03/06/2017

துளசி...


துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும்.

வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது.

துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.

எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு  பெண் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது...

ரத்த நாள அடைப்புகள் நீங்க மருந்து...


செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தங்களை நீக்கிவிட்டு பணங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்க வைத்து காலை, மாலை காபிக்குப் பதிலாக அருந்தி வந்தால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும்.

சீரகமும், சித்தரத்தையும் ரத்தத்தைச் சுத்திகரித்து அதில் உள்ள அடைப்பை நீக்கும்...

விட்டா எனக்கும் எனக்குமே சம்பந்தம் இல்லை சொல்வான்... கமிஷன் அமைச்சர் ஜெயக்குமார்...


பாஜக மோடி கலாட்டா...


இதை மட்டும் அரபி காரன் பாத்தான் பிஞ்ச செருப்பாலயே அடிப்பான்.....


கேரளத்தையாவது பிடிப்போம்.. தமிழகம் தேறாது.. நாடாளுமன்ற தேர்தலை குறி வைக்கும் பாஜக...


தமிழகத்தில் கால் பதிக்க பாஜகவால் முடியாத நிலையில் கேரளாவில் தங்களுக்கான இடத்தைப் பிடித்துக் கொள்ள பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தென்னிந்தியாவில் கால் பதிக்க முதலில் பாஜக தேர்ந்தெடுத்த இடம் புதியதாக உருவான தெலுங்கானா மாநிலம். அடுத்ததாக பாஜக அடுத்த பார்வையை தென்னிந்தியாவில் உள்ள கேரளா மீது வீசியுள்ளது.

கேரளாவை கைப்பற்றுவதற்கான வேலைகளை வேகமாக செய்து வருகிறார் அமித்ஷா. குறிப்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கான தொடர் வேலைகளின் ஒரு பகுதியாக அமித்ஷா கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வர உள்ளார். மாட்டிறைச்சிக்கு தடை என்ற மத்திய அரசின் உத்தரவால் கொதித்துப் போயுள்ள கேரளாவிற்கு அமித்ஷா வர உள்ளது கடுமையான எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேரளாவிற்கு வரும் அமித்ஷா கொச்சியில் உள்ள பிஷப்பை சனிக்கிழமை சந்திக்க உள்ளார். இதன் மூலம் இரு சமூகத்தினிடையே உறவை ஏற்படுத்தும் முகமாக அவர் செயல்படுவதாகக் கூறப்பட்டாலும் கேரளாவில் 18 சதவீதம் கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குறி வைத்து வேலை செய்கிறது பாஜக. அதற்கான படிப்படியான நகர்வுகளை செய்து வருகிறது. அதற்காகத்தான் மதத் தலைவர்களை சந்தித்து பிற மதங்களோடு பிணக்கம் இல்லாததது போல் காண்பிக்க அமித்ஷா முயற்சி செய்து வருகிறார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒரே ஒரு எம்எல்ஏவை மட்டுமே பாஜக வென்றது. ஆனால் 16 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் பாஜக நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...

மாட்டிறைச்சிக்கு தடையா.. ராஜினாமா செய்த மேகாலய பாஜக தலைவர்... உன் கட்சியே தேவையில்லை...


பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

அதே போன்று மேகாலய மாநிலத்தில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் அம்மாநிலத்தின் கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவரான பெர்னார்ட் மராக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார்.

மாட்டிறைச்சி தடை குறித்து, கேரோ மலைப்பகுதி மாநிலத்தின் தன்னாட்சிப் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மாநிலத்தின் பல பாஜக தலைவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்களே என்று பெர்னார்ட் துணிச்சாலாக கூறினார்.

மேலும், மலைப்பகுதிகளில் அமலில் இருக்கும் அரசியலமைப்பு பிரிவுகள், அதன் வரலாற்று பின்னணி ஆகியவற்றை மாநில பாஜக தலைவர்கள் அறிவார்கள், மாட்டிறைச்சி தடை என்பதை இங்கே திணிக்கக் கூடாது என்று பெர்னார்ட் உறுதியாகக் கூறினார்.

மாட்டிறைச்சி எங்களது கலாச்சாரம். அதனை விட்டுவிட்டு எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தனது பேஸ்புக்கிலும் துணிச்சலாக பெர்னார்ட் பதிவிட்டார். மேலும், பாஜகவின் கொள்கையை மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றும் இன்னொரு பதிவில் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று அவர் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்னார்ட் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதம் ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

மேகாலய மாநிலத்தின் முக்கிய தலைவராக இருந்து பாஜகவிற்காக பணியாற்றிய பெர்னார்ட் கட்சியில் இருந்து அதுவும் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ராஜினாமா செய்திருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

அணுஉலைக்கு எதிர்ப்பு.. நஷ்ட ஈடு வழங்கிய குஜராத் அரசு.. தமிழ் நாட்டில் தேசதுரோக வழக்கு...


மக்கள் போராட்டங்களின் காரணமாக, குஜராத் மாநிலத்தில் உள்ள மித்திவிர்தியில் அமையவிருந்த அணு உலைகளை, மத்திய அரசு ஆந்திர மாநிலத்திற்கு இடமாற்றியுள்ளது. இந்த தகவலை எழுத்துபூர்வமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்சொன்ன தகவலை பொது மக்களிடம் தெரிவிக்காமல், போராடும் மக்களை தீர்ப்பாயத்தை நாட வைத்து, மக்களுக்கு அலைச்சல் கொடுத்ததற்காக, மத்திய அரசும், குஜராத் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தலா 10,000 ரூபாயை மனுதாரர்களுக்கு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடினால், அணு உலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவது மட்டுமில்லாமல் போராடும் மக்களுக்கு பணம் கொடுக்க சொல்லி உத்தரவும் வருகிறது.

தமிழகத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடினால், தேச துரோக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பாயும், சிறப்பு பரிசாக மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்படும்.
வாழ்க அயோக்கிய அரசு..

குறிப்பு: படத்தில் நீங்கள் பார்ப்பது, போராடும் மக்கள் சார்பாக வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட காசோலை...

திமுக தெலுங்கர் கருணாநிதி வைரவிழா...


கவிஞர் கண்ணதாசன் கருணாநிதி பற்றி...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

 தன்சாதி
 தன்குடும்பம்
 தான்வாழ தனியிடத்து
 பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
 பண்புடையான் கவிஞனெனில்
 நானோ கவிஞனில்லை
 என்பாட்டும் கவிதையல்ல.

 பகுத்தறிவை ஊர்க்குரைத்து
 பணத்தறிவை தனக்குவைத்து
 தொகுத்துரைத்த பொய்களுக்கும்
 சோடனைகள் செய்து வைத்து
 நகந்து நுனி உண்மையின்றி
 நாள்முழுதும் வேடமிட்டு
 மடத்தில் உள்ள சாமிபோல்
 மாமாய கதையுரைத்து

 வகுத்துணரும் வழியறியா
 மானிடத்து தலைவரென்று
 பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
 பேதையனே கவிஞனெனில்
 நானோ கவிஞனில்லை
 என்பாட்டும் கவிதையல்ல...

நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்...


சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது
நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு உண்டு. காசநோய் புண்களை குணப்படுத்தும் இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது.

நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. மூட்டுவலிக்கு மருந்து முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.

வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது. கல்லீரல் நோய்களுக்கு மருந்து மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது...

வர்மமும் – மர்மமும்...


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று..

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.

வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.

வர்மம் என்றால் என்ன?

உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும்.

உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர் நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

குண்டலினியும் வர்மக்கலையும்
வர்மக்கலை பயில்பவர் முதலில் குண்டலினி யோக முறைகளைப் பற்றி அறிந்து வைத்திருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங்களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங்களைப் பற்றிக் கூறுகிறது.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வர்மக்கலை தமிழ்நாடு, தமிழீழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது, இக்கலை சித்தமருத்துவத்தை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை). தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
“அகஸ்தியர் வர்ம திறவுகோல்”
“அகஸ்தியர் வர்ம கண்டி”
“அகஸ்தியர் ஊசி முறை வர்மம்”
“அகஸ்தியர் வசி வர்மம்”
“அகஸ்தியர் வர்ம கண்ணாடி”
“அகஸ்தியர் வர்ம வரிசை”
“அகஸ்தியர் மெய் தீண்டா கலை”
ஆகியவை குறிப்பிடத்தக்கவை

ஜடாவர்மன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் “The fighting techniques to train the body from India ” என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபட மாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என “அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே” என்ற வரிகள் விளக்குகின்றன.

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும்.

தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார். அவை-

தொடு வர்மம்- இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்.

தட்டு வர்மம்- இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.

நோக்கு வர்மம்- பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.

படு வர்மம் – நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார்.

எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்…

வர்மத்தின் அதிசயங்கள் !!
வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவு முறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்...

பாஜக மோடியின் அடுத்த ஆப்புக்கு எல்லாரும் ரெடியா இருங்க...


Regional Comprehensive Economic Partnership Meeting (RCEP) வரும் ஜூலை மாதம் ஹைதராபாத்தில்  நடக்க இருக்கிறது அந்த மாநாடு...

அதன் பிறகு ஒட்டு மொத்த விவசியமும் கார்ப்ரேட் கைக்கு போய்விடும்...

குறிப்பிட்ட 18 நாடுகளில் என்ன கருமத்தை விளைய வைத்தாலும் அதை நாம வாங்கிதான் ஆகனும் பாரம்பரிய விதைகளை வைத்திருந்தால் தேச விரோத குற்றம்...

இனிமே எல்லாருமே ஆண்டி இந்தியன் தான்..

இது தான் மோடி சொன்ன புதிய இந்தியா..

இதனை நியாயப்படுத்த  சில பாஜக எச்சைகள் வருவார்கள் வந்தால் காலில் இருப்பதை கழட்டி அடிக்கவும்..

இப்படிக்கு - ஆன்டி இந்தியன்...

சுவாமி விவேகானந்தர் ஒரு ஃப்ரீமேசன்...


ஃப்ரீ மேசன் என்பவர்கள் அரச குடும்பத்திற்காக பணி புரியும் வேலையாட்கள். இவர்கள் யார் யார் என்ற பெயர்களை காணும் போது மனது வலிக்கத் தான் செய்யும்..

நாம் இதுவரை பெரிய தலைவர்களாக எண்ணி கொண்டிருப்பவர்கள் எல்லாம் மேசனாக இருக்கிறார்கள்.

ஃப்ரீ மேசன் அரச அடிமைகள்
மேசன்களின் வரிசையில் விவேகானந்தரும் வருகிறார், எனக்கும் விவேகானந்தரை பிடிக்கும், எனெனில், நமக்கு அப்படி ஒரு பிம்பம் தான் காட்டப்பட்டிருந்தது.

விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு மிக சிறந்தது என்பர்..

இதனை அனைத்து மதங்களின் கலந்துரையாடலில் அவர் ஆற்றினார், இந்த கலந்துரையாடலுக்கு இந்து மதம் சார்பாக விவேகானந்தர் சென்றிருந்தார்.

இந்த சொற்பொழிவில் தொடங்கும் விவேகானந்தர்..

அமேரிக்க சகோதர சகோதரிகளே
என உரையை ஆரம்பிப்பார். இதை குறித்து பலரும் விவாதம் செய்துள்ளனர்.

இதை பற்றி பேசும் போது பலர், இந்த வார்த்தைகளை விவிலியத்திலிருந்தே (Bible) விவேகானந்தர் பயன்படுத்தினார் என்பர்.


ஆனால், இவ்வார்த்தைகள் கிறித்தவத்திலிருந்து விவேகானந்தரால் பயன் படுத்தப்படவில்லை என்பதை மேசன்களை பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன்.

மேசனரியானது பிரபஞ்ச சகோதரத்துவத்தை போதிக்கிறது, ஒருவரை ஒருவர் சகோதரர் என்றே அழைத்து கொள்வர், மேசனரியின் தாக்கம் தான் விவேகானந்தரின் அவ்வார்த்தைகளுக்கு காரணம்.

It is believed masonry played a vital role in shaping Swami Vivekananda apart from his own principles. “Probably the act of addressing the all-religion conference as ‘brothers and sisters’ stems from the concept of universal brotherhood that we practice,” points out Sushil Raj. - http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/putting-philosophy-into-practice/article4856715.ece

விவேகானந்தர்க்கு என்ன வேலை...

அரச குடும்பம் தனது புதிய உலக ஒழுங்கை உருவாக்க மதங்களை ஒன்றிணைக்கிறது, அதாவது ஒற்றை மதம். இதற்கான பணிகளை மதத்தலைவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் பல மதங்களை இணைத்து  இந்து மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது..

இந்து மதம் ஏற்கனவே பல மதக்கோட்பாடுகளை தன்னுள்ளே இணைத்துள்ளது, மேலும் இணைக்க கூடிய வகையிலேயே கட்டமைக்கவும் பட்டுள்ளது..

எ.கா : புத்தரை அவதாரம் என்றது இயேசுவையும் அவதாரம் என சொல்ல கூடியது. விவேகானந்தர் இதை மனதில் வைத்து தான் தனது சொற்பொழிவை சிக்காகோவில் ஆற்றினார்.

எல்லா மேசன்களுமே எல்லா மதங்களையும் இணைத்து ஒன்றாக பார்க்க கூடியவர்கள். தற்பொழுது இவர்களால் உருவாக்கபட்டுவரும் New Age Religion என்பது இத்தகைய தன்மையைக் கொண்டது, அனைத்தையும் உள்வாங்க கூடியது.

இவ்வாறு இந்து மதத்திற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க காரணமாக இருந்த பிம்பங்களில் விவேகானந்தரும் ஒருவர் எனலாம்.

மேலும் விவேகானந்தர் எவற்றை எல்லாம் செய்தார் என்பதை ஆராய்ந்தால் தான் கூற முடியும்.

(ஒன்றை மறந்து விடாதீர்கள், கட்டமைக்கபட்ட மதங்கள் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்டது, பழங்குடி வழிபாடே சிறந்தது)

விவேகானந்தர் பெயரில் ஒரு மேசனரி லாட்ஜ் அருட்பொழிவு செய்யவும் பட்டுள்ளது.

பிற இந்தியாவின் பிரபல மேசன்கள்...

ஆதாரம்:

http://www.thehindubusinessline.com/news/variety/nehru-vivekananda-tata-were-also-freemasons/article4237921.ece

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/putting-philosophy-into-practice/article4856715.ece

http://masonicpaedia.org/showarticle.asp?id=13

http://timesofindia.indiatimes.com/city/bhopal/We-are-not-a-secret-society-Grand-Master-Freemasons-India/articleshow/18422642.cms

http://www.masonindia.in/index.php/news-from-daughter-lodges/

வரும் காலத்தில் பிற இந்திய மேசன்கள் பற்றியும் விவேகானந்தர் பற்றியும் விரிவாகவும் பார்க்கலாம்...

திமுக தெலுங்கர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


இந்தியப் படையோடு மோதிய தமிழர் வீரப்பனின் நாட்டுத்துப்பாக்கி...


1989ம் ஆண்டு, வீரப்பனாரின் வாழ்வில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது.

அப்போது வீரப்பனார் கிட்டத்தட்ட பதினாறு சிற்றூர்களையும் ஒரு மாவட்டம் அளவு வனப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இரு மாநில வனத்துறையினரும் காவல்துறையினரும் வீரப்பன் பகுதிக்குள் நுழைவதும் துப்பாக்கி சண்டை நடப்பதும் பிறகு பின்வாங்கி ஓடிவருவதுமாக இருந்தனர்.

வனத்துறை ஆர்.டி.ஓ. மோகன்ராஜ் ,  ஏ.எஸ்.பி சைலேந்திரபாபு போன்றோர் பெரும்படையுடன் அடிக்கடி வீரப்பனோடு மோதிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு வனத்துறை அதிகாரி பத்ரசாமி என்பவர் தனிப்பட்ட முயற்சியால், பயிற்சிக்காக கோவை வந்திருந்த ஒரு இந்திய படைப்பிரிவு வீரப்பன் ஆதிக்கம் செலுத்தும் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.

140 படைவீரர்கள், அதிநவீன துப்பாக்கிகள், இரவிலும் பார்க்கக்கூடிய முகக்கண்ணாடிகள் (night vision ), வெடிகுண்டுகள், தகவல் தொடர்புக் கருவிகள் என போருக்கு ஆயத்தமான படை போல பல வண்டிகளில் அவர்கள் வந்து இறங்கினர்.

இவர்களை வரவேற்ற வனத்துறையினர் வீரப்பனைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவித்தனர்.

பின்னர் வனத்துறை மற்றும் படையினர் இணைந்த பெரிய படை உருவாக்கப்பட்டது.

தாக்குதல் வகுப்புகள் நடத்தப்பட்டன.
வரை படங்கள் அலசப்பட்டன.
யுக்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்த கூடாரங்களுக்கு சற்று தொலைவில் பெரிய மீசையும், தோளில் தேன்குடுவையும் சுமந்து கொண்டு நாட்டுப்புறப்பாடலைப் பாடியபடி ஒரு மலைவாசி வந்து கொண்டிருந்தார்.

அவரைத் தடுத்து நிறுத்திய ஒரு படைக்காவலர் யார் நீ இங்க எதுக்கு வந்த? என்று அதட்டினார்.

அந்தக் காவலர் கையில் இருந்த நவீன துப்பாக்கியையே அதிசயமாகப் பார்த்தபடி...

சாமி, மலைக்காட்டுத் தேன் கொண்டு வந்திருக்கேன்; கொறஞ்ச வெல தாரன்;
வாங்கிக்கிறீயளா? என்று கேட்டார் மலைவாசி வேடமிட்ட வீரப்பன்.

அதெல்லாம் வேண்டாம். போ என்று விரட்டினார் காவலர்.

எதிரிலிருந்த மரத்தடியில் போய் உட்கார்ந்தார் வீரப்பன்.

பின் அப்பகுதி மக்களின் மெய்நாயகனான 'மலையூர் மம்பட்டியான்' பற்றிய நாட்டுப் புறப்பாடலை பாடத்தொடங்கினார்.

அந்த பாட்டைக் கேட்டு மனம் குளிர்ந்த அந்த படைவீரன் சிரித்துக்கொண்டே வீரப்பனாரை நெருங்கி.. உனக்கு வீரப்பனைத் தெரியுமா? என்று கேட்டார்.

அவன் பயங்கரமான ஆளுங்க. உங்கள மாதிரியே ஆளுகளும் துப்பாக்கியும் நெறைய வச்சிருக்கானுங்க என்றார்.

அதான் நாங்க வந்துட்டோம்ல கூடிய சீக்கிரம் முடிவு கட்டிடுறோம் என்றார்.

பின் உள்ளே சென்று அனைவருக்கும் தரப்பட்ட வீரப்பனின் புகைப்படத்தை தானும் வாங்கும் போது தான் அந்தப் படை வீரனுக்கு வெளியே நிற்பது வீரப்பன் என்று புரிந்தது.

ஓடி வந்து வெளியே சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால், வீரப்பன் மாயமாக மறைந்து விட்டிருந்தார்.

காட்டிற்குத் திரும்பிய வீரப்பன் தமது வேடத்தைக் கலைத்தபடி தனது தளபதிகளிடம் நமக்காவத்தான் வந்திருக்கானுக, கல்குவாரிக்குப் போய் வெடிமருந்து வாங்கி வைங்க. இன்னைக்கு பொழுது சாஞ்சதும் நம்மள தாக்கவருவானுக போலத் தெரியுது  என்று கூறினார்.

மறுநாள் இந்தியப்படை வனத்துறையினருடன் இணைந்து வீரப்பன் பகுதிக்குள்  வண்டி வண்டியாக நுழைய வீரப்பனின் ஆட்கள் முதலில் அந்த வண்டிகளை நோக்கி சுட்டு மோதலை ஆரம்பித்தனர்.

இருதரப்பிலும் கடுமையான துப்பாக்கிச் சூடுகள்.

தொடர்ந்து ஆறுநாட்கள் ஒரு போரே நடந்தது.

ஆனாலும், வெறும் நாட்டுத் துப்பாக்கிகளும், பாறையை உடைக்கும் வெடிமருந்தையும் வைத்தே வீரப்பன் படை அந்த பெரிய படையை எதிர் கொண்டது.

வீரப்பனுக்கு இழப்பு அதிகம் என்றாலும் அந்தப் படையினரால் வீரப்பனின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

ஆறு நாட்களாக துப்பாக்கித் தோட்டாக்களைத் தீர்த்த இந்தியப் படையினர் கடைசியில் திரும்புவதாக முடிவு செய்தனர்.

அதன் பிறகு தான் வீரப்பனை இராணுவமே வந்தாலும் தோற்கடிக்க முடியாது என்பது அனைவருக்கும் புரிந்தது...

பாஜக மோடி கலாட்டா...


கல்லணையில் தொழில்நுட்பமும் கடற்கரையின் கால்தடமும்...


கரிகாலன் கட்டிய கல்லணையில் தொழில்நுட்பம் புரியாமல் ஐரோப்பா அறிஞர்கள் தவித்தார்கள்.

ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் இந்த கல்லணையை பல வருடங்கள் ஆய்விட்டார். அதன் முழுமையை புரிய கொள்ள முடியவில்லை..

Baird Smith, என்ற ஆங்கிலேய பொறியாளர் பலமுறை முயற்சித்தும் முடியவில்லை..

எப்படி இது சாத்தியம் ?

பெருக்கெடுத்து ஓடும் நீரில் தடுப்பு அணைகளை எப்படி கட்டி இருக்க முடியும்?

இதற்கு விடை என்ன தெரியுமா ?

மிகவுமே சுலபம்..

நீங்கள் கடற்கரைக்கு சென்று இருப்பீர்கள் தானே.. அங்கே உங்கள் கால்களை கடல் நீரில் வைக்கும் பொழுது கடல் அலைகள் உங்கள் கால்களில் படும்..

அலைகள் மறுபடியும் கடலில் சேரும் பொழுது உங்கள் காலுக்கடியில் ஒரு பள்ளம் உருவாகும் கவனித்தீர்களா ?

இது தான் கல்லணையில் தொழில்நுட்பம்..

அதாவது கனமான ஒரு பொருள் இழுத்து செல்லும் நீரில் படும்பொழுது நீரோட்ட்டம் அந்த இடத்தில தடைபடுகிறது தடைபட்டவுடன் அந்த கனமான ஒரு பொருள் அந்த இடத்தில அழுத்தம் பெறுகிறது..

இந்த சின்ன விஷயத்தை தான் கல்லணை கட்டவும் பயன்படுத்தியுள்ளனர் நம்ம மூதாதையர்கள்..

கல்லணையில் ஓடும் நீரில் கனமான பாறைகளை கொண்டு வந்து போட்டவுடன் நீரின் அழுத்தத்தில் மண்ணில் புதைக்கிறது.

அருகே சிறிது இடைவெளிவிட்டு அடுத்த கனமான பாறைகளை போட்டு கரையாத களிமண்ணில் கட்டிய அணை தான் கல்லணை..

ஆங்கிலேயன் வியந்த இந்த தொழில்நுட்பம் மிகவும் இலகுவான கடற்கரை கால்தடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் எவ்வளவு பெரிய ஆச்சர்யம் அல்லவா ?

இது அமைத்து இருப்பது டெல்டா பகுதிக்கு அருகே தான்..

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை காவேரி டெல்டா பகுதி விவசாயத்தை முன்னுதாரணமாக கொண்ட பகுதி என்று விளங்கவில்லையா ?

இந்த பகுதியில் தான் இப்ப அதி மேதாவிகள் ஹைட்ரொ கார்பனும் மீத்தேன் திட்டமும் வெகு ஜரூராக நடக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்..

தன் மண்ணை விரும்பும் ஆட்சியாளன்
வந்தால் ஒழிய இதற்கு விடிவு இல்லை...

நம்ப முடியாத உண்மைகள்...


புதிய இந்தியாவின் பிறப்பு நம் அனைவருக்கும்.....

இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்...


பாஜக மோடியும் தமிழின அழிப்பும் - அணு உலை அமைவதில் ரெட்டை நியாயம்...


குஜராத்தில் மித்திவிர்தியில் அமையவிருந்த அணு உலைக்கு எதிராக போராடிய மக்களின் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு  அந்த அணு உலைகளை ஆந்திர மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிட்டு இருக்கிறது மத்திய அரசு.

ஆனாலும் இந்த அணு உலை இடம்பெயர்வு தகவலை மக்களுக்கு சொல்லாமல் மறைத்ததற்காகவும் போராடிய மக்களின் அலைச்சலுக்காகவும் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறார்களாம்.

ஆனால் இங்கே கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக போராடிய லட்சக் கணக்கானோர் மீது  தேசத் துரோக வழக்குகள் சித்ரவதைகள் பலர் மரணம் பொருளாதார இழப்புகள் அடக்குமுறைகள்...

ஒரே நாட்டின் இரண்டு மாநிலத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகள். நல்லா இருக்குடா உங்க ரெட்டை நியாயம்..

இவ்வளவு மக்கள் போராட்டத்தையும் தாண்டி தான் அடுத்து இரண்டு அணு உலைகளை கூடங்குளத்தில் புதிதாய் அமைக்க மோடி மஸ்தான் ரஷ்யா போகிறார் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்...

மாநில அரசுகள் சரியாக இருந்திருந்தால் தடுத்து நிறுத்தி இருக்கலாம். குறைந்த பட்சம் புதிய அணு உலைகள் அங்கே அமையாமல் தடுக்கவாவது செய்யலாம். ஆனால் நமக்கு வாய்த்த அடிமைகள் அப்படி...

வறட்சி் இல்லைன்னு சொன்ன மத்திய மாநில அரசு எங்கடா ?


டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி 90% வரை குறைந்திருக்கிற செய்தி, நாம் சந்தித்துவரும் விவசாய நெருக்கடியின் பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது...

தமிழ் படித்தால் கலெக்டர் ஆகலாம்...


தீ விபத்தில் 420 கோடிக்குமேல் நஷ்டம் ஏற்பட்டாலும் ஊழியர்களுக்கு சொன்னபடி சம்பளம் வழங்கிய சென்னை சில்க்ஸ்...


மேலும் 1300 பணியாளர்களை சென்னை சில்க்ஸ் ன் மற்ற 17 கிளைகளுக்கு பிரித்து பணியமர்த்தவும் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது...

உடல் நலக்குறைவால் கவிக்கோ அப்துல் ரஹ்மான் மரணம், தலைவர்கள் இரங்கல்...


நம்ப முடியாத உண்மைகள்...


நம்ப முடியாத உண்மைகள்... முகமது யுசுப் கான் சாகிப்...


காவிரிக் கலவரம், தட்டிக்கேட்ட வீரப்பனார்...


1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.

வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.

இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.
வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார். அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.

அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.
கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.
நம்ம  மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு.

வீரப்பன் குதித்தெழுந்தார். மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல? என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக் கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டனர்.

அப்போது அர்ச்சுணன் அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம். சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனு தான் சொல்லாம இருந்தேன் என்றார்.

அதற்கு வீரப்பன் சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார். அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.

ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்கள் என்ன இது? எப்படி ஆச்சு? என்று வினவினார்.

அந்த மக்கள் காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ. தட்டிக் கேக்க யாருமில்ல என்றார் ஒருவர்.

இன்னொருவர் கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.

பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.

மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.

அடி, உதை, கொள்ளை தான்.

காலங்காலமா இதுதான் நடக்குது என்றார் இன்னொரு தமிழர்.

வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார் .

யார் இத தூண்டிவிடுறது? என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்.

ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.
மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு. ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.
இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக என்றார் ஒரு தமிழர்.

ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான் என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமது தளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.

அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலை வெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.

மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.

தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.

ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்,
எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.
ஆம்பளயா இருந்தா வெளிய வாங்கடா பாப்போம்.

தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?

இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன் என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.

அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டு வரப்பட்டனர்.

உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா? என்று வீரப்பன் மீசையை முறுக்க
வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்.

ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப்பிறந்தவங்க மாதிரி  என்று குழறியபடி சொன்னார்கள்.

ஊருக்கெல்லாம் சொல்லுங்க. இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது
எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்.

ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன் அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்கு என்று கூறினார்.

அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.

இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான்  காவிரிப் பிரச்சனை  தீவிரமடைந்திருந்தது.
அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.

ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறிய பிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.

தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப் போராளியாக மாறியிருக்கவும் இல்லை.

ஒரு கடத்தல்காரனாகத்தான் இருந்தார்.

ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.

வீரப்பனார் தமிழருக்காக முதன்முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும்...