10/06/2017

இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல.. துருக்கி.. ஆய்வில் கண்டுபிடிப்பு...


சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும்.

அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும், அவர்களால் மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது.

கருங்கடலில் இருந்து வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது.

அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே 'அனடோலியா' என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும், தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம், ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாதிரி தோன்றினாலும், இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும் சொல்லியல் ஆகியவைகளை ஆராயும்போது, மேற்கூறிய ஆறு மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின் கருத்தான, 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம் துருக்கி' என்பதற்கு வலு சேர்க்கிறது.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'மதர்' (Mother) எனும் வார்த்தைக்கும் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம். இதே சொல், ஜேர்மன் மொழியில் 'மட்டர்' (Mutter) எனவும், 'மட்' (Mat) என ரஷ்ய மொழியிலும், 'மடர்' (Madar) என பெர்சிய ( பெர்சியன் என்பது இரானிய மொழி) மொழியிலும், 'மா' (Ma) என ஹிந்தியிலும், லத்தின் மொழியில் 'மதேரி' (Materi) எனவும் அழைக்கப்படுவது, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குள் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும், இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல்லான  'மெஹ்தர்' (Mehter) என்பதிலிருந்து பிறந்தவை.

இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி,பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

அதிலும், இந்தியாவின் ஆரிய மொழியான ஹிந்திக்கும், ஜேர்மன் மொழிக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உள்ளது. (இதனால் தான், 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை, 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்து வந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது).

இதனாலேயே, ஹிந்தி மொழியில், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாக்கம் வெகுவாகவே காணப்படுகிறது. உதாரணம்: 'UPPER' எனும் ஆங்கில சொல், 'உப்பர்' (மேலே என பொருள்படும்) என ஹிந்தியில் அதே பொருளில் அழைக்கப்படுவதைக் காண்க.

மேலும், தமிழுடன் ஒப்பிடும்போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள் மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிட மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.

இந்த கண்டுபிடிப்புகள் மொழி வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர் அட்கின்சன் தெரிவித்துள்ளார்...

கம்யூனிசம் - செக்குலரிசம் , மதச்சார்பின்மை, இந்துத்துவா எதிர்ப்பு என்று வாய் ஓயாமல் பேசும் மார்க்சிஸ்ட்டுகளின் களாவாணித்தனம்...


மார்க்சிஸ்ட் என்பது இன்னொரு சிவப்பு பா.ஜ.க. கட்சியே.

இதனை அறிந்து கொள்ளமல் அதில் இருக்கும் தொண்டர்களைப் பார்த்துப் பழிசொல்வதா? அல்லது பரிதாபப் படுவதா?

வேலூர் சிறையில் இருந்த காஞ்சி ஜூனியர் சங்க ராச்சாரியாரை தனது காரில் ஏற்றிக் கொண்டு காஞ்சி மடத்தில் கொண்டு வந்து விட்டவர் இந்து என். ராம்.


சங்கராச்சாரியார் ஒரு மடத்தின் தலைவர், துறவி, எனவே அவரை எல்லோரையும் போல் விசாரிக்கக் கூடாது. அவரைத் தனியாக ஒரு மாளிகையில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றார் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி (தி இந்து 18.11.2004)...

பாஜக வும் டூபாக்கூர் வேலையும்...


காக்கை யின் அறிவுரை...


நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா, எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு...

மனிதன்: நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.

காக்கா: அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானேன்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க...

ஓ நாங்க உங்க முன்னோர்களா.. சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க, உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா விட்டீங்களோ, முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க, செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும்.

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்... ஜாக்கிரதை...

தமிழக அதிமுக அரசு.. நான் உங்கள் அடிமை மத்திய பாஜக அரசே...


ஆந்திரம் கேரளம் கர்நாடகம் மாநிலத்தில் திராவிடக் குஞ்சுமணிகள் கடைவிரிக்க ஏன் பயப்படுகின்றனர் ?


கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி மலையாளிகளை திராவிடன் என்றால் செருப்படி விழும் என்று கூறிவிட்டார்..

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும்  கன்னடர்களை திராவிடன் என்றால் செருப்படி விழும் என்று கூறிவிட்டார்..

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் திராவிடன் என்றால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்..

தமிழர்கள் என்று திராவிடமாயை தெளிந்து திராவிட ஒட்டுண்ணிகளை செருப்பால் அடிக்க போகின்றார்கள் ?

தமிழ் தேசிய தமிழரை என்று முதலமைச்சராக்க போகின்றனர் ?

தற்போது கேரளா தேவைக்கு திராவிட நாடு கோரிக்கை வைக்கின்றனர்...

காரணம் தமிழகத்தை தமிழன் ஆளவில்லை ஆகையால் மொத்தமாக வளைத்து போட்டு விடலாம் என்று தான்...

பாஜக யோகி ஆதித்தநாத் கடந்த 2015 இல் தன் மத நல்லினக்கத்தை வெளிப்படுத்தியதால் தான் இன்று உ.பி. முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்...


தமிழில் அறிவியல் இல்லை, அறிவியலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை, தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் தமிழின எதிரிகள் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளனர்...


அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும்.

சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள்.

வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு சொன்னவர்கள்.

தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன.

சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் சிறப்பானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு - பரிபாடல்-2

இந்த பரிபாடல் பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது.

முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு - நற்றிணை:163

இந்த நற்றிணைப் பாடலில், உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.  திருக்குறள் 1031

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது என்ற கருத்தை வெளிபடுத்தும் இக்குறளில் உலகம் தொடர்ச்சியாக சுழன்று கொண்டிருக்கிறது என்ற அறிவியலை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்துகிறது.

வள்ளலார் வழங்கிய அருட்பெருஞ்சோதி அகவல் வரிகளில் வரும் வானியல் பற்றியும் பார்ப்போம் ..

113. எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
எண்ணில் அடங்காத அண்டங்களுக்கு நிறைந்த ஒளியை கொடுத்துக் கொண்டிருக்கிறது அருட்பெருஞ்சோதி என்ற பேராற்றல்.

276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரின் மேல் புவியும் , புவியின் மேல் மலைகளும் , நிலப்பரப்பும் இவை அனைத்தும் நெருப்பின் மேல் நிலைத்திருக்கும் படி இயற்கை வகுத்துள்ளது என்ற புவியியல் அறிவை வெளிபடுத்தியுள்ளார் வள்ளலார்.

மேலும் அண்டப் பெருவெளியில் இருந்து ஒளி அண்டங்களை பார்வையிட்ட தருணத்தில் இந்த மாபெரும் ஒளி அண்டங்கள் எல்லாம் சிறு அணுக்களாக காட்சி அளித்தது என்றும் கூறியுள்ளார் வள்ளலார். நவீன விஞ்ஞானத்தில் மிகப்பெரிய தொலைநோக்கி கருவியை வைத்து மட்டுமே பார்க்கப்படும் இக்காட்சியை மிக எளிமையாக காட்சிப் படுத்தியுள்ளார் வள்ளலார்.

தமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன் .

தமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.

தமிழர்கள் கண்டு பிடித்ததை தாங்கள் கண்டுபிடித்ததாக வாய்க் கூசாமல் பொய் கூறினர் ஆரிய மதத்தினர். ஆரிய கட்டுக் கதை புராணங்களில் தமிழர் அறிவியலையும் , மெய்யியலையும் நிறையவே நாம் காணலாம்.

சரி , இப்படியான அறிவுக்கு சொந்தக்கார்களான தமிழர்களுக்கு அந்த அறிவு இப்போது விளங்காமல் போன காரணம் என்ன?

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் , தமிழர்கள் அந்த அறிவின் தொடர்ச்சியை பெரிதளவு இழந்து விட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இருப்பினும் தமிழர்கள் அதை முற்றிலும் இழக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றும் வானியல் ஆய்வை பல தமிழர்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். வானியலையும் தமிழர் மெய்யியலையும் பிரிக்க முடியாது .

மெய்யியல் விழைவோர் நிச்சயம் வானியல் ஆய்வுகள் மேற்கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி மெய்யியல் ஆய்வு செய்வோர் தற்போது உள்ள வானியல் ஆய்வுகளைக் காட்டிலும் பல உண்மைகளை தெரிந்து வைத்துள்ளனர். அந்த வானியல் அறிவு மரபு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த மரபை அழியாமல் பார்த்துக் கொண்டும் வருகின்றனர் சில தமிழர்கள். நிச்சயம் இவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளை, மெய்யியல் உண்மைகளை ஒவ்வொரு காலத்திலும் உலகிற்கு வெளிக் கொண்டு வருகிறார்கள், வருவார்கள்.

அத்தகைய ஆய்வுகள் உலகிற்கே வழிகாட்டும் படியும் அமையும் என்பதை தமிழர்கள் நாம் எண்ணிப் பெருமை படவேண்டும்...

தந்தி டிவி ஒரு விபச்சார ஊடகம்...


உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்...



என்ற சொல்வழக்கு உண்டு.

மோடியின் ஆருயிர் நண்பன் அம்பானி திருடன்.

அப்ப மோடி ?

பின் குறிப்பு: 7 வருடம் ஓஎன்ஜி சி யில் எண்ணை திருடிய வழக்கில்.. இந்திய நீதி மன்றம் அம்பானி திருடிய  குற்றம் உறுதி செய்ய பட்டது.

வங்கிகளில் வாங்கிய கடன் திரும்ப கொடுக்க வில்லை என இந்திய வங்கிகள் உறுதி செய்கின்றன...

தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா...


தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.

உள்நாட்டில் மட்டும் அன்றி வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் அமையப் பெற்று இருக்கும் என்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இதில் காத்திரமான பங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தொமோர் ஆகியவற்றை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றமைக்கு கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையால் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

அவை போலவே தமிழீழம் தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன...

நன்றி - இணையம்...

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப் பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்...

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன.

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு.

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம் - இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை கனம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, கனாதிபதி என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி - தமிழில் கன்னி என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, பொறி என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, கன்னி என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், கலபதி என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம் - கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், ஜலதலதிபதி என்னும் நபர் ஆவார்.

மண்டலம் - கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, கனம் பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று மண்டலம் குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது கனம் என்று கூறப்படுகிறது.

அணி - பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை அணி என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று கனம் குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், அணிபதி என்று அழைக்கப்படுவர்.

அதிபதி - இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் அதிபதி. இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள் - இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

நாவாய் பண்டைய தமிழர்களின்  நாவாய் என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் நேவி (Navy) என்று அழைக்கப்படுகிறது...

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் அனுமதிக்கோரி போராடிய 3 திமுக எம்.எல்.ஏக்கள் கைது...


திமுக எம்.எல்.ஏக்களான பெரியண்ணன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கைது...

சாதி எப்படி வந்தது?


சாதியின் பரிணாமம்...

மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர்.

தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட காலமாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்கள் தொழில் குலமாக மாறியது.

ஆங்கிலத்தில் உள்ள தொழில் பெயர்கள் பெரும்பாலும் ஸ்காட்டிஷ் செர்மனி பிரான்சு உள்ளிட்ட மக்களின் சாதி/குல பெயர்கள்.

Potter குயவர்
Hunter வேட்டையாடி
Mason கட்டட பணியாளர்
Fisher/Fischer/Fischer மீனவர்
Smith கொல்லர்
Sangster பாடகர்
Master ஆசான்
Jardine(garden)தோட்ட கலைஞர்
Taylor தையலர்
Shepherd மேய்ப்பர்
இப்படி இன்னும் ஏராளம்.

சீனர்கள் ஒவ்வொருவரின் சாதி/ பட்டப் பெயர் சீனர்களின் அரச குடும்பத்தை அவர்களின் வரலாற்றை குறிக்கும்.

கிருத்தவ மதத்தை தழுவிய சீனர் தாய் மொழியான சீனத்திலும் குடும்பப்பெயரை சேர்த்தும் தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர்.
Wang (king) அரசர்
Lau (han dynasty) அன் அரசாட்சி
Leong (architect) கட்டுமான வடிவமைப்பாளர்
Thong (tang dynasty ) தாங் அரசாட்சி
Fu (teacher ) ஆசிரியர்

இப்படி உலகின் பழமையான பன்பாடு நாகரிகம் கொண்ட இனங்கள் பட்டப் பெயரை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்கிறார்கள். தங்கள் இனத்தின் வரலாற்றை பறை சாற்றுகிறார்கள்.

சாதிய ஏற்ற தாழ்வுகள் அங்கு இல்லை. பெருளாதார ஏற்றத்தாழ்வு தான் அங்கெல்லாம் தனிமனிதனை தரநிர்ணயம் செய்ய உதவுகிறது.

அப்படி தான் தமிழரின் குலப்பெயர்கள்/பட்டப்பெயர்கள்/சாதிப்பெயர்கள்/ குடும்பப்பெயர்கள் தமிழர்களிடமும் நிலவியது.

ஒவ்வொரு தொழில்குலங்களும் தன்முனைப்போடு தொழில் வளர்ச்சியடைந்தது. ஒரு தொழில் குலத்திற்கு என்று தொழில் நுணுக்கம் தொழில் நுட்பம் என எல்லாம் இருந்தது. ஒரு குலத்தை மற்ற குலங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவை எல்லா குலங்களுக்கும் இருந்தது.

கப்பல் கட்டுமானத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஐந்தினைகளிலும் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆள் கடலில் முத்துக்குளித்தார்கள். மீன் பிடித்தார்கள். கப்பல் வழியே உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். கட்டிடக்கலையில் கட்டுமான தொழிலில் உயர்ந்திருந்தனர். உயர் கலை நுட்ப சிற்பங்கள் செதுக்கினர். இலக்கியங்கள் படைத்தனர். என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோமே அது எல்லாம் தமிழரின் தொழில் குலங்களால் தான் சாத்தியமானது.

வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர் சாதி பெயர்கள் பின்னால் இருக்கும் தொழில்சார் அறிவியலை பற்றி விளக்கியிருக்கிறார்.

பின் எப்படி சாதி இழிவானது?

அயலார் ஆட்சியில் அவர்களுக்கு தமிழர்களை பிரித்தாள வேண்டிய தேவை இருந்தது.

மனிதனை பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் வருணாசிரம படிநிலை சாதியில் புகுத்தப்பட்டது.

ஒரு சாதியை உயர்வென்றும் மற்றொன்றை தாழ்வு என்றும் கற்பிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சாதிகளுக்கு சலுகைகளும் ஏனைய சாதிகளை வஞ்சித்தும், சாதிகளுக்கு இடையே வெறுப்பையும் உருவாக்கினர்.

சாதியால் தொழில் வளர்சியை நோக்கி முன்னேறிய முன்னேற்றம் சார்ந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்த தமிழர் சாதியின் பெயரால் துண்டாடப்பட்டு வீழ்ந்தனர்.

புராணங்கள் மூலம் பொய் கதைகளை பரப்பினர்.

கோத்திரங்கள் என்று ஒன்றை உருவாக்கி உயர்வு தாழ்வு கற்பித்தனர்.

இந்த சாதிய புராணங்கள் 16 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.

சாதிகளால் பிரிந்திருந்தாலும் இனத்தால் அனைவரும் தமிழர்களே.

தீர்வு தான் என்ன?

அடுத்த தலைமுறைக்கு சாதிய குலங்கள் பற்றி, அவர்களின் வரலாறு பற்றி, அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் பற்றி கல்வியில் சேர்த்து பாடம் எடுத்தால் ஒரு சாதியை தாழ்வாகவோ மற்றொரு சாதியை உயர்வாகவோ யாரும் கருதமாட்டார்கள்.

சாதி தேவை தானா?

சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சாதிகள் சாதியின் அடையாளத்தில் தான் தன் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

ஒரு தேசிய இன்த்தையோ மரபினத்தையோ சாதியின் அடையாளத்தை வைத்து தான் வரையரை செய்கின்றனர்.

கன்னடர் என்றோ தெலுங்கர் என்றோ மலையாளி என்றோ அவர்களின் சாதி பெயர்களை தான் அடையாளப்படுத்துகிறது.

தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் சாதிகளை வைத்து தான் தமிழர்களை வரையரை செய்கிறது.

சாதிய இழிவு அறியாமை..

ஒரு காலத்தில் தமிழர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற காரணமான சாதி.

இன்று ஒரு இனத்தை வரையரை செய்யும் அடையாளமாக மட்டும் இருக்கிறது.

ஒழிக்கப்பட வேண்டியது சாதிய படிநிலைகள் வருணாசிரம கொள்கைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை தான்..

மண்ணின் மக்களே சாதிய ஏற்ற தாழ்வுகளை  ஒழித்தால் ஒழிய சாதிய இழிவுகள் ஒழியாது...

சோத்துக்கு பதிலா எதை தின்குற?


நாங்க தான் சோறே திங்கிறதில்லையே..

சோழ நாடு சோறுடைத்து என்பது முதுமொழி..

சோத்துக்கு பதிலா எதையும் தின்போம் என்பது இழிநிலை...

தமிழ்நாடு தனி நாடாக அறிவிப்பதை தவிர வேறு வழியில்லை...


இதற்கு இந்த ஈனப்பிறவி அரசியல் வாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்..

ஆனாலும் ரேஷன் கார்டு ஆதார் அட்டைகளை திருப்பி தர நம்மால் முடியும்.. இல்லையேல் இதெல்லாம் அள்ளிப்போட்டு கொளுத்தவும் முடியும்.

ஒரு மாநில மக்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் ஒன்றுக்கும் உதவாத அரசை நம்பி இனி நாம ஏன் வாக்கு செலுத்த வேண்டும்..

நமக்கான ஆயுதம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டைகள். ..

இது முடிவு அல்ல ஆரம்பம்...

மாநில உரிமைகளை திமுக காப்பாற்றும் என்று நம்பினால் நீயும் கோபாலபுர அடிமையே...


GST யில் எத்தனை திருகுதாளங்களைத் திமுக செய்கிறது என்பதற்கு இந்த ஒரு அறிக்கை சான்று.

இந்த மாதம் வேண்டாமாம். செப்டம்பரில் அமல்படுத்துங்கள் என்கிறார் ஸ்டாலின்.

ஜெட்லி கொடுத்த வாக்குறுதியை நம்பி திமுக வினர் வாக்களித்தனராம்...

தமிழக முதல்வர் எங்களை ஏமாற்றி விட்டார் சென்னை விருந்தினர் மாளிகை முன்பு போராட்டத்தை துவங்கிய அய்யா கண்ணு...


விவசாய கடனை தள்ளுபடி கோரி சென்னை சேப்பாக்கத்தில் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...

வைகோ நாயூடு கலாட்டா...


இவர் RBI ஆளுநராக வந்த பிறகு Elite குழுவினர் சாதித்த விஷயங்கள் பல...


தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்…


உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)...

8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி)
1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி
1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
1 சிறிய வெள்ளரி பிஞ்சி நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
12 புதினா இலைகள்..

அனைத்தையும் 8 ½ கப் சுத்தமான தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி நீரை மட்டும் சிறிது சிறிதாக பிரித்து குடிக்கவும்.

ஒரே நாள்ல குடிக்க முடியலைன்னாலும் பிர்ட்ஜ்ல வைச்சி இரண்டு நாட்களாக பிரித்து குடிக்கலாம்.

இப்படி தொடர்ந்து 4 வாரங்கள் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

(This drink keeps you hydrated and does not have any side effects.)...