காணாமல் போனது பிரபல நடிகராயிருந்திருந்தால் ஊடகங்கள் மூச்சு விடாமல் ஊதி பெரிது படுத்தியிருகும்...
அரசியவாதியோ அல்லது அவரது பிள்ளையாகவோ இருந்திருந்தால் காவல்துறை கண் இமைக்க நேரமின்றி களம் கண்டிருக்கும். பல பேருந்துகள் தீக்கிரயாகியிருக்கும்.. ரயில் தண்டவாளங்கள் இடம் பெயர்ந்திருக்கும்.
சாதி தலைவனாக இருந்தால் கூட சமூகத்தின் நிம்மதி தொலைந்திருக்கும்...
மேற்படி அனைத்திற்குமே அனைத்து கட்சித் தலைவர்களும் அறிக்கை மழை பொழிந்திருக்கக் கூடும்...
ஆனால்,காணாமல் போனது ஒரு எளிய மக்கள் தொண்டன், சளைக்காத சமூகப் போராளி...
ஆகவே தான் மக்கள் இயக்கங்கள் களம் கண்டுள்ளன..
சென்னையில் இன்று நடந்த முகிலனுக்கான இந்த போராட்ட நிகழ்வு நாளை முதல் தமிழகம் முழுக்க நடக்க வேண்டும்...
முகிலன் தனி மனிதரல்ல,
சமூகத்தின் மனசாட்சி..
அவரை கண்டடையும் வரை சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருப்போம்...
ஆதிக்கவாதிகளுக்கும்,அதிகாரவர்கத்திற்கும் சிம்ம சொப்பனமாக முகிலன் இருந்திருக்கிறார் என்பது தான் அவர் காணாமல் போன செய்தி நமக்கு உணர்த்தும் உண்மை..
இந்த எளிய மக்கள் போராளி முன் அவர்கள் எவ்வளவு கோழையாகிவிட்டனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.