புதுவை வைத்திக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சுஜித்ரா (27). கேரளாவை சேர்ந்த இவர் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (10) என்ற மகள் உள்ளார். தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்தார். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து குயிலாபாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரனுடன் சுஜித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர். புதுவை காந்தி சிலை அருகே கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் சுஜித்ரா வரவேற்பாளராக பணியாற்றினார். சமீபத்தில் அந்த வேலையில் இருந்து நின்று விட்டார்.
இந்நிலையில் தனது 2வது கணவரான பிரபாகரனும் கடந்தாண்டு கார் விபத்தில் பலியாகவே சுஜித்ரா வேதனையில் இருந்துள்ளார். காதல் கணவர் பிரிந்து விட்ட நிலையில், 2வது கணவரும் இறந்ததால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது.இதையடுத்து தற்ெகாலை முடிவை எடுத்த சுஜித்ரா, நேற்று தனது மகள் நிவேதாவுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி குளுக்கோஸ் வாங்கி அதில் அதிக தூக்க மாத்திரைகளை கொடுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதோடு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்டநேரமாக அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது நிவேதாவும், சுஜித்ராவும் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சோலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.