25/05/2017
பூமியின் (அ)பூர்வ கதை - 5...
பூமியின் 460 கோடி ஆண்டு வரலாற்றில் கோடி கணக்கான சம்பவங்கள் நிகழ்வுகள் நிரம்பி கிடக்கின்றன.
ஆனால் அதில் மிக முக்கியமான விரல் விட்டு என்ன கூடிய நிகழ்வில் ஒன்று பூமியின் முதல் உயிரினம் உண்டான நிகழ்வு.
பூமியில் முதல் உயிரினம் எப்படி வந்தது என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல கோட்பாடுகள் உண்டு. அது பூமியில் தோன்றவே இல்லை என்று சொல்லும் கோட்பாடுகளும் உண்டு. இந்த கோட்பாடு படி உயிரினங்கள் உண்டாக காரணமான அடிப்படை உயிர் துகள்கள் பூமிக்கு ஆஸ்ட்ராய்ட் கற்கள் மூலம் வந்து சேர்ந்து இங்கு பரவியது என்று சொல்கிறார்கள்.
ஏலியன்கள் வந்து நம்மை இங்கு உண்டாக்கி விட்டு விட்டு சென்றார்கள் என்ற கோட்பாடும் கூட சொல்ல படுவது உண்டு.
பல வகை தியாரிகளில் எது உண்மை என்று யாராலும் மிக சரியாக இன்று வரை சொல்ல முடிய வில்லை என்றாலும்..
பொதுவாக இன்றைய விஞ்ஞாண உலகம் ஏற்று கொண்டுள்ள கோட்பாடை அடிப்படையாக கொண்டு நான் சொல்கிறேன்.
அந்த கோட்பாடு பெயர் Primordial soup theory....
இந்த கோட்பாடு சொல்ல வருவது இது தான்....
முதல் உயிரி காலகட்டமான இன்றைலிருந்து 380 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் வளிமண்டலத்தில் பிராணவாயு இருந்து இருக்க வில்லை. அங்கே இருந்தது எல்லாம் மீத்தேன், நீராவி, ஹைட்ரஜன்,மற்றும் அமோனியா தான்.
இந்த வாயுக்களின் கலவையில் நைட்ரஜன் மற்றும் உயிர்களுக்கு அடிபட யான கார்பன் கலந்தே இருந்தது.
இவைகளை ஒரு குறிப்பிட்ட வகையில் கலந்து வரிசைப்படுத்தி மாற்றி அமைத்து கலக்கினால் இவைகளால்
அமினோ அமிலங்களை உண்டு பண்ண முடியும். இந்த அமினோக்கள் தான் செல்களில் புரோட்டீன் என்ற ஒன்றை உற்பத்தி செய்ய கூடிய புள்ளி. அந்த புரோட்டீன் என்பது என்ன ? நாம் பார்க்கும் உயிரினங்களின் உடல்கள் இந்த புரோட்டீங்களால் ஆனது தான் அதாவது புரொட்டினால் உடலை உண்டு பண்ண முடியும்.
எனவே மேற்கண்ட கலவைகள் ஒன்று சேர்ந்து அமினோ அமிலங்கள் கொண்ட சூப் ஒன்றை உற்பத்தி செய்தது. அந்த உயிரியல் சூப் க்கு பெயர் தான் பிரிமார்டியல் சூப் மேற்கண்ட வாயு கலவைகள் ஒன்று சேர்ந்தாலே இப்படி ஒரு சூப் உண்டாகி விடுமா அதில் அமினோ.... ஆர். என் .ஏ..மற்றும் டி. என். ஏ கள் கிடைத்து விடுமா என்றால் அப்படி இல்லை.
அந்த சூப் கலவை மிக மிக மிக தற்செயலாக உண்டான தனி தன்மையான மிக மிக அரிதான ஒரு தற்செயல் கலவை என்கிறார்கள்.
அவைகள் மிக சரியாக கலந்து உயிரியல் சூப்பை உண்டாகியது மிக மிக தற்செயலானது என்கிறார்கள். அது உருவாக சரியான சுற்று சூழல் சரியான வளிமண்டல அழுத்தம் சரியான வெப்பம்... போன்ற சங்கதிகளை மிக சரியாக கலந்து இருக்க வேண்டும். ஆனால் இவைகள் மிக மிக தற்செயலாக உண்டான ஒன்று என்கிறார்கள்.
அப்படி நடக்க வாய்ப்பு சதவீதம் என்று பார்த்தால் பல கோடி கோடி யில் ஒன்று என்கிறார்கள்.
ஒரு உதாரணத்திற்கு ஒரு ஓவியன் வரையும் ஒரு பெண்ணின் ஓவியத்தை எடுத்து கொள்ளுங்கள் . அந்த ஓவியம் எண்பது என்ன .அது காகிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவு வண்ணங்களை பூசுதல் அல்லவா... அதாவது காகிதத்தில் ஆங்காங்கே சில வண்ணங்கள் வைக்க பட்டுள்ளது.
ஆனால் எது எங்கே இருக்க வேண்டும் என மிக சரியான இடத்தில் வண்ணங்கள் தொட்டு வைக்க பட்டுள்ளது அல்லவா. ஒரு பேச்சுக்கு வண்ண குவலையை நீங்கள் ஒரு வெள்ளை தாளின் மேல் வீசி எறிகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் இப்போதும் கூட வண்ணங்கள் ஆங்காங்கே பட்டு கொண்டி தான் இருக்கும் ஆனால் அதில் ஓவியம் ஏதும் இருக்காது. ஒரு பேச்சுக்கு நீங்கள் வீசிய வண்ண கலவை மிக மிக தற்செயலாக முன்பு பார்த்த பெண் ஓவியம் போன்றே அமையும் படி வண்ணங்கள் அந்த தாளில் அங்கங்கே சரியான இடத்தில் சிதர்வுற்று இருந்தால் எப்படி இருக்கும்..?
அப்படி ஒரு தற்செயலுக்கு கிட்ட தட்ட வாய்ப்பே இல்லை எனும் அளவு மிக மிக மிக மிக குறைந்த வாய்ப்பே உள்ளது அல்லவா அப்படி ஒரு குறைந்த வாய்ப்பில் உண்டானது தான் அந்த சூப்...
சரி சூப் ரெடி இதில் உயிரிகள் வந்து விடுமா? என்றால் இந்த உயிரியல் சூப் வெறும் உடல் மட்டும் தான் அதில் உயிர் எனும் ஆற்றல் உண்டானது அதில் மின்னல் பாய்ந்து தான் என்கிறார்கள். (அடுத்த தற்செயல்).
அப்படி மின்னலால் சக்தி ஊட்ட பட்ட சூப் தனக்குள் ப்ரோகிரியாடிக் தன்மை கொண்ட துகளாகவும் பிறகு ஒரே ஒரு செல் கொண்ட ஒரு ஒற்றை உயிரினமாக... பாக்டிரியா வாக முதல் முதலாக வடிவம் எடுத்தது. அந்த பாக்டிரியாதான் ஒட்டு மொத்த உலக உயிரினங்களில் கொள்ளு கொள்ளு கொள்ளு தாத்தா.
உயிர் தோற்றம் பற்றிய பல்வேறு மாற்று கோட்பாடுகள் கொண்டவர்கள் கூட சில விஷயங்களில் மாற்று கருத்து இன்றி ஒன்றி போகிறார்கள். உதாரணம் முதல் உயிரினம் உண்டானது நிலத்தில் அல்ல நீரில் தான். முதல் உயிரினமாக முதல் முதலில் உண்டானது ஒரு செல் உயிரினங்களான பாக்டிரியா தான் போன்று.....
அந்த பாக்டிரியாகள் செய்த முதல் நல்ல காரியம் அவைகள் சூரிய ஆற்றலை நேருக்கு நேர் உள்ளே இழுத்து கொண்டு ஒளிச்சேர்க்கை செய்ததும் அந்த நிகழ்வில் ஆக்சிஜனை வெளியே விட்டதும் தான்.
படி படியாக ஆக்சிஜனை வளிமண்டலத்தில் பெருக்கும் வேலையை அவைகள் செய்தன.
உயிருள்ளவை உயிரற்றவை என்று பொருட்களை நாம் பிரிக்க உதவும் மிக பெரிய அளவுகோல் எது தெரியுமா... உயிருள்ளவை காண இலக்கணம் எது தெரியுமா? எதன் செல்கள் தன்னை போலவே பிரதி எடுக்கும் தன்மை வாய்ந்ததோ அப்படி பிரதி எடுக்கும் போது மூல உயிரின் தகவலை கடத்த முடிகிறதோ அவைகள் தான் உயிர்கள்.
செல் களில் உள்ள RNA செய்யும் வேலை பிரதி எடுத்தல் தான். DNA செய்யும் வேளை அந்த தகவலை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது தான்.
இதில் செல் பிரிதலில் தன்னை போலவே பிரதி எடுப்பதில் சிறு பிழை ஏற்பட்டு அடுத்த தலைமுறை கொஞ்சம் மாற்றங்களை சந்தித்து வேறு உயிரினமாக பரினமிக்க முடிவதன் பெயர் தான் ஜீன் மியூடியேஷன்.
இன்று ஒரு செல் உயிரியிலிருந்து மரம் செடி கொடி...ஊர்வன பறப்பன... பாலூட்டி... பூச்சி புழு.. குருவி டைனோசர்.. புல்.. பூண்டு.. குரங்கு மனிதன்.. மீன்.. நீ.. நான்.. என்று பல கோடி கணக்கில் வகை வகையான உயிரினங்கள் பரினமிக்க காரணம் இந்த ஜீன் மியூடியேஷன் என படும் செல் பிரிதலில் ஏற்பட்ட தவறு தான். எனவே இதை மிக சரியாக ஏற்பட்ட 'தவறு ' என்று அழைக்கலாம்.
முதன் முதலில் கடலில் உண்டான ஆக்சிஜன் உடனே தப்பி சென்று வளிமண்டலத்தில் கலந்து விட வில்லை அதற்க்கு முன் அவை ஒரு விசித்திர காரியத்தை செய்தது. இன்று நாம் கட்டும் ராட்சத கட்டிடங்கள்... ரயில்கள்.. பாலங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இவைகள் எல்லாம் சாத்திய படுவது அந்த விசித்திர காரியத்தால் தான். அதாவது பாக்டிரியா உண்டாக்கின ஆக்சிஜன் கடல் நீரில் எக்க சக்கமாக கலந்திருந்த ஒரு சமாச்சாரத்தால் ஈர்க்க பட்டது அந்த சமாச்சாரம் இரும்பு.
இரும்பும் ஆக்சிஜனும் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியும் துறு பிடித்தல் . அந்த துறு பிடித்தல் நிகழ்வில் கடல் நீரில் கலந்த மொத்த இரும்பும் பூமி படுக்கையில் இரும்பாக படிய தொடங்கியது. இந்த வேதி நிகழ்வு தொடர்ந்து பல காலத்திற்கு நிகழ்ந்து பின் ஒரு கட்டத்தில் இனி துறு பிடிக்க... வேதி வினை புரிய இரும்பு இல்லை என்ற நிலைக்கு வந்த பின் தான்..... ஆக்சிஜன் முதன் முறையாக தப்பி சென்று வளிமண்டலத்தில் கலந்தது.
இந்த நிகழ்வு பூமியின் சூழலை என்றென்றைக்குமாக வெகுவாக மாற்றி அமைத்தது.
அவை மாற்றி அமைத்த நிகழ்வுகள் செய்த மாற்றங்கள் மிக பிரமிப்பானவை.. மிக விசித்திரமானவை. பூமியின் மொத்த விளையாட்டை மாற்றி அமைந்தவை இந்த ஆக்சிஜன்.
அந்த விசித்திரங்கள் அடுத்த அத்தியாயத்தில்...
- பூமி இன்னும் சுழலும்.....
பாஜக மோடி ஆட்சியின் 3 ஆண்டுகளின் வேலை வாய்ப்பின் நிலை...
ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பு என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் ஜம்பமடித்தவர்கள் அதை நோக்கி என்ன செய்தார்கள்? என்று கேட்டால்...
பாஜகவினர் ‘மேக் இன் இந்தியா’ ‘ஸ்கில் இந்தியா’ ‘ஸ்டார்ட்டப் இண்டியா’ என்று திட்டங்களின் பகட்டான பெயர்களைச் சொல்வார்கள்.
பெயர் தான் பெத்த பேரு, தாகத்திற்கு எங்கே நீரு??
கடந்த ஓராண்டில் மட்டும் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு 2.3 லட்சம். அதுவும் சமூகப் பாதுகாப்பான வேலைகள் அல்ல. மேலும் கல்வி, சுகாதாரம் என்ற இரு துறைகளில் தான் வேலைகள் உறுவாக்கப்பட்டுள்ளன.
எந்தத் துறையை தங்களின் முன்னுரிமைத்துறை என்று அறிவித்தார்களோ, அங்கே தான் இந்த நிலைமை.
கிராமப்புற வறுமை அதிகரிக்கிறது, விவசாய விலைபொருட்களுக்கு விலையில்லை. 4.65 குடும்பங்களுக்கு ஊரகவேலை உறுதித் திட்டத்தில் வேலை தேவைப்பட்டது - மோடி ஆட்சியின் முதல் ஆண்டில், அடுத்த ஆண்டில் இது 15 சதவீதம் அதிகரித்தது. சென்ற ஆண்டில் மேலும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
விண்ணப்பிக்கும் குடும்பங்களில் சுமார் 11 சதவீதம் பேருக்கு வேலை கொடுப்பதை அரசு மறுத்திருக்கிறது. 58 லட்சம் குடும்பங்கள், வேலை கேட்டு மீண்டும் வந்திருக்கின்றனர்.
இப்படித் தான் இருக்கிறது ஊரக வேலை நிலமைகள்.
உற்பத்திசார்ந்த வேலைகள் கவலையளிக்கின்றன. செல்லா நோட்டு அறிவிப்பினால் சுமை மேலும் அதிகரித்துள்ளது.
15-29 வயதில் உள்ள இளைஞர்களில் 30 சதவீதம் பேர் வேலையற்று இருப்பதாக சொல்கிறது ஆய்வு.
வேலைவாய்ப்பு உருவாக்கும் துறைகளுக்கு வங்கிக் கடனும் கிடைப்பதில்லை. சிறு குறுந் தொழில்களுக்கு மிகக் குறைந்த கடனே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் திட்டமிடாத இந்த அரசின் பார்வையைக் காட்டுகிறது.
நிரந்தர மூலதன உருவாக்கம் 6.1 சதவீதமாக இருந்தது தற்போது 0.6 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதாவது கார்பரேட் நிறுவனங்கள் புதிய உற்பத்திகள் எதிலும் முதலீடுகளை மேற்கொள்ளவில்லை.
வேலை வாய்ப்பை உருவாக்க முதலீடு செய்வோரும் முயலவில்லை. அரசும் அதனை கவனிக்கவில்லை. சலுகைகளை மட்டும் அள்ளிக் கொடுக்கிறார்கள்.
வேலையிழப்பு வளர்ச்சி என்பதும், அதுபற்றி கவலையற்ற அரசாங்கம் என்பதே நாம் இப்போது பெற்றுள்ள மோடி அரசு...
நன்றி - சவேரா
சீத்தாப்பழம்...
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது..
சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும்.
இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்..
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்...
இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் இறுதி பகுதி...
இப்படி மாற்றப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பும் அதற்கான பொருளுதவியும் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வேலையில் மார்க்சுக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர் அடிமை வியாபாரம் செய்து பெரும் புள்ளியான Jean Lafitte-Laflinne.
இந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் செய்ததெல்லாம் நவீன இலுமினாட்டி குழுவைத் தோற்றுவித்த Adam Weishaupt மற்றும் Clinton Roosevelt ஆகியோருடைய புதிய உலக அதிகாரத்திற்கான திட்டத்தை பாட்டாளி வர்க போராட்டம் என்கிற போர்வையில் விரிவுப்படுத்தியது தான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வகையில் இலுமினாட்டியின் கொள்கையான புதிய உலக அதிகாரத்தை அடிப்படையாக கொண்ட சோசலிசக் கொள்கையை வளர்த்தெடுத்த Francois Noel Babeuf (1760-1797) - யின் கொள்கைகளையும் தன்னுடைய அறிக்கையில் மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.
இதுவே கம்யூனிசமும் சோசலிசமும் இலுமினாட்டிகளின் மறைமுக குறியீடுகளாகப் மாற்றப்பட்ட விதம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கு அடுத்து வருவது மார்க்ஸ் குறித்த தனிப்பட்ட விவரிப்புகள்.
இவைகளை நிச்சயமாக எந்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.
அதிலும் தமிழர்களைப் போன்ற தலைமை பிம்ப வழிபாடு கொண்ட தோழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்..
இருந்தாலும் மாற்று கருத்தையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே அவருடைய இரகசிய மறுபக்கம் என்று குற்றம் சாட்டப்படும் விசயத்தைப் பார்க்கப் போகிறோம்.
இனி நீங்கள் படிக்கப்போவது உங்களுக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கலாம்..
மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்த எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.
மார்க்சு குறித்த அனைத்து வாழ்க்கை வரலாற்று புத்தகங்களும் அடிப்படையாக சொல்லும் விசயம் அவர் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தார் என்பதும் அவருடைய குடும்ப பொருளாதார தேவைகளை அவருடைய நெருங்கிய நண்பர் ஏங்கல்சே கவனித்துக் கொண்டார் என்பதும்.
ஆனால் இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள் அது திட்டமிட்டே கட்டமைக்கப்பட்ட பொய் என்கின்றன..
மார்க்சுக்கு எந்த வகையிலும் பொருளாதார இக்கட்டு ஏற்படாமல் இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் ஆடம்பரமாக வாழ்வதற்கு பொருளாதார உதவிகள் செய்தது Nathan Rothschild (ஜெர்மனியின் பாகாசுர வங்கி குழுமத்தின் தலைவர்) என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சின் நெருங்கிய சகாவாக இருந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்ற Mikhail Bakunin தன்னுடைய புத்தகமான Polemique contre les Juifs (Polemic Against the Jews)-ல். சாத்தானிய வழிபாட்டு கூறுகளான கட்டுக்கடங்காத குடியும், ‘இன்னப்பிர’ சமாச்சாரங்களும் அவரிடம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மார்க்சின் கம்யூனிச காம்ரேட் சகாக்களில் ஒருவரும் சாத்தானிய வழிபாட்டாளருமான Giuseppe Mazzini அவரைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார்…..
"His heart bursts rather with hatred than with love towards men……. a destructive spirit.”
இந்தவரிசையில் அடுத்து வருபவர் அவருடைய உதவியாளர் Karl Heinzen.
(சந்தேகம், சாப்பாட்டிற்கே மார்க்சுக்கு எப்படி உதவியாளரை வைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுப்படியானது)
Karl Heinzen தன்னுடைய புத்தகத்தில் மார்க்ஸ் கர்வம் பிடித்தவர் என்றும் தன்னுடைய பேச்சின் மூலம் பிறரிடம் காரியம் சாதித்துக் கொள்ளக் கூடியவர் என்றும் பிறர்தன் மேல் வைக்கும் நம்பிக்கையை வெகு அலட்சியப்படுத்துவார் என்றும் தனக்கு ஆகாதவர்களை ‘அழித்து விடுவேன்’ என்று மிரட்டும் வழக்கம் உடையவர் என்றும் குறிப்பிடுகிறார்.
மார்க்ஸ் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.
அவருடைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் குறித்து அவருடைய சர்வாதிகார போக்கு குறித்தும் யார் விமர்சனம் வைத்தாலும் அவர்களை தன்னுடைய எழுத்துக்களில் வகை தொகையின்றி தாக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர்களாக காட்டப்படுவது Dr Ludwig Kugelmann மற்றும் Bakunin.
மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்த அவரே அவரை சுற்றி இருந்தவர்களை தன்னுடைய பேச்சாற்றளால் சுரண்டினார் என்றும் சொல்லப்படுகிறது.
போதுமடா சாமி என்று நிருத்திவிட்டேன்.
இவைகள் முதலாளித்துவத்தின் சதி வேலையா அல்லது யூத எதிர்ப்பு உள் குத்தா..
கம்யூனிசத்தின் இறுதி வெற்றிகளும் சொல்லி வைத்தார் போல சர்வாதிகாரத்தின் படிகளையே காட்டும் வரலாற்றின் உதாரணங்களையும் உதாசீணப் படுத்துவதற்கில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் சமாதானம்...
யார் இந்த வந்தேறி தெலுங்கர் திமுக கருணாநிதி…..
ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர் தான் இந்தக் கருணாநிதி…
இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.
தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் தட்ஷணாமூர்த்தி என்பதாகும்.
இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.
இவராக வைத்துக் கொண்ட கருணாநிதி என்பதும், சமற்கிருதப் பெயரே..
‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும்.
ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.
கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.
திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.
தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.
தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.
ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.
ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.
தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.
தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..
சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.
தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கனை இனி தமிழனை ஆள வைப்பது தவறு…
தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...
அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட 'திராவிடம்' என்ற மாயவலை மற்றவர்களுக்கு (கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டதுபோல்...
திரைத்துறையில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட...
இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....
தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட
களம் நிற்போம்...
தமிழ் வரலாற்றின் உச்சம் தெரியாததன் விளைவு.....
இன்று ஜெய் ஹிந்த்..க்கு சோடை போகின்றனர் தமிழரில் சிலர்.
உலகிற்கே முன்னோடியான ஒரு அறிவார்ந்த சமூகத்தை.... குமரிக்கண்டத்தைப் பற்றிய ஆய்வில்கூட அயலாரின் பெரும்பங்கு நமக்கு தேவைப்படுகிறது.
இத்தகைய ஆய்வுகளை இந்திய அரசு மறைமுகமாக தடுத்துவருவது இன்னொரு வரலாறு....
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத் தலைவர்களாய் பரிணமித்தவர்கள் சமூக - அரசியல் தளத்தில் தங்களை (பெரும்பாலும் மரபுவழி வேற்று மொழிக்காரர்களாக இருந்தமையாலா….) நிலைநிறுத்திக் கொள்ள வேண்டி, தமிழ், தமிழின வளர்ச்சியை அடகுவைத்தும், அலட்சியப்படுத்தியும், தாழ்த்தியும் திசைதிருப்பியும் வந்ததே இன்றைய தமிழின் – தமிழனின் நிலைக்கு காரணம்...
பாலூட்டிகளைத் தெரியுமா?
உலகில் 4 ஆயிரம் பாலூட்டி வகைகள் உள்ளன. பாலூட்டிகளில் நிலத்தில் வாழ்பவையும் உண்டு. நீரில் வாழ்பவையும் உண்டு. பாலூட்டிகளுக்கு பொதுவான சில பண்புகள் உள்ளன.
பாலூட்டிகள் அனைத்தும் முதுகெலும்பு உயிரிகள்.
வெப்பரத்தப் பிராணிகள். பூமியில் உள்ள எந்த தட்பவெப்பத்துக்கும் ஏற்ப தங்கள் உடலை அவை தகவமைத்துக்கொள்ளும் சக்தி படைத்தவை.
பாலூட்டிகளுக்கு உடலில் ரோமம் காணப்படும்.
பாலுட்டிகள் என்ற பெயருக்குத் தகுந்தாற்போல, குட்டிகளுக்குத் தரும் பாலை தமது உடம்பிலேயே உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. அத்துடன் குட்டிகள் வளரும்போது, உயிர் வாழ்வதற்கு ஏற்ற திறன்களையும் பாலூட்டிகள் பயிற்றுவிக்கும்.
உலகின் சிறிய பாலூட்டி - பம்பிள்பீ வௌவால், ஒரு அங்குல நீளமும்,
2 கிராம் எடையும் கொண்டது.
தாய்லாந்து மற்றும் பர்மாவில் உள்ள சுண்ணாம்புக் குகைகளில் வாழ்கிறது. எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியது.
பெரிய பாலூட்டி - நீலத்திமிங்கலம்,
உலகிலேயே பெரிய பாலூட்டி மற்றும் விலங்கினம். 110 முதல் 176 டன் எடை கொண்ட உயிரினம். 20 முதல் 30 மீட்டர் நீளமுடையது. ஒரு பேஸ்கட் பால் மைதானத்தின் அளவு பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம்...
தேவிகுளம் பீர்மேடு பிரச்சனையில் காயிதே மில்லத்...
பெருமகனார் காயிதே மில்லத் 24.12.1955 அன்று மக்களவையில் ஆற்றிய உரை...
நான் ஒரு தமிழன். எனது தாய்மொழி தமிழ்.
தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை. அதே போல கேரளாவிலும் எல்லைப் பிரச்சினை.
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை.
அப்பகுதியில் தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மை.
ஆனால் சமஸ்தான அரசாங்கம் வேறுவிதமாக கூறுகிறது.
தமிழ் பேசுபவர்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் இல்லை என்றும், வந்து போகக் கூடியவர்கள் என்றும் கூறுகிறார்கள்.
கடந்த தேர்தலின் போது தமிழ் பேசுபவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். அன்றாடம் வந்து போகிறவர்கள் என்றால் எவ்வாறு வாக்களிக்க முடியும்?
தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதி.
தமிழ்நாட்டை ஒட்டியே அது இருக்கிறது.
தமிழர்களே அங்கு பெரும்பான்மையாக வாழவும் செய்கிறார்கள்.
எனவே இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். அதுவே நியாயம்..
இத்தனைக்கும் அவர் அப்போது 'அகில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்' தலைவர்.
அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த இசுலாமியர்களின் தலைவர்.
இதையெல்லாம் மீறி தன் இனத்திற்காகவும் மொழிக்காகவும் குரல்கொடுத்த தூய தமிழன் தான் காயிதே மில்லத் எனும் முகமது இஸ்மாயில்.
அதே போல் இந்தி தேசியமொழி என்றால் காகத்தை தேசிய பறவையாக அறிவிக்க வேண்டியது தானே? என்று கூறியவர் அண்ணாதுரை கிடையாது காயிதே மில்லத் அவர்கள் தான்...
Subscribe to:
Posts (Atom)