10/01/2021
பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...
உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்.
பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.
அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.
பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி. நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
பொருள்:
அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.
விளக்கம்:
அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர். பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும். அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.
மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.
ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும். நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...
அற்புதமான பிரபஞ்ச சக்தி...
பிரபஞ்சம் என்றால் என்ன?
இந்த உலகம், மற்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் எல்லாம் சேர்ந்ததுதான் இந்த பிரபஞ்சம் ஆகும்.
கற்பனைக் கெட்டாத விஸ்தாரணம் இந்த பிரபஞ்சம். எளிதாக புரிந்து கொள்ளுவதற்காக ஆகாயத்தை நாம் பிரபஞ்சம் என்று கொள்ளலாம்.
எல்லா நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி இருப்பது வானம் தானே. அந்த ஆகாயம் எவ்வளவு சக்தி மிக்கதாய் இருந்தால் அத்தனை எடையுள்ள நட்சத்திரங்களையும், கோள்களையும் தாங்கி நிற்கும்?
அது தான் பிரபஞ்ச சக்தி (Cosmic Energy) எனலாம். கடவுள் என்றும் கூறலாமே.
பிரபஞ்ச சக்தி மகத்துவமானது. அபரிதமானது. மேலும் நாம் அதை இலவசமாக பெறலாம்.
ஆனால் எத்தனை பேர் அந்த பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறோம்?
மிக மிகக் குறைவான மக்களே பிரபஞ்ச சக்தியின் பெருமைகளை அறிந்திருக்கின்றனர். வெகு சிலரே பிரபஞ்ச சக்தியைப் பெற்று பயன் பெறுகின்றனர். பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?
தியானம் மூலமே நாம் பிரபஞ்ச சக்தியை உறிஞ்ச முடியும். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்யும் போது நாம் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு பெற முடியும். அந்த சக்தியை நாம் உள் வாங்கவும் முடியும். பிரபஞ்ச சக்தியை நாம் உள் வாங்கும் போது நம் உடலில் உள்ள நோய்கள் நீங்கும். மனம் உறுதி பெறும். நினைத்ததை சாதிக்க முடியும். மன உளைச்சல் நீங்கும்.
நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை தியானம் பண்ணும் போது திறக்கும். அப்பொழுது பிரபஞ்ச சக்தி நம் உடலில் பாயும். நம் வாழ்க்கை வெற்றிகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாறும்.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதற்குப் பதிலாக இலவசமாக கிடைக்கும் பிரபஞ்ச சக்தியை தியானம் மூலம் பெற்று பயன் பெறலாமே?
இதயத்தின் நண்பன் சிவப்பு முள்ளங்கி...
வேர் விட்டு வளரும் காய்கறிகளில் ஒன்றான சிவப்பு, மஞ்சள், வெள்ளை, முள்ளங்கிக்கு பல்வேறு சிறந்த குணங்கள் உள்ளன. அதன் ஆரோக்கிய பலன்கள் பல்வேறு வகையிலும் உடலுக்கு நன்மை தருகின்றன.
முள்ளங்கியை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று மூன்று வகையாக பிரிக்கலாம்.
மாரடைப்பை தடுக்கவும், இதயம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கவும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியும், கண் பார்வைக்கு உதவியும், எலும்புகள் மற்றும் தோலை நலமுடன் வைத்திருக்கவும் சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது.
ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.
புற்றுநோய் தடுப்பு...
சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.
சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட் ஆகியவை டியுமர்கள் உடலில் வளருவதை தடுக்கின்றன.
சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும்.
உறுதியான எலும்பு...
ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் ரியூமடாய்டு ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உணவில் போதுமான அளவிற்கு சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வேர் விட்டு வளரும் காய்கறியில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.
பார்வைக்கு பலம்...
தினசரி உணவில் சூப் மற்றும் சலாட் போன்று பல்வேறு வழிமுறைகளில் நீங்கள் சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும்.
லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி பார்வைக்கு மிகவும் பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது.
இந்த தாவரத்தில் உள்ள கேட்டெனாய்டு கண்களின் நலனை பராமரித்து, கண் நோய் மற்றும் மக்குல் டிஜெனரேஷன் ஆகியவை ஏற்படாமல் தவிர்க்கும் குணம் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு பலமூட்டுதல்...
உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் சிவப்பு முள்ளங்கி பெரும்பங்கு வகிக்கிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அதனை முறையாக பராமரிக்கிறது.
சிவப்பு முள்ளங்கியில் உள்ள பீட்டா-கரோட்டின் உடல் ஆரோக்கியமான மெம்பெரென்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மேலும், இதிலுள்ள பொட்டாசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகள் முறையாக செயல்பட உதவுகிறது.
எடை குறைப்பு...
நீங்கள் எடையைக் குறைக்க முயற்சி செய்தால் சிவப்பு முள்ளங்கியை அதற்காக தேர்ந்தெடுக்கலாம்.
குறைவான கலோரிகளை உள்ள இந்த தாவரத்தை உண்டு பசியை நிறைவடையச் செய்யவும் மற்றும் எடையைக் குறைக்கவும் முடியும்.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலமைப்பை கட்டுப்படுத்துகின்றன.
எனவே சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு இடுப்பு அளவை குறைக்க தொடங்க இதுதான் சரியான தருணம்.
ஆஸ்துமாவிற்கு நிவாரணம்...
நீங்கள் ஆஸ்துமா நோயாளியாக இருந்தால் உணவில் சிவப்பு முள்ளங்கி முள்ளங்கியை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த காய்கறியில் உள்ள எரிச்சலைத் தடுக்கும் குணமும், ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்களும் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணம் தருகின்றன.
தொடர்ச்சியான சிவப்பு முள்ளங்கியை சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆஸ்துமா பறந்து போய் விடும்.
தோலுக்கு நண்பன்...
பிற நோய்கள் மட்டுமல்லாமல் தோல் சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்க சிவப்பு முள்ளங்கி உதவுகிறது.
சிவப்பு முள்ளங்கியை சாறாக பிழிந்து தினமும் குடித்த வந்தால் வறண்ட சருமம் மற்றும் தழும்புகள் போன்றவற்றை தோலிலிருந்து விரட்ட முடியும்.
சிவப்பு முள்ளங்கி சாறுடன், கேரட்டை கலந்த அதன் சுவையைக் கூட்ட முடியும்.
இரத்த அழுத்தத்திற்கு மருந்து...
நீங்கள் இரத்த அழுத்தத்தை நிலைநிறுத்த விரும்பினால், சிவப்பு முள்ளங்கி உங்களுக்கான காய்கறிகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்த மிகவும் உதவுகின்றன.
மேலும் எலும்புகளுக்கும், இதயத்திற்கும் நன்மை செய்யும் தன்மையை மக்னீசியம் கொண்டிருக்கிறது...
மனிதன் எத்தனை வகை...
மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்...
1.Introverts : மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..
2.Extroverts : எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.
3.ambiverts : மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.
மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்...
தைல புத்தி : ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.
கிரத புத்தி : நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால் சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி : விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பது போல வரும் போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும் போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.
களி மண் புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது...
ஒருநாள் இந்நிலை மாறும். களமும், காலமும் எங்கள் கைகள் வரப்பெறும். மீண்டெழுவோம் - சீமான்...
தமிழகத்தில் திருட்டு திமுக தெலுங்கர்கள்... சிங்களவனுக்கு கல்வெட்டு வைத்திருக்கிறது அதை உடைத்தெறிங்கள்...
டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி...
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 9 கிலோமீட்டர் நீளமுடைய எரிகல் ஆனது மெக்ஸிக்கோ நாட்டின் யுகாடான் தீபகற்பத்தில் மோதியது. பூமி கிரகத்திற்கு நேர்ந்த அந்த துரதிருஷ்டவசமான நிகழ்வில் இருந்து தான் டைனோசர்கள் இன அழிவானது தொடர்ச்சியான முறையில் அரங்கேறியது.
பூமி கிரகத்தின் திருப்புமுனையாக அமைந்த அந்த எரிகல் மோதலில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அந்த மோதலில் மிஞ்சிய எரிகல் பாகங்கள் பற்றிய ஆய்வுகள் சாத்தியமில்லாமல் போனது ஏனெனில் மோதல் நிகழ்ந்த இடத்தின் பெரும்பாலான பிராந்தியம் மிகவும் இறுக்கமாக எண்ணெய் தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இருப்பினும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்கள் மோதல் எரிகல் மோதல் நிகழ்ந்த இடத்தை தோண்டி ஆராய அனுமதி கிடைத்தது அங்கு இருந்து தான் டைனோசர் மீட்டெடுப்பு கதை மீண்டும் பலமாக ஆரம்பமாகிறது.
பூமி கிரகத்தில் விழுந்த அந்த எரிகல் ஆனது சுமார் 180 கிலோமீட்டர் விட்டம் மற்றும் 20 கிலோமீட்டர் ஆழமுள்ள பெரும் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது, அது சிக்சுலப் பள்ளம் (Chicxulub crater) எனப்டுகிறது.
அந்த பள்ளமானது முதல் முறையாக டைனோசர்கள் சார்ந்த ஆய்வுகளுக்காக தோண்டப்பட இருக்கிறது, இது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய படிம கண்டுபிடிப்பு ஒன்றின் மூலம் டைனோசர் மீட்டெடுப்பு புரட்சி ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஏவியன் : கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தொன்மம் ஆனது ஏவியன் வகை டைனோசர்கள் அதாவது பறவை வகை டைனோசர்களின் பற்றிய பெரிய அளவிலான புரிதல்களை வழங்கியுள்ளது.
எரிகல் மோதலில் பெரும்பாலான டைனோசர்களின் இனம் அழிந்துவிட, தப்பிப்பிழைத்த சில இனங்களின் மூலம் உருவாகிய உயிரினங்கள்தான் தற்போது நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பறவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான ஒரு பரிணாம வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதை நன்கு ஆராய்ந்த சிலி நாட்டு ஆராய்ச்சியாளர்கள், கோழிகளை பயன்படுத்தி ஏவியன் வகை டைனோசர்களை மீட்டுக்க முடிவு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வழக்கமான கோழிகள் மரபணுக்களில் சில எவியன் வகை டைனோசர்கள் போன்ற மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன அதாவது கோழிகளின் கால்களில், டைனோசர்களின் கால் எலும்பு போன்ற ஒன்றை உருவாகியுள்ளனர்.
அதேபோன்று மற்றொரு ஏவியன் வகை டைனோசர் ஆன ப்கயோஸ்டைலியன்ஸ் (Pygostylians) என்ற இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவைகளை ஆராய்ந்து தற்கால பறவையின் கருக்கள் டைனோசர்களை போன்றே இன்னும் நீளமாக வளரும் அறிகுறிகள் கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டது.
ஐஎச்எச் வகை மரபணு : நீளமான கால்கள் கொண்ட பறக்கும் வகை டைனோசர்கள் இனத்தில் இருந்து உருவான தற்கால பறவைகள் இனத்திற்கு ஏன் கால்கள் குறுகியது என்பது சார்ந்த ஆய்வில் ஐஎச்எச் (IHH) வகை மரபணு மீண்டும் நீளமாக வளர்க்கொடிய தன்மை கொண்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பகரமான ஆய்வு தகவலில் இருந்து கோழிகளின் கால்களை பயன்படுத்தி முதன்முறையாக டைனோசரின் கால்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
இப்படியாக கோழிகளை கொண்டு டைனோசர்கள் மீட்டெடுக்கப்படும் முயற்சியானது ஒன்றும் முதல்முறை நடக்கவில்லை என்பதும், கடந்த ஆண்டு, இதே ஆராய்ச்சியாளர்கள் குழுவானது கோழி கருவில் இருந்து டைனோசர் அலகு போன்ற வடிவமைப்பை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது...
கொடைக்கானல் என்ற நரகபூமி.....
அமெரிக்காவின் வாட்டர்டவுனில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலை அமெரிக்காவின் சுற்றுபுற சூழ்நிலையை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க அரசால் மூடுவிழா கண்டது.....
இப்படி மூடு விழா கண்ட தொழிற்சாலையை தான் நம் அரசுகள் இருகறம் கூப்பி மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வரவேற்றுள்ளனர்...
(நமக்கு அமெரிக்காவின் சுற்றுச்சூழல் தான் முக்கியம்)..
1984ஆம் ஆண்டு பாண்ட்ஸ் இந்தியாவால் தொடங்கபட்டு.... பின்னர் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கையகப்படுத்த வெகு ஜோராக உற்பத்தி தொடங்கியது இத்தொழிற்ச்சாலை.....
அமெரிக்காவிலிருந்து பாதரசத்தை இறக்குமதி செய்து தர்மாமீட்டரில் அதை நிரப்பி மீண்டும் அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது என்பது அது வெளிப்படையாக மக்களுக்கு சொன்ன தகவல்...
பாதரசம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு கூட மக்களுக்கு தெரியபடுத்தாத நிர்வாகம்....
ஊழியர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி வெறும் கைகளால் கையாள செய்தது தான் கொடுமையின் உச்சம்..
ஆண்டுக்கு 90லட்சம் தர்மா மீட்டர்களை தயாரிப்பது என்பது இலக்கு...
இதில் சராசரியாக 20 லட்சம் தர்மா மீட்டர்கள் உடைபடுவது வாடிக்கை என்றாலும்... அப்படி உடைபடும் தர்மா மீட்டர்களையும் அதன் கழிவுகளையும் யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலையின் மணல் பகுதியில் ஆலை நிர்வாகம் ரகசியமாக புதைக்க...
சுமார் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கபட்டனர்...
ஊழியர்கள்.... கடுமையான தலைவலி.. சிறுநீரக பாதிப்புகள்.. மூளை மற்றும் நரம்பியல் பிரச்சனை.. மலட்டு தன்மை.. கற்பகால பாதிப்புகள்.. குறைபாடுகள் உடைய குழந்தைகள் பிறப்பு... பல் மற்றும் ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகள் இப்படி கடுமையான பாதிப்புகளில் சிக்க..
பின்பு தான் பிரச்சனையின் பூதாகாரம் மக்கள் தெரிந்து கொண்டனர்...
மக்களின் தொடர் போராட்டத்தால் 2003ல் இத் தொழிற்சாலை தமிழகத்தில் மீண்டும் மூடு விழா காணப்பட்டது...
இன்னும் இதன் வீரியம் பற்றி சொல்ல வேண்டுமானால்..
ஒரு லீட்டர் நீரில் 0.002 என்ற அளவில் பாதரம் கலந்து அருந்தினாலே கிட்னிபாதிக்கபட்டுவிடும்......
இப்போ புரியியும்னு நினைக்கிறேன்.....
நீதிமன்ற உத்தரவுகளின் படி அனுசக்தி துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் மலைகளின் இளவரசி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பதை (ஏரிகள்... காற்று... மீன்கள்.. மண்) சத்தமில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறது...
இந்த தொழிற்சாலையின் 290 டன் அளவிற்கான கழிவுகளை அப்புறபடுத்த இந்நிறுவனத்தின் தலைமையகம் ஒத்துக்கொண்ட போதிலும் அதற்கான நடவடிக்கை இன்று வரை மேற்கொள்ளபடவில்லை என்பதே அதிர்சியான உண்மை...
இந்த பாதரச கழிவுகளும்.. உடைந்த தர்மா மீட்டர்களும் தொழிற்சாலையின் பின்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஏழு டன் அளவிற்கு கொட்டப்பட்டிருப்பதை மத்திய மாநில அரசுகளும் உறுதி செய்திருக்கின்றன....
ஆலை நிர்வாகமும் அரசும் இதை எப்படி அகற்றுவது என்ற விவாதமே இன்று வரை போய் கொண்டிருக்கிறது...
அதாவது கிட்டதட்ட 15 ஆண்டுகள்....
அதைவிட இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த நிர்வாகத்தின் மீது அரசு எவ்வித கிரிமினல் வழக்குகளையும் தொடுக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல்....
ஒரு கிலோகிராம் மண்ணில் 1 மில்லி கிராம் என்ற விகிதத்தில் மட்டுமே இங்கிலாந்து போன்ற நாடுகள் அனுமதிக்கிறது...
நெதர்லாந்து போன்ற நாடுகள் ஒரு கிலோகிராமுக்கு 10 மில்லி கிராம் அளவில் அனுமதிக்கிறது...
ஆனால் கொடைக்கானலிலோ ஒரு கிலோ கிராமிற்கு 100 மில்லி கிராம் என்ற விகிதாச்சாரத்தில் இந்த கழிவுகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்திருக்கின்றன ..
பாதிக்க பட்ட மக்களும் இன்று வரை நீதிக்காகவும்.. நிவாரணங்களுக்காகவும் நீதிமன்ற கதவுகளை தட்டிக் கொண்டிருக்க..
எஞ்சியுள்ள மக்களும் தங்கள் பங்குக்கு அந்த ஆலகால விஷத்தை பருக கொடைக்கானலுக்கு படையெடுத்த வன்னமே உள்ளனர்...
ஆந்திரம் கேரளம் கர்நாடகம் மாநிலத்தில் திராவிடக் குஞ்சுமணிகள் கடைவிரிக்க ஏன் பயப்படுகின்றனர் ?
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மலையாளிகளை திராவிடன் என்றால் செருப்படி விழும் என்று கூறிவிட்டார்..
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கன்னடர்களை திராவிடன் என்றால் செருப்படி விழும் என்று கூறிவிட்டார்..
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் திராவிடன் என்றால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்..
தமிழர்கள் என்று திராவிடமாயை தெளிந்து திராவிட ஒட்டுண்ணிகளை செருப்பால் அடிக்க போகின்றார்கள் ?
தமிழ் தேசிய தமிழரை என்று முதலமைச்சராக்க போகின்றனர் ?
தற்போது கேரளா தேவைக்கு திராவிட நாடு கோரிக்கை வைக்கின்றனர்...
காரணம் தமிழகத்தை தமிழன் ஆளவில்லை ஆகையால் மொத்தமாக வளைத்து போட்டு விடலாம் என்று தான்...
தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்…
உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)...
8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி)
1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி
1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
1 சிறிய வெள்ளரி பிஞ்சி நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
12 புதினா இலைகள்..
அனைத்தையும் 8 ½ கப் சுத்தமான தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி நீரை மட்டும் சிறிது சிறிதாக பிரித்து குடிக்கவும்.
ஒரே நாள்ல குடிக்க முடியலைன்னாலும் பிர்ட்ஜ்ல வைச்சி இரண்டு நாட்களாக பிரித்து குடிக்கலாம்.
இப்படி தொடர்ந்து 4 வாரங்கள் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
(This drink keeps you hydrated and does not have any side effects.)...
சீனாவில் சோழன் வரலாறு...
கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.
இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர். வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டு வரப்படுகின்றன..
Chinese geographer Chau Ju-kua, writing in about 1225, gives the following account of the Chola army:
This [Chola] country is at war with the kingdom of the [west] of India. The government owns sixty thousand war elephants, every one seven or eight feet high. When fighting these elephants carry on their backs houses, and these houses are full of soldiers who shoot arrows at long range, and fight with spears at close quarters...
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்...
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது.
மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.
சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.
மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
உருளைக் கிழங்கை விட ஆறு மடங்க சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது...
பாஜக எனும் தேச துரோகிகள்...
பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ISI அமைப்பு RSS இயக்கத்திற்கு நிதி அளித்ததை, அந்த RSS இயக்க நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளார்...
இந்திய தேச துரோகிகள் இந்த ஆர்.எஸ்.எஸ். & பாஜக காரர்கள் தான்...
இந்த தேச துரோகத்தை மூடி மறைத்தது ஊடகங்கள்...
திருட்டு தெலுங்கு திமுக 2010 கருணாநிதி ஆட்சியில்...
திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கண்ட காமாட்சி நாயுடு தெலுங்கு பேசும் அனைத்து சாதியினரையும் - தெலுங்குப் பார்ப்பனர் உட்பட - திரட்டித் தமிழ்நாடு தெலுகு சம்மேளனம் அமைத்தார்..
2016 ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குச் சென்னையெங்கும் சுவரொட்டிகள் தெலுங்கிலும் மிளிர்ந்தன.
தலைமை கல்வித் தந்தை கெங்குசாமி நாயுடு.
சிறப்புப் பங்கேற்பாளர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, நெப்போலியன், தங்கபாலு.
தமிழகத்தை அரசாளத் திராவிட அடையாளம்.
தங்கள் ஒற்றுமைக்குத் தெலுங்கு அடையாளம்.
பேச்சளவில் மட்டும் இருக்கும் தெலுங்கு பள்ளிகளிலும் வந்தால் அரசியல்படாத சாதாரண இருமொழியாளரும் முழுத் தெலுங்கராகத் தானே ஆவார்?
சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும்,
கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும்,
பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர்.
தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்துள்ளார்களோ?
அதை பிரித்து கொடுக்க இந்த திராவிட கட்சிகள் துணை நிற்கிறதோ...
மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா?
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய மனு நூல், அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
மானவத் தருமநூல் எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த
ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...
ஆரியனும் திராவிடனும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...