03/05/2018

இந்திய உளவாளி வைகோ நாயூடு...


வைகோவை அண்ணன் பிரபாகரனிடம் இந்திய ராணுவமே அனுப்பியது..

அதன் பின்னே மாத்தையா துரோகியாக மாறுகிறார்.

(தினகரன்:- 05.03.1989)...

ராஜஸ்தானில் ஒரு வீட்டின் சமையலறையில் காலின் கீழே மிதிபடும்படி முன்னாள் முதல்வர் படம் போட்ட டைல்ஸ்...


இது நமது ஊர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டு முகப்பில் பதிக்கப்படும் டைல்ஸ்...

ஏலியன்களை எதிர்க்க ஸ்பேஸ் போர்ஸ்.. அமெரிக்க படையில் புதிய அணி...




டாஸ்மார்க் கடைகளை அடைக்க வலியுறுத்தி நெல்லையில் ரயில்வே பாலத்தில் தூக்கிட்டு +2 மாணவன் தற்கொலை...


தந்தை மதுவுக்கு அடிமையானதால் மீட்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு.

குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ் ரயில்வே  மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை.

தன் இறப்புக்கு பிறகாவது குடிக்காமல் இருக்க கடிதம் மூலம் தந்தைக்கு வேண்டுகோள்.


தனது உடலுக்கு தந்தை இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள்...

முதலாளிகள் எல்லாம் ஆந்திராவின் முக்கிய புள்ளிகள் என்பதால் கைது இல்லை...


கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் வாழும் மர்ம ஜந்து...


கியூபா நாட்டுக்கு அருகாமையில் பஹமாஸ் ஏனும் நாடு உள்ளது.

சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பஹமாஸ் ஆகும்.

அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கேமரா பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப் பெறவில்லை.

இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.

காரணம் கேமராவின் வயர்கள் கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன.

அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா
மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது.

அப்படி என்றால் எந்தவகையான மீன்கள்
இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப் போனார்கள்.

இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து
திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள்.

ஆனால் இம் முறை, அந்த மர்ம ஜந்து
மாட்டிக் கொண்டது.

காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்த போது, அதன்
உருவம் கேமராவில் பதிவாகியது.

அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி
நீளமான இந்தப் புதுவகையான
ஜந்துவையும் அவர்கள் சாமர்த்தியமாகப்
பிடித்து விட்டார்கள்.

அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

7 கால்களைக் கொண்ட இந்த ஜந்து இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும்.

பாத்திநோமஸ் ஜயன்டியஸ் என்று
அழைக்கப்படும் இனத்தில் இதனை
இணைத்துள்ளார்கள். விஞ்ஞானிகள்.

கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில்
வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை
உணர்ந்து அதனை தாக்கியுள்ளது.

இது வசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்...

மிகஅதிக காற்று மாசுபாடு: உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட 15 உலக நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள்...


மிக அதிக காற்று மாசுபாடுள்ள 15 நகரங்களின் பட்டியல்...

1)கான்பூர் (உ.பி.)
2)ஃபாரிதபாத் (ஹரியானா)
3)வாரணாசி (உ.பி.)
4)காயா (பீகார்)
5)பாட்னா (பீகார்)
6)டெல்லி
7)லக்னோ (உ.பி.)
8)ஆக்ரா (உ.பி.)
9)முஷாபர்பூர் (உ.பி.)
10)ஸ்ரீநகர் (காஷ்மீர்)
11)குர்கான் (ஹரியானா)
12)ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்)
13)பாட்டியலா (பஞ்சாப்)
14)ஜோத்பூர் (ராஜஸ்தான்)
15)அலி சுபா - அல் சேலம் (குவைத்)...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கர்க்கு பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதா?


13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்..

குடியரசு தீர்மானங்கள் – 20- 11 – 1938.

அத்தீர்மானங்களில் ஒன்று இவ்வாறு இருப்பதாக குடியரசு செய்தி வெளியிட்டது.

இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்..

தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரு மில்லாமை யாலும்..

அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது...

குடியரசு வெளியிட்ட செய்தி தான் இந்த மாநாட்டில் ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் கொடுக்க தீர்மானம் நிறைவேறியது என்பது..

உண்மையில் மாநாட்டுப் பெண்கள் பெரியார் என்று பட்டம் கொடுக்கவில்லை..

குடியரசு – இன் கட்டுக்கதையே அது..

பாரதிதாசன் கவிதைகளிலேயே எங்கெங்கு ‘தமிழ்’, ‘தமிழர்’ என்று வருகிறதோ அங்கங்கு ‘திராவிட’, ‘திராவிடர்’ என்று திரித்து வெளியிட்ட திராவிடர்களும், திராவிடத் தலிவர்களும் கட்டுக் கதைகளால் இங்கு ஆள்பவர்கள்.

இப்போது அவர்களின் கட்டுக் கதைக் கோட்டை தகர்ந்து வருவதே இன்றைய அவரகளின் இது போன்ற பதிவுகளுக்கு காரணம்...

மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.

இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.

இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய் - சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்..

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

தெலுங்கர் வைகோ நாயூடு.. இதை பற்றி பேச உமக்கு தகுதியில்லை...


திமுக கருணாநிதியின் மாண்பு...


திமுகவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் முட்டாள் தமிழா...

கர்நாடக மாநிலத்துக்கு ஒக்கேனக்கலையும் காவேரியையும் விட்டுக்கொடுத்த அருமையுள்ள கட்சியல்லவா திமுக..

கேரளத்துக்கு முல்லைப் பெரியாறை வாரிவழங்கிய மாண்பு கொண்ட கட்சியல்லவா திமுக..

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த கொடையாளியல்லவா திமுக..

மீனவர்களின் உயிர்களை தாரைவார்த்த பெருந்தன்மைக் கட்சியல்லவா திமுக..

ஈழத்தில் தமிழர் வாடியபோது அவர்கள் உயிர்களை எமனுக்கு கொடையாக வழங்கிய உத்தமரல்லவா திமுக..

திமுகவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைக்கு ஒரு அளவே இல்லையப்பா..

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்கள் பாருங்கள்...

திராவிடம் 2.0 கலாட்டா...


நம்ப முடியாத உண்மைகள்... ஆரோவில் நகரம்...


பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது.

50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது.

மக்களால் 'அன்னை' என்று அன்புடன் அழைக்கப்படும் மிர்ரா அல்பாஸ்ஸா என்ற வெளிநாட்டவரால் நிறுவப்பட்ட ஆரோவில் நகரம், ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டியினால் 1968-ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும்.

நாடு, கலாச்சாரம் முதலிய கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைத்து நாட்டைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய அமைதியுடன், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் ஒன்றாக வாழச் செய்து அதன் மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை உருவாக்குவதே இந்த நகரம் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும்.

ஆரோவில் நகரம்—அமைதிப் பகுதி, தொழிற்சாலை பகுதி, குடியிருப்பு பகுதி, பன்னாட்டு பகுதி, கலாச்சார பகுதி மற்றும் பசுமைப் பகுதி என வெவ்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய கட்டிடக்கலை வடிவமைப்பிற்காக பார்வையாளர்களைக் கவரும் மாத்ரிமந்திர் இந்நகரத்தின் முதன்மையான சுற்றுலா பகுதியாகும்.

இந்நகரத்திற்கு அருகிலிருக்கும் ஆரோ கடற்கரை சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க மிகவும் ஏற்ற இடமாகும்...

மதிமுக தெலுங்கர் வைகோ நாயூடு கலாட்டா...


வெந்நீரும் வியாதியும்...


தண்ணீரின் தேவை உலக வாழ்வில் முதன்மையானது என்பது அறியப்பட்ட செய்தி. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பழந்தமிழர் நெறி. நீரைக் காய்ச்சிக் குடித்தால் உடலுக்கு நன்மை தரும் என்பது சுகாதாரம் விரும்புவோர் கூறும் பொதுக் கருத்து. ஆனால், நீரைக் காய்ச்சி, எந்தெந்த முறையில் அருந்தினால் என்னென்ன பயன்களைத் தரும் என்று சித்த மருத்துவ நெறியாக உரைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

காய்ச்சிய நீர் சூடாகப் பருகினால், நெஞ்செரிச்சல், நெற்றிவலி, புளிச்ச ஏப்பம், வயிற்று நோய், இருமல் போகும். காய்ச்சி ஆறிய நீர் அருந்தினால், உழலை, விக்கல், அதிசாரம், பித்தம், மூர்ச்சை, விஷ வாந்தி, மயக்கம், மேகம், உலர்ச்சி, கண்ணோய், திரிதோஷம், செவிநோய், சூலை, குன்மம், சுரம், ஐயம், வாத கோபம் போகும்.’ என்று தண்ணீர் வெந்நீரானால் உண்டாகக் கூடிய பயனை விளக்கு கிறது.

வெந்நீரும் பாத்திரமும்...

தண்ணீரைக் காய்ச்சவும், காய்ச்சிய நீரைச் சேமிக்கவும் மட்கலங்களிலிருந்து மாறி உலோகப் பாத்திரங்களுக்கு நாகரிக வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்கிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த தன் பயன் என்னவென்பதை உரைப்பதாக, மருத்துவச் செய்தி அமைகிறது. வெந்நீர் எந்தெந்த உலோகங்களுடன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்பதைக் கீழ்க்கண்டவாறு கூறுவர்.

1. பொற்கெண்டி : வாயு, கபம், அருசி, மெய்யழல், வெப்பு போகும். விந்து, நற்புத்தி, அறிவு உண்டாகும்.

2. வெள்ளிக் கெண்டி : வெப்பு, தாகம், குன்மம், பித்தம், ஐயம், காய்ச்சல் போகும். உடல் செழிக்கும். பலம் உண்டாகும்

3. தாமிர பாத்திரம் : இரத்த பித்தம், கண்புகைச்சல் போகும்.

4. பஞ்சலோகம் : முக்குற்றங்கள் நீங்கும்.

5. வெங்கலப் பாத்திரம்: தாது உண்டாகும்.

6. கெண்டி : நோய், சிரங்கு, வாய்க்குடைச்சல் போகும்.

7. பன்னீர்ச் செம்பு : சுவாசம், விக்கல், பிரமை, பித்த, ஐயவாயு, தாள் வலி போகும்.

8. இரும்பு பாண்டு நோய் போகும்; தாது உண்டாகும்; நரம்பு கெண்டி உரமாகும்; உடல் குளிர்ச்சி அடையும்

என்று, உலோகத்தினால் உண்டாகும் பயன் வெந்நீர் அருந்தும் போது கிடைப்பது உரைக்கப்பட்டுள்ளது.

வெந்நீர் மருந்து...

தண்ணீர் எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை உணர்த்தும் மடை நூலைப் போல, தண்ணீர் வெந்நீரினால் என்னென்ன பயன் உடலுக்குக் கிடைக்கிறது என்பது மேலே குறிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீர் வெந்நீராகக் காய்ச்சப்படும்போது எந்த அளவு காய்ச்சினால் என்ன பலன் என்பதை..

கால் கூறு காய்ந்த வெந்நீர் பித்தத்தைப் போக்கும்
அரைக் கூறு காய்ந்த வெந்நீர் வாதம், பித்தம் ஆகிய போக்கும்
முக்காற்கூறு காய்ந்த வெந்நீர் வாதம், குளிர், நடுக்கல்,
பித்தசுரம், வெக்கை, வாதபித்த ஐயம் போகும்.'

என்று பதார்த்த குண சிந்தாமணி விளக்குகிறது.

வாத, பித்த, ஐயம் என்பதே அனைத்து நோய்களும் என்பதால், அனைத்து நோயிலிருந்தும் விடுபட வெந்நீர் மருந்தாக அமைகிற தென்பதை அறியலாம். மேலும், நீரைக் கால், அரை, முக்கால் என்கிற முறையில் காய்ச்சுவதைப் போல, நீரை மருந்தாகவே மாற்றிட எட்டுப்பாகத்தில் ஒரு பாகமாகக் காய்ச்ச வேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. எண்சாண் உடம்பு, எறும்பும் தன்கையால் எட்டு என்று உலக உயிர்கள் எட்டுப் பாகமாகத் தோன்றியுள்ளதைத் தெரிவிக் கிறது. எட்டுக்கு ஒன்றாகத் தண்ணீரைக் காய்ச்ச வேண்டும்

என்றுரைப்பதும் உலகத்தின் உயிரினத் தோற்றத்துடன் தொடர்புடையதாக அமைவது போல் இருப்பதை அறியலாம்.

இயம்பிட வெளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குடித் திடுவீ ராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்'.

என்றும்,

சொல்லிய நாழி கொண்டு தூணியில் எட்டொன் றாக்கி.

என்றும்,

நன்னீர் விட்டே யெட்டொன்றாய் நாடிக் காய்ச்சிக் கொள்வீரே'.

எனவும், காய்ச்சும் முறை உரைக்கப்பட்டுள்ளது. இம்முறை மருந்து தயாரிக்கும் போதும், தைலம் தயாரிக்கவும் பயன்படும் என்பது அறியப்படுகிறது. இவ்வாறு காய்ச்சுவதனால் பெருக்கத்து வேண்டும் சுருக்கம் என்பது போல பெருக்கம் என வளர்த்த பொருளைச் சுருக்கம் என மூலப் பொருளாக மாற்றினால் அது மருந்தாக அமையும் எனத் தெரிகிறது...

மானங்கெட்ட அதிமுக அரசு மக்களுக்கு எதிரான அரசு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


எம்ஜிஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள்; ரஜினி, கமல் படத்தை பார்க்க முடியுமா? - மதுரையில் மே தினப் பொதுக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு...


பூமி மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக மாறப்போகுதாம்...


மேற்பரப்பில் உள்ள நிலம் முழுவதும்
மறைந்து பூமி மீண்டும் ஒரு தண்ணீர்
உலகமாக மாறிவிடும் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற
ஆய்விதழில் வெளியிட்டுள்ள
ஆராய்ச்சி முடிவில், கண்டங்களின்
மேலோட்டின் தடிமன் குறைந்து
வருவதாகவும் இதனால் இன்னும் 2
பில்லியன் ஆண்டுகளில் பூமி
மீண்டும் ஒரு தண்ணீர் உலகமாக
மாறிவிடும் எனவும்
கூறப்பட்டுள்ளது...

சேலம் கலெட்டர் ரோகினி மீது செருப்பு வீச காரணம் என்ன.?


நிலங்களை கையகப்படுத்த தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்து அதிகாரிகள் மிரட்ட தொடங்கினர்..

இதற்காகத்தான் சமூக வலைத்தளங்களில் ரோகினி பற்றி முன்னரே நல்லவராக பா.ஜாக வும் கார்ப்பரேட்டும் பிரதிபலிக்க செய்தது..

இவ்வளவு வஞ்சகத்தில் விவசாயிகளை அழிக்க நினைத்ததால் தான்.. அந்த முதியவர் கோபம் செருப்பாக வீச முனைந்தது...

மகளை கொன்று இளம்பெண் தற்கொலை...


புதுவை வைத்திக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சுஜித்ரா (27). கேரளாவை சேர்ந்த இவர் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (10) என்ற மகள் உள்ளார். தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து குயிலாபாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரனுடன் சுஜித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர். புதுவை காந்தி சிலை அருகே கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் சுஜித்ரா வரவேற்பாளராக பணியாற்றினார். சமீபத்தில் அந்த வேலையில் இருந்து நின்று விட்டார்.

இந்நிலையில் தனது 2வது கணவரான பிரபாகரனும் கடந்தாண்டு கார் விபத்தில் பலியாகவே சுஜித்ரா வேதனையில் இருந்துள்ளார். காதல் கணவர் பிரிந்து விட்ட நிலையில், 2வது கணவரும் இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது.இதையடுத்து தற்ெகாலை முடிவை எடுத்த சுஜித்ரா, நேற்று தனது மகள் நிவேதாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி குளுக்கோஸ் வாங்கி அதில் அதிக தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதோடு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாக அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது நிவேதாவும், சுஜித்ராவும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சோலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

விழித்துக்கொள் எம் தமிழினமே...


மரணத்திற்கு பின்...


மனிதன் மரணத்தை கண்டு பல கோடி ஆண்டுகளாக அஞ்சி வந்ததன் காரணம், இறந்தபின் இருக்கும் நிலையை அறியாததே.

ஆம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு என்பதை அறியாமலேயே இருப்பதால்தான் அந்த பயம்.

மரணம் மனிதனின் ஆட்டத்தை முடிப்பதாக கருதப்படும் ஒன்று.

ஆண்டாண்டு தோரும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்ற கோட்பாடே அவர்களை குழப்பம் அடைய செய்தது.

ஆனால் உண்மை அதுவல்ல, உறங்குவது போலாம் சாக்காடு உறங்கி விழிப்பது போலாம் பிறப்பு.

மரணம் என்பது ஆன்மா எடுத்துக் கொள்ளும் தற்காலிக ஓய்வே.

நாம் ஒவ்வொரு பிறவியிலும் பலவித சிக்கலான அனுபவங்களை பெறுகிறோம்.

மரணத்திற்கு பின் நாம், செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப இனிமையான மற்றும் துக்கமான எண்ணங்களால் அலைக்கழிக்கபடுகிறோம்.

ஆவி நிலையில் நாம் பெற்ற அனுபவங்களை நினைத்து நினைத்து சுகதுக்கங்களை அடைகிறோம்.

ஆம் அதிகம் பாவம் செய்த ஆன்மா கேட்பாரற்று ஆதரவற்று நிர்கதியாக தனிமையில் சொல்ல முடியாத துயரத்தில் சிக்கி தவிக்கிறது.

புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவோ சொர்கம் எனும் பரிமாணத்தில் நிறைய ஆன்மாக்களோடு கூடி மகிழ்கிறது.

வாழ்க்கை ஒரே முறை தான். தயவு செய்து வாழ்க்கையை வாழுங்கள்...

ஏரியை காப்பாற்றாமல் ஏய்க்கும் சிட்லபாக்கம் பஞ்சாயத்தின் அலுவலகத்துக்கு முன் மக்கள் வைத்த கோரிக்கை பலகை...


மகாபாரதமும் தாமிரபரணி நாடும்...


குறவருக்கும் (கௌரவர்)
பாண்டியருக்கும் (பாண்டவர்)
நடந்த போரே மகாபாரதம்...

இந்த பகையை முடித்து இருவரையும் சேர்த்து வைக்கத்தான் பாண்டிய மன்னனான முருகன் குறவர்களிடம் பெண் எடுத்தார்.

 சேரர் நடுநிலை வகித்தனர்.

இரு படைகளுக்கும் உணவு கொடுத்தவன் உதியஞ்சேரலாதன்.

இதனாலே இவனை பெருஞ்சோற்று தியஞ் சேரலாதன் என்பர்.

இவனை புகழ்ந்து முரஞ்சியூர்முடி நாகராயர் பாடிய பாடலில் இதை அறியலாம்.

யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந

வான வரம்பனை நீயோ பெரும

அலங்குளைப் புரவி யைவரோடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலப்பூந் தும்பை

யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தாய்.

அப்போது இலங்கைத் தீவும் தமிழகமும் ஒன்றாக இருந்தன.

பொதிகை மலையில் தோன்றி நடு இலங்கை வரை பாய்ந்தது தென்பொருநை (தாமிரபரணி).

2000 ஆண்டுகள் பழமையான தாலமியின் (Ptelomy) உலக வரை படத்தில் இலங்கைத் தீவு தாப்ரபேன் என்று குறிக்கப்பட்டுள்ளது.

வடமொழியில் உள்ள மகாபாரதத்தில்...

குந்தியின் மகனே.. மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணியின் பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்.

என்று ஒரு முனிவர் தர்மனைப் பார்த்துச் சொல்வதாக ஒரு பாடல் உண்டு.

சோழர்கள் இலங்கையை ஆண்டபோது குற்றால குறும்பலா ஈஸ்வரர் கோயிலுக்கும் ஈழத்தில் உள்ள திருக்கேதீஸ்வரர் கோயிலுக்கும் நித்திய தீப நிவந்தம் போன்ற ஆன்மீக கொடுக்கல் வாங்கல் இருந்ததாக பழ.நெடுமாறனின் ஈழப் போர்முனையில் புலிகளுடன் என்ற 1985 ம் ஆண்டுகால புத்தகத்தில் படித்ததாக நினைவு...

மூன்றாம் உலகப் போர் இந்தியப் பெருங்கடலில் தான் நினைவில் கொள்...


சித்தராவது எப்படி ? - 20...


முடியாததை உணர உணர முடியாததை எளிதில் முடிக்கலாம்...

இயல்பான சுவாச ஒழுங்கில் இருக்கும் பொழுது, அது அவ்வளவு எளிதல்ல என்பதும் உலகத்தையே வென்றாலும் கூட சுவாச ஒழுங்கில் நீடிப்பது என்பது மிக கடினமான நிலைப்பாடு என்பது புரிய வரும்..

காரணம் பிரபஞ்ச சக்தியையே உள் வாங்கி பிரபஞ்சத்தையே ஆளுமை செய்யும் அளவிற்கு பேரறிவு பெறும் ஆற்றலை தரக் கூடியது இந்த சுவாச ஒழுங்கு..

உலகத்தையே வென்றவன் அந்த பிரபஞ்ச ஆற்றல் இன்றி மரணத்தை தழுவி உலகத்தின் மண்ணுக்குள் புதைப் படுபவன் அறிவு அற்றவன்..

இந்த ஒரு உண்மையை அறிந்தாலே ஞான கதவு திறக்கப் படும்..

ஞானி எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நாடி பயணப் படுபவன்...

உலகத்தையே வென்றாலும் ஜீவ ஆற்றலான பிரபஞ்ச ஆற்றலை இழப்பதை காட்டிலும் முட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ ?

ஆனாலும் அதை தானே மனித குலம் செய்து கொண்டு இருக்கிறது... இன்னும் அதை தானே மனித குலம் செய்யப் போகிறது..

உலகத்தையும் உலக உடமைகளை வெல்வதற்கு, உலகத்திற்கு சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்து விட்டு, தன் உயிர் ஆற்றலான பிரபஞ்ச ஆற்றலை பூரணமாக தேகத்தில் இழந்து, பெற்றதையும் அனுபவிக்க முடியாமல், மண்ணுக்குள் புதையும் மனிதனை அறியாமையின் மொத்த உருவம் என்று தானே சொல்ல வேண்டும்...

மிக மிக எளிய சுவாச ஒழுங்கில் இருக்க முடியவில்லை என்று கவலைப் பட தேவை இல்லை.. பேரண்ட பேரறிவு நமக்காக பல கதவுகளை திறந்து வைத்து இருக்கின்றது..

மூடிய கதவிலே முட்டி முட்டி மண்டையை உடைக்கும் அவல நிலையிலிருந்து விடுபடவும் பேரறிவு ஒரு கதவையும் திறந்து வைத்து இருக்கிறது..

இன்னும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு தரக் கூடிய கதவுகள் திறந்தே வைத்து இருக்கிறது..

சுவாச ஒழுங்கில் நீடிக்க அந்த பிரபஞ்சம் திறந்து வைத்து இருக்கும் மற்ற கதவுகளை அடையாளம் காண வேண்டும் என்றால் அதை நோக்கி பயணப் படும் போது மட்டுமே அடையாளம் காண சாத்தியம் ஆகும்..

சரி இப்போது மற்ற ஒரு கதவினை காணலாம்..

அதாவது சுவாச ஒழுங்கிலே தோல்வி என்ற ஒரு மூடிய கதவை தவிர வெற்றியை தரக்கூடிய வேறு ஒரு கதவினை காணலாம்..

அதுதான் தோல்வியை உணர்த்தும் இன்னொரு கதவு...

சுவாச ஒழுங்கிலே மனதின் நிலையற்ற தன்மையாலே, உறுதியற்ற தன்மையாலே, சுவாச ஒழுங்கிலே ஏற்படுகின்ற ஒழுங்கின்மை என்ற தோல்விகளை உணர்த்தும் கதவு..

ஒழுங்கின்மை ஒரு தோல்வி என்றால் ஒழுங்கின்மையை உணராத அறிவின்மை அதை விட மிகப் பெரிய தோல்வி..

தோல்வி அடைந்ததை உணராத போது தோல்விகள் நீடிக்கும் என்பது ஒரு சத்தியமான உண்மை.. அதை உணர வைப்பது உணர்வின் அதிபதியான புத்தி..

சுவாச ஒழுங்கின்மையில் இருந்து மீள முடியாமல், அந்த ஒழுங்கின்மையில் இருக்கும் சமயம் தான் ஒழுங்கின்மையில் இருக்கிறோம் என்பதை உணர தொடங்கும் போது, புத்தி விழித்து எழ தொடங்குகிறது...

இப்படி விழித்து விழித்து எழுந்த புத்தி பலம் அடைகின்ற போது மட்டுமே அது மனதின் மேல் ஆளுமை தன்மை பெற முடிகிறது..

ஆளுமை தன்மை பெற்றவுடன் மனதை திருத்தி மீண்டும் சுவாச ஒழுங்கிற்கு மனதை வர வைக்கிறது..

இப்படியான தோல்விகளிலும் பொன்னை எடுக்கும் வழி முறையை அந்த இன்னொரு கதவு நமக்கு தருகிறது..

பொன் என்பது பலன், வெற்றி. என்பதாகும்..

ஆரம்ப நிலையிலே தோல்விகளை சந்திக்கும் போது அதை சரி செய்ய முடியவில்லை என்றால் அச்சமயம் அந்த தோல்வியை உணர்ந்தாலே போதும்..

உணரும் அச்சமயம் புத்தி விழித்துக் கொள்ளும் ஒரு பெரும் புனித செயல் நடக்கின்றது..

எந்த ஒரு காரியம், வேலை, நேரங்களில் அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது சற்று கடினமே.. அந்த அந்த சமயங்களில் தன்னில் ஓடும் சுவாச ஒழுங்கின்மையை கவனித்து உணர்ந்தாலே போதும்...

மிக விரைவில் புத்தி விழித்து எழுந்து மனதை ஆட்கொண்டு அந்த அந்த வேலையில் சுவாச ஒழுங்கினை ஏற்படுத்தி, அந்த அந்த வேலையை திறம் பட செய்ய பிரபஞ்ச ஆற்றலை செயல்பட வைத்து விடுகிறது..

இதனை சற்று உணர்ந்து, கவனித்துப் படித்து, சுவாச ஒழுங்கின்மை சமயம், அந்த ஒழுங்கின்மையை கவனித்து உணர்ந்து இருக்கும் நிலையில் பெரும் ஆன்ம இலாபம் கிடைக்கின்றதை மறக்காமல் இருந்து அந்த உணர்வின் பயனாய் சித்தர் நிலை நோக்கி விரைவான முன்னேற்றம் அடைவோமாக....

விழித்துக்கொள் எம் தமிழினமே...


திராவிடம் என்றால் என்ன?


திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?

ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது?

திராவிடர் என்றால் யார்?

திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பு என்ன ?

ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்ப்பவர்கள் தமிழர்களாக ஒரு போதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும், ஆள்பவர்கள் தமிழர்களும் இல்லையே ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம்
அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிக்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர். வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட.நாங்கள்  அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு விடை அளித்து புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாங்கள் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாங்களும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்ப்பவர்கள் தமிழர்களாக ஒரு போதும் இருக்க முடியாது...

தமிழ் மண்ணில் தெலுங்கர் குடியேற்றம் வரைபடம் (1931)...


மேற்கண்ட படத்தில் முதல் வரைபடம் Eugene F.Irschick என்பவர் எழுதி 1969 ல் வெளிவந்த Politics and social conflict in south india எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்பது..

இதில் தமிழர் பெரும்பான்மைக்கு மத்தியில் ஊடுருவியுள்ள தெலுங்கர் பகுதிகளைப் புள்ளிகளாகக் குறித்துள்ளார்.

இரண்டாவது படம் அதே ஆசிரியர் Dialogue and history எனும் நூலில் 1994 ல் வெளியிட்டது.

இந்த வரைபடங்கள் 1931ல் ஆங்கிலேய அரசு நடத்திய கணக்கெடுப்பில் M.W.M Yeatts என்பவர் எடுத்த கணக்கெடுப்பை அடிப்படையாக வைத்து வரையப்பட்டன ஆகும்.

இதன்மூலம் 1930ல் தெலுங்கர் 15% க்கு மேல் குடியேறியிருந்த பகுதிகளையும்
10 முதல் 15% வரை குடியேறியிருந்த பகுதிகளையும் அறிந்து கொள்ளலாம்.

(அவ்வளவு தெளிவாக இல்லாத படத்தை நான் சிறிது மேம்படுத்தி வரைந்துள்ளேன். 10% க்கு குறைவாக தெலுங்கர் வாழ்ந்த பகுதி தெளிவாக இல்லை. அதனால் அதை விட்டுவிட்டேன்)

எனக்குத் தெரிந்து தெலுங்கர் மேற்கண்ட பகுதியிலேயே இன்றும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.

தெலுங்கர் தொடர்ந்து தமிழகத்தில் குடிவந்த வண்ணம் உள்ளனர்.

எனவே குறிக்கப்பட்டுள்ள பகுதி வடக்கில் சற்று விரிவடைந்து அப்பகுதியில் தெலுங்கர் சதவீதம் அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.

இதிலே வடக்கே ஓசூரும் தெற்கே தூத்துக்குடி அருகே விளாத்தி குளமும் முழுக்க தெலுங்கு மயமாகிவிட்டது என்பதை இங்கே கூற வேண்டும்.

மேற்கே உதகமண்டலத்தில் தெலுங்கர் எண்ணிக்கை தமிழரை மிஞ்சிவிட்டது என்பதையும் அறியத்தருகிறேன்...