27/01/2019

உறவுக்கு மறுத்த மனைவியை காலால் கழுத்தை நெரித்து கொன்ற கணவன். நேரில் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி...


சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் மாதேஸ்  என்பவருக்கும் சசிகலா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த  7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார் மாதேஸ். வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்ன பண்ணுகிறது? என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.

இதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.

இதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.

இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த மாதேசின் மாமியார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து  கூச்சல் போட்டார்.

உடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்...

தமிழ்நாட்டில் தமிழ் கலாச்சாரம் தமிழ் மொழி சீரழித்து போதாது என்று கடல் தாண்டி இலங்கை தூய தமிழ் மொழி அழிக்க சென்றுள்ளது இந்த ஜாதி மத வெறி பிடித்த விபச்சார தினத்தந்தி...


பல்லாங்குழிக்கு பின் இத்தகைய உளவியல் சிந்தனையா – ஆதி தமிழன் அற்புதங்கள்...


இப்போது நாம் பார்க்க இருக்கும் விளையாட்டு பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களாகவே இருக்கும்.

சரி பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களில் என்ன சமநிலை போதிக்கப்படுகிறது. நாம் பார்க்கவிருக்கும் விளையாட்டு பல்லாங்குழி, பல்லாங்குழியின் நோக்கம் பற்றி அறிந்து கொள்வோம்..

பல்லாங்குழி விளையாட்டு அதிகமாக பெண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது, இந்த விளையாட்டு பெண்களுக்கு பல உளவியல் நற்கருத்துக்களை போதிப்பவையாகவே உள்ளன.

ஆம்.. பல்லாங்குழி என்பது இரு வரிசையில், வரிசைக்கு ஏழு குழி என்ற வகையில் மொத்தம் 14 குழிகளோடும், குழிக்கு ஐந்து புளியங்கொட்டை என்ற வீதம் விளையாடப்படும் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடுபவர் எதாவது ஒரு குழியில் இருந்து புளியங்கொட்டைகளை எடுத்து அக்குழியைத் தொடர்ந்து இருக்கும் அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொரு கோட்டையாக நிரப்ப வேண்டும்.

இப்படியாக எடுக்கப்பட்ட கொட்டைகள் முடியும் குழியை அடுத்த குழியில் இருந்து மீண்டும் கொட்டைகளை எடுத்து அதே போன்று மற்ற குழிகளை நிரப்ப வேண்டும்.

ஒரு தருணத்தில் கொட்டைகள் முடியும்  போது ஒரு வெற்று குழி உண்டாகும், அப்போது அந்த வெற்றுக்குழியை துடைத்துவிட்டு அதனை அடுத்து இருக்கும் குழியில் இருக்கும் கொட்டைகளை தனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது தான் அந்த ஆட்டக்காரர் வெற்றி பெற்ற கொட்டைகள்.

இதை தொடர்ந்து அடுத்த ஆட்டக்காரர் இதே போன்று  ஆடத்துவங்குவார்.

ஆட்டத்தின் இறுதியில் எவரிடத்தில் வெற்றி பெற்ற கொட்டைகள் அதிகம் உள்ளதோ அவரே வென்றவர் ஆவார்.

இந்த விளையாட்டின் நோக்கம் என்ன தெரியுமா...

கிடைத்ததை பெருக்கவும், பெருகும் போது பிறருக்கு கொடுக்கவும், கொடுப்பதையும் ஏற்ற இறக்கம் இன்றி சமமாக கொடுக்க வேண்டும், என்றாவது ஒரு தருணத்தில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாத நிலை வரும் போது, நிச்சயம் ஒரு புதையல் உன்னை வந்து சேரும் என்பதே இந்த ஆட்டம் உணர்த்தும் விதி.

ஈகை பண்பை நமது மகளிர்களுக்கும் சிறுவர்களுக்கும் போதிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த விளையாட்டு...

2000 ஆண்டுகளுக்கு முன்னரே சமூக சேவை என்ன என்பதை தமிழன் தான் உலகுக்கு கற்பித்தான்...


Stop ur hair fall and grow ur hair...


முடி உதிர்வை நிறுத்தி.. முடி வளர்ச்சி பெற...


Subscribe the channel for more tips...

தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனிதநேயம் தான் அதைவிடப் பெரியதாம்...


அப்படியே பார்த்தாலும்,பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது.

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது.

ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது...

சளியைத் தூரத்தும் வெற்றிலை...


இந்த புகை படத்தில் உள்ள kandy egg அட்டையில் 0-3 னு தவறு குறியீடு போட்டுருக்கு...


அப்போ இந்த குறியீட்டீன் அர்த்தம் 1வயது முதல் 3 வயது குழந்தை சாப்டகூடாது என்று அர்த்தம். 

இதை அந்த முட்டாய் உள்ள காகிதத்தில் அச்சடித்தால் யாரும் வாங்கமாட்டாங்குனு அதை அட்டையில் அச்சடித்திருக்கிறார்கள்.

இது வியாபார மூளை...

தயவு செய்து குழந்தைக்கு இது போன்ற விளம்பரம் வந்தாலோ சேனலை மாத்திருங்க முடிந்த அளவு குழந்தையை கடைக்கு கூட்டிட்டு போய் பழக்க வேண்டாம்...

ஜாக்டோ ஜியோவின் உண்மை போராட்டம் வெல்லட்டும்...


ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை எப்போதோ அலட்டல் இல்லாமல் கண்டுபிடித்த தமிழன்...


நம் அனைவருக்கும் அரசன் கோச்சடையானை நம்மில் பலருக்கு தெரியும். அந்த அரசன் கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்றும் ஒரு பெயரும் உண்டு. இவர் தான் சோழர்கள், சேரர்கள் மற்றும் ஆந்திரர்கள் என்று இன்றைய தெற்கு பகுதியில் இருந்த அரசுகளை கைப்பற்றி பாண்டிய நாட்டை விரிவு படுத்தியவர்.

சோழர்களை வென்ற ஜடாவர்மன், அவர்களிடம் இருந்த விலை மதிப்பில்லாத செல்வங்களையும் கைப்பற்றினான். கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் தென்னகத்தில் உள்ள பல கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்.

தொண்டை மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு எண்ணற்றத் திருப்பணிகள் செய்தார். சிதம்பரம் நடராசர் கோயில், மற்றும் திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவில் இந்த இரண்டு கோவில்களும் தான் ஜடாவர்மனின் திருப்பணிகளில் அதிகம் பலனடைந்த கோயில்கள்.

திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவிலுக்கு “துலாபார தானம் “ அதாவது ஒருவரின் எடைக்கு எடை தங்கம் என்கிற அளவுக்கு தானம் செய்தார்.

ஆனால் ஜடாவர்மன் செய்த தானம் சற்று விசித்திரமானது, ஒரு மனிதனின் எடைக்கு எடை தானம் தருவதை விடுத்து. இவர் தனது நாட்டில் இருக்கும் ஒரு யானைக்கு மேல் அம்பாரி வைத்து அந்த அம்பாரியில் தானும் தனது அரசியும் முழு கவசத்துடன் சேர்ந்து அமர்ந்துகொண்டான், இவர்களுடன் யானை பாகனும் முன் அமர்ந்து கொண்டான் இந்த மொத்த எடைக்கு எடை தங்கத்தை திருவரங்கம் கோயிலுக்கு தானம்  வழங்கினார்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள் ஒரு யானையை ஒரு தாராசில் ஏற்றி அதன் எடைக்கு எடை நிகர் நிற்க கூடிய தாரசை செய்திருக்க முடியுமா! பிறகு எப்படி இதை இவர்கள் செய்தார்கள் என்று கேள்வி எழுகிறாதா?

சரி அதை எப்படி செய்தார்கள், இதற்கும் இந்த கட்டுரையின் தலைபிற்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போமா...

ஜடாவர்மன், இதை செய்ய முதலில் காவிரிக் கரையாரில் ஒரு குள மண்டபத்தை கட்டினான். அந்த மண்டபத்திற்கு அருகில் ஒரு தெப்பம் நீரில் மிதக்கும் பலகையை கட்டினான். அந்த தெப்பத்தின் மேல் அம்பாறி பூட்டப்பட்ட யானையும் அதன் மீது அரசனும் அரசியும் மற்றும் பாகனும் ஏறினர். இப்போது அந்த தெப்பம் இந்த மொத கனத்தையும் தாங்கி சிறிதளவு நீரில் அமிழ்ந்தது.

அதன் பிறகு யானையை இறக்கிவிட்டு அதற்கு ஈடாக தங்கங்களை வைத்தனர். இது அந்த யானை தெப்பத்தில் இருந்த போது எவ்வளவு உள்ளே தெப்பம் அமிழ்ந்ததோ அவ்வளவு உள்ளே அமிழும் வரை தொடர்ந்தது. இப்படியாக அந்த “துலாபார தானம்” நடந்தது.

இப்போது சொல்லுங்கள், ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை முதன் முதலில் கண்டவனும் செய்து காட்டியவனும் நமது முன்னோர்கள் தானே.

தமிழ் என்பதும் தமிழன் என்பது ஒரு மொழி மற்றும்  அது சார்ந்த இனத்தின் அடையாளம் மட்டுமல்ல. அது ஒரு இயங்கியல், அறிவியல் என்று உரக்கச் சொல்லுங்கள்...

எங்கள் பணம் 50,000 கோடி எங்கே.?


முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி மட்டுல்ல, இந்து கடவுள் தான் என்று அடித்துக் கூறுகின்றனர் சிலர்...


இந்து கடவுள் என்று கூறப்படும் விநாயகர், பார்வதி, சிவன், விஷ்ணு, கிருஷ்ணன், ராமருக்கு இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களிலும் கோவில்கள் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற இந்து மத பண்டிகையின் போது  29 மாநிலத்திலும் இந்துக்கள் அப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

விநாயகர் சிவப் பார்வதியின் மகன் என்று அனைத்து இந்து மதத்தைச் சேர்ந்த வடநாட்டுக்காரனும் கூறுகிறான். அப்ப, விநாயகர் இந்து கடவுள் தான்.

இந்து கடவுள் என்று கூறப்பட்ட முருகனுக்கு இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களின் தமிழ்நாட்டில் மட்டுமே கோவில்கள் உள்ளது. ஏன் மீதம் உள்ள 28 மாநிலங்களில் முருகனுக்குக் கோவில்கள் இல்லை? முருகன் உண்மையில் இந்து கடவுளாக இருந்திருந்தால், மற்ற இந்து கடவுள்களுக்கு எவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் கோவில் இருக்கிறதே, அவ்வாறே முருகனுக்கும் கோவில் இருந்துருக்கும் அல்லவா...

தைப்பூசம் இந்து மத விழா என்றால், இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர்த்து, மீதம் உள்ள 28 மாநிலங்களிலும் ஏன் இந்த இந்து மத தைப்பூசத்தைக் கொண்டாடுவதில்லை இந்துக்கள். தைப்பூசம் இந்து மத விழாவே கிடையது முதலில்... இது தமிழர்களுடைய பெருநாள். குறிஞ்சி நிலத்தை ஆண்ட மன்னன் முருகன் என்பதால் அவருக்கு விழா எடுக்கும் நிகழ்வே தைப்பூசம் (தொல்காப்பியம், திருமருகாற்றுப்படை)

ஒரு இந்திப் படத்தில் கூட முருகனைக் கடவுளாக காட்டியதில்லை வடநாட்டவர்கள் என்பது கூடுதல் சான்று. மேலும், முருகனைப் பற்றி வடநாட்டவரிடம் கேட்டால் தெரியவில்லை என்கின்றனர்.  அவர்களைப் பொறுத்தவரை சிவப் புத்திரன் என்றால் விநாயகர் மட்டுமே என்கின்றனர். இது என்ன புதுக் கதை என்கின்றனர். அப்படியென்றால், முருகன் இந்து கடவுள் இல்லை என்பது மட்டும் உறுதி.

முருகனைப் பொதுவாக தமிழ்க் கடவுளாகத் தமிழர்கள் எண்ணுகிறார். அதனால், தமிழர்கள் புலம்பெயர்ந்த இடங்களில் முருகன் திருத்தளத்தை நிறுவினர். முருகனைத் தமிழ்க் கடவுளாக வழிபடுகின்றனர்.

முருகன் கடவுளா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் குறிஞ்சி நிலத்தை ஆண்ட தமிழ் மன்னன் என்பதால், தமிழுக்கும் தமிழர்களுக்குத் தொடர்புடையவர் என்பது மட்டும் உறுதி...

எந்த தனியார் நிறுவனமோ/பள்ளியோ சம்பள உயர்வை முன் வைத்து போராடி பார்த்து இருக்கிறோமா...


நேற்று அரசாங்க செவிலியர்கள் இன்று ஆசிரியர்கள் நாளை?

சம்பளம் போதவில்லை என்றால் வேலை வேண்டாம் என்று கூறி விட்டு போகலாமே.

மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் நிலையில் ஆசிரியர்கள் இப்படி செய்வது நியாயமானதா?

உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்..?




Subscribe the channel for more tips...

இது கற்பனை அல்ல உணர்வு.. உங்களின் உயிரின் மொழி...


நீங்கள் அமைதியாக இருக்கும் போது
உங்களுக்கு தோன்றும் உணர்வுகளை உணர்வாக எழுதுங்கள் அல்லது ஓவியமாக வரையுங்கள்.

அந்த எழுதியவை உங்கள் பாதைக்கு துணையாக இருக்கும் நீங்கள் அதை புரட்டும் போது.

எப்போது வேண்டுமானாலும் எழுதுங்கள் உணர்வின் மூலம் மட்டுமே.

அது கவிதை அல்லது உங்கள் வாழ்வு அல்லது நீங்கள் உணர்ந்த உணர்வு.

இந்த உங்கள் உணர்வின் பகுதி உங்கள் பின்னால் வரும் உங்கள் வழிதேடல் உள்ளவர்களுக்கு  பாதையை காட்டும் விதமாக அமையட்டும்.

உணர்வு தானே எல்லாம்...

பாமக அன்புமணி vs திமுக ஸ்டாலின்...


22.1.2019 அன்று பிரான்சில் பெய்த பணி மழை....



Subscribe the channel for more news...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


உலகெங்கிலும் உள்ள பழங்கால கலாச்சாரங்கள் மத்தியில் பல ஒற்றுமைகள் உள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் கலாச்சாரங்களை எவ்வாறு பண்டைய காலங்களில் ஒன்றிணைய முடியும்? என்பதை பிரதான அறிஞர்கள் கருதுகின்றனர். இது போன்ற பல கூற்றுக்கள் இருந்தபோதிலும், பல தொல்லியல் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சிதறிய பண்டைய நினைவுச் சின்னங்களில் காணப்படுகின்றனர்.

பண்டைய மெக்சிகோவின் லா வெந்தா என்பது பழங்கால ஓல்மேக் நாகரிகம் சார்ந்த ஒரு தொல்பொருள் தளமாகும். ஆர்மேஸ்ஸில், அமெரிக்காவின் முதல் நாகரீக வளர்ச்சியில் ஒல்மேக்ஸ் ஒன்றாக இருந்தது.
லா வெந்தா'வில் உள்ள ஓல்மேக்ஸ்' சிலை அவர்கள் நாகரிகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது.

மெக்சிக்கோவில் பறக்கும் பாம்பு என்பது குக்குல்கான் அல்லது குவெட்ஸால் கொல்ட் என்ற பழங்கால கலாச்சாரம் முழுவதும் அறியப்பட்டது. இந்த கடவுள் பரலோகத்திலிருந்து வந்து, பண்டைய கலாச்சாரங்களுக்கு பெரும் அறிவை வழங்கியவர் என்று சொல்லப்படுகிறது.

'லா வெந்தா' சிலை ஒருவிதமான 'வாகனம்' அல்லது 'நாற்காலியில்' உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உருவம், இயந்திர சாதனத்தை கையாளுவது போல் உள்ளது. முதலில், இது அசாதாரணமான அல்லது வித்தியாசமானதாக இருப்பினும், உலகம் முழுவதிலும் உள்ள தெய்வங்களின் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இந்த பிரதிநிதித்துவங்களை நீங்கள் காணலாம்.

நியூசிலாந்தின் வட தீவில் வாழ்ந்த தேய்கா மாவு என்ற மாவோரி மக்களின்  கடவுள் பூரங்காஹுவாவும் ஆவார்.
மாவோரி புராணத்தின் படி, கடவுள் புராங்கஹுவா அவரது புராணக் குடியான ஹவாக்கிக்கு நியூசிலாந்தில் இருந்து தனது மாயப் பறவையான 'வெள்ளி பறவை' மீது சவாரி செய்து பரலோகத்திலிருந்து பறந்து வந்து மாவோரி மக்களுக்கு அறிவை வழங்கியதாக கூறப்படுகிறது.

பண்டைய மேசோமிகிய நாட்டுப்புற புராணங்களில் கடவுள் பூரங்காஹுவிற்குக் கொண்டிருக்கும் மிருதுவான பாம்பின் சித்திரத்தை நாம் ஒப்பிட்டு பார்த்தால், நாம் ஒரு மர்மமான தொடர்பைக் காண்கிறோம்: இருவரும் ஒரே அடையாளமாக குறிப்பிடப்படுகின்றன. இந்த நாட்டுப்புற கதை வசனத்தில் அவர்;

"அறியப்படாத பூமி என் கால்களுக்கு கீழே இருக்கிறது. நான் வருகிறேன், ஒரு புதிய வானம் என்னைத் தொடுகிறது. அது எனக்கு அமைதியான இடம். இந்த கிரகங்களில் உள்ள ஆவிகள்! என் இதயத்திற்க்கு ஊட்டச்சத்தை அளிக்கிறார்கள். " என்று வருகிறது.!

எகிப்தில் சித்தரிக்கப்பட்ட மற்றொரு ஒரு பண்டைய கடவுளும் பாம்புடன்;
அங்கு, இந்த எகிப்திய கடவுள் ஹபி என்று அழைக்கப்படுகிறார். அவரும் ஒரு மர்மமான பிரதிநிதித்துவங்களுடன் காணப்படுகிறார்.

"தெய்வங்களின் தந்தை" என்று குறிப்பிடப்பட்ட ஹேபி பண்டைய எகிப்திய மதத்தில் நைல் வருடாந்த வெள்ளப் பெருக்கின் கடவுள். இந்த பண்டைய எகிப்திய கடவுள் கருத்தரிமையை அடையாளப்படுத்தினார். இந்த பண்டைய எகிப்திய தேவன் வழக்கமாக நீல அல்லது பச்சை தோலை வெளிப்படுத்துவார், இது தண்ணீரில் பிரதிபலிக்கும்.

அவர் எப்படி சித்தரிக்கப்படுகிறார் என்பதை. மறுபடியும், லா வெந்தா' சிலை உள்ள மிருதுவான பாம்புக்கு ஒரு வித்தியாசமான ஒற்றுமையையும், பண்டைய மாவோரி நாட்டுப்புறத்தில் உள்ள கடவுள் பூரங்காஹுவாவுடனும் ஒற்றுமையுடன் காணலாம்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா பண்டைய கலாச்சாரங்களும் எப்படியோ ஒரு தலைமையின் கீழ் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருந்தனர். என்று சொன்னால் எப்படி இருக்கும்..

உலகில் உள்ள பல பழமையான தளங்களில், அமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் உள்ள வினோதமான ஒற்றுமைகள் வெறும் தற்செயலானதா? அல்லது ஒரு சில புராதன வேற்றுக்கிரக பார்வையாளர்களே உலகெங்கிலும் உள்ள பண்டைய நாகரிகங்களை ஒரு குடையில் நிறுவி ஆதிக்கம் செலுத்தினார்களா...

காது வலி குணமாக...


தனது அடையாளங்களை தொலைத்து கொண்டிருக்கும் தமிழன்...


வேகமாக சுழலும் பூமிக்கு ஈடுக்கொடுத்து மனிதனும் வேகமாக ஓடும் காலம் இது.

நாகரிகம், நவ நாகரிக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.

புதிய நாகரிகம் நல்லது தான். அந்த நாகரிகத்தால் நம்முடைய கலாச்சாரம், மொழி, பண்பாடு, நாகரிகம், விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் காலங்காலமாக கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன்.

இதற்கு உதாரணமாக, நம்முடைய ஒவ்வொரு செயலும் உள்ளது. முதலாவது தமிழன் மாற்ற நினைப்பது மொழியை தான்.

தினம் தினம் புதிதாக முளைக்கின்ற ஆங்கிலவழி பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்க்கின்றான். இதனால், 21-ம் நூற்றாண்டில் எத்தனை மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியும்? என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

குழந்தைகளின் மேல் சூரியக் கதிர்கள் படுவது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆனால், நாமோ நவீன காங்கீரிட் கட்டடங்களுக்குள் காற்றுக் கூட நுழையாதவாறு கட்டிக் கொண்டு வசிக்கிறோம். காற்றே நுழையாத வீட்டிற்குள் சூரிய ஒளி எப்படி வரும்?

அதனால் தான் இன்றைக்கு பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் வந்து மனதை நோகடிக்கிறது.

கைகுத்தல் அரிசியில் பலவகை உணவை உண்ட நாம், இன்று மேல்நாட்டு கலாசார உணவுகளான பீட்சா, பர்கர், ஃபிரைட் சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வாயில் பெயர் நுழையாத உணவுகள் இன்று நம் வாயினுள் நுழைகின்றன.

நம் கலாசாரம் இன்று தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை, கைத்தறி ஆடைகளை மறந்து, நவ நாகரிக ஆடைகளுக்கு மாறி, என்றைக்காவது ஒருநாள் மட்டும் நம் கலாச்சார ஆடைகளை அணிவது, நம் கலாச்சாரத்தை நாமே குழித்தோண்டி புதைக்கும் செயலாகும்.

நாம் உபயோகப்படுத்தின கைவினைப் பொருட்கள் மாறி, இன்று எல்லாம் பிளாஸ்டிக் மயமாகி விட்டது.

பருகும் பானங்களை கூட விட்டு வைக்கவில்லை. உடலுக்கு ஆரோக்கியம் தரும் நுங்கு, இளநீர், மோர், பதநீர் என இயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பானங்களையே பருகுகிறோம்.

இயற்கை குடிநீரை கூட கேன்களில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உருவாகிவிட்டது.

முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை கூட நாம் பாதுகாப்பது இல்லை.

வீட்டை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடிக்கும் போது பழைய பொருட்கள் என்று புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், மருத்துவ குறிப்புகள் என தெருவிலும், குப்பையிலும் தீயிலுமிட்டு எரிப்பது பழைய பொருட்களை மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அடையாளங்களையும் தான்.

இயற்கை மருத்துவ முறைகளை கூட மாற்றி நவீன மருத்துவம் என சம்பாத்தியங்களையும் தொலைத்து நிற்கின்றோம்.

இன்று தமிழன் என்ற போர்வையில் வேறொரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இதே நிலை நீடிக்குமானால், தொன்மையான நமது நாகரிகத்தையும், மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும், வருங்கால நம்முடைய சந்ததிகளுக்கும் கற்று தருவோம். நம் அடையாளங்களை தொலைக்காமல் பாதுகாப்போம்...

வீட்டிலே சாக்லேட் கேக் செய்வது எப்படி.?



வீடியோ பாருங்க...


Subscribe the channel for more Recipes...

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு...


இன்று பல நாடுகள் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.

அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.

3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம் போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது.

எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

இது எப்படி சாத்தியம்?– என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.

ஆம்... எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான் பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.

விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவி டுகின்றன.

அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதில் குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில் தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.

மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.

இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் போது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டாயம் பிரமிக்க வேண்டும்.

நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீச்சுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்விபட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவ கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டு ள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்.

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டி வைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறிய வேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்தது தான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்…

எது எப்படியோ? நமது முன்னோர்கள் நம்மை விட கில்லாடிகள்... எப்படியா ?

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல் அலைந்து  கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு...

தமிழின விரோதி பாஜக மோடியே திரும்பி போ...


அழிந்து வரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்...


அரிக்கன் விளக்கு : காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அம்மி : குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை : ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

அடிகுழாய் : கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

ஆட்டுக்கல் : வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான் : தைக்கும் போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஓட்டியாணம் : பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம் : (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல் : வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உரி : (வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம் : (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கூஜா : (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

கோகர்ணம் : (ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு : ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு : வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி : (இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி : பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி : (குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம் : கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி : (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை : (பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு : மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம் : (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

லோட்டா : நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

மரப்பாச்சி : பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்து கொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்...

பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...


ஒவ்வாமை (அலர்ஜி) வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?


ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் ஒவ்வாமை பிரச்சினையே இல்லை. பொதுவாக ஒவ்வாமையை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட ஒவ்வாமையாக இருக்கலாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம்.

மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.

ஒவ்வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் ஒவ்வாமையால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக ஒவ்வாமையைத் ஏற்படுத்தக் கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது.

இதுதவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் ஒவ்வாமை ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி…

ஒவ்வாமை வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

ஒவ்வாமையை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் வடிசாறு (soup), குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீன் காகிதம் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது இரசாயன மாற்றம் அடைந்து ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது...

போங்கடா நீங்களும் உங்க இந்தியமும்...


வைரம் பற்றிய நாம் அறியாத சில தகவல்....


இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.

இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது. வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்.

அதாவது 5 காரட் 1 கிராம் எடை. சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ? ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட். நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை. வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது. இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது. பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங். வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம். வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ? வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பழுப்பு நிற (brown), சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை, செம்மஞ்சள் நிறமான (orange), இளஞ்சிவப்பு (pink), நீலம், வெளிர்பச்சை, ஊதா வர்ணம் (violet) வர்ணங்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது...

பாஜக எச். ராஜா சர்மா வை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்...


பிரார்த்தனைகள்...


நம் சுய தேவைகளின் ஒலி வடிவமாய் நம் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்.

நம் பிரார்த்தனைகள் யாரால் கேட்கப் பட்டு, எங்கு நிறைவேறுகிறது என சுய விசாரணை செய்ததுண்டா ?

மொழிவழி பிரார்த்தனை மட்டுமே கேட்கப்படும் என்றால் மொழி இல்லா உணர்வு பிரார்த்தனை யார் கேட்பது ?

இயற்கை நம்முள்ளே ஒரு விஞ்ஞான பிரார்த்தனையை தினமும் நடத்திகிறது.

அதற்கு மொழியில்லை. ஆம்...

நம் நுரையீரலின் பிரார்த்தனையில் மூச்சு வரமாகிறது..

கணையத்தின் பிரார்த்தனையில் உணவு இரசாயன சக்தியாகிறது..

இருதயத்தின் பிரார்த்தனையில் இரத்தம் திரவ இயக்கம் பெறுகிறது… 

இது உடலின் அதிர்வு ஒலி இயக்கம்.

உடலின் மொழி வழி இல்லாத கூட்டு பிரார்த்தனைகள் முழுமையாக நிறைவேறும் போது , நம் மொழி வழி பிரார்த்தனைகள் எங்கு செல்கின்றன ?

நம் பிரார்த்தனைகள்,  நம் குரல்கள் நம்முள்ளே மறுசுழற்சியில் கேட்கும் ‘ஒலி நிகழ்வு விஞ்ஞானம்’ .

நம் அழுத்தமான குரல் வடிவம் மூளையில், மொழி அதிர்வு தூண்டுதல் பெற்று மொழி கவரும் அலைகளய் காற்றிலே பரவும்; ஒப்புடைய மொழி அதிர்வுள்ள மாற்று மனிதர்களோடு கலக்கும்.

சுய விசாரணை பகுதி நம்முள் இருந்தால் வரம் நமக்குள்ளும் சுரக்கும்.

மனிதர்களில் நிகழும் ஒலி அதிர்வு விஞ்ஞான விளைவுகள் தான் வரங்களாக நமக்கு மாற்று மனிதர்களிடமிருந்தும் கிடைக்கிறது.

பிரார்த்தனைகள் நம்மில் தொடங்கி நம்மில் முடியும் ஒரு ஒலி அதிர்வு விஞ்ஞான கிரியை...