி முன் அவர்கள் எவ்வளவு கோழையாகிவிட்டனர்...

Dmk vs Ntk / திமுக vs நாதக / பிரசன்னா vs இடும்பாவனம் கார்த்திக்...


ஈழத் தமிழர்களின் வரலாற்றை நாம் தமிழர் கட்சி தம்பிகள் படிக்க வேண்டும் - தமிழன் பிரசன்னா - திமுக...

உங்க தலைவரை முதல்ல குடியரசு நாள் எது? சுதந்திர நாள் எதுனு படிக்க சொல்லுங்க- இடும்பாவனம் கார்த்திக் - நாம் தமிழர் கட்சி...

https://youtu.be/ZaNyKMiR0HE

Subscribe the channel for more news...

மூன்று தமிழ் சங்கங்கள்...


மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.

சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம்  என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.

மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.

முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.

முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.

இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.

இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.

புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.

அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.

அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.

சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.

முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.

மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.

முதற்சங்கம்...

முதற்சங்கம் இருந்த இடம் தென்மதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.

முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.

முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.

முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.

இடைச்சங்கம்...

இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ஆண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.

இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.

கடைச்சங்கம்...

கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.

கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.

சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


பாஜக - அதிமுகவால் தமிழ்நாட்டில் 9029 பழங்குடியினர் விரட்டப்பட உள்ளனர்...


பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பர்ய வனவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006 -ன் படி 2005க்கு முன் வரை காட்டில காலங்காலமாக வாழும் மக்களுக்கு  பட்டா மாநில அரசுகள் வழங்கவேண்டும். பட்டா கிடைத்த பழங்குடியினர் மட்டும் அங்கு வாழவும், காடு சார்ந்த வாழ்க்கையை வாழவும் அனுமதிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 11,72,931 பட்டா மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றம் ஜூலை 27 வரை மாநிலங்களுக்கு பட்டா நிராகரிக்கப்பட்ட காட்டின் பாதுகாவலர்களான பழங்குடியின மக்களை வெளியேற்ற நேரம் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் 9029 பழங்குடியினர் அவர்கள் வாழிவிடத்திலிருந்து விரட்டப்பட உள்ளனர்

Wildlife first என்ற அமைப்பு பழங்குடியின மக்களை வெளியேற்ற வழக்கு தொடுத்திருந்தது.


மகாராஷ்ரா சுடாப்பி காட்டில் 250 ஹக்டேர் நிலம் பதாஞ்சலி பாபாராம்தேவுக்கு food park அமைக்க,

164 ஹக்டேர் நிலம் அதானிக்காக நாட்டின் 3ஆம் பெரிய மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்கு( Adani Power Maharashtra Limited),

467.5 ஹக்டேர் நிலம் அம்பானிக்கு சிமென்ட் ஆலை அமைக்க என 2015 முதல் 2018 வரை 20,314.12 ஹக்டெர் வன நிலம் கார்ப்பரெட்டுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.


அஸ்ஸாமில் பதாஞ்சலி நிறுனம் 1000கோடி மதிப்பில் 150ஏக்கர் வனஅழிப்பு நடத்தி கட்ட தோண்டிய குழியில் விழுந்து 1 பெண் யானை இறந்து, அதன் குட்டி காயமுற்றது. ஜக்கியின் வன ஆக்ரமிப்பிப்பாலும் யானைகள் பாதிப்புக்குள்ளாகிறது.

2017ல் மட்டும் 91,798 ஹெக்டெர் வனநிலம் பல்வேறு திட்டங்களுக்காக வழங்க Forest Advisory Committee (FAC) அவசரமவசரமாக  முடிவெடுத்தது.


மத்திய அரசின் வழக்கறிஞர் விசாரணையின்போது ஆஜராகாமல் காடுகளை மட்டுமல்லாமல் காட்டு விலங்குகளையும் அழிக்கும்
யானைகளின் வழித்தடங்களை ஆக்ரமித்த ஜக்கியை, அதானி போன்ற சாமியார்களையும் கார்ப்பரெட்டுகளையும் அனுமதித்து பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு.

கீழ்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டவையே அனைத்து மனுக்களும். மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது...

தலைமுடி பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு / Solve Hair Problems...


https://youtu.be/e4bgES0wiEg

Subscribe the channel for more tips...

கர்ம விதிகள்...


உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்...

1. மகத்தான விதி காரணி மற்றும் விளைவு விதி (Law of Cause and Effect)...

எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய்..

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு.

2. படைத்தல் விதி (Law of creation)...

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான். நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது. ஆகவே  நமக்கும் நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும்..

3 பணிவு விதி (Law of Humility)...

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும். இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி. பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத் தான் இருக்கும்..

4 வளர்ச்சி விதி (Law of Growth)...

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம் தான்.. நாம் மாறும் பொழுது நமது வாழ்க்கையும் அதற்கேற்றாற் போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது. உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுது தான் நடக்கிறது..

5 பொறுப்பு விதி (Law of Responsibility)...

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும், நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில் தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும் பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச் சுற்றியுள்ளவற்றை மாற்ற வேண்டும்..

6 தொடர்பு விதி (Law of Connection)...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7 கவன விதி (Law of Focus)...

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்த முடியாது, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது, நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது , நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி (Law of hospitality and giving)...

நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போக வேண்டும். நமது சுயநலமற்ற தன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்.. சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும் பொழுது தான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம்.. ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9 மாற்றம் விதி (Law of Change)...

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும். மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10 இங்கே இப்பொழுதே விதி (Law of NOW and HERE)...

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே.. வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும்.. பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும்.. நிகழ்காலத்தை கொள்ளையடித்து விடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11 பொறுமை மற்றும் வெகுமதி  விதி (Law of Patience and Rewards)...

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது. பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும், வேறெந்த வழியுமில்லை.  வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்வதில் தான் இருக்கிறது..

12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி (Law of Signifigance and Inspiration)...

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி.. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை, காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்...

செயற்கை கேரட்டை வாங்காதீர்கள்...


எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்... பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்...


கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.

நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = ”பெருமிடு” என்று அழைக்கப்பட்டது. அதுவே ‘பிரமிடு’ என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.

சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.

Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்...

பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...


மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கைககுத்தல் அரிசி...


கைகுத்தல் அரிசிக்கு மாறினால் கவலை இல்லை...

கைகுத்தல் அரிசியில் 23 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின்-பி குடும்பத்தைச் சார்ந்த சத்துக்கள் நிறைய உள்ளன. இதுதான் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின். ஆனால், தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீட்டப்பட்ட அரிசியில் ஒரு சத்தும் கிடையாது, கிட்டதட்ட சக்கைதான்.

இன்னொரு நுட்பமான விசயம், அரிசியாக இருந்தாலும் சரி, வேறு எந்த தானியமாக... இருந்தாலும் சரி, அது தீட்டப்பட்டதென்றால் அதைச் சாப்பிடுபவர்களின் உடலில் அதிக கால்சியம் சேராது.

இதனால் நாளடைவில் எலும்புகள் பலவீனம் அடைவதோடு, இதயத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது. தீட்டப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நோய்களுக்கு பெரிய பட்டியலே உள்ளது.

சர்க்கரை வியாதி, உயர் பதற்றம் (Hyper Tension) , எலும்பு தொடர்பான நோய்கள் என பலவும் வரும்.

கைக்குத்தல் அரிசியில் நார்சத்து அதிகம் இருப்பதால், நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

இந்த அரிசி சாதத்தைப் பொறுத்தவரை குறைந்த அளவே சாப்பிட முடியும். அதாவது, இப்போது நாம் எடுத்துக் கொள்ளும் தீட்டப்பட்ட அரிசி சாதத்தில் பாதி அளவுக்கும் குறைவான அளவே போதுமானது.

வயிறு நிறைந்துவிடும். இதனால்தான் அந்தக் காலத்து கிராமத்து ஆட்கள் நோய், நொடியில்லாமல் நலமோடு வாழ்ந்தனர். நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே...

இலுமினாட்டி என்றால் என்ன.? பகுதி - 2 / Illuminati...


https://youtu.be/1WpfhSb9U00

Subscribe the channel for more news...

முதுமக்கள் தாழி தான் பண்டைய தமிழரின் கல்லறையா.?


அகழ்வாராய்ச்சியில் எடுக்கப் படுகின்ற முதுமக்கள் தாழி தான் கல்லறை என சில ஆய்வாளர்கள் தவறான முடிவிற்கு வருகின்றனர் . ஆனால் இவை இறந்த உடல்களை அடக்கம் செய்ய மட்டும் பயன்படுத்தப்படவில்லை.

சிலநேரங்களில் அந்த தாழியில் தங்கம் வெண்கலம் இரும்பு போன்ற பொருள்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றது ஆக வேறு பொருள்களை வைக்கவும் அதை பயன்படுத்தி இருக்கின்றனர் .

பண்டைய காலத்தில் மிகவும் முதிர்ந்த மக்கள் படுத்த படுக்கையாக செயலற்று ஆனால் உயிருடன் அப்படியே நீண்டநாள் கிடப்பர் . இவர்களை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பதைவிட தாழியில் வைத்து புதைப்பதை சிறப்பென கருதி உயிருடன் அடக்கம் செய்தனர் . அவ்வாறு உயிருடன் முதுமக்கள் (வயதானவர்) வைக்கப் பட்டமையால் அது முதுமக்கள் தாழி என சொல் வழக்கில் வந்தது .

உயிருடன் அடக்கம் செய்ததால் அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் இதர பொருள்களை பாத்திரங்களில் வைத்து அவர்களுடனே அடக்கம் செய்தனர். அவையே அகழ்வாராய்ச்சியின் போது கிடைப்பவை.

இறந்தவர்கள் ஆவியாக வந்து இவற்றை பயன்படுத்த இந்த பொருள்களை எல்லாம் அவர்கள் வைக்க வில்லை உயிருடன் அடக்கம் செய்ததாலே தேவையானவற்றை வைத்தனர். இறந்தவர்கள் தங்களோடு வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை பண்டைய தமிழரிடம் இல்லை அது பின் நாளைய வளர்ச்சி.

எனவே தாழி என்பது உடல்களை அடக்கம் செய்ய மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அதற்க்கும் பயன்பட்டிருக்கிறது அவ்வளவுதான். அந்த பானை போன்ற பொருள் வேறு சில பொருள்களை வைத்து பாதுகாக்கவும் உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது...

பாஜக மோடியும் இஸ்லாம் அரசியல்...


Remove Arm Hair Naturally / அக்குள் முடியை நீக்க வேண்டுமா.?


https://youtu.be/oD_d4ik9sTg

Subscribe the channel for more tips...

நவ பாஷாணம்...


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்.

நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.

அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.

ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.

நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.

பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.

தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது..

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்...

கள்ளு ஆரோக்கியமானதே ஏன் தடை?


மருத்துவ வியாபாரம் நடக்காது என்பாதாலா?

காளான் வளர்ப்பு மிக சிறந்தது...


காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விசமற்றதாகவும் வளரும். விசக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின்(lentysine), எரிட்டிடைனின்(eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாசு(ஸ்)போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.

இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறக் காலங்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் ரசம் (Soup) அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் ரசம் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோசு, பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்...

இயற்கை போன்றே இருக்கும் ஆனால் இயல்பான அளவை விட பெரியதாக இருக்கும்.. இந்த தர்பூசிணியை வாங்காதீர்கள்...


பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்குகள்...


கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டு விடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், சுவாசகாசம் (asthma) முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது.

கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பசிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள சுண்ணாம்பு சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ தொகுதி மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன...

பாஜக பினாமி ஊடகங்கள் தன் மாமா வேலையை தொடங்கியது...


எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்...


சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.

அதைத் திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்து கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறி விடுகிறார்.

உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக்கொண்டு விழாவிற்கு வந்தார்.

இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்...

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.

தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.

ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.

கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).

அதன்பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.

அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே.

அன்று கருணாநிதி குற்றம் சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர் நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி...

அதன் பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு..

அதன் பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

உலகின் மிகச் சக்தி வாய்ந்த காந்தம் நம் மனம் தான்...


இரண்டு கால்களிலும் அணியப்பட்ட சிலம்பு...


சிலம்பு என்பது சங்ககால தமிழ்  மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும்.

கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும்.

இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது...

தமிழன் திராவிடனா.? பகுதி - 2...


https://youtu.be/oo7bPAEWRb0

Subscribe the channel for more news...

பல்வலி நீங்க எளிய வைத்தியம் உங்களுக்காக...


பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே.

பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும்.

அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்...

செயற்கை சோப்பிற்கு பதில் எதை பயன்படுத்தலாம்.?


5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்...


அதிகாரி சுற்றரிக்கை விட, அமைச்சர் இல்லை என்று சொல்ல.... நாம் சும்மா இருந்துவிட, இந்த அக்கிரமம் நடந்து விடும்...

உடனே ஒட்டு மொத்தமாய் எதிர்க்குரலுடன் தடை கேட்டு வழக்கும் வேண்டும்...

தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம், அரசு, அதிகாரம் என்று இந்தியா கொடுத்திருந்தும்....


தமிழர்கள் அதை திராவிடனிடம் கொடுத்துவிட்டு தீவைத்து தன்னை தானே அழிப்பது கொடுமையில் கொடுமை...

திராவிடமாயை ஒழிப்பே தமிழர் நீர்நிலவள உயிர் பாதுகாப்பின் முதல் படி....

தமிழர் கட்சிகளுக்கு மட்டுமே நமது வாக்கை பதிவுச் செய்யோம் என்று உறுதி எடுப்போம்...

இதில் ஆரியத்தை சேர்க்க வில்லை என்று கேள்வி கேட்காதீர்கள், தமிழன் என்றைக்கும் ஆரியத்தை தன் அரசியலில் சேர்க்க மாட்டான்...


நினைவு கொள்ளுங்கள் ஆரியம் தமிழனின் எதிரி, திராவிடம் தமிழனின் துரோகி...

நம் உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும்விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம்தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும் , முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும்.

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...