17/12/2021

காக்கவும் சோறும்...

 


நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா, எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.

மனிதன்: நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.

காக்கா: அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானே என்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...

ஓ நாங்க உங்க முன்னோர்களா.. சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க, உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா விட்டீங்களோ, முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க, செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும்.

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்...ஜாக்கிரதை...

பாஜக கட்சி ஒரு குப்பை...

தேர்தல் பிராடுகள் கலாட்டா...

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

 


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்..

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக் கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடை பிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டு விட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக் கூடாது என்ற விஷயத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...

அலோபதி பரிதாபங்கள் 😂

தடுப்பூசி எனும் பித்தலாட்ட வணிகம்...

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்...

 


தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்...

இனிய காலை வணக்கம்...

கொள்ளைக்கார பாஜக நிர்மலா சீதாராமன் கலாட்டா...

திருட்டு அரசுகளே பதில் சொல்லுங்க...

மருத்துவ உண்மைகள்...

 


நீங்கள் நோயாளியாக இருக்கும் போது யார் இலாபமடைகிறார்களோ.. 

அவர்கள் உங்களை ஒருபோதும் குணப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

நீங்கள் தொடர்ந்தும் நோயாளியாக இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

அதனாலே மக்கள் அதிகமான நோய்களுக்கு மரணம் வரை மருந்து மாத்திரைகளை பாவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

A Patient  Cured is A Customer Lost

(Dr Falsey)

Natural Medicine Team...

பிராணயாமம் - நாடி சுத்தி...

 


பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.

சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.

இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும்.

இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.

நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.

இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம்.

காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.

மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது.

இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.

மூச்சுப் பயிற்சி...

எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது.

இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.

நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும்.

சுவாசத்தை சரியாக செய்யாத போது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும்.

முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.

மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...

காலால்படை பற்றி அறிவீர்களா...

மனமும் கர்மாவும்...

 


உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அதுதான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்யதான் செய்தார்கள்...

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு - முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்பப்படாதீர்கள்.

மாமியாரை கொடுமைப்படுத்தும் மருமகளே மருமகன்களே ஜாக்கிரதை...

சிங்கிளாக நிம்மதியாக வாழ்வோம்...