06/12/2018

மனம் என்பது எண்ணங்களின் பதிவு...


பதிவுகளை சேர்த்து வைக்கும் மனதிற்கு கொள்ளளவு உண்டு. அதனாலையே இயற்கை நாள்ப்பட்ட அல்லது தேவையற்ற பதிவுகளை அழித்துவிடுகிறது அதுவே மறதி.

ஆக தேவையானவற்றை நிரப்பவே போதிய இடமில்லாத போது தேவையற்றவையை சுமப்பது அறிவார்ந்த செயலா என நாம் தான் முடிவு செய்யவேண்டும்.

தமிழில் நாம் அறிந்துக்கொள்ளவே இப்பிறப்பு போதாதென்றிருக்க தமிழே நமக்கு போதும்  போதுமென்றிருக்க  எத்துனை தத்துவம் இறக்குமதி செய்யப்படுகிறது.

நீதி சமயம் மெய்ஞானம் வாழ்வியல் உளவியல் அரசியல் பகுத்தறிவு சமூகநீதி பெண்ணியம் பேசும் சோசியலிசம் மார்க்சியம் காந்தியம் பெரியாரியம் அம்பேத்கரியம் இந்துத்துவம் கிறித்தவம் இசுலாமியம் பௌத்தம் சமணம் இன்னும் எத்தனை ?

தமிழ்நெறி சொல்லாததை இங்கு எவரும் இதுவரை சொன்னதுமில்லை இனி சொல்லப் போவதுமில்லை...

சங்கு பூ கொடியின் மருத்துவ குணங்கள்...


சங்குப்பூக்கொடிக்கு மாமூலி, கன்னிக்கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவற்றை மருத்துவத்துக்குப் பயன்படுத்துகின்றனர்.

கீழாநெல்லியின் முழுச் செடி, யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், சங்குப்பூக்கொடியின் வேர் என அனைத்திலும் வகைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றோடு ஐந்து மிளகையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

10 நாட்களுக்குத் தினமும் காலையில், இந்தக் கலவையில், ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு தயிரில் கலக்கி சாப்பிட்டால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் நீர்க்கடுப்பு குணமாகும்.

நன்றாகச் சுத்தம் செய்த சங்குப்பூக்கொடியின் வேர் பத்து கிராம், திப்பிலி பத்து கிராம், சுக்கு பதினைந்து கிராம் மற்றும் விளாம் பிசின் பத்து கிராம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொண்டு, அதனை குன்றிமணி அளவு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த மாத்திரைகளை நிழலில் நன்கு உலர்த்தி எடுத்து, குழந்தைகளுக்கு அரை மாத்திரை அளவும் பெரியவர்களுக்கு ஒரு மாத்திரையும் காலையில் வெதுவெதுப்பான வெந்நீருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

இதனால் நன்கு பேதி ஆகி வயிறு சுத்தப்படும். பேதியை நிறுத்த மோர் அல்லது எலுமிச்சைப் பழச் சாறு குடிக்கக் கொடுக்கலாம்...

நான் பல வருடம் தொந்தரவிலும்.. வேதனையிலும் இருக்க இவனே காரணம்...


நான் பல வருடம் தொந்தரவிலும்.. வேதனையிலும் இருக்க இவனே காரணம்...


கன்னட ஈ.வே.ரா வும் பிராமண எதிர்ப்பும்...


நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு, என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது  - ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.

அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர் மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்க வைத்தார்..

1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிலும் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.

காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.

அதோடு நில்லாது பி.பால சுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.

தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்...

இப்போ புரியுதா வைகோ நாயூடு ஒரு மானகெட்ட பிறப்பு என்று...


தமிழின விரோத பாஜக...


பிரியங்கா சோப்ராவின் வரவேற்புக்கு செல்ல நேரமிருக்கு ஆனா லட்சகணக்கான விவசாயிகள் வந்தா அவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து குறைகள் கேட்க நேரமில்லை...

 கஜா புயலால் பேரழிவுக்கு உள்ளாகி வாழ்க்கையை தொலைத்த தன் நாட்டுக்குடிகளை பார்த்து ஆறுதல் கூற மனமில்லை...

இலுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்...


இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கமுனிசமும் இலுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.

திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கமுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்..

திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ.. அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..

திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்.

அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை பிடித்து தொங்குகிறார்கள்.

இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள்.. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள்.

இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்..

முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..

சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.. பற்றி பார்போம்...

1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னை மரம் வெட்டினாரோ அதே போல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இரந்தார்கள்.

2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே, அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.

இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...

ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..

இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்..

இலுமினாட்டிகளின் அடிப்படை கருத்து..

1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி

இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே..

இதையே தான் கமுனிசமும், திராவிடமும், சொல்கிறது..

அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது..

இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.

எங்கள் பார்வையில்..

இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்..

முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம். அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..

நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல்களே பகைவர்களை வலிமை அடைய செய்யும்...

பாஜக என்பது பொய் பித்தலாட்டத்தின் பிறப்பிடம்...


இப்படி ஒரு நிதி மத்திய அரசு அறிவித்து இருக்கிறதா? யாருக்கேனும் தெரியுமா?

இரத்த அழுத்தமா? குறைக்க எளிய வழி...


ரத்தக் கொதிப்பு என்றால் என்ன?

ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம். ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்? ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.

ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல், அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள், மது மற்றும் புகைப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இன்மை, நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலம் இரத்த அழுத்த நோய் வரலாம்.

ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும் போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

உணவு முறைகள்: அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

பாட்டி வைத்தியம்:

1). அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

2). ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

3). ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

4). இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். 

5). இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

6). எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

7). கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

8). பீட்ரூட் சாற்றில் அப­ரி­மி­த­மாக அடங்­கி­யுள்ள நைத்ரேட் (Nitrate) இரத்­தத்தில் நைட்ரிக் ஒக்­சைட்டின் (Nitiric Oxide) அளவை அதி­க­ரித்து உட்­கொண்ட 24 மணித்­தி­யா­லத்­திற்குள் உயர் இரத்த அழுத்­ததைக் குறைக்கும். தினமும் 250 மில்லி லிட்டர் பீட்ரூட் சாறு பருக இரத்த அழுத்தம் என்றும் கட்­டுப்­பாட்டில் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் கராம்பு ஒன்றை மென்று சாப்­பிட, கறி­வேப்­பிலை சாறு பருக, தேனுடன் இஞ்சி சாறு பருக இரத்த அழுத்தம் குறையும்.

9). ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

10). பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

11). கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

12). முருங்கைக்காய்: முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

13). நெல்லிக்காய்: நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

14). முள்ளங்கி: இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

15). எள்: சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

16). ஆளி விதை: ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

17). ஏலக்காய்: உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது.

உடற்பயிற்சி: ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்...

அத்தனைக்கும் தற்சார்பாய் இருந்து பழகுங்கள்... அதற்காக யாரையும் ஒதுங்கி செல்ல வேண்டாம்...


தந்திர-குண்டலினி யோகம்...


தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.

சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.

பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.

பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.

பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச் செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.

பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ர தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.

இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.

நாடிகள்...

நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர் நாடியாகும்.

சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன.

அவற்றில் இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்பவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...

தமிழகத்தையும்.. தமிழினத்தையும்.. தமிழனாக நடித்து ஏமாற்றி அழித்த தெலுங்கர்கள்...


நான் உணர்ந்த கடவுள்...


மரமும் காடுகளும் மலையும்  கடவுள்
காற்றும் கடலும்  கடவுள்

சூரியனும் சந்திரனும் கடவுள்
மேகமும் வானமும் கடவுள்

நீரும் நெருப்பும் கடவுள்
மண்ணும் மழையும் கடவுள்

இடியும் மின்னலும் கடவுள்
செடியும் பூவும் கடவுள்

உன்னும் உணவும் கடவுள்
உணவை தருபவன் கடவுள்

அன்பும் ஆதரவும் கடவுள்
கருனையும் மகிழ்ச்சியும் கடவுள்

பாசமும் நேசமும் கடவுள்
பண்பும் பணிவும்  கடவுள்

தாயும் தந்தையும் கடவுள்
இந்த தாய் பூமியும் கடவுள்

நீ உணரும் உணர்வு கடவுள்
நீ நேசிக்கும் தன்மை கடவுள்

உன் கருனை கடவுள்
உன் அன்பு கடவுள்
உன் இரக்கம் கடவுள்
உன் மகிழ்ச்சி கடவுள்

மொத்தத்தில் கடவுள் யார்  என்கிற கேள்விக்கு மனிதனுக்கு  இதுவே பதில்...

யாராவது இனிமேல் காட்டு பக்கத்தில் வாங்கடா.. மனுச விலங்குகளா...


10th Man rule...


இது ஒரு ஆங்கில படத்தில் வந்த ஒரு சிறிய வசனம் தான் ஆனா ரொம்ப நிதர்சனமான ஒன்னு.

இந்த படம் ஒன்னும் பெரிய உலக சினிமால்லாம் இல்ல ஒரு காமர்சிலியல் zombie அப்போகலிப்ஸ் படம் தான். "World war Z".

அதாவது உலகம் முழுக்க zombie க்கள் பரவுகிறது. இதை பற்றி முன்கூட்டியே எல்லா அரசுகளுக்கும் தகவல் தரப்படுகிறது இருந்தும் எல்லா அரசுகளும் இந்த செய்தியை ஒரு புரளியாகவும் சாத்தியமற்ற ஒரு விஷயமாவும் பாத்து எந்த முன்னேற்பாடும் செய்யாமல் விட்டுவிடுகிறது.

 ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் இது வதந்தியாகவே இருந்தாலும் அதை ஆராய்ந்து அதற்க்கு முன்னேற்பாடாக அந்த நகரத்தை சுற்றி பலம் வாய்ந்த இரும்பு வெளியை அமைக்கிறது. அது வேற எந்த நாடும் அல்ல "இஸ்ரேல்" தான். உடனே எதோ கான்ஸபிரசி பேச போறேன்னு நினைக்கவேண்டாம். இந்த இல்லுமினாட்டி முத்திரைய மறைமுகமா காட்டுறது அத பத்தி பட்டும் படாம பேசுறது எல்லாம் ஹாலிவுட் இயக்குனர்கள் பண்ற ஒரு வகையான மார்க்கெட்டிங். உதாரணத்துக்கு நம்ம ரஞ்சித் அவர் படத்துல ராவண காவியம் புத்தகத்தை காட்டுறது, அம்பேத்கார் பொறந்த நாள காட்டுறது இதெல்லாம் ஒரு வகையான மார்க்கெட்டிங் அப்புறம் தன்னை அறிவாளின்னு காட்டிக்க வைக்கிற சில்லறை தனமான விஷயங்கள். (மணி ரத்தினத்தை ஏன் சொல்ல நீ அவாளான்னு சண்டைக்கு வாராந்திங்க நான் அவர் படத்தை எல்லாம் பாத்ததே இல்ல). இதுல subliminal தகவல்கள் அடங்காது, அது முற்றிலும் வேற ஏரியா.

சரி விஷயத்துக்கு வருவோம் பிரட் பிட் இஸ்ரேல் அதிபர் கிட்ட "நீங்க மட்டும் இந்த விஷயத்தை புரளின்னு விடாம, இந்த அளவு பாதுகாப்பை அதிகப்படுத்துன காரணம் என்னனு" கேப்பார்.

அதுக்கு அவர் தர பதில் தான் இந்த பதிவுக்கே காரணம்.

" 9 பேர் ஒரு முடிவை ஆமோதிக்கும் பொது 10 வது ஆள் அதை நிராகரிப்பார்"

இந்த ஒற்றை வரி தான், கொஞ்சம் தெளிவா பாப்போம். அதாவது பலர் சேர்ந்து இது தான் சரி இந்த முடிவு தான் சிறந்த ஒன்றுன்னு அனைவரும் ஒருமனதாக ஆமோதிக்கும் பொது அந்த 10வது ஆள் அந்த கருத்து எப்படி பட்ட ஆக சிறந்த கருத்தா இருந்தாலும் அதை எதிர்பார். அதை எதிர்ப்பதற்கான அணைத்து காரணிகளையும் தேடி பிடிப்பார். இது தான் 10வது ஆளின் விதி. இந்த செயல்முறை மூலம் மிக சிறந்த முடிவாக இருந்தாலும் அதில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படும் இதுவே இதன் நோக்கம்.

இன்னைக்கு வரை மனித இனம் முழுவதும் அழியாமல் இயங்குவதற்கு முக்கிய காரணியே இந்த 10வது ஆள் விதிமுறைதான். ஆம் தலைமை ஒரு மிக சிறந்த கருத்தியலை வடிவமைச்சி மக்கள் அதோட கட்டுக்குள் வைக்கும் அதே நேரத்துல அதே தமைமைய சார்ந்த பத்தாவது ஆள் அந்த கருத்தியலுக்கு எதிர்ப்பா இன்னொரு விஷயத்தை உருவாக்குவார். ஒரு கட்டத்துல 9 பேர் உருவாக்கிய கருத்தியல் காலப்போக்குல கரையும் பொழுது 10வது ஆள் கணித்த விஷயம் செயலாக்கம் பெரும் இப்ப அந்த 9 பேருல பலர் இந்த 10 வது ஆளோட இருப்பாங்க. மறுபடி அதே கூட்டத்துல இன்னொரு 10வது ஆள் உருவாவான் அவன் இந்த கருத்தியலில் உள்ள ஓட்டைய சொல்லி புதிய கருத்தியலை ஆரம்பிப்பான். ஒரே கருத்தியலில் மட்டுமே மனிதத்தை கட்டுக்குள் வைக்க முற்படும் பொது ஒரு கட்டத்தில் மனித இனம் மொத்தமாக காட்டில் இருந்து வெளிவந்து anarchisam என்னும் விதி இல்லாத கட்டுப்பாடு இல்லாத ஒரு வாழ்வியலை நெருங்கும். இத்தனை நாள் தலைமையின் கீழ் இருந்து கற்ற இயற்கைக்கு எதிரான அனைத்து விடயங்களும் கட்டுப்பாடில்லாமல் வெளிப்படும் இயற்கைக்கு முற்றிலும் மாறாக செயல் பட தொடங்கும். ஒரு கட்டத்திற்கு பிறகு இயற்கை எதிர்வினையாற்றி மொத்த இனத்தையும் அழிக்கும். அப்படி என்றால் மனித இனம் தலைமையின் கீழ் இயங்கும் பொது இயற்கைக்கு எதிராக செயல்படவில்லையா என கேட்காதீர்கள். நம்மை ஆட்டுவிக்கும் தலைமை இயற்கையின் மகத்துவத்தை நம்மை விட மிக அதிகமாக உணர்ந்துவைத்துள்ளது. லட்சக்கணக்கான வருடங்களாக  அடிமைகளான நம்மை வைத்து இயற்கையை மெல்ல மெல்ல சூறையாடுகிறது. வேண்டிய இடங்களில் இயற்கையை பேணி காப்பது போல் காத்து அந்த வளத்தை எதிர்கால உற்பத்திக்கு சேமித்து வைக்கிறது. இயற்கையும் அவ்வப்போது அதற்க்கு எதிர்வினையாற்றித்தான் வருகிறது.

ஆதியில் இருந்தே தலைமையின் கீழே இல்லாமல் இருந்திருந்தால் கருத்தியலில் சிக்காமல் இருந்திருந்தால் நாமும் ஓர் இயற்கையை சார்ந்த இனமாக இருந்திருப்போம். ஆனால் தலைமையின் நச்சுற்ற எண்ணங்கள் மனிதனிடத்தில் விதைக்கப்பட்டுவிட்டதால், தலைமை இருந்தாலும் சரி வேறு தலைமை வந்தாலும் சரி மனித இனம் எந்த காலகட்டத்திலும் இயற்கைக்கு எதிராக மட்டுமே செயல்படும்.

உங்கள் ஒருவரை மட்டும் எண்ணி இந்த கருத்து தவறு தலையின் கட்டுப்பாடு இல்லை என்றால் இயற்கை செழிக்கும் மனித இனம் அதை பேணி காக்கும் என எண்ணவேண்டாம். மனித இனம் என்பது 7.7 பில்லியன் நபர்களை கொண்டது. தலைமையின் பிடியில் இருந்து விடுபட்ட சில காலங்களில்  கண்ணிமைக்கும் நேரத்தில் இயற்கை சூறையாடப்படும். அது மட்டுமில்லாது இயற்கையை காப்போம் என்று என்னும் நாமே நம்மை அறியாமல் நமது செயல் பாடுகளால் அதனை சிதைப்போம் நம் பார்வையில் அது விவசாயம், ஆநிரை மேய்த்தல், சூரிய மின்சாரம் என இயற்கையை ஒட்டிய பிரகாசமான வாழ்வியலாக தெரியும். அதன் விளைவு நாம் அறியாதது.

இது இப்படியே சுழற்சியா இயங்கும். இந்த 10 வது அந்த தலைமை கூட்டத்துக்குள்ளையே மாறிக்கிட்டே இருப்பாங்க. மக்கள் மாறி மாறி அந்த கூட்டம் உருவாக்குற கட்டமைப்புக்குள்ளையே இருக்கும். புது புது பொலிவுடன் காலத்துக்கு ஏத்தமாரி வகை வகையா விஷயங்கள் உள்ள வந்து அந்த கட்டமைப்பை தொடர்ந்து நீட்டிக்கும். எளிமையா சொல்லனும்னா சிறைச்சாலைல கைதிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் வேற சிறைக்கு மாத்துற மாறி தான். ஒரு சிறைல அந்த கூட்டம் இருந்தா அந்த கட்டமைப்பை உணர்ந்து அந்த கூட்டத்தில் இருந்தே 10 வது ஆள் வந்துடுவான். இத மட்டும் மேல இருக்கிறவன் எப்பவும் விடமாட்டான். 

இதை எல்லாம் உணர நமக்கு ஒன்னும் பெரிய அளவுல வரலாறு தெரியணும், உலக அரசியல் தெரியணும்னு இல்ல அந்த 10 வது ஆளோட பார்வைல இந்த சமூகத்த பாத்தா போதும். அந்த பத்தாவது ஆளா இந்த சமூகத்தை பார்த்து இந்த சுவாரசியமான விளையாட்ட ரசிப்போம்...

கள்ள காதலனுடன் தகராறு: 3 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்...


 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா (24). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் கொழக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  வேத வர்ஷினி என்ற 3 வயது மகள் இருந்தார்.

இந்நிலையில் ரம்யா திருமணமாகியும், தனது திருட்டுக்காதலனுடன் தொடர்பில் இருந்ததால், கணவனை வெறுத்து காதலன் மணிமாறன் உடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதா வர்சினி.

இந்நிலையில், ரம்யாவுக்கும் காதலன் மணிமாறனுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் மனமுடைந்த ரம்யா, இன்று தனது மகள் வேதா வர்சினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு, மண்ணெண்ணெய் குடித்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட் டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தையை கொன்ற விபரீதம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைகையாற்றில் இருந்து கழிவுநீர் நிரம்புவதால் சோப்பு நுரை போல் அதிகமாக பொங்கி ரோடுகளில் பறக்கிறது.. மாநகராட்ச்சியின் அலட்ச்சியம்...


முடி உதிர்வதை தடுக்க...


வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்...

புத்திகெட்ட சலனங்களையும் சச்சரவுகளையும் தவிர்த்து உங்கள் பாதையில் நீங்கள் செல்லுங்கள்... தற்சார்பை வளர்த்துக் கொள்ளுங்கள்...


மரங்களும் மனிதனும் ஓன்று போலவே...


சிறு வித்தியாசம் மனிதனுக்கு நான் என்ற அகந்தை வாழ்கிறது..

அதனால் அவன் இன்னும் கிளைகளையே நம்பி கொண்டு இருக்கிறான்..

மரத்திற்கு அகந்தை என்பது கிடையாது.

அதனால் அது தன் வேரில் இருந்து தன் வாழ்வை தொடங்குகிறது. அது ஓவ்வொரு நாளும் உயிர்ப்புடன் இருக்கிறது...

மனம் - கிளை..
மனமற்ற நிலை - வேர்...

உன் இனமும் மொழியும் அவ்வளவு கேவலமா வந்தேறிகளா..?


நீ தெலுங்கனா இருந்தால் தெலுங்கன் என்ற அடையாளத்தோடு வா...

நீ மலையாளியாக  இருந்தால் மலையாளி என்ற அடையாளத்தோடு வா..

கன்னடனாக இருந்தால் கன்னடன் என்ற அடையாளத்தோடு வா..

தமிழன் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு நடித்து உன் தாயை கேவலப்படுத்தாதே.

உன் தாய்மொழி எதுவோ அதுவே உன்னுடையது...

உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா...?


இல்லையென்றால் படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.

இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... உடல் கட்டுப்பாடை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

முயற்சி செய்து பாருங்கள் உடல் கட்டுப்பாடு கண்டிப்பாக தெரியும்...

சிந்திக்க வேண்டிய விஷயம்...


காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பு...


என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’ என்று கேட்காதீர்கள்.

எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர்.

இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது.

மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.

தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க...

ஒரு இனத்தை அழிக்க போர் தேவையில்லை...


மனம்...


மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது..

உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்..

எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்..

நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது..

தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்..

தியானத்தின் தொடக்கம் காட்சி
பாவம்.  தியானத்தின் முடிவு மனமற்ற நிலை..

மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்..

இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்...

11 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட டீச்சர்...


டிசம்பர் 3, 2009 அன்று வேதாரண்யத்திலுள்ள பனையடிகுத்தகை வழியாகச் சென்றுகொண்டிருந்தது தனியார் பள்ளி வேன் ஒன்றில் 20 குழந்தைகள், ஒரு பள்ளி ஆசிரியை மற்றும் க்ளீனர். வேன், டிரைவரின் அலட்சியத்தால் ஒரு குளத்துக்குள் பாய்ந்தது. அதிலிருந்த குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்களே.

ஆபத்தை உணர்ந்த சுகந்தி டீச்சர், கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு தண்ணீருக்குள் தத்தளித்த குழந்தைகளை ஒவ்வொருவராகக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். 11 குழந்தைகளை க்ளீனரின் உதவியுடன் கரைசேர்த்த சுகந்தி டீச்சரின் உடல் அதற்கு மேல் ஒத்துழைக்க மறுக்க, மற்ற ஒன்பது குழந்தைகளுடன் தானும் தண்ணீருக்கு இரையாகிப் போனார். அவர் இறந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நேற்று முதல் நாளை வரை ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு கருத்தியலுக்கு அடிமை தான்...


மனிதனின் முழு சுதந்திரம் என்பது என்று எந்த ஒரு கருத்தியலிலும் சிக்காமல்..

மனிதன்  தன் சுய ( இயற்கை ) சிந்தனையில் வழிநடக்கிறார்களோ..

அன்று தான் மனிதனின் முழு சுதந்திரம் அந்த கணத்தில்  வெளிப்படும்...

கருத்தியலை கருத்துக்கள் மூலம் அலசுவதை விட்டு வீண் விவாதங்கள் மூலம் அலசினால் தேவையில்லாத சங்கடங்கள் வந்தேறும் என்பதை புரிந்து செயலாற்றுங்கள்...


ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்சம்: வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை - பாமக அறிக்கை...


சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி கையூட்டு கொடுத்தது   தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள  செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய வழக்குக்கு ஆட்சியாளர்களால் சந்தடி இல்லாமல் சாவுமணி அடிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 நாட்கள் முன்பாக ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது. அதில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன்,  திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகிய எழுவர் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. அதனடிப்படையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாநகரக் காவல்துறையில், யாருடையப் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் தந்திரமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் ஒற்றை நீதிபதி எம்.எஸ்.இரமேஷ் அமர்வில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. இதுவரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்த இந்த உண்மை, அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மற்றொரு மனுவின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி நீதிபதிகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்குக்கு யாருக்குமே தெரியாமல் மூடுவிழா நடத்தப்பட்டப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத நீதிப்படுகொலை ஆகும். அரசாங்க கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும் என்பார்கள்.... அதேபோல், ஆட்சியாளர்கள் நினைத்தால் நீதி தேவதையின் இரு கண்களையும் நிரந்தரமாகவே மூடி, எந்த வழக்கையும் குழிதோண்டி புதைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு  யார் தரப்பில் எத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க முடியாது; ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக பெயர் குறிப்பிடப்படாமல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அதை ரத்து செய்யும்படி எவரும் கோர முடியாது. நரசிம்மன் என்பவர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்குக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? என்ற வினாவை அரசு வழக்கறிஞர் எழுப்பியிருக்க வேண்டும்; அவர் எழுப்பாத பட்சத்தில் நீதிபதி வினவியிருக்க வேண்டும். ஆனால், இருவருமே அவ்வாறு செய்யாதது மிகவும் வியப்பளிக்கிறது.

வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானதுமே, அதனடிப்படையில் முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? என வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டிருப்பதாக கூறியிருந்தது. அதன்படி, முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 அமைச்சர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், மூன்றாவது நபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்து இந்த வழக்கை ரத்து செய்ய வைத்திருக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் கடமை தவறுதலாகும்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற இத்தகைய வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் அல்லது வழக்கை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளுமே செய்யப்படாததால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைவருமே எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துக் கொள்கின்றனர். இப்போதும் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி தான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய வருமானவரித்துறையே அவர் மீதி நிதிமுறைகேடு வழக்குத் தொடர்ந்து தண்டித்திருக்க முடியும். ஆனாலும், ஏதோ காரணத்தால் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியைக் காக்காது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சேர்த்து அந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம்(சி.பி.ஐ) அரசு ஒப்படைக்க வேண்டும்...

ஒரு முறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது...


சாதரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்துபோய் கொண்டு இருந்தார்..

அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.

அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகனை ஷோ ரூம் ஊழியர்கள் அடித்து விரட்டினர்.

இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.

பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் .

ஷோ ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.

சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.

ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்கு வரத்திற்காக பயன்படுத்தப்படும் , செய்தி , விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நற்பெயர் நாறிப் போனது..

யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய் கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்தி கொண்டால். இது இந்தியாவில் குப்பை அல்ல பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது.

இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜ விஜய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார்.

அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அல்ல பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

அதற்க்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு
மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்க்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கல் மேல் வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளிய வீசினர் அதற்கு பதில்தான் நான் உங்கள் கார்களை குப்பை அல்ல உபயோகித்தேன்.

முதலில் மக்களை மதியுங்கல் என்று பதில் அனுப்பினார்.

வெள்ளை காரனை செவிட்டில் அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம் அறியட்டும்...

பிரபஞ்சமும் மனிதனும்...


மனிதன்...


இந்த பூமியில் வெகு காலமாகவே நடப்பது ஓவ்வொரு மனிதனும் தன்னை தானே ஏமாற்றி கொள்வதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஏன் எதற்கு எப்படி  என்றால் ஓவ்வொரு மனிதனும் ஆசைகளை  தேடி மட்டுமே..

ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆசை முடியும் நேரத்தில் மறு ஆசை பிறக்கிறது பிறந்து கொண்டே இருக்கிறது..

ஆனால் ஒரு மகிழ்ச்சி முடியும் நேரத்தில் மறு மகிழ்ச்சி பிறப்பதில்லை..

ஏனெனில் மனிதனுக்கு மகிழ்ச்சியே ஏற்படுவதில்லை.. ஆசை ஆட்கொள்கிறது.. வாழ்வை வாழ முடிவதில்லை...

தென்னிந்திய தொங்கு தூண்...


திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...


திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை..

அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்..

அவர் எழுதிய நூல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இல்லை..

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" என்பதே..

திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...

புதிதாக இந்த உலகில் உதித்திருக்கும் ஃபிரான்ஸ் நாட்டு 'சமூக விரோதிகளுக்கு' தமிழக சமூக விரோதிகளின் சார்பாக வாழ்த்துகள்...


கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்...


1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.

2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.

3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,

• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.

• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.

• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.

• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.

8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை

போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .

13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

- அருள் ராமச்சந்திரன்...

மருத்துவ மாப்பியா...


அரசு ஏன் மருத்துவமனையில் தான் கட்டாயம் பிரசவம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது என்று புரிகிறதா..?

இதுமட்டும் அல்ல... கட்டாய குடும்ப  கட்டுபாடும் செய்து விடுகிறது...

அழிவின் விளிம்பில் இருந்த நெல் ரகங்களை மீட்ட நெல்ஜெயராமன் காலமானார்...


திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் கிராமத்தில் பிறந்தவர்.

தமிழகத்தின் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்தவர்.

நெல் ஜெயராமனால் நுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரம்பரிய ரக நெல் விதை காப்பாற்றப்பட்டது...